Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ரசோதரன்

  1. தேடலில் இரண்டு பொருட்கள் வந்தன: 1. பனங்கறுக்கு: தொரட்டி. தேங்காத் தொட்டி. நாச்சோத்துக் கும்பம். உரிக்காக் கொடி. கத்தக்கொடி. தொரட்டி கூட பால் சுரக்கும் என்று மிகையாக சொல்லி இருக்கின்றார்கள் போல. __________________________ 2. ஒரே சொல்லாகப் பார்த்தால், கருக்கு மட்டையை இப்படி எழுதலாம் போலத் தெரியுது. பனங்கறுக்கு(ம்) பால் சுரக்கும் என்று இங்கேயும் மிகையாகச் சொல்ல வந்திருக்கின்றார்கள் போல. இது விக்கியில் இருந்து. கருக்கு மட்டையை பனங்கறுக்கு மட்டை என்று எழுதும் வழக்கம்.
  2. எல்லா முன்னேற்றங்களாலும் அழிவுகள் இருந்தன, இருக்கப் போகின்றனதானே, நொச்சி. பலநாடுகள் தங்கள் பலங்களால், நுட்ப வளர்ச்சிகளால் அழிவுகளை உலகெங்கும் நடத்திக் கொண்டும் இருக்கிறதுதானே. போன வருடம் அக்டோபர் 7ம் திகதி ஆரம்பித்த சண்டையே இன்றுவரை தொடர்கின்றது. இப்போது வேறு சில களமுனைகளுக்கும் இது பரவியுள்ளது. அது அமெரிக்காவால் ஆரம்பிக்கப்பட்ட சண்டை இல்லை. ஹமாஸ் புதிய ஆபிரகாம் ஒப்பந்தத்திற்கு எதிராக எடுத்த ஒரு அதிரடி நடவடிக்கை அது. அன்றும் பலர் இஸ்ரேல் முடிந்தது என்றனர், இஸ்ரேல் வாங்கிக் கட்டுகின்றது என்றனர், ஹமாஸின் பலம் பற்றியும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை பரப்பினர். ஆனால் அந்த ஒரு நிகழ்வே அமெரிக்காவிற்கு போதுமானதாக இருந்தது. எல்லா நாடுகளுமே தங்கள் சுய ஆதாயத்தைத் தான் உலகெங்கும் தேடுகின்றனர். பலம் இருக்கும் நாடுகள் பாய்ந்து பாய்ந்து தேடுகின்றன. இந்தியா போன்ற நாடுகள் பதுங்கி பதுங்கித் தேடுகின்றன. உள்ளே வந்த ஊர்ப்பிடாரி வெளியே இலேசில் போகமாட்டார். அவரை உள்ளே வர விடாமல் பார்ப்பதே உத்தமம். ஈரான் எதற்காக ஹிஸ்புல்லாவையும், ஹமாஸையும் மற்றும் மேற்குக் கரையில் இன்னும் பல சின்ன குழுக்களையும் கட்டி வளர்க்கின்றது........... உலகில் சமாதானம் வர வேண்டும் என்பதற்காகவா....... இல்லை தானே, தங்களை அந்தப் பிரதேசத்தில் ஒரு வல்லரசு என்று காட்டுவதற்காகவே இந்த துணைப்படைகள். ஈரானும் அயலவர்களுக்கு அடிக்கும், அவர்களைக் கொல்லும், இலங்கை போன்ற நாடுகள் தங்கள் சொந்த மக்களையே கொன்றொழிக்க உதவும். இலங்கை அரசுக்கு இஸ்ரேல் மட்டுமா ஆலோசனைகளும், ஆயுதங்களும், சேவைகளும் வழங்கியது....... அமெரிக்கா வழங்கியது, இந்தியா வழங்கியது, ரஷ்யா வழங்கியது, உக்ரேன் வழங்கியது, பாகிஸ்தான் வழங்கியது.......... இது இன்றைய உலகில் ஒரு மிக இலாபகரமான விற்பனை. இதில் தர்மம், நெறி எல்லாம் எவரும் பார்ப்பது கிடையாது. மேலே சொன்ன எதுவுமே எந்த ஒரு நாட்டையும், அதன் நடவடிக்கைகளையும் நியாயப்படுத்துவதற்கு அல்ல. பலமானவர்கள் செய்வது ஒரு சாராருக்கு மிக அநியாயமாகவே முடிந்து கொண்டிருக்கின்றது என்ற நிஜத்தை தான் நான் சொல்ல முயன்றிருக்கின்றேன்.
  3. 🤣.............. உங்களுக்கு மட்டும் இல்லை, இதை வாசித்து முடித்தவுடன் எனக்கும் தோழரும் திமுக அபிமானியோ என்றே தோன்றியது.............🤣 திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டை, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், முன்னே எடுத்துச் சென்றார்கள் என்பதில் மாற்றுக் கருத்து எனக்கும் கிடையாது. பெரியார் எங்கள் எல்லோருக்கும் பெரியாரே. உதயநிதிதான் அடுத்து வரப் போகின்றார் என்பது முன்னரே தெரிந்ததே. இன்னும் சில வருடங்கள் பொறுத்து இருந்திருக்கலாம் என்பதே என்னுடையதும், பலரினதும் அபிப்பிராயம் என்றே நினைக்கின்றேன். உதயநிதி முன்னருக்கு இப்பொழுது பேச்சில் முதிர்ச்சி அடைந்து கொண்டு வருகின்றார். ஆனாலும், இதை விட நாகரீகமான அரசியலை இவரால் கொண்டு வரமுடியும், கொண்டு வரவேண்டும் என்பது ஒரு அவா......
  4. 👍............. ஈரான் விழுந்த அந்த பழைய ஹெலிகாப்டருக்கு அமெரிக்காவின் பொருளாதாரத் தடையே காரணம் என்றும் சொல்லியிருந்தார்கள். இவ்வளவு தானா இவர்கள் என்று நினைக்க வைத்தனர் அன்று. பின்னர் இரவில் இருட்டில் தேட முடியாது என்றனர். உலகில் ட்ரோன் தொழில்நுட்பத்தில் மிகச் சிறந்தவர்கள் ஈரானியர்கள் என்றும் சொல்லியிருந்தனர், ஆனால் விழுந்ததை கண்டுபிடித்தது துருக்கியின் ட்ரோன்களே, ஈரானின் ட்ரோன்கள் அல்ல. எவரும் அயன் டோமை சில தடவைகள் தர்க்கமுடியும். ஹமாஸ் கூட தற்போதைய சண்டையின் முதலாவது நாளில் - அக்டோபர் 07, 2023 அன்று - அயன் டோமை மீறி இஸ்ரேலிற்குள் ஏவுகணைகளை விழுத்தியது. அயன் டோமியின் சக்தியை மீறி அதிக ஏவுகணைகளை மிகக் குறுகிய நேரத்திற்குள் செலுத்தினால், அயன் டோமால் வரும் எல்லா ஏவுகணைகளையும் தடுக்கமுடியாது. ஆனால் அவ்வாறு ஏவுகணைகளை தொடராகச் செலுத்துவதற்கு எவரினதும், எந்த நாட்டினதும் பொருளாதாரமும் வளங்களும் இடம் கொடுக்காது. அத்துடன் அயன் டோமின் வலுவையும் இஸ்ரேலும் அதிகரிக்கும், எதிர் ஏவுகணைகளின் எண்ணிக்கையக் கூட்டுவதன் மூலம். அமெரிக்கா தான் அதிக எதிர் ஏவுகணைகளை கொடுக்க வேண்டும், அவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படியே இரண்டு பக்கமும் 'போதும்..... கணக்கு சரி.....' என்று ஒதுங்குவது தான் உலகிற்கும் அவர்களுக்கும் நல்லது.
  5. இதைப் போன்ற நியமனப் பதவிகளுக்கு வாழ்நாள் ஓய்வூதியம் வழங்காமல், ஈபிஎஃப் மற்றும் பிற சலுகைகளை பதவிக் காலத்தில் மட்டும் வழங்குவது நல்ல ஒரு முடிவு. முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் காப்ரல் இந்தப் பதவிக்கு தகுதியில்லாதவர் என்று சொல்லப்பட்டது. அவர் ஒரு கணக்காளரே அன்றி, பொருளாதார நிபுணர் அல்ல என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்தது. அவரது நடவடிக்கைகள் கூட பலத்த விமர்சனத்திற்கு ஆளாகியது. இப்பொழுது இருக்கும் நந்தலால் பற்றி அவ்வாறான குற்றச்சாட்டுகள் இல்லை, ஆனால் எதிர்த்தரப்பு என்ற வகையில் விமர்சிப்போரும், விமர்சனங்களும் இருக்கின்றது. இவை எப்போதும் இருக்கும். மிகவும் தகுதியும், திறமையும் உள்ளோரை இதைப் போன்ற பதவிகளுக்கு உள்ளெடுப்பதற்கு அரசு முயல்வேண்டும். ஓய்வூதியம் கொடுக்கா விட்டால், அவர்கள் பதவியில் இருக்கும் காலங்களில் நல்ல கொடுப்பனவையும், சலுகைகளையும் அவர்களுக்கு கொடுக்கவேண்டும். மலிவாக பலரும் வரமாட்டார்கள். இப்படியே பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல நியமன பதவிகளின் நீண்டகால கொடுப்பனவுகளையும் மீளாய்வு செய்து கொள்ளவேண்டும்.
  6. துபாய் ஆஸ்பத்திரிக்கு போகின்றோம் என்று சொல்லித்தானே சித்தப்பாக்கள், மாமாக்கள், மனைவி, பிள்ளைகள் போனவர்கள்........... இப்படி உங்களை தனிமையில் புலம்ப வைத்து விட்டார்களே, நாமல்........... ஊழல் பணம் கிட்டத்தட்ட உலகில் எங்கும் மீட்கப்பட்டது கிடையாது. அடித்ததை வைத்து என்ன தான் செய்கின்றீர்கள் என்று பார்ப்போம்............
  7. கல்வி அறிவு என்றால் சரியான இடத்தில், சரியான நேரத்தில், ஏற்ற ஒரு கேள்வியையோ அல்லது பல் கேள்விகளை கேட்டுத் தெளிவதாக இருக்குமோ.........😀. கணக்குப் பாடம் சுத்தமாக வரவே வராத சில இலக்கியவாதிகள் இருக்கின்றார்கள். அவர்களின் இலக்கணப்படி பாடசாலைகளில், பல்கலைகளில் கிடைப்பது கல்வியே இல்லை. அது வெறும் தொழிற்பயிற்சி. பல்கலைகளில் படித்தவர்களைக் கேட்டால், அது தான் கல்வி அறிவு. பாடசாலை ஆசிரியர்களைக் கேட்டால், ஆத்திசூடி தான் கல்வி அறிவு. என்னைக் கேட்டால், இங்கு கிடைக்கும்/வழங்கப்படும் கல்விக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை...........🤣........... அதற்காக படிக்காதவர்கள் எல்லாம் வாழ்வில் மேதைகள் என்று திரும்ப முதலில் இருந்து ஆரம்பிக்கக்கூடாது...........
  8. ஈரான் பக்கமும் ஒரு நியாயம் இருக்குது தானே.......... தாங்களும் அந்த இடத்தில் ஒரு சண்டியர் என்று அவர்கள் இருந்து கொண்டு, கையாட்களும் வைத்துக் கொண்டு இருக்க, இஸ்ரேல் அவர்களின் வீடு புகுந்து ஈரானின் கையாட்களை போட்டுத் தள்ளியது ஈரானுக்கு கொஞ்சம் மன உளைச்சலை கொடுத்து இருக்கும் தானே....... அந்த மன உளைச்சல் தீர அணுகுண்டு செய்யப் போகின்றோம் என்று ஈரான் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விட்டிருக்கலாம், ஈராக்கிற்கு மெல்லிசா அடிச்சிருக்கலாம்.......... இப்படி ஏதாவது செய்து நிலைமையை ஒப்பேற்றி இருக்கலாம். அதை விட்டுவிட்டு ஏவுகணைகளை இஸ்ரேலிற்குள்ளேயே விடுவதா........... இஸ்ரேல் சில நிறைபோதையில் நடக்கும் மனிதர்கள் போல......... போதை உச்சிக்கு ஏறியதும் நேராக பாரிலிருந்து போய் எதிரிப் பங்காளியின் வீட்டின் கதவைத் தட்டுவார்கள்......... நமக்கேன் வம்பு என்று ஊரும் ஒதுங்கிவிடும்............. ** இப்ப கொஞ்ச நாளா 'பார்' என்ற சொல் எங்கே போனாலும் பின்னாலேயே வந்து கொண்டிருக்கின்றது.............
  9. 🤣.... உண்மையான தமிழர்கள் இதை எல்லா இடங்களிலும் பகிர்வார்கள், இளைஞனின் விபரத்துடன்......🤣.
  10. ஞாயிறு அன்று போயிருந்தேன், அண்ணை. 3.83 என்று இருந்தது. நம்ப முடியவில்லை. 'கனவா.......... இல்லை காற்றா..........' என்று தான் இந்த ஒரு மாதமும் இருந்தது. எங்களின் கனவுகளுக்குள்ளும் ஏவுகணைகளை விட்டிட்டார்களே............🤣.
  11. ஹெலிகாப்டர், பேஜர், வாக்கி டாக்கி,.................. எங்கள் வாழ்நாளில் இன்னும் என்னென்ன பார்க்கப் போறமோ................
  12. 🤣......... பகிடி: விசுகு ஐயாவும் ரஜனி ரசிகரோ.......... நிஜம்: திரைத்துறை மட்டும் இல்லை, இவரால் சமூகமும் தேங்கி நின்றது.
  13. பார்த்தம்.........பார்த்தம்........ அம்பானி கைலாயத்தையும், வைகுண்டத்தையும் ஒன்றாக பூமியில் கொண்டு வந்து விட்டார் என்று அவர் சொன்னதையும் கேட்டோம்.....🫣. எங்களின் தலைக்கு வந்து கொண்டிருந்தது.... ஏதோ ஒரு தெய்வச் செயலால் வழியிலேயே நின்று விட்டது....... அவரின் அரசியல் பிரவேசத்தைப் பற்றிச் சொன்னேன்..........🤣.
  14. விசுகு ஐயா, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
  15. 🤣......... ரஜனி நிற்க வேண்டும், மற்றவர்கள் சுற்றிச் சுற்றி ஆட வேண்டும் என்கிறீர்கள்........... உங்கள் எண்ணப்படியே நடக்கும். மூவரின் சீவன்கள் போக அவர்களின் குடும்பம் இலேசில் விடமாட்டார்கள் என்று பல வருடங்களின் முன் எங்கேயோ எழுதியிருந்தேன். அந்த மூவர் - கருணாநிதி, விஜய்காந்த், ரஜனி. இருவர் ஊசலாடி, ஒரு மாதிரி போய்ச் சேர்ந்துவிட்டனர்..........
  16. இப்ப கிட்டத்தட்ட ஒரு மாதமாக உலகச் சந்தையில் ஒரு பீப்பாயின் விலை 80 டாலருக்கும் குறைவாக வந்து, இங்கு நாங்கள் அடிக்கும் எரிபொருளின் விலை நன்றாகவே குறைந்தும் இருக்கின்றது. பொறுக்காதே...... உடனேயே கூட ஆரம்பித்துவிட்டதே.............🤣.
  17. கருட புராணம் எழுதின காலத்தில் பாப்கோர்ன் மெஷின் இருந்திருக்காது போல, சுவி ஐயா........... இப்படி நாங்கள் எழுதினோம் என்று தெரிந்தால், இரண்டு ரசிகர்கள் கூட்டங்களும் எங்களை எண்ணெய்ச் சட்டிக்குள் போட்டு விட்டுவிடுவார்கள்............🤣.
  18. இது பெரிய மானம் மரியாதைப் போட்டி, சிறி அண்ணா. இந்த இருவரும், ரஜனியும் விஜய்யும், நானா நீயா 'நம்பர் ஒண்ணு' என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் ரசிகர்களும் அப்படியே. இதில் ஈழத்தவர்களும் உண்டு........🫣. விஜய்யின் GOAT நல்லா ஓடியதா, இப்ப 'வேட்டையன்' அதைத் தாண்டிப் போக வேணும் என்று தலைகீழாக நிற்பார்கள் ரஜனியும், அவரது ரசிகர்களும். 120 ரூபாய் டிக்கட்டை 2000 ரூபாய்க்கு விற்பதை, 5 ரூபாய் பாப்கோர்னை 25 ரூபாய்க்கு விற்பதை இருவரும் கண்டுகொள்ளமாட்டார்கள். ஆனால் ஊழலை அழித்து, ஒரு புதுச் சமூகத்தை இருவரும் உருவாக்குவோம் என்பார்கள்..........🤣. கருட புராணத்தில் பாப்கோர்ன் மெஷினுக்குள் ஆட்கள் போடுவது மாதிரியும் ஏதும் தண்டணை இருக்குதோ என்று தேடிப் பார்க்கவேண்டும்................
  19. உங்களின் 'நட்பென்ன உறவென்ன!' என்னும் அந்தப் பதிவை வாசித்தேன். மிகவும் அருமை, 'வாழுங்கள்...', அவர்களால், இவர்களால் உங்களின் வாழ்க்கைகளை தொலைத்துவிடாதீர்கள்...........👍.
  20. முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, இதுவரை நான் கண்ட அனுபவத்திலிருந்து, 'வேட்டையன்' படம் 10ம் திகதி வெளிவருகின்றது என்பதே. இவரது ஒவ்வொரு படம் வெளியாகும் போது, இப்படித்தான் ஏதாவது சின்ன விடயத்தை நல்லாக ஊதிவிடுவார்கள். இவர்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த வீக்கத்திற்கான சிகிச்சை என் குடும்பத்தில் ஒருவருக்கு சில வருடங்களின் முன் செய்யப்பட்டது. அவருக்கு 80 வயதுகள் அப்பொழுது. இப்பொழுது நன்றாக இருக்கின்றார்.
  21. இவர்கள் அரங்கை விட்டு அகலவே மாட்டார்கள் போல. அநுரவிற்கு தமிழ் மக்கள் வாக்குப் போடமாட்டார்கள் என்று நாடி பிடித்து சரியாகச் சொன்னேன் என்கிறார்......... உங்களுக்கு மக்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்றும் இந்த இடத்தில் ஒரு சொல்லு சொல்லலாமே...........😜.
  22. நீங்கள் சொல்வது சரியே........ அவர் இங்கு ஏதாவது சிகிச்சை முடித்து அதன் பின்னரே சைக்கிள் ஓடினாரா அல்லது அந்த சைக்கிள் ஓட்டமே சிகிச்சையின் ஒரு பகுதியா என்று தான் சொல்ல வந்தேன். அந்தச் சைக்கிள் கூட கொஞ்சம் புதுமையாக ஓடியது. அதுவாக ஓடியது போலவே இருந்தது........... ஒரு EV போல ஓடியது....😀.
  23. 🤣.... இந்த மீம்ஸை இங்கே போட்டதிற்கு நீங்கள் இன்னுமொரு திரியில் 'அநுர பதவிக்கு வந்ததிற்கு புலிகளே காரணம்...........' என்று எழுதி, அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்திருந்ததும் ஒரு காரணம். அது கொஞ்சம் சூடான திரி, அங்கே மீம்ஸ் எல்லாம் போடமுடியாது............😜. நீங்கள் எல்லாவற்றையும் சுற்றிச் சுற்றி யோசிப்பீர்கள். உங்களையே போலவே எனக்கு ஒரு நண்பன் இருக்கின்றான். அவன் ஒரு விஞ்ஞானி போல, ஆனால் அவன் சோதனையில் நல்ல மார்க் எடுத்தது குறைவு.
  24. போன மாதம் ஒரு நிகழ்வில் ஸ்டாலின் கலந்து கொண்டதை தொலைக்காட்சியில் காட்டினார்கள். இது அவர் அமெரிக்கா போவதற்கு முன். அவரின் நடையே மிகப் பலவீனமாக இருந்தது. கால்களை நேரே வைத்து அவர் நடக்கவில்லை. இரண்டு கால்களும் பக்கவாட்டில் போய்க் கொண்டிருந்தன. குரல், அசைவுகள் எல்லாமே மிகவும் பலவீனமானவையாக இருந்தன. பின்னர் முதலீடுகளை ஈர்க்கவென்று அமெரிக்கா வந்தார். அமெரிக்காவில் கடற்கரையில் சைக்கிள் ஓடினார். இவருக்கு ஏதாவது தீவிரமான உடல் உபாதைகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. இந்த நியமனம் வேறு அந்த சந்தேகத்தை இன்னும் கூட்டுகின்றது. தமிழ்நாட்டில் எல்லாப் பிராந்திய கட்சிகளுமே வாரிசு அரசியல் தான் செய்கின்றன - திமுக, அதிமுக, பாமக, வைகோவின் கட்சி, விஜய்காந்தின் கட்சி, மூப்பனார் கட்சி,................. நாளைக்கு விஜய்யும் இதையே செய்வார், சீமானும் இதையே செய்வார். அதிமுகவில் முறையான வாரிசுகள் இல்லாததால், அந்தக் கட்சியே குலைந்து போய்விட்டது. அந்தப் பயம் திமுகவிற்கு இருக்கும் என்றாலும், இந்த நியமனம் இப்போது தேவையற்றதும், மிக அவசரகதியில் உதயநிதியினைக் கொண்டு வந்து உயர்த்தி விட்டது போலவும் தெரிகின்றது. திமுக என்றும் முறையான ஒரு வாரிசு இல்லாத கட்சியாகப் போவதில்லை. உதயநிதியை துணை முதல்வராக அறிவிக்காமல் இருக்க, அதே நேரத்தில் ஸ்டாலினிற்கு ஏதாவது ஆகினால் கூட, திமுக உடையப் போவதில்லை. ஸ்டாலினின் இடத்தை உதயநிதியே நிரப்புவார். உதயநிதிக்கு போட்டியே இருக்காது. இப்பொழுது இருக்கும் சூழ்நிலைகளை வைத்துப் பார்த்தால், உதயநிதியின் இடத்தை அவரின் மகன் இன்பநிதி பின்னர் ஒரு காலத்தில் நிரப்புவார் என்று கூடச் சொல்லலாம். இந்த அவசர நியமனம் ஒரு அதிருப்தியையும், அவநம்பிக்கையையும் உண்டாக்குகின்றது. ஸ்டாலின் பதவியேற்ற புதிதில், இறையன்புவை தலைமைச் செயலாளர் ஆக்கியதுடன், முன்பில்லாத ஒரு நிர்வாகத்தையும், அரசியலையும் தமிழ்நாட்டில் கொண்டு வரப் போகின்றார் என்பது போல ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் தொடர்ந்து வந்த பல நிகழ்வுகள், முக்கியமாக செந்தில் பாலாஜி ஏன் இப்போது கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டார் என்ற பின்புலம், ஸ்டாலின் ஒன்றும் வித்தியாசமானவர் இல்லை என்றே உணர்த்திவிட்டது. மருமகன் சபரீசன் மற்றும் குடும்பத்தின் பிடியில் இவரும் கருணாநிதி போல போய்விட்டார். அதன் ஒரு நீட்சியே இந்த நியமனமும் போல. மன்னராட்சி முடியவில்லையா என்று விசனமாக இருக்கின்றது. இவர்கள் மன்னர்கள், இளவரசர்கள், குட்டி இளவரசர்கள் போன்றவர்களே. இவர்களின் குடும்பங்களில் பிறந்தாலே, அவர்கள் ஆளப் போகின்றவர்கள் தான். இவர்களுக்கு மாற்றாக சினிமா பிரபலங்கள் ஓரிருவர் வரக்கூடும். எம்ஜிஆர், ஜெயலலிதா போல. சினிமாப் பிரபலங்கள் மன்னர்கள் அல்ல.............. மாறாக அவர்கள் தங்களை கடவுள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். சட்டியா, அடுப்பா என்று துள்ளிக் கொண்டிருக்க வேண்டும் நாங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.