Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. ❤️............. மிக்க நன்றி கந்தப்பு அவர்களே போட்டியை நடத்துவதற்கு. படிக்கிறம், எழுதுறம், வெல்லுறம்............... ஆனாலும் எவ்வளவு தான் படித்தாலும், என்னுடைய அறிவிற்கு பல கேள்விகள் out of syllabus ஆகத் தான் முடியும் போலவும் கிடக்குது...........🤣.
  2. இது ஒரு உரை இல்லை.............. இது ஒரு தேர்தல் பிரச்சாரம் அவருடைய புதிய ஜனநாயக் கட்சிக்காக, சிலிண்டர் சின்னத்துக்காக...... நாம தான் தப்பாக புரிந்து கொண்டு வேற எதையோ எதிர்பார்த்துவிட்டோம் போல............🤣. சிலிண்டர், குக்கர், தபால்பெட்டி, ஃபோன், கல்குலேட்டர்................ எங்கள் காலத்து ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையே பரவாயில்லை போல............
  3. 👍....... அவரின் முன்னோர்கள் யாரால் இருந்தால் என்ன..... அவர் எங்கள் மண்ணில் பிறந்து, வாழ்ந்து, எங்கள் மொழியையே வழக்கிலும் கொண்டிருந்திருக்கின்றார். இன்றும் இதே அக்கப்போர் தான்....... நீ தமிழன் இல்லை, நீ தமிழன் இல்லை என்று எம்ஜிஆர், கருணாநிதியைக் கூட தரம் பிரிக்கின்றார்கள். இவ்வளவும் ஏன், நாங்கள் கூட மலையாளிகள் தான் இவர்களில் சிலருக்கு.............
  4. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே ............ இந்த மனுசன் அவர்களின் நிலக்கீழ் சுரங்கப்பாதை வலையில் பாதுகாப்பாக சுற்றி வந்து கொண்டிருந்தது. ஆழ்கடல் மீன் ஒரு புது மூச்சு விட தண்ணீருக்கு மேல எப்பவாவது வருவது போல ஒரு தடவை வெளியால வந்திருக்கின்றார் போல.............. இனிமேல் இந்த சுரங்கப்பாதைகளை அடித்து நொறுக்குகின்றோம் என்று அப்பாவி மக்களை இஸ்ரேல் கொல்லத் தேவையில்லை......... என்ன பாவம் செய்த சனங்கள் அதுகள்........... இரண்டு பக்கங்களாலும் அடி....😌.
  5. இந்தியா கிரிக்கெட்டில் சாதித்துக் கொண்டிருக்கின்றது என்ற தலைப்பில் ஒரு கட்டுரை போன வாரம் அல்லது அதற்கு முதல் ஏதோ ஒரு பக்கத்தில் இருந்தது. ம்ம்ம்...........இதுவும் ஒரு சாதனை தான்....... மழை பெய்து முதல் நாள் குழம்பி போட்டி தடைப்பட்டுப் போனால், அடுத்த நாள் துடுப்பாட்டத்தை தெரிவு செய்யவே கூடாது என்ற புள்ளிவிபரத்தை இன்று விலாவாரியாக உதாரணங்களுடன் எழுதுகின்றார்கள். இதையே ஒரு நாளுக்கு முன்னால் இந்திய அணிக்கு சொல்வதற்கு ஒரு ஆள் கூட இல்லாமல் போய் விட்டது இந்தப் பெரிய இந்தியாவில்..........🫣.
  6. 🤣.......... இப்போதைக்கு பாலனிடம் மாட்டுப்பட்டிருப்பது இவர் என்று எடுத்துக் கொண்டு, பின்னர் பாலனின் எழுத்தை வாசித்து சிரிக்க வேண்டும்....... நட்சத்திரன் செவ்விந்தியனும் இப்படியான அரசியல் ஆராய்ச்சிகளை, கருத்துகளை எழுதினால், அது இதைவிட இன்னும் சுவாரசியம் ஆகவும், சூடாகவும் இருக்கும். எவர் மீதும் எவரும் குற்றம் குறைகள் கண்டுபிடிக்கலாம், சொல்லலாம் என்ற ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விதிவிலக்கே இல்லை. ஆனாலும் மக்கள் திரள் இந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், கடுமையான மாற்றுத் தரப்புகள், அறிவுக்கூர்மையுள்ளவர்கள் போல தோன்றுபவர்கள் போன்ற இடங்களில் இருந்து வரும் கருத்துகளை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே வாசிக்கின்றனர் போல. அவர்களின் முடிவு இவைகளால் மாற்றப்படுவதில்லை. சுஜாதாவின் கதைகளை வாசிப்பது போல, பட்டுக்கோட்டை பிரபாகரின் கதைகளை வாசிப்பது போல, இவைகளும் ஒரு ஜனரஞ்சக வாசிப்புகள் மட்டுமே. எனக்கும் தந்தை செல்வாவின் பேரன் என்று இப்படி ஒருவர் இருக்கின்றார் என்றே தெரியாது. அவர் ஒரு வேட்பாளர் என்றவுடன் எரிச்சல் தான் வருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள சில அகதி முகாம்களுடன் எனக்கு ஓரளவு பரிச்சயம் இருக்கின்றது. சிலவற்றுக்கு போய் இருக்கின்றேன், அங்கே தங்கியும் இருக்கின்றேன். இப்படி ஒரு அமைப்பு அங்கே எதுவும் செய்வதாக கேள்விப்பட்டதில்லை. இங்கு வாழும் எமது மக்கள் வேறு ஒரு நிஜத்திற்கு போய்விட்டார்கள். பாலன் போன்றவர்கள் முந்தைய தலைமுறையில் இருந்து கொண்டு 'இங்கு வா, அங்கு போ.......' என்று பழைய கதையையே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
  7. 🤣...... இவர்கள் ஒருவரையும் ஒரு மரியாதைக்கு கூட ஒன்றுமே கேட்கவில்லையே என்ற ஆதங்கம் தான் பல பழைய அரசியல்வாதிகளிடம் தெரிகின்றது. அத்துடன் 'படித்தவர்கள் மட்டும் உள்ளே' என்ற அநுரவின் தேடலும் எங்களின் அரசியல்வாதிகளுக்கு ஒத்துவராது. படித்தவர்களால் எல்லாமே சரியாக, நிலைமைக்கு ஏற்றவாறு செய்துவிட முடியும் என்றில்லை. ஆனால் பல பழைய அரசியல்வாதிகளை வெளியே தள்ளி விடுவதற்கு இது ஒரு நல்ல வழி.
  8. 🤣............ இதே போலவே நடிகர் கமலும் அவர் கண்டுபிடித்த ஊழல்கள் பற்றி முன்னர் சொல்லியிருந்தார், பின்னர் இப்பொழுது காணாமல் போயும் விட்டார்................ இவர்களைப் போன்றோரின் பேச்சு நாங்கள் நாலு பேர்கள் திண்ணையில் இருந்து உலக பிரச்சனைகளுக்கு தீர்வுகள் சொல்வதைப் போல....... வெறும் வாயை மென்று, திண்ணைகளில் நல்ல பெயர் எடுக்க மட்டும் உதவும்............🫣.
  9. வணக்கம் சின்னக்குட்டியார்.......எனக்கு நீங்கள் புதுசு........👊
  10. 🤣......... உண்மையாகவும் இருக்கலாம்.......... ஆனாலும் புலவர்களுக்கு கற்பனை கொஞ்சம் அதிகம் என்பதால் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கின்றது..........😜.
  11. ம்ம்ம்.................. எனக்கும் ஆசைதான் அதானி, அம்பானி, மோடினி இப்படி எவரையும் நாட்டிற்குள் விட முடியாது என்று சொல்ல...... ஆனால் இது எங்கள் கட்டுப்பாட்டிலா இருக்குது...... பரிசீலனை செய்து விட்டு, திரும்பவும் அவர்களை உள்ளே விட வேண்டியது தான்............😌.
  12. 🤣......... பையன் சார், நீங்கள் அமெரிக்கன் புட்பால் பார்ப்பீங்களா.......... நேற்று Dallas Cowboys அணியை வைத்துச் செய்தார்கள் Detroit Lions. கொடுமையாகவும், பாவமாகவும் இருந்தது. அரைநேர இடைவெளியில் போனவர்கள் அப்படியே தலைமறைவாகி இருக்கவேண்டும், ஆனால் திரும்ப வந்து திரும்பவும் மிதிபட்டார்கள்............
  13. பாத்ரூம் பிரேக் எடுத்ததில் இருவருக்கும் தகராறு வந்தது என்று செய்திகளில் இருக்கின்றது. ஒருவர் அதிக நேரம் எடுத்து விட்டாரா.............. நீண்ட பயணத்தில் இருவர் கட்டாயமாக விமானி அறையின் உள்ளே எப்போதும் இருக்க வேண்டும் என்று ஒரு விதிமுறை இருக்கின்றது. ஒரு விமானி வெளியே போனால் ஒரு விமான பணியாளர் அந்த இடத்தில் தற்காலிகமாக இருக்கவேண்டும். ஒரு விமானியை விமானி அறையின் வெளியே தள்ளி விட்டு விட்டு விமானத்தை பறக்கக்கூடாது. முன்னர் நடந்த ஒரு விமான விபத்தின் பின் இந்த நடைமுறை வந்தது.........
  14. இலங்கை பெண்கள் அணியுமா......... இலங்கை ஆண்கள் அணி உலக கோப்பையில் விளையாடின போது, நாங்கள் தான் சூனியம் வைத்தோம், அப்படியே ஆண்கள் அணி மிக மோசமாய் விளையாடி தோற்றது. வைத்ததை எடுக்க மறந்து போனோம்........😜.
  15. அமெரிக்காவில் எங்களுக்கு உகந்த இடங்களில் இவை இரண்டுமே சிறந்தவை, கொழும்பான். இந்த இரண்டில் எது சிறந்தது என்றால், நான் கலிஃபோர்னியாவே சிறந்தது என்று சொல்வேன். வேலை வாய்ப்புகளில் கலிஃபோர்னியாவே ஆகச் சிறந்த மாநிலம். செலவு அதிகம் தான். ஆனால் பொதுவாகவே இங்கு சம்பளமும் அதிகம். வீட்டு விலைகள் இரண்டு மாநிலங்களிலும் அதிகம் என்றாலும், கலிஃபோர்னியாவில் வீட்டு விலை எக்கச்சக்கமாக கூடிப் போயிருக்கின்றது. இது ஒரு பெரிய பிரச்சனையே. கலிஃபோர்னியாவின், குறிப்பாக தென் கலிஃபோர்னியாவின், வருடம் முழுவதுமான காலநிலை மிகச் சிறந்தது. வருடத்தில் பத்து மாதங்கள் வெறும் ரீ சேட்டுடன் இரவு பத்து மணிக்கும் கிரவுண்டில் பந்து அடிக்கக் கூடிய காலநிலை. அமெரிக்காவின் மேற்குக்கரை ஒப்பீட்டளவில் துவேஷம் குறைந்த பிரதேசம். பொதுவாகவே இந்தப் பக்கம் உள்ள மக்கள் இறுக்கமும், பழைய நம்பிக்கைகளும் குறைந்தவர்கள். இரண்டுமே அழகானவை. இந்து சமுத்திரத்திற்கும், அத்திலாந்திக் சமுத்திரத்திற்கும் (புளோரிடா கரைகள்) அவ்வளவாக வித்தியாசம் இல்லை. ஆனால் பசுபிக் சமுத்திரம் (கலிஃபோர்னியா கரைகள்) எப்போதும் ஓங்கி ஓங்கி அடிக்கும். அத்துடன் எப்போதும் குளிரான கடல், அலாஸ்காவுடன் தொடர்பு இருப்பதால். நீண்ட, அகன்ற கடற்கரைகள், மலைகள், வெளிகள், தோட்டங்கள். கடைசியாக 1994ம் ஆண்டு பெரிய ஒரு பூமியதிர்வு கலிஃபோர்னியாவில் வந்தது. இங்குள்ள வீடுகளும், தெருக்களும், பாலங்களும், எல்லாமே பெரிய அதிர்வையும் தாங்கக் கூடிய வகைகளிலேயே கட்டப்படுகின்றன. என்னுடைய தெரிவு கலிஃபோர்னியா............. மிக நீண்ட நாட்களாக, 27 வருடங்கள், இந்த மாநிலத்தில் இருப்பதும் அதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
  16. 🤣🤣🤣.............. முப்பத்திமூன்றா.................. நீங்க தான் கடை ஓனரா, டக்ளஸ் அண்ணே........ தமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்கு கடிதம் எழுதிய, எழுதும் எல்லோரும் உங்களிடம் தோற்றார்கள் போங்கோ............. உங்களின் தேர்தல் பணிக்கு என்னுடைய பங்களிப்பு: 34. பலாலி விமானநிலையத்தை விரைவாக விரிவுபடுத்தி, சர்வதேச விமானங்களை இறக்கு ஏற்றுதல். 35. பரந்தனில் இரசாயனத் தொழிற்சாலையை புனரமைத்து, இரசாயனங்களை உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, அந்நியச் செலவாணியை கொண்டு வருதல். 36. வடக்கு கடற்கரைகளில் மூன்று மீன்பிடி துறைமுகங்களை புதுதாக அமைத்தல். 37. இறல் பண்ணைகளை தீவுகளில் அமைத்தல். 38. கடல் அட்டைத் தொழிலை விருத்தி செய்தல். 39. யாழ் உப்பு நீரேரியின் ஒரு பகுதியை நன்னீர் ஏரியாக மாற்றுதல். 40. இரணைமடுவில் கிடைக்கும் உபரி நீரை யாழ் மாவட்டத்திற்கு வழங்கல். 41. வடக்கு மருத்துவமனைச் சீர்கேடுகளை விரைவாகக் களைய ஒரு ஆணைக்குழுவை அமைத்தல். இப்படியே போனால் 108 திட்டங்கள் வந்திடும் போல இருக்குதே..........🤣......... அப்புறம் என்னையும் ஒரு சுயேட்சைக்குழுவில் சேர்த்து விடுவார்கள் போல............😜.
  17. 🤣........ இந்தச் சூறாவளி கிழக்குக்கரையில், நாங்கள் இருப்பது மேற்குக்கரையில். மேற்குக்கரை அப்பப்ப அதிரும், கிழக்குக்கரை அடிக்கடி பறக்கும்..........
  18. 🤣.............. 'சும்மா அதிருதில்ல..............' என்பதை நீங்கள் தியேட்டரில் பார்த்திருப்பீர்கள், டீவியில் பார்ட்த்திருப்பீர்கள்........ஏன் ஃபோனில் கூட பார்த்திருப்பீர்கள்........... ஆனால் நாங்கள் காலுக்கு கீழ பார்த்துக் கொண்டிருக்கிறம்.......... பூமிஅதிர்வின் மையம், எபிசென்டர், என்னுடைய வீட்டுக்கு கீழே கூட ஒரு நாள் இருக்கப் போகின்றது. பூமி எங்கே அதிகமாக வெடிக்கக் கூடும் என்று ஒரு வரைபடம், விஞ்ஞான ரீதியானது, இருக்கின்றது. கையில் இருக்கும் ரேகைகள் போல கன்னாபின்னாவென்று இந்த ஏரியா முழுக்க கோடுகள் கீறி வைத்திருக்கின்றார்கள். ஆனாலும்......... தென் கலிஃபோர்னியாவில் கூட்டத்திற்கும், விலைக்கும் குறைவே இல்லை. அதிர அதிர வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.......🤣.
  19. குளவிக்கூட்டிற்கு கல்லால் எறிவது போல........ கல்லால் எறிந்து விட்டு, ஈரான் ஓடிப் போய் பதுங்கிவிடும். பக்கத்தில் இருக்கும் பாலஸ்தீனமும், லெபனானும் தான் குளவியிடம் கொட்டு வாங்கவேண்டும்.......
  20. உலகம் முழுவதும் எத்தனையோ சண்டைகள் நடந்து ஆட்களை ஆட்கள் கொன்று அழித்தாலும், இதைப் போன்ற செய்திகளை வாசிக்கும் போது ஒரு நம்பிக்கையின் கீற்று தெரியும். உலகில் பல பல்கலைகளும், சில ஆராய்ச்சி நிறுவனங்களும் பாராட்டுக்குரியவை............👍.
  21. 🤣........ எந்த எந்த கட்சிகளில், யார் யார், எங்கே எங்கே நிற்கின்றார்கள் என்று பார்ப்பது முதன்முதல் மடக்கை அட்டவணையைப் பார்த்தது போல இருக்கின்றது.........
  22. 🤣........ அது போன மாசம்........ இது இந்த மாசம்.......... இதுவரை நாட்டிலேயே அதிகமான சுயேட்சை குழுக்கள், மொத்தமாக 15, யாழ் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியிருக்கின்றார்கள். இதைவிட ஏராளமான கட்சிகள்....... எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்.............. இதில 'கல்குலேட்டர்' பிரச்சனை வேற வரப் போகுது..............
  23. 🤣........... பையன் சார், நீங்க அந்த வீடியோவை வடிவாகப் பார்த்தனீங்கள் தானே....... சசிகலா ஆன்டி முன்னுக்கு நின்று பேசப் பேச, பின்னுக்கு நின்று ஒருவர் ( இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா?) அந்தப் பேச்சுக்கு எற்ற மாதிரி தலையை ஆட்டி ஆட்டி அபிநயங்கள் பிடிப்பார்.............. அது ஒரு கலைநயம்............🤣.
  24. 🤣............ பையன் சார், ஒன்றுக்கு இரண்டு தடவை மனசுக்ககுள் சொல்லிப் பார்த்துப் போட்டுத்தான், இதை எழுதுகின்றேன். 'இந்த வயசில என்னத்தையாம் ரசிக்கப் போகிறாய்............' என்று யாராவது வம்புக்கு வந்தால் என்ன செய்வது..........😜. இதுவரை மகளிர் கிரிக்கெட் பார்த்ததில்லை, பையன் சார். அதனால் அவர்கள் கிரிக்கெட் விளையாடும் அழகையும் பார்க்கும் பேறு இதுவரை கிட்டவில்லை. கிருபன் களத்தில் ஒரு போட்டி வைத்திருந்தார் என்றால், இரண்டையும் ஒன்றாகப் பார்த்திருக்கலாம். நீங்கள் விளையாட்டு பார்க்கின்றேன், விளையாட்டு பார்க்கின்றேன் என்று படு விசயமாகவும் இருக்கின்றீர்கள்.......... நான் அமெரிக்கன் புட்பால், ரக்பி என்று கடுவன்களின் கடுமையான விளையாட்டுகளை தேவையில்லாமல் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன் போல...........

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.