Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. சிறி அண்ணை, எனக்கு இங்க அமெரிக்காவிலேயே வயிற்றைப் பிசையுது அநுராவும், ஜேவிபியும் ஆட்சிக்கு வருவார்கள் என்று நினைக்கவே............. கடைசியில் அப்படியே நடந்து, இதையும் பட்டுத்தான் தெளிய வேண்டும் போல........... நாங்கள் எல்லாவற்றையும் பட்டுப் பட்டே தெளிய வேண்டியிருக்கின்றதே..........🤣. அந்த மூன்று மீன்கள் கதையில் நாங்கள் மூன்றாவது மீன்.............
  2. நண்பன் ஒரு யாழில் வாக்குப் போட்டு விட்டு, அவன் விரலை படமெடுத்து வாட்ஸ்அப்பில் போட்டிருக்கின்றான். படமும் சரியான முக்கியம் போல............... 'யாருக்கடா போட்டாய்..........' என்று கேட்கவில்லை. அது அடிப்படை உரிமைக்கு எதிரான கேள்வி என்று சொல்கின்றனர். ஆனால் அவனே ஒரு முழுமையான மாற்றம் சிஸ்டத்தில் வர வேண்டும் என்று ஒரு வரியையும் படத்தின் கீழே எழுதியிருக்கின்றான். அவன் ரஜனி ரசிகனும் இல்லை......... அநுரவிற்கு புதிதாக பல ரசிகர்கள் உண்டாகியிருக்கின்றனர்...........😀.
  3. புராணத்தில் வாலி எதிராளிகளிடமிருந்து அவர்களின் பலத்தில் அரைவாசியை பிடுங்கி எடுத்து விடுவார் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. வாலியின் அநுரகுமார இங்கே அப்படி எடுக்கின்றார் போல...........🤣. மூன்று பேரும் முப்பத்தி சொச்சம் எடுக்கட்டும்........... இந்த இரண்டாவது வாக்குகளை எண்ணும் algorithm நடைமுறையில் எப்படிப் போகுது என்று பார்ப்பதற்கு இதுதான் ஒரேயொரு சந்தர்ப்பம்.........
  4. என்னுடைய புரிதல் வேறு விதமாக இருக்கின்றது. அத்துடன் பல பார்வைகள், கோணங்கள் இதில் இருக்கும் என்பதனையும் ஏற்றுக்கொள்கின்றேன். 'எந்த மாற்றம் வேண்டும் என்று விரும்புகின்றாயோ, அந்த மாற்றமாக நீயே இரு..........' என்பது போல காந்தியடிகள் சொல்லி இருக்கின்றார். அவர் வாழ்ந்ததும் அப்படியே. அவரைப் பார்த்து, அவரைப் பின்பற்றியே காந்தியம் உருவாகியது. காந்தியமும், அஹிம்சாவாதமும் பாராபட்சமானவை. தீண்டாமை போன்ற கொடூரமான அடிப்படைப் பிரச்சனையைக் கூட அது தீர்க்கவில்லை என்று சொல்லி அம்பேத்கர் அவர்கள் வேறொரு வழியில் போனார். அவருக்கு புத்த பெருமானே சமூக நீதி, தத்துவ மற்றும் ஆன்மீக வழிகாட்டி. இன்றும் அம்பேத்கரை பின் தொடர்பவர்கள் பலர் புத்த பெருமானையும் தொடருகின்றனர், உதாரணம்: ரஞ்சித். இலங்கையில் இருக்கும் மதத்தையும், அதன் நெறிமுறைகளையும் வெறும் அதிகார அரசியலாகவே பார்க்க வேண்டும் என்று நினைக்கின்றேன். பெருமான் சொன்ன தம்மம் அங்கில்லை. சில தனி ஒருவர்கள் நன்மை பயக்கும் வழிகாட்டியாக மாறுவார்கள் என்பதே என் புரிதல். இலக்கியத்தில் கூட பாரதியும், புதுமைப்பித்தனும் அடைந்த தெளிவே நவீன தமிழை எல்லோருக்கும் கொண்டு வந்தது.....🙏.
  5. வேற ஒரு திரியின் எஃபக்ட் இங்கேயும் பரவுது போல..............🤣.
  6. என்ன அண்ணை, அவசரப்படாதே, அதுவாகவே நடக்கப் போகுது தானே என்று சொல்ல வருகிறீங்களோ.......... தெரிந்தால், ஹிஸ்புல்லா குரூப்பிற்கு போன அதே வகை pager ஒன்று வீட்டிற்கு பார்சலில் வரும் எல்லோ........
  7. 🤣.......... கதையை மாமாவிற்கு அனுப்பி விட்டு, அவருடைய பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றேன்............😜.
  8. 'முடியல்லடா சாமி............' என்று உடனேயே ஓடமுடியாது........ கந்தையா அண்ணையுடன் ஒரு இரண்டு பதிவுகளாவது நின்று பிடித்து விட்டே அப்படிச் சொல்லிக்கொண்டு ஓடவேண்டும்................🤣.
  9. யாழ் பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரில் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்போம் என்று ஒரு அறிக்கை சமீபத்தில் வந்திருந்தது. அதன் பின்னர், இதற்கு மாறாக, சில பேராசிரியர்களும், கலாநிதிகளும் தனியே அவர்களின் சொந்த வழியில் சென்று விட்டார்கள் போல. அதற்காக இப்படி அந்த தனிநபர்களை தரம் தாழ்ந்து தாக்க வேண்டுமா............. பொதுவான இன்னொரு அறிக்கை ஒன்றை அதே பல்கலைக்கழக சமூகம் வெளியிட்டு விட்டு, முன்னோக்கி போயிருக்கலாம். அந்த நாட்களில் பேராசிரியர் கூல் தலைமையில் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்ற பெயரில் கொழும்பிலும், வெளியிலும் இருந்து கொண்டு மனித உரிமைகளுக்கு குரல் கொடுக்கின்றோம் என்று அறிக்கைகள் விடுவார்கள். ரஜினி திரணகம மரணத்தின் பின். அவர்களின் பல அறிக்கைகள் இலங்கை அரசை விட இயக்கங்களை அதிகம் குறை கூறுவது போன்றும் இருந்தது. ஆனாலும் பாதிப்பு என்று சொல்லத்தக்க வகையில் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை. இன்னொரு மாற்றுக்கருத்து என்ற அளவில் இருந்தார்கள். அதே போலவே இதுவும். எல்லாவற்றையும் விட, பொது மக்களில் கூட ஒரு பங்கு வாக்குகள் மூன்று பிரதான வேட்பாளர்களுக்கும் போகத்தான் போகின்றது. அந்த பொதுமக்களையும் நாங்கள் காட்டிக் கொடுப்பவர்கள் என்று சொல்ல முடியுமா............😌. எங்களின் ஒரு பல்கலையை தாங்குவதே எங்களுக்கு பெரும்பாடாக இருக்கின்றது............... அநுரகுமாரவிடம் எத்தனை பல்கலைகள் இருக்கின்றன. 'தெற்கு மக்கள் ஒரு மாற்றத்திற்கு தயாராகிவிட்டார்கள். வடக்கு மக்களும் தயாராக வேண்டும். இல்லையேல் விளைவைச் சந்திக்க வேண்டும்........' என்று அவர் சொன்னதும் இந்த நேரத்தில் நினைவில் வருகின்றது..........🫢.
  10. ராகுல் ட்ராவிட் விளையாடிய நாட்களில் அவரை 'The Wall' என்று சொல்வார்கள். நீங்களும் அதே போலவே, கந்தையா அண்ணை. உங்களில் முட்டி களமே களைத்து போய்விட்டது, அண்ணை..........🤣. இன்று எங்களின் இருப்பை தக்க வைக்க நாங்கள் போராடும் வாழ்வாதார விடயங்களையே வரிசைப்படுத்தியிருந்தேன். இவை யாரால் - சிங்கள மக்கள், இஸ்லாமிய மக்கள், தமிழக மீனவர்கள்/முதலாளிகள் - எங்களுக்கு எதிராக செய்யப்படுகின்றன என்பதைப் பொறுத்து எம்மக்கள் எதிர்ப்பு காட்டுவதோ அல்லது தவிர்ப்பதோ என்றில்லை. இவை மிக அடிப்படையானவை, இவை எல்லாவற்றுக்கும் ஒரே விதமான எதிர்ப்பே எங்களால் காட்டப்படுகின்றது. கடலில் மட்டும் அவர்களின் சுயநன்மை கருதி இலங்கை கடற்படை செய்யும் செயல்கள் இன்று எங்களுக்கு அனுகூலமாக இருக்கின்றது. ஆனால், எங்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. இதனால் எங்களின் நிலைப்பாடு என்றும் மாறப்போவதும் இல்லை. தமிழக மீனவர்களின் தலைமுடியை வெட்டாமல் விட்டிருக்கலாம் என்று தான் நான் எழுதியிருந்தேன். மற்றவர்கள் கூட செம்புள்ளி, கரும்புள்ளி என்று எழுதியது ஒரு உணர்ச்சிகரமான வெளிப்பாடே தவிர உண்மையான, மனமொத்த நிலைப்பாடு இல்லை என்றே நான் நினைக்கின்றேன். ஆதவன் செய்திகளுக்கு இருக்கும் அதிகூடிய வரவேற்பை பாருங்கள். அப்படி பொதுவெளியில் செய்திகளையும், கருத்துகளையும் எழுதுவது தான் இன்றைய எழுத்து முறை. பலதும் பொருளற்ற அல்லது பொருள் கொள்ளாத சொலவடைகள். செம்புள்ளி கரும்புள்ளியும் அப்படியே.
  11. இந்த ஜனாதிபதி வேட்பாளர்கள் எல்லோருடைய (பொதுவேட்பாளர் அரியநேத்திரனை தவிர்த்து ஏனென்றால் அவர் தான் ஜனாதிபதியாக வர முடியாது, வர மாட்டேன் என்று சொல்லிவிட்டார்) பேட்டிகளையும், காணொளிகளையும் பார்த்ததில் இருந்து தெரிவது என்னவென்றால்............. இவர்களில் எவர் ஜனாதிபதியாக வந்தாலும் பிதுருதலாகலை மலையிலிருந்து தேனும் பாலும் ஓடி நாட்டை நிரப்பப் போகின்றது என்பதே......🤣. சனம் பாலிலும் தேனிலும் முக்குளிக்கப் போகுது..........😀.
  12. வடக்கு கிழக்கில் எங்களின் சுயாட்சி இல்லை, அதனால் எங்கள்: கடலில் எவர் மீன் பிடித்தால் என்ன வயலில் எவர் உழுது விதைத்தால் என்ன மேய்ச்சல்தரைகளில் எவர் மாடுகள் மேய்ந்தால் என்ன இதையும் தாண்டி, எங்கள் வீடுகளில் கூட எவர் குடியேறினால் தான் என்ன என்று அடுத்தடுத்து வரிசையாகச் சொல்லப் போகிறீர்களோ என்று பயமாக இருக்கின்றது.........🤣. கந்தையா அண்ணை, எங்களின் கரையோர மக்கள் பாவம், என்ன பாவம் செய்தார்களோ என்றுமே தீராத நெருக்கடி அவர்களின் வாழ்க்கைகள்...........
  13. 👍............. வரலாறு எல்லாம் ஆராய்ந்து தான் உங்களின் புனைபெயரை தெரிந்தெடுத்திருக்கின்றீர்கள்................🤣. புத்தர் ஆரம்பத்திலேயே தெளிந்தார், அசோகன் இடையிலே தெளிந்தார், நாங்கள் போகும் வரை இப்படியே போகட்டும் என்று போய்க் கொண்டிருக்கின்றோம் போல.............
  14. உண்மையான, ஆனால் மனதை அழுத்தும் கூற்று, விசுகு ஐயா. முடிவுகள் வழிமுறைகளை நியாயப்படுத்துகின்றன என்றும் சொல்வார்கள்......... இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது...........
  15. சனத்தொகையில் உலகில் 1% அளவேயுள்ள யூதர்கள் இதுவரை வழங்கப்பட்ட நோபல் பரிசுகளில் 20% மேற்பட்டவற்றை பெற்றுள்ளார்கள் என்று ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மிகத் திறமையானவர்கள் தான். ஆனால், பல இடங்களிலும் பொதுமக்களையும் எந்த வித வேறுபாடும் இன்றி தாக்குவதை இவர்கள் தவிர்க்கவேண்டும். இவர்கள் வேறு நாடுகளுக்கு கொடுக்கும் ஆலோசனைகள் கூட அப்பாவி பொதுமக்கள் மீது எந்த கரிசனையும் அற்றது, உதாரணம்: இவர்கள் இலங்கை அரசிற்கும், இராணுவத்திற்கும் வழங்கியதாக சொல்லப்படும் ஆலோசனைகளும், வழிமுறைகளும்.
  16. 🤣.......... போய் விடுவம் அண்ணை. ஒரு 'சைட் கிக்' இருப்பதும் நல்லது தானே.......... இது வேறயா, சிறி அண்ணை............ ஆதவனில் வேலை செய்பவர்கள் என்னுடைய வகுப்பில் படித்திருந்தால், கந்தசாமி வாத்தியார் ஒரு சில கொலைக் குற்றத்தில் உள்ளே போயிருப்பார்............. **
  17. இது என்ன உப்பு சப்பில்லாத செய்தி ஆதவனில்........ கோவிட் வைரஸ் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் உருமாறத்தான் போகின்றது. வீரியம் குறைந்து போய் விட்டது என்று தெரிந்தால், சைனா அல்லது அமெரிக்காவிடம் சொன்னால், புதிதாக ஒன்றைத் தயார் செய்து தருவார்கள்............ ஆதவனில் இன்று வந்திருக்க வேண்டிய செய்தி: நேற்றைய சந்திரகிரகணத்தில் பூமி இன்னும் ஒரு பாகை சரிந்தது. பூமி அழியப் போகின்றதா என்று நார்வேயிலுள்ள நாசா விஞ்ஞானிகள் கலக்கம்.
  18. 🤣...... அப்படியே கந்தையா அண்ணைக்கும் ஒரு டிக்கட் போட்டு அவரையும் கூட்டிக் கொண்டு போயிட்டு, ஒரிஜினல் பிளான் படியே ஒரு கிழமையிலேயே இரண்டு பேரும் திரும்பி வந்திடுங்கோ.......... எல்லா திரிகளிலும் தனி ஆளாக கம்பு சுத்தி அடிவாங்கிக் கொண்டிருக்கின்றார் கந்தையா அண்ணை.........
  19. 👍........... நீங்கள் இங்கு குறிப்பிட்டிருக்கும் இந்த வகையான நிரலையும் பார்த்திருக்கின்றேன், வசீ. இது ஒரு Power Index போல. என்னுடைய அயலவர் ஒருவர், அவர் இப்போது உயிருடன் இல்லை, முதன்முதலாக தாழப் பறக்கும் பெரிய விமானங்களை உருவாக்கும் பொறியியலாளர்களில் ஒருவராக இருந்தார். அவர் ஒரு இந்தியர், பஞ்சாபி. அவருடைய நாட்களில் இந்தியாவில் ஒரே ஒரு ஐஐடி மட்டுமே இருந்தது. கரக்பூரில் என்று நினைக்கின்றேன். அவர் அங்கு சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் பாடசாலை போனதே இல்லை. வீட்டுக் கல்வியிலிருந்து நேரடியாக ஐஐடி போனார். அங்கு முதலாம் வருடம் மிகவும் சிரமப்பட்டதாகச் சொன்னார். தென்னிந்தியர்களை தன்னால் தாண்டவே முடியாது என்று நினைத்ததாகச் சொன்னார். ஆனால் இறுதியில் அவர் அந்த வகுப்பில் இரண்டாவதாக வந்தார். இறுதிப் பரீட்சை ஒன்றில் வந்த கேள்விகள் என்ன, தான் எழுதிய பதில்கள் என்ன என்ன என்று ஒரு தடவை சொன்னார். இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு மேல்படிப்பிற்கும், வேலைக்கும் போனார். பின்னர் இந்தியா திரும்பினார். இறுதியில் அவரை அமெரிக்கா எடுத்துக்கொண்டது. இங்கு போயிங் நிறுவனத்தில் சேர்ந்தார். B வகை விமான உருவாக்கம் பற்றி நிறையவே சொல்லியிருக்கின்றார். அவர் சொல்லுவதை எல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு அறிவோ அல்லது அனுபவமோ இருக்கவில்லை, இன்றும் இல்லை. அவர் சொன்ன இன்னொரு விடயம் சில நாடுகளில் ராணுவமும், அதன் ஆராய்ச்சிகளும் ஒரு தலைமுறை முன்னால் போய்க் கொண்டிருக்கும் என்று. பலதும் மிக இரகசியமாகவே இருக்கும் என்றார். அவர் ரஷ்யாவையும், அமெரிக்காவையும் பார்த்தவர். இன்றைய நாளில் அமெரிக்காவும், சீனாவும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். இந்த Power Index கூட இந்த இரு நாடுகளையும் சரியாக சுட்டிக் காட்டுகின்றனவா என்பது சந்தேகமே.
  20. 🤣........... இந்த திரியில் ஒரு மாற்றுக்கருத்தும் வராது போல என்று சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.......... என் நினைப்பில் மண்ணைப் போட்டு, மாற்றுக்கருத்துடன் நீங்கள் வந்து விட்டீர்கள்.......... மூன்றாவது காரணம் அல்லது மாற்றுக் கருத்து: இந்த டாபிக்கில் மட்டும் தான் ஏழாம், எட்டாம் வகுப்பில் விட ஆரம்பித்து புளித்துப் போன அதே பகிடிகளை 50, 60, 70 வயதுகளிலும் அதே உற்சாகத்துடன் விட முடிவது.......
  21. இதே உதாரணத்தை தான் நேற்று ஒரு தமிழ் ஊடகவியலாளரும் ரணிலுக்கு ஆதரவாக ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் சொல்லிக் கொண்டேயிருந்தார். விவாதத்தில் எதிர்ப்பக்கத்தில் இருந்த ஜேவிபி ஆதரவாளர் அவரது தலைமுடியை பிய்க்காத குறை............ நோயாளி, எமர்ஜென்சி, ஐசியு, அவுட் பேஷண்ட், ஆள் அவுட், ஆள் இன்,.................. என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்த எங்களுக்கும் கடைசியில் சுகமில்லாமல் போய்விட்டது...........
  22. இதுவரை ஒன்பது பேர்கள் இறந்தும், ஆயிரக் கணக்கானவர்கள் காயமடைந்தும் இருக்கின்றனர் என்று கடைசித் தகவல் தெரிவிக்கின்றது. சில முக்கிய நபர்களும் இறந்தோ அல்லது காயம்பட்டோ இருக்கின்றார்கள், ஈரானின் லெபனானிற்கான தூதுவர் உட்பட........... மிகுதியானவர்கள் எல்லோரும் பொதுமக்களே........😌 சிறிய பிளாஸ்டிக் வெடிமருந்து உள்ளே பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதே முதல் ஊகமாக இருக்கின்றது. லித்தியம் பாட்டரிகள் அதிக வெப்பத்தால் தீப்பிடிக்க கூடும், ஆனால் இப்படி ஒரே காலப்பகுதியில் பல இடங்களில் வெடிக்கமாட்டாது. வெடிக்கவே வெடிக்காத அப்பிள் ஃபோன் என்று ஒரு விளம்பரம் ஐபோனிற்கு வந்தாலும் வரும்............
  23. 🤣........ 'ஐம்பதிலும் ஆசை வரும்........' என்று தான் சிவாஜியும், கே ஆர் விஜயாவும் ஓடி, துள்ளி வந்தவை. இப்பை அதையும் தள்ளித் தள்ளி 70 வரை கொண்டு போய் விட்டார்களே................🤣. களத்தில் நீங்கள் சளைக்காமல் எழுதுவது.................👋.
  24. 🤣........... கந்தையா அண்ணை, புடின் ஒரு புது வகை குண்டு செய்துள்ளாராம். அந்தக் குண்டை ஆட்களின் தலைகளில் போட்டு சோதிக்கத்தான் இந்த திட்டமோ தெரியவில்லை. 'என்னால் முடியும், என்னால் முடியும்........' என்று நீங்கள் சொல்வதைக் கேட்டால், உங்களைக் கடத்திக் கொண்டு போனாலும் போவார்கள்........
  25. 🤣.......... அண்ணை, பக்கத்தில் இருக்கிற லாஸ் வேகாஸிற்கு போய் விட்டே எந்த வித சேதாரமும் செய்யாமல் திரும்பி வருகிறவர்கள் நாங்கள் இருவரும். நாங்கள் இருவரும் புடினின் நோக்கத்திற்கு சரி வருவம் என்று தெரியவில்லை, அதால அந்த மனிஷனுக்கு எரிச்சல் வந்து நஞ்சு கலந்த சாப்பாட்டை எங்களுக்கு தந்தாலும் தந்து விடும்............

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.