Jump to content

வாத்தியார்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11533
  • Joined

  • Days Won

    15

Everything posted by வாத்தியார்

  1. கொஞ்ச நாளைக்கு விடுவம் கூட்டாளிமார் நிக்கட்டும் முன்னுக்கு ..பிறகு தான் ஆப்பு.....😂
  2. அதே தான் கோஷான் மேலதிக தகவல்களுக்கு நன்றி இப்போது நாயுடுவும் நித்திஷ்ம் ஆதரவு தருவதாகக் கடிதம் கொடுத்து விட்டார்கள் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன மோடியைக் கூட்டணியின் தலைவராக ஏகமானதாகத் தெரிவு செய்துள்ளார்கள். மோடியை விட்டுப் பிடிக்க நினைக்கின்றார்கள் போலத் தான் தெரிகின்றது.
  3. இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது
  4. நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை கண்டு பல அரசியல்வாதிகளும் மிரண்டு போய் இருக்கிறார்கள் அதுவும் இளையவர்களின் ஆதரவு வளர்ச்சி அடைவது என்பது மற்றைய கட்சிகளுக்கு ஆபத்தானது என்று செல்வப்பெருந்தகை கருத்துக் கூறியுள்ளார்
  5. 2016 சட்ட மன்றத் தேர்தலில் பா ஜ க பாரி வேந்தருடைய இந்திய ஜனநாயக கட்சி மற்றும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், கொங்கு ஜனநாயகக் கட்சி ஆகிய( தனி நபர் கட்சிகள் எனக் கூடச் சொல்லலாம்) கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் பெற்ற வாக்குகள் 12 லட்சத்து 30 ஆயிரம் மட்டும் தான் ( 234 தொகுதிகள் 165 + 45 + 24 ). இது 2,9 வீதம் இப்படியான கூட்டணியும் இல்லாமல் போட்டியிட்டிருந்தால் இன்னும் விகிதாசாரம் குறைந்தும் இருக்கலாம் இப்படியான ஒரு அரசு இந்தியாவில் 2000 ( சரியாகத் தெரியவில்லை ) ஆண்டளவில் இருந்திருக்க வேண்டும் அப்போது சந்திர சேகர் என்பவர் பிரதமராக இருக்க காங்கிரஸ் கூட வெளியே இருந்து ஆதரவளித்தது. நாயுடுவும் நித்திஷ் குமாரும் மோடிக்கு ஆதரவு கொடுக்காமல் அமித்ஷா வை அல்லது இனினொருவரைக் கூட பிரதமராக்க முயற்சிக்கலாம்
  6. இதுதான் சந்திரபாபு நாயுடு.. "சபாநாயகர்"பதவியை எங்களுக்கு தரணும்!பாஜகவுக்கு போட்ட முக்கியமான கண்டிஷன் By Vigneshkumar Updated: Wednesday, June 5, 2024, 12:20 [IST] Google Oneindia Tamil News விஜயவாடா: தற்போது மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கத் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவளிக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு சில நிபந்தனைகளை விதிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நமது நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் கடந்த இரு தேர்தல்களைப் போல இல்லாமல் லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 240 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் பாஜக ஆட்சியை அமைக்க என்டிஏ கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் ஆதரவு கட்டாயம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகத் தெலுங்கு தேசம் கட்சியிடம் 16 இடங்கள் இருக்கும் நிலையில், அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இப்படி லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார். இதற்கிடையே ஆந்திராவில் செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது தான் என்டிஏ கூட்டணியிலேயே இருப்பதாகவும் அதன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவே டெல்லி சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். கிங் மேக்கர்: அதேநேரம் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தர சந்திரபாபு நாயுடு சில நிபந்தனைகளை விதிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2014இல் ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவைத் தனியாகப் பிரிக்க அப்போதைய மத்திய அரசு முடிவு செய்த நிலையில், அதற்கு சந்திரபாபு நாயுடு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இருப்பினும், அதையும் தாண்டியே தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. நிபந்தனை 1: இதனால் ஆந்திராவின் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இருப்பினும், மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாகவே இதற்குச் செவிசாய்க்கவில்லை. இதற்கிடையே இப்போது பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தர வேண்டும் என்றால் ஆந்திராவுக்கு உடனடியாக சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என சந்திரபாபு நாயுடு நிபந்தனை விதிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. என்டிஏ கூட்டணியில் தான் இருப்பேன்.. அடித்து சொன்ன என்டிஏ கூட்டணியில் தான் இருப்பேன்.. அடித்து சொன்ன "கிங் மேக்கர்" சந்திரபாபு நாயுடு.. குஷியில் பாஜக நிபந்தனை 2: அது மட்டுமின்றி சபாநாயகர் பதவியை விட்டுதர வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு நிபந்தனை விதிப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாக லோக்சபாவில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத இதுபோன்ற சூழல் ஏற்படும் போது சபாநாயகர் பதவி முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் அவையில் முக்கிய முடிவுகள் எல்லாம் எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கே இருக்கும். இதன் காரணமாகவே சபாநாயகர் பதவி தங்களுக்குத் தேவை என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார். பாஜக இந்த இரு நிபந்தனைகளுக்கும் செவி சாய்க்குமா இல்லை அமைச்சரவையில் கூடுதல் சீட்களை கொடுத்துவிட்டு சபாநாயகர் பதவியை தங்களிடமே தக்க வைத்துக் கொள்ளுமா என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும். Read more at: https://tamil.oneindia.com/news/india/what-are-the-conditions-for-bjp-by-chandrababu-naidu-611525.html
  7. பா ஜ க கூட்டணிக் கட்சிகள் எவை பாஜக - தெலுங்கு தேசம் கட்சி - ஐக்கிய ஜனதா தளம் - சிவசேனா - பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாடு - லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) பீகார் - தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிரா - பாரத தர்ம ஜன சேனா கேரளா - மதசார்பற்ற ஜனதா தளம் - அசோம் கண பரிஷத் அசாம் - ஜன சேனா கட்சி ஆந்திரா - தேசிய மக்கள் கட்சி மேகாலயா - ராஷ்டிரிய லோக் தளம் உத்தரப் பிரதேசம் - அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஜார்கண்ட் - ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா பீகார் - நாகா மக்கள் முன்னணி மணிப்பூர் - தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி நாகாலாந்து - ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா பீகார் - ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா மகாராஷ்டிரா - சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி உத்தரப்பிரதேசம் - ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் அசாம் - இத்தூண்டு கட்சிகளுடன் அமைத்தது தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி அலியாஸ் பா ஜ க கூட்டணி
  8. கந்தையா அண்ணை பா ஜ க கடந்த மூன்று தேர்தலிலும் கூட்டணி தான். ஆனாலும் அவர்கள் அந்தக் கூட்டணிக்குள்ளே இருக்கும் மற்றய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டியிட்டதால் (காரணம் தேசியக் கட்சி) அதிக இடங்களில் வென்றார்கள் அவர்கள் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளும் அவர்களுக்கு விழுந்திருக்கும் அவர்களது வாக்கு வாங்கி என ஒன்று உள்ளது அது அவர்களது ஆட்சியைப் பொறுத்துக்க கூடும் குறையும் ஆனாலும் பெரிதான வித்தியாசம் இருக்காது இங்கே சிலர் வாக்கு வங்கியையும் வாக்கு வீதத்தையும் ( கூட்டணியின் போது ).விளங்கிக் கொள்ளவில்லை போல இருக்கின்றது கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கும் போது விழும் வாக்குகளை அந்தத் தொகுதியில் போட்டியிடும் கட்சிக்காக வீழ்ந்த வாக்குகளாகவே தேர்தல் ஆணையம் வெளியிடும்
  9. 35 லட்சம் வாக்குகளை பெற்று நா த க சாதனை
  10. மோடியின் ஆட்சி வேண்டுமா வேண்டாமா என்று மற்றைய அரசியல் கட்சிகள் முடிவெடுக்கலாம் பா ஜ க கூட்டணியில் இருக்கும் நித்திஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு இருவரும் நினைத்தால் மோடி காலி
  11. கேரளா திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி( பா ஜ க ) வெற்றி
  12. கனிமொழி, தயாநிதி மாறன் , ஆ ராசா , டி ஆர் பாலு என கருணாநிதி கூட்டணியில் அனைவரும் தங்கள் தொகுதியில் முன்னிலையில் 🤣 இதுவரை 5 சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அகில இந்திய ரீதியாக பா ஜ க கூட்டணி 297 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் முன்னிலையில்
  13. மேற்கு வங்க மாநிலம் மொத்தம் 42 தொகுதிகள் . திரிணாமூல் காங்கிரஸ் 32 தொகுதியில் முன்னிலை தமிழ் நாட்டில் தி மு க 22 தொகுதியில் முன்னிலையில்
  14. சிதம்பரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முன்னணியில் விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார் முன்னணியில் தேனியில் தினகரன் (அம்மா மக்கள்) பின்னடைவு
  15. டெல்லியில் aam ஆத்மி கடும் பின்னடைவு 7 தொகுதிகளிலும் பா ஜ க முன்னிலை. தமிழ்நாடு மாநிலத்தில் 9 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னணியில் தமிழ் நாடு திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன்( பா ஜ க) பின்னடைவு காங்கிரஸ் முன்னணியில்
  16. வாரணாசியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய பிரதமர் மோடி முன்னிலையில்
  17. வணக்கம் பாஞ் அண்ணா உங்களை இங்கே காண்பதில் மகிழ்ச்சி
  18. விருதுநகர் தொகுதியில் 8000 வா‌க்குக‌ள் வித்தியாசத்தில் விஜய பிரபாகர் மீண்டும் முன்னணியில்
  19. திருச்சி தொகுதியில் துரை வை .கோ முன்னணியில் தருமபுரியில் செளம்யா அன்புமணி பா ம க முன்னணியில்
  20. உத்தர பிரதேச மாநிலம் இந்திய தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் மாநிலமாக இரு‌ந்து வரு‌ம் நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி 42 தொகுதியில் முன்னிலை உள்ளது இதுவரை 5 சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அகில இந்திய ரீதியாக பா ஜ க கூட்டணி 297 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது
  21. பா ஜ க மற்றும் காங்கிரசு கூட்டணி இடைய நிலவு‌ம் போட்டி காரணமாக இந்திய தேசிய பங்குச் சந்தை சரிவு விருதுநகர் தொகுதியில் முன்னணியில் இருந்த விஜய பிரபாகர் அவர்கள் பின்னடைவு
  22. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை தமிழ் நாடு முன்னிலை திமுக கூட்டணி 39 பா ஜ க 1
  23. அதைத் தான் நானும் யோசிச்சனான் அங்கை தான் நானும் பாக்கிறேன் 🙏
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.