Everything posted by ராசவன்னியன்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்ன இருந்தாலும் கு.சா, பரிமளம் ஆன்டியை காதலித்துவிட்டு, இப்படி கைவிட்டிருக்கக் கூடாது என தோன்றுகிறது. (பரிமளம் ஆன்டி, 'கற்பனை கதாபாத்திரமாக' இல்லாத பட்சத்தில், சந்தர்ப்ப சூழ்நிலைகளை வென்று கைப்பிடித்திருக்க வேண்டும்.) எனக்கு சிறுவயதில் இந்த மாதிரி அனுபவம் ஏதும் ஏற்படவில்லை தமிழ்சிறி. எதிர்காலத்தில் கிராமத்திலேயே உழற்றாமல், பள்ளி, கல்லூரிகளில் நல்ல மதிப்பெண் பெற்று வாழ்க்கையில் செற்றிலாகிவிட வேண்டுமென புத்தகப் பைத்தியமாக இருந்ததால், ஒருத்தரும் என்னை சட்டை செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால் திருமணமானவுடன், என் மனைவியை காதலிக்க தொடங்கிவிட்டேன்..!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அப்படி நினைத்த நேரமெல்லாம் இங்கே ஊருக்கு செல்ல முடியாது தமிழ் சிறி.. தகுந்த காரணம் இருக்க வேண்டும், உங்கள் பொறுப்பில் நடந்து கொண்டிருக்கும் திட்டப்பணிகளின் நிலை ஊருக்கு செல்ல இடமளிக்கவேண்டும், அப்படி நாம் இல்லாமல் வேலையில் ஏதும் சுணக்கம் ஏற்பட்டால், வேலை உடனே காலி, எந்தவித விளக்கமும் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. தமிழ்நாடு மாதிரி எந்தவித காரணமும் இங்கே எடுபடாது. இன்னமும் யாழ்க்களம் இங்கே சரிவர தெரியவில்லை, "Server not found.." என்ற பிழை செய்தியே இன்னமும் வருகிறது.. அத்தி பூத்தாற்போல் சிலநேரம் வரும்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அப்போ, 'பரிமளம் ஆன்டி' கு.சாவின் இல்லாள் இல்லையா..? இதென்னப்பு, ஒரே குழப்பமா கிடக்கு..? நான் அப்படி நினைத்துதானே இந்த வாழ்த்தை அவருக்கு தயாரித்தேன்..?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அலுவலகத்தில் ப்ராக்ஸி சர்வரில்(Proxy Server) எந்தந்த இணையதளங்களை, யார்யார் எப்பொழுவரை, எத்தனை முறை பார்க்கிறார்கள் என்ற முழுவிவரங்களும் நிச்சயம் இருக்கும். அந்த விவரங்களைக்கொண்டு அலுவலக அட்மினால் எந்த இணையத்தையும் கருப்பு பட்டியலுக்குள்ளும்(Blocking list), வெள்ளை பட்டியலுக்குள்ளும்(White list) இணைக்க முடியும். ஆனால் இங்கே வீட்டிலிருந்து யாழ் இணையத்தை சுட்டினாலும், இதே பிரச்சனை தான். வீட்டின் தொலைக்காட்சியில் யாழ் இணையத்தை சுட்டினாலும் யாழ்க்களம் வரவே இல்லை. ஒன்று இங்கேயுள்ள இணைய வசதி வழங்குனரின்(Internet Service Provider) சர்வரில் பிரச்சனை இருக்கலாம் அல்லது யாழ்க்களம் வழங்கும் சர்வரில்(Web Server) பிரச்சனை இருக்கலாம், இது இரண்டுமில்லையெனில் இரு சர்வர்களுக்குமிடையேயான தொலைதொடர்பு இணைப்புகளில்(Cloud) குழப்பமிருக்கலாம். ஆனால் யாழை தவிர மற்ற இணையதளங்கள் எப்பொழுதும்போல் வேகமாக இயங்குவதால், குழப்பங்கள் ஐரோப்பாவில் இருக்கலாமென நினைக்கிறேன். May be due to DNS servers maintenance issue..?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்ன ஒரே அதிசயமா கிடக்கு..? கடந்த இரு வாரங்களாக யாழ் இணையைதிற்கு செல்ல, சுட்டியை அழுத்தினால் திரையில் யாழ்க்களம் தெரிய ஒரு மாமாங்கம் ஆகும். இப்பொழுது உடனே வருகிறதே? யாழ் 'அட்மின்' ஏதும் மந்திரம் போட்டுவிட்டாரா?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மிகவும் நன்றாக உள்ளது, ஒரு பிரச்சினையும் இல்லை!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீர்கள்..? ஏதாவது பிரச்சினை என்றால் நம் மனதில் உறுத்திக்கொண்டே இருக்கும்தானே..? அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிடுவதை நிறுத்திவிட்டு, இந்த 'யாழுக்கு என பிரச்சினையாக இருக்குமென' தினமும் பலமுறை அலுவலக கணனியை குடைந்ததில், தலைமை அலுவலக தகவல் தொழிற்நுட்பப் பிரிவால்( IT security wing ) நோட்டம் விடப்பட்டு, 'இந்தாள் ஏன் இந்தத் தளத்தையே அடிக்கடி பாவிக்குது?' என எனது மேசையில் எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டார்கள்..! அவர்களை சமாளித்து அனுப்பிவிட்டேன்..!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சாமிகளே, நாங்கள் என்ன வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்றோம்..? யாழ்களமே பக்கங்களை திறக்க மாட்டேன் என்கிறது.. இதில் எப்படி எப்போதவது வருவது..? ஒருவாரமாக தொடர்ந்து இந்தப் பிரச்சினை இருந்ததால், இந்தப் பக்கமே வரவில்லை..! யாழை திறக்க முற்பட்டால் கீழேயுள்ள பிழை செய்திதான் எனக்கு வருகிறது..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், சசி!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழுக்கு என்னாச்சுது..? சில வாரங்களாக இங்கே யாழ் சரிவர வேலை செய்யவில்லை. யாழ் முகப்பு மட்டும் வரவேற்கிறது.. மற்ற பக்கங்கள் திறக்கவில்லை..!
-
என் கனவு ராணி எப்போது வருவாள்..?
"மேரா சபுநோ கி ராணி கப் ஆயா கீ தூ..?" - "என் கனவு ராணி எப்போது வருவாள்..?" என்னங்க, 'இந்த வயசுல இவருக்கு இளமை திரும்புகிறதா..' என்று நினைக்கிறீர்களா..? பரண் மீதிருக்கும் பழைய பஞ்சாங்கத்தை தேடலாமென ஏறிப் பார்த்தால், பழைய எல்பி ரெகார்ட் ஒன்றுதான் கிடைத்தது..! சுழலவிட்டேன்.. பாடலும் வந்தது.. அதோடு வீணை இசையும் புது வடிவில்..!! ரசிப்பீர்களென்ற நம்பிக்கையுள்ளது..! Start the music...
-
வரதட்சிணை புகார்களில் உடனடி கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம்: உச்ச நீதிமன்றம்!
வரதட்சிணை புகார்களில் உடனடி கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம்: உச்ச நீதிமன்றம் "வரதட்சிணை புகார்களில், காவல்துறையினர் உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம்" என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக, வரதட்சிணை புகார்களை குடும்ப நல குழுக்கள் விசாரித்த பிறகே, காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அதனை 3 நீதிபதிகள் அமர்வு தற்போது மாற்றியுள்ளது. வரதட்சிணை புகாருக்கு ஆளாகும் கணவர், அவரது குடும்பத்தினரை, காவல்துறையினர் உடனடியாக கைது செய்வதற்கு, இந்திய தண்டனையியல் சட்டத்தின் 498ஏ பிரிவு வழிவகை செய்கிறது. இந்தப் பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீது உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஆண்டு ஜூலை 27-இல் உத்தரவு பிறப்பித்தது. அப்போது, 498ஏ பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதாக கவலை தெரிவித்த நீதிபதிகள், வரதட்சிணை புகார்களை விசாரிக்க குடும்ப நலக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்; அந்த குழுக்களின் அறிக்கை கிடைக்கப் பெறும் வரை காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி உச்சமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுக்கள் மீது பதிலளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம், தேசிய மகளிர் ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, பெண்களுக்கான நீதியை உறுதி செய்ய வேண்டிய அதே தருணத்தில், ஆண்களுக்கான உரிமையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது' என்று தெரிவித்த நீதிபதிகள், தீர்ப்பை செப்டம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வரதட்சிணை புகார்களை விசாரிக்க குடும்ப நல குழுக்களை அமைக்க தேவையில்லை; புகாருக்கு ஆளானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டிய அவசியமிருந்தால், காவல்துறையினர் அந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம்' என்று தெரிவித்தனர். அதேவேளையில், வரதட்சிணை வழக்குகளில் முன்ஜாமீன் பெறுவதற்குரிய சட்டப் பிரிவு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். 498ஏ சட்டப் பிரிவு தவறாக பயன்படுத்தப்படும் புகார் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், சட்டங்களில் குறைபாடுகள் இருப்பின் அதனை அரசமைப்புச் சட்டரீதியாக சரி செய்ய வேண்டியது நீதிமன்றங்கள் அல்ல; நாடாளுமன்றம்தான்' என்றனர். தினமணி
-
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை; உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பவில்லை: ஆளுநர் மாளிகை திட்டவட்ட மறுப்பு..!
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை; உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பவில்லை: ஆளுநர் மாளிகை திட்டவட்ட மறுப்பு ! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியதாக வெளியான தகவலை ஆளுநர் மாளிகை இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. மிகவும் சிக்கலான இந்த வழக்கில் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து தான் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்பதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசா ரித்த உச்ச நீதிமன்றம், பேரறி வாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேரை தவிர மற்ற 19 பேரையும் விடுவித்தது. 2000-ம் ஆண்டில் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 2014-ல் மீதமுள்ள 6 பேரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதனையடுத்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்தது. இதனை எதிர்த்து மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, 7 பேரையும் விடுவிப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என தற்போதைய மத்திய பாஜக அரசும் தெரிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த 6-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு எடுத்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அமைச்சரவைக் கூடி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய அரசியல் சட்டம் 161-வது பிரிவின்கீழ் ஆளுநருக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து ஆளுநர் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இதுகுறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‘‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியதாக சில பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளன. சில தொலைக்காட்சி சேனல்கள் இதை வைத்து விவாதம் நடத்தியுள்ளன. ஆனால், 7 பேர் விடுதலை குறித்து எந்த அறிக்கையும் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பவில்லை. இந்த வழக்கு சிக்கலான ஒன்று. சட்டம், நிர்வாகம் மற்றும் அரசியல் சட்ட ரீதியாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. 7விடுதலை குறித்து நீதிமன்ற உத்தரவு மற்றும் அமைச்சரவையின் பரிந்துரை ஆவணங்கள் 14ம் தேதி தான் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளன. இதுகுறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். 7 பேர் விடுதலை குறித்து அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு நியாயமான முடிவு எடுக்கப்படும்’’ என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இந்து
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், திரு. குமாரசாமி 'நைனா'..! (யாழ் நாட்குறிப்பில் இவர் பெயர் இல்லையே..)!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மிக அருமையான காணொளி.. கிரான்க் சாஃப்ட், சிலிண்டர் கெட், பிஸ்டன்களை பொருத்துவது என எல்லாமே விலாவாரியாக அறிந்துகொள்ள முடிகிறது.. மிக முக்கியமான விடயம் இரு பாகங்களை இணைக்கும் போது எந்தவித ரப்பர் கேஸ்கட்டுகளோ ஓ ரிங்குகளோ அதிகமில்லாமல் பொருத்துவதுதான்.. பொருந்தும் பாகங்கள் அந்தளவிற்கு மிக மிக துல்லியமாக வடிவமைத்து உற்பத்தி செய்திருப்பதுதான். காணொளி பகிர்விற்கு மிக்க நன்றி, திரு.கு.சா. அடிக்கடி இம்மாதிரி காணொளிகளையும் இணையுங்கள்..!
-
'திருமணமான பெண்கள், விரும்பினால் பெற்றோருடன் தங்கலாம்’- உச்ச நீதிமன்றம்
மண்டையை..! (ஒரு 'ஃப்லோ' வில சொல்லிவிட்டேன்.. இப்படி துருவப்படாது..! )
-
'திருமணமான பெண்கள், விரும்பினால் பெற்றோருடன் தங்கலாம்’- உச்ச நீதிமன்றம்
பெண்களை போகப்பொருளாக மட்டுமே பார்ப்பவர்களுக்கு, இந்த தீர்ப்பு வலிக்கத்தான் செய்யும். பெண்கள் திருமணமாகமல் பெற்றோர் வீட்டிலேயே இருக்கலாம், அப்போ அண்களின் கதி..? வாரிசுகள் இல்லாமல், பிடித்துக்கொண்டு உட்காரவேண்டியதுதான்..!
-
தொட்டுத் தொட்டு ஓடவா..! தொடர்ந்து வந்து ஓடவா..!!
விமானப் பயணம் இனிமையானதென்றாலும் பயணிகளின் உயிர், விமான ஓட்டிகளின் கைகளில்தான் உள்ளது. ஆனால் அவ்வப்போது இயற்கையும் விமானிகளின் ஆற்றலை சோதிப்பதும் உண்டு. விமான விபத்துகள், பெரும்பாலும் தரையிறக்கம், ஏற்றத்தில்தான் ஏற்படுகிறது என புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. இக்கணொளியில் மிகப்பெரிய பயணிகள் விமானமான 'எமிரேட்ஸ்' ஏர்பஸ் 380, ஜெர்மனியின் 'துசல்டொர்ப்' சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை கடும் குறுக்கு காற்று வீச்சு(Cross Wind) சவாலை சமாளித்து, அதிக வேகத்தில் இறங்கும் விமானத்தை கட்டுக்குள் கொண்டுவந்து கடும் சிரமத்துடன் தரையை தொட்டு, ஓடுதளத்தின் வழிகாட்டுக்கோடுகளின் மேல் பத்திரமாக இறக்கிய விமான ஓட்டிகளின் திறமையை மெச்சாமல் இருக்க முடியாது.. காணொளியை முழுவதும் பார்த்தால், விமான ஓட்டிகள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்களென புரியும்! வெல் டன்..!
-
போராளி ஆன மகன்..
முழுவதும் பார்க்கவேண்டிய நல்ல காணொளி..!
-
'திருமணமான பெண்கள், விரும்பினால் பெற்றோருடன் தங்கலாம்’- உச்ச நீதிமன்றம்
'திருமணமான பெண்கள் விரும்பினால் பெற்றோருடன் தங்கலாம்’- உச்ச நீதிமன்றம். திருமணமான பெண்கள் வழக்கமான கணவரின் வீட்டில்தான் இருப்பார்கள். இல்லையென்றால் தனிக்குடித்தனம் இருப்பார்கள். பெரும்பாலும், திருமணமான பின்னர், பெண்கள் தனது பெற்றோர்களின் வீட்டில் வசிப்பதில்லை. கணவன் இறந்தாலோ அல்லது வேறுவொரு சிக்கலான தருணங்களில் தான் அவர்கள் தங்களின் பெற்றோர்களின் வீட்டில் இருப்பார்கள். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றில் பெண்கள் தங்கள் தங்களின் பெற்றோர்களின் வீட்டிற்கு செல்வதோ அல்லது ஹாஸ்டலில் தங்குவதோ அல்லது கணவன் வீட்டில் தங்குவதோ அவர்களின் விருப்பம் தான் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இப்ராஹிம் சித்திக்யு என்பவர் மதம் மாறி, ஆர்யன் ஆர்யா என்ற பெயருடன் அஞ்சலி ஜெயின் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தனது மனைவி அஞ்சலியை பெற்றோரின் பிடியில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஆர்யன் ஆர்யா சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், பெண் விரும்பினால் விடுதிக்கோ அல்லது பெற்றோருடனோ செல்லலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. பின்னர், இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆர்யன் ஆர்யா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்த்ரசந்த் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது "உங்கள் இருவருக்கும் உண்மையில் திருமணம் நடந்ததா? ஏன் உங்கள் கணவருடன் நீங்கள் வாழ விரும்பவில்லை?" என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அஞ்சலியிடம் கேட்டனர். அதற்கு, “நான் ஒரு மேஜர். என்னை யாரும் நிர்பந்திக்கவில்லை. ஆர்யன் ஆர்யாவை திருமணம் செய்து கொண்ட போதிலும் நான் எனது பெற்றோருடன் வசிக்கவே விரும்புகிறேன். இது நானாக எடுத்த முடிவு” என்று அவர் கூறினார். பெண்ணின் கருத்தை கேட்ட நீதிபதிகள், “சம்பந்தப்பட்ட பெண் கணவருடன் செல்ல விரும்பவில்லை. திரும்பவும் தன்னுடைய பெற்றோருடன் செல்ல விரும்புகிறார். அவரை அவரது பெற்றோருடன் செல்ல அனுமதிக்கிறோம். அவர்களின் திருமணம் குறித்து எவ்வித கருத்தினையும் எங்களால் தெரிவிக்க முடியாது. அவர் மேஜர் என்பதால் எங்கு செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை அவருக்கு உண்டு” என தெரிவித்தனர். புதிய தலைமுறை செய்திகள்
-
குப்பை வண்டி விதி !
அனுபவமே மனிதனை பக்குவப்படுத்துகிறது..! நான் அமீரகத்தில் வேலைக்கு சேர்ந்த புதிதில், பழைய தமிழக அரசாங்க அதிகாரி மனநிலையில்தான் தான் இருந்தேன். இங்கு பல நாட்டு மக்களுடன் வேலை செய்து, குறுகிய காலத்தில் என் இருப்பை தக்க வைக்க வேண்டிய கட்டாயம்.. அதிலும் எம் அலுவலகத்தில் நான் ஒருவன்தான் தமிழன், மற்ற அனைவரும் மல்லுகள், அலுவலக இயக்குநர் ஓர் அரபி.. அலுவலக அரசியல் எப்படி ஓடியிருக்கும்? என யோசித்துப் பார்த்தால் மண்டை விறைத்துவிடும்..! இருபது வருடம் ஓடிவிட்டது..!! எப்படி..? பொறுமை, வலு அவதானம், டேக் இட் ஈஸி பாலிஸி, சொந்த திறமையை மேம்படுத்துதல், அதில் ஆளுமை..!
-
குப்பை வண்டி விதி !
ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்திற்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு ஓட்டுனரிடம் சொன்னார். இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று, திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட, ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி ஓட்டுனர் , உடனே பிரேக்கை மிதித்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார். அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர், இவர்களை 'கன்னா பின்னா'வென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி ஓட்டுனரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல், ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார். அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர, தவறாக வண்டி ஒட்டிய ஒரு ஓட்டுனரிடம் செய்வது போல இல்லை. “ஏன் அவனை சும்மா விட்டீங்க..? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல…? அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிறுகிறான்..?” என்று அதிகாரி டாக்சி ஓட்டுனரிடம் கேட்கிறார். அதற்கு டாக்சி ஓட்டுனர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது. ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள். “இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் சார்..! பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும், அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்கும். அது போன்ற குப்பைகள் சேரச் சேர, அவற்றை இறக்கி வைக்க, அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அவற்றை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அவற்றை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்க்கொண்டே இருக்க வேண்டும்..! அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய், நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார்..! நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணுக்கத்தை அறிந்து வியந்துவிட்டார். இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், 'வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பை வண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள்' என்பது தான். அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது, ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள். நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது..! வாழ்க்கை என்பது, 10% நாம் எப்படி உருவாக்குகிறோம்? என்பதை பொறுத்தது மட்டுமில்லாமல், மீதி 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொறுத்தது. -'வாட்ஸ்அப்'பில் வந்தது
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அங்கே நிலா இங்கே பலா யாழில் உலா அடேடே !!!
-
சென்னை மெட்ரோ ரயில் - பாகம் 2
மேலதிக விபரங்கள்:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை கொண்டாடும் திரு.நந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! வாழிய பல்லாண்டு..!!