Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 19 26 26 71 2 China 19 15 11 45 3 France 12 14 18 44 4 Great Britain 10 12 15 37 5 Australia 12 11 8 31 6 Republic of Korea 10 7 7 24 7 Japan 9 5 10 24 8 Italy 7 10 5 22 9 Canada 5 4 8 17 10 Netherlands 6 5 4 15 11 Germany 5 5 2 12 12 Brazil 1 4 5 10 13 Hungary 3 3 2 8 14 Spain 1 2 5 8 15 Romania 3 3 1 7 16 New Zealand 2 4 1 7 17 Sweden 2 3 2 7 18 Ireland 3 0 3 6 19 Ukraine 2 1 3 6 20 Israel 1 4 1 6 21 Switzerland 1 1 4 6 22 Belgium 2 0 3 5 23 Greece 0 1 4 5 24 Croatia 2 1 1 4 25 Hong Kong 2 0 2 4 26 Georgia 1 2 1 4 27 Kazakhstan 1 1 2 4 27 South Africa 1 1 2 4 29 Poland 0 1 3 4 30 Chinese Taipei 1 0 2 3 30 Uzbekistan 1 0 2 3 32 Jamaica 0 2 1 3 32 Mexico 0 2 1 3 32 DPR Korea 0 2 1 3 35 India 0 0 3 3 35 Tajikistan 0 0 3 3 37 Azerbaijan 2 0 0 2 37 Philippines 2 0 0 2 37 Serbia 2 0 0 2 40 Czech Republic 1 0 1 2 40 Guatemala 1 0 1 2 42 Kosovo 0 1 1 2 42 Turkey 0 1 1 2 44 Dominican Republic 0 0 2 2 44 Moldova 0 0 2 2 46 Algeria 1 0 0 1 46 Argentina 1 0 0 1 46 Chile 1 0 0 1 46 Dominica 1 0 0 1 46 Ecuador 1 0 0 1 46 Norway 1 0 0 1 46 Slovenia 1 0 0 1 46 Saint Lucia 1 0 0 1 46 Uganda 1 0 0 1 55 Armenia 0 1 0 1 55 Denmark 0 1 0 1 55 Ethiopia 0 1 0 1 55 Fiji 0 1 0 1 55 Mongolia 0 1 0 1 55 Tunisia 0 1 0 1 61 Austria 0 0 1 1 61 Cape Verde 0 0 1 1 61 Cuba 0 0 1 1 61 Egypt 0 0 1 1 61 Grenada 0 0 1 1 61 Lithuania 0 0 1 1 61 Malaysia 0 0 1 1 61 Portugal 0 0 1 1 61 Slovakia 0 0 1 1
  2. 🤣......... மூன்று நாட்கள் காத்திருந்தும் பூசணிக்காய் இன்னும் வெளியில தெரியவில்லை............. நாமல் இந்த வாரம் தாங்கள் சில இளம், புதிய தமிழர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கின்றார். அந்த இளம் தமிழர்களில் ஒருவர் ஒரு காலத்தில் இலங்கையின் ஜனாதிபதியாகக் கூட வரலாம் என்றும் அவர் சொன்னார். இரண்டு உண்மைகள் இப்ப தெரிஞ்சாகணும்...........😜.
  3. இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 10 20 18 48 2 France 11 13 14 38 3 China 14 10 9 33 4 Great Britain 10 10 12 32 5 Australia 12 7 5 24 6 Japan 8 4 8 20 7 Italy 6 8 4 18 8 Republic of Korea 8 5 4 17 9 Netherlands 5 4 4 13 10 Canada 3 3 6 12 11 Germany 4 3 2 9 12 Brazil 1 3 4 8 13 Romania 3 3 1 7 14 New Zealand 2 4 1 7 15 Hungary 2 2 2 6 16 Israel 1 4 1 6 17 Switzerland 1 1 4 6 18 Sweden 1 2 2 5 19 Spain 1 1 3 5 20 Hong Kong 2 0 2 4 20 Ireland 2 0 2 4 22 South Africa 1 1 2 4 23 Greece 0 1 3 4 23 Poland 0 1 3 4 25 Croatia 2 0 1 3 26 Georgia 1 2 0 3 27 Belgium 1 0 2 3 27 Kazakhstan 1 0 2 3 27 Uzbekistan 1 0 2 3 30 Mexico 0 2 1 3 31 India 0 0 3 3 32 Azerbaijan 2 0 0 2 33 Czech Republic 1 0 1 2 33 Guatemala 1 0 1 2 35 DPR Korea 0 2 0 2 36 Kosovo 0 1 1 2 36 Turkey 0 1 1 2 36 Ukraine 0 1 1 2 39 Moldova 0 0 2 2 39 Tajikistan 0 0 2 2 41 Argentina 1 0 0 1 41 Ecuador 1 0 0 1 41 Philippines 1 0 0 1 41 Serbia 1 0 0 1 41 Slovenia 1 0 0 1 41 Uganda 1 0 0 1 47 Denmark 0 1 0 1 47 Ethiopia 0 1 0 1 47 Fiji 0 1 0 1 47 Mongolia 0 1 0 1 47 Tunisia 0 1 0 1 52 Austria 0 0 1 1 52 Chinese Taipei 0 0 1 1 52 Egypt 0 0 1 1 52 Lithuania 0 0 1 1 52 Portugal 0 0 1 1 52 Slovakia 0 0 1 1
  4. 👍.......... செய்திகளில் இருந்தது. அமெரிக்காவிற்கும் ரணில் தான் தேவையாக இருக்குது போல....... ரணில் தமிழ் எழுத்தாளர்கள் போல........ எழுத்தாளரின் பக்கத்து வீட்டுக்காரருக்கே அடுத்தவர் ஒரு எழுத்தாளர், கொஞ்சம் பிரபலமானவர் என்றெல்லாம் தெரியாது. ரணிலையும் உள்ளூரில் எவரும் மதிப்பது இல்லை........ஆனால் உலகத்தில் ரணிலை பலருக்கும் தெரிந்திருக்குது..........
  5. ஆகஸ்ட் இரண்டு -------------------------- சந்தியில் நண்பன் ஒருவன் பலசரக்கு கடை வைத்திருந்தான். அந்த நாட்களில் ஒரு நாளின் சில பகுதிகளை அங்கே செலவிடுவதும் எங்களின் வழக்கமாக இருந்தது. பல சமயங்களில் நண்பனின் இரு சகோதர்களும் கூட அங்கே வியாபாரத்தில் நிற்பார்கள். எங்களுக்குள் ஒரு சில வயதுகளே இடைவெளி. கடை ஒரு அமைவான இடத்தில் இருந்தது. புதிய சந்தைக் கட்டிடத்தில் சந்தியை நோக்கிய திசையில் கடை இருந்தது. கடையில் இருந்து பார்த்தால் சந்தி முழுவதும் தெரியும். அப்பொழுது நான் சில தனியார் கல்வி நிலையங்களில் படிப்பித்துக் கொண்டிருந்தேன். மிகுதி நேரங்களில் இந்தக் கடை, பந்தடி, கடற்கரை, கோவில் வீதி, சந்தியில் மற்றும் ஊரில் இருக்கும் திண்ணைகள், கல்யாண வீட்டுச் சோடனைகள் என்று காலம் கஷ்டம் அறியாமல் போய்க் கொண்டிருந்தது. நண்பர்கள் ஒவ்வொருவராகச் கொழும்பு சென்று, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்லவும் ஆரம்பித்திருந்தனர். சிலர் இந்தியா போய் அங்கேயே தங்க ஆரம்பித்திருந்தனர். ஊர் எல்லோரிடமும் அடிவாங்கிக் கொண்டிருந்தது காலம் அது. இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, அதை விட இலங்கை இராணுவத்தின் ஆபரேசன்கள் என்று விடாமல் எரிந்து கொண்டிருந்தது ஊர். 87 ஆம் ஆண்டில் நடந்த லிபரேஷன் ஆபரேஷன் தான் ஊரின் முதுகை முறித்த கடைசித் துரும்பானது. அந்த நிகழ்வுடன் கிளம்ப வழி இருந்தவர்கள் பலரும் ஊரிலிருந்து வெளியேற வழி தேடினர். சிலர் எப்பாடு பட்டாவது ஏ லெவல் பரீட்சையை எடுத்து முடித்து விட்டு பின்னர் வெளியே போகலாம் என்று 87 ஆம் ஆண்டைத் தாண்டியும் ஊரில் நின்றனர். பின்னர் வந்த இந்திய இராணுவம் முதலில் முழுக் குழப்பத்தில் இருந்தது. சமாதானமா, சண்டையா, யாருடன் சண்டை, யாருடன் சமாதானம் என்று அவர்களுக்கு பெரும் குழப்பமாகவே இருந்திருக்கும். எங்களுக்கும் அப்படியே இருந்தது. ஆரம்பத்தில் நாங்கள் அவர்களை எந்த விதமான பயத்துடனும் அணுகவில்லை. ஊரைச் சுற்றி அவர்களின் பல முகாம்கள், ஆனாலும் நாங்கள் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. பின்னர் தகராறாகி, நண்பர்கள் எதிரிகள் என்று உருவாகினர், தலையாட்டிகள் வந்தனர். அடிக்கடி சுற்றி வளத்து, கூட்டிக்கொண்டு போவார்கள். ஒரு பாடசாலையில் வைத்திருப்பார்கள். அம்மாக்கள் பாடசாலைக்கு வெளியே காத்திருப்பார்கள். தலையாட்டி தலையாட்டாமல் விட்டால், உடனேயே விட்டு விடுவார்கள். தலையாட்டி தலையை ஆட்டி விட்டால், அது வேற கணக்கு, ஆனாலும் வெளியில் வந்துவிடலாம். எங்கள் பகுதியில் தலையாட்டியாக இருந்தவரை எங்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அவருக்கும் எங்கள் எல்லோரையும் நன்றாகவே தெரியும். அவர் சிலரை வேண்டும் என்றே 'போட்டுக்' கொடுத்தார். அவர் உண்மையான ஆபத்துள்ள எவரையும் போட்டுக் கொடுத்ததாக எனக்கு ஞாபகமில்லை. ஆனாலும் இவர் ஏன் அவர்களுடன், தலையாட்டியாக, போய்ச் சேர்ந்தார் என்று தெரியவில்லை. ஆகஸ்ட் இரண்டு, 1989ம் ஆண்டு. காலையில் கடையில் நின்று கொண்டிருந்தேன். நண்பனும், அவனின் தம்பியும் கூட நின்றனர். அருகில் சிவபுர வீதியில் இருக்கும் தனியார் கல்வி நிலையத்தில் எனக்கு ஒரு வகுப்பு இருந்தது. வகுப்பை முடித்து விட்டு வருவதாக நண்பனிடம் சொல்லி விட்டு சென்றேன். அந்த நேரத்தில் அங்கு ஒரே ஒரு வகுப்பு மட்டுமே, என்னுடைய வகுப்பு மட்டும், நடந்து கொண்டிருந்தது. திடும்மென்று முன்கதவால் இந்திய இராணுவத்தினர் சிலர் உள்ளே வந்தனர். என்ன, ஏது என்று கேட்டு விட்டு, முன் கதவாலேயே வெளியில் போனார்கள். ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. எங்கும் துப்பாக்கிச் சத்தம். தலைக்கு மேலால் சன்னங்கள் பறந்தன போல் இருந்தன. மாணவர்களும், நானும் பின்பக்கம் இரண்டு சுவர்கள் ஏறி குதித்தோம். அப்படியே தீருவில் வயல்கள் கடந்து, பனங்கூடல்களுக்குள்ளால் ஓடிக் கொண்டே இருந்தோம். பனங்கூடல்கள் தாண்டி கொம்மந்தறை பகுதியை அடையும் போது, எதிரே இந்திய இராணுவத்தினர் அவசரம் அவசரமாக வாகனங்களில் ஊரை நோக்கி போய்க் கொண்டிருந்தனர். ஊருக்கு திரும்பிப் போக இரண்டு நாட்கள் எடுத்தது. ஊரையே இரண்டு நாட்கள் மூடி வைத்திருந்தனர் இந்தியா இராணுவத்தினர். ஊருக்குள் வந்தவுடன், ஓடிப் போனேன் கடைக்கு. கடை முழுவதுமாக எரிக்கப்பட்டிருந்தது. நண்பனும், அவனின் தம்பியும் காணாமல் போய்விட்டனர்.
  6. 👍...... நல்ல முயற்சி. விழா மலரை யாராவது இணையத்தில் போட்டால், எல்லோரும் படிக்க வசதியாக இருக்கும். நூலகம் குழுமம் உடனேயே போட மாட்டார்கள் என்று நினைக்கின்றேன். பல்கலைக்கழக நிகழ்வு என்றாலே கொஞ்சம் தயக்கம் இருக்கின்றது. அவர்கள் முன்னுக்கு போக வேண்டியவர்கள், ஆனால் பின்னாலேயே, இறுக்கமாக வந்து கொண்டிருப்பார்கள். அதுவும் இலக்கியத்தில் இன்னும் இன்னும் பின்னாலேயே. போன வருடம் தென்கிழக்கு பல்கலையில் நடந்த சில புத்தகங்கள் பற்றிய நிகழ்வு பற்றி ரியாஸ் குரானா எழுதிய பதிவு இது: https://www.riyasqurana.com/article.php?category=&post=135
  7. 👍.......... சில ஆந்திரா முஸ்லிம்களின் பின்புலம் புரிந்துகொள்ளபடக் கூடியதே. ஹைதராபாத் நிசாமின், இவர் முகாலயர் வழி வந்தவர், கீழ் தனி ஆட்சியாகவே சுதந்திரம் வரையும் இருந்தது. அவர்கள் அன்று பாக்கிஸ்தானுடன் இணையக் கூடும் என்ற நிலையும் இருந்தது. பின்னர் இந்தியா நிசாமுடன் சண்டையிட்டே இந்தப் பகுதியை மீட்டெடுத்தது. தமிழ்நாட்டில் இது அவர்களின் கலாச்சாரத்தின் ஒரு தாக்கமாக இருக்கலாம், இலங்கையில் சில முஸ்லிம்கள் அரபு மொழியில் பண்டித்தியம் பெற்றிருப்பது போல..........
  8. சில வாரங்களின் முன் சஜித் யாழ் வந்து, பதின்மூன்றை, காணி போலீஸ் அதிகாரமுள்ள, சட்டமாக்குவேன் என்று சொன்னார். கொழும்பில் அவர் வீட்டிற்கு கல் எறியாதது ஒன்று தான் குறை. ஜேவிபியினர் அவர் வீட்டு வாசலிலேயே நின்று தொண்டை நரம்புகள் தெறிக்க, வழமை போலவே, சஜித்துக்கு எதிராகப் போராடினார்கள். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இது போரில் இறந்த இராணுவத்திற்கு சஜித் செய்யும் துரோகம் என்றார். சஜித் ஆளையே இப்ப காணவில்லை. ரணில் 'காணி போலீஸ் 2.0' உடன் இப்ப வந்திருக்கின்றார். பீல்ட் மார்ஷல் நாளைக்கு பீல்ட்டில் பிசியாக நிற்பார். ஜேவிபியினருக்கு எல்லா நாளும் ஒரே நாளே, என்னமா பேசுவார்கள்........... நமக்கும் எல்லா நாளும் ஒரே நாளே, ஒரு மரமும் வெட்டாத தச்சன் போல. இந்தக் கலவரங்களிற்கு மத்தியில், அமெரிக்காவிலிருந்து சமீபத்தில் ஒரு கண்டன அறிக்கையை நாங்கள் விட்டிருந்தோம். 'சமஷ்டி எல்லாம் ஏத்துக்க முடியாது, தனிநாடு தான் எங்களுக்கான ஒரே தீர்வு ............', சுருக்கமாக அந்த அறிக்கையில் இருந்தது இது தான்............
  9. திராவிட மொழிகளை தவிர்த்து விட்டால், உருது மொழியே அதிகமாக தமிழ்நாட்டில் பேசப்படுகின்றது என்பது ஆச்சரியமான தகவல். ஹிந்தியையும், பெங்காலியையும், மராத்தியையும் விட உருது மொழி அதிகமாக தமிழ்நாட்டில் எந்த மக்களால், என்ன பின்புலம் கொண்ட மக்களால் பேசப்படுகின்றது என்ற தகவல் இங்கு இல்லை. வேறு எங்காவது இருக்கக்கூடும். நவீன உருது மொழி பாக்கிஸ்தானின் மொழி. முன்னைய உருது மொழி முகாலயர்களின் மொழி என்று நினைக்கின்றேன். தமிழ்நாட்டில் கொங்கணி மொழி பேசுபவர்களும் சில ஆயிரங்கள் உண்டு.........! கோவாவை பின்புலமாகக் கொண்டவர்களின் பேச்சு மொழி இது. இந்த மொழிக்கு எழுத்துரு கிடையாது. தமிழ்நாட்டில் தமிழ் எழுத்துருவை பயன்படுத்துவார்கள் போல..........
  10. வருடத்திற்கு 25 பொது விடுமுறை தினங்கள் என்பது அதிகம் தான். இதில் 12 பூரணை நாட்களை எடுத்து விட்டால், உலகில் மற்ற நாடுகளின் அளவை விட சில நாட்களே அதிகமாக இலங்கையின் கணக்கும் வருகின்றது. இதை விட இலங்கையில் தனிப்பட்ட விடுமுறை நாட்கள், சராசரியாக, மூன்று வாரங்களும் கொடுக்கப்படுகின்றது. வருடத்தில் வேறு சில நாட்களிலும் வேலையை அங்கு தவிர்க்கக் கூடியதாக இருக்கின்றது. எல்லாவற்றையும் சேர்த்தால் Work - Life Balance என்பது வாழ்க்கைக்கு சாதகமாக அங்கு சரிந்து விடுகின்றது............🤣. நாட்டின் மொத்த உற்பத்தியும், அங்கே நிலையான போதிய வருமானமும் இருந்தால், இப்படியான இலகுவான வேலைப்பளு இருந்தால் பாதகம் இல்லை. ஆனால் நாட்டின் நிலையோ பல வருடங்களாக வங்குரோத்து நிலையில் அல்லவா இருக்கின்றது. அமெரிக்கா இதற்கு நேர் எதிர். பொது விடுமுறை தினங்கள் 12, ஆனாலும் பல தனியார் நிறுவனங்களில் எட்டு நாட்கள், பத்து நாட்கள், இப்படி அவர்களின் இஷ்டத்திற்குத் தான் பொது விடுமுறையாகக் கொடுப்பார்கள். பெரும்பாலான வேலைகளில், ஆரம்பிக்கும் போது, தனி விடுமுறையாக இரண்டு வாரங்களே கொடுப்பார்கள். அதையும் ஒரு சேர எடுப்பதில், கொடுப்பதில், தயங்குபவர்களும் உண்டு. ஆனாலும் இங்கு Work - Life Balance என்று கட்டுரைகள் வந்து கொண்டேயிருக்கும், கருத்தரங்குகள் நடந்து கொண்டேயிருக்கும். 'யுத்த நிறுத்தம்' வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வது போல.........😃.
  11. துருக்கியைச் சேர்ந்த 51 வயதான யூசுஃப் mixed 10 meter air pistol விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். மற்ற சக வீரர்கள் எத்தனையோ உபகரணங்களை தலைக்கு, கண்ணுக்கு, காதுக்கு, உடம்புக்கு என்று போட்டுக் கொண்டு போட்டியில் இறங்க, இவர் அப்படியே சும்மா வந்து, ஒரு கையை பாக்கெட்டுக்குள் வைத்தபடியே சுட்டு வென்றிருக்கின்றார். நல்ல காலம்........ நம்ம தெருவில, நம்ம ஊரில இவர் இல்லை..........🤣.
  12. இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 9 17 14 40 2 France 8 11 10 29 3 China 12 7 7 26 4 Great Britain 9 8 8 25 5 Australia 8 6 5 19 6 Japan 8 3 6 17 7 Italy 5 8 4 17 8 Republic of Korea 6 3 3 12 9 Canada 3 2 4 9 10 Netherlands 4 2 2 8 11 New Zealand 2 3 1 6 11 Romania 2 3 1 6 13 Germany 2 2 2 6 14 Brazil 0 3 3 6 15 Sweden 1 2 2 5 16 Spain 1 1 3 5 16 Switzerland 1 1 3 5 18 Hong Kong 2 0 2 4 18 Ireland 2 0 2 4 20 Hungary 1 2 1 4 21 South Africa 1 1 2 4 22 Greece 0 1 3 4 22 Poland 0 1 3 4 24 Croatia 2 0 1 3 25 Georgia 1 2 0 3 26 Belgium 1 0 2 3 26 Kazakhstan 1 0 2 3 28 Mexico 0 2 1 3 29 India 0 0 3 3 30 Azerbaijan 2 0 0 2 31 Guatemala 1 0 1 2 31 Uzbekistan 1 0 1 2 33 DPR Korea 0 2 0 2 34 Israel 0 1 1 2 34 Kosovo 0 1 1 2 34 Turkey 0 1 1 2 34 Ukraine 0 1 1 2 38 Moldova 0 0 2 2 39 Argentina 1 0 0 1 39 Ecuador 1 0 0 1 39 Serbia 1 0 0 1 39 Slovenia 1 0 0 1 43 Fiji 0 1 0 1 43 Individual Neutral Athletes 0 1 0 1 43 Mongolia 0 1 0 1 43 Tunisia 0 1 0 1 47 Austria 0 0 1 1 47 Egypt 0 0 1 1 47 Portugal 0 0 1 1 47 Slovakia 0 0 1 1 47 Tajikistan 0 0 1 1
  13. இது 'கீற்று' இணையத்தில் இருந்தது. கவிஜி இதை எழுதியிருந்தார். இதை வாசிக்கும் போது மனம் இலேசாக ஆனது. உங்களுக்கும் இது பிடிக்கலாம். ************************************************* மதகத ராசாக்களே சிரியுங்கள் வயதாகும் போது கோமாளிகள் ஆகாமல் இருக்க கவனத்தோடு இருக்க வேண்டும். பல கெத்துகள் வெத்துகளானதை பார்த்து விட்டோம். பார்த்துக் கொண்டிருக்கிறோம். பார்க்க பார்க்க வயதாகி விடுவது இயல்பு. அது ஒரு ப்ரோஸஸ். வயது ஏற ஏற மனதின் வடிவம் மாற வேண்டும். தன்மையின் தகவமைப்பில் பழம் போல பழுத்து... சுவை கூடும் இனிப்பில் புன்னகைக்க வேண்டும். மொட்டு விடும் அனிச்சையின் மொழி கொள்ளலே வயதாவதின் வடிவம். இயல்பினும் இயல்பாக பனி உருளும் நுனிப் புல் ஆகி எட்டு திசைக்கும் இசை பட அசைதல் அது. முந்திக் கொண்டு நிற்பது கூடாது. முன்ன விட்டு வழி நடத்துதலே அழகு. பின்னிருந்து பேசுதல் ஆகாது. உண்மையில் இருந்து பேசுதல் பேரழகு. உரக்க பேச வேண்டிய தேவை இல்லை. உள்ளத்தின் கதவுகள் திறந்திருந்தாலே போதும். மௌனமும் மொழி ஆகும். மனமெல்லாம் பூ வாகும். கருணை கொப்பளிக்க காலம் கூடும். கடவுள் ஆகி விட்டால் கவலை தீரும். ஒன்று புத்தகம் போல இருக்க வேண்டும். எந்தப் பக்கம் திருப்பினாலும்... செய்தி கிடைக்கும். அல்லது ட்ரங்கு பெட்டியாக இருக்க வேண்டும். திறக்க திறக்க நினைவுகளில் நீந்தும் சிறுபிள்ளை வாசம். இரண்டும் இல்லாமல் டிவி பொட்டியாக இருந்துவிடல் ஆகாது. சலிப்பு ஏற்படும். பக்கத்து வீட்டை எட்டிப் பார்க்க கற்றுத்தரும் சீரியல் மொழி மனிதன் சின்னவனாகும் வழி. குறுக்கு புத்தியில் இருந்து வெளியேறும் வயதுக்கு பலம் அதிகம். குதர்க்க சித்துவில் இருந்து வெளியேறும் மனதுக்கு பவள வண்ணம். வளைந்து கொடுக்காத மரம் புயலுக்கு தாங்காது போல.. வாழ்க்கை பொழியாத மனம் வயதாவதற்கு ஆகாது. வாரி அணைக்க தெரிந்த கைகளில் ஒரு மொத்த வாழ்வின் முத்தங்கள் ரேகையாய் படிந்திருக்கும். எல்லாருக்கும் கொடுத்து விட்டு எல்லையில் நிற்கும் சாமியாகும் வரம் வயதாவதற்கே கிடைக்கிறது. எனக்கு எனக்கு என்று ஆளாய் பறக்கும் மனதில் அனுபவமற்ற அரைவேக்காடு தானே மூடி உதைத்துக் கொண்டிருக்கும். முழு மனிதர் ஆக வயதாவதை ஏற்றுக் கொள்ளல் முக்கியம். பிறகு அதற்கு தகுந்தாற் போல காரியங்களை ஆற்றுவது அதன் பக்குவத்திற்கு கிடைக்கும் பரிசு. வெளித் தோற்றத்திற்கான பூச்சு காலத்துக்கு தக்க இயல்பாகி விட்டாலும்.... உள்ளே பூச்சற்ற வெண்மை தாலாட்ட வேண்டும். முகத்துக்கும் தலைக்கும் பூசும் பூச்சு நிம்மதி தரும் என்றால்... மனதுக்கு பூசும் பூச்சு நிம்மதி எடுக்கும். பொறுமைக்கு அருஞ்சொற்பொருள் மூத்த மனிதனின் முகக்கனிவென்றே இருக்கட்டும். குற்றம் கண்டு கொண்டே இருக்க சுற்றம் இருப்பது இருக்கட்டும்... உற்றதே விலகத் தொடங்கும். மரணத்துக்கு பயந்தவர் மற்றவருக்கு இரங்குவதில்லை. தன்னைப் பற்றியே சிந்திக்கும் சீக்கு முதுமைக்கு அழகல்ல. தன்னியல்பின் நிழலாக அசையும் ஆறு போல இருந்தால்... வேறு என்ன வேண்டும். விதி விட்ட வழி என்றெல்லாம் ஒன்றுமில்லை. வீட்டுக்கே வெளிச்சமாகும் வல்லமை வயதாவதற்கு உண்டல்லவா. கிடந்து தவித்தல் கடிந்து கொண்டே இருத்தல். எழுந்து பறக்க... கடினப்பட்ட கவசத்துக்கு ஆகாது. பழம் போல இருக்க வேண்டும்... வயதான மனது. விழுந்து சிதறினாலும்... பல உயிர்களுக்கு உணவாக வேண்டும். முடங்கிக் கொண்ட மூச்சில் விஷம் ஏறுவது இயல்பு. மூர்க்கம் கொண்ட மனதில் சர்ப்பம் ஊர்வது இயல்பினும் இயல்பு. உணர்வினில் இருக்க... சில இயல்புகளை தகர்ப்பது காலத் தேவை. பூக்களின் குதூகலத்திற்கு பழகிய மனதில் உடல் ஒரு சாது. வீதியில் இருக்கும் வேப்ப மர பூவையும் ரசிக்க பழகு. செய்தித்தாளில் சிக்கி சீரழியாமல் இருக்க மாற்று வழிகள் நிறைய உண்டு... மதகத ராசாக்களே. வேடிக்கை பார்க்கும் கண்களில் வானம் பூமி யாவும் பேரழகு. வீடியோ பார்க்கும் கண்களில் தான் புரை விழுகிறது. மீசையை முறுக்கிக் கொண்டே கிடப்பது வெத்து. கொத்து சாவியை இடுப்பில் கொண்டே திரிவது வெத்திலும் வெத்து. வியாக்கியானத்தை விட்டொழிந்த கணத்தில் கவனிக்கலாம்... கனமற்ற கண்களில் சிறுபிள்ளை கோலி குண்டு சுழலும். நினைவுகளை அசை போடுதலில் இருக்கும் சுகம் கண்டு கொள்ளுங்கள். எதிர் வீட்டு மனிதர்க்கும் இரங்கும் குணம் வாழ்வின் அடிப்படை. பிடிவாதங்களில் இருந்து விடுபடும் போது ஒரு வாதமும் உடன் இருப்பதில்லை. முடக்கு வாதம் கால்களில் வருவதை விட மனதில் வருவது பேராபத்து. வயதாவதைப் போல துக்கம் இல்லை தான். ஆனால் வாழ்வின் போக்கில் அதை அப்படியே ஏற்க பழகுதலே அதைக் கொண்டு வெளிப்படும் தீவிரத்தை அடக்கும் வழி. இனம் புரியாத கோபங்களை தவிர்க்க... முளைத்த கொம்புகளை மடக்க முயற்சியுங்கள். தேவையில்லாத பதட்டங்களை அழகாய் அழிக்க மூத்தவனாகுதலே முறை. வழியை அடைத்துக் கொண்டு நிற்கையில் தான் கூட்டம். வழி விட்டு விட்டால்... ஆட்டம் பாட்டம் தான். அமைதிக்குள் செல்வது தான்... வயதாவது. மரணத்துக்குப் பழகுவது தான்... வயதாவது. மனிதர்களிடையே தெய்வமாகுதல் தான் வயதாவது. இப்படி நோக்கினால்... எப்படி வரும் மன நோவு. உடல் நோவுக்கும்கூட உடன் இருக்கும் அழுத்தம் தானே முதற் காரணம். மூடி இருக்கும் கைகளில் வியர்வை இருக்கும். திறந்து சிலுவையாகி விடுங்கள்.. சிள் காற்றில் சிலிர்க்கலாம். பேரன்பில் திளைக்கும் மனதுக்கு வயது ஆவதே இல்லை. பெரு வனமாய் ஆகும் சிந்தைக்கு சீக்கு எப்படி வரும். உடல் கடந்த உன்னதத்திற்கு பழக... வயதாவதைப் போல சிறந்த வண்ணம் ஏது. பிள்ளைகளிடம் இருக்கும் கண்டிப்பு அவர்கள் பிள்ளைகளிடம் ஏன் இல்லை தெரியுமா. அது தான் முதிர்ச்சி. தளர்ச்சி என்று எடுத்துக் கொள்வது பின்னடைவு. மலர்ச்சி என்று எடுத்துக் கொண்டால்... மரணமும் நிறைவு. மனம் விட்டு சிரியுங்கள். மற்றவர் சிரிக்க ரசியுங்கள். மாதுளை என இருக்கட்டும் உங்கள் மௌனம். தலை வாழையென கிடக்கட்டும் உங்கள் வாழ்வு. பூமியை முதுகில் சுமப்பதை விட்டு விட்டு... இதயத்தில் வானத்தை ஏற்போம். - கவிஜி https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-83/47000-2024-07-30-21-29-09
  14. முந்தி என்றால் 'பொங்கலுக்குள்.........' தீர்வு என்று சொல்வார்கள். இப்ப என்னடாவென்றால் இனிமேல் தான், அதுவும் அடுத்த அதிபருடன் தான் பேச்சுவார்த்தையே நடத்த வேண்டும் என்கின்றார்கள். சம்பந்தரைப் போலவே சனங்களும் வயது நல்லா வந்து ஒரு நாள் போய்ச் சேர்ந்து விடுங்கள் போல........
  15. 🤣..... பலகாரத்தை சுத்தி வந்த பேப்பர்ல இருக்கிற செய்தி மாதிரி அவரின் கதை இதுக்குள்ள வந்திட்டுது........
  16. ஒரு அணியாக வென்றால், அந்த நாட்டிற்கு அது ஒரு பதக்கம் என்றே கணக்கிடப்படுகின்றது. ஆனால் வென்ற அணியின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். அஞ்சலோட்டத்திலும் இதுவே தான் நடைமுறை. நாலு வீரர்களுக்கும், வென்றால், பதக்கம் உண்டு, ஆனால் நாட்டிற்கு ஒன்று தான் கணக்கில் சேரும்.
  17. 🤣........... யோகிபாபு நடித்த 'மண்டேலா' படத்தில் ஒரேயொரு வாக்குக்காக இரண்டு வேட்பாளர்களும் என்ன என்னவோ எல்லாம் சொல்வார்கள், செய்வார்கள். இங்கேயும் அதே கதை தான்........ படங்களில் முடிவு சுபமாக இருக்கும், குறைந்தது ஒரு எதிர்காலமாவது தெரியும்........ நிஜத்தில் இவர்கள் வந்தால் சங்கு தான் எங்களுக்கு.............
  18. இன்று தடகளப் போட்டிகள் ஆரம்பித்துவிட்டன. பலருக்கும் இனி போட்டிகளில் கூடிய ஈடுபாடு இருக்கும். சில நாடுகள் இதில் பதக்கங்களை அள்ளி எடுத்துவிடும்.
  19. இல்லை வசீ, எல்லோரும் அவரைக் கொண்டாடுவதில்லை. என்னுடைய ஊரில் அவருக்கு எதுவுமே இல்லை. அதற்கு பின்னால் அன்றொரு காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு இருக்கிறதென்று ஊர் முதியவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.
  20. இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 6 13 12 31 2 France 8 10 8 26 3 China 11 7 3 21 4 Great Britain 6 7 7 20 5 Australia 7 6 4 17 6 Japan 8 3 4 15 7 Italy 3 6 4 13 8 Republic of Korea 6 3 3 12 9 Canada 2 2 3 7 10 Germany 2 2 2 6 11 Netherlands 2 2 1 5 11 New Zealand 2 2 1 5 13 Brazil 0 2 3 5 14 Romania 2 1 1 4 15 Hong Kong 2 0 2 4 16 Sweden 1 1 2 4 17 Belgium 1 0 2 3 17 Ireland 1 0 2 3 17 Kazakhstan 1 0 2 3 17 South Africa 1 0 2 3 21 Hungary 0 2 1 3 22 Poland 0 1 2 3 22 Spain 0 1 2 3 24 India 0 0 3 3 25 Georgia 1 1 0 2 26 Croatia 1 0 1 2 26 Guatemala 1 0 1 2 28 DPR Korea 0 2 0 2 29 Kosovo 0 1 1 2 29 Mexico 0 1 1 2 29 Switzerland 0 1 1 2 29 Turkey 0 1 1 2 29 Ukraine 0 1 1 2 34 Moldova 0 0 2 2 35 Argentina 1 0 0 1 35 Azerbaijan 1 0 0 1 35 Ecuador 1 0 0 1 35 Serbia 1 0 0 1 35 Slovenia 1 0 0 1 35 Uzbekistan 1 0 0 1 41 Fiji 0 1 0 1 41 Mongolia 0 1 0 1 41 Tunisia 0 1 0 1 44 Austria 0 0 1 1 44 Egypt 0 0 1 1 44 Greece 0 0 1 1 44 Slovakia 0 0 1 1 44 Tajikistan 0 0 1 1
  21. கார்ட்டூனில் இலங்கை டெயிலி மிர்ரரை அடிக்க ஆளே கிடையாது............. அவர்களும் அடிக்காதா ஆளே கிடையாது.........🤣...........
  22. இது 1972ம் ஆண்டு நடந்த போட்டியில் மொத்த பதக்கங்கள் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த நாடுகளின் வரிசை. மற்ற நாடுகள் வளர்ந்து விட்டன என்பது தான் பிரதான காரணம். அன்று ஊக்க மருந்துப் பாவனை என்று சொல்லப்பட்டதும் உண்டு. இன்றும் அதையே சொல்லலாம். Countries Gold Silver Bronze Sum Soviet Union (USSR) 48 25 22 95 United States 33 31 30 94 East Germany 20 23 23 66 West Germany 13 11 16 40 Hungary 6 13 16 35
  23. இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 4 12 11 27 2 France 6 9 6 21 3 Great Britain 6 6 5 17 4 China 8 6 2 16 5 Japan 7 2 4 13 6 Australia 6 4 3 13 7 Italy 3 6 4 13 8 Republic of Korea 5 3 3 11 9 Canada 2 2 2 6 10 Brazil 0 1 3 4 11 Germany 2 0 1 3 11 Hong Kong 2 0 1 3 13 Kazakhstan 1 0 2 3 13 South Africa 1 0 2 3 15 Poland 0 1 2 3 15 Sweden 0 1 2 3 17 Netherlands 1 1 0 2 17 New Zealand 1 1 0 2 19 Belgium 1 0 1 2 19 Guatemala 1 0 1 2 19 Ireland 1 0 1 2 22 DPR Korea 0 2 0 2 23 Kosovo 0 1 1 2 23 Mexico 0 1 1 2 23 Switzerland 0 1 1 2 23 Turkey 0 1 1 2 27 India 0 0 2 2 27 Moldova 0 0 2 2 29 Argentina 1 0 0 1 29 Azerbaijan 1 0 0 1 29 Romania 1 0 0 1 29 Serbia 1 0 0 1 29 Slovenia 1 0 0 1 29 Uzbekistan 1 0 0 1 35 Fiji 0 1 0 1 35 Georgia 0 1 0 1 35 Mongolia 0 1 0 1 35 Tunisia 0 1 0 1 39 Croatia 0 0 1 1 39 Egypt 0 0 1 1 39 Hungary 0 0 1 1 39 Slovakia 0 0 1 1 39 Spain 0 0 1 1 39 Tajikistan 0 0 1 1 39 Ukraine 0 0 1 1
  24. பையன் சார், உங்களுக்கு அந்த அமெரிக்கன் ஓட்ட வீராங்கனையை பிடித்தது போல, எனக்கு சசிகலா பேசும் போது பின்னால் நின்று அபிநயம் காட்டும் இளவரசி நல்லாகவே செய்கின்றார் என்று தோன்றுகின்றது. ஆனால் மன்னார்குடி ஆட்கள் பொல்லாதவர்களாமே........ வெட்டிப் புதைத்துப் போடுவார்களாம் என்று சொல்கின்றார்கள்.............🤣.
  25. 🤣..... இதில கூட ஓபிஎஸ்ஸிற்கு ஒன்றும் கொடுக்க மாட்டீர்களா........ இன்னுமொரு தர்மயுத்தம் ஆரம்பித்து விடுவார், பதக்கம் தனக்கும் வேண்டும் என்று.............

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.