Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வாத்தியார்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  11,206
 • Joined

 • Days Won

  15

Everything posted by வாத்தியார்

 1. நிச்சயமாக ஒருவர் மருத்துவம் படிக்கச் செல்லும் பொது அவரின் பின்னால் இன்னொருவர் காத்திருக்கின்றார் . ஆகவே முன்யோசனையுடன் செல்ல வேண்டும் அதற்கான விருப்பும் சேவை மனப்பான்மையும் கொள்ளவேண்டும். உதவித் தொகை பெற்றுப் படிப்பவர்கள் கட்டாயம் சில கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ளவேண்டும். மருத்துவராகத் தொடர்ந்து வேலை செய்ய முடியாதவர்கள் ( வேலையழுத்தம், குடும்பம், மன அழுத்தம் ) இவர்களுக்கு என்ன செய்யலாம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். மற்றையவர்கள் வேறு தொழில்களை பணம் ஈட்டும் குறிக்கோளுடன் நாடும்போது கடனையும் அவர் பெற்ற உதவித் தொகையையும் திருப்பித் தருவதே முறை. மருத்துவத் துறையில் கட்டணமாகக் கட்டப்படும் தொகையை விட அதிகமான தொகை பராமரிப்பு மற்றும் இன்னபிற செலவுகள்... நீங்கள் கூறியது சரியே. முடிவாக ஒரு வைத்தியராக தனது கடமையைத் தொடங்கி நாடுவிட்டு நாடு சென்று பணமீட்ட முயற்சிப்பவர்களுக்கு ஒரு கட்டுப்பாட்டை விதிப்பது தவறல்ல. இலங்கை போன்ற நாடுகளில் மட்டும் அல்ல இலவசக் கல்வியைப் பெற்ற மருத்துவர்கள் குறைந்த பட்ஷம் சில வருடங்கள் அந்த அந்த நாடுகளிலேயே சேவையாற்ற வேண்டும் என்ற கருத்தை நானும் வலியுறுத்துகின்றேன். மருத்துவத்துறை பணமீட்டும் ஒரு தொழில் என்பதை விடுத்து அது ஒரு சேவை என நினைப்பவர்கள் தொடர்ந்தும் அந்தத் தொழிலிலேயே நிற்பார்கள். அப்படியானவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தல் ஒரு சிறப்பான அம்சம். .
 2. வாழ்த்துக்கள் புரட்சி ஓங்கட்டும் உங்கள் சேவை களத்தில்
 3. அமேசான் பிரித்தானியாவில் படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு இலவசக் கல்வி ஏற்பாடு செய்யுதாம். நாம தான் இங்காலிப் பக்கம் ஆச்சே வாய் பாத்துக் கொண்டிருக்கிறோம்
 4. ஒரு காலத்தில் இலங்கை என்ற நாடு அங்கு வாழ்ந்த தமிழர்களின் கல்வி அறிவினால் உலகத்தின் பார்வையை ஈர்த்தது அதே போல சில காலங்களின் பின்னர் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் பொருளாதாரம் சிங்கள மக்களின் கண்களைத் திறக்கும்.. அப்போது எல்லாமே மாறும் ஒரு நிலை வரச் சாத்தியங்கள் உள்ளன
 5. இயற்கையை மீறி எதுவுமில்லை அண்ணா. ஒரு காலத்தில் உலகம் ஒரேயடியாக அழிவுகளை சந்தித்ததாம். இன்றைய காலத்தில் மெல்ல மெல்ல அழிக்கின்றது.
 6. சிவா சின்னப்பொடி அவர்களின் எழுத்துக்கள் பழிவாங்கல் என்பது உங்கள் கருத்து எனது பார்வையில் அவரது எழுத்துக்கள் மனிதத்திற்கான போராட்டத்தை அனுபவ மூலமாக வெளிக்கொண்டு வருகின்றார் அவ்வாறு இன்னும் தனது அனுபவங்களை எழுதும் பொது நாங்கள் முகம் சுழிக்காமல் வரவேற்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து
 7. கவிதைக்கு நன்றி அங்கிள் உங்கள் இலக்கிய ஆர்வத்தை உங்களுடன் வாழ்ந்தபோதே அறிந்து கொண்டேன். இன்னும் பல ஆக்கங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்
 8. சாதி ஒழிய வேண்டும் என நினைப்பவர்கள் இருக்கும் வரை சாதி ஒழிவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றது. ஆனால் சாதியை ஒழித்து விட்டோம் என்று கூறுபவர்கள் இருக்கும் வரை சாதி முறை அவர்களாலேயே வளர்க்கப்பட்டு வரும்.
 9. சொல்வேன் இதைத்தான் நான் இங்கு தடுப்பூசி போட மறுப்பவர்களுக்குச் சொல்வேன். சில இடங்களில் பலரும் ஒரே மாதிரி யோசிப்பதால் பலருக்கும் நன்மை கிடைக்கும்.
 10. கூட்டமைப்பினர் கூத்தாடிகளாக இருக்கும் வரையில் தோழர் டக்ளஸ் அவர்களின் காட்டில் மழை தான். மக்கள் உரிமைக்கு முன்னர் இப்போது அபிவிருத்தியைத்தான் எதிர்பார்க்கின்றார்கள் என நினைக்கின்றேன்.
 11. எவராக இருந்தாலும் பிறக்கும் போதே சாவை நோக்கித்தான் நகர்கின்றார்கள். வாழ்க்கை முறை தான் காலத்தை நிர்ணயிக்கின்றது
 12. ஒரு நாள் சோறு உண்ணாவிட்டால் எங்கள் மக்கள் எங்கிருந்தாலும் எப்படித் தவிப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தளவிற்கு சோறு என்பது எங்கள் வாழ்வில் அழிக்க முடியாத ஒரு உணவுப் பொருள். இங்கே யாராவது ஒரு மாதம் சோறு உண்ணாமல் இருக்கின்ரீர்களா?
 13. அரிசியை சமைத்து அதனுடன் பலவகைக் கறியையும் தனித்தனியே சமைத்து உண்பது ஒருவகை. இங்கே சோறு முதன்மை. அரிசியுடன் பல மரக்கறிகளையும் அல்லது மாமிசத்தையும் சேர்த்தே சமைத்து உண்பது இன்னொருவகை. இங்குதான் சாதம் என்று வருகின்றது. இதை தனித்தனியாக சமைத்துப் பின்னர் எல்லாவற்றையும் குழையல் ஆக்கும் பண்பும் இருக்கின்றது. சாதத்தில் எது அதிகமாக இருக்கின்றது என்பது முக்கியமல்ல சுவையே முக்கியம். ஆனால் இலங்கைத் தமிழர்கள் அதிகம் அரிசியை தனியாகவே சமைப்பார்கள். அதிகமாக உண்பார்கள். இந்தியாவில் நேரப்பிரச்சனையால் எல்லாவற்றையும் சேர்த்தே இப்போது அதிகமாகி சமைக்கின்றனர். வியாபார நோக்கில் பலவகையான சுவையூட்டிகளுடன் சேர்வைகள் தயாராக இருக்கின்றன . சாதம் என்ற பெயரில் நோய்களை விலை கொடுத்து வாங்குகின்றனர் இலங்கையில் அப்படியில்லை இருந்தாலும் எந்த அரிசி சமைக்கின்றார்கள் என்பது முக்கியம். சிவப்பு அரிசி பரவாயில்லை பசுமதியை விட
 14. எண்பத்தி மூன்றினிலே எண்பத்தி மூன்றினிலே -ஆ இலங்கைத் தீவினிலே எண்பத்தி மூன்றினிலே இந்து மா கடலுக்கு நடுவினிலே - ஆடி ஈர்பத்து மூன்றிற் தொடங்கியதே துயர் இலங்கைத் தீவினிலே கண்பட்டதோ இத் தமிழினத்திற்கென கண்டவர் யாரும் வருந்திட எங்களைப் புண்படச் செய்தனரே - ஒரு போக்கிடமற்ற அகதிகளாக்கியே எண்பட்ட யாவரையும் தமிழ் என்றறிந்தால் உடன் கொன்றெறிந்தார் - அந்தோ (எண்பத்தி...) நெஞ்சங் குமுறிடவே-கற்பு நீங்கிடச் செய்த கொடுமையிலே - அந்தப் பஞ்சைத் தமிழ் மகளிர் - கொடும் பாவிகளாற் தங்கள் ஆவியை விட்டிட அஞ்சிய பாலகர்கள் - தங்கள் அன்னையர் மார்பில் அமுதமருந்தியே துஞ்சிய செய்திகளும் - பல துயரக் கதைகளும் மறந்திடுமோ - அந்த (எண்பத்தி...) தேயிலைத் தோட்டத்திலே - அந்தத் தெற்கு இலங்கையிலே ஆயிரமாயிரமாய்த் தமிழ்ச் சோதரர் அன்று இனவெறியாற் கொலையுண்டதும் நாயிலும் கீழ்க்கடையாய் - எம்மை நாடற்ற பேர்களாய் ஆக்கிய பின்னரும் காயும் இனவெறியால் - எம்மேல் காறியுமிழ்ந்ததும் நெஞ்சை விட்டேகுமோ (எண்பத்தி...) வெலிக்கடைச் சிறையில்-மனம் வெம்பிக் கிடந்த எம் சோதரர் தன்னையே... சிலிர்க்குதேயுடலம்...அந்தோ! சிந்தனை செய்திடவும் மனம் கூசுதே... பலிக்கு வெட்டினரே... பத்மாசனப் புத்தன் முன் கண்களைக் குத்தியே படையலிட்டனரே - அந்த பாதகம் எங்களின் நெஞ்சை விட்டேகுமோ (எண்பத்தி...) ஆண்ட அரச படை - எங்கள் அன்னையர் தங்கையர் மானம் பறித்ததும் மூண்ட பெருந்தீயில் - செல்வம் முற்றும் இழந்து நாம் ஏதிலரானதும் மாண்டவர் கண்களையே - அந்த மானமிலாதவர் தோண்டி மகிழ்ந்ததும் மீண்டும் நினைவலையில் - வந்து மேவிட வெந்துயர் ஆவியைத் தீய்க்குது (எண்பத்தி...) சிங்கள பௌத்தவெறி - எங்கள் செந்தமிழ்த் தாயைச் சிதைத்த கொடுமையை எங்கு முறையிடுவோம் - எமக்(கு) ஈழத்தையன்றியே யாதும் புகலுண்டோ! தங்கையர் தம்பிகளே! - தமிழ் ஈழ சரித்திரம் நாளும் படித்து நீர் பொங்குக பொங்குகவே - ஒரு போக்கிடமற்ற அகதிகளாயினோம் (எண்பத்தி...) மேற்குலகந்தனிலே - பொருள் மேவிய வாழ்வொடு வாழினும் எங்களின் நாட்டை மறப்போமோ! - எந்த நாளினிப் போயதைக் காண்பதென்றே-அன்னை வீட்டை மறப்போமோ! - என்று விம்மியழுது புலம்பிடும் எம்குரல் கேட்டிருப்பாய் காற்றே - அந்த கேவலைக் கீழ்த்திசை சென்றெமதீழத்தில் மீட்டு முரையாயோ - நாங்கள் விம்மியழவும் திறன் கெட்டுப் போயினோம் (எண்பத்தி...) ஆற்றல் இழந்தவராய்- எங்கள் அன்னை மொழியை மறந்தவராய்ப்-பெருங் காற்றிற் கலந்தவராய் - கலாச் சாரம் கலைகள்அழிந்தவராய்- நாம் மாற்றினமாகுவதோ - இல்லை மானத் தமிழர்களாய் என்றும் வாழ்வதோ சாற்றிடுவாய் தாயே - ஹே! சாமுண்டி காளீ! வீரகராளீ! (எண்பத்தி...) 1983 ஆடி 24 இல் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறையை நினைவு கூர்வோம். பாடியோர்: மாட்டின் சோபியா பாடல்களும் மெட்டும்: யுகசாரதி (எஸ். கருணானந்தராஜா) இசை: சதீஸ் குழுவினர்
 15. இன்றைய நிலையில் இந்தப் படுகொலைக்கு இலங்கையில் நீதி கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகி நிற்கின்றது . அதைவிட ஒரு அரசியல்வாதியின் குடும்பம் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் நிலைமையை இன்னும் மோசமாக்கலாம். இரு தரப்பினராலும் அரசியல் பழிவாங்கல் என்னும் போர்வையில் சிறுமியின் இழப்பை அரசியலாக்கி விடுவார்கள். நீதி கேட்பவர்கள் கையில் தான் சிறுமியின் மரணத்திற்கான தண்டனை தங்கியுள்ளது. வருத்தமான செய்தி.
 16. தொடர்ந்து கற்று வெற்றியுடன் வானில் பறக்க வேண்டும். வாழ்த்துக்கள்
 17. ஜெர்மனியில் வெள்ளம் வருவது வழமை. ஆனாலும் இன்றைய நிலைமை வேறு. கு சா அண்ணையைக் காணவில்லை என்றதும் நெஞ்சு பலமாக அடித்தது உண்மை. அனுபவத்தில் இப்படியான சம்பவங்களால் மனம் தோற்றுவிட்டதால் மிகவும் கவலை கொண்டேன். களத்தில் நாம் அனைவரும் சகோதரர்கள் கருத்தில் மட்டுமே விவாதம்.
 18. எங்கள் ஊரில் நாங்கள் வெள்ளத்திற்குள்ளேயே வாழ்க்கையை கொண்டு சென்றவர்கள். ஆனாலும் வல்லரசு நாடுகள் ஆக இருந்தாலும் இயற்கையை மீறி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதற்கு இப்படியான அனர்த்தங்கள் உதாரணமாக இருக்கின்றது. தகவலுக்கு நன்றி ஐயா வாழ்க வளமாக யாழுடன்
 19. கு சா அண்ணையின் வீட்டுத் தொலைபேசி இலக்கத்தை வைத்து அவர் வாழும் நகரைக் கண்டு பிடிக்கலாம் சிறி அண்ணை. அந்த ஊரில் வெள்ளத்தால் பாதிப்பு உண்டா என அறிந்து கொள்ளுங்கள்
 20. என்னுடைய ஊரிலிருந்து 30 km க்கு அப்பால் பலத்த சேதங்களும் உயிரிழப்புக்களும். ஹோலண்டை அண்மிய பிரதேசங்களில் கடுமையான பாதிப்பு. இதுவரை 70 பேர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. இதில் ஒரே நகரில் 60 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என கூறுகின்றார்கள். போக்குவரத்து பல இடங்களிலும் தடைப்பட்டுள்ளது. நாளைவரை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 21. ஒரு காலத்தில் இவரைத் துரோகியென அழைத்தவர்கள் எங்களில் பலர் . இலங்கை ராணுவத்தினரின் பிடியில் சிக்கிய உண்மைகள் மெல்ல மெல்ல வெளி வரும் காலம் கனிந்துகொண்டிருக்கின்றது.
 22. ஒவ்வொரு படமும் வெளிவரும் முன்னர் இப்படியான செய்திகள் வந்தவண்ணம் இருக்கும். ஆனாலும் அரசியியலில் ரஜனி வருவார். ஆனாலும் அரசியலிற்கு வரமாட்டார். படம் ஓடினால் காணுமே .
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.