Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by ராசவன்னியன்

  1. ஏன்? எதுக்கு?? ஒருமுறை சொன்னால் போதாதா..? மோட்சம் கிட்டாதாமா..??
  2. 'சங்கீத ஞானம்' இல்லாவிட்டாலும் இளையராஜாவின் பாடலை, இந்த வீணை இசைமழையில் கேட்பது காதுகளுக்கு மிக இனிய தேன்மழை..! வீணை இசைக் கலைஞருக்கு ஒரு சபாஷ்..!
  3. வயசு அறுபதுக்கு மேலே ஆச்சுனாலே எல்லாம் குறையுறது சகஜம் தானே? இதுக்கு ஏன் இவ்வளவு விளக்கம்..??
  4. மன்னிக்கவும், நீங்கள் அனைவரிடமும் கேட்டு இங்கு பதிந்ததால் தெளிவுபடுத்தினேன்..!
  5. அட நீங்க வேற.. ! அந்த அம்மணி, அவரின் விவரணையின் ஸ்டேட்டஸ்(Profile Status) பகுதியில் தனக்கு பிடித்தவற்றை பதிவு செய்கிறார்கள்.. அம்முறையில் பதிவு செய்தால் அவற்றிற்கு பதில் எழுதும் பொட்டி(GUI) அப்படித்தான் மென்பொருளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.. நல்லா வடிவா பாருங்கோ..!! அதில் விருப்பப் புள்ளிகள் போடும் வசதி கிடையாது..ஏனெனில் அது அவர் நிலையின் வெளிப்பாடு(Status update)..! அதை படித்தோமா, முடிச்சமோன்னு போயிக்கினே இருக்கோணும், இப்படி பிரிச்சி ஆராயப்படாது கண்டியளோ..!!
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், ஈழப்பிரியன் 'தாத்தா!' ?
  7. அண்ணல் சோமசுந்தரத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
  8. சென்ற மாதம் மதுரைக்கருகே எங்கள் கிராமத்திற்கு சென்றபோது, ஊரின் எல்லையில் "டெய்ஸி டூரிங் டாக்கீஸ்" இருந்த இடத்தை கடந்து செல்லும்போது ஏதோ ஒரு இனிமையையும், சந்தோசத்தையும் தொலைத்து விட்ட உணர்வு மேலோங்கியது. அன்று 50 பைசா கொடுத்து 'டூரிங் டாக்கீஸில்' பார்த்த அனுபவமும், சந்தோசமும் இன்று சென்னையிலும், துபாயிலும் ஐமாக்ஸ்(IMAX) திரையரங்குகளில் டால்பி அட்மாஸ்(Dolby Atmos) தொழிற்நுட்பத்திலும் ஏற்படவில்லை. 'டூரிங் டாக்கீஸில்', நமக்கு விருப்பான கதாநாயகர்களின் படத்திற்கு சென்று மண் தரையில் ஆவலுடன் எப்போது படம் திரையில் தோன்றும் என உட்கார்ந்திருக்கையில், படம் போடப்போகிறார்கள்... என்ற முன்னறிப்பாக இந்த பிரபலமான "கம் செம்டம்பர்"(Come September) இசைத்தட்டை திரைக்குப்பின்னால் ஒலிக்கச் செய்வார்கள்.. விசில் சத்தம் காதைப் பிளக்கும்.. "கம் செம்டம்பர்" இசையொலி முடிந்தவுடன் படம் திரையில் தோன்றும்.. 1940,1950 களில் பிறந்து வாழ்பவர்களின் பலரின் இதயத்தில் நீங்கா வரம் பெற்ற இசைக்கருவிகளின் துடிப்பு, இந்த இன்னிசை.. காலம், தொழிற்நுட்பங்கள் மாறலாம், ஆனால் முதலில் அனுபவித்த நினைவுகள் என்றும் நம்மைவிட்டு அழியாது..! நீங்களும் ரசியுங்களேன்..
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், சுவி..
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், தேசி..!
  11. இரைமீட்டல்.. பொறியியற் கல்லூரியின் இறுதியில் படிக்கும்பொழுது... காலை ஏழே முக்கால் மணி வாக்கில் மாயவரத்திலிருந்து வரும் புகைரத வண்டி, சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று பல்கலைக்கழக மாணவர்களை இறக்கிவிட்டுச் செல்லும்.. அடுத்த சில நொடிகளில் கடலூரிலிருந்து வந்து நிற்கும் மாணவர்களின் ரயில்.. ரயில் நிலையத்தின் எல்லையிலேயே எம் பொறியியற் கல்லூரி அமைந்துள்ளது. காலை 08:10 க்கு கல்லூரி வகுப்புகள் ஆரம்பிக்கும்.. ஆனால் நாங்கள் 07:30 மணிக்குள் விடுதியின் உணவகத்தில் உணவருந்திவிட்டு, விடுதியின் வாசலில் 07:50 மணிக்கு சரியாக வந்து அமர்ந்துவிடுவோம்..! அப்புறமென்ன..? கல்லூரி மாணவ, மாணவிகள் பட்டாளம், பல்கலைக்கழகத்தை நோக்கி வண்ண வண்ண மாணவியரோடு ஊர்வலமாக செல்லும்.. It's so colorful..! ஊரவலம் எம்மைக் கடந்தபின் தான் நாங்கள் வகுப்பறைகளுக்கு செல்வது..! அந்த மாணவ, மாணவியர் கூட்டத்தில், டி.ராஜேந்தரையும், உஷாவையும் பார்த்ததாக கூறுவர்கள்..! 'LENA' Theatre அந்த சிறிய ஊரில், ஒருதலை ராகம் 75 நாட்களுக்கு மேல் ஓடியது சாதனை..! காரணம், பல்கலைக்கழக மாணவர்களின் 'லேனா' திரையரங்கை நோக்கிய அலுக்காத படையெடுப்பு..பாடலுக்காகவே இப்படத்தை ஐந்து முறை பார்த்துள்ளேன்..! வாசமில்லா மலரிது..! இந்த வார வெள்ளிக்கிழமையோ அடுத்த வார வெள்ளிக்கிழமையோ... அடுத்தடுத்த வெள்ளிக்கிழமைகளிலோ... ரிலீசாகிற காதல் படங்களுக்கு முக்கியப்புள்ளியாகவும் பிள்ளையார் சுழியாகவும் அமைந்த ஒருதலை ராகம் படத்தை யாரால்தான் மறக்கமுடியும்..? 1980ம் வருடம் மே மாதம் 2ம் தேதி ரிலீசான போது, முதல் காட்சிக்குக் கூட்டமே இல்லை. இரண்டாவது ஷோவில் ஓரளவுக் கூட்டம். மாலை ஆறு மணிக்காட்சிக்கு பரவாயில்லை ராகம். 'இன்னும் மூணு நாளோ, நாலு நாளோ ஓடினாலே பெரியவிஷயம்யா...!' என்று புலம்பலும், பொருமலுமாகப் பேசிக்கொண்டார்கள், தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும். ஆனால், ஐந்தாம் நாள், ஆறாம் நாள், இரண்டாவது வாரத்தில் போட்ட டாப்கியர், சில்வர் ஜூப்ளி எனப்படும் 175 நாட்களைக் கடந்து ஓடியது. வசூல் சாதனை புரிந்தது என்பதெல்லாம் வரலாறு. அவுட்டோர் ஷூட்டிங் 16 வயதினிலே படத்திற்குப் பிறகுதான் மெல்ல மெல்ல அதிகமானது. ஆனாலும் மைசூர் கிராமம், ஆந்திர கிராமம் என படமெடுத்து, தமிழக கிராமமாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், மயிலாடுதுறையைக் களமாக்கி, இந்த நிமிடம் வரை அப்படியான படம் எதுவும் வரவில்லை... ஒருதலை ராகம் தவிர! மயிலாடுதுறை ரயில் நிலையம், புகழ்மிக்க ஏவிசி கல்லூரி, மாயவரம் தெருக்கள் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கே, இந்த இடங்கள் புதுசு. கதை, திரைக்கதை தொடங்கி பாடல்கள், இசை வரைக்கும் எல்லாமே டி.ராஜேந்தர்தான். அவரின் முதல் எண்ட்ரி கார்டு, இந்தப் படம்தான். தயாரிப்பு, இயக்கம் இ.எம்.இப்ராஹிம் என்று டைட்டிலில் வந்தாலும், டி.ராஜேந்தரின் அடுத்தடுத்த படங்களைப் பார்க்கும்போது, இதுவும் அவர் படம்தான் என்று இன்றுவரை நடக்கிறது பட்டிமன்றம். ஒருதலை ராகம், கிட்டத்தட்ட மிகப்பெரிய புரட்சி செய்தது என்றுதான் சொல்லவேண்டும். நடிகர்கள், டெக்னீஷியன்கள் என எல்லோரும் புதிது. முக்கியமாக, கல்லூரிக் களம். இவ்வளவு விஸ்தாரமாக கல்லூரியை, கல்லூரி வாழ்க்கையை காட்டியதே இல்லை. சங்கர், ரூபா, உஷா, சந்திரசேகர், தியாகு, ரவீந்தர் என விரல்விட்டு எண்ணும் அளவிலான கதாபாத்திரங்கள். வில்லன் என்று பார்த்தால், தயக்கமும் கூச்சமும் என்றுதான் சொல்லவேண்டும். சொல்லமுடியாத காதல், சொல்லத் தவிக்கிற காதல், சொல்லமுடியாத காதல் வலி... இதுதான் படத்தில் திரும்பத்திரும்ப வரும். ஆனால் ஒவ்வொரு காட்சியும் நம் மனதை கனமாக்கிக் கொண்டே இருக்கும். இதயம், காதல்கோட்டை, சொல்லாமலே என்று வந்திருக்கிற கதைகளுக்கெல்லாம் தாத்தா என்றுதான் ஒருதலை ராகத்தைச் சொல்லவேண்டும். இன்னொரு சிறப்பு... இந்தப் படத்தின் பாடல்களைப் பாடாத, முணுமுணுக்காதவர்கள் என்று அப்போது எவரையும் சொல்லமுடியாது. மீனா, ரீனா பாடல், வாசமில்லா மலரிது, கூடையிலே கருவாடு, இது குழந்தை பாடும் தாலாட்டு, கடவுள் வாழும் கோயிலிலே, நானொரு ராசியில்லா ராஜா' என்று பாடல்களுக்காக ஓடிய படங்களில், ஒருதலை ராகத்துக்கு தனியிடம் உண்டு. ரொம்ப துக்கமான படத்தை திரும்பப் பார்க்கமாட்டார்கள் ரசிகர்கள் என்று சொல்லுவார்கள். துலாபாரம் படத்தின் தோல்விக்கு, படத்தின் அதீத சோகமே காரணம் என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் துயரமான முடிவு கொண்ட ஒருதலை ராகம் படத்தை, அப்போதைய இளைஞர்கள், பத்துஇருபது முறைக்கும் மேலே பார்த்தார்கள். பணக்கார சங்கர், ஏழை ரூபா. ஆனால் இதெல்லாம் பிரச்சினை இல்லை. 'மூடி' டைப் ரூபாவுக்கு தாழ்வுமனப்பான்மை. ரூபாவுக்கு எப்போது எது பிடிக்கும் பிடிக்காது என்பதெல்லாம் அவருக்கே தெரியாது. காதலை நோக்கியும் சங்கரை நோக்கியும் ரெண்டடி வருவார். தடாலென்று பத்தடி பின்னே செல்வார். எப்போதும் எல்லோரையும் கலாய்த்துக் கதறடிக்கும் ரவீந்தரை நாலு அறை அறையலாம் என்று ஆடியன்ஸூக்கு தோன்றும். எப்போதும் குடித்துக்கொண்டிருந்தாலும் சந்திரசேகர் சொல்லும் குருவிக்கதைக்கு, மொத்த தியேட்டரும் கைத்தட்டி, கண்ணீர் விட்டு, கண்ணீரைத் துடைக்க மனமின்றி பிரமையற்றிருக்கும். மெளன மொழியில் தொடங்கிய தமிழ் சினிமாவில், மெளனமாகவே காதலைச் சொல்லியும் சொல்லாமலும் இருந்த ஒருதலைராகத்திற்கு சரித்திரத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் இருக்கிறது. ஒருதலை ராகத்தால் நமக்கு டி.ராஜேந்தர் கிடைத்தார். டி.ஆருக்கு சினிமாவுடன் சேர்ந்து, அவரின் மனைவியான உஷாவும் கிடைத்தார். கதை, சொல்லப்படுகிற திரைக்கதை, வசனம், நாலு நாலு நிமிஷப் பாடல்கள், முகபாவனைகள் என்று எந்த விதத்திலும் சோடை போகாமல், நம்மை உலுக்கியெடுக்கிற ஒருதலைராகத்தில்... அந்த ரயிலே கூட நம்மை என்னவோ செய்யும்! அதை இப்போது பார்த்தாலும் உணரமுடியும்! காமதேனு
  12. சென்னை விமான நிலைய விரிவாக்கம்! சென்னை விமான நிலைய விரிவாக்கம் பணிக்கு சுமார் 151 ஏக்கர் நிலத்தை விமான போக்குவரத்து ஆணையம் கையகப்படுத்த உள்ளது. கொளப்பாக்கம், மணப்பாக்கம், செயின்ட் தாமஸ் மவுண்ட், கவுல் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து ஆணைய அதிகாரி கூறியுள்ளார். கையகப்படுத்தும் பகுதிகளில் விமான நிறுத்துமிடங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், தரை இறங்கும் இடத்தை உணர்த்தும் ஒளி விமிகள், வாகன நிறுத்தும் பாதைகள், வடிகால் வசதிகள் உள்ளிட்டவை உருவாக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இதற்கான நிலத்தை ஒதுக்கும் பணி மாநில அரசிடம் கேட்டுள்ளதாகவும், இன்னும் ஒருசில மாதங்களில் நிலம் கிடைத்தவுடன் கட்டுமான பணி தொடங்கும் எனவும் அதிகாரி தெரிவித்துள்ளார். பெரும்பாலும் அரசு நிலங்களையை கையகப்படுத்த உள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாதிகள் அதிகளவில் பாதிக்கபட மாட்டார்கள் என்றும் விளக்கம் அளித்துள்ளார். Proposed expansion: இணைய செய்திகள்
  13. வரும் திங்கட் கிழமை(30-04-2018) அழகர் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளும் விழா நடைபெற உள்ளது..
  14. மதுரையில் சித்திரை திருவிழா மதுரையில் சித்திரை திருவிழாவின் ஒரு அம்சமாக, மீனாட்சி அம்மன் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக தேர்த்திருவிழா நடைபெற்றது.. அதன் காணொளி..!
  15. பயம்..? "வீட்டில் சிறுவயது பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், எந்த பா.ஜ.க வினரும் வரவேண்டாமென" கேரளாவில் வீட்டின் முகப்பில் எழுதி வைத்தார்கள்.. அதற்கு மோடி மட்டும் விலக்கா என்ன..? இப்படத்தில் பெண் ஓடி ஒதுங்குவது, நியாயமானதுதான்..!
  16. கொடுமையிலும் கொடுமை..! நாட்டுல நடக்குற கொடுமைகளை மறக்க தியேட்டருக்குப் படம் பார்க்க போனா, அங்கேயும் சில எடுபிடிகள் இப்படியும் திரையிட்டு விளம்பரம் தேடுவது கொடுமையிலும் கொடுமை..!
  17. நிஜமும், நிழலும்..! இரண்டு நாளைக்கு முன்பு யாழ்கள உறவு பாஞ் அவர்கள், ஈழத்து கலைஞர்கள்(மன்மதன் பாஸ்கி மற்றும் சிறி சித்தப்பா) நடித்த ஒரு காணொளியை வாட்ஸ் அப்பில் அனுப்பிருந்தார்.. முதலில் அசிரத்தையாக பார்க்க ஆரம்பித்த நான், இக்காணொளியை கண்டு முடித்தவுடன் கவரப்பட்டு யூடுயுபில் இந்த இரட்டையர்கள் நடித்த பல காணொளிகளை வரிசையாக ரசித்து வருகிறேன்.. புலத்தில் (லா சப்பல்?)எடுக்கப்பட்டுள்ள இக்காணொளிகள் மிகவும் நன்றாக உள்ளது.. அவற்றில் சில.. ( ஈழத்து தமிழர்களிடம் நல்ல,அற்புதமான திறமைகள் உள்ளன, ஆனால் வெளியே தெரிய மாட்டேன்கிறது..! )
  18. நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  19. முதுமை இளமையின் கண்ணாடி முதுமை குழந்தையின் மறுஉருவம்! இளமையில் ஆடும் ஆட்டத்திற்கேற்ப முதுமையில் ரன் குவிக்கப்படும்! எல்லோருக்கும் ஒளிதர தன்னை உருக்கிக் கொள்ளும் மெழுகுவர்த்தி போல எல்லோரையும் ஏற்றிவிட்டுத் தேய்ந்த பின்னும் ஓய்ந்து போகா படிக்கட்டு! இப்பிறந்தநாளில் புன்னகைக்க, இக்காணொளி உங்களுக்கு..!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.