Everything posted by ரசோதரன்
-
வட மாகாண வைத்தியா்கள் குறித்து அமைச்சர் சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்து!
👍......... பெரிதாகப் படித்து, ஆங்கிலமும் தெரிந்து இருந்தால், அது இன்னமும் நம்பிக்கையைக் கூட்டும். சுரேன் ஒரு ஒரு கலாநிதி (Ph.D. in Political Science and International Relations from University of Kent, England ). இவரின் முழுக் கல்வியும் ஆங்கில வழியிலேயே போலுள்ளது. ஆனாலும் இன்றைய கல்வி என்பது பெரும்பாலும் ஒரு தொழிற் பயிற்சி மட்டுமே. அது எந்த அளவில் - பாடசாலை, இளநிலை, முதுநிலை, கலாநிதி - இருந்தாலும். மேற்படிப்பு ஆராய்ச்சிகள் என்பது இன்னும் இன்னும் ஒரு மனிதனை ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே தள்ளும். வாழ்க்கை அனுபவங்களும், பல்வேறுபட்ட சக மனிதர்களும், பரந்த திறந்த வாசிப்பும், முரண்பட்ட சுய சிந்தனைகளுமே ஒரு மனிதனின் பார்வையை அகலப்படுத்தும். எங்களின் நிலத்தை எந்த விதத்திலும், அங்கு வாழ்ந்தோ அல்லது அதை வாசித்தோ, அறியாதவர்கள் தான் எங்களின் பிரதிநிதிகள் என்பதை ஏற்றுக் கொள்ளும் ஒரு காலகட்டத்தில் இருந்து வெளியே வந்து விட்டோம் என்பது ஒரு ஆறுதல்.
-
தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
என்னுடைய தொகுதியான உடுப்பிட்டித் தொகுதியில் இராசலிங்கம் அவர்கள் பெரும் வெற்றி ஒன்றை 1977 இல் பெற்றிருந்தார். நான் அப்போது சிறுவன். அவரை தோளில் வைத்து தூக்கிக் கொண்டு எங்கள் சந்தியால் போனார்கள். உங்களின் தரவுகளைப் பார்த்த பின், உடுப்பிட்டி தொகுதி முடிவுகளை போய்ப் பார்த்தேன். அவருக்கு 63.44% மட்டுமே கிடைத்திருக்கின்றது. நான் இன்னும் மிக அதிகமாகவே அவருக்கு கிடைத்திருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீதியான, சுதந்திரமான ஒரு ஜனநாயகத் தேர்தலில் ஒரு வேட்பாளர் 60% அல்லது மேலே எடுப்பது என்பது மிக அரிதான ஒரு நிகழ்வே. இராசலிங்கம் அவர்களுக்கு வாக்கு போடாமல், அவரை எதிர்த்து போட்டியிட்ட தர்மரத்தினத்திற்கும் (சுயேட்சை), மோதிலால் நேருவிற்கும் (தமிழ் காங்கிரஸ்) எந்த அடிப்படையில் வாக்களித்தவர்கள் வாக்களித்தார்கள் என்பது அன்று எங்களுக்கு தெரியும். ஊரில் பலரும் இதைப் பற்றி கதைத்தார்கள்.
-
ஐசிசியின் சுயாதீனத் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தெரிவானார்
ICC என்றால் International Cricket Council என்ற விளக்கம் போய், அது Indian Cricket Council என்று மாறி விட்டது என்ற கதை சில காலமாகவே போய்க் கொண்டிருக்கின்றது. உலக கிரிக்கட்டே இந்தியாவின் சட்டைப்பைக்குள் உள்ளது. இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தின் தலையீட்டாலேயே கிரிக்கட் அழிந்தது என்பார்கள். இந்தியாவில் அமித்ஷா குடும்பமே கிரிக்கட்டை கட்டுப்படுத்துகின்றது. ஆனால் அவர்கள் அதிகமாக வென்று கொண்டிருப்பதால், அத்துடன் ஆட்சியிலும் இருப்பதால், எவரும் அவர்களைக் குறை சொல்வதில்லை.
-
வட மாகாண வைத்தியா்கள் குறித்து அமைச்சர் சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்து!
சுரேன் ஆளுனராக இருந்த போது யாழ் நகரில் ஒரு புத்தகக் கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தார். மிகவும் நன்றாக இருந்தது என்று இதில் பரிச்சயம் மிக்க நண்பர்கள் சொல்லியிருந்தனர். ஈழத்து எழுத்து, எங்களின் பதிப்பகம் என்று இந்த துறையில் எங்கள் மீது இருக்கும் தமிழ்நாட்டின் அளவு மீறிய செல்வாக்கை கட்டுக்குள் கொண்டு வர இது ஒரு ஆரம்பமாகவும் இருக்கும் என்றும் சொல்லப்பட்டது....... (ஆனால் அப்படி நடக்கவில்லை...) பின்னர் கனடாவில் ஒரு கூட்டத்தில் இலங்கையில் இனப் படுகொலை நடக்கவே இல்லை என்று சுரேன் சொன்னார். தொடர்ந்து இதே போன்ற இலங்கை அரசுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். இன்னொரு லக்ஷமன் கதிர்காமர் ஆவதே இவரின் இலட்சியம் போலுள்ளது. அதற்கான கல்வித் தகுதி ஏற்கனவே உள்ளது, பிற தகுதிகளை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்.......... University of Kent மற்றும் University of Ottawa இல் தான் படித்திருக்கின்றார். ஆதலால் ஒக்ஸ்ஃபோர்ட் புலமைப் பரிசில் தகவல் சரியானதாகத் தெரியவில்லை. அதே போன்றதே இவர் பௌத்த மதத்திற்கு மாறினார் என்பதும். மதம் எதுவும் இல்லை (Other) என்றே இவரின் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் விபரத்தில் இருக்கின்றது. கனடாவில் அகதியாகப் பதிவது, பின்னர் கனடா குடியுரிமை பெறுவது, அரச உதவிகள் பெறுவது, இவை எல்லாம் ஒரு விடயங்களே அல்ல. இது எல்லோரும் செய்யும் மற்றும் சட்டத்திற்கு எதிரான விடயங்களும் இல்லை. வில்லங்கமான விசயம் என்னவென்றால், எந்தக் கட்சி, தலைவர்கள் இலங்கையில் ஆட்சிக்கு வந்தாலும் இவர் ஒரு அமைச்சராகவே இருப்பார். இருந்து கொண்டே இப்படியான கருத்துகளையும் தெரிவிப்பார். இப்படியானவர்களும் என்றும் வந்து கொண்டே இருப்பார்கள். அந்த நாளில் குமாரசூரியர் என்று ஒருவர் இருந்தாரே...............
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
🤣.......... நீங்கள் சொல்வது புரிகின்றது........ ஆனால் நாங்கள் மூன்று பேர்கள் ஒன்றாய் நின்றாலே, இருவருக்கிடையில் ஈகோ பிரச்சனை வர, அந்தக் கலவரத்தில் மூன்றாதவர் கல்யாண மணவறையைக் கொளுத்திப் போடுவார் போலத் தெரியுதே......
-
13 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்து அதிகார பகிர்வை முடிவுறுத்துவேன்; ஷரியா சட்டத்துக்கு இடமில்லை - ஜனாதிபதி வேட்பாளர் சீலரத்ன தேரர்!
இந்த தேரர் தானே தேர்தல் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப் போகும் போது கட்டுப்பணத்தை மறந்து விகாரையிலேயே விட்டு விட்டுப் போனவர்........... பிறகு அடுத்த நாள் போய்த்தான் நியமனப் பத்திரம் தாக்கல் செய்தவர். தேரரின் 50,000 ரூபாவை காப்பாற்ற கடவுள் ஒரு முயற்சி செய்திருக்கின்றார்.......... ஆனால் விதி கடவுளை விடவும் வலியது போல........
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
இது ஒரு ஈகோ பிரச்சனை; இப்படி நடக்கும் என்று நாங்களே எதிர்பார்க்கவில்லை; எங்களின் கையை மீறிப் போய்விட்டது....................🫣. இவையெல்லாம் காரணங்கள் என்றால், உலகில் எங்கும் மூன்று ஈழத்தமிழர்கள் ஒன்றாக கூடுவதற்கே எதிராக ஐநா சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து அதை ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும்.
-
தமிழ் மக்களைப் பாதுகாத்த இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றனா் – நாமல்!
2019ம் ஆண்டு கோதாபய 69 இலட்சம் வாக்குகள் எடுத்து வென்ற போது போது யாழ் மாவட்டத்தில் அவருக்கு கிடைத்தது 23, 261 வாக்குகள் மட்டுமே. சஜித்திற்கு கிடைத்தது 312,722 வாக்குகள். பொய் வாக்குறுதிகளைச் சொல்லி நீங்கள் வடக்கில் வாக்குகளை பெற்றுக் கொள்ளுங்கள், உண்மையைச் சொல்லி நாங்கள் மற்ற இடங்களில் பெற்றுக் கொள்கின்றோம் என்று ராஜபக்ச குடும்பம் முடிவெடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. வடக்கு வாக்கு இப்பொழுது இன்னும் தேய்ந்து, ஒரு பொருட்டாக இல்லாமலும் ஆகிக் கொண்டிருக்கின்றது. கோதாவும் பசிலும் கொஞ்சம் கட்டுப்பாடாக இருந்திருந்தால், நாமலும் ஒரு காலத்தில் ஜனாதிபதியாகி இருப்பார். கோதாவும் பசிலும் பண்ணிய சேட்டையில் நாமலுக்கு வடக்கும் இல்லை, தெற்கும் இல்லை என்றாகிவிட்டது.
-
இருளில் மூழ்கியது உக்ரைன்: இரு நாடுகள் இடையே மீண்டும் போர் தீவிரம்
இன்னும் பல வருடங்கள் போகும். அழிந்தது இரண்டு தேசங்களும். இன்றைய உலகில் எவரும் எவரையும் அடித்து வெல்ல முடியாது. இருவர் தகராறில் மூன்றாமவர் ஒருவர் உள்ளே வந்தால் இது தான் கதி என்றும். அதுவும் அமெரிக்காவிற்கு இதைவிட பொன்னான ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவே கிடைக்காது.
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
🤣......... சர்வதேசத்திற்கு ஒன்றாக, உரக்கச் சொல்லப் போகின்றோம் என்று சொல்லிக் கொண்டே இருக்காமால், உறைக்கத்தக்கதாக காட்டி விட்டோம்...........🫣.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
-
3 ம் உலகப்போர் மூள வாய்ப்பு; எச்சரிக்கிறார் ட்ரம்ப்
இந்தியா சாஸ்திரியார் குஜால் குமாரைக் கேட்டால், சரியாக எந்த நாளில் மூன்றாம் உலக மகாயுத்தம் தொடங்கப் போகுது என்று அந்த நாளைக் கூட குறித்துக் கொடுப்பாரே.................🤣. பைடன் போட்டியில் இருக்கும் போது என்ன கெத்தாக இருந்தார் ட்ரம்ப்......... இப்ப தினமும் ஏதாவது நித்திரையில் உளறுவது போல என்ன என்னவெல்லாமோ சொல்லுகின்றார்........ இரண்டு தேர்தல்களும் முடிந்தால் பரவாயில்லை என்று நினைக்க வைத்து விட்டார்கள்.............
-
இசைந்து வரும் ஏனம் - சுப.சோமசுந்தரம்
❤️............ ரஞ்சித், மாரி செல்வராஜ் மற்றும் இவர்கள் போன்றோரால் ஏனம் ஒதுக்கத்தக்க வேண்டிய ஒன்றில்லை என்ற விழிப்புணர்வு வந்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் 'சேத்துமான்', 'பன்னி குட்டி' என்னும் வேறு இரண்டு படங்களிலும் பன்றிகள் நடுவில் நின்றன. சேத்துமானில் பன்றியையே வீட்டிலேயே சமைக்க விடாத ஒரு பகுதியினரைக் காட்டி இருப்பார்கள். படத்தின் முடிவு கொஞ்சம் அதிர்ச்சியானது. பன்னி குட்டியில் பன்றிகளைப் பற்றியும், வேறு பல மூடநம்பிக்கைகளையும் காட்டி இருந்தனர். பன்றி மட்டும் இல்லை, வாத்து மற்றும் செம்மறியாடு போன்றவையும் ஒரு ஒப்பீட்டளவில் கீழாகவே பார்க்கப்படுகின்றன. அவைகளுக்கும் ஒரு காலம் வரும்............👍.
-
பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு அங்கி தேவையில்லை – காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும்
நன்றி ஏராளன். அங்கே திருத்திவிட்டேன்...................👍.
-
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: இன்று ஆரம்பம்
ஏ ஆர் முருகதாஸின் 'ஏழாம் அறிவு' படத்தின் கதையும் இப்படி ஒருவர் பற்றிய கதை தான். போதிசத்துவர் என்று போகும். ஒன்று கிமு, இன்னொன்று கிபி என்று இவருக்கு இரண்டு வரலாறுகள், தொன்மங்கள் உண்டு. வேலை இடத்தில் சில சீன நண்பர்களைக் கேட்டேன், சிரித்து விட்டார்கள்................
-
பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு அங்கி தேவையில்லை – காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும்
இப்படித்தான் இந்திய குற்றவியல் சட்டங்களின் பெயர்களையும், உள்ளடக்கங்ளையும் அவசரம் அவசரமாக மாற்றினார்கள். இதே காரணங்கள் தான், அதே மேற்கத்தைய சட்டங்கள் எங்களுக்கு எப்படி செல்லுபடியாகும் என்று. எங்கள் வரலாறு என்ன, நாங்கள் வந்த வழி என்ன, அப்பவே மனுஸ்மிருதி எழுதினோமே என்று ஏகப்பட்ட துணைக் காரணங்களும் உள்ளன. புதிய சட்டங்களுக்கு பெயர்களை இந்தியில் வைத்துள்ளார்கள். பாரதிய நியாய சன்ஹிதா (இந்திய தண்டனைச் சட்டம்), பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (குற்ற விசாரணைமுறைச் சட்டம்), பாரதிய சாக்ஷிய அதிநியம்(இந்திய சாட்சிகள் சட்டம்) என்பன புதிய பெயர்கள். இப்ப என்ன நடக்குது என்கிறீர்கள்............ தமிழ்நாட்டில் இவற்றைக் கிழித்து எறிந்து விட்டு, போராட்டங்கள் போய்க் கொண்டிருக்கின்றது. ஆங்கிலமே இருக்கட்டும், இந்தி தேவையில்லை என்று.......... உயர்நீதிமன்றில் வழக்கு தொடுத்து, உயர்நீதிமன்றம் இந்தப் பெயர்களுக்கு எதிராக தீர்ப்பும் வழங்கிவிட்டது. புதிய சட்டங்களின் உள்ளடக்கமும் பிற்போக்கானவை என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். பாஜக என்பது போக்கிரி வடிவேலு போல. எந்த உருவில் வந்தாலும், அந்தக் கொண்டையை நாங்கள் உடனேயே கண்டுபிடிக்கவேண்டும். வந்ததே............ பாஜக இதையும் கொண்டு வர முயன்றது. அப்பொழுது காந்தியையும் துணைக்கு சேர்த்துக் கொண்டார்கள். தமிழ்நாட்டில் கவர்னர் ரவி கூட இதற்கு ஆதரவாகப் பேசியிருந்தார். எதிர்ப்பு பலமானது என்று கண்டு, இது முடியவே முடியாது என்று அப்படியே பின்வாங்கினர்...........🫣
-
தமிழ் உலகின் இசையமைப்பாளர்கள்
இது விக்கிபீடியாவில் இருந்து. உருமாற்றம் செய்துள்ளேன். https://ta.wikipedia.org/wiki/இசையமைப்பாளர்களின்_பட்டியல் பெயர் முதல் படம் வருடங்கள் பாபநாசம் சிவன் சீதா கல்யாணம் 1934 - 1973 ஜி. ராமநாதன் சத்யசீலன் 1940 - 1963 கே. வி. மகாதேவன் மனோன்மணி 1942 - 1992 எம். எஸ். விஸ்வநாதன் பணம் 1945 - 2013 சி. ஆர். சுப்புராமன் பைத்தியக்காரன் 1948 - 1952 சுந்தரம் பாலச்சந்தர் இது நிஜமா 1948 - 1990 டி. ஆர். பாப்பா ராஜா ராணி 1956 - 2004 வேதா மர்ம வீரன் 1956 - 1971 ஏ. எம். ராஜா கல்யாணப் பரிசு 1959 - 1989 சங்கர் கணேஷ் மகராசி 1964 - தற்போது வி. குமார் நாணல் 1965 - 1976 டி. கே. ராமமூர்த்தி பணம் 1966 - 1986 குன்னக்குடி வைத்தியநாதன் வா ராஜா வா 1969 - 2008 இளையராஜா அன்னக்கிளி 1976 - தற்போது சந்திரபோஸ் மதுரகீதம் 1977 - 2010 கங்கை அமரன் ஒரு விடுகதை ஒரு தொடர்கதை 1979 - தற்போது டி. இராஜேந்தர் ஒரு தலை ராகம் 1980 - தற்போது எஸ்.பி. பாலசுப்பிரமணியம் துடிக்கும் கரங்கள் 1983 - 2020 வி. எஸ். நரசிம்மன் அச்சமில்லை அச்சமில்லை 1984 - தற்போது தேவேந்திரன் மண்ணுக்குள் வைரம் 1987 - தற்போது எஸ். ஏ. ராஜ்குமார் சின்னபூவே மெல்லபேசு 1987 - தற்போது எல். வைத்தியநாதன் பேசும் படம் 1987 - 2007 ஹம்சலேகா பருவ ராகம் 1987 - தற்போது கே. பாக்கியராஜ் இது நம்ம ஆளு 1988 - தற்போது தேவா மனசுக்கேத்த மகராசா 1988 - தற்போது வித்தியாசாகர் பூ மனம் 1989 - தற்போது கலைப்புலி எஸ். தாணு புதுப்பாடகன் 1990 - தற்போது எஸ். பாலகிருஷ்ணா எம். ஜி. ஆர் நகரில் 1991 - தற்போது மரகதமணி நீ பாதி நான் பாதி 1991 - தற்போது ஆதித்யன் அமரன் 1992 - தற்போது ஏ. ஆர். ரகுமான் ரோஜா 1992 - தற்போது கார்த்திக் ராஜா பாண்டியன் 1992 - தற்போது சிற்பி கோகுலம் 1993 - தற்போது மகேஷ் மகாதேவன் நம்மவர் 1994 - 2002 சுரேஷ் பீட்டர்ஸ் கூலி 1995 - தற்போது யுவன் சங்கர் ராஜா அரவிந்தன் 1997 - தற்போது பரத்வாஜ் காதல் மன்னன் 1998 - தற்போது பரணி பெரியண்ணா 1999 - தற்போது ஸ்ரீகாந்த் தேவா டபுள்ஸ் 2000 - தற்போது தினா அன்னை 2000 - தற்போது ஹாரிஸ் ஜயராஜ் மின்னலே 2001 - தற்போது மணிசர்மா ஷாஜகான் 2001 - தற்போது சபேஷ் முரளி சமுத்திரம் 2001 - தற்போது பிரவீன் மணி லிட்டில் ஜான் 2001 - தற்போது ஷங்கர் - எசான் - லாய் ஆளவந்தான் 2001 - தற்போது ரமேஷ் விநாயகம் ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே 2002 - தற்போது டி. இமான் தமிழன் 2002 - தற்போது தேவி ஸ்ரீ பிரசாத் இனிது இனிது காதல் இனிது 2003 - தற்போது ஏ. ஆர். ரைஹானா மச்சி 2004 - தற்போது ஜோசுவா சிறீதர் காதல் 2004 - தற்போது விஜய் ஆண்டனி சுக்ரன் 2005 - தற்போது நிரு கலாபக் காதலன் 2005 - தற்போது பவதாரிணி அமிர்தம் 2006 - 2024 சுந்தர் சி. பாபு சித்திரம் பேசுதடி 2006 - தற்போது கஸ்தூரி ராஜா இது காதல் வரும் பருவம் 2006 - தற்போது ஜி. வி. பிரகாஷ் குமார் வெயில் 2006 - தற்போது தரண் குமார் பாரிஜாதம் 2006 - தற்போது யுகேந்திரன் வீரமும் ஈரமும் 2007 - தற்போது பிரேம்ஜி அமரன் தோழா 2008 - தற்போது ஜேம்ஸ் வசந்தன் சுப்பிரமணியபுரம் 2008 - தற்போது எஸ். எஸ். குமரன் பூ 2008 - தற்போது அச்சு இராஜாமணி என்னைத் தெரியுமா 2008 - தற்போது வி. செல்வகணேஷ் வெண்ணிலா கபடிகுழு 2009 - தற்போது எம். ஜி. ஸ்ரீகுமார் காஞ்சிவரம் 2009 - தற்போது வசந்த் செல்லதுறை இளம்புயல் 2009 - தற்போது கருணாஸ் ராஜாதி ராஜா 2009 - தற்போது போபோ சசி குளிர் 100 2009 - தற்போது எஸ். தமன் மாஸ்கோவின் காவிரி 2009 - தற்போது சுருதி ஹாசன் உன்னைப்போல் ஒருவன் 2009 - தற்போது சதீஸ் சக்கரவர்த்தி லீலை 2009 - தற்போது குரு கல்யாண் மாத்தியோசி 2010 - தற்போது தேவன் ஏகாம்பரம் பலே பாண்டியா 2010 - தற்போது என். ஆர். ரகுனந்தன் தென்மேற்கு பருவக்காற்று 2010 - தற்போது கிருஷ்ண குமார் யுத்தம் செய் 2011 - தற்போது ஜிப்ரான் வாகை சூட வா 2011 - தற்போது விஜய் எபிநேசர் கண்டேன் 2011 - தற்போது அருள்தேவ் போட்டா போட்டி 2011 - தற்போது சி. சத்யா எங்கேயும் எப்போதும் 2011 - தற்போது ஆர். பிரசன்னா வழக்கு எண் 18/9 2011 - தற்போது சந்தோஷ் நாராயணன் அட்டகத்தி 2012 - தற்போது சித்தார்த் விப்பின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2012 - தற்போது கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மெரினா 2012 - தற்போது பேரரசு திருத்தணி 2012 - தற்போது நடராஜன் சங்கரன் மூடர் கூடம் 2013 - தற்போது சைமன் ஐந்து ஐந்து ஐந்து 2013 - தற்போது ஜஸ்டின் பிரபாகரன் பண்ணையாரும் பத்மினியும் 2014 - தற்போது ஷான் ரோல்டன் வாயை மூடி பேசவும் 2014 - தற்போது சிவமணி அரிமா நம்பி 2014 - தற்போது சுதர்சன் எம். குமார் பர்மா 2014 - தற்போது அர்ஜுன் ஜன்யா ஜெய்ஹிந்த் 2 2014 - தற்போது விஷால் சந்திரசேகர் அப்புச்சி கிராமம் 2014 - தற்போது தர்புகா சிவா கிடாரி (2016 திரைப்படம்) 2015- தற்போது வரை அனிருத் ரவிச்சந்திரன் 3 2013-தற்போது வரை யுவன்ஸ்ரீ தயாநிதி உன் நினைவுகள் 2022-தற்போது வரை ஹிப் ஹாப் தமிழா ஆம்பள 2015-தற்போது வரை
-
ரஷ்யா பெரும் தாக்குதலுக்கு தயாராகும் வேளையில் யுக்ரேன் செல்வதா? மோதியை எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள்
அவர் இந்தியாவிலே இருந்தால், மணிப்பூருக்கு இன்னும் போகவில்லையே, போகவில்லையா என்று அவரைக் கேள்வி கேட்டுத் துளைக்கின்றார்கள். கேரள வயநாட்டிற்கு போனார், ஆனால் மணிப்பூருக்கு இன்னும் போகவில்லை. உலக சமாதானம் பேச உக்ரேன் போனேன் என்று இனிமேல் பதில் சொல்லலாம் தானே...........
-
ஜனாதிபதி தேர்தல்; வாக்களிப்பது எப்படி?; 50 வீதம் கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?
🤣.... இதை அப்படியே ஒரு நேர்முகக் கேள்வியாக மாற்றி, 'இதுக்கு எழுதுங்கோ ஒரு புரோகிராம்..........' என்று நேர்முகத் தேர்விற்கு வருவோர் எல்லோரின் தலைகளையும் உருட்டவும் இது உதவும். இன்னும் நாலு ஜனாதிபதி தேர்தல்கள் வந்து போனாலும் நாமலுக்கு இதுவும் விளங்கப் போவதில்லை.........
-
10 மணி நேர ரயில் பயணம் – உக்ரைன் , போலந்து செல்லும் மோடி
நாங்கள் இங்கே கதைத்ததை யாரோ மோடிக்கு சொல்லிவிட்டார்கள்............... உக்ரேனுடனும் நல்ல நெருக்கம் என்று காட்டுகின்றார்............🤣.
-
கிருஷ்ணகிரி பாலியல் கொடுமை வழக்கு: அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் - சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை
கேடுகெட்ட மனிதர்கள். எல்லாமே அரசியல் இவர்களுக்கு, எங்கேயும் ஆதாயம் தேடுவது தான் இவர்களின் பிழைப்பு. பக்கம் பக்கமாக அறிக்கைகள் விடுவதையும், பாதயாத்திரைகள் போவதையும் விடுத்து, ஒரு விழிப்புணர்வு நடவடிக்கையாவது எடுத்திருப்பார்களா.......
-
அதிக மாத வருமானம் பெறும் வேட்பாளா்களின் விபரம் வெளியானது!
அரியநேந்திரனின் படம் இங்கு இல்லை. அவர் மாதம் 68,000 ரூபாய்கள் மட்டுமே வருமானமாகப் பெறுவதாகச் சொல்லியிருக்கின்றார்.
-
உச்சக்கட்ட பதற்றம்... பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில் எச்சரிக்கும் ரஷ்யா
நேற்று பனிப்போர் என்று சொன்னார்கள், இன்று மூன்றாம் உலகப் போர், நாளை அணு ஆயுதப் போர் என்பார்கள்............... அப்படியே ரிப்பீட்......... ஆதவன் என்ற பெயரில் செய்தி வெளியிடுவதும், ஐபிசி தமிழ் என்ற பெயரில் செய்தி வெளியிடுவதும் ஒரே ஆளா................ (இங்கே பிரகாஷ்ராஜ் வரவேண்டும்........😀) 'செத்த கிளிக்கு சிங்காரம் எதுக்கு..........' என்பது என்றும் சாகாத ஒரு சொலவடை.........🤣
-
சௌதி இளவரசரின் எழுச்சி - அமெரிக்காவுக்கு இணங்காத, அச்சமற்ற செயல்களால் நாயகன் ஆனது எப்படி?
இவர்கள் எல்லோரும் நாயகர்களாக இருந்தால், இஸ்ரேல் ஏன் இப்படி வீடு புகுந்து இவர்களை அடித்துக் கொண்டிருக்கின்றது............. இஸ்ரேலுடன் ஒரு உடன்படிக்கையை போட்டு விட்டு, தப்பினோம் என்று இருக்கின்றனர் சவூதியும், எகிப்தும்.
-
இலங்கை போவதற்கு 35 நாடுகளுக்கு விசா தேவையில்லை.
அங்கே நேரே போய் குடிவரவு அதிகாரிகளிடம் நேரேயே எடுப்பது தான் சிறந்த வழி என்கின்றார்கள். சில வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களும் தற்போதைக்கு இந்த விசாக்களை வழங்க ஆரம்பித்திருக்கின்றன. https://www.dailymirror.lk/breaking-news/Sri-Lankan-missions-to-issue-tourist-and-business-visas/108-288838 புலம் பெயர்ந்த சிங்கள இளைஞன் ஒருவர் 'நீ யார் எனக்கு விசா கொடுக்கவும், தடுக்கவும்..........' என்று அங்கு வேலையில் இருந்த இந்தியர்களுடன் தகராறு செய்ததை நீங்கள் சொல்கின்றீர்கள் போல.