Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ரசோதரன்

  1. நான் இந்தப் படத்தை பார்க்க முன்னரேயே அராத்து இப்படம் பற்றி எழுதியிருந்ததை வாசித்துவிட்டேன். அராத்து எழுத்தில், சொற்களில் எந்தக் கட்டுப்பாடுகளுக்கும், நெறிகளுக்கும் அடங்காதவர். மிகமிக நேரடியாகவே ஒரு தாண்டவம் ஆடியிருந்தார். நீங்களும் எழுதியிருப்பதை, உங்களின் பார்வையையும் வாசித்த பின், நான் உட்கார்ந்து யோசிக்க வேண்டிய சில விசயங்கள் இருக்கின்றன என்று தெரிகின்றன. மிக்க நன்றி..........🙏.
  2. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சா குடும்பத்தின் கட்சியான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்க்கிரமசிங்கவை ஆதரிக்கப் போவதில்லை என்று சற்று முன்னர் அறிவித்துள்ளனர். அவர்களின் வேட்பாளரை பின்னர் அறிவிப்பார்கள் என்றும் அவர்கள் சொல்லியுள்ளார்கள். https://www.dailymirror.lk/breaking-news/SLPP-decides-not-to-support-Ranil-but-to-field-its-own-candidate/108-288288
  3. இந்தியா ஒரு வெண்கலம் எடுத்து அவர்களின் 'பதக்க வேட்டையை' ஆரம்பித்திருப்பதாக அவர்களின் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன......... இலங்கை இன்னமும் பதுங்கித் தான் இருக்குது, ஆரம்பிக்கவில்லை ........😃.
  4. 🙏........ ஒரு நாவலுக்கும் மற்றைய சிறு வடிவங்களுக்கும் என்ன வித்தியாசம் என்ற உரையாடல் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் ஒன்று. நாவலில் நிலம் வேண்டும், மனிதர்கள் வேண்டும், தேடல் வேண்டும், அலைக்கழிப்புகள் வேண்டும் என்று இருக்க வேண்டிய விடயங்களின் பட்டியல்கள் நீளமானது. சிறு வடிவங்களில் ஒரு கணம் அல்லது ஒரு புள்ளி மட்டுமே இருந்தால் போதும் என்று சொல்வார்கள். சில வேளைகளில் அந்த ஒரு புள்ளியே மனதிற்குள் இந்தப் பிரபஞ்சம் போல வெடித்தும் பரவலாம்...........👍.
  5. இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 3 6 3 12 2 France 3 5 2 10 3 China 5 2 2 9 4 Japan 4 2 2 8 5 Republic of Korea 4 2 1 7 6 Great Britain 2 3 2 7 7 Australia 4 2 0 6 8 Italy 1 2 3 6 9 Kazakhstan 1 0 2 3 10 Brazil 0 1 2 3 10 Canada 0 1 2 3 10 Sweden 0 1 2 3 13 Belgium 1 0 1 2 14 South Africa 0 0 2 2 15 Germany 1 0 0 1 15 Hong Kong 1 0 0 1 15 Uzbekistan 1 0 0 1 18 Fiji 0 1 0 1 18 Kosovo 0 1 0 1 18 Mongolia 0 1 0 1 18 Poland 0 1 0 1 18 Tunisia 0 1 0 1 23 Croatia 0 0 1 1 23 Egypt 0 0 1 1 23 Hungary 0 0 1 1 23 India 0 0 1 1 23 Mexico 0 0 1 1 23 Moldova 0 0 1 1 23 Spain 0 0 1 1 23 Switzerland 0 0 1 1
  6. 👍.... ஆப்பிரிக்காவில் அவர் வாழ்ந்த கால அனுபவங்களை சில கதைகளில் சொல்லியிருப்பார். எந்த தமிழ் எழுத்தாளரும் தொடாத நிலமும், மனிதர்களும் அவை.
  7. ஆதித்தாயின் மொழி --------------------------------- 'ஆதித்தாய்' என்றொரு சிறுகதையை ஈழத்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் சில வருடங்களின் முன்னர் எழுதியிருக்கின்றார். எனக்கு மிகவும் பிடித்த ஈழத்து எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்கள். செங்கை ஆழியானையும் மிகவும் பிடிக்கும். இன்னும் சிலரையும் பிடிக்கும். முத்துலிங்கம் ஒரு எழுத்தாளர் என்பதை விட, அவரை ஒரு கதை சொல்லி என்றே சொல்லவேண்டும். அவருடைய பல கதைகளை வாசிக்கும் போது, இந்தக் கதை எங்கள் வீட்டில், அக்கம்பக்கத்தில், ஊரில், உலகத்தில் நடந்த, எங்களுக்கு முன்னரேயே தெரிந்த நிகழ்வுகளாகவே தெரியும். ஆனாலும் அவர் அதை சொல்லும் விதமும், அதை முடித்து வைக்கும் விதமும் ஒவ்வொரு தடவையும் அலுக்காத ஒன்று. விளையாடி விட்டு, அடுத்த போட்டியிற்காக காத்துக் கொண்டு, அப்பொழுது நடந்து கொண்டிருக்கும் போட்டியொன்றை பார்த்துக் கொண்டிருந்த போது, தோளில் பினபக்கமாக மெதுவாக யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்த்தேன். அவருக்கே உரிய மிக அகலமான சிரிப்புடன் அந்த மனிதர் நின்று கொண்டிருந்தார். போன வாரம் இதே இடத்தில், கிட்டத்தட்ட இதே நேரத்தில் அவரை, ஒரு முறை, சந்தித்திருந்தேன். போன தடவை பேரனைக் கூட்டி வந்திருந்தார். இந்த தடவை பேத்தியை சிறு வண்டில் ஒன்றில் தள்ளி வந்திருந்தார். பேத்திக்கு மூன்று வயது இருக்கும். பேரனுக்கு ஐந்து வயது. தான் அடுத்த மாதம் பள்ளிக்கூடம் போகப் போகின்றேன் என்று அந்தப் பேரன் ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் போன வாரம் சொல்லியிருந்தார். மகள் வீட்டில் வந்து நிற்பதாகச் சொன்னார். அவருக்கு ஒரு மகனும் இருப்பதாகச் சொன்னார். மகன் பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்வதாகச் சொன்னார். இதையெல்லாம் போன வாரமே சொல்லியிருந்தார். நான் ஶ்ரீ லங்கா என்றவுடன் அதை ஒரு உலக அதிசயம் போலவும் கேட்டுக் கொண்டார். காலையில் என்ன சாப்பிட்டீர்கள் என்று இந்த வாரம் ஆரம்பித்தார். இல்லை, ஒன்றும் இல்லை, ஏழு மணிக்கே இங்கே வந்து விட்டேன் என்றேன். தொடர்ந்து மேலே சொல் என்பது போல பார்த்துக் கொண்டே நின்றார். மத்தியானம் எக்கச்சக்கமான சோறும், மீன் குழம்பும் சாப்பிடுவேன் என்றேன். அவர் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது. மகளும், மருமகனும் வேலைக்கு போக, வீட்டுக்குள்ளேயே பெரும்பாலும் இருந்து விடுகின்றார் போல. அவர் ஒரு முன்பின் பழக்கமேயில்லாத அந்நியன் மேல் காட்டும் இந்தப் பிரியத்திற்கு வேறு எதுவும் காரணமாக இருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் மீன் சாப்பிடுவீர்களா என்று கேட்டேன். அவர் ஒரு நாயுடு என்றார். நாயுடு என்றால் எல்லாமே சாப்பிடுவார்களாம். சந்திரபாபு நாயுடுவும் ஒரு நாயுடுவா என்று கேட்டேன். ஆமாம் என்றார், என் டி ராமராவ் கூட ஒரு கம்மா, நல்லாவே சாப்பிடுவார் என்றார். சினிமா, அரசியல், கிரிக்கேட், இந்த மூன்றும் எங்கும் செல்லும். சினிமாவை ஆரம்பித்தேன். 'சாகர சங்கமம்' பார்த்திருக்கின்றீர்களா என்றேன். கமல் தான் மிகவும் பிடித்த நடிகர் என்றார். 'சுவாதி முத்யம்' கூட பார்த்திருப்பதாகச் சொன்னார். இந்தப் படமெல்லாம் எனக்கு எப்படி தெரியும் என்று அவரின் கண் புருவங்களை உயர்த்தினார். ரஜனி படங்கள் என்று இழுத்தேன். சும்மா பார்ப்பேன் என்றார். சிரஞ்சீவி படங்களும் அவருக்கு பிடிக்குமாம். ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா எங்குமே மக்கள் வாழ முடியாது என்றார். ஒரே போட்டி, எங்கும் பொறாமை, மனிதர்கள் அங்கே ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு ஓடிக் கொண்டே இருக்கின்றார்கள் என்றார். இங்கு நாங்கள் எல்லோரும் போட்டி பொறாமைகள் இல்லாமல் வாழ்கின்றோம் என்றார். இந்தியாவிற்கு விடுமுறையில் போய் வரும் சில அமெரிக்கர்கள் இந்தியர்கள் திருப்தியாக வாழ்கின்றார்கள் என்று சொல்வதும், இவர் சொல்வதும் ஒன்றே தான். ஆனால் இரண்டுமே உண்மைகள் அல்ல என்று நிரந்தரமாக ஒரு இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும். அடுத்தது எங்கள் போட்டி. சரி, அடுத்த வாரம் நாங்கள் சந்திப்போம் என்று சொல்லி விட்டு களத்திற்குள் போனேன். அவரும் கை அசைத்து விட்டு, வண்டிலைத் தள்ளிக் கொண்டு கிளம்பினார். நீங்கள் இருவரும் என்ன கதைத்தீர்கள், இங்கு ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவேயில்லை என்றனர் அங்கு நின்றவர்கள். அவருக்கு தமிழோ, ஆங்கிலமோ தெரியாது. எனக்குத் தெலுங்கு தெரியாது. ஆனாலும் இருவரும் முழுதாக உரையாடினோம். அது என்ன மொழியில் என்று எனக்கும் தெரியவில்லை. ஆதித்தாய் ஒருவர் இருந்ததாகவும், அவரின் மரபணுவே எங்கள் எல்லோரிலும் இருப்பதாகவும் சொல்கின்றனர். அதையொட்டியே முத்துலிங்கம் அவர்களின் சிறுகதையும் இருக்கும். மரபணு மட்டும் இல்லை, ஆதித்தாய்க்கு ஒரு மொழி கூட இருந்து இருக்க வேண்டும், அந்த மொழியும் இன்றும் எங்கள் எல்லோரின் உள்ளேயும் இருக்கின்றதும் போல.
  8. 🤣...... ஆதவன் செய்தியை வாசிப்பது எனக்கு இன்னமும் கவனிக்கும் ஆற்றல் ஓரளவு இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்துவதற்கே, சிறீ அண்ணை......🤣. 'அமெரிக்காவில் இருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்...', 'பூமியைத் தாக்க வரும் விண்கலம்....', 'அமெரிக்க கோடி....', ............., இப்படி ஆதவன் கலெக்‌ஷன் ஒன்றை ஒரு ஒழுங்கில் சேர்த்துப் போட்டாலே சிரிப்புகளை அது அள்ளும், அண்ணை.
  9. இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 Australia 3 2 0 5 2 Republic of Korea 2 2 1 5 3 United States 1 2 2 5 4 Italy 0 2 3 5 5 China 3 0 1 4 6 France 1 2 1 4 7 Belgium 1 0 1 2 7 Japan 1 0 1 2 7 Kazakhstan 1 0 1 2 10 Great Britain 0 1 1 2 11 Germany 1 0 0 1 11 Hong Kong 1 0 0 1 13 Canada 0 1 0 1 13 Fiji 0 1 0 1 13 Mongolia 0 1 0 1 13 Tunisia 0 1 0 1 17 Hungary 0 0 1 1 17 India 0 0 1 1 17 South Africa 0 0 1 1 17 Spain 0 0 1 1 17 Sweden 0 0 1 1
  10. நியூயோர்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சலீஸ், பால்ட்டிமோர், செயின்ட் லூயிஸ்,.......... இப்படி சில இடங்களில் இந்தக் குழு நடவடிக்கைகள் அதிகம் தான், அண்ணை. பொதுவாக இவர்கள் பொதுசனங்களில் கைவைப்பதில்லை. வீனஸ் மற்றும் செரீனா வில்லியம்ஸிற்கு ஒரு அக்கா இருந்தார். இங்கு என் பகுதியில், நான் எழுதியிருக்கும் இருக்கும் இடத்தில தான். ஒரு குழுச் சண்டையில் இடையில் மாட்டுப்பட்டு, சுடப்பட்டு இறந்தார். அப்பொழுது இவர்கள் இருவரும் வெற்றி பெற, புகழ்பெற ஆரம்பித்திருக்கவில்லை.
  11. 🤣........ அஞ்சலை, மலர்க்கொடி, கிளிநொச்சி,.........என்று வரிசையாக வந்து கொண்டிருந்ததின் பாதிப்புத் தான்...👍. அதோட இந்த அஞ்சலை மீம்ஸும் வந்தது. எல்லாத்தையும் தூக்கிப் போட்டு மிக்சியில் அடித்தது போல ஒன்றை எழுதி விட்டேன்.........😃.
  12. முதல் நாள் பதக்க வரிசை: Country G S B Total CHN 2 0 0 2 GBR 0 1 1 2 USA 0 1 1 2 AUS 1 0 0 1 KOR 0 1 0 1 KAZ 0 0 1 1
  13. 🤣.......... பாரதியார் சில வருடங்கள் காசியில் தங்கி இருந்தார், உறவினர் வீடொன்றில். அங்குதான் அவர் முதன் முதலாக குடுமியை அறுத்தெறிந்து விட்டு படு ஸ்டைலான தலை வெட்டிற்கும், மீசைக்கும் மாறினார். அதனால் அவரை அவர் வீட்டார்கள் பந்தியில் இருக்க அனுமதிக்கவில்லை. வெட்டிய குடுமியை கங்கைக்குள் தான் போட்டாரா என்று சரியாகத் தெரியவில்லை. இந்த கலாநிதி சிதம்பரமோகன் அவர்களை இன்று தான் கேள்விப்படுகின்றேன். தேடியதில், இவர் தலைமையில் சமீபத்தில் வட்டுக்கோட்டையில் பாரதியார் பிறந்ததின விழா கொண்டாடி, இவர் அங்கே ஒரு உரையும் ஆற்றியதாக இருக்கின்றது. இன்று காலையில் இருந்து எங்கே போனாலும் பாரதியாரே பாதையில் குறுக்காக நிற்கின்றார். இன்று வாசித்த வேறு ஒரு கட்டுரையில் இது இருந்தது: "பாரதி முதன் முதலில் தமிழை நவீனப்படுத்தினாலும் அவர் அதைப் புனிதப்படுத்தவில்லை. ஆனால் அந்த புரட்சிக்கவி பாரதியையே நம்முடைய ஹிப்போக்ரட் சமூகம் புனிதப்படுத்தி வைத்திருக்கிறது. அவர் பாடலை கர்நாடக சங்கீதத்தில் பாடுவது, அவரைப்போல தங்கள் குழந்தைகளுக்கு வேடம் அணிவிப்பது என இதெல்லாம்தான் புனிதப்படுத்தும் வேலை. அவர் கவிதைகளில் நான்கு வரியை மனப்பாடம் பண்ணி வைத்துக்கொள்வது உட்பட… பாரதி மது அருந்துவார், கஞ்சா புகைப்பார், சைட் அடிப்பார் என்றெல்லாம் சொன்னால் இந்தச் சமூகம் முகம் சுளிக்கும். அதைக் கேட்க விரும்பாது. அவரைப் பட்டினியில் போட்டு சாகடித்த சமூகம் எனச் சொன்னால், அது ஏதோ அண்டார்டிக்கா சமூகம் என நினைத்து உச்சு கொட்டும். கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பலவேடிக்கை மனிதரைப் போலே – என இந்தச் சமூகத்தின் மனிதர்களைத்தான் திட்டி இருக்கிறார் என்பது கூடத் தெரியாமல் மனப்பாடம் செய்து கொண்டாடும்."
  14. 🤣........... கல்கியின் கதையும், மணிரத்தினத்தின் படமும் கூட உங்களில் என்ணத்தில், கருத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை போல............😜. ஒரு சமூகத்திற்கு சொல்லிக் கொள்ளும்படியாக சில சாகசக் கதைகளும் தேவை தானே.........
  15. ஆரண்ய காண்டம் ---------------------------- இராமன் நாடு விட்டு காடு போய், அங்கு காட்டில் வாழ்ந்த நாட்கள் தான் ஆரண்ய காண்டம் என்று படித்திருக்கின்றோம். அங்கே காட்டில் கொடிய அரக்கர்களும், அசுரர்களும் இருந்தார்கள். அவர்கள் வனத்தில் தவமிருந்த அப்பாவி முனிவர்களுக்கு தொல்லைகளும், கஷ்டங்களும் கொடுத்தார்கள். இராமன் அந்த துஷ்டர்களைக் கொன்று அழித்தார் என்று அந்த ஆரண்ய காண்டத்தில் இருக்கின்றது. அப்படியே இராவணன் வந்து சீதாப்பிராட்டியை கவர்ந்து சென்றதும் அதே ஆரண்ய காண்டத்தில் தான். 'ஆரண்ய காண்டம்' என்னும் படம் தான் தமிழில் வந்த மிகச் சிறந்த பாதாள உலகம் பற்றிய, தாதாக்களை, சண்டியன்களை, ரவுடிகளை பற்றிய படம் என்று பல வருடங்களின் முன் ஒரு எழுத்தாளர் எழுதியிருந்தார். பின்னர் அந்தப் படத்தை தேடி பார்த்தேன். 2011ம் ஆண்டு வந்த படம். அதற்கு இரண்டு வருடங்கள் முன்னரே வந்திருக்க வேண்டும், தணிக்கை பிரச்சனையால் வரவில்லை. பல காட்சிகளை வெட்டி எறிந்து விட்டே வெளியே விட்டிருந்தார்கள். ஆனாலும் மிஞ்சிய படமே அருமையாக வந்திருந்தது. இயக்குனர் தியாகராஜன் குமாரராஜவின் முதல் படம். ஆண் தாதாக்களின் மத்தியில் ஒரு சில அப்பாவிகளும், ஒரு அபலைப் பெண்ணும் என்று கதை போகும். முடிவில் 'ஆண்கள் எல்லாமே சப்பை.........' என்று படம் எதிர்பாராத ஒரு திருப்பத்துடன் முடியும், அந்த அதிர்ச்சியில் உடனேயே படத்தை திருப்பி இன்னொரு தரம் பார்க்க வேண்டி இருந்தது. சமீபத்தில் நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இரண்டு பெண் தாதாக்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதில் மலர்க்கொடி என்னும் பெண் தாதாவின் வாழ்க்கை எந்த சினிமாவிலும் கூட இதுவரை சொல்லப்படாத ஒரு ஆரண்ய காண்டக் கதை. ஊரில் இயக்கங்கள் முளை விட்டுக் கொண்டிருந்த காலம். அப்பொழுது சரிக்கு சரியாக சில சண்டியன்களும் அங்கே இருந்தார்கள். அப்பொழுது இயங்கங்கள் அவர்களை அடக்க ஆரம்பித்திருக்கவில்லை. சண்டியன்கள் பெரும்பாலும் நல்ல கட்டுமஸ்தாகவே இருந்தார்கள். அப்போது நான் ஒரு குட்டிப் பையன், ஆதலால் இவர்கள் என்ன சண்டித்தனம் செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது. எனக்கு எல்லோரையும் போலவே தான் அவர்களும் தெரிந்தார்கள், ஆனால் நல்ல கட்டான உடம்புடன். ஒரு நாள் இந்த தாதாக்களில் ஒருவர் ஒரு கிணற்றுக்குள் இறந்து மிதந்தார். யாரோ அவரைக் கொன்று போட்டு விட்டார்கள் என்றே எல்லோரும் இரகசியமாக பேசிக்கொண்டனர். ஊரிலும், சென்னையிலும், இராமாயணத்திலும் இந்த தாதாக்கள் பொதுமக்களுடன் அநேகமாக உரசவும் இல்லை, உறவாடவும் இல்லை. ஒரு வட்டம் போட்டு அதற்குள்ளேயே வாழ்ந்திருக்கின்றார்கள் என்றே தெரிகின்றது. எப்போதாவது இந்த வட்டத்தை மீறி வந்து, அப்பாவிகளுடன் உரசியவர்கள் பின்னர் அநியாயமாகவே கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இங்கு பல வருடங்கள் வேலைக்கு இப்படியான நிகழ்வுகள் அதிகமாக நடக்கும் ஒரு இடத்தை தாண்டியே போய் வந்து கொண்டிருந்தேன். அந்த இடத்தை, அங்கு நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பல ஆங்கிலப் படங்களில் பார்த்திருப்பீர்கள். உதாரணம், டென்சில் வாஷிங்டனின் 'Training Day' படம். இந்த ஊர்களினூடு போகும் பெரும் தெருக்களால் காரை ஓடிக் கொண்டு போவதில் எந்த சிக்கலும் இல்லை. காரின் கண்ணாடிகள் மூடி இருக்கும், சில நிமிடங்களில் இந்த ஊர்களைக் கடந்து விடலாம். ஆயிரக் கணக்கில் கார்களும், வாகனங்களும் போய்க் கொண்டிருக்கும். ஒரு நாள் என்னுடைய கார் அந்த ஊர் ஒன்றில், பெருந்தெருவில் நின்றுவிட்டது. யூடியூப்பை பார்த்து நானே காரில் ஒரு திருத்த வேலை செய்திருந்தேன். எனக்கு இது நல்லாகவே வேணும். சுத்தியலால் ஒரு ஆணியைக் கூட ஒழுங்காக அடிக்கத் தெரியாத எனக்கு யூடியூப் ஒரு அசட்டுத் துணிவைக் கொடுத்திருந்தது. பின்னால் வந்த சிலர் உதவி செய்து, என்னையும் காரையும் பெருந்தெருவில் இருந்து அந்த ஊருக்குள் இறக்கி விட்டிருந்தனர். முதல் தடவையாக அந்த ஊரில் கால் அன்று தான் வைத்தேன். அங்கிருந்து காப்புறுதி நிறுவனத்தை கூப்பிட்டிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் ஒருவர் வந்தார். என்னை விட ஒன்றரை மடங்கு உயரமும், இரண்டு மடங்கு அகலமும் இருப்பார். அவர்களுக்கே உரிய கடும் குரலில் என்ன நடந்து விட்டது என்றார். அவர்கள் கடுமையாகக் கேட்பதில்லை, ஆனால் அவர்களின் சாதாரணமே எங்களுக்கு கடுமையாகத் தான் தெரியும். என்னிடமிருந்து கார்ச் சாவியை வாங்கினார். காருக்குள் போய், காரைத் திறந்து ஏதேதோ செய்தார். என்னுடைய யூடியூப் வேலை இயந்திரப் பகுதியில் நன்றாக உள்ளுக்குள் இருந்தது, இலேசில் எவராலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது. பின்னர் எனக்கு அருகிலேயே அந்தப் பெரிய மனிதன் நின்று கொண்டிருந்தார். காப்புறுதி நிறுவனம் காரைத் தூக்கிக் கொண்டும், என்னை ஏற்றிக் கொண்டு போகவும் ஒருவரை அனுப்பினது. வந்த வாகனத்தில் ஏறி விட்டு அவரை திரும்பிப் பார்த்தேன், 'பார்த்துக் கொள்...' என்றார் அந்தப் பெரிய மனிதன். எங்களை இங்கே எவரும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று நாங்கள் ஒரு பகிடியாகவே சொல்லிக் கொள்வோம். நாங்கள் அவர்களுக்கு எந்த விதத்திலும் ஒரு பொருட்படுத்தக் கூடிய 'எதிராளி' இல்லை என்று சொல்லியும் சிரிப்போம். கிட்டத்தட்ட அந்த தமிழ் படத்தில் வந்த 'சப்பை' என்ற பாத்திரம் போல நாங்கள். இங்கு பெண்களும் எங்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்பதையும் நான் இங்கே சொல்லவேண்டும்.
  16. வட பகுதி பல்கலைகளிலிருந்து எவரும் தெரிவாக இல்லை போல....... இதற்கு விண்ணப்பிப்பதற்கு பாடசாலை உயர்தரத்தில் ஹிந்தி மொழியை ஒரு பாடமாக எடுத்திருக்க வேண்டும் அல்லது பல்கலையில் ஒரு பாடமாக எடுத்திருக்க வேண்டும் என்றிருக்கின்றது. யாழில் சில பாடசாலைகளில் ஹிந்தி ஒரு பாடமாக இருக்கின்றது என்று நினைக்கின்றேன். ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த ஒன்பது மாத பயிற்சி நல்ல ஒரு ஊக்கமாக அமையலாம். ஹிந்தி இந்திய மொழிகளில் ஒப்பீட்டளவில் புதிய மொழிகளில் ஒன்று. மூல மொழிகளிலிருந்து இது எதனை எடுத்திருக்கின்றது, எதனை தவிர்த்திருக்கின்றது என்பது கூட நல்ல ஒரு ஆராய்ச்சியாக இருக்கும்.
  17. வாழ்த்துகள் புவிதரனுக்கு! இவர் ஏற்கனவே இதை விட அதிக உயரம் தாண்டியிருக்கின்றார். சில மாதங்களின் முன் 5.17 மீட்டர்கள் தாண்டி இலங்கையில் ஒரு புது சாதனையை படைத்திருந்தார் என்று நினைக்கின்றேன். கோலூன்றிப் பாய்தல் ஒரு அசத்தலான விளையாட்டு.
  18. 🤣........... அப்படியே தான் நடந்தது. ஆமிக்காம்ப் மேற்கு எல்லையில், ஊரிக்காட்டுப் பக்கத்தில். போலீஸ் ஸ்டேஷன் தெற்கு எல்லையில், வல்வெட்டியில். கஸ்டம்ஸ் நடு வடக்கு ஓரத்தில், ரேவடிக் கடற்கரையில். மொத்தமுமே ஒரு இரண்டு சதுர மைல்கள் கூட வராது. எல்லா ஏற்றல்களும், இறக்கல்களும் இவர்கள் முன்னிலையில் தான் நடந்தன. முக்கியமாக கஸ்டம்ஸ், அவர்கள் கடற்கரையிலேயே பார்த்துக் கொண்டு இருந்தார்கள். இலஞ்சம் கொடுக்கல் வாங்கல் கணக்கு பிசகி அப்பப்ப கலைபட்டும் இருக்கின்றார்கள்...........
  19. இவர்கள் எல்லோரும் தமிழ்நாட்டில் 'ஆதாய அரசியல்' தான் செய்கின்றார்கள் என்பதில் நாங்கள், ஈழத்தமிழர்கள், ஒரே கருத்தையே கொண்டிருக்கின்றோம். இவர்களின் ஆதாய அரசியல் பெரும்பாலும் இவர்களின் குடும்ப உறவுகளின், வாரிசுகளின் மேம்பாட்டை நோக்கியே. இவர்களில் ஒரு சிலர், இரண்டாம் பட்சமாக, அவர்கள் சார்ந்த சாதி சனங்களிற்காகவும் சில அரசியல் முடிவுகளை எடுக்கின்றனர், உதாரணம்: பாமகவின் உள் ஒதுக்கீட்டு கோரிக்கை. முழு தமிழ்நாட்டிற்கு என்றோ, அங்கு வாழும் எல்லா தமிழர்களுக்கும் என்றோ இவர்களிடம் ஒரு பரந்த பார்வை கிடையாது. அப்படியான இவர்கள் ஈழத்தமிழர்களான எங்களை மட்டும் எவ்வாறு பரந்த ஒரு பார்வையுடன் அணுகுகின்றார்கள் என்று நாங்கள் நினைக்கவேண்டும்? இவர்களின் ஆதாய அரசியலுக்கு எங்களை ஒரு ஆயுதமாகவே இவர்கள் பயன்படுத்துகின்றனர் என்பது தான் பொருத்தமாக இருக்கும். சரி, என்னவானாலும் இவர்களால் எங்களுக்கு, எங்கள் நோக்கத்திற்கு நன்மை ஏதாவது கிடைத்தால், அது நல்லது தானே என்று நாங்கள் நினைக்கலாம். ஆனால் மிக நெருக்கடியான நேரத்தில், அதே சுய ஆதாயம் கருதி, இவர்கள் எங்களை கைவிடவும் கூடும் அல்லவா.......... கைவிட்டார்கள் என்று தானே நாங்கள் நினைக்கின்றோம். தங்கள் தகுதிக்கு மீறிய விடயங்களை நம்பிக்கைகளாக ,பொய்யான வாக்குறுதிகளாக இவர்கள் எல்லோரும் எங்களின் தலைமைக்கு கொடுத்தும் இருக்கலாம் அல்லவா, ஏனென்றால் இவர்களின் முதல் மற்றும் இரவு பகல் தேவை இவர்களின் ஆதாய அரசியல் மட்டுமே, நாங்கள் அல்ல.
  20. இல்லை, இத் திட்டம் இங்கு அமெரிக்காவில் நடைமுறைக்கு வராது. இது ஒரு வெறும் பேச்சு, அது வெறும் பேச்சாகவே முடியும். சமீபத்தில் நடந்த ஜி - 20 மாநாட்டின் போது, உலகம் முழுக்க மிகப் பெரிய பணக்காரர்களிடமிருந்து 2% அதிக வரி ஒன்றை அறவிட்டால் அதனால் உலகிற்கு கிடைக்கும் பயன்கள் என்னவென்று ஒரு பொருளாதார அறிஞர் (பிரெஞ்சு பொருளாதார அறிஞர் கேப்ரியால் ஜிக்மேன்) ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். வருடத்திற்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் இலாபமோ அல்லது சொத்தோ சேர்க்கும் பெரும் பணக்காரர்கள் இந்த வகையில் வருவார்கள். இங்கு குடியரசுக்கட்சி ஆட்சியில் இருந்தால், உலகமே இதற்கு சம்மதித்தாலும், இதற்கு குடியரசுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் இலேசில் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். அவர்களின் 'வரி எதிர்ப்பு' கொள்கை என்பது இந்த அளவில் தான் நடைமுறை சாத்தியமானது.
  21. 👍...... அந்த தெருவில் போனாலே மலிபனின் வாசனை வீசும்......... இந்த தடவை ஊரிலிருந்து வரும் போதும், எத்தனை லெமன் பிஸ்கட்டுகள் வாங்கி வந்தோம்.......... எல்லாம் முடிஞ்சுது.........😌. இங்கே ஒரு கடை அருகிலேயே இருக்கின்றது. சிங்களவர் ஒருவர் நடத்துகின்றார். இனி இலங்கை போய் வரும் வரையும் அவர் தான் தஞ்சம்..........
  22. ❤️......... இந்தப் படம் மிகவும் அருமை, அண்ணா. 'விருமாண்டி' படத்தில் வரும் 'உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்ல..........' என்ற பாடலின் ஒளிப்பதிவு பற்றி கமல் ஒரு தடவை சொல்லியிருந்தார். அதே போலவே இதுவும் இருக்கின்றது.
  23. 🤣....... சாரத்துடன் சிலர் பந்தும், கால்ப்பந்து, அடித்தார்கள். பின்னர், கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில், சாரத்துடன் விளையாடக் கூடாது என்ற நெறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. கரப்பந்தாட்டத்தில் பலர் என்றுமே சாரம் தான் கட்டியிருப்பார்கள். அங்கே 'ஓவர் கேம்' தான் அப்பொழுது விளையாடிக் கொண்டிருந்தார்கள். துள்ளல், குதித்தல் கிடையாது, அதனால் சாரம் தாண்டி எதுவும் வெளியே வரவில்லை. இதுவே 'செட்அப் கேம்' வகை கரப்பந்தாட்டம் என்றால், சிக்கியிருக்கும் நடு வலையில்...........
  24. அதுவே, பாஞ்ச் ஐயா. வெளிவந்த காணொளியில் விமானம் ஓடுபாதையிலிருந்து கிளம்பிய அந்தக் கணத்திலேயே மனிதர்களின் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகத் தெரிகின்றது. சில மிக அடிப்படையான பராமரிப்பு பணிகளையே தவற விட்டு விட்டார்களோ...........

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.