Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. ஒரு வித்தியாசமும் இல்லை, கவிஞர் அவர்களே. ஏ லெவல் எடுத்து பாஸ் ஆகினால் பிரச்சனையில்லை, ஃபெயில் ஆனாலும் பரவாயில்லை. ஆனால் பல்கலை அனுமதி கிடைத்தால் அங்கே ஒரு சிக்கல் இருந்தது. மருத்துவம், பொறியியல் போன்றவற்றுக்கு அனுமதி கிடைத்தால், வெளிநாடுகளுக்கு போகாமல், பல்கலை போய் படித்து முடிப்போமே என்ற நிலை தான் அன்று பொதுவாக இருந்தது. ஆனால், ஜேவிபி யாழ் பல்கலையைத் தவிர மற்ற எல்லாப் பல்கலைகளையும் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் மூடி வைத்திருந்தது, 87ம் ஆண்டில் இருந்து 90ம் ஆண்டு வரை. மீண்டும் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். உடுகம்பொல என்னும் பெயர் பிரபலமானது. வடக்கு, கிழக்கில் ஒரு பிரச்சனை, தெற்கில் இன்னொரு பிரச்சனை. அவர்களை பிரேமதாசா அழித்தார். அந்த மூன்று வருடங்களும் நாங்கள் ஊரில் ஏதாவது செய்தாக வேண்டுமே............😃.
  2. சர்வதேச விளையாட்டுகளுக்கு ஒரு சிறிய ஓய்வு காலம், பையன் சார். ஆனால் இங்கு விளையாட்டுகள் இனித்தான் களைகட்டும். College Football, NFL, Baseball Playoffs என்று ஒன்றன் பின் ஒன்றாக அடுத்த வாரத்திலிருந்து ஆரம்பிக்கப் போகின்றன. அப்படியே பின்னர் NHL, NBA என்பனவும் தொடங்கிவிடும். உதிர் காலமும், குளிர் காலமும் விளையாட்டுகளின் சீசன் இங்கே........😃.
  3. ஒலிம்பிக்ஸ் 2024 இறுதிப் பதக்க வரிசை: வரிசை தங்கங்களின் எண்ணிகைப்படியா அல்லது மொத்த எண்ணிக்கைப்படியா என்ற குழப்பத்தை உலக மக்களிடையே ஏற்படுத்தி, அந்தக் குழப்பத்தாலேயே ஒரு மூன்றாம் உலகப் போர் வருமோ என்ற ஊகத்திற்கு இடமில்லாமல் செய்த அமெரிக்க மற்றும் சீன அணிகளுக்கு மிக்க நன்றிகள்.........🤣. Rank Country Gold Silver Bronze Total 1 United States 40 44 42 126 2 China 40 27 24 91 3 Great Britain 14 22 29 65 4 France 16 26 22 64 5 Australia 18 19 16 53 6 Japan 20 12 13 45 7 Italy 12 13 15 40 8 Netherlands 15 7 12 34 9 Germany 12 13 8 33 10 Republic of Korea 13 9 10 32 11 Canada 9 7 11 27 12 New Zealand 10 7 3 20 13 Brazil 3 7 10 20 14 Hungary 6 7 6 19 15 Spain 5 4 9 18 16 Uzbekistan 8 2 3 13 17 Iran 3 6 3 12 18 Ukraine 3 5 4 12 19 Sweden 4 4 3 11 20 Kenya 4 2 5 11 21 Belgium 3 1 6 10 22 Poland 1 4 5 10 23 Romania 3 4 2 9 24 Denmark 2 2 5 9 25 Cuba 2 1 6 9 26 Norway 4 1 3 8 27 Switzerland 1 2 5 8 28 Greece 1 1 6 8 29 Turkey 0 3 5 8 30 Ireland 4 0 3 7 31 Georgia 3 3 1 7 32 Bulgaria 3 1 3 7 33 Azerbaijan 2 2 3 7 33 Croatia 2 2 3 7 35 Chinese Taipei 2 0 5 7 36 Israel 1 5 1 7 37 Kazakhstan 1 3 3 7 38 Jamaica 1 3 2 6 38 South Africa 1 3 2 6 38 Thailand 1 3 2 6 41 Kyrgyzstan 0 2 4 6 41 DPR Korea 0 2 4 6 43 India 0 1 5 6 44 Serbia 3 1 1 5 45 Czech Republic 3 0 2 5 46 Austria 2 0 3 5 47 Ecuador 1 2 2 5 48 Mexico 0 3 2 5 49 Bahrain 2 1 1 4 50 Hong Kong 2 0 2 4 50 Philippines 2 0 2 4 52 Ethiopia 1 3 0 4 53 Portugal 1 2 1 4 54 Armenia 0 3 1 4 54 Colombia 0 3 1 4 56 Lithuania 0 2 2 4 57 Moldova 0 1 3 4 58 Slovenia 2 1 0 3 59 Algeria 2 0 1 3 59 Indonesia 2 0 1 3 61 Argentina 1 1 1 3 61 Egypt 1 1 1 3 61 Tunisia 1 1 1 3 64 Dominican Republic 1 0 2 3 65 Tajikistan 0 0 3 3 66 Botswana 1 1 0 2 66 Chile 1 1 0 2 66 Saint Lucia 1 1 0 2 66 Uganda 1 1 0 2 70 Guatemala 1 0 1 2 70 Morocco 1 0 1 2 72 Kosovo 0 1 1 2 73 Albania 0 0 2 2 73 Grenada 0 0 2 2 73 Malaysia 0 0 2 2 73 Puerto Rico 0 0 2 2 77 Dominica 1 0 0 1 77 Pakistan 1 0 0 1 79 Cyprus 0 1 0 1 79 Fiji 0 1 0 1 79 Jordan 0 1 0 1 79 Mongolia 0 1 0 1 79 Panama 0 1 0 1 84 Cape Verde 0 0 1 1 84 Cote d'Ivoire 0 0 1 1 84 Peru 0 0 1 1 84 Qatar 0 0 1 1 84 Singapore 0 0 1 1 84 Slovakia 0 0 1 1
  4. கறுப்புச் சட்டை ------------------------ அறிவித்தலில் இருந்த திகதிகளை கழித்துப் பார்த்தால், அவருக்கு 55 வயதுகள் தான் ஆகியிருந்தது என்று வந்தது. அடப் பாவமே, இப்படி இடைநடுவிலேயே போய்ச் சேர்ந்து விட்டாரே என்ற மெல்லிய கவலை பற்றிப் பிடித்தது. அவரை சில தடவைகள் அங்கே இங்கேயென்று பார்த்திருக்கின்றேன். ஆனால் பழக்கம் எதுவும் இல்லை. ஒரு தடவை கூட அவருடன் உரையாடியதும் இல்லை. நல்ல மனிதன் என்று அவர் உயிருடன் இருக்கும் போதே பலரும் சொல்வார்கள். தோற்றத்தில் இன்னும் ஒரு பத்து வயதுகள் அதிகமாகவே தெரிந்திருந்தார். எப்படி இறந்திருப்பார் என்று அறிவித்தலில் போட மாட்டார்கள், ஆனால் காலமானார் என்று இருந்தது. அகாலமானார் என்று இல்லை, ஆகவே விபத்து என்று எதுவும் இல்லை. காலமாகும் போது கடைசிக் காரணம் என்னவென்று பார்த்தால் கார்டியாக் அரெஸ்ட் என்றே பலரின் மரண அறிக்கையிலும் இருக்கும். புற்று நோயால் அவதிப்பட்டு முடிந்த ஒருவரின் அறிக்கையில் கூட இப்படியே இருந்தது. இவருக்கும் அப்படித் தான் இருந்திருக்கும். பெரிய உடம்புக்காரர். கடும் நீரிழிவு கூட இருந்திருக்கலாம், அப்படியே கடைசியில் கார்டியாக் அரெஸ்ட். மனைவியின் பெயர் இருந்தது. அவரையும் பார்த்திருக்கின்றேன். இவருக்கு 55 என்றால், அவருக்கு ஒரு 50 அளவில் தான் இருக்கும். சராசரி வாழ்நாள் என்று எடுத்தாலே, இவர் இன்னும் ஒரு 20 வருடங்களாவது தனியே, வாழ்ந்த நாட்களின் நினைவிலேயே வாழப் போகின்றார். வேறு எவராலும் பகிரப்பட முடியாத வலி இவருக்கு. உற்றம் சுற்றத்தின் ஆறுதல்களும், வார்த்தைகளும் தீர்ந்து போன பொழுதுகளில், இவரை அழுத்தப் போகின்றன வாழ்ந்த நினைவுகள். 'நீங்கள் சுகமாக போய்ச் சேர்ந்துவிட்டீர்கள்.......... நான் இங்கே கிடந்து படுகின்றேன் பாடு..........' என்று பிரியம் இம்மியளவும் குறையாமல் அடிக்கடி இவரும் சொல்லப் போகின்றார். மூன்று பிள்ளைகள். அவர்களின் வயதுகளின் வரிசைப்படி தான் போட்டிருக்கின்றார்கள் என்றால், அப்படித்தான் மரண அறிவித்தலில் பொதுவாகப் போடுவார்கள், முதல் இருவரும் ஆண் பிள்ளைகள், மூன்றாமவர் பெண் பிள்ளை. அந்தப் பெண் பிள்ளை அப்பாவின் செல்லமாகவே வளர்ந்திருப்பார். எவருக்கும் அடங்காத பிடிவாதம் கொண்ட மனிதனாக அவர் இருந்திருந்தால் கூட, அந்தச் செல்ல மகள் ஒரு சொல்லால், ஒரு பார்வையால் இவரை கட்டுக்குள் வைத்திருந்திருப்பார். இப்பொழுது மகள் முழுவதும் உடைந்து போயிருப்பார். கண்கள் வற்றியிருக்கும். அம்மாவின் தோளிலேயே சாய்ந்து சாய்ந்து ஒட்டி ஒட்டி இருப்பார். நடிகர் விவேக்கின் இறுதிச் சடங்கில் அவரின் இரு மகள்களும் அவர்களின் அம்மாவின், விவேக்கின் மனைவியின், இரண்டு பக்கங்களிலும் இருந்த அந்தக் காட்சி, வீட்டு மண்டபத்தில் கொழுவி இருக்கின்ற ஒரு படம் போல மனதில் அப்படியே தங்கிவிட்டது. ஏன் என்று சரியாகத் தெரியவில்லை. அவர்கள் மூவரும் வெளியே காட்டிய நிதானமாகக் கூட இருக்கலாம். ஆண் பிள்ளைகள் இலேசில் அழமாட்டார்கள். ஆண்கள் அழக்கூடாது என்று சமூகத்தில் சொல்லியும் வைத்திருக்கின்றார்கள். அழுகையைப் பற்றி வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்த ஒருவர் எல்லோரையும் நல்லாக அழுங்கள் என்று சொல்லியிருக்கின்றார். அழுவதே ஒரு பெரிய சிகிச்சை என்றும் சொல்லியிருக்கின்றார். ஆனாலும் ஆண்கள் காலம் காலமாகவே அழுகையை அடக்கி, அதை மறைக்கவே முயன்று கொண்டிருக்கின்றார்கள். பெரிய மகன் தான் இனி எல்லாப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டு, வீட்டைப் பார்த்துக் கொள்ளவேண்டும். எப்படியும் ஒரு 25 வயதுகள் ஆகியிருக்கும். ஆகியிருக்க வேண்டும் என்று மனம் விரும்பியது. 25 வயதுகள் என்றால், இங்கே படிப்பு முடிந்து மூன்று அல்லது நான்கு வருடங்கள் ஆகியிருக்கும். எப்படியும் ஒரு வேலையில் இருப்பார். இவர் குடும்பத்தை ஒப்பேற்றி விடுவார். ஆயுட்காப்புறுதியும் செய்திருப்பார்கள் தானே. தனியே என்று ஒரு காப்புறுதி எடுக்கா விட்டாலும், வேலை செய்யும் இடத்தில் ஒன்று கொடுத்திருப்பார்கள். மற்றபடி இங்கே இந்த அரசாங்கம், இந்த வயதுகளில் எதுவும் கொடுக்காது. இளைய மகனும் படித்து முடித்திருக்கக் கூடும். மருத்துவம் படிக்கின்றார் என்றால், இங்கே இன்னும் பல வருடங்கள் படிக்கவேண்டும். மூன்று பிள்ளைகள் இருந்தால், ஒருவராவது மருத்துவர் ஆக வேண்டும் என்ற விருப்பம் பல குடும்பங்களில் இருக்கும் ஆசை. விருப்பம் இருக்குதோ இல்லையோ என்று பார்க்காமல், ஒரு பிள்ளையையாவது எப்படியாவது தயார் செய்து விடுவார்கள். இங்கு மருத்துவ படிப்பு செலவு எப்படியும் கடன் தானே. காலமானவருக்கு சில சகோதரங்கள் இருக்கின்றனர். அடைப்புக்குறிக்குள் அவர்கள் எந்த எந்த நாடுகள் என்று போடப்பட்டிருந்தது. எல்லோரும் வேறு வேறு நாடுகளில் இருக்கின்றனர். இவர் மட்டும் இந்த நாட்டிற்கு வந்திருக்கின்றார். இங்கே மேலே படிக்க என்று வந்தவராக இருக்கும், பின்னர் அப்படியே இங்கேயே தங்கி இருக்கக்கூடும். இறுதிச் சடங்கிற்கு எல்லோரும் வந்து சேர்வார்கள். ஒரு மாதம் அளவில் ஆட்கள் மாறி மாறி நிற்பார்கள். பின்னர் எல்லோரும் போய்த் தானே ஆகவேண்டும். அடூர் கோபலாகிருஷ்ணனின் 'எலிப்பத்தயம்' என்னும் படம் ஞாபகத்திற்கு வந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் எதை எதையோ விரும்பி, அங்கேயே தங்கிவிடுகின்றனர். படத்தில் கடைசியில் ஒரு எலியின் ஆன்மா கையெடுத்துக் கும்பிடும். அடூர் கோபாலகிருஷ்ணன் எப்பொழுது, எப்படி இறந்தார் என்று எனக்கு ஞாபகமில்லை. அந்தச் செய்தியை முற்றாகவே தவற விட்டிருந்தேன். இன்னும் பல உறவினர்களின் பெயர்களும், நாடுகளும் அறிவித்தலில் இருந்தன. அறிவித்தலின் இறுதியில், வார நாள் ஒன்றில் காலை ஒன்பது மணியில் இருந்து மதியம் வரையான நேரத்தில் பார்வைக்கு வைக்கப்படும் என்றிருந்தது. அன்று அதிகாலையிலேயெ உடம்புக்கு முடியவில்லை என்று அலுவலகத்திற்கு ஒரு செய்தியை மறக்காமல் அனுப்பி விடவேண்டும். அப்படியே அந்தக் கறுப்பு சட்டையையும் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். போன மாதம் போய் விட்டு வந்து, தோய்க்கும் இயந்திரத்தில் போட்டு எடுத்தபடியே அப்படியே வீட்டில் எங்கேயோ தொங்கிக் கொண்டு இருக்கும் அந்தக் கறுப்புச் சட்டை. ஏன் வாங்குகின்றோம் என்று தெரியாமலேயே, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று, பல வருடங்களின் முன் வாங்கப்பட்டது இந்தக் கறுப்புச் சட்டை.
  5. 👍..... இன்றைக்கு அமெரிக்கா, சைனா இரண்டு நாடுகளிற்கும் நிறைய போட்டிகள் இருக்கின்றன. போன தடவை போல, இருவருக்கும் கடைசி நாள் வரை கடும் போட்டி தான். ஆஸ்திரேலியா வழமை போலவே அசத்திவிட்டார்கள். பிரான்ஸ் சாதித்துவிட்டார்கள்................❤️.
  6. 🫣......... இதோ அடுத்த நாமலும் ரெடி........... நாமல் - 2 வாறாரு, கதற விடப் போறாரு........ இவர் இருப்பது அமெரிக்காவில். அமெரிக்காவில் இருந்தாலே 'ஜனநாயகத்தை காப்பாற்றப் போகின்றேன்.........' என்று வசனம் அதுவாகவே வாயில் வரும் போல...... இவர்களின் கட்சியான அவாமி லீக்கின் ஆயுதப் பிரிவு(??) மாணவர்கள் மேல் தாக்குதல் மேற்கொண்ட பின் தான் கலவரம் கட்டுக்கடங்காமல் போனது. இட ஒதுக்கீட்டை குறைத்தார்களா.......... எங்கே, மொத்தம் 56% ஒதுக்கீட்டில் போய் விடும். பிறகு ஏன் மற்றவர்கள் 16 வருடங்கள் காலத்தை வீணாக்கி படிக்க வேண்டும்..........🫣.
  7. இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 33 41 39 113 2 China 36 27 23 86 3 France 15 21 22 58 4 Great Britain 14 20 24 58 5 Australia 18 17 14 49 6 Japan 16 9 13 38 7 Italy 11 12 14 37 8 Netherlands 13 6 11 30 9 Republic of Korea 13 8 8 29 10 Germany 12 9 8 29 11 Canada 8 6 11 25 12 Hungary 5 7 6 18 13 Brazil 3 6 9 18 14 New Zealand 7 7 2 16 15 Spain 5 3 8 16 16 Ukraine 3 4 4 11 17 Sweden 3 4 3 10 18 Belgium 3 1 6 10 19 Uzbekistan 5 1 3 9 20 Romania 3 4 1 8 21 Iran 2 4 2 8 22 Poland 1 2 5 8 22 Switzerland 1 2 5 8 24 Greece 1 1 6 8 25 Ireland 4 0 3 7 26 Bulgaria 3 1 3 7 27 Cuba 2 1 4 7 27 Kenya 2 1 4 7 29 Israel 1 5 1 7 30 Kazakhstan 1 3 3 7 31 Denmark 1 2 4 7 32 Croatia 2 1 3 6 33 Jamaica 1 3 2 6 33 Thailand 1 3 2 6 35 Chinese Taipei 1 0 5 6 36 Turkey 0 3 3 6 37 DPR Korea 0 2 4 6 38 India 0 1 5 6 39 Azerbaijan 2 2 1 5 40 Austria 2 0 3 5 41 South Africa 1 2 2 5 42 Mexico 0 3 2 5 43 Czech Republic 3 0 1 4 44 Norway 2 1 1 4 44 Serbia 2 1 1 4 46 Hong Kong 2 0 2 4 46 Philippines 2 0 2 4 48 Ecuador 1 2 1 4 48 Georgia 1 2 1 4 50 Lithuania 0 2 2 4 51 Kyrgyzstan 0 1 3 4 51 Moldova 0 1 3 4 53 Slovenia 2 1 0 3 54 Indonesia 2 0 1 3 55 Ethiopia 1 2 0 3 56 Argentina 1 1 1 3 56 Tunisia 1 1 1 3 58 Dominican Republic 1 0 2 3 59 Colombia 0 3 0 3 60 Armenia 0 2 1 3 60 Portugal 0 2 1 3 62 Tajikistan 0 0 3 3 63 Algeria 2 0 0 2 64 Bahrain 1 1 0 2 64 Chile 1 1 0 2 64 Saint Lucia 1 1 0 2 64 Uganda 1 1 0 2 68 Guatemala 1 0 1 2 68 Morocco 1 0 1 2 70 Kosovo 0 1 1 2 71 Grenada 0 0 2 2 71 Malaysia 0 0 2 2 73 Botswana 1 0 0 1 73 Dominica 1 0 0 1 73 Pakistan 1 0 0 1 76 Cyprus 0 1 0 1 76 Fiji 0 1 0 1 76 Jordan 0 1 0 1 76 Mongolia 0 1 0 1 80 Cape Verde 0 0 1 1 80 Egypt 0 0 1 1 80 Peru 0 0 1 1 80 Singapore 0 0 1 1 80 Slovakia 0 0 1 1 80 Zambia 0 0 1 1
  8. 👍........... Joel Embiid இன் விளையாட்டைப் போலவே, அவரின் பேட்டிகளும் நல்லா இருக்கும். ஆள் நல்ல ஒரு கதைகாரன்........... 😃. எங்க ஊரில் நடக்கப் போகும் ஒலிம்பிக் போட்டியில், 2028 இல், கிரிக்கட் இருக்கின்றது, அண்ணா. இங்கே Van Nuys என்னும் இடத்தில் நல்ல ஒரு கிரிக்கட் மைதானம் இருக்கின்றது. அது போட்டிகள் நடக்கும் ஒரு மைதானமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். வீட்டிலிருந்து ஒரு 40 நிமிடத்தில் போகலாம்.
  9. 👍......... LeBron James, Steph Curry, Kevin Durant, Joel Embiid,................ இவர்கள் எல்லாம் ஒரே அணியில் விளையாடுவது இது தான் கடைசியாக இருக்கும். முதல் மூவரும் லெஜண்ட்ஸ்......... இதையும் வென்று விட்டு ஓய்வடையட்டும்........❤️.
  10. Oahu தீவு, அண்ணா. Big Island க்கு இன்னமும் போகவில்லை.
  11. 🤣..... விலை தான் மிக அதிகம், மற்றபடி அருமையான ஒரு சுற்றுலா இடம் தானே. மகள் அங்கிருக்கும் ஒரு பல்கலைக்கும் போகும் திட்டத்தில் இருந்தார். அந்தப் பல்கலையும் அனுமதி கொடுத்திருந்தது. பின்னர் அந்த திட்டத்தை கைவிட்டு விட்டு, இங்கு வேறு ஒரு பல்கலைக்கு போனார். அங்கு போயிருந்தார் என்றால், அவரின் நாலு வருட சாப்பாட்டிற்கே வீட்டை விற்று இருந்திருக்க வேண்டும்...
  12. ஒரு தடவை போயிருக்கின்றேன், அண்ணா.
  13. அங்கு விலை அதிகம் தான், அண்ணை. வீட்டை விட்டு சுற்றுலா என்று வெளிக்கிட்டாச்சு, இனி என்ன விலையைப் பார்க்கிறது என்று எங்களை நாங்களே சமாதனப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.........😃
  14. இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 30 38 35 103 2 China 31 25 20 76 3 France 14 19 22 55 4 Great Britain 14 17 21 52 5 Australia 18 15 14 47 6 Japan 13 8 13 34 7 Italy 10 11 9 30 8 Republic of Korea 13 8 7 28 9 Netherlands 11 6 8 25 10 Germany 10 9 6 25 11 Canada 6 5 11 22 12 Brazil 2 6 8 16 13 New Zealand 6 6 2 14 14 Hungary 4 5 5 14 15 Spain 2 3 8 13 16 Ukraine 3 4 4 11 17 Sweden 3 3 3 9 18 Romania 3 4 1 8 19 Ireland 4 0 3 7 20 Kazakhstan 1 3 3 7 21 Switzerland 1 2 4 7 22 Greece 1 1 5 7 23 Iran 2 2 2 6 24 Croatia 2 1 3 6 24 Cuba 2 1 3 6 26 Belgium 2 0 4 6 27 Israel 1 4 1 6 28 Jamaica 1 3 2 6 28 Thailand 1 3 2 6 30 Poland 1 1 4 6 31 Chinese Taipei 1 0 5 6 32 DPR Korea 0 2 4 6 33 Uzbekistan 3 0 2 5 34 Kenya 1 1 3 5 35 Turkey 0 2 3 5 36 India 0 1 4 5 37 Azerbaijan 2 1 1 4 38 Austria 2 0 2 4 38 Hong Kong 2 0 2 4 38 Philippines 2 0 2 4 41 Denmark 1 2 1 4 41 Georgia 1 2 1 4 43 South Africa 1 1 2 4 44 Bulgaria 1 0 3 4 45 Mexico 0 2 2 4 46 Kyrgyzstan 0 1 3 4 47 Czech Republic 2 0 1 3 47 Indonesia 2 0 1 3 49 Ecuador 1 2 0 3 50 Argentina 1 1 1 3 51 Armenia 0 2 1 3 52 Lithuania 0 1 2 3 53 Moldova 0 0 3 3 53 Tajikistan 0 0 3 3 55 Serbia 2 0 0 2 56 Chile 1 1 0 2 56 Slovenia 1 1 0 2 56 Saint Lucia 1 1 0 2 56 Uganda 1 1 0 2 60 Guatemala 1 0 1 2 60 Morocco 1 0 1 2 60 Norway 1 0 1 2 63 Ethiopia 0 2 0 2 64 Kosovo 0 1 1 2 64 Portugal 0 1 1 2 64 Tunisia 0 1 1 2 67 Dominican Republic 0 0 2 2 67 Grenada 0 0 2 2 67 Malaysia 0 0 2 2 70 Algeria 1 0 0 1 70 Bahrain 1 0 0 1 70 Botswana 1 0 0 1 70 Dominica 1 0 0 1 70 Pakistan 1 0 0 1 75 Colombia 0 1 0 1 75 Cyprus 0 1 0 1 75 Fiji 0 1 0 1 75 Jordan 0 1 0 1 75 Mongolia 0 1 0 1 80 Cape Verde 0 0 1 1 80 Egypt 0 0 1 1 80 Peru 0 0 1 1 80 Singapore 0 0 1 1 80 Slovakia 0 0 1 1 80 Zambia 0 0 1 1
  15. 👍.......... பிரான்ஸ் இந்த ஒலிம்பிக்ஸில் தூள் கிளப்புகின்றது. அவர்களின் நாட்டில் இது நடக்கின்றது என்ற உத்வேகம், அத்துடன் மிக நன்றாக அவர்களின் வீரர்களும், அவர்களின் அணிகளும் தயாராக்கப்பட்டிருக்கின்றன. வாலிபாலில் கூட பலமான இத்தாலி அணியை 3 - 0 என்று வென்றுவிட்டார்கள். இறுதிப் போட்டியில் போலந்து நாட்டிற்கு எதிராக விளையாடப் போகின்றார்கள்.
  16. 🤣.......... தேங்கும் நீரை ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு அனுப்புவதற்காக என்று இன்னொரு செய்தியில் இருந்தது. வீதி கட்டும் திட்டத்துடன், வாய்க்கால் கட்டும் திட்டம் ஒன்றும் இருந்திருக்கும் போல. விவசாயிகள் நிலம் கொடுக்க முன்வரமாட்டார்கள். தமிழ்நாட்டில் சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை திட்டம் மற்றும் வேறு ஒரு குழாய் அமைக்கும் திட்டம் என்று சமீப வருடங்களில் விவசாயிகளால் சில போராட்டங்கள் நடத்தப்பட்டன..........
  17. அமெரிக்கா ஒரு மாதிரி சேர்பியாவை வென்று விட்டது. 95 - 91. நாலாவது கால் பகுதி ஆரம்பிக்கும் போது சேர்பியா 13 புள்ளிகளால் முன்னுக்கு நின்றது......... அமெரிக்காவின் கதை முடிந்தது ஆக்கும் என்று நினைத்தேன், ஆனால் மீண்டு வந்து விட்டார்கள்........
  18. 🤣........ வீதிகளுக்கு பொறுப்பாக ஒரு பிரிவு இருக்கும். பாலங்களுக்கு பொறுப்பாக இன்னொரு பிரிவு இருக்கும். நீங்கள் சொல்வது போல, அவரவர் அவரவர் சம்பாத்தியத்தை மட்டுமே பார்த்திருக்கின்றார்கள் போல....... இவர்கள் எல்லோருக்கும் மேல் ஒரு நிர்வாகமும், தலைமைப் பொறியியலாளரும் இருக்க வேண்டுமே, அவர்கள் மனதுகளில் என்ன இருந்ததோ...........
  19. இந்தியாவின் பீகார் மாநிலத்தில் சாலையே இல்லாத நட்ட நடு வயலில் பாலம் ஒன்றைக் கட்டியுள்ளனர்! நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை காரணமாக சாலைகளை கட்ட முடியாமல் போய்விட்டது. போனால் போகட்டும் என்று கிடைத்த கொஞ்ச நிலத்தில் ஒரு பாலத்தை கட்டி விட்டனர் அம் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ..........🫣. https://minnambalam.com/india-news/35-ft-bridge-built-in-open-field-in-araria-bihar-without-road-access-dm-seeks-report/
  20. 'இளஞ்சிவப்பு நிறம்' என்னும் சிறுகதை ஒன்று சமீபத்தில் அகழ் இணைய இதழில் வந்திருந்தது. இஸுரு சாமர சோமவீர எழுதியதை தமிழில் எம். ரிஷான் ஷெரீப் மொழிபெயர்த்திருந்தார். மிகவும் நல்ல ஒரு கதை. இன்னொரு கோணத்தில் ஆழத்தை தேடியிருக்கின்றார்...... https://akazhonline.com/?p=7901
  21. 👍........ வெம்பி விளையாட வந்த பின்னால் பிரான்சும் மிக நல்ல ஒரு அணியே........ அமெரிக்கா முதலில் சேர்பியாவையும், ஜோக்கரையும் வெல்ல வேண்டும்...... வெல்லுவார்கள் என்று தான் நினைக்கின்றேன். இன்னும் 15 நிமிடத்தில் அந்தப் போட்டி ஆரம்பிக்கின்றது.
  22. சுவி ஐயாவின் எழுத்து திறமை அங்கேயிருந்தே புடம் போடப்பட்டிருக்கின்றது............🤣.
  23. நன்றாக இருக்கின்றது, அண்ணை.........❤️. இந்த மாதிரி வீதியுடன் பொதிகள் எடுக்கும் இடம் கலிஃபோர்னியாவில் எங்காவது இருந்தால், நீங்கள் எழுதியிருப்பது போலவே, வருவோர் போவோர் சிலர் அவர்களின் வாகனங்களை மெதுவாக நிற்பாட்டிக் கொண்டே, ஒன்றோ இரண்டோ, அவர்களால் முடிந்த அளவு, பொதிகளை எடுத்துக் கொண்டும் போவார்கள்.............🤣
  24. ஈரோஸ் இயக்கம் தான் பின் அட்டையில் இரத்தினசபாபதி அவர்களின் படத்தைப் போட்டு கார்ல் மார்க்ஸ், இங்கர்சால் போன்றோரின் எழுத்துகளை தமிழில் புத்தகங்களாக வெளியிட்டிருந்தார்கள், அண்ணை. மற்றவர்கள் சிலரும் வெளியிட்டிருக்கக் கூடும்.
  25. இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 27 35 33 95 2 China 27 25 17 69 3 France 13 17 21 51 4 Great Britain 12 17 20 49 5 Australia 18 14 11 43 6 Japan 12 7 13 32 7 Italy 10 11 9 30 8 Republic of Korea 12 8 7 27 9 Netherlands 10 5 6 21 10 Germany 9 6 5 20 11 Canada 6 4 9 19 12 Brazil 2 5 7 14 13 Spain 2 3 8 13 14 New Zealand 4 6 2 12 15 Hungary 3 3 3 9 15 Sweden 3 3 3 9 17 Romania 3 4 1 8 18 Ukraine 3 2 3 8 19 Ireland 4 0 3 7 20 Kazakhstan 1 3 3 7 21 Switzerland 1 2 4 7 22 Greece 1 1 5 7 23 Croatia 2 1 3 6 24 Israel 1 4 1 6 25 Poland 1 1 4 6 26 Cuba 2 1 2 5 27 Belgium 2 0 3 5 28 Jamaica 1 3 1 5 29 Thailand 1 2 2 5 30 Kenya 1 1 3 5 31 Chinese Taipei 1 0 4 5 32 DPR Korea 0 2 3 5 33 Hong Kong 2 0 2 4 33 Philippines 2 0 2 4 35 Georgia 1 2 1 4 36 South Africa 1 1 2 4 37 Mexico 0 2 2 4 38 Kyrgyzstan 0 1 3 4 38 Turkey 0 1 3 4 40 India 0 0 4 4 41 Azerbaijan 2 1 0 3 42 Denmark 1 2 0 3 43 Iran 1 0 2 3 43 Uzbekistan 1 0 2 3 45 Armenia 0 2 1 3 46 Lithuania 0 1 2 3 47 Tajikistan 0 0 3 3 48 Serbia 2 0 0 2 49 Argentina 1 1 0 2 49 Chile 1 1 0 2 49 Ecuador 1 1 0 2 49 Saint Lucia 1 1 0 2 49 Uganda 1 1 0 2 54 Austria 1 0 1 2 54 Czech Republic 1 0 1 2 54 Guatemala 1 0 1 2 54 Indonesia 1 0 1 2 54 Norway 1 0 1 2 59 Ethiopia 0 2 0 2 60 Kosovo 0 1 1 2 60 Tunisia 0 1 1 2 62 Dominican Republic 0 0 2 2 62 Malaysia 0 0 2 2 62 Moldova 0 0 2 2 65 Algeria 1 0 0 1 65 Bahrain 1 0 0 1 65 Dominica 1 0 0 1 65 Morocco 1 0 0 1 65 Slovenia 1 0 0 1 70 Colombia 0 1 0 1 70 Cyprus 0 1 0 1 70 Fiji 0 1 0 1 70 Mongolia 0 1 0 1 74 Cape Verde 0 0 1 1 74 Egypt 0 0 1 1 74 Grenada 0 0 1 1 74 Peru 0 0 1 1 74 Portugal 0 0 1 1 74 Slovakia 0 0 1 1 74 Zambia 0 0 1 1

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.