Everything posted by ராசவன்னியன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
களத்திலே வரும் சீர்திருத்தங்கள், அறிவிப்புகள், புது மாற்றங்களை உள்வாங்குதல் எல்லாம் சரி.. வரவேற்கிறோம்..! ஆனால் சில தொடர்ந்து எழுதும் பதிவாளர்கள்/உறவுகள் சொல்லாமல் கொள்ளாமல், நைசாக கம்பி நீட்டிவிடுகிறார்களே..? அவர்களை வலைபோட்டு தேடிப்பிடிக்க, ஏதாவது "பொறிமுறை" வையுங்கப்பு..!
-
சென்னைக்கு வயது 379 - வாழ்த்துக்கள்..
தமிழ் நாட்டின் தலைநகரம், சென்னை மாநகர் உருவாகி இன்றோடு 379 ஆண்டுகளாகின்றன...! தமிழர்களின் உரிமையோடும், உணர்வோடு என்றும் நிலைக்க, வாழ்த்துக்கள்..!
-
காதாலே பேசிப் பேசி கொல்லாதே..!
ஹூவாய் (Huawei) கைப்பேசிகள் விற்பனை சந்தைக்கு இப்படியும் ஒரு மாடல் வந்துள்ளது.. 6 ஜிபி நினைவுத் திறன், 256 ஜிபி சேமிப்பு கொள்ளளவு, 40 மெகா பிக்ஸலுடன் மூன்று லைக்கா(Leica) காமிரா, வயர்லெஸ் சார்ஜர், டால்பி அட்மாஸ் ஒலித்திறன், இரண்டு வகையில் கைரேகை அடயாளம் மூலம் உட்புகும் வசதி இன்ன பிற சமீபத்திய அம்சங்கள்.. விலையைக் கேட்டால் மயங்கிவிடுவீர்கள்.. ஏறக்குறைய இந்திய ரூபாய்கள் ஒரு லட்சத்து நாற்பதாயிரம்(Rs.1,40,000) மட்டுமே.. அமீரகத்தின் விலையில் Dhs.5,999/- திர்காம்.. இக்கைப்பேசி பக்கம் போகமுடியுமா..? இதிலுள்ள பெரும்பாலான அம்சங்கள் நான் சென்ற மாதம் வாங்கிய கைப்பேசியிலும் உள்ளது.. இம்மாடலிலுள்ள சில கூடுதல் வசதிகள்: 538(PPI) பிபிஐ டிஸ்ப்ளே, 256 ஜி.பி சேமிப்பு, வயர்லெஸ் சார்ஜர், இரண்டு வகை கைரேகை அடையாள முறை.. மற்றவை ஒரே அம்சங்கள் தான்.. நிறுவன காணொளியில் பார்த்தால் விளங்கும்.. https://consumer.huawei.com/en/phones/porsche-design-mate-rs/
-
ஓ.. ரசிக்கும் சீமானே..! in 4K
- ஓ.. ரசிக்கும் சீமானே..! in 4K
வெற்றிபெற்ற பழைய தமிழ்ப் படங்களை 'டிஜிட்டல் மாஸ்டரிங்'(Digital Mastering) தொழில் நுட்பம் மூலம் புதுப்பித்து, துல்லிய முறையில் மிகத் தெளிவான 1080P(Full HD) மற்றும் 2160P (4K Resolution) பரிமாணத்தில் சில படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் பராசக்தி திரைப்படமும் ஒன்று. அவற்றிலிருந்து பிரபலமான பாடல்கள் இதோ.. (4K பரிணாமத்தில் காண, கீழ் வலது கோடியிலுள்ள யூடுயூப் * செட்டிங்கில் 2160p 4K என்பதை தெரிவு செய்து பார்க்கவும்..) படத்தின் தெளிவைப் பார்த்தால், அசந்துவிடுவீர்கள்..!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- காதாலே பேசிப் பேசி கொல்லாதே..!
ஏறக்குறைய கடந்த ஆறு வருடங்களாக சாம்சுங் கேலக்சி S3 கைப்பேசியை பயன்படுத்தி வந்தேன்.. கடந்த மாதம் "அட.. இன்னாப்பா..! என்னையே பிடித்து தொங்குறாய், கொல்லாதே..!! ஆளை விடு..!!" என என் சாம்சுங் கேலக்ஸி S3 திடீரென உயிரை விட்டுவிட்டது.. கைப்பேசி இல்லாமல், உடுக்கை இழந்தவன் கைபோல் ஆனேன்.. ! உடனே அருகிலுள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்று விசாரித்து பார்த்தபொழுது, எந்த கைப்பேசியும் அவ்வளவாக மனதைக் கவரவில்லை. மனதிற்கு பிடித்த ஐபோன் 10 வாங்கலாமென்றால், நம் சொத்தையே எழுதிக் கேட்பார்கள் போலிருந்தது..! வெறுப்புடன் கைப்பேசிகளின் பிரிவுகளிலிருந்து வெளியேறும் சமயம், தற்செயலாக ஹுவாய் (HUAWEI) கைப்பேசிகளின் பிரிவை கடந்தபோது இந்த HUAWEI P20 Pro கைப்பேசி கண்ணில் பட்டது..! உடனே அதன் சிறப்பம்சங்களை விசாரித்து அறிந்துவிட்டு, ஐபோன் 10 ஐயும் ஹுவாய் P20 Pro வையும் அருகில் வைத்து ஒப்பிட்டேன்.. ஆப்பிள் போனில் உள்ள தரத்திற்கு மிக அதிக விலை கொடுத்து வாங்குவதை விட, ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டையாக, இந்த HUAWEI P20 Pro கைப்பேசி என்னை கவர்ந்தது. 40 மெகா பிக்சல் லைக்கா(Leica) காமிரா, 6 ஜிபி மெமரி, 128 ஜிபி சேமிப்பு, ஃபேஸ் டிடக்சன், புத்தம் புதிய ஆன்டிராயிட் 8.1 என சமீபத்திய அம்சங்கள்.. மிக முக்கியமாக அதன் ஜொலிக்கும் இரு வண்ண வடிவமைப்பு.. என்னை மிகவும் கவர்ந்ததால் HUAWEI P20 Pro கைப்பேசியை உடனே சுட்டுட்டேன்..! அதாங்க.. வாங்கிவிட்டேன்..!!- யார் அந்த நிலவு..?
அதின்ரை சுகம் இப்படி இருக்குமா சாரே..?- யார் அந்த நிலவு..?
சில பாடல்களில், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர் இருவரும் இணைந்து பாடலை உருவாக்க அவர்கள் பட்ட கடின உழைப்பை நடிகர்கள் உணர்வுகளை திரையில் பிரதிபலித்து மக்களின் அங்கீகாரத்தை பெற்று வெற்றி பெறுவது மிக அரிதாக அமையும்..! சில நேரம் சிவாஜி கணேசனின் மிகைப்படுத்தபட்ட நடிப்பு நம்மை சோதித்தாலும், இந்தப் பாடல் காட்சியில் சிவாஜியின் பாடலுக்கேற்ற உடல் மொழிகளும், உதட்டசைவும், சிகரட்டை அனாசயமாக ஊதித் தள்ளிக்கொண்டே அலட்சியமாக நடந்து சென்று பாடியிருப்பதும் மிக அருமை.. இந்தப்பாடலுக்கு பாடகர், இசையமைப்பாளர், நடிகர் ஆகிய மூவரின் பங்களிப்பும் ஒரு புள்ளியில் சேர்ந்து சிறப்பாக மிளிர்கிறது. என்னை மிகவும் கவர்ந்த டி.எம்.எஸ் பாடல்களில், இப்பாடல் மிக முக்கியமானது.- IMAX என்றால் என்ன..?
'IMAX' என்றால் என்ன? சினிமாஸ் கோப்பில் திரைப் படங்களை பார்ப்பவர்கள் 70 எம்.எம் தியேட்டரில் படம் பார்க்கும்போது மிரண்டு போவார்கள். ஆனால், 70 எம்.எம்மில் படம் பார்த்தவர்களே ஐமேக்ஸ் திரையரங்கில் படம் பார்க்கும்போது பிரமாண்டத்தின் உச்சிக்கே சென்றுவிடுவார்கள். அப்படிப்பட்டதொரு பிரமிப்பை தரும் ஐமேக்ஸ் திரையரங்கம் (IMAX Theatre) இப்போது சென்னைக்கு வந்திருக்கிறது. இந்த ஐமேக்ஸ் தியேட்டரில் அப்படி என்ன விசேஷம்? Image Maximum என்பதன் சுருக்கமே ஐமேக்ஸ். இது கனடாவைச் சேர்ந்த நிறுவனம். இது வரை உலகில் 66 நாடுகளில் மொத்தம் 1008 ஐமேக்ஸ் தியேட்டர்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. இந்த 'ஐமேக்ஸ்' தொழில்நுட்பம் ஏற்கனவே இந்தியாவின் பல பெரிய நகரங்களில் அறிமுகமாகி விட்டன. ஹைதராபாத்துக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது இந்த ஐமேக்ஸ். சென்னையில் 'ஐமேக்ஸ்'! சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் இந்த ஐமேக்ஸ் தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு டிக்கெட் விலை 360 ரூபாய். ஆன்லைனில் முன்பதிவு கட்டணம் 30 ரூபாய். சென்னை வடபழனியிலுள்ள ஃபோரம் மாலிலும் தற்பொழுது ஐமேக்ஸ் திரையரங்கம் செயல்பட துவங்கியுள்ளது டிக்கெட் கட்டணம் அதிகம் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. மும்பையில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டரில் 480 மற்றும் 680 ரூபாயும், பெங்களூரில் 680 ரூபாயும் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவே வெளிநாட்டில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டரில் ஆயிரம் ரூபாய்க்கு மேல்தான் கட்டணமாக உள்ளது. என்ன தான் இருக்கு? ஐமேக்ஸ் தியேட்டர்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப வசதிகள் மற்ற சாதாரண திரையரங்குகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கும். ஐமேக்ஸ் தியேட்டரில் மிக துல்லியமான படத்தை வழங்கும் வகையில் சிறந்த லென்ஸ்கள் பயன்படுத்தப்படும். இது சாதரண கருவியை விட துல்லியமான மற்றும் பெரிதான படத்தினை வழங்கும். ரசிகர்கள் அமரும் சீட்டுக்களில் எந்தப்பக்கம் உட்கார்ந்து பார்த்தாலும் படம் ஒரே மாதிரியாகத் தோன்றும் வண்ணத் திரைகள் அமைக்கப்பட்டிருக்கும். சவுண்டு சிஸ்டமும் துல்லியமாக ரசிகர்களுக்குக் கேட்கும். ஐமேக்ஸில் 3D படம்! வழக்கமான திரையைவிட பல மடங்கு பெரிய திரையில் துல்லியமான ஒலி, ஒளியில் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை அதுவும் பிரமாண்டமாக இருக்கும். அதுவும் குறிப்பாக அகன்ற திரை கொண்ட இந்த ஐமேக்ஸ் தியேட்டர்களில் 3D படம் வித்தியாசமான அனுபவத்தை பெறுவார்கள். ஐமேக்ஸ் தியேட்டர் அனுபவத்தை நேரடியாக அனுபவிக்க வேண்டுமெனில், ஒரு முறையாவது அந்த திரையரங்குக்கு போய்வருவதை தவிர வேறு வழியில்லை. இதந்தி- திரு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்..
திரு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்..!- உதவி செய்வது போல் நடித்து ATM மையத்தில் கொள்ளை
ஜாக்கிரதை.. ஜாக்கிரதை..! அப்பாவிகளே, ஜாக்கிரதை...!!- ஹாங் காங் கடல் பாலம் - 55கி.மீ @ Hong Kong
ஹாங் காங் கடல் பாலம் இவ்வருட மத்தியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவிருக்கும் உலகின் மிக நீளமான கடல் பாலம் (55 கி.மீ) ஹாங் காங்(Hong Kong) நகரத்திற்கும், சுகாய்-மக்காவ் நகரங்களுக்கும் இடையே ஏறக்குறைய 15.9 பில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமான, வடிவமைப்பு காணொளிகளை காணும்போது பொறியாளர்களின் அசாத்திய திறமையும், உழைப்பும் பிரமிக்க வைக்கிறது.- நடு வழியில் நின்ற ரயில்... இறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணி.. முதுகை படிக்கட்டாக்கி உதவிய போலீஸ்..!
இந்த நெகிழ்வான சம்பவத்தின் காணொளி யூடுயூபில் கிடைத்தது..!- நடு வழியில் நின்ற ரயில்... இறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணி.. முதுகை படிக்கட்டாக்கி உதவிய போலீஸ்..!
பிழையை சுட்டியதற்கு நன்றி, தமிழ் சிறி. இனி கவனத்தில் எடுக்கிறேன்.- நடு வழியில் நின்ற ரயில்... இறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணி.. முதுகை படிக்கட்டாக்கி உதவிய போலீஸ்..!
நடு வழியில் நின்ற ரயில்... இறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணி.. முதுகை படிக்கட்டாக்கி உதவிய போலீஸ்! சென்னை: சில நேரங்களில் தமிழக போலீசார் செய்யும் செயல்கள் நம்மை திக்குமுக்காட செய்துவிடகிறது. திடீரென்று உணர்ச்சிப் பிழம்பான காரியங்களை செய்துவிட்டு, "காவல்துறை உங்கள் நண்பனேதான்" என்பதை அடிக்கடி நமக்கு பறைசாற்றி வருகின்றனர். அதற்கு ஒரு உதாரணம்தான் இது. நேற்று தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று சிக்னல் கோளாறு ஏற்பட்டுவிட்டது. அதனால், அந்த ரயிலானது, கோட்டை மற்றும் பூங்கா ரயில் நிலையங்களின் இடையே நின்றுவிட்டது. பாதி வழியில் ரயில் நின்றுவிட்டதால், பெரும்பாலான பயணிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதனால் ரயிலிலிருந்து இறங்கி நடந்து சென்றுவிடலாம் என்று ஒவ்வொருவராக இறங்க தொடங்கினர். அப்போது அமுதா என்ற கர்ப்பிணி பெண்ணும் கீழே இறங்க முயற்சித்தார். நடைமேடை இல்லை என்பதாலும், படிக்கட்டுகள் உயரமாக இருந்ததாலும் அமுதாவால் இறங்க முடியவில்லை. வெகுநேரம் எப்படி ரயிலை விட்டு இறங்குவது என தெரியாமல் தவித்தார். இப்படியே 2 மணி நேரம் ஆகிவிட்டது. அமுதாவால் கடைசிவரை கீழே இறங்கவே முடியவில்லை. அப்போது போலீசார் இரண்டு பேர் அங்கு வந்தனர். அமுதா கீழே இறங்க முடியாமல் தடுமாறி கொண்டிருப்பதை கண்ட அவர்கள், திடீரென ரயிலின் நுழைவு வாயிலில் படிக்கட்டு போல குனிந்து நின்றனர். இப்போது அமுதாவை தங்கள் மீது கால்வைத்து கீழே இறங்குமாறு சொன்னார்கள். அமுதாவும் ஒரு சிறு தயக்கத்திற்கு பின்னர், தன் கால்களை போலீசார் இருவரின் முதுகுகளின் மீது வைத்து கீழே இறங்கினார். இதேபோல அங்கு கீழே இறங்க முடியாமல் தவித்த வயதானவர்களுக்கும் இதேபோல படிக்கட்டு போல குனிந்து நின்றனர் இரு போலீசாரும். போலீசாரின் இந்த மனிதநேய மிக்க செயலை அங்குள்ளவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே பாராட்டி வருகிறார்கள். புல்லரிக்க வைத்த அந்த இரண்டு போலீசாருக்கும் பெரிய சல்யூட் ஒன்று நாம் அடித்தே ஆக வேண்டும்..! தற்ஸ் தமிழ் My sincere salute to these two policeman..!- சென்னை மெட்ரோ ரயில் - பாகம் 2
இந்த மெட்ரோ ரயில் திட்டமும், மதுரவாயல் - சென்னை துறைமுகம் மேம்பால சாலை திட்டமும் கடந்த 2007 ம் ஆண்டு திமு.க ஆட்சியில்தான் திட்டமிடப்பட்டு, அங்கீகரிகப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டவை. மறைந்த செயலலிதா அம்மையார்தான் 'ஈகோ'வினால் இத்திட்டங்களை எதிர்த்து, ஒத்தி வைத்தார்.. இரு திட்டங்களும் மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முதலீட்டில் 50 - 50 அடிப்படையில் தொடங்கப்பட்டவை.. தற்பொழுது ஓடும் அடிமை அரசு ஒழிந்தாலும், தி.மு.க நிச்சயம் இத்திட்டங்களை செயல்படுத்தும்.. ஏனெனில் இது அவர்களின் ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களாகும்.- 'துபாய் ஃப்ரேம்'
- சென்னை விமான நிலைய விரிவாக்கம்..!
- சென்னை மெட்ரோ ரயில் - பாகம் 2
'சென்னை மெட்ரோ ரயில் திட்டம்-1' ன் விரிவாக்கப் பணியின் ஒரு பகுதியாக வட சென்னை திருவொற்றியூர் பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி..- ஒலித்துண்டுகளின் தொகுப்பு..
யாழ் களத்தில் என்னால் பதியப்படும் ஒலித்துண்டுகளின் (Sound Cloud Tracks) தொகுப்பை கீழேயுள்ள இணையத்தை சுட்டினால் கேட்டு ரசிக்கலாம், வேறெங்கும் இணைக்கலாம்...- இளங்காத்து வீசுதே.. இசை போல பேசுதே!
யாழ் உறவுகளுக்காக இப்பாடலின் புல்லாங்குழல்(Flute) இசை வடிவத்தை இங்கே இணைத்துள்ளேன்.. கைப்பேசியில் 'ரிங் டோன்' ஆகவும் இவ்விசையை வைத்துக்கொள்ளலாம்..!- இளங்காத்து வீசுதே.. இசை போல பேசுதே!
இளங்காற்று வீசுதே... இணையத்தில் இப்பாடலைத் தேடியபோது இக்காணொளி தொகுப்பு கிட்டியது.. மலையாளப் பாடகர் என நினைக்கிறேன்.. அருமையாக பாடியுள்ளார்..! திரையில் பாடலுக்கு நடிகர்களின் அசைவை பார்ப்பதைவிட இசைக்குரலை மட்டும் கேட்பதும் இனிமைதான்..!! கவர்ந்ததால், காணொளியை சுட்டு, வெட்டி இங்கே இணைத்துள்ளேன்..!!!- இளங்காத்து வீசுதே.. இசை போல பேசுதே!
இளங்காற்று வீசுதே... இப்பாடலை கேட்கும்போதெல்லாம் அரசுப்பணியின் ஆரம்ப காலங்களில், தேனி மாவட்டத்தில் கம்பம், போடி, வருசநாடு, உடங்கல், பெரியகுளம் போன்ற மலையடிவாரப்பகுதிகளில், இளங்காளையாய் சக அலுவலர்களுடன் திட்டப்பணிகளுக்காக சுற்றித் திரிந்த பசுமையான நினைவுகளை மீட்டுச் செல்லும்.. இப்பகுதிகளைப் பார்த்து இப்போ பல வருசமாச்சுது.. போடி, கம்பம் பள்ளத்தாக்குகளின் சுழல்காற்றின் வாசத்தில், இவ்விளங்காற்றும் தவழட்டும் இனிமையாய்..!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
தற்செயலாக இந்தப்பக்கம் வந்தேன்.. சரி, இந்தப் பாடலை பார்த்து ரசியுங்கள்.. நல்லாதான் பாடியுள்ளார்..! (உங்களுக்கு இந்த மாதிரி பாட வருமா..? ) - ஓ.. ரசிக்கும் சீமானே..! in 4K
Important Information
By using this site, you agree to our Terms of Use.