ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: பெல்ஜியம் ரஷ்யாவின் மிகவும் மதிப்புமிக்க சொத்தாக மாறியது எப்படி
Everything posted by ரசோதரன்
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
ஏழைகளின் டெஸ்லாவே இந்த விலையா இலங்கையில்.............. இங்கு அமெரிக்காவில் நான் பார்க்கவில்லை, ஆனால் எங்கேயாவது இருக்கலாம்....
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அப்படி நடந்தால், அப்படியே முக்காடு போட்டுக் கொண்டே, 'எட்டு நாடும் என் நாடே...... எல்லா நட்பும் என் நட்பே.........' என்று சமரசம் உலாவும் இடமாக மாறிவிடுவேன்.....................🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
🤣................ என்னுடைய இறுதி இலக்கு தான் எல்லோருடைய இறுதி இலக்குகளாகவும் இருக்கின்றது.........🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்றைய முதல்வரை நாளைக்கு கவிழ்த்து, அல்வாயனை புது முதல்வர் ஆக்குகின்றோம்.......
-
பெரியார் தொண்டர்
👍......... மேலும் மேலும் அதிகமாக வாசிப்பதும், எங்களை நாங்களே கேள்விக்குள்ளாக்குவதும், இப்படியான ஒரு புரிதலை, வாழ்வை அடையவே. எவ்வளவு தூரம் இந்தப் பாதையில் போக இயலும் என்று தெரியவில்லை, ஆனால் ஆரம்பித்ததில் இருந்து பார்த்தால், ஏராளமான தூரத்தை கடந்து வந்து விட்டது தெரிகின்றது. சுற்றி வர எதுவும் மாறாவிட்டாலும் கூட, அப்படியே தேங்கிய குட்டையாக அது நின்றாலும் கூட, அதிலிருந்து எங்களால் ஓரளவாவது வெளியேற முடிந்தது என்பதே ஒரு வாழ்நாள் சாதனை..............
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஒரு கதைக்கு இல்லை பையன் சார்................ இனி வர இருக்கும் பல போட்டிகளில் இப்படித்தான் நடக்கப் போகுது.............😜.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அதுவே தான் காரணம் என்றும் இருந்தது.............. ஒதுங்கி வாழப் போகின்றார்கள் என்று. இரண்டாவது குழந்தை லண்டனில் தான் பிறந்தது என்றும் இருந்தது.......
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
300 வீதம் என்பது சரியாகத்தான் இருக்கும், ஏராளன். இது மிக அதிகம்.......🫢.
-
பெரியார் தொண்டர்
👍................ சரியாகவே சொல்லியிருக்கின்றார்.......... ஊருக்கு மட்டுமே உபதேசம்....., ஆடுகள் நனைகின்றன..... என்ற இரண்டையும் சேர்த்து, பெரியார் பெயரில் வலம் வரும் போலி சமூகச் சிந்தனையாளர்களின் தலைகளில் குட்டு வைத்திருக்கின்றார்..... நிஜமான சமூகச் சிந்தனையாளர்களை மறைமுகமாக பாராட்டியும் இருக்கின்றார்....... எந்த விடயத்திலும் போலிகளை அடையாளம் கண்டு, அவர்களை விலக்குவது என்பதே ஒரு தொடர் போராட்டம் தான்............
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கோலி இந்தியாவில் இருந்து இங்கிலாத்துக்கு நிரந்தரமாக குடிபெயர்கின்றார் என்ற ஒரு செய்தியைப் பார்த்தேன். அதனால், அவருக்கு எவ்வளவு வேலைகளும், யோசனைகளும் இருக்கும்..... இந்த நேரத்தில் அவரை மைதானத்தில் ஒரு மணித்தியாலம் நில் என்று கேட்பது அவ்வளவு சரியில்லை.....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கோலி சரியாகத்தானே விளையாடுகின்றார்.................🤣.
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
எக்கச்சக்கமான விலையாகவே இருக்குது......... வரி நூறு வீதம் போட்டிருப்பார்கள் போல...... இவை எல்லாம் ஆடம்பர வாகனங்கள். அடிப்படை வாகனங்கள் மலிவாக வரும் போல.........
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
🤣.............. ருத்ர தாண்டவம் என்று சொல்லி விட்டு, கமல் கிணத்துக்கு மேல நின்று ஆடின மாதிரி ஆடக்கூடிய அணி இந்திய அணி என்று வல்லுநர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.........😜.
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
இது தான் அது, அண்ணா................... சைனாவின் வாகனங்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
விரைவில் தேறிவிடுவீர்கள், வசீ............. பாகிஸ்தான் தோற்றவுடன் எனக்கு மனம் சரியில்லாமால் இருந்தது, பின்னர் நேற்று இந்தியாவின் விளையாட்டைப் பார்த்த பின், இப்பொழுது உற்சாகம் கரைபுரண்டு ஓடுகின்றது...........🤣.
-
நியாயத்தின் சாம்பல்
❤️............... இது என்ன ஒரு எழுத்து, வில்லவன்...................👏. நீங்கள் முன்னர் எழுதிய சில குறிப்புகளிலிருந்து நீங்கள் மிகவும் அனுபவம் மிக்கவர் என்று நான் நினைத்திருந்தேன்.........👍. வாசிக்கும் போதே கிறுகிறுவென்று தலை போனது. தொடர்ந்து இன்னும் அதிகமாக எழுதுங்கள்.....❤️.
-
கைவிலங்குகள்
🤣............... அந்த இருவரும் யாராகவும் இருந்து விட்டுப் போகட்டும். நீங்கள் விரும்பினால் இதற்கும் இன்னொரு -1 போடலாம்...................😜.
-
கைவிலங்குகள்
உண்மை தான் அண்ணா....... பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு குரலாக இது இருந்து விட்டுப் போகட்டும் என்ற ஆதங்கத்தில் இதை எழுதினேன். ஒருவருடன் போராடிய அந்த தேசம் இப்பொழுது இருவருடன் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றது......
-
கைவிலங்குகள்
உலகில் அடக்குமுறைகளுக்கு எதிராக, சுரண்டல்களுக்கு எதிராக விடுதலை வேண்டி போராடும் மக்களுக்கு எந்த ஆதிக்கவாதிகளிடமிருந்து உண்மையான ஆதரவு கிடைப்பதில்லை. போராடும் மக்களிடமிருந்தே எதையாவது பறித்து எடுக்கலாம் என்ற சுயநலன்களே ஆதரவு என்று வரும் ஆதிக்கவாதிகளின் உள்நோக்கமாக இருக்கும். கைகள் விலங்குகளால் கட்டப்பட்டிருப்பவர்கள் மட்டுமே ஒருவருக்கு ஒருவர் இதயசுத்தியுடன் கூடிய ஆதரவைக் காட்டமுடியும். என்னுடையது போராட்டம், உன்னுடையது கோமாளித்தனம் என்று அவர்களில் ஒருவர் இன்னொருவரை ஏளனம் செய்தால், ஏளனம் செய்யும் அந்த ஒருவரின் போராட்டமே போலியாகி, அர்த்தம் இழந்து விடுகின்றதல்லவா. ***************************************** கைவிலங்குகள் ------------------------- என் மண்ணிற்காக என் விலங்கை உடைக்க என் காற்றை சுவாசிக்க எந்த மன்னனுக்கும் எதிராக என் வாளை நான் உயர்த்துகின்றேன் புனிதம் கலந்தது என் யுத்தம் வீரம் செறிந்தது என் வரலாறு பெருமை கொண்டது என் இனம் நீ எதற்காக நிமிர்ந்து நிற்கின்றாய் உன் வாள்கள் ஏன் உயருகின்றன உன்னை அடக்க வருபவர்களுடன் உன்னால் சேர்ந்து வாழ முடியாதா அவர்கள் கேட்பதைக் கொடுத்து அவர்கள் கொடுப்பதை அடங்கி ஏற்று அந்த ஆட்சியின் கீழ் இருக்க முடியாதா நீ ஒரு கோமாளி உன் குரல் ஒரு ஈனஸ்வரம் உன் நியாயங்கள் எனக்கு சிரிப்புகள் உன் மக்களுக்கு ஏன் வேண்டும் உரிமைகளும் தெரிவுகளும் இப்படிக் கேட்பவர்கள் அவர்கள் எதற்காக யாரை எதிர்த்து போராடினார்கள்?
- கைவிலங்குகள்.jpg
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
'Long Live the King.......................' என்று நாளைக்கு கீழே எழுதுவம்....................🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
காவாஸ்கரின் கொடுமையை எங்கே போய் சொல்வது.................... அதுக்கு எதிராக எல்லாத்தையும் அடிக்கிறேன் என்று ஶ்ரீகாந்த் இன்னொரு கொடுமை...... இங்கிலாந்து மைதானங்களை ஸ்போர்ட்ஸ் ஸ்டாரில் பார்த்தது மட்டுமே, அழகோ அழகு தான்....... கண்டியில் ஒரு டெஸ்ட் மாட்ச் பார்த்திருக்கின்றேன்..... அதுவும் அருமையாகவே இருந்தது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்றைய முதல்வர் மீது நாளைக்கு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதாக இருக்கின்றோம்....................🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வசீ இந்த மூன்று பேரையும் - ரோகித், கோலி, ஹில் - இந்தியாவின் 'ஹாண்ட் பிரேக்ஸ்' என்று பகிடியாக சொல்லித்தான் எனக்கு இவரைத் தெரியும்........... மற்ற இருவரும் டி-20 இல் நியூயோர்க் பிட்சில் பிரேக் போடும் போது தெரிய வந்திருந்தார்கள்............🤣. இந்தியாவிற்கு ஏற்ற சூழல் போல உள்ளது....................... அங்கே போட்டிகள் எப்படிப் போனாலும், இங்கு கலகலப்பாக வைத்திருப்போம்..........👍.
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
ஆணவம் இல்லாத மனிதர்கள் யார். அதுவே சிலருக்கு அதிகமான உயர்வு அல்லது தாழ்வு மனப்பான்மையாக மாறியும் விடுகின்றது. 'என்னுடைய ஒப்பந்தத்தில் நீ கையெழுத்து இடமாட்டாயோ.........' என்பதே இப்படி மாறி நிற்கின்றது. உக்ரேனை முழுதாகவே கொள்ளை அடிப்பதற்கு ஒரு ஒப்பந்தம் எழுதும் அமெரிக்கா, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் உக்ரேன் என்றொரு நாடே இருக்காது என்ற எச்சரிக்கை. கனடாவிற்கு எச்சரிக்கை, பனாமாவிற்கு எச்சரிக்கை, மெக்சிகோவிற்கு எச்சரிக்கை....... முழு ஐரோப்பாவிற்கும் எச்சரிக்கை. உள்நாட்டு கணக்கு வழக்கை சரிசெய்ய, முழு உலகையுமே அடித்துப் பறிக்க வேண்டுமா...... இது தான் எல்லோரும் எதிர்க்க வேண்டிய ஏகாதிபத்தியம். இன்றும் கூட இலங்கைக்கு எதிராக ஐநாவில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தால், அந்த தீர்மானத்திற்கு எதிராக அதாவது இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் ஒரு நாடு ரஷ்யா, வாக்களிப்பில் இருந்து விலகி இருக்கும் அல்லது தீர்மானத்திகு ஆதரவாக வாக்களிக்கும் நாடு உக்ரேன். இலங்கைக்கு அதிக ஆயுதங்களை விற்பனை செய்த நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. இதில் உக்ரேன் தான் எங்களுக்கு அழிவு செய்தது, ரஷ்யா எங்களைக் காப்பற்றியது என்ற ஈழத்தமிழர்களின் நிலைப்பாடும், அதனால் உக்ரேன் அழிந்து போகட்டும் என்றும் நினைப்பது எங்களை கண்களை எங்கள் விரல்களாலேயே நாங்கள் குத்துவது போல. ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளில் 2/3 பங்கு ஐரோப்பா வங்கிகளின் பொறுப்பிலேயே இருக்கின்றது. மிகுதி தான் அமெரிக்காவின் வசம் இருக்கின்றது. ரஷ்யாவின் மிகப் பெரிய வியாபார பங்குதாரர் ஐரோப்பாவே, அமெரிக்கா அல்ல. இன்று பலவீனப்பட்டிருக்கும் ரஷ்யாவால் ஐரோப்பாவிற்கு எதிராக இன்னொரு யுத்தத்தை நடத்தவே முடியாது. ஆகவே, முழு ஐரோப்பாவும் ஒன்றிணைந்து, அமெரிக்காவைத் தவிர்த்து விட்டு, உக்ரேனிய மக்களுக்காக ஓரணியில் நிற்கவேண்டும்.