Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. இல்லை நுணாவிலான், கடந்த தேர்தலில் சஜித் அங்கு வெல்லவில்லை. அம்பாந்தோட்டையில் 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோதபாய ராஜபக்ச 278,804 (66.17%) வாக்குகளையும், சஜித் பிரேமதாச 108,906 (25.85%) வாக்குகளையும் பெற்றிருந்தனர். சஜித் ஆகக் குறைந்த வாக்கு வீதத்தை அம்பாந்தோட்டையிலேயே பெற்றிருந்தார்.
  2. போரில் நேரடியாக ஈடுபட்டாலோ அல்லது ஒரு கடுமையான போர்ச் சூழலில் வாழ்ந்தாலோ, உளச்சிதைவு, மன அழுத்தம், அதிகப்படியான அதிர்ச்சி என்பன ஒருவரைத் தாக்கும் சாத்தியம் மிக அதிகம் என்று சொல்வார்கள். இங்கு ஒரு பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டாலும், இவை பற்றி பலரும் பல ஊடகங்களில் உரையாடுவார்கள். ஆனாலும், எங்களில் இந்த வகையான தாக்கம் மிகக் குறைவாகவே இருப்பதாகத் தெரிகின்றது. பல கொலைகளையும், கொடுமைகளையும் அனுபவித்தும், நேரில் பார்த்த பின்னும், ஆனால் எந்த விதமான கவுன்சிலிங்/சிகிச்சை எதுவும் இல்லாமல் எப்படி எங்களால் சாதாரணமாக வாழ்க்கையை தொடர முடிகின்றது என்பது கொஞ்சம் வியப்பே. நாங்கள் வாழ்க்கையை நோக்கும் விதமே வேறு போன்று. இப்படியான முடிவு எடுப்பவர்கள் தனியே தற்கொலை செய்து கொள்ளாமல், அந்தக் கணத்தில் ஏதுமறியாத இன்னும் சிலரையும் எதற்காகக் கொல்கின்றனர் என்றும் யோசித்ததுண்டு. நல்ல காலம், இந்தச் சம்பவத்தில் அவர் எவரையும் கொல்ல நினைக்கவில்லை, ஆனாலும் தனியே தன் கைகளால் சாகவும் விரும்பவில்லை. போன வருடம் என்று நினைக்கின்றேன். கேரளாவில் ஒரு பேராசிரியர், அவர் ஒரு சமூகப் போராளியும் கூட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேந்தவர், தற்கொலை செய்து கொண்டார். பொதுவாக இந்தச் சமூகத்தில் இருக்கும் வெறுப்பு என்றே காரணம் எழுதியிருந்தார். அதே வாரம் இங்கு லாஸ் வேகாஸில் அதே வயதுடைய ஒரு பேராசிரியர் இங்குள்ள பல்கலையில் சில மாணவர்களை சுட்டுக் கொன்று விட்டு தானும் இறந்து போனார்.
  3. எப்பவோ முழுக்கவே நனைந்து விட்டார்கள், இனி எதற்கு முக்காடு என்று துணிந்து விட்டார்கள் நாமல் மற்றும் அவரின் தந்தையார். அம்பாந்தோட்டையிலாவது இவர்கள் முதலாவதாக வந்தால் பேசிய இந்தப் பேச்சு வீண் போகவில்லை என்று நினைக்கலாம். அங்கேயும் வராவிட்டால், அடுத்த தேர்தலுக்கு எதை வைத்து அரசியல் செய்யப் போகின்றார்களோ...........
  4. 👍.................. நல்ல ஒரு கட்டுரை. ஜேவிபியினருக்கு இந்தத் தடவை நாடு முழுவதும் காணப்படும் ஆதரவு அலை ஆச்சரியமானதே. ஆனால் முன்னைய காலங்களில் அவர்களுக்கு இருந்தததாகக் காட்டப்பட்ட ஆதரவு ஊதிப் பெருப்பிக்கப்பட்ட ஒன்றே, அவை உண்மையான அளவுகள் அல்ல. முன்னர் அவர்களுக்கு இருந்ததாக சொல்லப்பட்ட ஆதரவு கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் சீமானுக்கு இருக்கும் ஆதரவாக பொதுவெளியில் உண்டாக்கப்படும் மாய விம்பம் போன்றதே. இவர்களின் பிரச்சாரங்களின் பலத்தை விட, பிரச்சாரத்தின் தன்மை அந்த தோற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்தவை. இவர்களின் அடி மட்டத் தொண்டர்களும் ஓயாதவர்கள், அது இன்னொரு காரணம். அலை அப்படியே சிதறாமல் வாக்குகளாக மாறி, அநுரவால் ரணிலையோ அல்லது சஜித்தையோ தாண்ட முடியுமா என்பது சந்தேகமே. ஆனாலும் 30 வீத அளவில் வாக்குகளைப் பெற்று முதல் மூவரில் ஒருவராக வந்தாலே, அது ஜேவிபியின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையே. 'இவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்ப்போமே...........' என்று ஒருவரையோ அல்லது ஒரு கட்சியையோ தேர்ந்தெடுப்பது சரியான ஒரு தெரிவல்ல. அது ஒரு உணர்ச்சிகரமான முடிவிற்கு சமம். ஏற்கனவே ஒரு கட்சிக்கு அல்லது தனிநபருக்கு ஆதரவாக இல்லாமல், நடுநிலையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் வாக்காளர்கள் இப்படியான ஒரு எண்ணத்துடன் ஒரு வேட்பாளருக்கு பெருமளவில் வாக்கப்பளிப்பது நடைமுறையில் சாத்தியம் குறைந்த ஒரு நிகழ்வு.
  5. நல்ல ஒரு ஆக்கம், கோபி. விளிப்பு - விழிப்பு.......👍.
  6. 🤣.......... அப்படி இல்லை, அண்ணா. நூறு சண்டைகள் உலகத்தில் இப்ப நடந்து கொண்டிருந்தாலும், இந்த ஒரு சண்டையில் தானே இரு வல்லரசுகள் கிட்டத்தட்ட நேருக்கு நேரே மோதிக் கொண்டிருக்கின்றன. ஆயுதப் பாவனைகளில் ஒவ்வொரு படியாக இருவரும் மேலே மேலே போய்க் கொண்டிருக்கின்றார்கள். அமெரிக்காவின் அதி தூர ஏவுகணைகளை பாவிப்பதற்கு அமெரிக்கா உக்ரேனுக்கு அனுமதி கொடுப்பது அடுத்த கட்டம். அப்படி நடந்தால், அழியப் போகின்றார்கள். மேலும் ரஷ்யாவிடமிருந்தும், உக்ரேனிடமிருந்தும் உலகத்திற்கு தேவையானவை அதிகம் - தானியங்கள், எரிபொருள் உட்பட. இவை உலகச் சந்தையில் கட்டுப்படியாகும் விலைக்கு கிடைக்கா விட்டால், இன்னும் எத்தனை நாடுகளில் 'அரகலிய' ஆரம்பித்து அமைதி கெடுமோ............
  7. பொதுவாகவே சண்டை போடுபவர்கள் இருவரும் ஒரு சமாதான நிலைக்கு வந்து விட்டால், அங்கே மூன்றாம் தரப்பிற்கு இடம் இல்லாமல் போய்விடும். புடின் தான் சண்டையை நிறுத்த வேண்டும். புடின் ஏன் இதுவரை நிறுத்தவில்லையென்றால், இது இப்போது ஒரு தன்மானப் பிரச்சனை ஆகிவிட்டது அவருக்கு. இரண்டு வாரங்கள், இரண்டு மாதங்கள், இரண்டு வருடங்கள் என்று நீண்டு கொண்டிருக்கின்றது. புடின் சண்டையை நிற்பாட்ட மாட்டார் என்றே நினைக்கின்றேன். ஒன்றில் அவர் வெல்ல வேண்டும், அல்லது அவர் இல்லாமல் போகவேண்டும். அதுவரை அவர் தொடர்வார்.
  8. 🤣....... இது ட்ரம்பை வெல்ல வைப்பதற்கான வசீயின் திட்டம் போலத் தெரிகின்றது......... உலகத்திற்கு ட்ரம்பை பிடிக்கும். இங்கு உள்ளூரில் இன்னும் சரியாகத் தெரியவில்லை யார் வெல்லப் போகின்றார்கள் என்று. ஆனாலும் இருவரும் சும்மா கதை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள், பூச்சாண்டி காட்டுகின்றார்கள். இந்த இருவரில் எவர் வந்தாலும் உலக நிலையில் இவர்களால் பெரிய மாற்றம் எதுவும் வராது. இவர்கள் இருவரையும் விட, ரஷ்ய அதிபர் புடின் நினைத்தால் இன்றே உலகம் கொஞ்சம் அமைதியாகும்.
  9. இன்று போதைப் பொருட்கள் இந்தியாவின் ஊடாகத்தான் இலங்கைக்குள் வந்து போகின்றன என்பது சரியென்றே தெரிகின்றது. அமைவிடமும், வசதியும் இதற்கு சாதகமாக உள்ளது. அதே வசதி பாகிஸ்தானிற்கும் அமைந்து விடுமோ என்று இலங்கை பயப்பிடுகின்றது போல......... ஈஸ்டர் சண்டே, ஆமாம், இரண்டு கதைகளும் உண்டு. சஹ்ரான் வந்து உண்மையைச் சொன்னால் தான் உண்டு.
  10. சேலை முள்ளில் விழுந்தால், அதன் பின்னர் என்ன ஆனாலும் சேலைக்கு தான் நஷ்டம் என்பது போல இந்த விடயத்தில் இலங்கையின் நிலை ஆகிவிட்டது. பாகிஸ்தானை அப்படியே உள்ளே விட்டால் போதைப் பொருள், ஈஸ்டர் சண்டே என்று பயம். உள்ளே விடாவிட்டால், நட்பு முறிந்து விடுமே என்ற சிக்கல் இப்பொழுது. இலங்கை தான் எல்லா நாடுகளிடமும் உதவிகள் கேட்டும், பெற்றும் இருக்குதே. பேசாமல் 180 நாடுகளுக்கும் விசாவை தளர்த்தி விட வேண்டியது தான்...........
  11. கொடிகாமத்தில் செய்தது போலவே, உடுப்பிட்டியிலும் ஒரு பரிசளிப்பு விழாவையும் சேர்த்தே வைத்திருந்தால் உடுப்பிட்டியிலும் கொஞ்சமாவது கூட்டம் வந்திருக்கும். ஆனால் வடமராட்சியில் இப்போது மூன்று லீக்குகள் இருக்கின்றதென்று நினைக்கின்றேன் - வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு. இதில் யாரைக் கூப்பிடுவது, யாரை விடுவது என்று அது வேற ஒரு பிரச்சனை இருக்குது. ஏன் தேவையில்லாத வம்பு என்று தான் உடுப்பிட்டியில் பரிசளிப்பு விழா நடத்தவில்லை போல.........
  12. 🤣.......... எங்களோட சேர்ந்து தமிழின் நிலையும் இப்படியாகி விட்டதே, ஐயா............. தேர்தல் நாட்களில் மட்டும் கவனிப்பார்கள்........
  13. அப்படித்தான் ஒன்றாக இருந்தோம், விசுகு ஐயா. உங்களுக்கு இங்கிருக்கும் பலரை விட மிக நன்றாகவே எங்களின் வரலாறு தெரியும். ஆரம்பத்தில் இந்தப் பிரதேசம் பல கூறுகளாகப் பிரிந்தே கிடந்தது. என்னுடைய ஊரே இரண்டாகப் பிரிந்து இருந்தது. பின்னர் ஒன்றாகியது. ஒரு தலைமை, ஒரு கொள்கை, ஒரு இலட்சியம், அதை விட முக்கியமாக அந்த தலைமையின் அந்த இலட்சியத்தை அடைந்து விடலாம் என்று நாங்கள் எல்லோரும் அன்று நம்பியது, இவை தான் அந்த ஒற்றுமைக்கு காரணம். இன்று அப்படியான ஒரு நம்பிக்கையை கொடுப்போர் என்று எவரும் எங்கள் மத்தியில் இல்லை..............😌.
  14. சாதனைகள் செய்தால் மட்டும் போதாது, அவை வெளியேயும் உலகிற்கு தெரியவேண்டும். பலருக்கும் தெரியா விட்டால் அது என்ன சாதனை...... ஆழிக்குமரன் ஆனந்தன் எத்தனை சாதனைகள் செய்தார். நாங்களும் அவர் பின்னால் டிஸ்கோ ஆடுகின்றோம், சைக்கிள் ஓடுகின்றோம், நீந்துகின்றோம், மிதக்கின்றோம், பின்னால் நடப்பது, கயிறடித்தல்,.............. என்று திரிந்தோம். அவர் ஒரு முன்மாதிரி. இந்தப் பிள்ளைக்கு நல்ல நேரம். தேர்தல் நேரம், ஒவ்வொரு வாக்கும் ஒரு பொன் என்று பலரும் வீடு தேடி வருவார்கள். ஒரு சாதனையில் இருந்து பல சாதனை முயற்சிகள் உருவாகக்கூடும். சமீபத்தில் என்று நினைக்கின்றேன். கவிஞர் இசை அவர்கள் கவிதை எழுதுவதில் ஒரு உலக சாதனை செய்துள்ளதாகச் சொன்னார்கள். ஒரு சிறு வட்டத்திற்குள்ளே மட்டுமே இது தெரிந்திருந்தது. தூணிலும் துரும்பிலும் சமூக ஊடகங்கள் இருக்கும் இந்தக் காலத்தில் கூட இந்தச் சாதனை வெளியே வரவில்லை. கவிஞர் இசை அற்புதமான ஒரு தற்காலக் கவிஞர். எனக்கு விளங்கிய அவரின் கவிதைகள் உலகத் தரமானவை. எனக்கு விளங்காதவை அதை விட தரமானவையாக இருக்கவேண்டும்........😀. ஆனாலும் அவரையும் ஆட்களுக்கு அவ்வளவாகத் தெரியாது, அவரது சாதனையையும் தெரியாது............
  15. 🫢........ முந்தி சுமந்திரனுக்கு இந்தப் பக்கத்தில் கொஞ்சம் கூட்டம் இருந்தது. இப்ப அந்த கூட்டத்திற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. பிறகு அங்கஜன் அங்கே முன்னுக்கு வந்தார். இப்ப எல்லாரும் அங்கஜன் பக்கம் போய் விட்டார்களோ..... டக்ளஸுக்கும் அங்கே ஒரு கூட்டம் இருக்குது. அங்கே சிலர் அரியநேத்திரனுக்கும் போடுவார்கள். அநுரவிற்கும், நாமலுக்கும் உடுப்பிட்டித் தொகுதியில் எத்தனை வாக்குகள் கிடைக்கும் என்பது ஒரு மர்மம் தான்.............
  16. பொதுவாக ஐடி குரூப், அதிகமாகச் சம்பாதிப்பவர்கள் என்று தான் இந்த வலையில் போய் விழுவார்கள். ஜக்கியின் Inner Engineering, நித்தியின் கதைவைத் திற காற்று வரட்டும், ஶ்ரீஶ்ரீயின் நடனங்கள் போன்றவற்றிற்கு இவர்கள் தான் வாடிக்கையாளர்கள். இப்ப புதிதாக பாடசாலை மட்டத்திலிருந்தே ஆரம்பிக்கின்றார்கள் போல. குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஜனரஞ்சக படங்கள் என்று விளம்பரத்துடன் வரும் படங்கள் போல, இது இந்தப் புதிய தத்துவ வகுப்புகளுக்கு குடும்பங் குடும்பங்களாக கூட்டம் சேர்க்கும் பெரிய வியாபாரத் திட்டம் போல..........🫣.
  17. சிலருக்கு தாங்களும் ஒரு சமூகத்தின் 'பேசு பொருளாக' எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவா அளவுக்கு மீறி இருக்கின்றது. சிவாஜிலிங்கம், சீலரத்ன தேரர், இப்படி ஒரு கூட்டமே இந்த வகையில் உலகெங்கும் இருக்கின்றது. அதற்காக என்ன குத்துகரணமும் போடுவார்கள். இவர்களைப் போன்றோரால் வேறு பலரால் முன்னெடுக்கப்படும் காத்திரமான முன்னெடுப்புகள் கூட மக்களால் கவனிக்கப்படாத, நிராகரிக்கப்படும் ஒரு நிலை இறுதியில் வரும். இவர்கள் எல்லோருமே வெறும் கோமாளிகளோ என்று நினைப்பு வருவது தவிர்க்க முடியாதது. நீங்கள் சொல்லுவது போலவே இவரா அல்லது அவரா என்ற ஒரு தனிநபர் பற்றிய விவாதம் அல்ல இது. சிவாஜிலிங்கத்தின் பெயரை அனந்தி குறிப்பிட்டிருந்தபடியால் இதை எழுத வேண்டியதாகப் போய்விட்டது......
  18. சிவாஜிலிங்கம் மிக சிறுபிள்ளைத்தனமானவர். எத்தனையோ உதாரணங்கள் உண்டு. வல்வை நகரசபையின் வரவு - செலவுத் திட்டம் மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்பட்டதும், அதற்கு பின்னுள்ள காரணமும் இவர்களே சொல்லிக் கொள்ளும் தமிழ் தேசியத்திற்கு எவ்வளவு முரணானது. இவர் தான் அதன் பின்னணி. இப்படி பல உண்டு. சிலது கோமாளித்தனமானவை. இவர் ஒரு வேட்பாளர் என்றால், எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்......... புதிதாக வந்த அரியநேத்திரனையும் இவருடன் ஒப்பிடுகின்றார்களே........🫣.
  19. 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில் மதுரை மகா என்ற காமடியனாக இருந்தவர், அப்படியே ஒரே பாய்ச்சலில் ஒரு ஆன்மீகக் குருவாக மாறும் அதிசயம், மகாவிஷ்ணு என்னும் பெயருடன், நடந்தது பாரதியும், புதுமைப்பித்தனும், பெரியாரும் வாழ்ந்த, திராவிடம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியிலேயே. நித்தியானந்தா இந்த இடத்திற்கு வருவதற்கு எத்தனை வருடங்கள் எடுத்தார். எத்தனை மாஜிக் ஷோ நடத்தினார். ஆனால் மதுரை மகா அப்படியே அசால்டாக அலுங்காமல் குலுங்காமல் ஒரு ஆன்மீகக் குருவாகினார். சான்பிரான்ஸ்சிஸ்கோ, சிகாகோ என்று முதலீடுகளை உலகெங்கும் தேடும் முதல்வர் ஸ்டாலின், முதலில் தேடிக் கண்டு பிடிக்க வேண்டியது யார் இந்த மதுரை மகாவை பாடசாலைகளில் பேச அனுமதித்தது என்று. இவர்கள் சொல்வது போல அது பள்ளித் தலைமையாசிரியையோ அல்லது பள்ளி மேலாண்மைக் குழுவோ அல்ல. இதைக் கண்டுபிடித்து வெளியில் சொல்ல இன்னும் எத்தனை நாட்கள் இவர்களுக்கு தேவை? மதுரை மகா தமிழ்நாட்டில் மட்டும் தான் ஒரு ஆன்மீக வழிகாட்டி என்றில்லை. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என்று முன்னர் கோபால் பற்பொடி விற்கப்பட்ட அததனை நாடுகளிலும் அவருக்கு கிளைகள் உண்டு. மேலதிகமாக, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என்றும் பறந்து சேவை செய்து கொண்டிருக்கின்றார். இங்கு அமெரிக்காவில் நித்தியின் பக்தர்கள் அடுத்த ஒரு குருவிற்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள், அதற்கிடையில் மகாவிற்கு இப்படி ஆகிவிட்டது............🤣.
  20. இரண்டும் ஒரே சொல்ல மறந்த கதைகள் போல, விசுகு ஐயா. தனுஷின் திருமணம் முடிந்த பின், கஸ்தூரிராஜா குடும்பத்துடன் ஒரு தூரம் இருந்ததாகவே தெரிந்தது. எத்தனை செய்திகள் வந்தன. உண்மை பொய் தெரியப் போவதில்லை.
  21. சிவாஜிலிங்கம் நின்றது போலவே தான் அரியநேத்திரனும் நிற்கின்றார் என்று ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால், இன்டர்நெட் ட்ராபிக் கொஞ்சம் குறைந்திருக்கும்...........தேவையில்லாமல் எவ்வளவு கட்டுரைகளையும், பத்திகளையும் வாசித்தும், எழுதியும் விட்டோம்............
  22. ஒரு ஒன்றுகூடல் மற்றும் வாலிபால் விளையாட்டு போட்டிகளுக்குகாக இங்கிருக்கும் வேறு ஒரு நகரத்துக்குப் போய், பின்னர் திரும்பி வர சில நாட்கள் ஆகிவிட்டது, ஏராளன். இங்கு ஒரே வெயில் வேற, போட்டிகள் முடிந்து வந்தும், அந்த வலியும், அலுப்பும் தீர சில நாட்கள் எடுத்து விட்டது.........👍.
  23. மனைவியின் வீட்டார்கள் அவரை மதிக்கவில்லை, அதனாலேயே இந்தப் பிரிவு என்று சொல்கின்றனர். முன்னரேயே இந்த விடயம் ஒரு வதந்தியாக உலாவிக் கொண்டிருந்தது. '..........என் நடிப்பின் மூலம் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதே என் நோக்கம்........' என்று ரவி சொல்லியிருப்பது அனுபவமும், முதிர்ச்சியும் இல்லாத ஒரு கூற்று. மக்கள் படங்களைப் பார்த்து விட்டு, அவர்களின் மனைவிகள், குழந்தைகள் என்று வாழ்ந்து கொண்டிருப்பார்கள். தனிமையும், வெறுமையும் ரவிக்கு மட்டுமே. 'சொல்ல மறந்த கதை' என்று ஒரு படம் வந்தது. தங்கர்பச்சனின் படத்தில் சேரன் நடித்திருந்தார். படம் நல்லாயிருந்தது என்று சொன்னார்கள், ஆனால் அந்த திரைக்கதை திரையை விட்டு, தியேட்டர்களை விட்டு வெளியே வரவேயில்லை போல.........😌
  24. 👍....... அவர் எதிர்பார்க்கப்பட்டதிற்கு மேலாகவே நின்றுபிடித்தார். அவரின் 'மண்ணின் மைந்தன்' என்ற ஒரு பிம்பமும், ஆதரவும் அதற்கான பிரதான காரணங்கள் ஆகும். இவரே கொழும்பில் பிறந்து வளர்ந்து, ரஷ்யாவில் படித்து விட்டு வந்திருந்தால், பேராதனை இடமாற்றத்துடன் நம்மவர்கள் இவரை மறந்திருப்பார்கள்.
  25. 👍........... எல்லோர் மத்தியிலும் இந்த ஒற்றுமையின்மை இருக்கின்றது என்பது உண்மையே. உதாரணமாக, தெலுங்கு மக்கள் எல்லோரும் மிக ஒற்றுமையானவர்கள் என்று ஒரு காலத்தில் தமிழர்கள் சொன்னார்கள். தமிழர்கள் தான் ஒற்றுமையில்லாதவர்கள் என்றனர் தமிழகத்து மக்கள். இந்திய ஐடி துறை தமிழர்களாலும், தெலுங்கு மக்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றது. ஆகவே இந்த ஒப்பீடும், பேச்சுக்களும் அங்கே எப்போதும் இருக்கும். பின்னர், தெலுங்கு பேசும் மக்கள் இரு தேசங்களாகவே, ஆந்திரா மற்றும் தெலுங்கானா, என்று பிரிந்தார்கள். தெலுங்கு மக்களின் அபிப்பிராயமே வேறு மாதிரி இருக்கின்றது. அவர்களின் கூற்றுப்படி தமிழர்கள் மிகவும் ஒற்றுமையானவர்கள், ஆனால் தெலுங்கு மக்கள் ஒற்றுமை அற்றவர்கள் அல்லது குறைந்தவர்கள். இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பது போல. இது கிட்டத்தட்ட எல்லா மக்கள் தொகுதிகளுக்கும் பொருந்துகின்றது. ஆனாலும், பலரும் உலகெங்கும் ஒரே குரலில் என்றும் சொன்னது ஈழத்தமிழர்கள் மிகவும் ஒற்றுமையானவர்கள் என்று. ஒரு படி மேலே போய், அதற்கான காரணத்தையும் சிலர் சொன்னார்கள். ஒடுக்கப்படும், துரத்திக் கலைக்கப்படும் மக்கள் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பதே அவர்கள் சொன்ன காரணம். கிட்டத்தட்ட ஒரு ஒற்றைத் தலைமையின் கீழ் நாங்கள் இருந்ததும் எங்களின் அன்றைய ஒற்றுமைக்கு இன்னொரு காரணமாக இருக்கக்கூடும். வேறு சிலர் சிறு தலைமைகளாக இருந்தாலும், அவர்களும் கூட பொதுவெளியில் இருந்தோரே. 'யார் இவர்...?' என்று எங்களை நினைக்க வைத்த ஒரு அமைப்போ அல்லது தனிநபரோ அன்று இருக்கவில்லை. இன்று எங்களில் பலர் ஒடுக்கப்படும், துரத்திக் கலைக்கப்படும் மனநிலையில் இல்லை. பலர் அங்கங்கே நிரந்தரம் ஆகிவிட்டார்கள். தலைமை என்பது அறவே இல்லை. எல்லோரும் தலைவர்கள். புதுமைப்பித்தன் ஒரு தடவை சொல்லியிருந்தார்: மூன்று நேரத்திற்கும் வழி (சாப்பாடு) இருந்தால், அடுத்ததாக ஆச்சாரமும், கலாச்சாரமும் அந்த வீடுகளில் புகும் என்று. ஆச்சாரமும் கலாச்சாரமும் மட்டும் இல்லை, அதிகாரமும் அந்த மனங்களில் புகும் என்று அதை திருத்தி எழுதவேண்டும். சுதந்திரம் அல்ல, சின்னச் சின்ன அதிகாரங்கள் வேண்டி அலைக்கழிய ஆரம்பித்துள்ளோம். எந்த நிலையிலும், ஒரு தனிமனிதனின் மதிப்போ அல்லது ஒரு சமூகத்தின் மதிப்போ அந்த மனிதனின், அதன் நடவடிக்கைகளாலேயே மற்றவர்களால் தீர்மானிக்கப்படும். செயல்களைப் போன்றே வார்த்தைகளும் முக்கியமானவை (இங்கு களத்திலும் எழுத்தில் வார்த்தைகள் முக்கியமானவையே.....😜). நாங்கள் இவற்றை இலகுவில் மறந்து விடக்கூடும், கடந்து விடக்கூடும், ஆனால் இவை மட்டுமே மற்றவர்களுக்கு நினைவில் தங்கியிருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.