ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by ரசோதரன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவர் நிறைய ஆட்களை கொலை செய்திருக்கின்றார், அதில் சில ஆட்களை மட்டுமே, சில உடல் பாகங்களை, அவர் சாப்பிட்டதாக சொல்கின்றார்கள்...........🫣 அந்த நாட்களில் தினமுரசில் ஒரு தொடர் வந்தது என்று நினைக்கின்றேன். கார்லோஸ், பூலான் தேவி, இடி அமீன் என்று தினமுரசு ஒரு 'மார்க்கமான' தொடர்களாவே அன்று விட்டுக் கொண்டிருந்தது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இப்பதான் ஞாபகம் வருகுது, இவை இரண்டும் முந்தி விளையாடி அணிகள் என்று. அதிலும் ஸிம்பாப்வே ஒரு பெரிய அணியாக இருந்தது. அப்ப என்னுடைய உகண்டா லேசுப்பட்ட ஒரு அணியில்லை........மலைகளை செதுக்கி விழுத்தி விட்டுத்தான் உள்ளே வந்திருக்கினம்........ உகண்டா தான் நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த Giant Killer அணியோ..........😜
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍........ நீங்கள் தரவுகளையும், செய்திகளையும் விரல் நுனியில் வைத்திருக்கின்றீர்கள்.........👍 உகண்டாவா அல்லது பபுவா நியூகினியா, எதைத் தேர்ந்தெடுப்பது என்று எனக்கு ஒரே குழப்பம். முதலாவதாக, இவை இரண்டு பேரும் கிரிக்கெட் விளையாடுகின்றார்கள் என்பதே அன்று தான் தெரிந்தது. இந்த இரண்டு நாடுகளில் இருந்தும் இடி அமீனை மட்டும் தான் எனக்குத் தெரியும் என்பதால், உகண்டா என்று போட்டேன் என் தெரிவை........... இப்ப இடி அமீனின் ஆவி தான் வந்து என்னை காப்பாற்ற வேண்டும் போல.....🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பையன் சார் முற்பிறவியில் நாமக்கல் பக்கம் பிறந்திருக்க வேண்டும், முட்டை முட்டையா அள்ளிக் கொடுக்கின்றார்..............🤣. இது எல்லாம் சும்மா ஒரு பகிடிக்குத் தான், பையன் சார். கிரிக்கெட்டில் லீக்குகளில் நிறைய சம்பாதிக்கலாம் இந்த நாட்களில், நீங்கள் சொல்வது போலவே. 🤣..... இதே மாதிரி தான், சில காலத்தின் முன், மல்யுத்தம், வில்யுத்தம் என்று எந்தப் போட்டிகளுக்கும் எந்த நாட்டுக்கு போனாலும், வீரர்களும் திரும்பி வரவில்லை, கூடப் போனவர்களும் திரும்பி வரவில்லை என்று தேடிக் கொண்டிருந்தனர்.........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣........ இந்த சந்தேகம் ஆரம்பத்திலிருந்தே இருக்குது. அதனால் தான் நான்கு போட்டிகளையும் நாலு இடங்களில் வைத்து இலங்கை அணியை சுற்ற விடுகின்றார்கள்.....ஒரே இடத்தில் இருந்தால் ஓடிப் போய் விடுவார்கள் என்று.......😀. ஆரம்பத்தில் ஒரு மீம்ஸ் கூட வந்திருந்தது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍.... உண்மை தான், முன்னரேயே ஏதாவது கழிவு விலையில் குறைவாக வாங்கியவர்கள் இப்பொழுது அதை சந்தையில் அதிக விலைக்கு போட்டிருப்பார்கள். Stubhub போன்ற நம்பிக்கையான தளங்களில் இன்னமும் சில டிக்கெட்டுகள் கிடைக்கின்றன, ஆனால் நாள் போகப் போக விலை மேலே மேலே போகும். இதே மாட்ச் Dallas அல்லது San Francisco பகுதிகளில் நடப்பதாக இருந்தால், இப்பொழுது டிக்கெட்டுகள் கிடைக்கவே கிடைக்காது, விலையும் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். இந்தியர்களின் நகரங்கள் இந்த இரண்டும்.
-
தோழர் இரும்பு
இப்படியான ஏதோ ஒரு காரணத்தை, ஒரு விடயத்தை வைத்து சில மனிதர்களை சட்டென்று பிடித்து விடுகின்றது........கொள்கைகள் உருகி ஓடி விடுகின்றன போலும் அந்தக் கணங்களில்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆகக்குறைந்ததே, ஒரு இருக்கை, 800 அமெரிக்கன் டாலர்கள் அளவில் வருகின்றது.... https://www.stubhub.com/icc-men-s-t20-world-cup-new-york-tickets-6-9-2024/event/152953815/?quantity=1 இதில் இருக்கும் விலையுடன் வேறு கட்டணங்களும் பின்னர் சேர்க்கப்படும்......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நேர வித்தியாசம்........😗 எங்கள் நேரப்படி இன்று பின்னேரம் இரண்டு, நாளை காலை ஒன்று, நாளை மதியம் ஒன்று. இங்கே அமெரிக்காவில் ஒரு மாட்சை பார்க்கிறதிற்கே மைதானத்தில் ஆட்கள் இல்லை, தொலைக்காட்சி ரேட்டிங்கும் படு மோசமாகவே இருக்கும். பேஸ்பால் மாட்சுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. கிரிக்கட் மாட்சுகளுக்கு டிக்கட் விலை வேற எக்கச்சக்கம்...........
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
ஆரம்பத்தில் பிஜேபி பணிந்து போய், பின்னர் தேவையானவர்களை உள்ளே இழுத்து எடுக்கக்கூடும். அமித்ஷாவை மற்றவர்கள் வேண்டாம் என்றாலும், ஜே பி நட்டா, Manohar Parrikar என்று அவருக்கு ஈடானவர்கள் பிஜேபியில் இருக்கின்றார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍....... உண்மை தான், சின்ன அணிகள் பெரிய அணிகளை எப்பவாவது அரிதாக வெல்லும். இந்தப் போட்டிகளிலும் அப்படி ஒன்றோ அல்லது இரண்டு நடக்கும்....... அயர்லாந்தின் பந்து வீச்சும், இந்த பந்து வீச்சிற்கு சாதகமான பிட்சில் கூட, சோபிக்கவில்லை......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தியா இலகுவாக அடித்துக் கொண்டிருக்கின்றது......... 11 ஓவர்களில் 85 ஓட்டங்களை இலகுவாக எடுத்து விட்டனர்.....அயர்லாந்தை Giant Killer என்று விளம்பரப்படுத்தினார்கள்.....
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
👍...... அமித்ஷா உள்துறை அமைச்சராகக் கூடாது என்று சந்திரபாபு நாயுடு ஒரு கோரிக்கை வைத்ததாக சொல்கின்றனர்........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த பிட்சில் ஒரு 120 நல்ல ஸ்கோர் போலத் தெரியுது............
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
சசிகலா இனிமேலும் பொறுமையாக இருக்க முடியாதென்று ஒரு அழைப்பு விடுத்திருக்கின்றார், எல்லோரும் அஇஅதிமுக இல் வந்து ஒன்றாகச் சேரும் படி, எம் ஜி ஆர் & ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று...........உடனே எல்லோரும் வந்து சேர்ந்து விட்டனர்......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உகண்டா இருக்கிறதால் இலங்கை தப்பியிருக்கின்றது.............யார் குறைவாக அடித்தார்கள் என்ற கணக்கு வழக்கில்..........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பின்னால் வந்த துடுப்பாட்டக்காரர்கள் விக்கட்டிலிருந்து தள்ளி ஒரு பக்கமாக கொஞ்சம் வெளியிலேயே நிற்கின்றார்கள். பந்தை நேரா நடு விக்கட்டுக்கு போடுங்கோ, ஆளை விடுங்கோ என்று பந்து வீச்சாளர்களுக்கு சொல்லாமல் சொல்லியினம் போல........🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍.... பாகிஸ்தான் அணியிடம் படு பயங்கர ஃபாஸ்ட்டில் மூன்று வீரர்கள் இருக்கிறார்களாமே......ஒன்று இரண்டு உயிர்கள் போகப் போகுது இந்த பிட்சில்..............
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣........ பந்து கண்டபடி எகிறுது.....இடுப்பு எலும்புகளை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கின்றார்கள்...
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அயர்லாந்து வீரர்கள் இந்திய பந்து வீச்சாளர்கள் ஐவருக்கும் தலா இரண்டு விக்கட்டுகளை கொடுப்பதாக கூடித் தீர்மானித்தது போல விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்...........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍......... 27 இல் 9 அகலமான பந்துகள்........🤣 இரண்டோ மூன்று பிட்சுகளை நடுவில் செய்திருக்கின்றார்கள் போல. இன்றைக்கு அடுத்ததில் விளையாடுகின்றார்கள் என்று நினைக்கின்றேன். பழைய மாட்சை போய் பார்த்தால் தெரிந்து விடும், ஆனால் இப்ப முக்கியமான விசயம் மூன்றாவது விக்கட்டும் விழுந்திட்டுது என்பதே.......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍..... இன்றைக்கு பிட்ச் வேறு என்று சொல்கின்றார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நல்ல தெரிவு போல் தெரியுது........ 3 ஓவரில் 9/2
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣.......... கரெக்டா சொல்லியிருங்கீங்க.........எப்ப பார் இந்த சர்வதேசத்திற்கு இலங்கைக்கு எதிராக சதி செய்வதே ஒரு வேலையா போய்ச்சுது.......
-
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
நீங்கள் கொஞ்சம் தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள் போல உள்ளது, நெடுக்காலபோவான். அவர்களை நினைத்து நான் சலிப்படையவில்லை. உண்மையிலேயே அவர்கள் எனது மாமனும், மச்சானும், அண்ணனும், தம்பியும், அக்காவும், தங்கையும் தான். நான் சலிப்படைவது 'இருக்கின்றார்கள்.......இருக்கின்றார்கள்......' என்று யூட்யூப் துண்டுகளை விடுபவர்களையே.