Everything posted by வாத்தியார்
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
கட்டாயம் வங்கிக் கணக்கு கிடைத்த உடனேயே உதவித் தொகையை அனுப்பிய உறவிற்கு கோடி நன்றிகள் 🙏
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
கிடைத்த தொகையை அறிவிக்கத் தான் வேண்டும். நான் மேலே பிழையாக எழுதிவிட்டேன்.🙏 அத்தியாவசியமான உதவித் திட்டம் என்ற அடிப்படையில் ஓரளவு நன்கொடை கிடைத்ததும் வேலைகளை ஆரம்பித்தல் நல்லது என்றே நினைக்கின்றேன் எல்லோரும் ஏற்றுக் கொண்ட மாதிரி அராலியில் எங்கள் திட்டத்தை ஆரம்பிப்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை மற்றவர்களின் கருத்துக்களையயும் கேட்போம்
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
நந்தன் அவர்கள் தனது ஆதரவுக் கரங்களை தருவதாகக் கூறுவது இன்னும் எங்கள் பலம் அதிகரிப்பதாகத் தோன்றுகின்றது. நாம் ஒன்று பட்டால் எங்கள் மக்களுக்கு உண்டு வாழ்வு ஆதரவிற்கு நன்றி நந்தன்🙏 நீங்கள் வெள்ளை மனம் கொண்ட ஒரு நல்ல தாத்தா என்று எல்லோருக்குமே தெரியும் அமெரிக்கன் தாத்தா 😅🙏
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
இதைத் தான் நானும் முன் கூட்டியே சொல்லியிருந்தேன் பொருளாளராகிய ஏராளன், குறிப்பிட்ட நிதி வங்கிக்கணக்கிற்கு வந்ததும் எத்தனை பேர் அனுப்பினார்கள்........ அல்லது யார் அனுப்பினார்கள்... எவ்வளவு தொகை அனுப்பினார்கள்...... என்ற விபரத்தை உடனே வெளியிடக் கூடாது கிடைத்த தொகையை மட்டும் எங்களுக்குத் தெரியப்படுத்தினால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து அந்த நிதியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று முடிவு செய்வோம் முதலில் அராலி அடுத்து பொன்னாலை இவற்றின் வெற்றிக்குப் பின்னர் எமது உண்மையான இலக்கை நோக்கி ஒவ்வொரு காலடியாக எடுத்து வைப்போம். அது முதலில் காரைநகரில் ஒரு காலடியாகவோ அல்லது சுழிபுரத்தில் ஒரு காலடியாகவோ இருக்கலாம் அந்த நேரத்தில் பயனாளர்களின் உண்மையான நிலைமைக்கு ஏற்ற மாதிரிச் செயற்படுவோம், அதற்கு முதல் வாத்தியாரின் நிதி உதவியினால் செய்யப்பட்டது கு சா அண்ணாவின் செயற்பாட்டால் செய்யப்பட்டது அல்லது கோஷான் அவர்களின் உதவியால் செய்யப்பட்டது என்ற எந்த ஒரு வார்த்தைப் பிரயோகமோ அல்லது கருத்துக்களோ இங்கே வரக்கூடாது முன்னோடி அமைப்பினரால் என்ற அந்த ஒன்றின் பின்னால் தான் நாங்கள் எல்லோரும் என்பது இங்கே எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும் அண்ணா இதுவே எனது கருத்து மற்றவர்களும் அதையே விரும்புகின்றார்கள் என்பது அவர்களின் கருத்துக்களில் இருந்து தெரிகின்றது இங்கே யாழ் களத்தின் உறவுகளால் ஒருங்கிணைக்கப்பட்ட முன்னோடி என்ற அமைப்பே முன்னோடும்
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஏராளன் நிதியை கையாளும் விதம் மிகவும் சிறந்த முறை ஒரு உதவித்தட்டம் செயற்படுத்தும் வேளை அந்த வேலைத் திட்டத்தின் செயற்பாட்டைக் கண்காணித்து அந்த பிரதேசத்தின் பணிமனை யில் இருக்கும் அபிவிருத்தி தொடர்பான உத்தியோகத்தரின் அறிவுறுத்தலின்படியே நிதி ஏராளனால் விடுவிக்கப்படும் . இப்படியாக நிதி விடுவிக்கப்படும் நேரத்தில் பயனாளர் பக்கமும் உதவி செய்யும் எங்கள் பக்கமும் நிதியைக் கையாளும் ஏராளன் பக்கமும் உண்மைத் தன்மையும் வெளிப்படையான நிதி பரிமாற்றமும் தெரியவரும் சிறப்பான வழிமுறை ஆகவே இதற்கு இன்னுமொரு நிதிப் பொறுப்பாளர் தேவை இல்லை என்பது எனது கணிப்பு . முன்னோடி அடிப்படை வசதித் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் மொத்த நிதியும் சேரும் வரை காத்திருக்காமல் ஒருவருடைய தேவையை நிறைவேற்றத் தேவையான நிதி கிடைத்தவுடன் ஆரம்பித்து வைக்கலாம் என்பது எனது கணிப்பு 1.குமாரசாமி அண்ணா உதவி செய்யும் திட்டம் அது எதுவென அவர் விரும்பினால் இங்கே தெரியப்படுத்தலாம் 2.பொன்னாலை திட்டம் 3.சுழிபுரம் அல்லது காரைநகரில் ஒருவருடைய தேயைப் பூர்த்தி செய்தல் 4. இன்னுமொருவருடைய தேவையை பூர்த்தி செய்தல் இப்படி மாறி மாறி தேவையின் அடிப்படையில் வேலைகளைத் தொடங்கி இலகுவாகவும் விரைவாகவும் இந்தத் திட்டத்தை செய்து முடிக்கலாம்
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஓகே கோஷான் அப்படியும் நான் நினைத்தேன் ஆகவே தற்சமயம் முடிந்தவர்கள் தங்கள் நிதிப்பங்களிப்பை முன்னோடி வங்கிக் கணக்கிற்கு அனுப்பட்டும்.யார் என்ன தொகை அனுப்பியது என்ற விபரங்கள் தெரியப்படுத்தத் தேவையில்லை கிடைத்த நிதி முதலாவது திட்டமான பொன்னாலை சகோதரர்களின் திட்டத்திற்கு ஏற்றவகையில் சேர்ந்ததும் ஏராளன் எங்களுக்கு அதைத் தெரியப்படுத்தி விட்டால் நாங்கள் அந்தத் திட்டத்திற்கான அனுமதியைக் கொடுத்து நிறைவேற்றி வைக்கலாம். எங்களின் இலக்கான திட்டம்( காரைநகர் 5, சுழிபுரம் 5 )நிறைவேறும் வரை நிதி உதவி செய்பவர்களின் விபரங்களைத் தெரியப்படுத்துவதைத் தவிர்ப்போம். எங்களின் இலக்கான திட்டத்திற்கான செலவு அண்ணளவாக 15 இலிருந்து 20 லட்சம் வரை தேவைப்படும் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர்...... அந்த் திட்டத்தில் நிதி பங்களிப்புச் செய்தவர்களின் விபரங்களை...... அவர்கள் விரும்புவதை பொறுத்து வெளியிடலாம்.
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
கவி அருணாசலம் அண்ணை கூறுவதும் நன்மை தரும் விடையமே ஒவ்வொரு நாட்டிற்கு ஒரு அமைப்பாளர் என்ற ரீதியில் முன்னோடி அமைப்பிற்கான முன்னோடி அமைப்பாளர்கள் இருப்பதும் சிறப்பாக இருக்கும் uk யில் கோஷான்..... ஜெர்மனியில் குமாரசாமி அண்ணை ... கனடாவில் ஒருவர் தேவை.... அமெரிக்காவில் ஈழப்பிரியன் ....... இப்படி அவர்கள் இந்தத் திட்டத்திற்கான ஒருங்கிணைக்கும் வேலைகளையும் கிடைக்கும் சிறு துளி நிதியையும் சேர்த்து இலங்கை முன்னோடி வங்கிக்கு கணக்கிற்கு அனுப்பலாம். சாதாரண வங்கியினூடாக நிதியை அனுப்பும் வேளை வங்கி அறவிடும் கட்டணம் அதிகமாக இருக்கும் .அதுவும் சிறு தொகையாக பல முறைகள் அனுப்புவதால் இன்னும் அதிக கட்டணம் கொடுக்க வேண்டும் மிகுந்த கரிசனையுடன் இந்தத் திட்டத்தை முன் கொண்டு செல்ல உதவும் வகையில்வங்கிக்கணக்கை அறிவித்த ஏராளனுக்கு நன்றிகள்
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அல்லது யார் எவ்வளவு நிதி உதவி செய்கின்றார்கள் என்பதை மறைத்து அவர் அவர் தனது பங்களிப்பை வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விடலாம் . ஏராளன் வரவுவில் வைக்கப்பட்ட தொகையை மட்டும் எங்களுடன் பகிரலாம். தேவையான தொகை சேர்ந்த கையுடன் முன்னோடிகளின் திட்டத்தை ஆரம்பிக்கலாம் எது சரியானது என்பதற்கு அப்பால் இந்தத் திட்டம் நிறைவேற வேண்டும் அதுவே எமது இலக்கு சரி இன்னும் சிலர் தங்களின் கருத்தையும் கூறட்டும்
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
இதில் ஈழப்பிரியன் அண்ணாவும் அப்பப்ப உதவி செய்யலாம் எனக் கூறியதை மறந்து விட்டேன்.🙏 அவரையும் சேர்த்துக்கொள்ளலாம். அடுத்த கட்டமாக எங்களின் இலக்கான திட்டத்திற்கு நான் என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் சிலரிடம் பேசியிருக்கின்றேன். அவர்களும் நிச்சயமாக இந்தத் திட்டத்திற்கு உதவுவதாகக் கூறியுள்ளார்கள் அதற்கும் ஒரு காலத்தை நிர்ணயம் செய்தால் தான் அந்தக் காலத்திற்குள் செய்து முடிக்க முடியும் என்பது கருத்து
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
சரி அப்படியே செய்யலாம் ஏராளன் பரிந்துரைத்த அந்தப் பொன்னாலை திருத்த வேலைகளை முன்மாதிரியாக ஆரம்பிக்கலாம் அதற்கான செலவு அண்ணளவாக 184,௦௦௦ வரும் என்று ஏராளனுடைய நண்பர் ஒருவர் கணித்திருக்கின்றார் , அதை ஏராளன் மற்றைய திரியில் சொல்லியிருக்கின்றார் . நாங்கள் 200.000 ரூபாய் என்ற தொகையை முதலில் சேர்ப்போம். இப்போது இந்தக் குழுவில் நிதி உதவி செய்ய முன் வந்திருப்பது வாத்தியார் குமாரசாமி அண்ணா . கோஷான் கவி அருணாசலம் அண்ணா இதில் குமாரசாமி அண்ணா முன்னோடியூடாக இன்னுமொரு திட்டத்திற்கு நிதி உதவி செய்வதாக எழுதியுள்ளார் ஆகவே அவருடைய நிலையை அவர் விளக்கமாக தெரியப்படுத்துவது நல்லது மற்றும்படி கவி அருணாசலம் அண்ணை எழுத்தியதை நான் ஏற்கனவே எழுத நினைத்தேன் . நேரம் கிடைக்கவில்லை அவர் சரியாகவே கேட்டுள்ளார் நாங்கள் நினைத்தால் இந்த பொன்னாலை திட்டத்தை மாசி மாதத்திற்குள் முடித்து விடலாம். அந்தத் திட்டத்திற்கான எனது பங்களிப்பு இப்போதே தயாராக உள்ளது அந்தப் பங்களிப்பின் தொகையை இங்கே எழுதுவது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை . பூனைக்கு யாராவது மணி கட்டத்தானே வேண்டும் ஒளிவு மறைவு இல்லாமல் தெரியப்படுத்தலாம் என்றால் எழுதுகின்றேன் . அண்ணை, கொமட் 35000 - 70000 ரூபா வரை உள்ளது. நாங்கள் 50000 ரூபா என்று சராசரி விலை குறித்து வைப்போம். கைகளால் பிடித்து நகர வெள்ளிரும்பு பைப் 15000 ரூபா(ஏற்கனவே இரும்பு பைப் போட்டு உக்கிவிட்டது) 2 லான்ட் மாஸ்ரர் மண் 24000 ரூபா 2 லான்ட் மாஸ்ரர் சல்லி 15000 ரூபா 8 பைக்கற் சீமந்து 20000 ரூபா 20 (3/8) கம்பி 20000 ரூபா 1 கிலோ கட்டுக்கம்பி 4000 ரூபா பொருட்கள் கொண்டுவர கூலி 1000 ரூபா மேசன், பிளம்பிங் கூலி 35000 ரூபா மொத்தச் செலவு 184000 ரூபா(கொஞ்சம் கூடிக் குறையலாம்) எனக்கு அறிமுகமான எலக்ரீசியன் தம்பி நேரில் சென்று பார்த்து தந்த விபரங்கள்.
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஈழப்பிரியன் அண்ணா சிறு துளி பெரு வெள்ளம் ஒரு டொலர் அல்லது யூரோ கிடைத்தாலும் அதைக் கொடுக்க முன் வருபவர்களின் மனது பெரிது அவற்றை ஏற்றுக் கொண்டு செயற்படும் வேளையில் தான் மற்றவர்களுக்கும் திருப்தியும் மனநிறைவும் கிடைக்கும். முன்னோடிகளில் நீங்கள் ஒருவராக இணைந்ததையிட்டு மகிழ்ச்சி 🙏
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
கட்டாயம் 🙏
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
"முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026" இது வரை இந்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவு தர உறுதியளித்திருக்கும் உறவுகள் குமாரசாமி அண்ணா கோஷான் கவி அருணாசலம் அண்ணா ஏராளன் வாத்தியார் ஈழப்பிரியன் அண்ணா உதவி செய்ய விரும்பும் உறவுகள் விரும்பினால் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள் . பெயர் தெரிவிக்க விரும்பாதவர்கள் ஏராளனுடனோ அல்லது கோஷானுடனோ?(கோஷான் விரும்பும் பட்சத்தில் ) தனி மடல் மூலம் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
நானும் அதையே சரியாக இருக்கும் என நினைக்கின்றேன் ஒரு வங்கி இலக்கம் புதிதாக உருவாக்கி அதை முன்னோடி அமைப்பின் பெயரில் பாவிக்கலாம் . அந்த வங்கி கணக்கு ஏராளன் பெயரில் இருக்கும். உதவி செய்ய விரும்புபவர்கள் அந்த இலக்கத்திற்கு தங்கள் பங்களிப்பினைச் செலுத்தலாம். . புலர் நிறுவனம் ஏற்கனவே ஒரு ஒரு கட்டமைப்பாக இயங்குவதால் அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கை வேறு ஒரு கட்டமைப்பிற்காக பயன்படுத்துவது ஒரு சில சிக்கல்களை ஏற்படுத்தலாம்🙏
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
முதலாவதும் இரண்டாவதும் சரியாக வருமா என்று தெரியவில்லை. உதவி செய்ப்பவர்கள் நேரடியாகப் பயனாளிகளுக்கு அல்லது ஒப்பந்தக்காரர்களுக்கு அனுப்புவதை விரும்புவார்களா என்பது ஒரு கேள்வி. அங்கெ அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள் தெரிய வரலாம் மூன்றாவது சரியாக இருக்கும் என்னைப் பொறுத்தவரையில் ஒரு புதிய வங்கிக்கணக்கு இருந்தால் உதவி செய்பவர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும் உதவி செய்பவர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் தனிப்பட்ட தகவல்களை தெரியப்படுத்தலாம் இல்லையா ? பெயர் உண்மையிலேயே வித்தியாசமான ஒரு நல்ல தமிழ்ப் பெயராக இருக்கின்றது. நல்லதொரு தெரிவு 👌 மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்போம் பலரும் முன்னோடிகளாக இருப்பதை விரும்புவார்கள்
-
ஜெர்மன் மின் கட்டக் கட்டணங்கள் 2026 ஆம் ஆண்டில் பாதிக்கும் மேல் குறைய உள்ளன.
மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் கூறியது போல 50 வீதம் என்பது பிழையான தகவல் . இந்த வருடத்தில் கட்டணம் குறைவு என்பது ஒரு வருடம் ஒரு குடும்பத்தினருக்கு அதிக பட்சமாக 100 யுரோ விற்குள் தான் இருக்கும். அதை விட இங்கே மின்சார விநியோகம் பல நிறுவனங்களினால் கையாளப்படுகின்றது. வருடத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்களின் மிசார விநியோக நிறுவனத்தை மாற்றும் முறையைக் கையில் வைத்துக் கொண்டால் அதாவது ஒப்பந்தம் வருட ரீதியில் செய்தால் ஒவ்வொரு வருடமும் குறைந்த விலையில் விநியோகிக்கும் நிறுவனங்களால் அதிக லாபம் பெற்றுக் கொள்ளலாம். இதில் விழிப்பாக இருக்க வேண்டும் வருடம் முடிவதற்குள் அடுத்தநிறுவனத்தை தெரிவு செய்து பழைய நிறுவனத்தின் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அவர்களின் ஒப்பந்தப்படி இரண்டாவது வருடத்திற்கான அதிகப்படியான விலையைக் கொடுக்க வேண்டி வரும்
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
களத்தில் கேர்ணல் சங்கர் ஞாபகார்த்தமாக என இந்தத் திட்டம் பெயர் சூட்டப்பட்டாலும் அதே பெயரில் நாட்டில் இயங்க முடியாது என்றால் நாட்டில் அதை இன்னொரு பெயரால் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படியென்றால் மட்டுமே யாழ்களத்தை விட்டு வெளியே சென்று நண்பர்கள் உறவினர்களிடம் இதற்கான நிதி உதவிகளைக் கோரலாம் என்று நினைக்கின்றேன்.
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
நன்றி ஏராளன் தகவலுக்கு காரைநகரின் பெயரை வைத்துப் பல அமைப்புக்கள் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் இருக்கும் நிலையிலே........ (ஆலயங்கள் கட்டுதல், புனரமைத்தல், கும்பாபிஷேகம் செய்தல் என்பன தான் அந்த அமைப்புக்களின் முதன்மையான திட்டங்கள்) உங்கள் அமைப்பு இப்படியான உதவிகளை பல காரைநகர் மக்களுக்காகச் செய்து வருவது பாராட்டப்பட வேண்டிய விடையம்.. நாங்கள் குறுகிய காலம் அங்கே தங்கி நிற்கும் நிலையால் இப்படியானவர்களை அடையாளம் காண முடிவதில்லை பாடசாலை, மாணவர்கள், கல்வி, பரிசளிப்பு, என்ற நிலையிலே தான் பலருடைய தனிப்பட்ட உதவிகளும் செல்கின்றன. இனிமேலாவது சரியான வழியில் செல்வார்கள் என் நம்புவோம் 🙏 அடுத்த கட்டமாக எப்படி எந்த வகையில் எங்கள் பங்களிப்பினை செய்யலாம்? ஏராளன் உங்கள் அமைப்பின் வங்கி இலக்கத்தைப் பயன்படுத்தலாமா? அல்லது உங்களால் இதற்கென ஒரு புதிய வங்கி கணக்கை ஆரம்பிக்கலாமா ? அல்லது ஏதாவது மாற்று வழி உள்ளதா ?
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
நன்றி கு சா அண்ணா வேறு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில் அவரின் ஊடாக இந்தத் திட்டத்தை முன்நகர்த்துவோம் 🙏
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
நன்றி சுவைப்பிரியன் களத்தில் உங்களின் சேவைகளின் அர்ப்பணிப்பு, உங்களுக்குரிய அனுபவங்கள் எல்லோருக்கும் தெரியும். அவை யாழ் களத்தில் எங்கள் எல்லோருக்கும் உதவியாக இருக்கும் 🙏
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
நல்ல விடையம் ஏராளன் மிகவும் சுறுசுறுப்பாகத் தகவல்களை சேகரித்துத் தந்துள்ளார். கோஷன் எழுதியதைப்போல முன்னோட்டமாக 10 வீடுகளுக்கான வசதி செய்து கொடுக்கலாம் 5 சுழிபுரம் , 5 காரைநகர் , இடையே திருத்த வேலைகள் பொன்னாலை யில் செய்யலாம். அடுத்த கட்டமாக முதலில் பொன்னாலையில் நடமாட முடியாத அந்தச் சகோதரர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய எவ்வளவு செலவாகும் என அறிய விரும்புகின்றேன் ஏராளன் அடுத்த கட்டமாக ஒரு வீட்டில் கழிவறை அமைத்துக் கொடுக்க என்ன செலவாகும் என்பதையும் அறியாத தந்தால் உதவியாக இருக்கும். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொழுது ஒருவரிடம் மட்டுமல்லாது பலரிடம் கேள்விப் பத்திரம் மூலம் மொத்த செலவைக் கேட்டு ஒரு ஒப்பந்த அடிப்படையில் செயற்படுவதும் நல்லது என நினைக்கின்றேன் ஏராளன் ஏற்றுக் கொண்டால் அவரை இந்தத் திட்டத்திற்கான பொருளாளராக நான் பிரேரிக்கின்றேன் அவரால் கட்டாயம் நம்பிக்கையான முறையில் நிதி கையாளப்படும் உங்கள் அபிப்பிராயங்களையும் சொல்லுங்கள் உங்கள் ஆதரவிற்கு நன்றி தங்கை யாயினி கட்டாயம் நிழலி இந்தத் திட்டம் 2026 இல் யாழின் ஒன்றிணைந்த ஒரு உதவித் திட்டமாக நிறைவேறும் என்ற நம்பிக்கை உண்டு .
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
யாரையும் நம்பி அல்லது அவர்கள் செய்வார்கள் என்று இந்தத் திட்டத்திற்க்குள் நான் என்னை இனைத்துத்துக் கொள்ள விரும்பவில்லை சங்கங்களின் நிலைமையை அறிந்தவன் என்பதாலும் அவற்றை விமர்சிக்க விரும்பாததாலும் அதற்கு அப்பால் சென்று இப்படியான ஒரு உதவி காரைநகர் மக்களுக்கு கிடைத்தால் அதை நானே முன் நின்று செய்து முடிப்பேன் என்று உறுதியாக கூற முடியும் . இப்படியான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வேளை எனது காத்திரமான நிதிப் பங்களிப்பும் நிச்சயமாக இருக்கும். கோஷான் 👍🙏
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆனால் நமக்கு நஷ்டமே எதுக்கும் வரட்டும் கேட்டுப் பார்க்கலாம் 😇
-
விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை
இவர் நம்ம ஆள்..... அதனால் தண்ணீரில் சறுக்கி விழ வாய்ப்பில்லை... தள்ளுப்பட்டுத்தான் விழுந்திருப்பார் 😂 பனையாலை விழுந்தவனை மாடு ஏறி மிதித்த மாதிரி பனையூர் செல்லும் வழியில் இன்னொரு விபத்தால் 🤣சங்கடமாம்
-
ஜெர்மனிக்கான பன்டேஸ்பேங்கின் முன்னறிவிப்பு: பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வரும்.அரசாங்க செலவினங்களும் ஏற்றுமதிகளும் வளர்ச்சியை ஆதரிக்கின்றன - பணவீக்கம் மெதுவாகக் குறைகிறது.
deutsche bundesbank ஜேர்மன் நாட்டின் அரசவங்கி ஜேர்மன் நாட்டில் இன்றைய நாளில் பொருளாதாரம் என்பது மந்தமான நிலையில் தான் உள்ளது. இந்த மந்தமான நிலை ஜெர்மனியில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் உள்ளது அந்த அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் வீழ்ச்சியும் அந்த நாட்டின் அரசியல் ரீதியாக கணிக்கப்படும் பொழுது சிறிது முன்னுக்குப் பின்னாகவே இருக்கும். உலகளாவிய ரீதியில் ஜெர்மனியின் பொருளாதாரம் இனிமேல் முதன்மை நிலைக்கு வரமுடியாது. மக்கள் அரசையும் அரசு மக்களையும் காரணம் காட்டித் தப்பிக்கும் நிலையில் இன்று ஜெர்மனியின் பொருளாதாரம் மந்தமான நிலையில் இருக்கின்றது சிலர் குடியேறிகளின் மீது பழியுயைச் சுமத்தும் நிலையில் சிலர் ட்ரம்பின் வரிச் சுமையைக் காரணம் காட்டுகின்றனர். என்னுடைய கணிப்பின்படி பொருளாதாரம் உலகிலேயே இன்று ஒரு போர்க் கால சூழ்நிலையில் இருக்கின்றது . ரஸ்யாவின் மேற்குலகின் மீதான போர் அச்சம் உக்கிரையேன் நாட்டில் ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு நேட்டோவின் ரஷ்ய நாட்டின் மீதான பகை ஈரான் இஸ்ரேல் காசா தைவான் சீனா போர்ச் சூழல் எனப் பல வகையான காரணங்கள் உள்ளன ஆனாலும் ஒரேயடியாக அடிபட்டுப் போகும் அளவில் ஜெர்மனியின் பொருளாதாரம் விழவில்லை . உண்மையிலேயே ஜெர்மனி நாட்டவர்கள் எந்தச் சூழலிலும் இருந்து மீண்டுவரும் பண்பினைக் கொண்டவர்கள்