Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ரசோதரன்

  1. ஆழ்ந்த இரங்கல்கள். இவரால் தான் நவ சம சமாஜக் கட்சி மீதும், அதில் இருந்தோர் மீதும் பெரும் மதிப்பு உண்டாகியது. பின்னர் அந்தக் கட்சியில் இருந்த வாசுதேவ தடம் மாறி, ஒரு சாதாரண பெரும்பான்மை அரசியல்வாதி ஆகினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கு இந்த புலமைப் பரிசிலில் போய், கலாநிதிப் பட்டம் பெறும் வாய்ப்பு வருடத்திற்கு இலங்கையில் ஒருவருக்கு வழங்கப்படும். திறமை தான் அளவுகோல், இனப்பாகுபாடு அங்கில்லை. மூவினத்திலிருந்தும் போய் இருக்கின்றார்கள். ஆனால் இவர் அங்கிருந்து திரும்பி வந்தும் இடதுசாரியாகவே இருந்தது ஆச்சரியம். ரோஹண சோவியத் யூனியன் போய் வந்தவர் என்று ஞாபகம்.
  2. 👍............ என்னுடைய ஊரில் சாரங்களை தெரிவு செய்வதில் விட்டுக் கொடுப்புகள் கொஞ்சம் குறைவு. வசதி வாய்ப்புகளிற்கு மேலாகவே தெரிவுகள் இருக்கும். ஒரு காலத்தில் சங்கும், கிப்ஸூம் எங்களின் கடற்கரையில் வந்து கட்டுக் கட்டாக இறங்கிக் கொண்டும் இருந்தன......... அது இன்னொரு காரணம் எல்லோரும் அதன் பின் ஓடியதிற்கும்.
  3. மிகச் சுருக்கமாக சொன்னால், ஒரு அரசிற்கு நிதி வசதி தேவை. நிதியைத் திரட்டுவதற்கு வேறு வழிகள் இருந்தால், மக்களிடம் இருந்து வரி வசூலிப்பதை குறைத்துக் கொள்ளலாம். ராஜராஜ சோழ ஆட்சிக் காலத்தின் ஒரு பக்கத்தை பற்றித் தான், அது ஒரு பொற்காலம் என்று, பொதுவாக நாங்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கின்றோம். அந்த அரசின் கடும் வரிச் சுமை பற்றிய இன்னொரு பக்கமும் இருக்கின்றது. கேரளாவில் அவர்களின் ஆட்சியை ஒரு கொடுங்கோல் ஆட்சி என்று கூடச் சொல்லுவார்கள். அளவான, அதே நேரத்தில் நியாயமான வரி என்பது இன்றியமையாததே. அந்த வரிப் பணத்தை அரசு என்ன செய்கின்றது என்பதே பிரதான கேள்வி என்று நினைக்கின்றேன். நியாயமான வரி என்பதில் வரவுக்கேற்ற வரி என்பதும் அடங்கும்.
  4. 😌.... பராமரிப்பு பணிக்காக எடுத்துச் செல்லப்பட்ட விமானத்தில் எதற்காக 18 பேர்கள் இருந்தார்கள், ஒரு நான்கு வயதுக் குழந்தை உட்பட, என்று கேள்விக்கு, அவர்கள் அனைவரும் துறைசார் வல்லுநர்கள் என்று இப்பொழுது பதில் சொல்கின்றனர். எவ்வளவு பெரிய ஒரு கவனயீனம்.........😌.
  5. 👍........ ஒரு தொடர் தனியாக எழுதும் அளவிற்கு, அதுவும் 'சார லீலா' என்ற தலைப்பில் கதைகள் இருக்கின்றது போல...........🤣. அவர்கள், ஊருக்குள் வந்து போகும் போது, எப்போதும் நல்ல சாரங்களையே கட்டியிருந்தனர்.
  6. அப்படி இரண்டையும் நான் ஒப்பிட்டது தவறாக இருக்கலாம், விசுகு ஐயா. எனக்கு தோன்றியதை ஒரு அவசரத்தில் அலசி ஆராயாமல் எழுதி விட்டேனோ என்று இப்பொழுது தோன்றுகின்றது. பொதுவாகவே தமிழ்நாட்டில் காசு வாங்கி வாக்குப் போடும் எவரும் சொல்லும் ஒன்று: எங்களின் பணத்தை தானே அவர்கள் எங்களுக்கு கொடுக்கின்றார்கள் என்று. இதைப் பின் தொடர்ந்து வரும் எந்தப் பாதிப்பை பற்றியும் பலரும் அங்கு நினைத்துப் பார்ப்பதில்லை. இங்கும், அமெரிக்காவில், வரி வேண்டாம் என்பவர்கள் சொல்வதும் அதுவே: எங்களின் உழைப்பு எங்களுக்கு மட்டுமே, என் வீட்டிற்கு மட்டுமே என்று. அந்த வகையில் தான் இரண்டையும் ஒப்பிட முயற்சித்தேன். அமெரிக்காவில் இது வெறும் பேச்சு மட்டுமே. இப்படியான ஒன்று இங்கு வரவே முடியாது. மத்திய அரசின் முதுகெலும்பே மக்கள் கொடுக்கும் வரிப்பணம் தான்.
  7. 🤣...... ஊரில் இரண்டு தமிழ் கலவன் பாடசாலைகள் இருந்தன..... போகவில்லை......உலகம் ஒரு விண்வெளி விஞ்ஞானியை இழந்து விட்டது.....😀
  8. லுங்கி டான்ஸ் ---------------------- புதுச் சாரம் தான் புது உடுப்பு என்ற எண்ணம் எனக்கு ஒரு காலத்தில் இருந்தது என்றால் சிலருக்கு அது ஆச்சரியமாகக் கூட இருக்கலாம். உண்மையில் ஆச்சரியம் என்னவென்றால், இன்றும் 'புது உடுப்பு ஒன்றைப் போடுங்கோ...........' என்று வருட நாளிலோ அல்லது தீபாவளி அன்றோ சொல்லப்படும் போது, என்னையறியாமலேயே ஒரு புதுச் சாரத்தை கட்டிக் கொண்டு வந்து நிற்பது தான் ஆச்சரியமாக இருக்கின்றது. புதுச் சாரம் மடங்காமல், இடுப்பில் அப்படியே ஒட்டாமல், கோதுமை மா களி பூசின மாட்டுத்தாள் பேப்பர் போல நிற்கும் அந்த உணர்வை வேறு எந்த புது உடுப்பும் கொடுப்பதில்லை. ஒரு வருடம் முழுவதும் பாடசாலைக்கு வெள்ளை சேட் இரண்டு, நீலக் காற்சட்டை ஒன்று போதும். அடுத்த வருடம் கூட அந்த வெள்ளை சேட்டுகள் வரும். ஆனால் காற்சட்டையில் பல முக்கியமான இடங்களில் ஓட்டை விழுந்து விடும், அதனால் ஒவ்வொரு வருடமும் ஒரு காற்சட்டை புதிதாக வாங்கியே தீர வேண்டும். ஆனாலும் புதுக் காற்சட்டையையும், புதுச் சாரத்தையும் ஒப்பிடவே முடியாது. புதுச் சாரங்களை விட்டுப் பார்த்தால், வேறு எந்த புது உடுப்பினதும் நினைவும் மனதில் இன்று இல்லவே இல்லை. சங்கு மார்க், கிப்ஸ், பின்னர் டிசைன் டிசைனாக கொஞ்சம் நைசான துணிகளில் அம்பானியின் லுங்கிகள், சவுதி சாரம், மட்டக்களப்பு சாரம், பற்றிக் சாரம் என்று பல சாரங்களை இடுப்பில் சுத்தி சுத்தி வளர்ந்தவர்கள் நாங்கள். இன்றும் சாரம் தான். முன்னர் வேலை முடிந்து வந்தவுடன் சாரத்திற்கு மாறி விடுவேன். இப்பொழுது பெரும்பாலும் வீட்டில் இருந்தே வேலை செய்வதால், சில நாட்களில் 24 மணி நேரமும் கர்ணனின் கவச குண்டலம் போல சாரம் ஒட்டியே இருக்கின்றது. பல வருடங்களின் முன், இங்கு சாரத்தை பற்றி எல்லோருக்கும், எங்கள் மக்களிலேயே, ஒரே அபிப்பிராயம் இல்லை என்ற உண்மை முதன் முதலில் தெரிய வந்தது. சாரம் என்பது ஒரு 'மரியாதை குறைந்த' உடுப்பாக பார்க்கப்படுவதும் தெரிந்தது. வீட்டிற்கு நண்பர்கள் வரும் போது சாரத்துடன் நிற்பதை பலர் தவிர்த்தனர். சந்தியில் நாள் முழுக்க சாரத்துடன் நின்று வளர்ந்து விட்டதால் சாரத்தை விட்டுக் கொடுப்பதாக இல்லை. எவர் வந்தாலும் சாரம் தான் என்று மனம் இறுக்கமாக இருந்தது. தமிழ்நாட்டில் ஒருவரின் உணவுப் பழக்கத்தை அவரின் ஒரு வித அடையாளமாக எடுத்துக் கொள்வார்கள். மொத்தமான, ஒரே ஒரு வகை தோசை சுட்டுச் சாப்பிடுபவர்கள் வேறு. பேப்பர் தோசை, நெய் தோசை, ஆனியன் தோசை என்று சுட்டுச் சாப்பிடுபவர்கள் வேறு என்பார்கள். ஒருவர் குடிக்கும் கோப்பியையும், டீயையும், பிளேன் டீயையும் வைத்தே அவர்களை வகைப்படுத்தும் வல்லமை பல தமிழ்நாட்டவர்களுக்கு உண்டு. அவர்கள் கும்பிடும் சாமியை வைத்தும் வகைப்படுத்துவார்கள். நாங்கள் இந்தளவிற்கு இல்லை தான், ஆனாலும் சங்கு மார்க்கிலும், கிப்ஸிலும் ஒரு தயக்கம் இருந்தது. ஒரு தடவை மகிந்த ராஜபக்ச மாலத்தீவிற்கு போயிருக்கும் போது, மகிந்தவை வரவேற்ற சில மாலத்தீவு முக்கியஸ்தர்கள் சாரமே கட்டியிருந்தனர். படத்தில் பார்க்கும் போது அவை மட்டக்களப்பு சாரம் போன்றிருந்தன. இது போதுமானதாக இருந்தது எனக்கு, இன்னும் நிறைய சாரங்களை வாங்கி வீட்டில் அடுக்க. பின்னர் 'லுங்கி டான்ஸ்............. லுங்கி டான்ஸ்......' என்றொரு பாட்டும், ஆட்டமும் வந்து மேடையெல்லாம் கலக்கியது. பல கலை விழாக்கள், தமிழ் விழாக்களில் இந்த லுங்கி டான்ஸ் ஆடப்பட்டது. இது மிக இலகுவான ஒரு ஆட்டம், அதனால் இன்னும் புகழ் பெற்றது. ஆடுபவர்கள் பெரிதாக ஆடத் தேவையில்லை. வெளியால் கட்டியிருக்கும் சாரத்தை மட்டும் கீழேயும், மேலேயும் , பக்கவாட்டிலும் வேகமாக அசைத்தால் அதுவே லுங்கி டான்ஸ். என்றாலும் சாரத்திற்கு உரிய மரியாதை இன்னும் கொடுக்கப்படவில்லை என்றே எனக்குப்பட்டது. மாலத்தீவில் கட்டிக் கொண்டாடுகின்றார்களே. பின்னர் வந்தன ஒன்றுகூடல்கள். எங்காவது, கேரளா, மலேசியா, பாங்காக், இப்படி எங்காவது போய் ஒன்று கூடுவது. பொதுவாக ஒரே விதமான நிகழ்ச்சி நிரல்கள் தான். மேலதிகமாக, அந்தக் கூட்டத்தில் யாராவது ஒருவர் ஏதாவது ஒன்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால், அதுவும் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படும். உதாரணமாக, நான் போயிருந்த ஒன்றுகூடல் ஒன்றில் ஒருவருக்கு யோகா மிக நன்றாகவும், இன்னொருவருக்கு ஓரளவும் தெரியும் என்பதால். விடிகாலையில் யோகாசனம் என்பது நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்தது. அதிர்ஷடவசமாக அந்த உல்லாசப் போக்கிடத்திலிருந்து (resort) வெளியே போய் வருவதற்கு இரண்டு வழிகள் இருந்தன. இன்றைய ஒன்றுகூடல்களில் முக்கியமான இன்னொரு நிகழ்வு எல்லோரும் சாரம் கட்டி வரிசையாகவும், வட்டமாகவும், பல கோணங்களிலும் நின்று படங்கள் எடுத்து சமூக ஊடகங்களில் போடுவது. பெண்கள் படங்கள் எடுப்பதற்கு சேலைகளுடன் சளைக்காமல், நாள் முழுக்க நிற்பது போல. இப்பொழுது அப்பாடா என்றிருக்கின்றது. கடைசியில் சாரமும் ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது.
  9. நீங்கள் இதன் அடுத்த பகுதியை இன்னமும் எழுதவில்லையே என்று சில தடவைகள் நினைத்திருக்கின்றேன்...... நீங்கள் தான் அலைகளுக்குள்ளும் இறங்க வேண்டும்...........🙏.
  10. இங்கு கொடுக்க்கப்படும் சில வாக்குறுதிகள் திட்டவட்டமானவை. அவற்றை மீறமுடியாது. வருமான வரி குறைப்பு என்பது ஒரு திட்டவட்டமான வாக்குறுதி. அதுதுடன் இங்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஒரு சுழற்சி முறையில் வேறு தேர்தல்களும் வந்து கொண்டேயிருக்கும். அவையும் மிக முக்கியமானவையே, ஆதலால் சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி விட்டு ஓடித் தப்ப முடியாது. சில வாக்குறுதிகள் திட்டவட்டமானவை அல்ல. உதாரணம்: ரஷ்யா - உக்ரேன் சண்டையில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என்ற வாக்குறுதி. வெளியேற முடியா விட்டால், வேறு விதமாக உருட்டுவார்கள். வேறு வழிகளில் அரசாங்கம் பணத்தை மக்களிடமிருந்து அறவிடுவதற்கு திருத்தங்களும், வாக்களிப்பும் நடக்க வேண்டும். பல மாநிலங்கள் எதிர்க்கும். ஆனால் சமூக நலத் திட்டங்களை, ஆராய்ச்சிகளை, உதவிகளை மத்திய அரசு குறைக்கலாம். அதைத் தான் செய்வார்கள்.
  11. சில நம்மவர்களே இருக்கின்றார்கள், அண்ணா. ஆனால், 80/20 கூட இல்லை என்று தான் நினைக்கின்றேன்.
  12. கட்சி மற்றும் வேட்பாளர்கள் கொடுக்கும், சொல்லும் வாக்குறுதிகள், விஞ்ஞாபனங்களிலிருந்து தான் நாங்கள் ஒருவரை தேர்ந்தெடுக்க முடியும் என்பது சரியே, விசுகு ஐயா. ஆனால், ஒவ்வொரு பொதுமகனிடனும் ஓரளவாவது பொதுநலமும், நீண்டகால நோக்கும் இருக்க வேண்டும் என்பதும் அதே ஜனநாயகத்தின் எதிர்பார்ப்பு தானே. இதைவிட மனிதாபிமானம் என்பதும் தன்னளவில் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும் தானே. 'அகதிகளுக்கு எல்லைகளை மூடி விடுவோம்............' என்ற ஒரு காரணம் போதும் எனக்கு அப்படிச் சொல்லும் கட்சியிடம் இருந்து விலகுவதற்கு.
  13. அப்புறம் வேற என்ன பண்ணுவாங்களாம்......... மோடிஜீ எத்தனை தடவை தமிழ்நாட்டிற்கு வந்து போனார், கன்யாகுமரியில தவம் கூட இருந்தாரே.......... ஒரு சீட், ஒரே ஒரு சீட் கிடைச்சுதா தமிழ்நாட்டில........ தேர்தலில் அவர்களுக்கு தமிழ்நாடு கொடுத்த முட்டைக்கு பட்ஜெட்டில் தமிழக மக்களுக்கு அவர்கள் முட்டை போட்டிருக்கின்றார்கள். இது தான் இவர்களின் சுயரூபம். ஒரு நீலநரி போல நிறம் மாறி அப்பப்ப திருக்குறள் கூட சொல்லுவார்கள்......... பொதுவாகவே எல்லோரிடமும் ஏமாறும் தமிழ் மக்கள் இந்தக் கூட்டத்திடம் மட்டும் ஏமாறாமல் இருப்பது அதிசயமே........
  14. இப்படித் தான் இங்கும் அவரின் ஆதரவாளர்களான எங்கள் மக்கள் எல்லோரும் வாதாடுவார்கள். இப்பொழுது ட்ரம்ப் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் 'No Tax for the Middle Class' பற்றி பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்............... விக்கிரவாண்டியில் 2000 ரூபாய் வாங்கிக் கொண்டு வாக்குப் போட்டதிற்கும் இதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கின்றதா..........🫣.
  15. சுட்டு விடுவார்கள்........... பலரும் துவக்குகளை காவிக் கொண்டு திரிகின்றார்கள். கொக்கு, நாரைகள் போன்றவற்றைச் சுட்டால் தான் பெரும் பிரச்சனையாகி விடும். ஆனால், கடற்கரையில் குந்தி இருந்தார், அதனால் சுட்டேன் என்றால், பொதுவெளியில் ஆதரவு கொடுப்பார்கள்..........🤣.
  16. இது தான் பெரிய அதிர்ச்சி....... இரண்டு வாரங்கள் போதும், இரண்டு மாதங்கள் போதும், இந்த மழைக்காலம் முடியட்டும் என்று பல தவணைகள் வந்து போனது தான் மிச்சம்...... அட, இவ்வளவு தானா உங்கள் வல்லமை என்று கேட்க வைத்து விட்டார்கள்.
  17. 👍........ நீங்கள் சொல்வது மிகவும் சரி. கடல் என்றவுடனேயே உப்பு நீர் என்று வளர்ந்து விட்ட படியால், பெரும் நன்னீர் பரப்பும் கடல் என்பது இலகுவில் உட்புகவில்லை. ஐந்து பெரும் ஏரிகளும் அந்தப் பக்கமே இருப்பதும் இன்னொரு காரணம்.........🤣. இங்கும் மேலே வடக்கில் லேக் டாஹோ என்று ஒரு பெரிய நன்னீர் பரப்பும், அதன் கரையும் இருக்கின்றது. சில தடவைகள் போயிருக்கின்றேன்
  18. 👍.... அமெரிக்காவால் கைவிடப்பட நாடுகளின் வரிசையில் உக்ரேன் சேரும். ஒரு வளமான நாடு அழிந்து கொண்டிருக்கின்றது. மீள பல வருடங்கள் எடுக்கும்.
  19. ட்ரம்ப் அவர்களின் உள்நாட்டு தனிநபர் மற்றும் நிறுவன வரித் திட்டங்கள், இறக்குமதி வரித் திட்டங்கள் அமெரிக்காவிற்கு மிகவும் சாதகமானவையே. ஆனால் அவையே அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு பாதகமானவை தானே. எவர் வந்தாலும் அமெரிக்காவின் இஸ்ரேல் பற்றிய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் வராது. அமெரிக்கா, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இஸ்ரேலைக் கைவிடாது. இன்று இங்கிருக்கும் பெரும்பாலான இந்தியர்களுக்கு பதினைந்து வருடங்களின் மேல் எடுக்கின்றது கிரீன் கார்ட் எனப்படும் நிரந்தர வதிவுடமை பெறுவதற்கு. இந்த ஆமை வேகம் ட்ரம்பின் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. இதற்கென்று புதிய சட்டம் எதுவும் அவர் இயற்றவில்லை, இருக்கும் சட்டத்தின் படியே வரிக்கு வரி போனார்கள், எல்லாம் அதுவாக குறைந்தது. இதைப் போலவே தான் எல்லை கடந்து ஓடி வரும் அகதி மக்களின் நிலையும். புதிய சட்டம் எதுவும் இல்லை, ஆனால் அப்படியே திருப்பி அனுப்பிவிடுவார்கள். இந்த இரண்டு கட்சிகளில் எவர் பதவிக்கு வந்தாலும், அமெரிக்காவிற்கு, அதன் நலனுக்கு தேவையான யுத்தங்களும், சண்டைகளும் நடந்து கொண்டேயிருக்கும். அது எந்த அதிபரையும் மீறியது. 👍.... சில கணிப்புகளில் இவர் முன்னால் நிற்கின்றார் தான், அண்ணை. ஆனால் பெரும்பாலான கணிப்புகளில் ட்ரம்ப் சில புள்ளிகள் இடைவெளிகளில் முன்னுக்கு நிற்கின்றார். அதுவும் முக்கியமாக அந்தப் பக்கமோ, இந்தப் பக்கமோ என்று இன்னும் சாயாமல் இருக்கும் மாநிலங்களில். அவை தானே தேர்தல் முடிவை நிர்ணயிக்கப் போகின்றன............ கலிஃபோர்னியாவில் ஐந்து புள்ளிகள் கமலா ஹாரீஸிற்கு கூடினாலும் அதனால் பயன் ஏதும் இல்லை........
  20. கமலா ஹாரீஸின் தந்தையார் ஜமேக்கா நாட்டைச் சேர்ந்தவர். கரீபியன் அணி கிரிக்கட் வீரர்கள் போல இருப்பார். தந்தையின் சாயல் அதிகமாகவே இவருக்கு இருக்கின்றது. நிறமோ, உருவமோ ஒரு பொருட்டல்ல. அதே போலவே இந்திய மக்கள் சிலரின் அலட்டல்களும். அவர்கள் நாளுக்கொன்று, வாரத்திற்கு ஒன்று என்று ஏதாவதை இன்டர்நெட்டில் போட்டு உருட்டிக் கொண்டே இருப்பார்கள். ரஜனி அரசியலுக்கு வரப் போகின்றேன் என்று சாடைமாடையாகச் சொன்னாலே, கமலாவை மறந்து விடுவார்கள். ரஜனி கூட அவரின் படம் வெளியாவதற்கு முன் அப்படியும் சொல்லிக் கொள்வார். அமெரிக்க இன்றைய தேர்தல் கள நிலவரப்படி கமலா ஹாரீஸ் பின்னுக்கே நிற்கின்றார். இன்னமும் மூன்று மாதங்களுக்கு மேல் உள்ளது. மாற்றங்கள் வரலாம். ட்ரம்ப் வந்தால் அமெரிக்காவிற்கு பரவாயில்லை. மற்றவர்கள் வந்தால் உலகத்திற்கு பரவாயில்லை.
  21. இவர்கள் சொல்லும் பிரச்சனைக்கு ஒரு இலகுவான தீர்வு இருக்கின்றதென்று நினைக்கின்றேன். கலிஃபோர்னியாவில் 800 மைல்கள் நீளமான பீச் இருக்கின்றது. சில மிகப் பிரபலமானவை, உதாரணம்: மாலிபு பீச். இந்த பீச்சுகளில் இருக்கும் கழிவறைகள் பூட்டப்படுவதே இல்லை, அதைப் போலவே குளிப்பதற்காக நன்னீரும் வந்து கொண்டேயிருக்கும். இதே அமைப்பையும், ஒழுங்கையும் திருகோணமலை மார்பிள் பீச்சிலும் பார்த்திருக்கின்றேன். அதனால் அங்கேயும் மணல் சுத்தமாக இருக்கின்றது.
  22. இதில் சொல்லப்பட்டிருக்கும் அந்த இடத்திற்கு போயிருக்கின்றேன். நம்மவர்களும் அங்கே போவார்கள். இது தான் அங்கே பலருக்கு அருகே இருக்கும் பீச்.......... இதை பீச் என்று சொல்வதும் கொஞ்சம் சங்கடம் தான்....... கோவிட் தொற்றின் போது இங்கு ஒருவர் ஒரு பார்க்கில் மூடப்பட்டிருந்த கழிவறைகளுக்கு பக்கத்தில் இப்படிச் செய்து கொண்டிருந்ததை கண்டிருக்கின்றேன். அவர் ஒரு வீடற்ற தெருவில் வாழும் மனிதர்.......
  23. 👍.......... அன்னை அநேகமாக எதையும் பொறுத்தே போவார்......... சதி சில வேளைகளில் சன்னதம் கொண்டு விடும்.......😃.
  24. பதிவிடுவதும், அதற்கு வரும் லைக்குகளும் மனிதர்களை இலகுவாக அடிமையாக்குகின்றன போல. இது ஒரு போதை. இவர் பேராதனை மருத்துவமனை என்றில்லை, இனி எங்கேயும் ஒரு மருத்துவராக வேலை செய்யும் மனப்பாங்கை இழந்து விட்டார் என்றே நினைக்கத் தோன்றுகின்றது. மருத்துவமனை நிர்வாகப் பணி இவருக்கு ஒத்து வரலாம், ஆனால் இலங்கையில் எந்த மருத்துவமனையில் இவரை ஒரு நிர்வாகியாக உள்ளே விடுவார்கள்............. பேராதனை மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்களின் மற்றும் நிர்வாகத்தினரின் பெயர்களையும் விபரங்களையும் அந்த மருத்துவமனையின் இணைய தளத்தில் சென்று பார்த்தேன். பலர் மிகவும் தகுதி வாய்ந்தவர்கள். உலகின் பல நாடுகளிற்கு இலகுவாகச் சென்று அங்கேயே வசதியாக வாழக் கூடிய நிலையில் இருப்பவர்கள். ஆனாலும் பேராதனை மருத்துவமனையில் இருக்கின்றனர். ஒருவர் தமிழர், சிலர் இஸ்லாமியர், ஏனையோர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோர் போன்று தெரிகின்றது. அங்கேயும் இவர் குற்றம் தேடி பதிவிடுவதை விடுத்து, மக்களுக்கு சேவை செய்வது தான் இலட்சியம் என்றால், அங்கேயே மருத்துவ சேவையினூடே செய்யலாம்.
  25. 'கோட்பாட்டின் சதி' என்று தான் எல்லா சந்தர்ப்பங்களிலும் இருக்க வேண்டும் என்றும் இல்லை......... 'கோட்பாட்டின் பதி' என்று சொல்லும் நிலையும் பல இடங்களில் இருக்கும்...............

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.