Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாத்தியார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by வாத்தியார்

  1. அரசியலில் இன்னும் பக்குவம் அடையவில்லை என்பதையும் அவருடன் சேர்ந்திருக்கும் யாருமே சரியான ஒரு அரசியல் பாதையை விஜய்க்கு வகுத்துக் கொடுக்க முடியாதவர்களுமாக இருப்பதையும் இந்த ஒளிந்து இருக்கும் நிலை காட்டுகின்றது ஆனாலும் அரசியலுக்கு வந்துவிட்டால் படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு முன்னேறலாம் என்பது விஜயிக்குத் தெரியாமலா இருக்கும் விஜய் என்ற ஒரு மக்கள் ரசிக்கும் நபரை அரசியலில் யாருமே எதிர்கொள்ள விரும்ப மாட்டார்கள் அப்படியான நிலையில் விஜய் கட்சி ஆரம்பித்து நேரடியாகவே ஆழும் தரப்பினரை குறி வைத்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா ? அல்லது அந்த விஜயின் கட்சியையே கருவிலே அழிக்க நினைப்பார்களோ? ஆகவே தான் விஜயின் குஞ்சுகளுக்கு கொஞ்சம் புத்தி இருக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன்.
  2. ஒரு கட்சியைப் பதிவு செய்யும் பொது தேர்தல் ஆணையம் இதையெல்லாம் கேட்டுத்தான் பதிவு செய்திருக்கும். இப்ப அது அல்ல பிரச்னை வரப்போகும் ஆபத்தை முன் கூட்டியே காவல்துறை அவதானிக்கவில்லையா ? அல்லது நடக்கட்டும் பின்னர் மெதுவாக நாங்கள் உள்ளே செல்வோம் என்ற முன்னேற்பாட்டுடன் இருந்தார்களா ? அரசியலுக்காக மக்களை பலிக்கடாவாக்க நினைக்கும் கட்சிகளுக்கு காவல்துறை துணை போகின்றதா ? விரைவில் தெரிய வரும் விஜய் காவல்துறைக்குத் தெரியாமல் கரூரில் இருக்க முடியாது காவல்துறை அனுமதி கிடைத்து அவர் அங்கு தொடர்ந்தும் இருந்திருந்தால் இந்த அவலத்தைக் காரணம் காட்டியே அலுவலை முடித்திருப்பார்கள் தி மு க என்ன சும்மா ஒரு கட்சியா எம் ஜி ஆரை,ஜெயலலிதாவை எதிர்த்து நின்றும் இன்னும் அழியாத ஒரு கட்சி
  3. இங்கே நான் விஜய்க்கு செம்பு தூக்க வரவில்லை ஆனாலும் எல்லாமே அறிந்த..... அறிந்து கொண்டிருந்த.... அல்லது இப்படி நடக்கலாம்..... ஆபத்தாக முடியலாம்.... என்று எச்சரிக்கை செய்த அந்தக் காவல் துறை.... எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் த வெ க பொறுப்பாளர்களிடம் மட்டுமே மேற்கூறிய பரிந்துரைகளையும் எச்சரிக்கைகளையும் செய்திருப்பது சரியா? தாமாகவே ஒரு நடவடிக்கையை எடுத்திருக்க முடியாதா? அந்த இடத்தின் கொள்ளளவு தெரிந்தும் மேலதிகமான அளவிற்கு மக்களை அனுமதித்த காவல் துறையின் செயல் சரியானதா? விஜய் கரூரில் தொடர்ந்தும் தங்கியிருந்தால்..... (மக்களுடன் மக்களாக நிற்கிறேன் என்ற நிலையில்) இன்னும் பல இழப்புக்கள் அங்கே ஏற்பட்டிருக்கலாம் சமயோசிதமாக அவர் கரூரில் இருந்து வெளியேறியதால் இன்னும் பல உயிர்களும் அழிவுகளும் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. காவல்துறை மக்களுக்கானது
  4. யார் கேள்வி கேட்டது யாரிடம் என்ற விபரத்தைப் புரியாமல் ........ அல்லது வேண்டுமென்றே திரித்து வீர கேசரி ....... லூசுப் பயல்கள்
  5. சுப்ரா பாதம் என்ற ஜெய்கணேஷ் நடித்த பக்திப் படம் சிறு வயதில் பார்த்தேன் விஷ்ணுவின் ஒரு அவதாரம் தான் நாராயணா என்று அறிந்தேன் ஓம் நமோ நாராயணா....
  6. யசோதரன் எங்களுக்குப் படம் காட்டப்போகின்றார் என பெரிதாக இந்தக் கதையை வாசிக்காமல் சென்று விட்டேன் இப்போது அப்படி என்ன தான் எழுதுகின்றார் என் ஒரு எட்டு எட்டிப் பார்க்கலாம் என்று வந்தால் ..... மிகுதிக் கதை எப்போது வரும் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றேன் கதையும்..... கதையுடன் சேர்ந்து வரும் செய்திகளும்.... சம்பவங்களும்...... நன்றாக இருக்கின்றது என்பதை விட...... மிகுதி இப்போது வரும் என்ற எண்ணமே அதிகமாக இருக்கின்றது தொடருங்கள்
  7. தமிழ் நாட்டில் எந்த ஒரு நடிகரும் அரசியலில் சடுதியாக கட்சி ஆரம்பித்து பெரும் வெற்றி பெற்ற சரித்திரம் இல்லை . பலரும் MGR இன் அரசியல் வரலாற்றை சரியாக அறியாமல் அவரைப் போல வர ஆசைப்படுகின்றனர். இதில் விஜயும் அடக்கம் . சீமானின் அரசியல் வேறு அவர் களத்தை நன்கு அறிந்தே வேலை செய்கின்றார் . இப்போதும் அவர் உடனடியாக முதல்வராக வருவேன் அல்லது வரவேண்டும் என்று அடம்பிடிக்கவில்லை. யசோதரன் கூறும் வெற்றிடம் ஸ்டாலினுக்குப் பின்னர் வர வாய்ப்புக்கள் உள்ளன. சீமான் அதுவரை காத்திருக்க வாய்ப்புக்கள் அதிகமே தவிர குறையாது.
  8. சுய மரியாதை இயக்கம் .....திராவிடர் கழகம் ....தமிழ் நாடு .... இந்தியா .... பிரான்ஸ் .............. இங்கே ஒரு சொல்நீக்கப்பட்டுள்ளது........ இந்தியா ......தமிழ்நாடு .....திராவிடர் கழகம் .........சுயமரியாதை இயக்கம் நீக்கப்பட்ட சொல்லக் கண்டுபிடித்தால் பதில் கிடைக்கலாம்😂
  9. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜெர்மானியர்கள் தங்களது நாட்டிற்கான புதிய சட்டதிட்டங்களை உருவாக்கினார்கள் அதி முதலாவது சட்டம் எந்த ஒரு மனிதனது தனிமனித உரிமையையும் எந்தக்காரணத்திற்காகவும் கேள்விக்குட்படுத்த முடியாது என்பது. இன. மத. நிற. தோற்றம். மற்றும் அடையாளங்கள் காரணமாக யாரையும் தனிமைப்படுத்தல் ஆகாது அத்துடன் தாங்கள் போர்க்காலங்களில் எப்படியெல்லாம் தஞ்சம் தேடி அலைந்தோமோ அதே போல வேறு யாரும் தஞ்சம் தடி அலையக் கூடாது..... அப்படித் தஞ்சம் தேடி வரும் மக்களுக்கு ஜெர்மனி தன்னாலான சகல உதவிகளையும் அளிக்கவேண்டும் என அகதிகள் சார்பாக ஒரு கொள்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள். இதன் அடிப்படையில் தான் பழைய அகதிகள் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது இப்போது அந்த அடிப்படையில் மாற்றங்கள் வந்துள்ளன
  10. அதற்காக எங்கள் எல்லோரையும் வயோதிபர்கள் என விழித்தது பெரிய வன்முறை..... இதை யாம் கண்டிக்கின்றோம் 😂 ஏற்றுக்கொள்ள மாட்டோம். அமெரிக்கத் தாத்தாக்களை விட ஜெர்மன் தாத்தாக்கள் இன்றும் இளமை எனும் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கின்றார்கள் 🤣 என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்😂
  11. நீங்கள் யாருடைய கருத்திற்குப் பதிலாக எழுதியிருந்தாலும் அதற்கான எனது பதில் இதுவாகத் தான் இருக்கும் ஒருவருக்கு எழுதும் பதிலை ஆயிரம் பேர் வாசிப்பார்கள் சசி🙏 அதனால் தான் தான் சபை அடக்கம் கருதி சிலர் யோசித்து எழுதுவார்கள்
  12. சேடம் இழுக்கும் நிலை என்று சொல்வது அபத்தம் பொருளாதார வீழ்ச்சி என்பது எல்லா நாடுகளிலும் அவ்வப்போது வரும் போகும் . ஆனால் அந்த வீழ்ச்சி தொடர்ந்தால் பிரச்னை வரும் . அப்போது அதை நெருக்கடியான நிலை என்பார்கள். அது இப்போது ஜெர்மனியில் நடக்கின்றது . கடந்த அரசாங்கம் மூன்று கட்சிகளின் கூட்டணியாக அமைந்து ஒரு நிலையற்ற....... எப்போதும் ஆட்சி கவிழும்.... என்ற நிலையில் இருந்ததும் ஒரு முக்கியமான காரணி. யாரும் முதலீடு செய்ய பலமுறை யோசித்தார்கள். அதைவிட கொரோனா காலம் ஒரு காரணி பல நிறுவனங்கள் மூடப்பட்டன- உலக நாடுகளுக்கிடையிலான பொருளாதார போட்டி இதுவும் ஒரு காரணம் உக்கிரையின் ரஷ்யப் போர் காரணமாக எரிசக்தி விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை என இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு பல இணைந்த காரணிகள் உள்ளன இப்படி இருந்தும் ஐரோப்பாவில் ஜெர்மனி தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுதான் உள்ளது . இன்றைய நிலையில் வலதுசாரிகள் ஜெர்மனியில் ஒரு மக்கள் கட்சியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து வருவதால் வெளிநாட்டு முதலீடுகள் தடைப்படுகின்றன . ஜெர்மனி அந்த நாட்டு மக்களின் உழைப்பினால் மட்டும் இல்லாமல்...... வெளி நாட்டு மக்களின் உழைப்பினாலும் தான் உலகப் போரின் பின்னர் மீண்டு வந்தார்கள், இனியும் மீண்டு வருவார்கள்
  13. யு டியூப் சானல்களை நம்பும் ஆள் நான் இல்லை திட்டம் இட்டு அவர்களே கேள்விகளைக் கொடுத்து கேட்க வைத்துப் பாடமாக்கிய பதில்களை வழங்குவது தான் அங்கே நடக்கின்றது. இந்தத் தேவா அடி பிடிக் கேஸ் ஆச்சே
  14. சசி என்னுடைய தமிழ் வகுப்பை தவற விட்டுவிட்டார் என நினைக்கின்றேன். இடக்கரடக்கல் அடுத்த முறை கவனிக்கவும்
  15. உண்மை ஏராளன் அமெரிக்கன் தாத்தா முன்னாள் MPக்களுக்கு எதற்காக ஓய்வு ஊதியம் கொடுக்க வேண்டும் அவர்களும் சாகும் வரை காலாட்டிக் கொண்டு இருந்து மக்களை மேலும் மேலும் ஏமாற்றவா ? அவர்கள் செய்த தொழில் சார்ந்த ஒய்வு ஊதியம் கிடைப்பதே அவர்களுக்கு ஒரு வரம்.
  16. 1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? அவுஸ்திரேலியா ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2) இலங்கை 3) அவுஸ்திரேலியா 4) வங்காளதேசம் 5) தென்னாபிரிக்கா 6) அவுஸ்திரேலியா 7) இந்தியா 8) நியூசிலாந்து 9) இங்கிலாந்து 10) அவுஸ்திரேலியா 11) இந்தியா 12) வங்காளதேசம் 13) இங்கிலாந்து 14) இந்தியா 15) தென்னாபிரிக்கா 16) நியூசிலாந்து 17) பாகிஸ்தான் 18) அவுஸ்திரேலியா 19) இலங்கை 20) பாகிஸ்தான் 21) இந்தியா 22) இலங்கை 23) பாகிஸ்தான் 24) அவுஸ்திரேலியா 25) இந்தியா 26) இலங்கை 27) அவுஸ்திரேலியா 28) இங்கிலாந்து 29) இந்தியா 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? அவுஸ்திரேலியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? நியூசிலாந்து 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) அவுஸ்திரேலியா , இங்கிலாந்து, இந்தியா, இலங்கை 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) அவுஸ்திரேலியா, இலங்கை 34) இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) அவுஸ்திரேலியா 41, 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41, 42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? மும்பை 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? கொழும்பு 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? பாகிஸ்தான் 38) இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? தென்னாபிரிக்கா 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? இலங்கை 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? வங்காளதேசம் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? இல்லை 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? இல்லை 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 46) இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 47) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா
  17. 😂😅 நான் ஒதுங்குவதால் களத்திற்கு எந்த நஷ்டமும் இல்லை . ஆனால் நீங்கள் இல்லாத களம் வற்றிப்போன நதியாக..... மாறி விடும் என்று....... யோசிக்கின்றேன்......🤣
  18. இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் நீதிபதிகள் எவ்வாறு செயற்படுவார்கள்... யார் யார் எல்லாம் நீதித்துறைக்குள் தங்கள் செல்வாக்கை காட்டுவார்கள்... ஒவ்வொரு முறையும் மாநில அரசு மாறிய பின்னர் யார் யார் எல்லாம் கைது செய்யப்பட்டார்கள்.... தண்டனை பெறறார்கள் ( அவர்கள் மேல் உள்ள குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் ) என்பது சிறு குழந்தைகளுக்கும் தெரியும். சீமான் திராவிடத்திற்கும் மதச் சார்பான பா ஜ க விற்கும் எதிர்வினை ஆற்றிக் கொண்டிருக்கையில் அதுவும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் யார் யார் எல்லாம் எப்படி யோசிப்பார்கள் என்பது எங்களுக்கும் விளங்கும் உங்கள் டிஸ்கி மூலம் உங்களின் ஏக்கம் புரிகின்றது
  19. ஏற்கனவே மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்ட அரசியல்வாதிகளின் பெயரையும் வெளியிடுவோம் என்றார்கள், எதிர்த்துப் பேசுபவர்களை இப்படியும் அடக்கி வைக்கலாம்.
  20. இல்லை தூர் வாருதல் என்பது வெளியேற்றம் செய்தல் எனப் பொருள்படும் கேணி, கிணறு, ஏரி, குளம், குட்டைகள் என்பவை குறித்த காலத்திற்கு ஒருமுறை..... கூடுதலான இடங்களில் ஒவ்வொரு வருடமும் கோடை காலங்களில் நீர் நிலை குறைந்து காணப்படும் பொது,,,, அல்லது முழுதாக வற்றி இருக்கும்போது.... நில மட்டத்தில் காணப்படும் குப்பைகள், கற்கள், சேறு என்பன அகற்றப்பட்டு சுத்தம் ஆக்கப்படும். இதனால் நீர் நிலைகளின் தரம் மிகவும் சுத்தமாக இருக்கும் சேற்றுப்பக்கம் செல்லும்போது ஏற்படும் ஆபத்துக்கள் குறையும் அதைவிட குப்பைகளும் சேறும் அகற்றப்படும் பொது நீர் நிலைகளின் கொள்ளளவு அதிகரிக்கும். இப்படிப் பல நன்மைகள் உள்ளன .
  21. இன்னும் நாலு சுமந்திரர்களும் மூன்று ஸ்ரீதரர்களும் இரண்டு சாணக்கியர்களும் உருவாகினால் விரைவில் நடக்கும்
  22. செத்த பாம்பை அடிப்பவர்கள் கோழைகள் என்பார்கள் கடி வாங்கச் சந்தர்ப்பம் இருக்கும்😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.