Everything posted by வாத்தியார்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
போட்டி முடியும் வரை அவர் ஆழ்ந்த தியானத்திலிருந்து வெளியே வரச் சந்தர்ப்பம் இல்லை. 😀வந்தவுடன் அவரை ஒரு பேட்டி எடுத்து அவரது வெற்றியின் ரகசியத்தை வெளியிட வேண்டும் 😅
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
ஒரு சிறிய உதாரணம் ஒரு துறையில் நிறுவனத்தை ஆரம்பிக்கும்போது அதன் லாப நட்டம் கவனிப்பில் இருக்கும் . தொடர்ந்து அந்த நிறுவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் மற்றும் அரச நிறுவனங்களின் மத்தியிலும் ஒரு நல்ல பெயருடன் வளரும்போது அதன் வளர்ச்சி அதிகரிக்கும் . அதன் கிளைகள் பரவும் வாய்ப்புக்கள் கிடைக்கும் அந்த நிறுவனம் ஒரு சங்கிலித் தொடராக மாறும் வாய்ப்புக்களும் வரும் ஆனால் இங்கே அதிகமாக அந்த நிறுவனம் கவனிக்க வேண்டியது. இலாபம் என்பதே. இலாபம் இல்லாமல் வெறும் அந்நிய முதலீடுகளினால் பெரிதாக்கப்படும் கிளைகளைக் கொண்ட நிறுவனம் தனது இலாபத்தில் அந்த முதலீட்டாளர்களுடன் பங்கு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. சிலவேளைகளில் அந்த நிறுவனம் தனது பங்குகளை விற்பனை செய்யும் நிலையில் இலாபம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் நிலையில் அந்நிய முதலீடுகள் தடைபடலாம் இதனால் ஏற்படும் பங்குகளின் சரிவு இன்னும் அதிக தாக்கத்தை அந்த நிறுவனத்தின் இலாபத்தில் ஏற்படுத்தலாம் . கண்காணிப்பு என்பது ஒரு நிறுவனத்திற்கு எல்லாத் திசைகளிலும் இருக்க வேண்டும் அரசு தனது வருமானத்தைக் கூட்டவும் வரிகளை அறவிடவும் சில உத்திகளைக் கையாளும். அதில் நிறுவனங்கள் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும். ஒரு சமயத்தில் ஊக்கம் அளித்த அரசே இன்னொரு சமையத்தில் காலை வாரிவிடும். முதலாளிகள் தாங்கள் நட்டமடைந்தாலும் தங்கள் இலாபத்தில் இல்லாவிட்டாலும்... அவர்களுடைய கணக்குகளில் இருந்து தொழிலாளர்களுக்கும் கூட்டாளிகளும் பங்குதாரர்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்தே ஆக வேண்டும். இல்லையேல் அவர்கள் தண்டிக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகம்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தாத்தாக்கள் பேராண்டிகளுக்குப் பின்னால் நின்று அவர்களின் சுமைகளைத் தங்குவது தானே எப்போதும் நடப்பது😅 வாத்தியின் நிலைமை அறிந்து தோள் தர முன்வந்த அமெரிக்கன் தாத்தா😂 இன்றிலிருந்து தோள் தர வந்த யாழ் கள தாத்தா🤣 என்று அழைக்கப்படுவார் 🙏
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அமெரிக்கன் தாத்தாக்கு எத்தனை புள்ளிகள் கிடைத்தாலும் கடைசியில் சுமைதாங்கி தான் என்று பையன் அறிவித்துவிட்டார் 😂🤣
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இது ஒரு திட்டமிட்ட நிதி அபகரிப்பு என்றே நினைக்கத் தோன்றுகின்றது
-
புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கு அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி கடும் எதிர்ப்பு : 7ஆம் திகதிக்கு முன் தீர்மானத்தை மாற்றுமாறும் வலியுறுத்தல்
நீங்கள் சொல்வதும் ஒரு காரணம் எதிர்ப்பது என்று முடிவெடுத்துவிட்டால் காரணங்கள் பல வெளிவரும் இங்கே மாணவர்களோ அல்லது பெற்றோரோ எதிர்ப்பை வெளிக் கொண்டு வரவில்லை என்பது கருத்தில் கொள்ளவேண்டிய ஒரு விடையம் மாணவர்களின் கல்வியை அரசியலாக்கும் முனைப்பில் இந்த ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் ஈடுபடுகின்றார்கள்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எல்லாவற்றையும் தலைகீழாகவே தெரிவு செய்தேன் இந்த அவுஸை மட்டும் கவனிக்காமல் விட்டுட்டன் 😂😅
-
தவெக உட்கட்சி மோதல்
ஒருவனுடைய பலமே அவனுடைய எதிரிகளின் எண்ணிக்கை தான் விஜய்க்கு எதிரிகள் அதிகரிக்கும் பொது எதிர்ப்பக்கக்கத்தில் விஜய் சார்பாகக் கூடும் ஆதரவைக் கவனிக்கத் தவறி விடுகின்றது இந்தப் பொன்னம்பலம் போன்ற கண்ராவிகள் சும்மாவா அ தி மு க வும் பா ஜ க வும் விஜய் பின்னால் அலைகின்றார்கள்
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
அதாவது பாய்வது தாவுவது தொங்குவது இதை செய்யும் அனைவரும் உங்கள் கருத்துப்படி அப்படியானவர்கள் அதுவும் வெறி பிடித்தவர்களாக இருந்தால் இன்னும் மோசம் என்று எடுத்துக் கொள்ளலாமா? அப்படியென்றால் அன்று ஒரு கூட்டம் இப்படித்தான் கூடியது. மரங்கள் மதில்கள் கூரைகள் எல்லாமே இப்படித்தான் இருந்தது ஆனால் அதன் பின்னர் அந்தக் கூட்டம் எப்படிப் பாய்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
உண்மையான கருத்து இது தான் அதையே இங்கே உல்ட்டாவாக மாற்றும்போது சகல இயந்திரங்களையும் ஒன்றாக கைவசம் வைத்திருக்கும் ஒரு அரசாங்கம் எப்படி எல்லாம் உல்ட்டா செய்யும்.
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
காவல்துறை எச்சரித்தது என்பதில் உண்மை இல்லை விஜயை அவர்கள் தான் கருவூர் எல்லையிலிருந்து வரவேற்றிருக்கின்றார்கள் குறிப்பிட்ட இடத்தில் பேரூந்தை நிறுத்தி அங்கிருந்து தான் பேச வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் அவர்கள் உங்களுக்குத் தான் குரங்குக்கு கூட்டம் விஜய்க்கு ரசிகர்கள் / தொண்டர்கள் அதாவது அரசு தன் மீது பழி வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு கூட்டத்தை அங்கெ பல மணி நேரம் காத்திருக்க வைத்திருக்கின்றது உங்கள் கருத்தின்படியே தி மு க பழிக்கு அஞ்சி மக்களை பலிக்கடாவாக்கியிருக்கின்றது என்பது தெரிகின்றது ஒரு முப்பதாயிரம் பேரை கட்டுப்பாட்டுக்குள் வைத்துஇருக்க முடியாத ஒரு காவல்துறை ..... அதற்கு ஒரு அமைச்சர் ... ஒரு அரசு
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
ஐயா விஜய் கட்சி ஆரம்பிக்கின்றார் மாநாடு நடத்துகின்றார் ஒவ்வொரு மாவட்டம் தோறும் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்கின்றார் அல்லது செய்ய முயற்சிக்கின்றார். தன்னுடைய பிரச்சாரத்தின்போது இத்தனை ஆயிரம் மக்கள் கலந்து கொள்வார் என்று விஜய்க்கு எப்படித் தெரியும்? ஒன்று... கட்சியின் மதிப்பீடு இதில் விஜயும் அவருடைய கட்சி உயர்மட்ட உறுப்பினர்களும் ஒரு மதிப்பீடு செய்யும் வாய்ப்பு உள்ளது( இது ஒரு எதிர்பார்ப்பு ) இரண்டு.... அவருடைய மாவட்டச் செயலாளர் அல்லது செயற்பாட்டாளர்கள் ஒரு கணிப்பீடு செய்வார்கள் இது அவர்களால் முடிந்த அளவில்தான் இருக்கும்) மூன்று.... அரச இயந்திரங்களின் கணிப்பீடு( இது மிக்கது துல்லியமாக இருக்க வேண்டும் ,அவர்கள் மக்களின் காவலர்கள் ) நான்காவது.......செய்தி ( தகவல்) தொடர்பாளர்கள் செய்யும் கணிப்பீடு (இது ஒரு ஊகம் ) ஐந்தாவது..... வேறு கட்சி அமைப்புக்கள் செய்யும் கணிப்பீடு (இது நிபந்தனைகள் அற்ற நம்பிக்கை அற்ற ஒன்று) இந்தக் கணிப்பீடுகளில் அதிகமாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை இரண்டாவதும் மூன்றாவதுமான கணிப்பீடுகள் களத்தில் இருந்து வந்த கணிப்பீடுகள் மாவட்டச் செயலாளர்கள் புதியவர்களாக ஆளுமை உள்ளவர்களா ? என்பது ஒரு கேள்விக்குறி . இங்கேயும் காவல்துறை அவர்களுடன் சேர்ந்து நெருக்கமானமுறையில் கண்காணிப்பை மேற்கொண்டிருக்க வேண்டும் இதில் அரச இயந்திரமாக காவல்துறை செய்த கணிப்பீடு... அப்படி ஒன்றைச் செய்ததால் அவர்கள் அதற்கேற்ற முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும் விஜய் நாமக்கல்லில் இருந்து கருவூருக்கு வருவதைத் தடை செய்திருக்க வேண்டும்.
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
உதாரணம் சரியாக இல்லை வெறும் விஜய் எதிர்ப்பு கருத்தாக முடியாது
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
10.000 இற்கும் மேற்பட்ட மக்கள் வரலாம் என்று தான் அனுமதி கேட்டதாம் விஜய் அப்படியான ஒரு மனிதன் அல்ல கூட்ட நெரிசல் ஏற்படுவதை அவர் விரும்புவதில்லை
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
இதை நான் ஏற்றுக்கொள்கின்றேன் காரணம் ஏற்பாட்டாளர்கள் என்ற வகையில் காவல்துறையுடன் நெருக்கமான தொடர்புகளை பேணி அந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் ஆங்காங்கே தங்களது தொண்டர் படைகளையும் உதவிக்கு கூடுதலான ஆளணியுடன் செயற்பட வைத்திருக்க வேண்டும் தி மு க ஆட்சி இதற்கு உடன்படாது என்றாலும் சிறிய முயற்சியாவது செய்திருக்கலாம் நடந்தது முடிந்து விட்டது அடுத்த கரூர் நிகழ்வு ஒன்று இன்னொருமுறை வராமல் விஜய் தடுக்க வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை செய்யவேண்டும் அதுவே அவருக்கான ஒரு பலமாக அமையும். இன்னுமொரு கரூர் நிகழ்வு (தி மு க ஏற்பாடு செய்யலாம் ) அவருடைய அரசியல் வாழ்க்கையை பூச்சியமாக்கி விடும்
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
கரூரில் விஜய் பிரச்ச்சாரம் செய்ய வருவதற்கு அவர்களுக்கு அனுமதி கிடைத்த நேரம் பிற்பகல் 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரை ஆனால் அவர் அங்கெ வந்தது இரவு 7 மணிக்கு இதில் எங்கே தாமதம் அவருக்கு இன்னும் 3 மணி நேரம் இருக்கின்றது. சும்மா உதார் விடாதேங்கோ
-
யாழில் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடல்
ஒரு காலத்தில் பலர் இலங்கை அரசுகளுடன் இருந்தவர்கள் இப்போது அரசிற்கு எதிரணியாக வெளியே வருகின்றார்கள் எல்லாமே தலை கீழாக மாறியது போல ஒரு மாயை உருவாக்கப்படுகின்றதா?
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அன்றும் இலங்கையில் மழை சிலரைக் காப்பாற்றியதாக ஒரு தகவல் இருந்தது . நாளைக்கும் மழைக்கு வெற்றியோ தெரியாது
-
இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை!
இலங்கை விசா முறை மாற்றம் இதுவரை இலங்கைக்குப் பயணம் செய்பவர்கள் இணையத் தளமூடாக இலங்கையைச் சென்றடைய முன்னரே ETA எனப்படும் விசா அனுமதியைப் பெறலாம் , அப்படி விசா அனுமதியைப் பெற தவறும் பட்சத்தில் விமான நிலையத்தில் இருக்கும் குடி வரவு அலுவலகத்தில் இந்த அனுமதியைப் பெறலாம். வருங்காலத்தில் இந்த விமான நிலைய குடிவரவு அலுவலகத்தில் யாருக்கும் இந்த சேவை கிடைக்காது என நினைக்கின்றேன். அப்படித்தான் இந்தச் செய்தியை நான் விளங்கிக் கொள்கிறேன் எல்லோருக்கும் அந்த சலுகை இல்லை ஐரோப்பிய அமெரிக்க மற்றும் பல நாடுகளில் இருந்து செல்லும் இலங்கையர்கள் இலங்கைக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தாத பட்சத்தில் அவர்களிடம் இருந்து கட்டணம் அறவிடப்படும்
-
யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி!
தவறு ஒன்றும் இல்லை... ஒரு சந்தேகம் என்று தான் எழுதியிருந்தேன் அரசே.... அதுக்கு.. அதுக்கு... அதுக்கு........ஏன்..... என்னை இப்ப இப்படி வெருட்டுறீங்கள் இதுக்கெல்லாம் கசையடியா உங்கள் தண்டனை😂😇😅
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எங்கேயோ ஒரு மூலையில் எதோ ஒரு அப்பாவி இந்த மழையால் பாதிக்கப்பட்டிருப்பான் 🙂 ஆனாலும் அவன் நம்பிக் கொண்டிருப்பான் நாளை நமதே என்று 😇
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அது தானே நான் நினைத்தேன் எப்படிடா இப்படி எல்லாம் நடக்கும் என்று🤣
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நீங்கள் கேட்ட மாதிரியே ஏழாவது விக்கெட்டும் போய்விட்டது பையன் அப்ப பாகிஸ்தான் கி ஜிந்தா பாத் 😂
-
இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
தமிழ் நாட்டில் பா ஜ க கூட்டணி என்பது ஒரு முறை தான் வென்றிருக்கின்றது என்று நினைக்கின்றேன் அதுவும் வாஜ்பாய் கருணாநிதி கூட்டணி மட்டுமே இந்திரா காங்கிரஸ் பலமுறை திராவிடர்களுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க உதவி இருக்கின்றது விஜயும் நானும் ரௌடிதான் என்பதை போல திராவிடக் கொள்கையுடன் தான் அரசியலுக்கு வந்திருக்கின்றார் எதுவும் நடக்கலாம்
-
இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
பாஜ க கூட்டணி விஜய்க்கு எதிர்கால அரசியலில் சிக்கலை ஏற்படுத்தும் ... அந்த வகையில் இப்போது காங்கிரஸ் அதிக சீட்டுக்களை கேட்டு தி மு க வை நச்சரிக்கும் நிலையில்.... அந்தக் காங்கிரஸையே தி முக விடம் இருந்து பிரித்து விஜய் தன்னுடன் சேர்த்துக் கொண்டால் ..... தி மு க வின் தோல்வி உறுதி அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க இது உதவும் பா ஜ க வை அரசில் சேர்க்காமல் அதிமுக விலத்தி வைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் அதைவிட விஜய் ஓரளவு கணிசமான வாக்குக்களை வாங்க காங்கிரஸ் கூட்டணி உதவும் யாருக்குமே வாக்கு அளிக்க விரும்பாமல் இதுவரை இருந்து வரும் சிறுபான்மை மக்கள் விஜய் காங்கிரஸ் கூட்டணியை அதிகம் விரும்புவார்கள் தி முக பலத்த அடி வாங்கும் சந்தர்ப்பத்தில்..... விஜய் எதிர்க்கட்சி தலைவர் ஸ்தானத்தில் இருக்கும் வாய்ப்பும் வரலாம்