Everything posted by வாத்தியார்
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
வட கிழக்குத் தமிழர்கள் மட்டும் இலங்கையில் தங்கள் உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுக்கலாம் . மலையக மக்கள் மட்டும் அப்படியே எல்லாவற்றையும் துறந்து இன்னொரு பிரதேசத்தில் ஏதும் இல்லாதவர்களாக, குடியேறிகளாக வாழ வேண்டுமா? அவர்களுடைய பிரச்சனைகளுக்காக அவர்கள் போராடும் நிலையில் நாம் வட கிழக்குத் தமிழர்கள் அவர்களுக்கான தார்மீக ஆதரவை வழங்குவதுதான் சிறப்பான தெரிவாக இருக்கும் இன்றும் தமிழ் நாட்டில் எந்த உரிமையும் இல்லாமல் வாழும் வட கிழக்குத் தமிழர்களின் நிலை எல்லோருக்கு தெரியும் வடகிழக்கில் குடியேறி வாழ்ந்த இஸ்லாமிய சகோதரர்களுடைய நிலை போராட்ட காலத்தில் எப்படி இருந்தது இப்போது எப்படியான நிலையில் உள்ளது என்பதும் யாவரும் அறிந்ததே.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இலங்கைக்கு அடிமைகளாக இருந்தவர்களை இப்போது இலங்கைத் தமிழர்களும் அவர்களை அடிமைகளாக மாற்றலாம் என்ற ஒரு முயற்சிகவே இந்த வரவேற்பினை நான் பார்க்கின்றேன் மலையகம் இந்திய வம்சாவழித் தமிழர்களின் தாயகம். அங்கெ அவர்களுக்கு உரிய உரிமைகள் அதாவது முதன்மையாக காணி உரிமை இல்லை . பல சதாப்தங்களாக மாறி மாறி வந்த சிங்கள அரசுகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் குறிப்பாக மலையகத் தமிழக கட்சிகளும் அந்த மக்களுடைய வாழ்வுரிமையை எந்த விதத்திலும் மேம்படுத்தல் செய்யாமல் தங்கள் அரசியல் தேவைகளுக்காக ஏற்ற நேரத்தில் வாய்ப்பு பேச்சுக்களால் ஏமாற்றி வந்துள்ளனர். மனோ கணேசன் மீண்டும் மலையக மக்களை ஏமாற்றி அல்லது அவர்களை முன்னிறுத்தித் தனது அரசியல் ஆதாயத்தை தேட முயல்கின்றார். மலையக மக்களின் வாழ்வாதாரம் பெரும் தோட்டம் மற்றும் சிறு தோட்டங்களை நம்பி இருக்கும் நிலையில்..... வட கிழக்கில் அகதிகளாக அவர்களை மீண்டும் ஒருமுறை இடம்பெயர வைக்க முயற்சிப்பதா ? அந்த முடிவு எப்போதும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு முடிவாகவே இருக்கும் மனோ கணேசன் யார்? அவர் ரணிலை இத்தனை காலம் ஆதரித்தவர் இப்போது சஜித் அவர்களின் ஆதரவாளர்.. அனுராவின் ஆட்சிக்கு எதிராக வினையாற்ற மலையக மக்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்த நினைக்கின்றார் மனோ கணேசன் . அதற்கு எங்கள் தமிழ் மக்கள் கடந்த தேர்தலில் நிராகரித்த சஜித்தின் ஆதரவு நிலையில் இருக்கும் சுமந்திரனும் துதி பாடுகின்றார் . மலையகத்தில் மலையக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் பேணப்பட்டு அவர்களை அவர்களின் இடத்திலேயே வாழ வழி சமைக்க வேண்டும். மலையகம் இந்திய வம்சாவழித் தமிழர்களின் தாயகம் என்று ரோஹண விஜேவீர 70 களிலேயே அறை கூவியிருந்தார்
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
இலங்கையில் ஒற்றை ஆட்சி முறை சிறப்பாகச் செயல்படுகின்றது போர்க் குற்றத்திற்கான விசாரணை உள்நாட்டுப் பொறிமுறையில் இடம்பெறவேண்டும் . போர்க் குற்றம் தொடர்பாக சிங்கள ராணுவம் மட்டுமல்ல விடுதலைப் புலிகளும் விசாரிக்கப்பட வேண்டும் இலங்கைத் தமிழ் மக்களுக்கான தீர்வு புதிய அரசியலமைப்பின் பிரகாரம் ஏக்க ராஜ்ஜியத்தில் ஆராயப்படும் . இப்படியான செய்திகளைத் தான் அதிகமாக வாசிக்கக் கூடியதாக இருக்கின்றது .
-
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் - நிலாந்தன்
புயல் மழை வரும் முன்னர் அவருடைய அறிக்கைகளை பார்த்து விட்டு யார் இந்த பிரதீபராஜா என்று விசாரித்தால் அவர் ஒருவிதத்தில் ஏற்கனவே அறிமுகமானவர் தான். மிகவும் கரிசனையுடன் தனது ஒவ்வொரு வானிலை அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தார் மிகுந்த திறமையான முறையில் வெளி வந்த அவரது அறிக்கைகளை உலகம் பூராகவும் இருந்து அவதானித்தவர்கள் பலர்.
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
இல்லை என்று கூறுபவர்களிடம் எப்படி ஆதாரத்தை எதிர்பார்க்கலாம் இருக்கு என்பவர்கள் தானே இல்லை என்பதற்கு எதிராக தங்களது ஆதாரங்களை வெளியிட வேண்டும்.
-
மாவளி கண் பார்
எங்கள் ஊரில் பனை ஓலை மற்றும் மட்டைகள் கொண்டு உயரமாக ஒரு மேடை போல அமைத்து அதற்குள் உணவுப்பண்டங்களை வாழை இலையில் சுற்றி ( பொங்கல் , மோதகம் , கொழுக்கட்டை போன்றவையே ) வைத்துப் பின்னர் எரிய விடுவார்கள் - எரிந்து முடிந்ததும் நாங்கள் முண்டியடித்து அந்த வெக்கைக்குள்ளும் உள்ளே இருக்கும் உணவுப்பண்டங்களை எடுத்துக் கொள்வோம் 😂 இந்த மாவளி பற்றி அறிந்திருக்கவில்லை
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
ஒரு சிலர் பதில் சொல்லாமல் கேள்வி கேட்பதிலேயே குறியாக இருப்பார்கள் . சுமந்திரன் அவர்கள் ஆடிய ஆட்டத்தினால் தான் கடந்த தேர்தலில் மக்களால் தமிழர்களின் அரசியல் மேடையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர். இப்படி நடக்கும் வாய்ப்பு இருக்கும் என்று ஏற்கனவே அவதானமாக இருந்த சுமந்திரன் தமிழரசு கட்சியை தன வசப்படுத்தி இப்போதும் பின் கதவால் நுழைய நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றார் எத்தனை தரம் தேர்தலில் போட்டியிட்டாலும் சுமந்திரனுக்கு இனிமேல் தேசியப்பட்டியலைத் தவிர வேறு வழியில்லை அதனால் தான் இப்போது கிழக்கில் சாணுக்கு முழம் போடுகின்றார் சரி அய்யா ஜஸ்டின் அவர்களே சுமந்திரனால் தமிழர்களுக்கு நிகழ்ந்த அதிசயங்களை நீங்களே ஒரு பட்டியலில் தாருங்களேன்
-
பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?
அவன் அவனுக்கு அவன் பிரச்னை 😁🤣
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறி தாத்தாக்கு வாழ்த்துக்கள் அவருடைய குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்
- இன்று மாவீரர் தினம்!
-
யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து காரைநகருக்கு பஸ் சேவை ஆரம்பம்
கொழும்பிலிருந்து வரும் புகையிரத சேவையை மையப்படுத்தி இந்த பேருந்து சேவை இடம்பெற்றால் வரவேற்கத்தக்கது . பலரும் பயன் அடைவார்கள்
-
அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணியின் கூட்டம் இன்று!
எனக்குப் பதினைந்து தெரியுது தல உங்களுக்கு 😂
-
துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?
அமெரிக்கா சக்தி குறைந்த எஞ்சினை கொடுத்து விட்டது
-
யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள் 🙏
-
கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசுப்படகு! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship
ஒரு திறமையான முயற்சி ஆதரவு கிடைத்தால் இன்னும் பெரிய சொகுசுக்கப்பல்களை ஓட விடலாம்
-
யாழில் கரை ஒதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை
சில மாதங்களுக்கு முன்னர் மியான்மரில் இருந்து அகதிகளாக வந்த அந்த நாட்டின் குடிமக்கள் சிலரை நாடு கடத்தியதாகக் ??? கேள்விப்பட்டேன். அதேபோல இந்தச் சிலையையும் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்🤪
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
ஜெர்மனியில் புதிதாகத் தொழில் ஒன்றை ஆரம்பிப்பவர்கள் தங்களின் வியாபாரத்தின் இலக்குத் தொகையை முன் கூட்டியே நிதி துறைக்கு தெரிவிக்க வேண்டும். அந்தத் தொகையின் அடிப்படையில் அவர்களின் வரிப்பணங்களை நிதித்துறை முதலில் தீர்மானிக்கும். இந்த நிலையில் வரியை ஏமாற்றும் நிலை காணப்படுகின்றது. அந்த வியாபார இலக்கின் தொகையை குறைத்து ஒரு வருடம் அல்லது இரு வருடங்களில் அந்த நிறுவனத்தை வங்குரோத்து என்று அறிவித்து வரி ஏய்ப்புச் செய்யலாம் . ஆனாலும் அந்த நேரத்தில் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் அல்லது கைப்பற்றப்படும் நிலையும் உள்ளது பல காலமாக இயங்கிவரும் நிறுவனங்களுக்கு ஜெர்மனியில் வரிகள் முன் கூட்டியே அறவிடப்படும் .அவர்களுடைய மொத்த விற்பனையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே விற்பனைவரி வருமான வரி என்று மாதம் ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை இந்த வரிகளை அறவிட்டு.... வருடம் முடிந்த பின்னர் மொத்த வருமான வரி அறிக்கை வரும்போது மிகுதி அறவிடப்படும் அல்லது மீள கொடுக்கப்படும். . அதாவது வருடத்திற்கான வருமான வரி அறிக்கையை சமர்ப்பிக்க மூன்று ஆண்டுகள் தவணை உள்ளது சில ஏற்பாட்டால் அந்தக் காலம் இன்னும் அதிகரிக்கலாம் . பத்து வருடங்கள் வரை உங்கள் கணக்கறிக்கை மீழாய்வு செய்யப்படலாம். வருமான வரியாக எந்தத் தொகையையும் கட்டாமல் பத்து வருடங்கள் ஒழித்திருந்து விட்டு மீண்டும் தலை காட்டலாம் காரணம்.... தண்டனை அல்லது வரி அறவிடக் கூடிய காலம் கடந்து விட்டது என்பார்கள்: இதுவும் இங்கே சட்டம்
-
கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்தது - இளஞ்செழியன்
இத்தனை துணிவாக பல வழக்குகளில் எதிர்பார்க்காத தண்டனைகளை வழங்கிய ஒரு நீதிபதியாக இருந்தவர் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியலில்....... முடிந்தால்..... 2009 க்கு முன்னால் வந்திருக்க வேண்டும். வரவில்லை.... அதற்கான காரணம் என்ன ? இப்போது அவரை யாரோ அரசியலுக்குள் இழுக்க முனைகின்றார்கள். தனக்கு பதவி உயர்வு தரவில்லை என்பதால்.... அவரும் அனுரவைப் பழிவாங்கலாம் என்று நினைத்து ... நான் யார் என்று காட்டுவேன் என்று வெளிக்கிட்டுவிட்டார். மக்களுக்கான அரசியல் இப்போது யாரும் செய்யும் நிலையில் இல்லை .
-
பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
செல்வம் அடைக்கலநாதனுக்கு எதிராக திட்டமிட்டு செய்த சதி; குற்றம் சுமத்தும் சுரேன் குருசாமி November 10, 2025 0 செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கட்சிக்கு எதிராக திட்டமிட்டு ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப்பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (09.11.2025) இடம்பெற்ற கடாபி தலைமைக் குழு கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு கூட்டம் வுனியாவில் நடைபெற்றது. இதில் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகள், 2026 பேராளர் மாநாடு, மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. கடந்த சில வாரங்களாக திட்டமிட்ட வகையிலே சில முகநூல்களிலும், இணைய தளங்களிலும் நமது கட்சிக்கு எதிரான அல்லது கட்சியை களங்கப்படுத்தும் வகையிலே சில ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விமர்சனங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அது சம்பந்தமாக தலைமை குழுவிலே நாங்கள் கூடி ஆராய்ந்திருந்தோம். அதற்கான சரியான வழிமுறைகள் அதை கையாளுவதும், தொடர்ந்து கட்சியை முன்னெடுத்து செல்வது சம்பந்தமான விடயங்களை பரிசீலிப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவாக மிக விரைவிலே அதாவது ஜனவரி 2026க்குள் எங்களுடைய கட்சியினுடைய பேராளர் மாநாட்டை அனைத்து மாவட்டத்தின் உறுப்பினர்களையும் ஒருங்கமைத்து இது சம்பந்தமான முடிவுகளை எட்டி எங்களுடைய கட்சியை மேலும் பலப்படுத்திக்கொண்டு பயணிப்பதற்கான தீர்மானத்தை எடுத்திருக்கிறோம்” என கூறியுள்ளார்
-
வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் சடலமாக மீட்பு
ஆழ்ந்த இரங்கல்கள்
-
10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த தாதி - ஜேர்மனியில் சம்பவம்!
மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் காரணம் இது . இங்கே பல வயதான நோயாளிகள் பராமரிப்பு நிலையங்களில் இடமில்லாமல் சொந்த வீடுகளில் தங்க வைத்துப் பராமரிக்கப்படும் நிலையில் இவர் இப்படிக் கூறி மாட்டுப்பட்டுள்ளார். சரியான தண்டனையும் பெற்றுள்ளார்
-
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” ”போலி வாக்காளர்கள், முகவரிகள், புகைப்படங்கள்: வாக்குத் திருட்டு புகார் குறித்து ஆதாரங்களுடன் ராகுல் விளக்கம்
மக்களின் வாக்குரிமையை அரசே துஸ்பிரயோகம் செய்கின்றது என்ற குற்றச்சாட்டு இன்று நேற்று அல்ல இந்தியாவில் பல வருடங்களாகவே கூறப்படுகின்றது கேட்டால் உலகில் பெரிய ஜனநாயக நாடு என்பார்கள்
-
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – தவில் வித்துவான் கைது
கொலையுண்ட பெண் எப்படி? எதற்காக ?கொலையெய்யப்பட்டார் என்பது விசாரணையின் பின்னரே தெரியவரும் . செய்தி நிறுவனங்கள் எப்படி வேண்டுமென்றாலும் எழுதும் வக்கிர மனப்பாண்மை கொண்டவை என்பதில் மறுப்பு இல்லை தங்கள் வியாபாரத்திலேயே கண்ணாக இருக்கும் அதற்காக கண்ணும் காதும் மூக்கும் வைத்து எழுதும் கொலையுண்டவருக்கு இரண்டு சிறு குழந்தைகள் உள்ளன . அவரது கணவன் ஒரு சராசரி கூலித் தொழிலாளி அவர்களுடைய நிலைமை இங்கே யாருக்கும் தெரியாது அந்தக் குழந்தைகள் தாய் இல்லாமல் எப்படி வாழ போகின்றார்கள் கொலையுண்டவரின் கணவரால் அந்தக் குழந்தைகளைத் தனியனாக நின்று காப்பாற்ற முடியுமா என்ற சிந்தனைகள் இல்லாமல்...... உயிருடன் இல்லாத கொலையுண்ட விசாரணையே இன்னும் நீதி மன்றத்திற்கு வராத நிலையில் தனி நபருடைய தனிப்பட்ட விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து அப்படி இப்படி நடந்தது என மிகுந்த மலிந்த ரசனையுடன் கருத்துக்களை எப்படி யாழ் களம் அனுமதிக்கின்றது
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
2026 டி20 உலக கோப்பைக்கு இந்தியாவில் 5 மைதானங்கள் தேர்வு - இறுதிப்போட்டி எங்கே தெரியுமா? மொத்தமுள்ள 55 ஆட்டங்கள் இந்தியாவில் குறைந்தது 5 நகரங்களிலும், இலங்கையில் இரு இடங்களிலும் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அவ்வகையில் இந்தியாவில் அகமதாபாத், டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய 5 மைதானங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் இலங்கையில் உள்ள கொழும்புவில் நடைபெறும் என்றும் ஒரு வேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் பட்சத்தில், இறுதி ஆட்டத்தை கொழும்புக்கு மாற்றவும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. https://www.maalaimalar.com/news/sports/cricket/bcci-shortlists-5-cities-for-t20-world-cup-796228
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
இப்படியான ஒரு நப்பாசை அமெரிக்காவிற்கு வெளியே இல்லாமல் இல்லை 😂