Everything posted by ரசோதரன்
-
சென்று வாருங்கள் அண்ணா!
🙏......... உங்களின் அண்ணாவின் மறைவிற்கு, இழப்பிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள், வாதவூரான்.
-
சென்னை ஐஐடியில் இசை ஆராய்ச்சி மையத்திற்கு 'இளையராஜா' பெயர் ஏன்? அவர் எவ்விதம் பங்களிப்பார்?
அவரின் பாடல்களை கேட்பது எனக்கு ஒரு பழக்கம், பின்னர் அதுவே ஒரு வழக்கமும் ஆகிவிட்டது. மற்றைய சில இசையமைப்பாளர்களின் பாடல்களையும் கேட்கின்றேன், ஆனால் இவரின் அளவிற்கு அல்ல. ஆனால் இன்று பல் வேறு விதமான கருத்துகளையும் கேட்டு, கட்டுரைகளையும் வாசித்த பின், மனதில் கேள்விகள் எழுவதை தடுக்க முடியவில்லை. சாரு மட்டும் இல்லை, ரியாஸ் குரானா, அராத்து, இப்படி இன்னும் பலரும் விமர்சித்து எழுதியிருக்கின்றனர். என் நட்பு வட்டத்திலேயே இந்த துறையில் பரிச்சயமும், பாண்டித்தியமும் உள்ள சிலர் பொது வெளியில் உலவும் பிம்பத்தை உடைக்கும் விதமாகவே கருத்துகள் சொல்கின்றனர்.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣......... ஒரு முறை இவர்களிடம் அன்று வாகனம் இல்லாததால், கொழும்பில், வேறு ஒரு வாகனத்தை இவர்கள் அனுப்பியிருந்தனர். நீங்கள் சொல்வது போலவே அந்த வாகனம் புதியது. அதன் சாரதி அவருடைய சொந்த ஊர் முல்லைத்தீவு என்று சொன்னார்.
-
சென்னை ஐஐடியில் இசை ஆராய்ச்சி மையத்திற்கு 'இளையராஜா' பெயர் ஏன்? அவர் எவ்விதம் பங்களிப்பார்?
இந்த நிகழ்வு சம்பந்தமாக எழுத்தாளர் சாருவிற்கு வந்திருந்த கேள்வி ஒன்றும், அவர் அவரது இணைய தளத்தில் அந்தக் கேள்விக்கு இட்டிருந்த பதிலும் கீழே உள்ளது. ************************************************** நான் பாட்டுக்கு நான் உண்டு என் ஜோலி உண்டு என்று கிடக்கிறேன். ஆனாலும் சில நண்பர்கள் ’ஏன்டா சும்மா கிடக்கிறாய், எழுந்து ஆடு’ என்கிறார்கள். ஏற்கனவே அந்த நண்பரிடம் ’எனக்கு எதுவும் எழுதாதீர்கள்’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் அவர் கேட்பது இல்லை. என் மேலும் தப்பு இருக்கிறது. கடிதத்தைப் பார்த்து அதைக் குப்பையில் போட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே? அதுதான் நம்மிடம் இல்லை. அப்படி இருந்திருந்தால் எப்போதோ உருப்பட்டிருப்பேனே? Kamakoti, The Director of IIT belongs to a family of Vedic Brahmins from Sri Sankara Math Kancheepuram as the name itself shows. He could have chosen a Sanjay Subramanian, but he chose Ilayaraja. A befitting reply to T.M. Krishna. V. Balasubramanian. இந்தக் கடிதத்தில் இருக்கும் அரசியலும், இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் காரியத்தில் உள்ள அரசியலும்தான் நான் இந்தக் கட்டுரையை எழுதக் காரணம். பிராமண சாதியுடன் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் பிராமணர்கள் என்னை பிராமண வெறுப்பாளன் என்கிறார்கள். முஸ்லிம்கள் என்னை ஹிந்துத்துவா என்றும், பிராமண அடிவருடி என்றும் சொல்கிறார்கள். ஹிந்துத்துவர்கள் என்னை இஸ்லாமியச் சார்பாளன் என்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் என்னை செக்ஸ் எழுத்தாளன் என்கிறார்கள். ஆக மொத்தத்தில் நான் எல்லோராலும் வெறுக்கப்படுகின்றவனாக இருக்கிறேன். (சமீபத்தில் கூட கர்னாடக சங்கீதத்தின் சே குவேராவாகிய டி.எம். கிருஷ்ணா விருது வாங்கியபோது அவரை விமர்சித்து எழுதினேன். அப்போது எல்லா பெரியாரியவாதிகளும் என்னை ஹிந்துத்துவா என்று திட்டினார்கள்.) காரணம் என்னவென்றால், நான் எப்போதுமே ஒரே கட்சியைச் சார்ந்தவனாக இருப்பதில்லை. எந்தெந்தப் பிரச்சினைக்கு எப்படி எப்படி எதிர்வினை ஆற்ற வேண்டுமோ, அப்படி அப்படி நிலைப்பாடு எடுப்பதால்தான் மேலே கண்ட குழப்படியான புரிதல்கள் உண்டாகின்றன. உதாரணமாக, ஜம்மு கஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து இருக்கக் கூடாது, எல்லா மாநிலமும் சமம்தான் என்ற நிலைப்பாடு உள்ளவன் நான். இதை எழுதினால் நான் ஹிந்துத்துவா. இந்தியாவில் கலாச்சாரத் தளத்தில் ஆதிக்கம் செலுத்துவது பிராமணர்கள் என்பது என் அபிப்பிராயம். இதை எழுதினால் நான் பிராமண எதிர்ப்பாளன். அந்த அர்த்தத்தில் பார்த்தால் இப்போது எழுதப் போகும் கட்டுரையை பிராமணர்கள் கடுமையான பிராமண வெறுப்பைக் கக்கும் கட்டுரை என்று கருதலாம். அப்படி நினைப்பவர்களுக்கு ஒரு விஷயம். நான் என் குருநாதர்களில் ஒருவராகக் கருதுபவர் மஹா பெரியவர் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இப்போதைய மெட்ராஸ் ஐஐடி இயக்குனர் காமகோடி காஞ்சி காமகோடி மடத்துக்கு நெருங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த ஐஐடி ஒரு சஞ்சய் சுப்ரமணியத்தின் பேரால் இல்லாமல் இளையராஜாவின் பெயரால் ஒரு இசை மையத்தைத் தொடங்கியிருக்கிறது. (IITM – Maestro Ilaiyaraaja Centre For Music Learning & Research) ஐஐடி ஏன் இளையராஜாவின் பெயரால் இசை மையத்தைத் தொடங்கியது என்றால், இளையராஜா ஒரு தலித் என்பதால் அல்ல. அவர் தலித் சமூகத்தில் பிறந்து பிறகு தன் வாழ்முறையால் பிராமணராக மாறியவர் என்பதால். ஆனால் சஞ்சய் சுப்ரமணியம் பிறவியிலேயே பிராமணர். அவரை விட தலித்தாகப் பிறந்து பிறகு பிராமணராக மாறியவர் முக்கியம் இல்லையா? செம்மங்குடி சீனிவாச அய்யரின் மரியாதையைப் பெற்ற இசைக் கலைஞர் இளையராஜா என்பதன் காரணம் என்ன? இளையராஜா பிராமணராக மாறி விட்டார் என்பதுதான். அது மட்டும் அல்ல. தன்னை தலித் என்று குறிப்பிடுபவர்கள் மீது வழக்குத் தொடுக்கும் வழக்கம் உள்ளவர் இளையராஜா. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த கே.ஏ. குணசேகரன் இளையராஜா பற்றி ஒரு நாமாவளிப் புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் இளையராஜாவை தலித் என்று குறிப்பிட்டு விட்டதற்காக குணசேகரன் மீது வழக்குத் தொடுத்து அவரை புதுச்சேரியிலிருந்து சென்னை நீதிமன்றத்துக்குப் பல முறை இழுக்கடித்தவர் இளையராஜா. இப்படி தனது எல்லா செயல்பாடுகளிலும் தன் தலித் அடையாளத்தை மறுதலித்து, பிராமண மதிப்பீடுகளை உயர்த்திப் பிடிப்பவர் இளையராஜா. நான் சந்தித்த நூற்றுக்கணக்கான பிராமணர்களும் இளையராஜா என்ற பெயரைக் கேட்டதுமே கைகால் நடுங்க, ரோமாஞ்சனம் துலங்க கண் கலங்குவதன் காரணம், இளையராஜாவின் இசை அல்ல. அவரது பிராமண மதிப்பீடுகள்தான். அவர் எழுதி இசையமைத்த ரமண மாலை அவரது பிராமண வாழ்வுக்கு மற்றொரு உதாரணம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இளையராஜா மட்டும் தனக்குப் பிடித்த உணவு பீஃப் பிரியாணி என்று சொல்லிப் பார்க்கட்டும். எல்லா பிராமணர்களும் அவரிடமிருந்து விலகி விடுவார்கள். இதே காரணத்தினால்தான் பிராமண சமூகம் ரஜினியை ஆதரிக்கிறது; கமல்ஹாசனை வெறுக்கிறது. ஏனென்றால், கமல் எல்லா இடங்களிலும் பிராமண மதிப்பீடுகளை விமர்சிக்கிறார். சமயங்களில் இகழ்கிறார். பார்ப்பான் என்கிறார். நான் பெரியாரிஸ்ட் என்கிறார். நான் நாத்திகன் என்கிறார். அதனால்தான் பிராமணர்களுக்கு கமலைப் பிடிப்பதில்லை, ரஜினியைப் பிடிக்கிறது. ரஜினியின் ஆன்மீகம், ராகவேந்திரா பக்தி எல்லாமும் பிராமண மதிப்பீடுகளோடு இணைத்துக் காணப்பட வேண்டியதுதான். கற்பனை செய்து பாருங்கள். இளையராஜாவும் பா. ரஞ்சித் போல சிகையலங்காரம் செய்து கொண்டு, தன்னுடைய எல்லா செயல்பாடுகளிலும் தலித் அடையாளத்தை முன்னிறுத்தியபடி இருந்தால் பிராமணர்கள் இளையராஜாவைக் கொண்டாடுவார்களா? இளையராஜாவை பிராமணர்கள் கொண்டாடுவதன் காரணம், பிராமணர்கள் தாங்கள் இழந்து விட்ட மதிப்பீடுகளை இளையராஜா ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதுதான். பிராமணர்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் குடியேறி விட்டார்கள். ஒரே காரணம். டாலர். இப்போது அவர்களின் பேரப் பிள்ளைகள் அமெரிக்கப் பள்ளிகளில் மாட்டுக் கறி தின்கிறார்கள். அதை பிராமணர்களால் தடுக்க முடியாது. அதன் காரணமாகவே, மாட்டுக் கறியை நிராகரித்து விட்டு, நெற்றியில் குங்குமப்பொட்டுடன் ரமண மாலை பாடிக் கொண்டிருக்கும் இளையராஜாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது பிராமண சமூகம். அதனால்தான் இளையராஜாவின் பெயரால் ஐஐடியில் இசை மையம் திறக்கிறார் காஞ்சி சங்கர மடத்துக்கு நெருங்கிய குடும்பத்தைச் சேர்ந்த திரு. காமகோடி. இதே காரணத்தினால்தான் இதற்கு முன்பு அப்துல் கலாமையும் கொண்டாடித் தீர்த்தது பிராமண சமூகம். அப்துல் கலாமும் இளையராஜாவைப் போலவே பிராமண மதிப்பீடுகளை ஏற்று, ஒரு பிராமணனைப் போலவே வாழ்ந்தவர் – முக்கியமாக, சைவ உணவுக்காரர் – என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். என் கேள்வி என்னவென்றால், இளையராஜா கைலியைக் கட்டிக்கொண்டு, எனக்குப் பிடித்த உணவு பீஃப் பிரியாணி என்றும், பிடித்த பானம் சாராயம், கஞ்சா என்றும் சொன்னால் ஐஐடி இயக்குனர் திரு. காமகோடி இளையராஜாவின் பெயரால் ஐஐடியில் இசை மையம் அமைப்பாரா? இதில் மற்றொரு பிரச்சினை என்னவென்றால், தமிழ்நாட்டில் மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கும் கல்வி நிறுவனமான ஐஐடி இம்மாநிலத்தையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் லும்பன் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாக ஆகி விட்டதுதான். தியாகராஜரின் பஞ்சரத்னா கீர்த்தனைகள் உலகப் புகழ் பெற்றவை. ஆனால் அதை விட உலகப் புகழ் பெற்றவை இசைஞானியின் பஞ்ச ரத்னா கீர்த்தனைகள் என்று நினைத்துவிட்டது மெட்ராஸ் ஐஐடி என்பது இந்த நிலத்தின் துரதிர்ஷ்டங்களில் ஒன்று. இசைஞானியின் பஞ்சரத்னா: மச்சானைப் பாத்தீங்களா மலவாழத் தோப்புக்குள்ளே… நேத்து ராத்திரி யம்மா… நெலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா… குருவி கொடஞ்ச கொய்யாப் பழம் கொண்டு வந்து தரவா? இந்த சாகாவரம் பெற்ற பஞ்ச ரத்னா கீர்த்தனைகளுக்காகத்தான் ஐஐடி இயக்குனர் திரு காமகோடி இளையராஜா பெயரில் இசை மையம் ஆரம்பித்திருக்கிறாரா? அதே காரணத்தினால்தான், ”கடந்த இருநூறு ஆண்டுகளாக மொஸார்ட் போன்ற ஒரு இசைக் கலைஞர் தோன்றவில்லை. இந்த இசை நிறுவனத்தின் மூலம் இருநூறு இளையராஜாக்கள் தோன்ற வேண்டும்” என்று இளையராஜாவே திருவாய் மலர்ந்திருக்கிறார் போலும்! மொஸார்ட்டையும் தன்னையும் ஒப்பிட்டுக் கொள்ளும் ஒரு மௌடீகத்தை உலகத்தில் வேறு எங்குமே காண முடியாது என்பது ஒரு பக்கம் இருக்க, இளையராஜா இதுவரை இசைக்குச் செய்தது என்ன? பல நூறு குப்பைப் படங்களுக்கு இசை அமைத்ததுதானே? மணி ரத்னம், கமல்ஹாசன் ஆகிய இருவரைத் தவிர இளையராஜா வேறு என்ன தரமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்? தமிழ் சினிமா என்ன உலக சினிமா அரங்கில் பெயர் பெற்றிருக்கிறதா? மலையாளம், வங்காளம், கன்னடம், மராத்தி, ஹிந்தி போன்ற மொழிகளாவது உலக சினிமா அரங்கில் தங்கள் இருப்பை நிறுவியிருக்கின்றன. அதிலும் சத்யஜித் ரே, ரித்விக் கட்டக் ஆகிய இருவர் மூலம் உலகம் முழுவதிலும் மகத்தான இடத்தைப் பெற்றிருக்கிறது வங்காள சினிமா. ஆனால் தமிழ் சினிமாவோ உலக அரங்கில் வெறும் கேலிப் பொருளாகத்தானே கருதப்படுகிறது? கடந்த இருநூறு ஆண்டுகளில் மொஸார்ட் போன்ற ஒரு இசை மேதை தோன்றாமல் இருக்கலாம். ஆனால் இளையராஜா இங்கே வேலை செய்து கொண்டிருக்கும் அதே சினிமாத் துறையில்தான் ஹாலிவுட்டில் Philip Glass, Hans Zimmer போன்ற மேதைகள் தோன்றியிருக்கிறார்கள். The Hours என்று ஒரு படம். ஃபிலிப் க்ளாஸ் இசையமைத்தது. அப்படி ஒரு இசையை இளையராஜா தான் இசையமைத்த ஒரு படத்திலாவது கொடுத்திருக்கிறாரா? அதற்கான ஒரு படம் அவருக்குக் கிடைத்திருக்கிறதா? The Hours மாதிரி ஒரு படம் தமிழில் வந்திருக்கிறதா? அதேபோல் இன்னொரு படம் Inception. அதற்கு இசையமைத்தவர் ஹான்ஸ் ஸிம்மர். இளையராஜாவுக்கு இசை தெரியும். ஆனால் சினிமா தெரியுமா? சினிமா தெரியாமல் சினிமாவுக்கு எப்படி இசையமைக்க முடியும்? நல்ல சினிமா என்றால் என்ன என்று தெரிந்தால்தானே The Hours, Inception போன்ற படங்களைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும்? அது புரிந்தால்தானே அதற்கேற்ற இசையைத் தர முடியும்? அறிவுக்கான ஸ்தாபனங்களும் தமிழ்நாட்டின் லும்பன் கலாச்சாரத்துக்கு ஏற்ப தங்களைத் தரம் தாழ்த்திக் கொள்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இனிமேல் மெட்ராஸ் ஐஐடி நடிகர் விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுப்பது பற்றி யோசிக்கலாம். http://charuonline.com/blog/?p=14649
-
இந்திய பிரதமருக்கு கொலை மிரட்டல்!
ஜீ சிரிப்பு செய்திகளில் தலைப்பு செய்தியாக வராத நாளே இல்லை போல........முன்னர் 'மிஸ்டர் எக்ஸ்' என்று ஒரு வகை பகிடிகள் வந்து கொண்டிருக்கும். அது போல இவை 'மிஸ்டர் ஜீ' பகிடிகள்..........
-
தனித்திரு - சோம.அழகு
நீங்கள் எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கும் ஊக்கத்திற்கு மிக்க நன்றிகள். பல வருடங்களின் முன்னர், ஈழத்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் நல்ல ஒரு எழுத்தாளராக வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு ஒரு பதில் சொல்லியிருந்தார். உலகில் உள்ள நல்ல சிறுகதைகளில் 500 ஐயும், நல்ல நாவல்களில் 50 ஐயும் முதலில் வாசிக்க வேண்டும் என்று அந்தப் பதிலில் சொல்லியிருந்தார். சிறந்த சிறுகதை, நாவல் வரிசைகள் பலரால், எஸ் ரா, ஜெயமோகன் மற்றும் சில விமர்சகர்களால் (க நா சு போன்றோர்) போன்றவர்களால், வெளியிடப்பட்டும் இருந்தன. அந்த வரிசைகளில் உள்ள சில படைப்புகள் இணையத்திலேயே கிடைத்ததால், வாசிக்க கூடியதாகவும் இருந்தது. ஆனால் பலவற்றை வாசித்த பின் பெரும் பிரமிப்பும், பயமுமே உண்டானது, எவ்வளவு பெரிய படைப்பாளிகள் வந்து போயிருக்கின்றனர், இதுவல்லவோ எழுத்து என்று.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣....... நான் தான் சொந்தப் பெயரைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சொல்லி விட்டேனே..........பேசாமல் அந்தப் பெயரிலேயே வந்திருக்கலாம், நாம தான் அடி பிடிக்கு போகாமல் ஒதுங்குகிற டைப் ஆயிட்டுதே......😀
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣........🙏......... பொடியன் தான், அதில் என்ன பல கேள்விக் குறிகள்........😀.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣... அங்கே என்ன தான் வாங்கப் போகிறோம் என்பது ஒரு 'த்ரிலிங்காக' இருக்கட்டுமே என்று தான் சாரதியை நாங்கள் ஒன்றும் கேட்கவில்லை. நாங்கள் மேற்கொண்டு எதுவும் கேட்காததே அவருக்கு ஒரு 'த்ரிலிங்காக' இருந்திருக்குமோ.... அங்கே என்ன வாங்கினோம் என்று எழுதுகின்றேன்........... கன்னியாவில் கடைகள் முழுவதும் சிங்களம் தான், அவர்கள் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் கதைக்கின்றார்கள். அது நேவிக்காரர்களின் இடம், அவர்கள் தான் பழக்கி வைத்திருப்பார்களோ......😀. முதல் தரம் ஏசியா, இல்லையா என்று வாகனக்காரர் கேட்டார்கள். பின்னர் கேட்கவேயில்லை. நேற்று ஷாருக்கானை heat stroke தாக்கத்தால் ஆஸ்பத்திரியில் சேர்த்ததாக செய்தியில் இருந்தது. இலங்கை வெக்கையில் ஏசி இல்லாமல் வாகனத்தில் போய், எங்களுக்கு அப்படி ஆகி இருந்தால், செய்தியில் சொல்லியிருக்க மாட்டார்கள்.....😀 ஒரு பெரிய நெட் வேர்க்கே இருக்குது போல.........
-
தனித்திரு - சோம.அழகு
👍..... எல்லாவறையும் உங்கள் மகள் இப்படி ஒரேயடியாக எழுதி விட்டாரே.... அவர் எழுதியிருக்கும் ஒவ்வொரு பந்தியும் நான் தேடிக் கொண்டிருந்தது. இடியப்பமும், இடி அமீனும் இனி என்னை பல இடங்களில் காப்பாற்றும்..........🤣 என் போன்ற பலர் ஏதாவது எழுதுவதற்கு தயங்குவதற்கு பிரதான காரணமே இப்படியான எழுத்துகள், ஆக்கங்கள் தான். இந்த எழுத்துகளின் தரத்தின் முன்னே நாங்கள் எழுத முயற்சிப்பது ஒன்றுமே இல்லை என்று தோன்றும்...👍👍
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
இப்பொழுதும் நேவியின் கட்டுப்பாட்டில் தான், கோஷான். உள்ளே அவர்களின் ஒரேயொரு கடை தான். கடலையும் பொதுக் கடல், அவர்களின் தனிப்பட்ட பாவனைக்கான கடல் என்று எல்லை போட்டு வைத்திருக்கின்றனர். அந்த எல்லையையும் தாண்டிப் போய் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். ஆனால் காவல் கோபுரத்தில் இருந்தவர் எதுவும் சொல்லவில்லை, வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார். வெளியில் இருந்த குளிக்கும் இடத்தை நல்ல சுத்தமாக வைத்திருக்கின்றனர்.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣...... சாஸ்திரம் சொல்லும் அவர்களிடம் சில கதைகள் தான் இருக்குது போல. சூழலுக்கு ஏற்ப உள்ளதில் பொருத்தமான ஒன்றை எடுத்து விட வேண்டும் ஆக்கும்......எங்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்தவர்களுக்கு 'நீ ரோஷக்காரி தாயே.......' என்று சாஸ்திரம் ஆரம்பித்திருந்தது. தரகுக் கூலி முறை இருக்குதோ என்ற ஒரு சந்தேகம் வேறு சில இடங்களிலும் வந்திருந்தது, குறிப்பாக லவின்ஸ் உணவகத்தில் தோசைக்கும், பூரிக்கும் 24,000 ரூபாய்கள் கொடுத்த பிறகு........😀
-
மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம்
அவர் இப்ப 'வேற லெவலுக்கு' போய் விட்டார், ஜீ இனிமேல் இப்படியான சாதா விடயங்களுக்கு கீழ இறங்கி வருவாரா என்று தெரியவில்லை. ஜீ நியூஸ் 18க்கு கொடுத்திருந்த 'நான் கடவுள்' பேட்டியைப் பார்த்தேன். எனக்கு ஹிந்தி சுத்தமாகத் தெரியாது, ஆனால் ஜீயின் பாடி லாங்குவேஜ் நல்லாகவே விளங்கியது..........🫣
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🙏..... எட்டுடன் முடியும் என்று நினைத்தேன். இப்ப ஒன்பதுடனாவது முடியுமா என்று தெரியவில்லை, எழுதத் தொடங்கினால் ஏதோ எல்லாம் வருகின்றது.......😀
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கூகிள் படிவத்தை நேற்று இறக்கி வைத்திருக்கின்றேன். நிரப்பி அனுப்பி விடுகின்றேன்..........👍
-
தேசியத் தலைவர் பற்றி சிங்களசகோதரனின் கவிதை.
நல்ல ஒரு கவிதை, நான் அங்கே ஒரு பதிவும் போட்டிருந்தேன், அதனால் தான் ஞாபகம்........👍
-
தேசியத் தலைவர் பற்றி சிங்களசகோதரனின் கவிதை.
@nochchi அவர்கள் இதை இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னர் களத்தில் போட்டிருந்தார் என்று ஞாபகம்.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
படம் இல்லாத இலங்கைப் பயணம் - எட்டு - அவசரப் பயணம் ---------------------------------------------------------------------------------------------- இன்னும் மூன்று நாட்களே பிள்ளைகளுக்கு இருக்கின்றது என்ற நிலையில், அங்கே போகலாமா அல்லது இங்கே போகலாமா என்று எந்தக் குழப்பமும் நாங்கள் படாமல், வாகனக்காரர்களையே கேட்டு விடுவோம் என்று கேட்டோம். இந்த இரண்டு வாரங்களில் அவர்களுடன் நல்ல பழக்கம் வந்துவிட்டது. எங்களுக்கு மட்டும் இல்லாமல், வேறு சில உறவினர்களுக்கும் அவர்களை பயன்படுத்தி இருந்தோம். ஊரில் இருந்து நேரே திருகோணமலை, பின்னர் அங்கிருந்து அப்படியே கண்டி, இரவு கண்டியில் தங்கி, அடுத்த நாள் அங்கே சுற்றிப் பார்த்து விட்டு, மதிய நேரத்தின் பின் பின்னவல யானைகள் மற்றும் ஆயுர்வேத தோட்டங்கள், அதன் பின்னர் அப்படியே கொழும்பு என்று ஒரு அவசர தேர்தல் பிரச்சாரப் பயணம் போன்ற ஒன்றை அவர்கள் திட்டமிட்டுத் தந்தனர். ஆயுர்வேத தோட்டம் என்னத்துக்கு என்று கேட்டோம். வெளிநாட்டவர்கள் எல்லோரும் அங்கே போவார்கள் என்றனர். போய்........என்று இழுத்தோம். போய், நிறைய வாங்குவார்கள் என்றனர். எந்த நேரத்திற்கு பயணத்தை ஆரம்பிக்கின்றோம் என்று சொல்கின்றோமே, ஒவ்வொரு தடவையும் குறிப்பிட்ட அந்த நேரத்திற்கு வாகன ஓட்டுநர்கள் வந்து சேர்ந்தது ஆச்சரியம். கொழும்பில் கூட இதே ஆட்கள் சொன்ன நேரத்திற்கு வந்தார்கள். ஒரு தடவை அவர்களின் வாகனங்கள் எல்லாம் வெளியில் போய் விட்டன, ஆனாலும் இன்னொரு ஆட்களிடம் இருந்து வாகனத்தை சரியான நேரத்திற்கு எடுத்து வந்திருந்தனர். கன்னியா வெந்நீருற்றில் நீர் இன்னும் அதிகமாகச் சுட்டது. சில கிணறுகள் கொதித்தது. இது இயற்கை என்று நம்ப முடியவில்லை. முன்னரும் போய் இருக்கின்றேன், அப்பொழுது இவ்வளவு சுட்டதாக ஞாபகம் இல்லை. முன்பு இந்தப் பகுதியை சிங்களமயப் படுத்துகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்தது. இனிமேல் அந்தக் குற்றச்சாட்டுக்கு தேவை எதுவும் இல்லை. முழுவதும் செய்து விட்டார்கள். அங்கே மாற்றுவதற்கு இனி ஒன்றும் இல்லை. இராவணன் அவரின் தாயாரின் ஈமச்சடங்கிற்கு இந்தக் கிணறுகளை உண்டாக்கினார் என்று சொல்கின்றது புராணம் என்று பிள்ளைகளுக்கு சொன்னேன். இந்தப் பகுதியில் எல்லாமே இராவணன் தான் என்றும் சொன்னேன். பிள்ளைகள் சுற்று முற்றும் பார்த்தனர். கொஞ்சம் மேலே ஒரு பெரிய புத்த பகவான் கண் மூடி அமர்ந்திருந்தார். அடுத்தது கோணேஸ்வரர் கோயில். நாங்கள் அங்கே போன நேரம் இராவணன் வெட்டு முன் நின்று ஒரு யூடியூப்பர் அவரின் நிகழ்வை பதிந்து கொண்டிருந்தார். நன்றாகவே செய்தார். நான் பிள்ளைகளுக்கு கதை சொல்லாமல், அவர் சொல்வதைக் கேளுங்கள் என்றேன். ராவணன் ஒரு நாயகனா அல்லது பாதகனா என்று பிள்ளைகள் குழம்பி நின்றனர். நான் முன்னரும் அவர்களுக்கு சொல்லியிருக்கின்றேன், எங்கள் நாட்டில் அவர் ஒரு பேரரசன் என்று. காப்பியம் சொல்வது போல அவரை நாங்கள் ஒரு மோசமானவராக பார்ப்பதில்லை என்று. ஆனாலும், ராமன் ராவணனை கொன்ற நாளே தீபாவளி என்று எங்கோ புத்தகம் ஒன்றில் பிள்ளைகள் படித்து வைத்திருந்தனர். இனி முடிவு அவர்களின் கைகளில். கோணேஸ்வரர் கோவிலை விட்டு கீழே இறங்கி வரும்போது முகம் பார்த்து சாஸ்திரம் சொல்பவர்கள் நின்று கொண்டிருந்தனர். தமிழ்நாட்டில் குடுகுடுப்பை மூலமும் இவர்கள் சாஸ்திரம் சொல்வார்கள். மிகவும் பேச்சு திறமையுள்ளவர்கள். மனிதர்களின் உளவியல் நன்கு அறிந்தவர்கள். கணவனும் மனைவியுமாக இருவர் அகப்பட்டால் மனைவியிடம் இருந்து ஆரம்பிப்பார்கள். பிள்ளைகளும் சேர்ந்து போனால், பிள்ளைகளிடம் இருந்து ஆரம்பிப்பார்கள். 'நல்லது ஒன்று நடக்கப் போகுது.......' என்று தொடங்குவார்கள். இவர்களை கம்பளக்காரர்கள் அல்லது நாயக்கர்கள் என்றும் சொல்வார்கள். ஆந்திராவிலிருந்து வந்து தமிழ்நாட்டில் குடியேறினர். பின்னர் இவர்களில் சிலர் இலங்கைக்கும் வந்து குடியேறினார்கள் என்று நினைக்கின்றேன். வீரபாண்டிய கட்ட பொம்மன் இவர்களில் ஒரு பிரிவைச் சேர்ந்தவரே. எங்களுக்கு நேரம் அதிகம் இல்லாததால், அவர்கள் சொல்லப் போகும் நடக்கப் போகின்ற அந்த நல்ல விடயம் என்னவென்று நின்று கேட்க முடியவில்லை. தேர்தல் சுற்றுப் பயணம் நிற்காமல் ஓடியது. அடுத்தது மார்பிள் பீச். வீடு இருக்கும் அமெரிக்க மேற்கு கரையில் கலிஃபோர்னியாவில் இருக்கும் கடல், பசிபிக் சமுத்திரம், எப்போதும் குளிர்ந்தே இருக்கும். கடும் கோடையில் கூட கடல் நீர் சரியான குளிராக இருக்கும். அத்தோடு பசிபிக் சமுத்திரத்தின் அலைகள் உயர்ந்தவை, விடாமல் கரையை அடித்துக் கொண்டே இருக்கும். அதிகமாக நீரில் தொங்கி நிற்கும் மணல் துகள்கள். ஆனால் நீண்ட, அழகான கடற்கரைகள். மார்பிள் பீச்சில் கடற்கரை மிகவும் சின்னது. ஆனால் கடல் நீர் சுத்தமாக, அலைகள் அற்று இருந்தது, வெதுவெதுப்பாகவும் இருந்தது. பலர் குளித்துக் கொண்டிருந்தனர். ஒருவர் கடற்கரையில் கழட்டி விட்டிருந்த செருப்பில் ஒன்றை ஒரு நாய்க் குட்டி தூக்கிக் கொண்டு ஓடினது. அதை சிலர் கலைத்துக் கொண்டு ஓடினர். அந்த நாய்க் குட்டிக்கு வெளிநாட்டவர்களுடன் இது ஒரு விளையாட்டு போல. திருகோணமலையை இன்னும் கொஞ்சம் நேரம் சுற்றி விட்டு, கண்டி நோக்கி புறப்பட்டது வாகனம். தம்பலகாமம், தம்புள்ள, மாத்தளை, கண்டி என்று சாரதி சொன்னார். தம்புள்ள போகும் முன் வரும் இரு பக்கங்களிலும் காடு நிறைந்த வீதியில் வெளிநாட்டவர்கள் திறந்த வாகனங்களில் போய்க் கொண்டிருந்தனர். யானை மற்றும் காட்டு விலங்குகளை அவைகளின் இயற்கையான இடங்களிலேயே பார்ப்பதற்கு. வழி வழியே யானைகளும், இலங்கைக்கு பயணம் வந்தவர்களை ஏமாற்றாமல், வீதிக்கு வந்து போயின. தம்புள்ள மொத்த சந்தையின் பிரமாண்டம் வியக்க வைத்தது. கண்டிக்கு போக முன் அக்குரணை நகர் வந்தது. இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு மிகவும் நெருக்கமான இடம் இது. அக்குரணை நகரின் வளர்ச்சி மிகப் பெரிதாக இருந்தது. மிகப் பெரியதொரு நகராக மாறியிருந்தது. இலங்கையில் எந்த நகரம் மாறினாலும், எவ்வளவு தான் வளர்ந்தாலும், கண்டி நகரம் மட்டும் மாறவே முடியாது. அதன் தரைத் தோற்றம் அப்படி. கண்டியில் எதையும் மாற்றவோ, புதிதாகக் கட்டவோ முடியாது. நகரப் பகுதியே பல ஏற்ற இறக்கங்களை கொண்டது. புனித நகர் என்னும் சிறப்பு வேற இந்த நகரை வளர விட மாட்டாது. கண்டியில் நண்பன் வீட்டை போய்ச் சேர்ந்தோம். நண்பன் என்னை விட பல வயதுகள் குறைந்தவன். இப்பொழுது பேராதெனிய பல்கலையில் வேலை செய்கின்றான். இந்த நண்பனைப் பற்றி எழுதுவதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன. பயணக் கட்டுரையில் இல்லாமல், தனியாக அதை எழுதவேண்டும். அங்கு நண்பனின் வீட்டில் நின்ற ஒரு பொழுதில் அவனுடன் நிறையக் கதைக்க கூடியதாக இருந்தது. அடுத்த நாள் காலை. நண்பனை பல்கலைக்கு போகச் சொல்லி விட்டு, நாங்கள் தலதா மாளிகைக்கு போய் விட்டு, பின்னர் அங்கிருந்து பல்கலை போவதாக திட்டம் போட்டோம். திட்டப் பிரகாரம் மாளிகை வாசலில் இறங்கி உள்ளே போக, தலதா மாளிகையின் வாசலில் இருந்த போலீஸ்காரர்கள் நாங்கள் உள்ளே போக முடியாது என்றனர்........ (தொடரும்...........)
-
நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை. பிரதமர் மோடி தகவல்.
🤣.... ஓங்கி ஒரே போடாகப் போட்டு விட்டீர்கள்..........
-
ஜனாதிபதித் தேர்தலில் மீ்ண்டும் களமிறங்குகிறார் பொன்சேகா
எப்படியும் ஒரு குதிரை கடைசியில் ஓடும்......
-
நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை. பிரதமர் மோடி தகவல்.
எவ்வளவு கிறுக்கர்களாக இருக்கின்றார்கள் இவர்கள்....... இதையெல்லாம் கேட்டுக் கொண்டு இவர் தான் எங்கள் தலைவரென்றும் சொல்லுகின்றார்கள் என்றால், மனித மூளை வர வர சின்னதாகப் போகின்றது என்ற அந்தஆராய்ச்சி முடிவில் ஏதோ பிழை இருக்க வேண்டும்.....மூளையே வெறும் கபாலம் ஆகுது போல.
-
நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை. பிரதமர் மோடி தகவல்.
நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை! பிரதமர் மோடி பரபரப்பு தகவல்… MAY 22, 2024 டெல்லி: என்னை இந்த உலகுக்கு அனுப்பியது பரமாத்மாதான், ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் என பிரதமர் மோடி கூறினார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 18வது மக்களவையை அமைப்பதற்காக நாடு முழுவதும் தேர்தல் பிரசார பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே 5 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், இன்னும் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் மட்டுமே நடைபெற உள்ளது. இதையடுத்து, ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்கிடையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் கடுமையாக போராடி வருகின்றன. இநத் நிலையில், தனியார் ஊடகத்துறையினருடன், நாட்டின் தற்போதைய நிலைமை, பாஜகவின் வளர்ச்சி, அரசியல் மற்றும் ஆன்மிகம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது, நான் பயாலிஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பு இல்லை, என்னை இந்த உலகுக்கு அனுப்பியது பராம்த்மாதான் என்றவர், அனைத்து இந்தியர்களுக்கும் சேவை செய்யவே நான் வந்துள்ளதாக தெரிவித்தவர், பாஜக அல்லாத மாநிலங்கள் மற்றும் தென்னிந்தியாவில் பாஜகவின் செயல்பாடு குறித்து பேசியதுடன், தென் மாநிலங்களில் ஊழல் மற்றும் வம்ச அரசியலை விமர்சிக்கிறார், மாற்றத்தின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். தனது வாழ்க்கை குறித்து பேசிய பிரதமர் மோடி, என் தாயார் உயிரோடு இருந்தவரை, இந்த உலகிற்கு நாள் என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந் தேன். ஆனால், என் தாயின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்து பார்த்தேன், அதில் கிடைத்த தெளிவுகளைத் தொடர்ந்து, இப்போது நான் பலவற்றை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன் என்றார். சிலர் எனது கருத்துக்கு எதிராக பேசலாம், ஆனால், நான் இதை முழு மனதாக நம்புகிறேன், என்னை இந்த உலகுக்கு அனுப்பியது பரமாத்மாதான் என்றவர், நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றார். எந்தவொரு விஷயத்தையும் நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காகவே கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருப்பதாகவும், நான் என்ன செய்தாலும் தெய்வீக சக்தியால் ஈர்க்கப்பட்டு, இந்த வேலையைச் செய்ய கடவுள் என்னை அனுப்பியுள்ளார், நான் பெற்றிருக்கும் ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருப்பது கிடையாது கடவுளால் மட்டுமே இதை கொடுக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/political-news/prime-minister-modi-said-am-not-human-being-not-born-biologycally/ https://patrikai.com/god-sent-me-to-this-world-prime-minister-modi-sensational-information/
-
போர் உலா - நண்பர்களை உருவாக்குவதற்கான போர்…
👍.... எனக்கு இந்தச் சொற்கள் முற்றிலும் புதியவை, ஆனால் வாசிப்பின் போது இந்த சொற்களின் இதே அர்த்தங்கள் புரிந்தது போலவே இருந்தது. கதையின் ஒவ்வொரு வரிகளிலும் ஒரு நிதானம் இருந்தது.
-
ஜனாதிபதித் தேர்தலில் மீ்ண்டும் களமிறங்குகிறார் பொன்சேகா
ரணில், சஜித், நாமல் (?), சரத், பொது தமிழ் வேட்பாளர்.... இப்படி எல்லோருமே களத்தில் இறங்கினால், அநுர குமார திசாநாயாக்கவிற்கு அது ஆதாயமாகப் போகலாம்.
-
போர் உலா - நண்பர்களை உருவாக்குவதற்கான போர்…
இதை முந்தாநாள் அகழில் வாசித்து விட்டு அப்படியே மனம் கலங்கி இருந்தேன். இரண்டு கதைகளுமே குத்தி தைத்திருந்தன மனதை..........