Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. சரத்தின் தற்போதைய வாக்கு வீதம் 0.13............... இவர் சீலரத்ன தேரரின் அருகேயே நிற்கின்றார் வாக்கு வீதத்தில்.............😜. தமிழரை எதிர்த்து பேசினாலே போதும், சிங்கள மக்கள் வாக்குப் போட்டு விட்டு விடுவார்கள் என்ற நிலை இந்த தேர்தலில் மாறியது நல்ல ஒரு விடயமே.........
  2. உண்மை, சிறி அண்ணா. ஆனால் அவர்களுக்கு இப்ப விழுந்து கொண்டிருப்பது ஒரு மரண அடி. தெற்கிலிருந்து - அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி - வரும் முடிவுகள் அப்படியே ராஜபக்சாக்களிடமிருந்து 180 பாகையில் திரும்பி அநுரவின் பக்கம் போயுள்ளது.
  3. தான் வென்றால் பாராளுமன்றத்தை கலைக்கப் போவதாக அநுர முன்னரேயே சொல்லியிருந்தார். இடைக்கால அமைச்சரவையில் திறமை வாய்ந்தவர்கள் எல்லா சமூகங்களிலிருந்தும் உள்வாங்கப்படுவார்கள் என்றும் சொல்லியிருந்தார். ஆனால் புதிய யாப்பு ஒன்றுக்கு பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மை தேவை. அதைப் பெற்றுக் கொள்வது மிகக் கடினம்.
  4. நாமல் மிக நிதானமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றார்............... 2.2% இலிருந்து 2.9% இற்கு வந்துள்ளார்.........
  5. அநுரவிற்கு இவர்கள் எவரும் தேவையில்லை, இவர்கள் எவரையும் கிட்ட நெருங்க விடாமல் இருந்தால் இன்னும் அதிக தமிழ் வாக்குகள் இவருக்கு அடுத்த தடவை கிடைக்கும்........👍. ரணிலையும், ஏனைய சிங்கள தலைவர்களையும் தமிழர்கள் வெறுப்பது புரிந்து கொள்ளப்படக்கூடியதே. ஆனால் ரணிலை ஏன் சிங்கள் மக்கள் இந்த அளவிற்கு வெறுக்கின்றனர்.......... போன தடவை தேர்தலில் அவரின் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இந்த தடவை அவர் தான் நாட்டையே மீட்டெடுத்தார் என்ற பிரச்சாரம் கூட, மற்றும் அதில் ஓரளவு உண்மையும் உண்டு, அவரின் நிலையை கொஞ்சம் கூட சிங்கள மக்கள் மத்தியில் மாற்றவில்லை.......
  6. யாழ் மாவட்டத்தில் இதுவரை மூன்று முடிவுகள் வந்துள்ளன: தபால் வாக்குகள் - செல்லுபடியானவை 24061 நல்லூர் தேர்தல் தொகுதி - 31526 யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி - 24786
  7. பெலியட்ட தேர்தல் தொகுதியில் ரணிலுக்கும், நாமலுக்கும் கடும் போட்டி நடந்துள்ளது. ரணிலுக்கு 5460 வாக்குகள், நாமலுக்கு 5385 வாக்குகள்.......... அநுரவும் (34321), சஜித்தும் (16820) நல்லா முன்னால் எப்பவோ ஓடிவிட்டார்கள்........... ரணில் தான் இந்த நாட்டைக் காப்பாற்றின டாக்குத்தர் என்று ஆஸ்பத்திரி - நோயாளி உதாரணம் சொல்லிக் கொண்டிருந்தனர் ரணிலின் ஆதரவாளர்கள். இப்ப உடனடியாக ரணிலுக்கு நல்ல ஒரு டாக்குத்தரை தேட வேண்டிய நிலை வந்திட்டுதே..........
  8. நாமலுக்கு போட்டிருக்கிற இந்தப் படத்தை பார்த்தால், அவருக்கு முதலே இந்த முடிவுகள் எல்லாம் தெள்ளத் தெளிவாக தெரிந்திருக்கிறது போல எனக்குத் தெரிகின்றது.............😜.
  9. எல்லா விளையாட்டும் முடிஞ்சுது போல, அண்ணை........... நரி பரி எல்லாம் எங்கேயாவது ஓடித் தப்பினால் உண்டு. அநுரவிற்கு ஆலோசகர்களும் தேவையில்லை........... ஜி எல் பீரிஸ் என்ன செய்வாரோ............
  10. அம்பலாங்கொடவும் இப்படித்தான் வந்திருக்கின்றது........... இதுக்கு மேலயும் என்னத்தை எண்ணுறது... இங்கே சின்னப் பிள்ளைகள் விளையாடும் லீக்கில் ஒரு அணி இன்னொரு அணிக்கு ஐந்து கோல்கள் இடைவெளிக்கு கூட அடிக்கக் கூடாது என்ற ஒரு விதிமுறை இருக்குது (Mercy Rule).......... அநுர செய்யிறது கொஞ்சம் கூட சரியே இல்லை.............🤣.
  11. மொத்தமாகக் கூட்டினால் 0.25%........... இங்கு கடனுக்கான வட்டி விகிதத்தில் சில வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் கழிவும் இதே அளவே...........🤣.
  12. சீலரத்ன தேரர் வேட்புமனு தாக்கல் செய்ய கட்டுப்பணத்தை மறந்து போன அந்த நாளிலிருந்து நம்மாள் ஆகிவிட்டார்........... 🤣. கட்டிய ஐம்பதினாயிரம் ரூபாய்க்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐந்தோ பத்தோ என்று வாக்குகள் கிடைக்குது........... 28 தான் தேரரின் highest score ஆக வரும் போல................
  13. பழைய யூஎன்பி கட்சிக்காரர்கள் இரண்டாகப் பிரிந்து ரணிலுக்கும், சஜித்திற்கும் வாக்களித்திருக்கின்றார்கள்; மிகுதி நாடு முழுவதும் அநுரவிற்கு வாக்களித்தது போலவும் இருக்கின்றது, இதுவரை எண்ணிய வாக்குகளின் படி.............. 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு..........' என்ற வாசகத்தை தூசு தட்டி ரெடியாக வைத்துக் கொள்ள வேண்டியது தான்............😜.
  14. 63 வாக்குகள் கிடைத்திருக்கின்றது, சங்கு சின்னத்திற்கு கொழும்பு தபால் வாக்குகளில்........... Colombo District Postal Vote Name of Candidate Party Abbreviation Votes Received Percentage ANURA KUMARA DISSANAYAKE NPP 20,864 61.02% RANIL WICKREMESINGHE IND16 7,645 22.36% SAJITH PREMADASA SJB 4,080 11.93% NAMAL RAJAPAKSA SLPP 561 1.64% DILITH JAYAWEERA SLCP 552 1.61% WIJEYADASA RAJAPAKSHE JPF 73 0.21% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 63 0.18%
  15. அநுரவைப் பார்த்தால் நடிகர் விஜய் மாதிரி தெரியுது. அதனால் சனம் அவரைப் பார்க்கப் போகுது, மற்றபடி சனம் அவருக்கு வாக்குகள் எல்லாம் போடமாட்டார்கள் என்று நிலாம்டீன் சொல்லியிருந்தார்.......... இப்ப தமிழர் விளையாட்டுக் கழகம் நடத்தும் விஜய்யின் அரசியல் மார்க்கெட்டும் எகிறப் போகுதே.........
  16. நேரடி எண்ணிக்கையின் போது, ஹார்ட் அட்டாக் என்று சொல்ல வாறியளோ, அண்ணை.............😜.
  17. வன்னி தபால் வாக்காளர்கள் ஒரு சரியான விகிதத்தில் வாக்களித்திருக்கின்றார்கள், இது தான் கரெக்டான மிக்ஸ்......... ஆனால் சிங்கள தபால் வாக்காளர்கள் செய்திருக்கின்ற வேலை சரியேயில்லை........🤣.
  18. ஏதோ கூட்டத்தில் இரண்டு மூன்று பேர்கள் கல்லால் எறிந்தார்கள் போல என்றிருக்க, அந்த ஊரில் ஒரு இரண்டு மூன்று பேர்களைத் தவிர மற்ற எல்லாரும் இவர்களைக் கல்லால் எறிந்திருக்கின்றார்கள் போல.......
  19. அம்பாந்தோட்டையிலே இது தான் நிலைமையா............... எல்லாரும் குடும்பமாக வந்து சேருங்கோ அமெரிக்காவிற்கு........
  20. வடக்கு கிழக்கைச் சேர்ந்த பலர் அந்தப் பகுதியில் அரச உத்தியோகத்தர்களாக இருக்க வேண்டும், விசுகு ஐயா. ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றோர். அவர்களில் பலர் தபால் மூலமே வாக்களித்திருப்பார்கள். மற்ற நாமல் ராஜபக்சவிற்கு (Namal Rajapaksha; பெயரில் ஒரு h அதிகமாக இருக்கின்றது....😜) 67 வாக்குகள் கிடைத்திருக்கின்றது.......... ஐந்து ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் நின்றது போல, இங்கே இரண்டு நாமல்கள்.........
  21. 👍.... வந்தவை பலதும் வதந்திகளே.... தபால் வாக்குகள் இந்த பெரும் எண்ணிக்கையில் வரப் போவதில்லை.....
  22. குருநாகலில் 40000 தபால் வாக்குகள் அநுரவிற்கு என்று ஒரு செய்தி....அந்த மாவட்டமே அரச ஊழியர்களோ.....🤣.
  23. அரச ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பது அதிகம்..... ரணில் மாத்தையாவே அவர்களின் விருப்பமாக இருக்கும்...... சம்பளம் கூடுதல்லே.....
  24. இலங்கை சுதந்திரம் அடைந்த பின் சிங்கள இனவாதம் என்று நொந்து போயிருக்கின்றோம் அல்லவா அண்ணை, ஆனால் அதைவிட பலமடங்கு காட்டுவார்கள் இவர்கள்...... கோதபாய ஒரு ஆர்கானிக் தோட்ட முயற்சிலேயே நாட்டைக் கவிழ்த்தார். இவர்களிடமிருந்து பல ஆர்கானிக் முன்னெடுப்புகளை நாங்கள் எதிர்பார்க்கலாம்...........🫢.
  25. ஏராளன், உங்களின் நேரம் நடுச்சாமத்திலிருந்து ஆரம்பிக்குதாம் பேதிக்கான குளிசை எடுத்தல்..............🤣. நடுராத்திரிலியிருந்து முடிவுகள் வர ஆரம்பிக்கும் என்று தேர்தல் திணைக்களம் சொல்லியிருக்கின்றது. 👍............... சோழருக்கு எங்கும் ஒற்றர்கள் உள்ளார்கள் போல...............🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.