Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. 👍........ நீங்கள் சொன்ன காரணத்துடன், பல்வேறு மக்களையும் உள்வாங்கும் இயல்பு, தனிநபர் சுதந்திரம், பொறுப்புக்கூறல், வலிமையான/சுதந்திரமான நான்கு தூண்கள், குறுகிய மற்றும் நீண்டகால திட்டமிடல் என்று வேறு சில இயல்புகளும் இருக்கவேண்டும் போல.........
  2. இவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் விஜிதா ஹேரத் இன்று சொல்லியிருப்பது இது. இலங்கை அரசமைப்பின் 9வது சரத்தில் (Article 9) தாங்கள் எந்த மாற்றமும் கொண்டு வர மாட்டோம் என்று. இந்த சரத்தில் நாட்டில் பௌத்த மதத்திற்கு மிக உயர்ந்த இடம் அளிக்கப்படுவது உறுதி செய்ய்ப்பட்டுள்ளது. அத்துடன் காணி, போலீஸ் அதிகாரங்கள் மாகாணசபைக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் இவர் சொலியிருக்கின்றார். நாமல் சொல்வதைத்தான் இவர்களும் சொல்கின்றனர். நாமல் சிவப்புக் கலர் கலந்த துண்டு போடுவார், இவர்கள் அந்தக் கலரில் சட்டை போடுவார்கள். மற்றபடி கார்ல் மார்க்ஸ் எப்போதோ காணாமல் போய்விட்டார்........... https://www.dailymirror.lk/breaking-news/Will-uphold-Article-9-of-Constitution-NPP-assures-ACBC/108-291848
  3. எவராவது அங்கே பிரேக் டைமில் அப்படிச் செய்யலாம், இப்படிச் செய்யலாம் என்று நம்பி உள்ளே போனீர்கள் என்றால், இந்தியாவில் இருந்து அங்கு வேலைக்குப் போனவர்களுக்கு நடந்தது தெரியும் தானே.........🤣.
  4. வசீ அமெரிக்காவை, நேட்டோவை செத்த கிளி என்று சொல்ல வாலி ரஷ்யாவை செத்த கிளி என்று சொல்ல குமாரசாமி அண்ணை அமெரிக்காவை எருமைமாடும் மதிக்காது என்று சொல்ல ஜஸ்டின் எருமைமாடுகள் எப்ப மதித்தது என்று கேட்க.......... சிங்கம், புலி, சிறுத்தை, யானை, கிளி, எருமைமாடு,.......... என்று எங்களின் படிமங்கள் நீண்டு கொண்டு போகின்றது..........🤣. * உலகில் அதிக இராணுவம் உள்ள ஒரு நாடாக இருந்தாலும், அதனால் ஏதும் பெரிய பிரயோசனம் சில நாடுகளுக்கு கிடையாது என்று நினைக்கின்றேன். முக்கியமாக இந்தியா. ஒரு கணக்கில் இந்தியா உலகில் இரண்டாவது பெரிய இராணுவம் ஆகவும், இன்னொரு கணக்கில் முதலாவது பெரிய இராணுவம் ஆகவும் வருகின்றது. ஆனாலும் இந்திய இராணுவம் உள்நாட்டு பேரிடர் தவிர்த்து வேறு எதற்கும் தயாராகவும், தகுதியாகவும் இருப்பது போல தெரியவில்லை. ** இலங்கை ஒரு கணக்கில் உலகில் 18வது பெரிய இராணுவத்தை கொண்டுள்ளது.............🤨.
  5. நுணாவிலானுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
  6. உக்ரேனுக்காக ரஷ்யாவை எதிர்த்து போரிடுவது, சீன மக்களின் சுதந்திரத்திற்காக போராடுவது, உலக ஜனநாயகத்திற்காக போராடுவது, மனித உரிமைகளுக்காக போராடுவது, உலக மக்களின் சுதந்திரத்திற்காக போராடுவது.................. ஒரு தனிமனிதன் இவ்வளவையும் செய்ய நினைத்திருக்கின்றார், செயலிலும் இறங்கியிருக்கின்றார்............ நாங்கள் என்றால் இதையெல்லாம் சேர்த்து ஒரு கவிதை எழுதிவிட்டு, வழமை போல எங்களின் வேலையைப் பார்த்திருப்போம்........🤣.
  7. தேசத்திலிருந்து சர்வதேசத்திற்கு...........🤣. மக்கள் வழியே மன்னனின் வழி....... இன்றைய கடுமையான பொருள்முதல்வாத உலகில் பிரமாண்டமான ஒரு வல்லரசாக ஒரு ஒற்றைத் தேசம் இருந்தால், அது எந்த நாடாக இருந்தாலும், நிலைமை இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். சீனாவால் சில இடங்களில், சில துறைகளில் மட்டுமே சமனாக போட்டியிட்டு நிகராக நிற்கமுடியும். மற்றைய இடங்களில் நானே ராஜா, நானே மந்திரி என்பது தான் தற்போதைய நிலை........
  8. இதற்கு பின்னால் இருப்பது ஈரானா, உக்ரேனா, ரஷ்யாவா அல்லது ஜனநாயகக் கட்சியா என்று பல கோணங்களில் இதை ஆராயத்தான் போகின்றார்கள், ஆனால் இங்கு ஒருவர் துப்பாக்கி எடுத்து சுடுவதற்கு இப்படியான எந்தப் பின்னணியும் தேவையில்லை என்பதும் கவனிக்கப்படவேண்டும். பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு தாங்கள் ஒரு தலைவர் என்ற எண்ணம் இருக்கின்றது. பிறப்பு, பாடசாலை, இங்குள்ள புத்தகங்கள், Independence Day வகை சினிமாக்கள் என்று பல காரணிகளால் அந்த எண்ணம் நன்றாக வளர்க்கப்படுகின்றது. அவர்களாகவே ஒரு கருதுகோளை முன்வைத்து, அவர்களாகவே ஒரு தீர்ப்பை வழங்கி, அதை அவர்களாகவே நடைமுறைப்படுத்துவது பல சூட்டுச் சம்பவங்களின் பின்னணியாக இங்கு உள்ளது.
  9. மியன்மாரிலுள்ள சைபர் கிரைம் முகாமிலும் இப்படித்தான் இந்தியா, இலங்கையைச் சேர்ந்தவர்கள் வேலைக்கென்று அழைத்துச் செல்லப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இந்த நாடுகளுக்கு எல்லாம் எவரும் வேலைகளுக்கு போகலாமா............. ரஷ்யா, மியன்மார், வட கொரியா, ஈரான்,.............இப்படியான நாடுகளுக்கு ஆதரவாக இன்டெர்நெட்டில், சமூக ஊடகங்களில் எழுதலாம். ஆனால் அங்கே தப்பித்தவறியும் போய் விடக்கூடாது........
  10. இந்தப் பாடல் நல்லா இருக்குது...... கமலா ஹாரீஸின் ரியாக்‌ஷன்..........🤣.
  11. ஒரு தடவை ஒரு பகீஷ்கரிப்பு. அடிக்கடி ஜேவிபியினர் செய்து கொண்டிருந்தார்கள். முதல் நாள் இரவு ஒரு நோட்டீஸ் பல்கலைகழக விடுதிகளில் உள்ள காண்டீன்களில் ஒட்டுவார்கள். அவ்வளவு தான், அடுத்த நாள் பல்கலை முழுவதும் முழு பகீஷ்கரிப்பு. பொதுவாக எவரும் இந்த ஆணையை மீறமாட்டார்கள். அந்த பகீஷ்கரிப்பு நடந்த நாள் எங்களின் ஆட்கள் இருவர் பல்கலையின் மத்தியில் இருக்கும் காண்டீனில் சாப்பிட போனார்கள். திடீரென்று இவர்களைச் சுற்றி வளைத்த நாலைந்து பேர்கள், 'ஏண்டா பகீஷ்கரிப்பு நேரத்தில் வகுப்புக்கு போனீர்கள்.................' என்று கேட்டுவிட்டு, செவிட்டைப் பொத்தி நம்ம ஆட்கள் இருவருக்கும் நாலு போடு போட்டார்கள். இருவரும் ஓடி வந்து சேர்ந்தார்கள். அதில் ஒருவர் 'மச்சான், இங்கு ஒன்று எங்காவது எடுக்கலாமா .........' என்று அவரது ஒரு கைவிரலை துப்பாக்கி போல நீட்டி எங்களைக் கேட்டார்.................🤣. எல்லோருக்கும் செவிட்டைப் பொத்தி விழப் போகுது இவர்கள் வென்றார்கள் என்றால்................🤣.
  12. நாம எதுவென்றாலும் கொண்டாடியே தீருவோம் என்ற நிலைக்கு வந்து கொஞ்ச காலம் ஆகிவிட்டது. இப்ப வந்த ஓணம் பண்டிகையையே கேரள மக்களை விட தமிழக மக்கள் தான் அதிகமாகக் கொண்டாடினார்கள் என்று சொல்கின்றனர். ஓணம் சாரி விற்பனையும், ஓணம் சாரி ஃபோட்டோ ஷூட்டிங்கும் தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்ததாம். தீபாவளி இன்று முழு இந்தியாவிலும் முதலாவது பெரும் பண்டிகையாகி விட்டது, தமிழ்நாடு உட்பட. தீபாவளி அன்று ஆட்டையும் வெட்டக் கூடாது, கோயிலுக்கு போய் புளியோதரை சாப்பிடுங்கோ என்று வேற சொல்ல ஆரம்பித்திருக்கின்றார்கள். டபுள் இம்பாக்ட்...........🙃. இதில் இருக்கும் தத்துவ பிரச்சனையை விட இந்தப் பிரச்சனை தான் எனக்கு தனிப்பட்ட ரீதியில் பெரிய பிரச்சனை..........🤣.
  13. 🤣............ இவர் முன்னர் ஒரு தடவை ட்ரம்பிற்கு வாக்களித்திருக்கின்றார், அதனாலேயே இப்போது ட்ரம்பை சுட வந்தார் என்ற செய்தி மற்ற தலைவர்களுக்கும் வயிற்றுக்குள் புளியைக் கரைத்து ஊற்றினது போல இருக்கும்.......... எங்கள் நாட்டிலும் 69 இலட்சம் பேர்கள் கோதபாயவிற்கு வாக்களித்தார்களே........ ஒருவர் கூட பின்னர் இப்படி முயற்சிக்கவில்லை...........
  14. ஒரு சிறிய இடைவெளியின் பின் மீண்டும் உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி தில்லை ஐயா...........
  15. அபராதத்தொகையை குறிப்பிட்ட திகதிக்குள் கட்டாவிட்டால் தண்டனையை கடூழிய தண்டைனையாக மாற்றுவார்கள் போல. கடூழிய தண்டனையில் இந்த மாதிரியான கடுமையான வேலைகளும் கொடுக்கப்பட்டு, அத்துடன் தலைமுடியை ஒட்டவும் வெட்டி விடுவார்கள் போல. தலைமுடியை வெட்டாமல் விட்டிருக்கலாம். எப்பவும் இதைப் பற்றிக் கருத்துச் சொல்லி, இலங்கை அரசை கடுமையாக எச்சரிக்கும் தமிழக அரசியல்வாதிகள், எல்லை தாண்டிப் போகாதீர்கள் என்று அவர்களுடைய மீனவர்களுக்கு ஒரு போதும் சொல்வதில்லை.
  16. பூனையை கொன்று சாப்பிடுகின்றார்கள், நாயைக் கொன்று சாப்பிடுகின்றார்கள் என்று ட்ரம்ப் அவருடைய எழுத்தாளர்கள் எழுதிக் கொடுக்காததை தன் இஷ்டப்படி மேடையில் பேசி இருக்கக்கூடாது. இப்ப அந்தப் பக்கத்தாலேயும் விசாரணையை நடத்த வேண்டியிருக்கின்றது. எவ்வளவு இனவாதம், மதவாதம், சதிகள் என்று எல்லா வாதங்களையும் பேசலாம், ஆனால் நாய், பூனையை அமெரிக்காவில் தொடக்கூடாது........... ஒரு சிங்கம் பூனையால் தோற்ற புதுக்கதை உருவாகுது போல..........
  17. இந்த குவாட் கூட்டமைப்பை மறக்கவே முடியாது. சிவாஜிலிங்கம் ஒரு தடவை இந்த குவாட் கூட்டமைப்பிடம் தான் சில கோரிக்கைகளை முன் வைப்பதாக ஒரு பேச்சில் சொல்லியிருந்தார். இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு, சர்வதேச விசாரணை போன்ற கோரிக்கைகள். 'நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்..........' என்ற வடிவேலு மீம்ஸும் குவாட்டுடன் சேர்ந்து மனதில் நிற்கின்றது........🤣.
  18. மணிவண்ணன் பொருளாதாரம், அதிகாரம் என்று இரண்டு புதிய விடயங்களை புகுத்தியுள்ளார். பொது வேட்பாளரின் 'ஒரே குரலில் ஒற்றுமையாக சர்வதேசத்திற்கு ஒரு செய்தி சொல்ல வாருங்கள் ....' என்னும் கோஷம் கூட பிரயோசனமற்றது என்றாலும், சாத்தியமானது என்ற வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால் நாங்கள் இன்றிருக்கும் நிலையில் நாங்களே எங்களுக்கு வாக்குப் போட்டு பொருளாதாரத்தையும், அதிகாரத்தையும் பெறுவோம் என்பது இந்த பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டையே தேவையில்லை என்றாக்கிவிடுகின்றது. எட்டு வீத வாக்குகள் அப்படியே கிடைத்தாலும், என்ன அதிகாரம் எங்களுக்கு கிடைத்துவிடும்............
  19. உங்க காட்டில எப்பவுமே மழை தான், அங்கஜன் சார்........... மழை பெய்யப் போகிற பக்கமாக பார்த்து உங்க காட்டை நீங்க மூவ் பண்ணிக்கிட்டே இருக்கிறீங்க, சார்........🤣. ரணில் ஒரு தீர்வும் கொடுக்கமாட்டார், ஆனால் மக்களின் வயிற்றுப்பாட்டுக்கு ஒரு வழி பிறக்கலாம். மற்றவர்கள் வந்தால் தீர்வும் காலி, அதோட சேர்த்து ஆளும் காலி என்ற நிலை தான்...... எல்லாம் சரி, உடுப்பிட்டியில் சஜித்தின் கூட்டத்திற்கு ஒருவரைக் கூட போக விடாமல் எப்படி தடுத்தீர்கள், அங்கஜன் சார்........... பலே கில்லாடி சார் நீங்க.......
  20. இந்த மனுஷன் ஏன் இப்படி திரும்பித் திரும்பி போய் அடி வாங்குது......... இதுக்கு பேசாமல் அவரையே காதலித்து, கல்யாணமும் கட்டி, தினமும் வீட்டிலேயே குத்து வாங்கலாமே........ உள்வீட்டு விவகாரம் என்று உலகமும் இதைக் கவனிக்காமல் இருந்து கொள்ளும்..........🤣.
  21. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையே அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். நிர்மலா சீதாராமன் தேர்தலில் நிற்கத் தேவையில்லை, பின் கதவால் ராஜ்யசபா எம்பியாகி, அப்படியே நிதியமைச்சர் ஆகிவிடுவார். ஆனால் அண்ணாமலையார் கோயம்புத்தூரில் தேர்தலில் நிற்க வேண்டுமே............ கோயம்புத்தூர்காரர்களுக்கு இந்தக் ஹோட்டலும், அந்தக் குடும்பமும் அவர்களின் ஒரு பெருமை. அந்த சீனிவாசனையே நிர்மலாவும், வானதியும் மன்னிப்பு கேட்க வைத்து விட்டார்கள் என்று கடும் கோபத்தில் கோயம்புத்தூர்காரர்கள் இருக்கின்றனர். இப்ப எல்லாருமே, காங்கிரஸ், திமுக, அதிமுக உட்பட, நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆரம்பித்திருக்கின்றார்கள். நிர்மலா சீதாராமன் வெளியில் வந்து எப்போது வாயைத் திறந்தாலும், அது பாஜகவிற்கு சேதம்தான்.......... அந்தக் கால நாச்சியார் என்ற நினைவும், செருக்கும் இவருக்கு.........
  22. பாடசாலை நாட்களில் ஒன்றுமே செய்யாத சோம்பேறியாக, 70 கிலோ நிறையில் இருந்தாராம். பின்னர் ஆர்னோல்ட்டையும், சில்வெஸ்டரையும் போல வர வேண்டும் என்று இப்படி ஆகியிருக்கின்றார். எங்களைப் போலவே அப்பவும் சோம்பேறி, இப்பவும் சோம்பேறி, எப்பவும் சோம்பேறி என்று இருந்திருந்தால் , தப்பி இருந்திருப்பார் போல...........😌. 16,500 கலோரி உணவுகளை தினமும் சாப்பிடுவதற்கே எங்களால் முடியாதே....... கிட்டத்தட்ட எட்டு நாட்கள் சாப்பாட்டை ஒரே நாளில் சாப்பிடுவது போல.........🤨. ஆர்னோல்ட்டே தினமும் ஐயாயிரம் அல்லது ஆறாயிரம் கலோரி தான் எடுத்திருப்பார்.
  23. அமெரிக்காவும், நேட்டோவும் வழங்கும் வளங்களை வைத்து தான் உக்ரேனால் இவ்வளவு காலமும் தாக்குப் பிடிக்க முடிகின்றது, விசுகு ஐயா. ஆனால் ரஷ்ய ஆதரவு/எதிர்ப்பு, அமெரிக்க ஆதரவு/எதிர்ப்பு என்ற நிலையில் இருந்து கொண்டு, அதன் வழியே கருத்துகள் சொல்லும் ஊடகங்களும், தனிமனிதர்களும் அவர்களுக்கேற்றவாறு நிலைமையை திரித்து விடுகின்றார்கள். ரஷ்யா ஏன் இன்னமும் உக்ரேனை அடித்து முடிக்கவில்லை என்பது ஒரு பக்கத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலைமை. அதை நியாயப்படுத்த காரணங்களை, பலது இல்லவே இல்லாத காரணங்கள், கண்டுபிடிக்கின்றார்கள். ஆனால், காலனியாதிக்கம் முடிந்த பின், உலகில் எத்தனை நாடுகள் எத்தனை நாடுகளை அடித்து முடித்திருக்கின்றது....... அப்படியே ஒரு போரில் வென்றாலும், அவர்களால் அந்த நாட்டையோ அல்லது பிரதேசத்தையோ நீண்ட காலத்திற்கு தக்க வைக்கக் கூடியதாக இருந்ததா.......... இல்லைத் தானே. இது தான் இன்றைய ரஷ்யாவின் நிலை. அமெரிக்காவும் சில நாடுகளுக்குள் போய் இறங்கி விட்டு, பின்னர் போதுமடா என்று சில நாடுகளில் இருந்து திரும்பி வந்திருக்கின்றது தானே.
  24. 🤣........... அவர்களின் பாணிலும், பருப்பிலும் கைவைத்தால் சிங்கள மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் போல, சிறி அண்ணா..... இவர்களின் அதியுயர் ஆயுதமான இனவாதம், மதவாதம் கூட இரண்டாம் பட்சம் ஆகி விட்டது இவர்களின் குடும்பம் சிங்கள மக்களையும் தெருத் தெருவாக அலைய விட்ட அந்த நிகழ்வின் பின். பொதுவாகவே எல்லா மக்களுக்கும் மறதி அதிகம். அடுத்த அடுத்த தேர்தல்களில் இவர்களுக்கு கல்லெறிய மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்............🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.