Everything posted by ரசோதரன்
-
இந்தப் பீரங்கிக் குண்டு
நன்றாயிருக்கின்றது தியா. 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' ஞாபகத்திற்கு வந்தது, இவை இரண்டும் ஒன்று அல்ல என்றாலும்.
- பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
-
பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
யாருக்கு வாக்களித்தாலும் எந்த மாற்றமும் வரப் போவது இல்லை என்ற உணர்வில் தான் இன்று மக்கள் பெரும்பாலும் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. 'எல்லாரும் ஒன்று தான்........' என்று சலித்துக் கொள்கின்றனர் மக்கள். ஓரளவேனும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு கட்சியோ அல்லது ஒரு தலைவரோ இருக்கின்றார்கள் என்றால், மக்களே முன் வந்து வாக்களிப்பார்கள். முன்னர் மக்கள் அதிகளவில் வாக்களித்திருக்கின்றார்கள் தானே.
-
பண்ணா யாழிசையா ? - சுப.சோமசுந்தரம்
🙏......... நல்ல ஒரு தெளிவைக் கொடுத்தது. மிக்க நன்றி.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
🤣...... தேனிசை தென்றல் தேவா அவர்கள் ராஜா என்ன கட்டுப்பாடுகள் போட்டாலும் பிரதி பண்ணியே தீருவது போல.......😀. இன்றைக்கு இங்கே விடுமுறை, மெமோரியல் டே. நாளைக்கு வேலையிலிருந்து தான் ஒரு தீர்வை யோசிக்க வேண்டும்.......🤣.
-
Sri Lanka-வின் 'கொள்ளைக்கார' யானைகள்; மனிதர்களின் 'ருசியான' உணவுக்கு Elephants அடிமையாவது ஏன்?
உலகிலேயே இலங்கையில் தான் யானைகளின் அடர்த்தி அதிகம் என்று எங்கோ வாசித்திருக்கின்றேன். எங்களால் அழித்துக் கொண்டே போகப்படும் காடுகள் தொடர்ந்து சிறுக்கின்றன. யானைகளுக்கு போதிய சாப்பாடும் இல்லை, போக்கிடமும் இல்லை. ஊருக்குள்ளும், வீதிகளிலும் அவை வருகின்றன. இதுவே தான் தமிழ்நாட்டிலும். உதாரணம்: சத்குரு என்று அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ் அவர்கள் யானைகள் உலாவும் காட்டை அழித்தே அவரின் பெரும் ஆச்சிரமத்தை உருவாக்கினார். எங்கே போகும் அங்கே குடியிருந்த யானைகள்?
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தெரிவு!
நாடு கடந்த அரசாங்கத்தில் பிரதமருடன் பல அமைச்சர்களும் இருக்கின்றார்கள் என்ற விடயத்தை முதன் முதலில் கேட்ட போது, பல வருடங்களின் முன், எப்படியாவது சிரிப்பை அடக்க வேண்டுமே என்று கொஞ்சம் கஷ்டமாகப் போய்விட்டது. நாங்கள் எங்கள் பகுதியில் இருக்கும் சில நகரங்களில் இருக்கும் ஈழத் தமிழர்கள் இணைந்து வருடா வருடம் ஒரு ஒன்று கூடலும், விளையாட்டுப் போட்டிகளும் நடத்திக் கொண்டிருக்கின்றோம். முக்கியமாக ஒரு கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி. இரண்டு நாட்கள் நடக்கும். பல வருடங்களின் முன் ஒரு வருடத்தில் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டார். அவர் தான் இந்த அரசாங்கத்தின் விளையாட்டுத் துறை அமைச்சர் என்று சொன்னார். இந்த இடத்தில் தான் எனக்கு நான் மேலே சொல்லியிருந்த அந்த அடக்க வேண்டிய கஷ்டம் ஏறபட்டது. எங்களின் இந்த விளையாட்டுகள் மற்றும் ஒன்றுகூடலிற்கு அரசாங்கமும் வரலாமா என்று என்னைக் கேட்டனர். கேட்டுச் சொல்கின்றேன் என்று சொன்னேன். நண்பர்களை கேட்ட போது, பலத்த எதிர்ப்பு. இவையெல்லாம் யார், இதுக்குள்ள ஏன் அரசியல் என்று எல்லோரும் மறுத்து விட்டனர். அத்துடன் இது முடியவில்லை. முன்னர் இங்கு மாவீரர் தினம் பெரிதாக நடக்கும். பின்னர் அமெரிக்க அரசின் தடை மற்றும் சில கைதுகள் காரணமாக இங்கு மாவீரர் தினம் தடைப்பட்டது. உருத்திரகுமார் அவர்கள் நல்ல பேச்சு வல்லமை உள்ளவர். கொழும்பு சட்டக் கல்லூரி என்று நினைக்கின்றேன். இங்கு மாவீரர் தினங்கள் பெரிதாக நடைபெற்ற போது மேடையில் பேசியிருக்கின்றார். தடையின் பின்னரும் நாங்கள் சில குடும்பங்கள் மட்டும் ஒன்று சேர்ந்து மாவீரர் தினத்தை சிறிய அளவில் செய்து கொண்டிருந்தோம் ஒவ்வொரு வருடமும், இன்று வரையும். பெரும் பேச்சாளர்கள் எவரும் வருவதில்லை, நாங்களும் கூப்பிடுவதில்லை. சில வருடங்களின் பின், அமெரிக்க அரசு இதை கண்டும் காணாமல் விட்டுவிட்டது. அத்தோடு நாங்கள் வெறும் 'பிள்ளைப் பூச்சிகள்' என்று அதற்கு தெரிந்தும் விட்டது போல. மீண்டும் மாவீரர் தினங்கள் பெரிதாக ஆரம்பித்தன. எங்களின் ஒரு வருட நிகழ்விற்கு, அரசாங்கமும் வருவதாகச் சொல்லி, பிரதமரும், அமைச்சர்களும் வந்தனர். அவர்களின் வருடாந்திர கூட்டமும் நடந்தது. அங்கு நடந்தவையை நேரே பார்த்தால் தான் நீங்கள் நம்புவீர்கள். மொத்தத்தில் இது என்ன கூத்து என்றே பார்த்துக் கொண்டிருந்த எங்கள் எல்லோருக்கும் தோன்றியது. இவர்களை இந்திய அரசோ அல்லது இலங்கை அரசோ தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதும், அதே அரசுகள் என்னை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதும் ஒன்றே. அந்த அரசுகளுக்கு ஒரு சல்லிக்கு பிரயோசனம் கிடையாது என்று சொல்கின்றேன்.
-
வவுனியா வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றப்படும்; வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்படும் - ஜனாதிபதி
ரணில் ஓவ்வொரு ஊராகப் போய் ஆஸ்பத்திரியை பெரிதாகக் கட்டித் தருகின்றோம் என்று சொல்கின்றார்....இப்ப யாருக்காவது சந்தேகம் வர வேண்டுமே, ஏன் எல்லா ஆஸ்பத்திரிகளையும் ஒரெயடியாக பெரிதாக்குகின்றார்கள் என்று.......😀. மாங்குளத்தில் திறந்து வைத்ததில், மாங்குளம் என்று எழுதியிருந்ததில் எழுத்துப் பிழை இருந்தததாம். அதை திருத்தச் சொல்லி எவ்வளவு நாளாகக் கேட்டும் கடைசி மட்டும் திருத்தவில்லையாம்......
-
யாழ். போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் - ஜனாதிபதி ரணில்
நான் பின்னால் போய் புல்லு வெட்டி விட்டு வருவதற்குள், நிழலியும், ஏராளனும் பதில் சொல்லி விட்டனர். மத்திய அரசின் அதிகாரத்திற்குள் இவை போய் விடும், ஆனால் பெருமையும், நிதியும் அதிகமாக கிடைக்கும் என்று நினைக்கின்றேன்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
🤣..... இந்த திரி படு சீரியஸான திரி.....இங்கு ஏதும் எழுத நினைத்தாலே கை கால் நடுங்கி, கன்னமும் அதுவா வீங்குது.........🤣. உண்மயிலேயே அவர் அவர் நிலைப்பாடுகளில் மிக உறுதியானவர்கள் இங்கு களத்தில் பலர் உண்டு........🙏.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
👍..... இங்கு வந்த இந்த சில நாட்களிலேயே எனக்கும் நீங்கள் கடைசி இரண்டு பந்திகளிலும் எழுதியிருப்பது போலவே தோன்றுகின்றது........🙏. 🤣.......... 'படமில்லாத .......' என்பதை ஒரு 'ட்ரேட் மார்க்' ஆக பதிவு செய்யும் திட்டம் எனக்குள்ளது. ஆகவே அதை பாவிப்பவர்கள் இப்பவே பாவித்துக் கொள்ளவும். பின்னர் என்றால் இளையராஜா அவர்கள் போல வக்கீல் நோட்டீஸ் ஒன்றை நான் அனுப்பினாலும், நீங்கள் ஆச்சரியமும், கோபமும் படக்கூடாது........🤣.
-
யாழ். போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் - ஜனாதிபதி ரணில்
போன மாதம் நான் ஊரில் நின்ற போது, மந்திகை ஆஸ்பத்திரியில் பணி புரியும் ஒரு இளம் வைத்தியருடன் கதைத்திருந்தேன். சில காலம் முன் வரை தங்களின் குழுவில் எட்டு வைத்தியர்கள் வேலை செய்ததாகவும், ஆனால் இப்பொழுது மூன்று வைத்தியர்கள் மட்டுமே அந்தக் குழுவில் இருப்பதாகவும் சொன்னார். அதனால் தாங்க முடியாத வேலைச் சுமை என்றார். எல்லோரும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்திற்கு சென்று விட்டதாகச் சொன்னார். இந்த இளம் வைத்தியரும் IELTS பரீட்சைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றார். இது அங்கே மருத்துவ துறையில் இன்றிருக்கும் மிகப் பெரிய பிரச்சனை.
-
காஸாவில் தடயமின்றி போன 13,000 பேர் என்ன ஆனார்கள்? இஸ்ரேலை சாடும் மனித உரிமை அமைப்புகள்
இதில் இருக்கும் நாடுகள், இடங்கள் மற்றும் மனிதர்களின் பெயரை மாற்றி விட்டால், அப்படியே எங்களுக்கு நடந்தத அதே கதை தான் இது. எத்தனை அமைப்புகளும், நிறுவனங்களும் இன்னும் சொல்லிக் கொண்டேயிருக்கின்றன.........'நம்பிக்கை இழந்து விட்டார்கள்' என்று ஒரு கட்டுரை வந்திருந்தது, வேறு என்ன தான் செய்வது, யார் மீது நம்பிக்கை வைப்பது.......😌
-
சில வாரங்களில் 3 ஆவது உலக போர் : இந்திய ஜோதிடரால் பரபரப்பு!
குசால் குமார் என்ற சாஸ்திரியாரின் பெயர் அசத்தலாக இருக்கின்றது. இந்தப் பெயரில் யாராவது யாழ் களத்திற்கு வந்து விடப் போகின்றார்கள்...........🤣.
-
தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா அதிருப்தி!
அவர் பாட்டிற்கு அமைதியாக இருக்கிற விமல் வீரவன்சவை அமெரிக்கா வம்புக்கு இழுக்கின்றது........🤣.
-
வெளிவருகிறது பொன்சேகாவின் போா் குறித்த நுால் – பல உண்மைகள் வெளிவரும் எனத் தகவல்
பல உண்மைகள் வரும், வரும் என்பார்கள். கோதாவின் புத்தகத்தில் வெளி நாடுகளின் சதி என்று வந்தது போல, ஏதாவது பொத்தாம் பொதுவான விசயங்கள் மட்டுமே இதிலும் இருக்கும். உண்மைகள் இவர்களின் புத்தகங்களில் வந்தால், இவர்கள் போர்க் குற்ற விசாரணைகளுக்கு போக வேண்டி இருக்குமே.......சரத்திற்கு கொஞ்ச காசு வரும்.
-
யாழ். போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் - ஜனாதிபதி ரணில்
வைத்தியசாலைகளின் வசதிகளை அதிகரிப்பதற்கே, அதன் ஊடாக அந்தப் பிரதேச மக்களின் வசதிகளை அதிகரிப்பதற்கே, தேசிய மயமாக்கம் என்று சொல்கின்றனர். இரண்டு நாட்களின் முன்னர் அமைச்சர் பந்துல குணவர்த்தனா இதைச் சொல்லியிருந்தார். இலங்கையில் இப்பொழுது இரண்டு தேசிய வைத்தியசாலைகள் மட்டுமே இருக்கின்றன, ஒன்று கொழும்பில் இரண்டாவது கண்டியில். மூன்றாவது கரப்பிட்டியாவில் வருகின்றது என்று அமைச்சர் சொல்லியிருந்தார், அவர் யாழ் என்று சொல்லவில்லை.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
ஈழப்பிரியனுடன் ஒரு பகிடி விடுவதற்காகவே அதை எழுதியிருந்தேன்.....மற்றபடி எந்தக் கடவுளும் எந்த நோயையும் கொடுப்பதில்லை .......👍...எங்கள் ஊரில் இப்படியான சில நோய்களை அம்மாளாச்சி கொடுப்பதாக சொல்வார்கள். ஓரு வெருட்டல் தான்....😀
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣......... பலம் எங்களுக்கு வரவில்லை........நாங்கள் தான் யானைக்கு பழம் கொடுத்தோம், அது சாப்பிட்டு விட்டு பலமாகவே நின்றது.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
அப்படியா.... நாங்கள் வெளிநாட்டவர் என்றபடியால் தான் தலைக்கு ஐயாயிரம் ரூபாய்கள் கட்டணம் வசூலிக்கின்றனர் என்று நினைத்திருந்தேன். யானைகள் பெரிதாகத்தான் இருக்கின்றன, அதற்காக கட்டணமும் இவ்வளவு பெரிதாக இருக்க வேண்டுமா.......... 😀.
-
தொடர்ந்து கைத்தட்டினால் என்னவாகும்?
👏...... நல்ல விகடமாக கைதட்டும் விடயத்தை பற்றி எழுதியிருக்கின்றார். சில இடங்களில்/நிகழ்வுகளில் அவர்கள் தட்டுகின்றார்களே, நாங்களும் ஒரு தட்டு தட்டி வைப்போம் என்று தட்டுவதும் உண்மை தான். பெரிய சங்கீத, நாட்டிய நிகழ்வுகளில் நிகழ்வு முடிந்ததாக எண்ணி, மகிழ்ந்து, இடையிலேயே கைதட்டி, பின்னர் மெலிதாக அசடு வழிந்தும் இருக்கின்றோம்.......😀
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣..... அங்கு எடுத்த வீடியோக்களை பார்க்க 'funny' ஆக இருக்கிறது என்று இப்பொழுது சொல்கின்றனர். அடங்கமாட்டார்கள் போல....போகும் ஒவ்வொரு தடவையும் தலைக்கு ஐயாயிரம் இதுக்கு எடுத்து வைக்க வேணுமோ தெரியல .........😀
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்பது - யானைக்கு தீனி ------------------------------------------------------------------------------------------------ கடைசியாக 90ம் ஆண்டுகளின் நடுப்பகுதிகளில் சில தடவைகள் தலதா மாளிகைக்கு போயிருக்கின்றேன். பின்னர் ஒரு இருபத்தி சொச்ச வருடங்களின் பின் ஒரு தடவை கண்டி போயிருந்தாலும் மாளிகைக்குள் போகவில்லை. இந்த தடவை குடும்பமே உடன் வந்ததால், உள்ளே போக வேண்டும் என்று முன்னரேயே தீர்மானித்திருந்தோம். 'இலங்கையில் பௌத்தம்' என்ற தலைப்பில் ஒரு சின்ன அறிமுக உரையையும் பிள்ளைகளுக்கு ஆற்றியிருந்தேன். இனிமேல் எதிர்காலத்தில் அவர்கள் இருவரும் எங்களுடன் சேர்ந்து எங்கேயும் வரா விட்டால், அதற்கான ஒரு பிரதான காரணம் இந்த பயணத்தில் நான் ஆற்றிய சின்ன சின்ன உரைகளாகவும் இருக்கக்கூடும். தலதா மாளிகையின் ஒரு பக்கம் இருந்தது உள்ளே போகும் வழி. முன்னர் நடுவில் இருக்கும் பாதையே உட் செல்லும் வழியாக இருந்தது. நடுவில் இருக்கும் பாதை போய் வருவதற்கென்றே ஒரு தலைவாசலுடன் கட்டப்பட்டும் இருந்தது. பாதுகாப்பு கருதி அதை தடை செய்து வைத்துள்ளார்கள் போல. நாங்கள் உள்ளே போக, அங்கு சோதனையில் நின்ற போலீஸ்காரர்கள் படபடவென்று சிங்களத்தில் சொன்னார்கள். அவர்கள் என்ன சொல்கின்றனர் என்று எனக்கு விளங்கியது. நல்ல நெற்றிப் பொட்டுடன் மனைவி முழித்துக் கொண்டு நின்றார். எது இடம் என்ற அவர்களின் ஒரு கேள்விக்கு மட்டும் நான் யாழ்ப்பாணம் என்று நல்ல தமிழில் பதில் சொன்னேன். மனைவி என்னவாம் என்று கேட்டார். நீங்களும், மகளும் உள்ளே போக முடியாதாம், நீங்கள் இருவரும் கை இல்லாத சட்டைகள் போட்டிருக்கின்றீர்களாம் என்றேன். கை உள்ள சட்டையைத் தேடி ஓடினோம். கண்டி நன்றாகத் தெரிந்த நகரம். எங்கே எந்தக் கடைகள் இருக்கின்றன என்று இன்னும் ஞாபகம் இருக்கின்றது. கடைக்காரர் இதற்கென்றே தயாராக இருந்தார், தலதாவின் உள்ளே போகும் முன் பலர் இந்தக் கடைக்குள்ளே முதல் ஓடிப் போவார்கள் ஆக்கும். எடுத்துப் பரப்பினார் கை உள்ள மேல் சட்டைகளை. இரண்டு வாங்கினோம். எட்டி என்னையும், மகனையும் கீழே பார்த்தார். அன்று அரைக் காற்சட்டை போடாமல், நாங்கள் இருவரும் நீட்டுக் காற்சட்டை போட்டிருந்ததால், கடைக்காரருக்கு அன்றைய வியாபாரம் கொஞ்சம் மந்தம் தான். அன்று மாளிகையின் உள்ளே சரியான கூட்டம். இப்பொழுது தினமும் இப்படித்தானா என்று தெரியவில்லை. பல வெளிநாட்டுப் பயணிகள் மேலேயும், கீழேயும் கலர் கலர் துணிகளை, துண்டுகளைச் சுற்றிக் கொண்டு வரிசைகளில் நின்றனர். உள்ளே ஒரு வரிசை இல்லை, பல வரிசைகள், ஆனால் எந்த வரிசையிலும் நில்லாமல், வெட்டி வெட்டி இலாவகமாக போய்க் கொண்டிருந்தனர் உள்ளூர் வாசிகள். அப்படி படம் எடுக்கக் கூடாது, இப்படி எடுக்கக் கூடாது, பின்பக்கத்தை காட்டக் கூடாது என்ற கட்டுப்பாடுகளால் யூடியூப்பர்கள் அங்கு இல்லை. வரிசையில் நின்று போனதால் அதிக நேரம் எடுத்தது. எல்லாம் பார்த்து முடித்த பின், என்ன பார்த்தோம் என்று பிள்ளைகள் கேட்டனர். ஓரளவு நியாயமான கேள்வியே. பேராதனை பல்கலைக் கழகம் ஒரு அழகிய இடம். பல்கலையின் ஊடே மகாவலி ஆறு ஓடிக் கொண்டிருக்கின்றது. ஆற்றின் ஒரு பக்கம் பிரதான பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. மறு கரையில் பொறியியல் பீடம் மட்டும் அமைந்துள்ளது. பொறியியல் பீடத்தில் படிக்கும் மாணவர்கள் மிகவும் 'வறண்டவர்கள்/காய்ந்தவர்கள்' என்பதால், அவர்களை ஒதுக்கி ஒரு கரையில் தனியே விட்டு விட்டதாக மற்றைய பீட மாணவர்கள் பகிடி செய்வார்கள். இப்பொழுது பல்கலைக் கழகத்தின் உள்ளே பல இடங்களில் வெளியார்கள் அனுமதி இன்றி உள்ளே போக முடியாத வண்ணம் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் இருக்கின்றனர். அங்கு வேலை செய்யும் நண்பன் முன்னரேயே பொறியியல் பீட வாசலில் இருக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் நாங்கள் வருவதாகச் சொல்லியிருந்தபடியால், அவர் எங்களையும், வாகனத்தையும் உள்ளே விட்டார். ஜனரஞ்சகமான துறைகள் அல்லாமல் வேறு துறைகளில் பெரும் மதிப்புடன் இருந்த, இருக்கும் ஒருவரை அந்த துறை சார்ந்தோர் அன்றி மற்றவர்கள் அவ்வளவாக அறிந்திருப்பதில்லை. ஆனால் பேராசிரியர் துரைராஜா அவர்கள் இதற்கு ஒரு விதிவிலக்கு. அவர் வாழ்ந்த காலத்திலும், இன்றும் பலரும் அவரையும், அவரது சேவைகளையும் அறிந்திருக்கின்றனர். நான் அவரிடம் நேரடியாக படிக்கவில்லை. அவர் அப்போது யாழ் பல்கலைக் கழகத்திற்கு போய் விட்டார். ஆனாலும் அவர் போட்டிருந்த பாதையிலேயே என் பயணமும், என் போன்ற பல மாணவர்களின் பயணமும் அமைந்தது. அவரின் நினைவாக அவரின் பெயரில் ஒரு செமினார்/மீட்டிங் இடம் ஒன்றை இப்பொழுது பேராதனையில் உருவாக்கியிருக்கின்றனர். அவரின் பெயரில் ஏற்கனவே பல்கலையில் ஒரு சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடத்தில், பேராசிரியர் துரைராஜா அவர்கள் இலங்கையின் 'Father of Geotechnical Engineering' என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் அவரின் பல படங்களும், விபரங்களும் அங்கே இருந்தன. மிகையில்லாத கூற்றுகள் இவை. பல்கலையின் பல பரிசோதனை, செய்முறை கூடங்களுக்கு நண்பன் கூட்டிச் சென்றான். அப்படியே இருந்தன. எந்த மாற்றமும் இல்லை என்றே சொல்ல வேண்டும். எல்லாம் முடிந்த பின், எப்படியிருக்குது என்று பிள்ளைகளிடம் கேட்டேன். எல்லாமே மிகப் பெரிதாக இருக்கின்றன, ஆனால் மிகப் பழையவை என்றனர். வெளியில் பல்கலை முழுவதும் நிலத்துடன் உரசும் மரங்கள், தொங்கி விழும் கொடி போன்ற கிளைகள் உள்ள மரங்கள், மஞ்சள் பூக்களை கொட்டும் மரங்கள், பச்சை, மஞ்சள் மூங்கில்கள், வரிசையாக நிற்கும் கற்றாழைகள் என்று இன்றும் அதே அழகுடன் இருந்தது அந்த இடம். அங்கிருந்து அடுத்ததாக பின்னவல யானைகள் சரணாலயம் நோக்கிப் புறப்பட்டோம். இங்கு தான் ஆயுர்வேத தோட்டங்களும் இருக்கின்றன. பிரதான வீதியிலிருந்து பின்னவல சரணாலயத்திற்கு போகும் பாதையெங்கும் யானையில் ஏறுங்கள், யானையில் உலாவுங்கள், யானைக்கு உண்ணக் கொடுங்கள் என்ற அறிவிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. சாரதியும் எங்களிடம் இதைப் பற்றி முன்னரேயே கேட்டு, நாங்களும் அதற்கு சம்மதித்திருந்தோம். அவர் இப்படியான ஒரு இடத்தில் நிற்பாட்டினார். இறங்கி ஓடினார். பின்னர் வந்தவர், இங்கு யானைகளில் ஏறலாம் என்றார். அவரை நாங்கள் ஓட விட்டிருக்கக் கூடாது. நானே இறங்கிப் போய் கதைத்திருக்க வேண்டும். ஒருவருக்கு ஐயாயிரம் ரூபாய்கள் என்றனர். நான்கு யானைகள் அங்கிருந்த சிறிய கட்டிடத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஓடையில் படுத்திருந்தன. நான்கிற்கும் நாலு பெயர்கள் சொன்னார்கள். குமாரி என்ற ஒரு பெயர் மட்டும் தான் நினைவில் இருக்கின்றது. பிள்ளைகளும், அவர்களும் சேர்ந்து ஒரு யானையை ஒரு மாதிரியாக நித்திரையிலிருந்து எழுப்பினார்கள். 'இது என்ன தொல்லை......' என்பது போல அது அசைந்தது. யானை எப்படி ஆட்களை அடிக்கும், யானை தூக்கி எறிந்தால் எப்படி எங்கள் எலும்புகள் முறியும் என்று முல்லைத்தீவில் பெரிய தோட்டங்கள் செய்யும் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் எனக்கு விளங்கப்படுத்தியிருந்தார். யானை துரத்தினால் ஓடித் தப்ப முடியுமா என்று அவரிடம் கேட்டும் இருந்தேன். கஷ்டம் என்று ஒரு சொல்லில் பதில் சொல்லியிருந்தார். யானை முதுகில் ஏற்றி வைத்து, அந்த ஓடையில் ஓடிக் கொண்டிருந்த சுத்த அழுக்கு நீரை தன் தும்பிக்கையால் அள்ளி, சோவென்று வாரி எங்கள் மீது இறைத்தது. யானைப் பாகன் போதும், போதும் என்று சொன்ன பின்பும், யானைகள் நிற்பாட்டவில்லை. 'இனிமேல் எங்கள் மேல ஏறுவீர்களா..........' என்று அவை கேட்டன போல. பின்னர் அந்த ஓடையில் யானைகள் நடந்தன. பின்னர் யானைக்கு நாங்கள் சாப்பாடு கொடுத்தோம். இரண்டு யானைப் பாகர்களும் தங்களுக்கும் ஏதாவது தரும்படி கேட்டார்கள். அதையும் கொடுத்தோம். முழுவதும் நனைந்து, களைத்தும் விட்டோம். அங்கேயே உடுப்புகளை மாற்றிக் கொண்டோம். சாரதி அடுத்தது ஆயுர்வேத தோட்டம் என்றார். தோட்டமும் வேண்டாம், மருந்தும் வேண்டாம், நேரே கொழும்புக்கு போங்கள் என்றோம். தோட்டத்திற்கு போவது இலவசம் என்றார். நீங்களே எங்களுக்கு காசு கொடுத்தாலும், எங்களால் இதுக்கு மேல் முடியாது என்றோம். 'அப்ப பின்னவல சரணாலயம்.......' என்று இழுத்தார் சாரதி. பின்னல் திரும்பிப் பார்த்தேன். யாராவது தங்களைக் காப்பாற்ற மாட்டார்களோ என்பது போல இரு பிள்ளைகளும் பின்னால் ஒரு இலக்கில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒன்றும் வேண்டாம், கொழும்பிற்கே போவம் என்று அங்கிருந்து கிளம்பினோம். (தொடரும்...........)
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தெரிவு!
இவர்களும் இருக்கின்றார்கள் என்ற விசயம் மறந்தே போய் இருந்தது...........இனிமேல் கொஞ்ச நாளைக்கு ஞாபகம் இருக்கும்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
🤣........... சித்திரை, வைகாசியில் அம்மன் கோவில் போகாமல், வெசாக் பார்க்கப் போனால், இப்படித்தான் கூகைக்கட்டு வரும்.......😀.