Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. இன்று புதிது புதிதாக வரும் கம்யூட்டர் processor எல்லாம் முன்னிருந்தவையை விட சின்னதாகவும், ஆனால் வினைத்திறன் அதிகமாக இருப்பவையாகவும் வருகின்றன. அப்படித் தான் மனித மூளைக்கும் நடந்து கொண்டிருக்குதோ என்று நினைத்த படியே கட்டுரையை வாசித்தால்.......... மூளையின் அளவு மட்டும் குறையவில்லை, மூளையின் வினைத்திறனும் குறைந்து கொண்டே வருகின்றது என்றும் சில ஆராய்ச்சிளார்கள் சொல்லியிருப்பது கொஞ்சம் ஏமாற்றமாகப் போய்விட்டது..... மூளையின் அளவு சிறிதாவற்கு Climate Change ஒரு காரணமாக இருக்கலாம் என்பது உண்மையாகக் கூட இருக்கலாம், ஆனாலும் எல்லாவற்றுக்கும் அதையே ஒரு காரணமாக சொல்வது சில வேளைகளில் ஒரு பகிடியாகவும் தெரிகின்றது.....😀
  2. மோடி ஐயா இன்னும் மணிப்பூர் போகவில்லை........ அது சம்பந்தமாக ஒரு பத்திரிகை மாநாடு கூட இன்னும் நடத்தவில்லை. இவரின் தீவிர முஸ்லிம் எதிர் நிலைப்பாட்டால் தான், இலங்கையிலிருந்தே நான்கு பேர்கள் அங்கு போய் பிடிபட்டு இருக்கின்றார்கள் போல. இந்த வாரம் ஒடிசாவில் ஒரு மேடைப் பேச்சில் ஒடிசாவையும், தமிழ்நாட்டையும் கொழுவியிருக்கின்றார். குஜராத் கலவரத்தில் இருந்து ஆரம்பித்தவர், அப்படியே ஒரே ஏறு முகம் தான்.... இவரால் தெற்குமே, அமைதியில், தேய்ந்து விடும் போல கிடக்குது.
  3. இரவில் அந்தப் பகுதியில் போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் ஒன்றாகச் சேருவார்கள் என்று சொன்னார்கள். இடைக்கிடை போலீஸ் அங்கு போய் தேடுதல் நடத்துவார்களாம். அந்த இடத்தின் அமைப்பு, ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு வயல் வெளி, அதன் பின்னால் பனங்கூடல் என்று இதற்கு வசதியாகவே இருக்கின்றது.
  4. எழுத்தாளர் சாரு ஒரு தடவை ஒரு படத்தை விமர்சித்து விட்டார், ஏதோ அஜித் அல்லது விஜய் படம் என்று நினைக்கின்றேன். சாரு 'இது என்ன கொடுமை, இந்தப் படங்களை எல்லாம் எப்படி ஒரு மனிதன் பார்க்கிறது, நான் மாடியிலிருந்தே குதித்து இருப்பேன்....' என்று அந்தப் படத்தை கறாராக கடுமையாக விமர்சித்து விட்டார். விட்டார்களா அந்த கதாநாயகனின் ரசிகர்கள்........ 'யாரடா சாரு, அவன் என்ன பெரிய இவனா...' என்று கேட்டு, சாரு வீட்டிற்கு ஆட்டோ அனுப்பப் போவதாக வெருட்டினார்கள். அதற்குப் பிறகு சாரு சினிமா விமர்சனமே இனி வேண்டாம் என்று ஓடி விட்டார். இங்கே யாழ் களத்திலும் சில விடயங்களில் ஒரு ரசிகர் மனநிலை இருக்கின்றது போல........என்னவோ போங்கள், பொழுது போகுது தானே........😀
  5. ❤️....... மோகன் அண்ணா அப்பொழுது ஊரில் பெரும் பிரபலம். அவர் கடைகளின் வாசல்களில் எழுதும் பெயர்களையே நாங்கள் ரசிகர்களாகப் பார்ப்போம். அந்தப் படங்களை கட் அவுட் என்று சொல்வோம். இன்றும் அது இருக்கின்றது, இந்த தடவையும் இருந்தது. ஆனால் கட் அவுட்டுகள் முன்னர் மிகச் சிறப்பாக இருந்தன என்று மனம் சொல்கின்றது. மோகன் அண்ணாவின் கட் அவுட் ஒவ்வொரு வருடமும் வங்கிக்கு அருகில் இருந்தது என்று நினைக்கின்றேன். பாலா மாஸ்டர் அவர்களின் கட் அவுட் அதற்கு அடுத்ததாக அரியோட்டி பள்ளிக் கூடத்திற்கு அருகில். ஒவ்வொரு கட் அவுட்டும் எவ்வளவு பெரிய முயற்சியும், பலரது உழைப்பும். இவர்கள் பெரும் கலைஞர்கள். 'அம்மன்...' என்றே வீட்டில் இன்றும் சொல்கின்றோம்/கூப்பிடுகின்றோம், ஏழு கடல் மலை தாண்டியும் விட்டுப் போகாத ஒரு பழக்கம்........🤣. நகை விவகாரம் உண்மையே. ஆனால் இன்று திருடர் பயம் காரணமாக கவரிங் நகையாக மாறிவிட்டது. அதையும் கழுத்து மூடும் வரை இன்றும் போடுகின்றனர்........😀
  6. நாங்கள் சடங்கு, சாமத்திய வீடுகள் போன்றவற்றை பெரும் எடுப்புச் சாய்ப்புகளுடன், எங்களின் நிதி நிலைமைகளுக்கு கட்டுப்படியாகும் அளவைத் தாண்டி மிக மிக அதிகமாகவே செய்வது போல இருக்கின்றது ஈரான் மற்றும் சில நாடுகளின் நடவடிக்கைகள். எல்லாமே வெறும் பூச்சாண்டி ஆகத் தெரிகின்றது கடைசியில். ரஷ்யா - உக்ரேன் சண்டையில் ரஷ்யாவிற்கு ட்ரோன்கள் கொடுத்தோம், அதி உயர் தொழில்நுட்பம் என்றனர். கடைசியில் மலையில் விழுந்த இவர்களின் ஹெலிகாப்டரை இவர்களின் ட்ரோன் எதுவும் கண்டு பிடிக்கவில்லை. துருக்கியின் ட்ரோன் ஒன்றே முதலில் சிதைவுகளை கண்டு பிடித்தது. அமெரிக்கா உதவி செய்யவில்லை என்றால்......ஏனப்பா, நீங்கள் தானே அணுகுண்டு கூட செய்கின்ற தொழில்நுட்பம் உங்களிடம் இருக்கின்றது என்றீர்கள். இப்ப என்னடா என்றால், இரவில் இருட்டில் தேடுவதற்கு யாராவது ஒரு விமானம் கொடுங்கள் என்கின்றீர்கள். சரி அப்படித்தான் ஒரு தேவை உங்களுக்கு இருந்தாலும், எங்கேயப்பா உங்களின் நண்பர்களான உச்ச தொழில்நுட்ப வல்லுநர்கள் - சீனா, ரஷ்யா, வட கொரியா....?
  7. 👍.... இருக்கைப் பட்டியை (நல்ல தமிழ்.....) எப்போதும் போட்டிருப்பது நல்லதே...
  8. 👍..... அதிகமான இளைஞர்கள் ஊர் விட்டு ஊர் வந்து இப்படிச் செய்வதனால், அவர்களுக்கு தெரிந்தவர்கள், சொந்தங்கள் என்று இவ்விடங்களில் இல்லை. அதனாலேயே பயம் அல்லது தயக்கம் என்று ஒன்று இல்லாமல் போய்விட்டது. ஒரு நாள் நாங்கள் இருவரும் ஒரு வீட்டிற்கு போய் விட்டு திரும்பி வரும் போது நன்றாக இருட்டிவிட்டது. தீருவிலில் பகுதியில் இருக்கும் தூபி வீதியால் நடந்து வந்து கொண்டிருந்தோம். குமரப்பா, புலேந்திரன் மற்றும் அவர்களுடன் மாவீரர்களானவர்களின் ஞாபகார்த்தமாக கட்டிய தூபி. தூபியின் அடையாளமே இன்று அங்கு இல்லை. இராணுவம் எப்போதோ அதை அழித்துவிட்டது. அந்தப் பகுதி முழுவதும் கும்மென்ற இருட்டு. தூபி வீதியில் இருந்த எல்லா மின்விளக்குகளும் உடைக்கப்பட்டிருந்தன. திடீரென்று பார்த்தால் இருட்டில் தனியே ஒருவர் நின்றிருந்தார். கையில் புகைத்துக் கொண்டிருந்தது. மனைவி பயந்துவிட்டார். ஒரு பத்து அடிகளில் இன்னொருவர் அதே போல. பின்னர் இருவர். அந்தப் பகுதியை கடகடவென்று தாண்டிய பின்னரே கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. எஙகள் வீட்டில் இருந்தவர்கள் மிகவும் கடிந்து கொண்டனர். அந்தப் பகுதியால் இரவில் எவருமே போவதில்லை என்றனர். எப்படியான ஒரு நிலைமை.........😌
  9. விமானம் கடுமையான காற்றுக் கொந்தளிப்பின் போது செங்குத்தாக மேலெழும்பி, அப்படியே ஒரெயடியாக பல ஆயிரம் அடிகள் கீழே வந்திருக்கின்றது. அந்தக் கணத்தில் சீட் பெல்ட் போட்டிருக்காத பயணிகள் மேலே பறந்து, தலைக்கு மேலே இருக்கும் பெட்டிகளில் மிகப் பலமாக இடிபட்டிருக்கின்றார்கள். கடும் கொந்தளிப்பு பகுதிகளை முன்னரே கண்டு அறிவித்திருக்கா விட்டால், அது FAA இன் தவறு என்கின்றனர். அப்படி அறிவித்திருந்தாலும், கொந்தளிப்பின் ஊடே செல்லும் விமானங்களும் இருக்கின்றன என்றும் சொல்கின்றனர். கொந்தளிப்பை சுற்றிப் போனால் எரிபொருள் அதிகம் தேவைப்படலாம் என்ற காரணத்திற்காக.
  10. ஒரு பாடம் 'படிப்பிக்க' வந்திருந்தார்கள் என்று தலைப்பில் போட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாகாவும், பொருத்தமாகவும் இருந்திருக்கும்........😀. ஒருவரும் ஒருவரையும் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள்........
  11. 🙏..... எப்பவும் அதே ஆச்சரியம் தான் - என்ன செய்தாலும் எப்படியும் கண்டு பிடித்து விடுகிறார்களே..........🤣.
  12. 🤣........ என் வீட்டைச் சுற்றியும் ஒரு நாலு பூனைகள் திரிகின்றன. உண்மையிலேயே. அதில் ஒன்று படுக்கும் நேரத்தை விட மற்றைய நேரம் முழுவதும் வீட்டிலும், கூரை ஓட்டிலுமே நிற்கின்றது. என் வீட்டில் நிற்காமல் நாலும் போய், அக்கம் பக்கம் இருக்கும் பல்கலைகளில் நின்றிருந்தால், இன்னும் நாலு பிஎச்டி கூடி இருக்கும் இந்த நாட்டில்... 'பூனை நாவல்' என்று ஒன்று எழுதும் அளவிற்கு பூனைகளுடன் சிநேகிதம் வளர்ந்து விட்டது............
  13. நன்றிகள் அல்வாயன். இன்னும் ஒரு பகுதி எழுதினால் இந்தப் பயணம் முடிந்துவிடும். உங்களின் சிரிக்க வைக்கும் கவிதைகளை கொஞ்ச நாட்களாக காணவில்லை.......
  14. 🤣......... தென் பகுதியுடன் ஒரு உறவுப் பாலம் அமைக்க வேண்டும் என்ற ஒரு கருத்து இடைக்கிடை வாறதுக்கும் இது தான் காரணம் என்று கண்டு பிடித்தும் விடுவா....😀
  15. படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஏழு - இந்திர விழா -------------------------------------------------------------------------------------- இந்திர விழா என்ற பெயரில் ஒரு விழா கோவலன், கண்ணகி வாழ்ந்த காலத்தில் பூம்புகார் நகரில் நடந்ததாகச் சொல்கின்றனர். அதை பல சங்ககாலப் பாடல்களில் பாடியிருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று இது நிகழ்ந்திருக்கின்றது. இந்திரனுக்கு விழா எடுப்பது என்றும் சொல்லியிருக்கின்றார்கள். அந் நாளில் பூம்புகார் நகரே இந்திரலோகம் போன்று அலங்கரிக்கப்பட்டு, ஆடல்களும், பாடல்களும் நகரெங்கும் நடந்ததாக இதனை விபரித்திருக்கின்றனர். இன்றும் தமிழ்நாட்டில் சில ஊர்களில் இதே பெயரில், இதே நாளில் இந்த விழா, வேறு வேறு வகைகளில், நடத்தப்படுகின்றது. ஊர் அம்மன் கோவிலின் 15ம் நாள் தீர்த்த திருவிழா. அம்மன் சமுத்திரத் தீர்த்தம் ஆடும் நாள். 15 நாட்கள் திருவிழாவின் கடைசி நாளான இது ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றே வரும். அன்றைய நாளை ஊரவர்கள் இந்திரா விழா என்னும் பெயரில் நெடுங்காலமாக நடத்தி வருகின்றனர். ஊரின் எல்லைகள் வரை மின் விளக்குகளும், குலைகளுடன் கூடிய வாழை மரங்களும் வரிசையாக வீதியோரங்களில் கட்டப்பட்டிருக்கும். நீர்ப் பந்தல்கள், மோர்ப் பந்தல்கள், தேநீர், கோப்பி என்று வழி வழியே தெருவெங்கும் கிடைக்கும். இலங்கையில் இருக்கும் பிரபலமான இசைக் குழுக்கள், நடன் குழுக்கள் என்பன அன்று ஊரின் வெவ்வேறு பகுதிகளிலும் இரவிரவாக நிகழ்ச்சியை நடத்துவார்கள். முன்னர் சில வருடங்கள் இந்தியாவிலிருந்தும் பிரபலங்கள் வந்து நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றனர். மோகன்ராஜின் அப்சரஸ் இசைக்குழு ஒரு தடவை வந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரையும், மோகன் மற்றும் ரங்கன் உட்பட, வேட்டி கட்டச் சொன்னதும் ஞாபகம். அதன் பின் மோகன்ராஜ் இலங்கையில் மிகவும் பிரபலமானார். கோவிலில் வேட்டி கட்டியதால் அல்ல, அவர் மிகவும் திறமையானவர் என்பதால்............. சித்தாரா அல்லது அப்படியான ஒரு பெயரில் ஒரு இசைக்குழு கொழும்பில் இருந்து வந்ததாகவும் ஞாபகம். இதை விட யாழில் இருக்கும் எல்லா இசைக் குழுக்களும் அன்று வருவார்கள். 'சின்ன மேளம்' என்று சொல்லப்படும் ஒரு நடன நிகழ்வும் நடக்கும். இன்றைய சினிமாப் பாணி நடனங்களின் ஒரு முன்னோடி வகை இது. தீவிரமான போராட்ட காலங்களில் சில வருடங்கள் இந்த விழா நடைபெறவில்லை அல்லது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடந்தது. சமீப காலங்களில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற தென்னிந்திய பாடகர்கள் பலரும் வந்து நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி இருக்கின்றனர். கோவிட் பெருந்தொற்றின் பின் இப்பொழுது மீண்டும் பெரிதாக இந்த விழா கொண்டாடப்படுகின்றது. இந்த வருடம் மிக அதிக எண்ணிக்கையிலான புலம் பெயர் மக்கள் இந்த விழாவிற்கு வந்திருந்தனர். ஆனால் இந்த வருடம் முற்று முழுதாக உள்ளூர் கலைஞர்களின் குழுக்களே நிகழ்வுகளை நடத்தின. தென்னிந்தியாவில் இருந்து எவரையும் அழைக்கவில்லை. கொழும்பில் இருந்து கூட எந்த இசைக் குழுவும் வரவில்லை என்றே நினைக்கின்றேன். நெடியகாட்டு பிள்ளையார் கோவில் வீதியில் நடந்த நிகழ்வில், பருத்தித்துறையில் இருக்கும் ஒரு இசை மற்றும் நடன பாடசாலை மாணவர்கள் நிகழ்வுகளை நடத்தினர். பலர் இருந்து அதை கேட்டும் ரசித்தும் கொண்டிருந்தது கொஞ்சம் புதுமையாக இருந்தது. எப்போதும் சினிமா பாடல்களும், ஆடல்களும் என்று போகும் நாங்கள், சாஸ்திரிய கலைகளை, அதுவும் வேறு தெரிவுகள் இருக்கும் போதும், இருந்து ரசிப்பது புதிதாகவே இருந்தது. அந்த பாடசாலை மாணவர்களுக்கு இது ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கும். ஒரு இடத்தில் கடலுக்குள் மேடை போட்டிருந்தனர். மூன்று இடங்களில் கடற்கரையில் மேடை போட்டிருந்தனர். இன்னொரு இடத்தில் வீதியின் மேலே ஒரு மேடை, அதன் கீழால் எல்லோரும் போய் வந்து கொண்டிருந்தனர். சந்தியில் சிதம்பர கணிதப் போட்டி நிர்வாகக்தினரால் ஒரு மேடையில் கணிதப் போட்டி நடத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இவற்றை விட இன்னும் சில மேடைகள் ஊரின் ஒவ்வொரு பக்கத்திலும். இசைக் குழுக்களின் தரம் பற்றி சொல்ல வேண்டும் என்றால், மிகவும் சாதாரணமாகவே இருந்தது என்று சொல்ல வேண்டும். வாத்திய கலைஞர்களின் திறமை, பாடகர்களின் திறமை எல்லாமே மிகச் சாதாரணம் என்றே தோன்றியது. இது ஒரு வேளை இன்று நாம் உலகளவில் மிகப் பெரிய இசைக் குழுக்கள் மற்றும் கலைஞர்களின் நிகழ்வுகளை தொடர்ந்து பார்த்து வருவது கூட இந்த அபிப்பிராயத்தை உண்டாக்கி இருக்கலாம். ஆனாலும் உள்ளூர் கலைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கம் இருந்தால், அதில் முற்று முழுதான உடன்பாடே. எல்லாக் குழுக்களிலும் அறிவிப்பாளர்கள் அசத்தினார்கள் என்றதையும் இங்கே சொல்ல வேண்டும். தமிழும், குரலும், ஏற்ற இறங்கங்களும் அருமையாக இருந்தன. இசை நிகழ்வுகள் நடைபெறும் மேடைகளிற்கு அருகில் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக நடனம் ஆடியது முன்னர் நான் பார்த்திராதது. இப்படி இங்கு நடக்கும் என்பது நினைத்துக் கூட பார்த்திராத ஒரு விடயம் என்று தான் சொல்ல வேண்டும். அவர்களில் சிலர் கொஞ்சம் நிதானம் இழந்திருந்தனர் போன்றும் தெரிந்தது. கால ஓட்டத்தில் பல கட்டுபாடுகள் உடைபடுவது சகஜம் தான் என்றாலும், போதைப் பொருட்களின் பாவனை அளவிற்கு மீறி விட்டது போன்றே பல இடங்களில் தெரிந்தது. அதற்கேற்ப, ஒரு நிகழ்ச்சி நடந்த இடத்தில் இரு இளைஞர் குழுவினர்களுக்கு இடையில் தகராறு ஆகி, ஒருவரை கத்தியால் குத்தி விட்டனர். ஒருவர் ரத்தம் வழிய ஓட, அவர் பின்னல் அவர்கள் ஓட, அவர்கள் பின்னால் போலீஸ்காரர்கள் ஓட என்று ஒரு குழப்பமும் நடந்தது. இப்படியான ஒரு நிகழ்வு அந் நாட்களில் அங்கே நடந்திருக்கவே முடியாது. அன்றிரவு தெருவெங்கும் குப்பையானது. எங்கும் பிளாஸ்டிக் குவளைகளும், போத்தல்களும் மற்றும் பல குப்பைகளும். எவரும் எவற்றையும் ஒரு இடத்தில் போடுவதாக இல்லை. சும்மா வீசி எறிந்து விட்டிருந்தனர். அடுத்த நாள் விடியவே எழும்பி, இனி என்ன, திருவிழாவும் முடிந்து விட்டது, மீதமிருக்கும் நாட்களில் ஒரு அவசர சுற்றுலாவை ஒழுங்கு செய்வோம் என்று நினைத்தேன். கண்டியும், நுவரெலியாவும் தான் அடிக்கும் வெயிலுக்கு பரவாயில்லாமல் இருக்கும் என்ற படியே, தெருவுக்கு வந்தேன். தெருவில், எங்கேயும், ஒரு குப்பை இல்லை, ஒரு பிளாஸ்டிக் இல்லை. கட்டப்பட்டிருந்த வாழைக் குலைகளும் இல்லை. அவ்வளவையும் சுத்தப்படுத்தி விட்டனர். எப்படித் தான் அவ்வளவையும் சுத்தப் படுத்தினார்களோ தெரியாது........ (தொடரும்..........)
  16. அப்படியும் நடந்தும் இருக்கலாம்.......👍 இவர் தான் அடுத்த 'சுப்ரீம் லீடர்' என்று கருதப்பட்டவர் என்றும், மிகவும் தீவிரமானவர், இரக்கமற்றவர் என்றும் சில ஆங்கில ஊடகங்களில் இருக்கின்றது.
  17. அமெரிக்கா ஈரானின் மீது விதித்திருக்கும் பொருளாதாரத் தடையே இந்த பெல் ரக ஹெலிகாப்டர்களை சரியாக புதுப்பிக்க முடியாமைக்கு காரணம் என்றும் சொல்கின்றனர். சென்ற மூன்று ஹெலிகாப்டர்களில் இரண்டு பாதுக்காப்பாக திரும்பி வந்திருக்கின்றன. ஆனால் அவைக்கு முன்னால் போன முக்கியமான இந்த ஹெலிகாப்டர் இடையில் காணாமல் போனது தெரியவில்லை. தொடர்பாடல்களிலும் ஒரு தொழில்நுட்ப பிரச்சனை அங்கிருக்கின்றது போல.
  18. வழமையாக இலங்கை குடிவரவுப் பகுதியில் கடவுச்சீட்டில் இருக்கும் அதிகாரிகள் படத்தையும், எங்களையும் ஒப்பிட்டு, கவனமாகப் பார்ப்பது போல ஒரு தோற்றத்தை உண்டாக்குவார்கள். இனிமேல் பெயர்களிலும் ஒரு quiz வைத்தாலும் வைக்கலாம்.......
  19. அழகான தீவு, அதன் கடல் என்று எங்கும் அந்நிய நாட்டவர்களின் அதிகாரத்தை பார்க்கும் போது, அன்றாடப் பிரச்சனைகளில் இருந்து மனம் விடுபட்டு அப்பப்ப கிடைக்கும் சிறு இடைவெளிகளில், இலங்கையில் வாழும் எவருக்கும் இப்படித் தான் தோன்றும்..........
  20. இன்று World Bee Day என்று கூகிள் காட்டிக் கொண்டிருக்கின்றது. நல்ல ஒரு கட்டுரை. இப்பொழுது முருங்கை பூக்கும் காலம் இங்கே. நாள் பூரா தேனீக்கள் அந்த வெள்ளை வெள்ளைப் பூக்களிலேயே கிடக்கின்றன. பின்னர் குட்டி குட்டிப் பாம்புகள் போல பிஞ்சுகள் வெளியே வரும். அவை அப்படியே நீண்டு காயாகின்றன. தேனீக்கள் இல்லையேல் இவை இல்லை. இது ஒரு உதாரணம் மட்டுமே. தேனீ தொடாமல் பூமியில் எதுவுமே இல்லை போல. காய்த்து நிற்கும் முருங்கை மரத்தை பார்த்து பக்கத்து வீட்டு அமெரிக்கர் இது என்ன என்று கேட்க, இது ஒரு வெஜிடபிள் என்று நான் சொன்னேன். 'இந்தப் பெரிய வெஜிடபிள் மரமா.......' என்பது போல அவர் கொடுத்த ஒரு ரியாக்‌ஷன் விலை மதிப்பற்றது..........😀 ஹைபிரிட் பூ மரங்களை வீட்டில் வளர்த்து தேனீக்களை ஏமாற்றிக் கொன்டிருக்கின்றோம் என்று சில வேளைகளில் தோன்றும். தேனீக்கள் அந்தப் பூக்களின் உள்ளே போய் உருண்டு பிரள்கின்றன. ஆனால் அங்கே எதுவும் இல்லை, அந்தப் பூக்கள் கிட்டத்தட்ட வெறும் கடதாசிகள்.
  21. ஊரில் பல வீடுகளில் விலாட்டு மரங்கள் காய்த்திருப்பதைப் பார்த்தேன். எங்கள் வீட்டிலும், மனைவியின் பிறந்து வளர்ந்த வீடு, ஒரு மரம் காய்த்திருக்கின்றது. கறுத்த கொழும்பானை பார்க்கவேயில்லை என்று இப்பொழுது தான் நினைவுக்கு வருகின்றது. நான் பிறந்து வளர்ந்த வீட்டில் இரண்டு கறுத்த கொழும்பான் மரங்கள் முந்தி நின்றது. இப்ப இல்லை. முந்தி அவையும் சில வருடங்கள் காய்த்துக் கொட்டின, சில வருடங்கள் பகிஷ்கரித்தும் இருக்கின்றன. என்ன டிசைனோ.....😀
  22. 🤣.......நல்ல யோசனை. பெட்டி பெட்டியாகத்தான் விற்கின்றார்கள். ஆறிலிருந்து பத்து அல்லது பன்னிரண்டு பழங்கள் ஒரு பெட்டியில் வரும். மாழ்பழத்தின் வகைகளையும், அளவுகளையும் பொறுத்து வேறுபடும். 'நல்ல டீல்' என்று சொல்லி, இந்த மாதங்களில் ஒரே நேரத்தில் சில பல பெட்டிகள் வீட்டுக்குள் வரும். பிறகு 'அய்யய்யோ, பழுதாகப் போகுதே....' என்று ஒரு குரல் விடாமல் கேட்கும்........ பிறகென்ன...காற்றுக்கென்ன வேலி.... நம்மவர்கள், இந்தியர்கள், வாங்கும் போது இரண்டு மூன்று பெட்டிகளை கலந்து ஒரு 'நல்ல' பெட்டியை உண்டாக்க முயல்வார்கள். கடைக்காரர் நொந்து போய் விடுவார்........
  23. மாம்பழங்கள் வீட்டில் இருந்தால், அளவாகச் சாப்பிடுங்கள் என்ற ஆலோசனையை பின்பற்றுவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது.......😀. இங்கு இப்பொழுது மாம்பழ சீசன் தொடங்குகின்றது. சீசன் என்றால் இறக்குமதி செய்யும் காலம். மெக்சிக்கோ மற்றும் மத்திய, தென் அமெரிக்கா நாடுகளிலிருந்து கொண்டு வருகின்றார்கள், நல்ல மாம்பழங்கள். விலையும் கட்டுப்படியாகும் விலையே. ஒரு நாளிலேயே நிறைய சாப்பிட்டு விடுகின்றோம்.
  24. வருடத்தில் ஆறு மாதங்கள் ட்ரோலர் வகை மீன்பிடி தடை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல விடயமே ஏனென்றால் இந்த வகை மீன்பிடி கடல் வளத்தை அழிக்கின்றது குட்டிக் குட்டி மீன்களை அழிப்பதன் வழியாக. ஆனால் எங்கள் மீனவர்களுக்கு மற்ற வகை மீன்பிடி முறைகளில், உதாரணம்: ஆழ்கடல் மீன்பிடி, நல்ல அனுபவமும், அதற்கேற்ற வசதிகளும் கிடையாது. பலர் இந்த தொழிலை செய்யாமல் விட்டு விட்டார்கள் என்றும் நினைக்கின்றேன். ஊரில் இருப்போர் கப்பலில் போகின்றனர், மற்றவர்கள் கப்பலில் போவதற்கான வகுப்புகளிற்கும் பயிற்சிகளுக்கும் போய் வந்து கொண்டிருக்கின்றனர். கனடா இப்பொழுது இலகுவாக்கியிருக்கும் விசா திட்டத்தின் மூலம் கடந்த சில மாதங்களில் இங்கிருந்து 600 பேர் வரை கனடாவிற்கு போய் விட்டார்கள் என்றும் சொன்னார்கள். எதற்குமே போதிய ஆட்பலம் இல்லை என்ற ஒரு நிலை.
  25. வருடத்தில் 350 நாட்களும் யாராவது ஓரளவிற்கு நல்லா சமைத்துக் கொடுத்தால், எந்தக் கொத்தென்றாலும் சாப்பிடுவம். ஒரு 15 நாட்கள் மட்டும் கடும் விரதம் சாப்பாட்டில். அந்த 15 இல் நான் போய் மாட்டுப்பட்டேன். சிவாஜிலிங்கம் ஊர் மீன் சந்தையை இரண்டு மாடிகளாக கட்டிக் கொடுத்திருக்கின்றார். அது அப்படியே ஆட்களும் இல்லாமல், மீன்களும் இல்லாமல் சும்மா கிடந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.