Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. 🤣.............. எல்லாவற்றையும் பார்த்து வைத்துக் கொண்டே, எதையுமே பார்க்காதது போல, எதுவுமே தெரியாதது போல இருந்திருக்கின்றார்களே......🫢. மற்றபடி, நான் எல்லாம் எந்தக் கணக்கிலும் இருந்திருக்கமாட்டேன்..........
  2. அந்தப் பக்கம் எப்பவுமே தெளிவானவர்கள் தான் எங்களை விட....😀
  3. மரியானா அகழி ------------------------- அவன் அந்த ஒழுங்கையால் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது போய் வந்து கொண்டிருந்தான். போகும் போது என்னையும் வா என்று வலியவே துணைக்கு கூட்டிக் கொண்டு போனான். அந்த ஒழுங்கையின் முடிவில் ஒரு கோயில் இருந்தது. ஆனால் இருவரும் கோயில் போய் சாமி கும்பிடுகிற ஆட்கள் இல்லை. ஏன் இந்த ஒழுங்கையில் தினமும் வருகின்றோம் என்று பல நாட்கள் நான் நச்சரித்த பின், அவன் உண்மையைச் சொன்னான். அந்த ஒழுங்கையில் இருந்த பெண் பிள்ளை ஒன்றின் பின்னால் அவன் சுத்துகின்றானாம் என்று அவன் சொன்னான். அந்தப் பிள்ளையும் எங்களின் வகுப்பு தான். அந்தப் பிள்ளையின் குடும்பம் 83ம் ஆண்டுக் கலவரத்தில் கொழும்பில் இருந்து இடம்பெயர்ந்து ஊருக்கு வந்தவர்கள். என்னை ஏன் கூட்டிக் கொண்டு போனான் என்பதற்கான காரணத்தை இலகுவாகவே ஊகித்துக் கொள்ளலாம். இப்படியான ரோமியோக்களுக்கு ஒரு நண்பன் கட்டாயமாக துணையாக வேண்டும். அங்கே தனியாக எந்த ஒழுங்கையில் போனாலும், தேமே என்று அரைக்கண் மூடி படுத்துக் கிடக்கும் நாய் கூட சந்தேகத்தில் எழும்பி வந்து கலைக்கும். எங்களின் கூட்டத்தில் ஆபத்தில்லாத, அப்பிராணியான, பெயர்கள் எதுவுமற்றவர்களில் நானும் ஒருவன் என்பது தான் என்னைத் தெரிந்தெடுத்த அந்தக் காரணம். 'முடியாது என்று சொல்லி விட்டா.......' என்று வந்து நின்றான் ஒரு நாள். 'முடியாது என்றா சொன்னா..........' என்று திருப்பிக் கேட்டேன் நான். அதற்கு முதல் நாள் நண்பன் தனியே போய், என்னைக் கூட்டிக் கொண்டு போகாமல், எங்கேயோ வைத்துக் கேட்டிருக்கின்றார். ஆளைத் தெரியாது என்று தான் சொன்னா, நீங்கள் யார் அண்ணா என்றும் அவனைக் கேட்டதாகவும் நன்றாக ஞாபகப்படுத்திச் சொன்னான் நண்பன். என்னைக் கண்டதே இல்லை என்றும் சொல்லி விட்டா என்று கண் கலங்கி நின்றான் நண்பன். நல்ல வேளை, அந்த சம்பவம் நடந்த பொழுது நான் அவனுடன் கூடச் சேர்ந்து போயிருக்கவில்லை. போயிருந்தால், 'இந்தத் தம்பி யாரு.........' என்று அவர் என்னைப் பார்த்தும் கேட்டிருப்பார். நண்பன் மினுக்கி மினுக்கி வகுப்புக்கு வந்து போனது எல்லாவற்றையும் எந்தக் கணக்கில் சேர்க்கின்றது. எவருமே இவனைப் பார்க்கவில்லையோ. பின்னர் நண்பன் ஒரு இயக்கத்தில் போய் சேர்ந்துவிட்டான். சில மாதங்களில் திரும்பி வந்தான். சில புத்தகங்களை எனக்குக் கொடுத்தான். எல்லாமே சிவப்பு பிரகடனங்கள். முன் அட்டையில் மார்க்ஸ், இங்கர்சால் என்ற பெயர்களும், பின் அட்டையில் அந்த இயக்கத்தின் ஸ்தாபகரின் பெயரும் இருந்தன. நண்பன் 'தோடுடைய செவியன்........' பொழிப்பு எழுதச் சொன்னாலே அக்கம்பக்கம் எட்டிப் பார்க்கின்றவன். முழு இலங்கையிலும் தனியார் கல்வி நிலையத்தில் சமய பாடத்திற்கே அடி வாங்கியவர்கள் வெகு சிலரே, அதில் இவனும் ஒருவன். காதல் தோல்வி அவனை எங்கேயோ கொண்டு போய் சேர்த்திருந்தது. இன்னும் பலரும் ஏக காலத்தில் அந்தப் பிள்ளையின் பின் சுற்றித் திரிந்தனர். துணிவை வரவழைத்துக் கொண்டு, அந்தப் பிள்ளையிடம் போய்க் கேட்டவர்கள் எல்லோருக்கும், 'அண்ணா, நீங்க யாரண்ணா...........' என்பதே பதிலாக வந்து கொண்டிருந்தது. மற்ற எல்லாக் கதைகளும் வெளியில் வந்தாலும், நான் கூடப் போன என் நண்பனின் கதை மட்டும் வெளியில் வரவில்லை. எத்தனையோ இயக்கங்கள் இருக்க, அந்த இயக்கத்தில் இவன் ஏன் போய்ச் சேர்ந்தான் என்பது மட்டும் தான் ஊரில் பலருக்கும் ஆச்சரியமாகவும், பேசுபொருளாகவும் இருந்தது. பின்னர் நண்பன் அந்த இயக்கத்திலிருந்து வெளியேறி, வெளிநாடு போய், எங்கள் இருவருக்கும் நன்கு தெரிந்த வேறு ஒரு பிள்ளையை கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகின்றான். கிட்டப் போனவர்கள் எல்லோரையும் ' அண்ணா, நீங்கள் யாரண்ணா.........' என்று கேட்டு ஓட விட்ட அந்தப் பிள்ளையும் எங்களுக்கு தெரிந்த ஒருவரைக் கட்டிக் கொண்டு இன்னொரு நாட்டில் வாழ்ந்து வருகின்றார். நீண்ட காலத்தின் பின், ஒரு ஊடகத்தில் சிறு வயது நண்பர்கள் என்று ஒரு குழுமம் உண்டாக்கி, பலரும் இணைந்து கொண்டோம். அறிமுகங்கள், கதைகள், பகிடிகள், ஞாபகங்கள் என்று எல்லோரும் பங்காற்றிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் அந்தப் பெண்ணை நேரில் சந்திக்கும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. 'உங்களுக்கு என்னை முந்தி தெரிந்திருக்காது...........' என்று நான் ஆரம்பித்தேன். ' இல்லை, இல்லை, எனக்கு அப்பவே உங்களைத் தெரியும்........... நீங்களும், இன்னொருவரும் அடிக்கடி எங்கள் வீட்டுப் பக்கமாக சைக்கிளில் அந்த நாளில் வந்து போவீர்களே...........' என்றார் அவர். எவரெஸ்ட்டையே தாட்டு விடும் மரியான அகழி தான் உலகிலேயே ஆழமானது என்பார்கள். என்ன பெரிய ஆழம் அது.
  4. கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் கடும் போட்டி இருக்கும் என்ற எதிர்பார்ப்பிற்கு மாறாக, அமெரிக்க அணி இலகுவாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது. வாலிபால் விளையாட்டில் கடுமையான போட்டிகள் போய்க் கொண்டிருக்கின்றன.
  5. அங்கேயே பிறந்து வளர்ந்த எங்களாலேயே பெற்றுக் கொள்ள முடியாத அப் பிரதேசத்தின் அரசியல் சமூக பொருளாதார அறிவை ஒரு விஜயத்திலேயே நாமல் பெற்றுக் கொண்டிருக்கின்றார்..........🤣. நாமலுக்காக சட்டக் கல்லூரி பரீட்சையை யார் எழுதினது என்று தேடிக் கொண்டிருக்கின்றார்கள். 'கீத்' என்ற பெயர் கொஞ்சம் புதுமையாக இருக்கின்றது........... ஏதோ அவர்களால் முடிந்த ஒரு புதுமை........
  6. இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 24 31 31 86 2 China 22 22 16 60 3 France 13 16 19 48 4 Great Britain 12 15 19 46 5 Australia 14 12 10 36 6 Japan 11 6 12 29 7 Republic of Korea 11 8 7 26 8 Italy 9 10 7 26 9 Netherlands 9 5 6 20 10 Canada 6 4 8 18 11 Germany 8 5 4 17 12 Brazil 2 5 6 13 13 Spain 2 3 5 10 14 New Zealand 3 5 1 9 15 Hungary 3 3 2 8 15 Sweden 3 3 2 8 17 Ireland 4 0 3 7 18 Romania 3 3 1 7 19 Ukraine 2 2 3 7 20 Switzerland 1 2 4 7 21 Greece 1 1 5 7 22 Israel 1 4 1 6 23 Poland 1 1 4 6 24 Croatia 2 1 2 5 25 Belgium 2 0 3 5 26 Kazakhstan 1 1 3 5 27 Chinese Taipei 1 0 4 5 28 DPR Korea 0 2 3 5 29 Hong Kong 2 0 2 4 30 Georgia 1 2 1 4 31 Kenya 1 1 2 4 31 South Africa 1 1 2 4 33 Jamaica 0 3 1 4 34 Philippines 2 0 1 3 35 Denmark 1 2 0 3 36 Uzbekistan 1 0 2 3 37 Mexico 0 2 1 3 38 Turkey 0 1 2 3 39 India 0 0 3 3 39 Tajikistan 0 0 3 3 41 Azerbaijan 2 0 0 2 41 Serbia 2 0 0 2 43 Chile 1 1 0 2 43 Ecuador 1 1 0 2 43 Saint Lucia 1 1 0 2 43 Uganda 1 1 0 2 47 Cuba 1 0 1 2 47 Czech Republic 1 0 1 2 47 Guatemala 1 0 1 2 47 Norway 1 0 1 2 51 Ethiopia 0 2 0 2 52 Kosovo 0 1 1 2 52 Kyrgyzstan 0 1 1 2 52 Thailand 0 1 1 2 55 Dominican Republic 0 0 2 2 55 Lithuania 0 0 2 2 55 Malaysia 0 0 2 2 55 Moldova 0 0 2 2 59 Algeria 1 0 0 1 59 Argentina 1 0 0 1 59 Bahrain 1 0 0 1 59 Dominica 1 0 0 1 59 Slovenia 1 0 0 1 64 Armenia 0 1 0 1 64 Colombia 0 1 0 1 64 Fiji 0 1 0 1 64 Mongolia 0 1 0 1 64 Tunisia 0 1 0 1 69 Austria 0 0 1 1 69 Cape Verde 0 0 1 1 69 Egypt 0 0 1 1 69 Grenada 0 0 1 1 69 Indonesia 0 0 1 1 69 Iran 0 0 1 1 69 Portugal 0 0 1 1 69 Slovakia 0 0 1 1
  7. ஒரு பொருளாதார மந்தநிலையைத் தூண்டும் வேலையின்மை விகிதம் போல இது ஒரு மேல் பார்வைக்கு தெரிந்தாலும், அமெரிக்காவின் வேலையின்மை விபரங்களை பார்க்கும் போது, இதன் காரணமாக பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என்றும் சொல்கின்றனர். கடந்த மாதத்தில் சில துறைகளில் வேலை இழப்புகள் ஏற்பட்டிருக்கும் அதே நேரத்தில் வேறு சில துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் புதிய வேலைகள் உருவாக்கப்பட்டும் இருக்கின்றன என்கின்றனர். ஒரு பொருளாதார மந்தநிலையில் வேலை இழப்புகள் என்பது பொதுவாக எல்லா துறைகளிலும் இருக்கும். அடுத்த ஆறாம் திகதி வரை அடுத்த அறிக்கைக்காக காத்திருந்து முடிவு செய்யலாம் என்கின்றனர்.
  8. 👍.... என்னுடைய காலத்தில் ஊரில் இருந்த கழகங்களில் உதயசூரியனின் விளையாட்டுத் திறமை முன் போன்று இருக்கவில்லை. ஆதிசக்தி, ஒற்றுமை, ரெயின்போ என்பன நன்றாக விளையாடிக் கொண்டிருந்தன. ஆனால், உதயசூரியன் வீரர்களின் சங்கிலிகளும், மோதிரங்களும் என்றும் மாறவில்லை..........🤣 புளூஸ் எப்போதும் போல நல்ல அணியே, எல்லா ஊர்க் கழகங்களில் இருந்தும் சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து உருவாக்கப்படும் அணி என்பதால். கழகங்களுக்கு விளையாட ஆரம்பித்து, பின் மிக விரைவிலேயே ஊரிலிருந்து வெளிக்கிட வேண்டியதாகப் போய் விட்டது.............😌.
  9. 🤣............ எங்கள் இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றது போல, சுவி ஐயா........ தலையையும் நீட்டாக வளர்த்துக் கொண்டு, உயரமும் சரியாகவே வரும், மரடோனா என்றிருக்க, இழுத்துக் கொண்டு வந்து ஃபுல் பாக்காக நிற்க வைத்துவிட்டார்கள். விளையாடிய எல்லா இடங்களிலும் இது நடந்தது. இங்கு தென்னமெரிக்கர்கள் தான் அதிகமாக அணிகளில் இருப்பார்கள். ஒரு கடுகதிப் புகையிரதம் போல நேர வந்து மோதுவார்கள்............. உள்ளிருக்கும் ஈகோ, செருக்கு விழ விடாது. அடி எவ்வளவு விழுந்தாலும் வீட்டில் சொல்லவும் முடியாது, அதிகமாக நொண்டவும் முடியாது.........😃.
  10. 👍......... மிகவும் சரியான கூற்று, வசீ. அனுபவம் மிக அவசியமானது. பல சிவில் பொறியியலாளர்களுடன் கதைக்கும் போது, இந்த இரண்டுக்கும் இடையேயான சில மோதல்களை சொல்லுவார்கள். 'என்னுடைய அனுபவம் உன்னுடைய வயதை விட அதிகம்.........' என்ற வழமையான வசனத்துடன் நிற்கும் சிலருக்கும், இவர்களுக்கும் நடக்கும் சின்ன சின்ன மோதல்கள் பற்றிச் சொல்வார்கள். வேலை முடிவில், குழாயில் தண்ணீர் எதிர்ப் பக்கமாக ஓடியது, நடுவிலேயே நின்றது போன்ற கதைகளும் உண்டு. நீண்ட கால அனுபவம் இருந்தாலும், அதை இன்னொரு, புதிய சூழ்நிலைக்கும் ஏற்ற விதத்தில் மாற்றும் தகமை வேண்டும். அதுவே திறமை என்று சொல்லலாம். ஆனால், நான் சொல்ல வந்த விசயம் பந்தடி பற்றியோ அல்லது கட்டுமானம் பற்றியோ அல்ல. இன்றைய நாட்டு நடப்பை பற்றியே சொல்ல வந்தேன். ' அவர் புதிசு, அனுபவம் வர சரியாகி விடுவார், .....' என்று பலரும் சொல்கின்றனர். ஆனால் அவரின் அடிப்படையே தப்பாகத் தோன்றுகின்றது என்றே சொல்ல வந்தேன்.
  11. சகோதரர் ஒரு ரவுண்ட் அடித்து விட்டு திரும்பி வந்து விட்டார்........ சகோதரி திரும்பி வரவே முடியாது போலத் தெரியுதே............
  12. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளாராக நாமல் ராஜபக்சாவே களமிறங்குகின்றார் என்று பிந்தைய தகவல் ஒன்று வந்துள்ளது.....................🙃 https://www.dailymirror.lk/top-story/Namal-Rajapaksa-to-be-named-SLPPs-presidential-candidate/155-288899
  13. 🤣..... நல்லா அலசி ஆராய வேண்டும், அலசி ஆராய வேண்டும் என்று சொல்லக் கேட்டிருக்கின்றேன்............ இது தானே அது....... இலங்கை அரசியலமைப்பின் ஊடாக எங்களுக்கு ஒரு கிலோ அரிசி கூட கொடுக்கமாட்டார்கள் போல........
  14. ❤️............. நீங்கள் விளையாடியதை நான் ஒரு ஓரத்தில் இருந்து கட்டாயம் பார்த்திருப்பேன் என்றே நினைக்கின்றேன், ஏனென்றால் இதில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைவரையும் பார்த்திருக்கின்றேன். 'சாராதாஸ் இலவசம்' என்னும் இரண்டாவது குறுங்கதையில் வருவது இதில் ஒருவரே......... அந்தச் சிறுவன் காலணியைப் போட்டுக் கொண்டே பெருவிரல் பகுதியால் குத்திக் கொண்டிருந்தார். பந்தை அடிக்க முன், ஒரு காலை ஊன்றி, உடலை சமநிலைக்கு கொண்டு வரும் அடிப்படை அந்தச் சிறுவனுக்கு கடைசிவரை வரவில்லை.
  15. இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 21 30 28 79 2 China 21 18 14 53 3 France 13 16 19 48 4 Great Britain 12 13 17 42 5 Australia 13 12 8 33 6 Republic of Korea 11 8 7 26 7 Japan 10 5 11 26 8 Italy 9 10 6 25 9 Netherlands 7 5 6 18 10 Germany 8 5 4 17 11 Canada 5 4 8 17 12 Brazil 2 5 6 13 13 New Zealand 3 5 1 9 14 Spain 1 3 5 9 15 Hungary 3 3 2 8 15 Sweden 3 3 2 8 17 Romania 3 3 1 7 18 Ukraine 2 2 3 7 19 Switzerland 1 2 4 7 20 Ireland 3 0 3 6 21 Israel 1 4 1 6 22 Greece 0 1 5 6 23 Croatia 2 1 2 5 24 Belgium 2 0 3 5 25 Hong Kong 2 0 2 4 26 Georgia 1 2 1 4 27 Kazakhstan 1 1 2 4 27 South Africa 1 1 2 4 29 Chinese Taipei 1 0 3 4 30 Poland 0 1 3 4 31 Kenya 1 1 1 3 32 Uzbekistan 1 0 2 3 33 Jamaica 0 2 1 3 33 Mexico 0 2 1 3 33 DPR Korea 0 2 1 3 36 India 0 0 3 3 36 Tajikistan 0 0 3 3 38 Azerbaijan 2 0 0 2 38 Philippines 2 0 0 2 38 Serbia 2 0 0 2 41 Denmark 1 1 0 2 42 Czech Republic 1 0 1 2 42 Guatemala 1 0 1 2 44 Ethiopia 0 2 0 2 45 Kosovo 0 1 1 2 45 Turkey 0 1 1 2 47 Dominican Republic 0 0 2 2 47 Lithuania 0 0 2 2 47 Malaysia 0 0 2 2 47 Moldova 0 0 2 2 51 Algeria 1 0 0 1 51 Argentina 1 0 0 1 51 Chile 1 0 0 1 51 Dominica 1 0 0 1 51 Ecuador 1 0 0 1 51 Norway 1 0 0 1 51 Slovenia 1 0 0 1 51 Saint Lucia 1 0 0 1 51 Uganda 1 0 0 1 60 Armenia 0 1 0 1 60 Colombia 0 1 0 1 60 Fiji 0 1 0 1 60 Mongolia 0 1 0 1 60 Thailand 0 1 0 1 60 Tunisia 0 1 0 1 66 Austria 0 0 1 1 66 Cape Verde 0 0 1 1 66 Cuba 0 0 1 1 66 Egypt 0 0 1 1 66 Grenada 0 0 1 1 66 Indonesia 0 0 1 1 66 Portugal 0 0 1 1 66 Slovakia 0 0 1 1
  16. அடிப்படை அனுபவம் ---------------------------------- பல வருடங்களின் முன் மகனுக்கு எட்டு வயதாக இருந்தது. அன்று ஒரு பிள்ளை எட்டு வயதில் எட்டு வித்தைகளையாவது கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று இந்தச் சூழலில் ஒரு நிர்ப்பந்தம் இருந்தது. எட்டு வயதில் ஒரு அஷ்டாவதானி போல. இன்று சூழலின் நிர்ப்பந்தம் இன்னும் அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு பிள்ளைகளையும் சதாவதானிகளாக மாற்றாமல் இது ஓயாது போல. எனக்கு இதில் துளியளவும் நம்பிக்கையும் இல்லை, கூட்டத்துடன் சேர்ந்து ஓடுவதற்கான பொறுமையும் அன்று இருந்திருக்கவில்லை. ஊரில் நீச்சலை நானாகவே தான் சிறு வயதில் கற்றுக் கொண்டேன். கடலில் தான். சேர்ந்து போயிருக்கின்றோம், ஆனாலும் அவரவரே நீந்திப் பழகினோம். ஒரு நாள் இரண்டு பாகம் கடலில் கீழே மூழ்கிப் போய்க் கொண்டிருக்கும் போது தான் சுழியோடும் வித்தையை கற்றுக் கொண்டேன். அன்று அக்கணத்தில் நான் அதைக் கற்றுக் கொள்ளாதிருந்தால், இன்று இருந்திருக்கமாட்டேன், ஆனாலும், உலகத்தில் ஒரு இம்மியளவு மாற்றம் கூட இருந்திருக்காது. 99.9999999..... வீதமான மனிதர்களின் நிலை இது தான். நாங்கள் இருந்தால் என்ன, போனால் என்ன, பூமி எந்த மாற்றமும் இல்லாமல் அதே பாதையில் உருண்டு கொண்டே இருக்கும். பந்தடி என்றால் என்ன, பனையில் ஏறுவது என்றால் என்ன, எல்லாமே அன்று அங்கே நாங்களாகவே கற்றுக் கொண்டது தான். விரும்பியவர்கள் செய்தார்கள், விரும்பாதவர்கள் செய்யாமல் விட்டார்கள். ஆனாலும் இந்த அணுகுமுறை இன்று இங்கு வேலை செய்யவே செய்யாது, ஒழுங்கு மரியாதையாக பிள்ளைகளை சில இடங்களிற்காவது கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று பல முனைகளிலும் இருந்து அழுத்தங்கள் தொடர்ந்தன. முக்கியமாக ஐந்து வயதிலேயே எந்த ஆங்கிலச் சொல்லையும் எழுத்துக் கூட்டத் தெரிந்த ஒரு பிள்ளை மற்றும் அதன் பெற்றோர், கொடியைக் காட்டினால் அந்த நாட்டைச் சொல்லும் பிள்ளை மற்றும் அதன் பெற்றோர், அமெரிக்க ஜனாதிபதிகளை அதே வரிசைகளில் சொல்லும் பிள்ளை மற்றும் அதன் பெற்றோர் என்று பல வித்தைகளும் தெரிந்தோர் சுற்றிவர இருந்தனர். கால்பந்து எங்களுக்கு இரத்த ஓட்டம் மாதிரி. எப்படியும் மகனுக்கு அது அதுவாகவே வரும், வந்திருக்கும் என்று கால்பந்துப் பயிற்சிக்கு கூட்டிப் போனேன். அந்தப் பயிற்சியாளர் இங்கிலாந்தில் விளையாடினவர் என்றார்கள். அந்த வருடம் முழுவதும் பந்துடனோ அல்லது பந்தின் பின்னாலோ மகன் ஓடவில்லை. பயிற்சியாளரின் பயிற்சியின் படி அவன் எதிரணிகளின் ஒரு வீரரின் பின்னாலேயே ஓடிக் கொண்டிந்தான். மகன் நல்லா ஓடுகின்றார் என்றார் அந்தப் பயிற்சியாளர். அடுத்த வருடம், இந்தக் கொடுமைக்கு நானே பயிற்சியாளராகலாம் என்று அதற்கான வகுப்புகளை முடித்து பயிற்சியாளர் ஆகினேன். எல்லோரையும் விட உயரமாகவும், பருமனாகவும் ஒரு சிறுவனும் அணியில் இருந்தார். அந்தச் சிறுவன் தடபுட தடபுட என்று ஓடினாலேயே மற்ற எல்லா சிறுவர்களும், எதிரணி உட்பட, வழிவிட்டு ஒதுங்கினர். இடிபட்டால் சேதம் எங்கே என்று தெரிந்தே எல்லோரும் ஒதுங்கி வழிவிட்டனர். அந்தச் சிறுவன் மூன்றாம் நம்பர் பந்தை கால் பெருவிரலால் குத்தி ஒரு பக்கத்திலிருந்து மற்ற பக்கத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தான். இப்படி விளையாடுவதில்லை, பந்தை குத்தக் கூடாது, அடிக்க வேண்டும் என்று நான் அச் சிறுவனுடன் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தேன். ஆனால், அவனின் பெற்றோர்களோ அல்லது மற்ற சிறுவர்களின் பெற்றோர்களோ அந்தச் சிறுவன் நல்லாகவே விளையாடுவதாக நினைத்தார்கள். சிலர் எனக்கு அதை மறைமுகமாக சொல்லக்கூட முயன்றார்கள். நான் எதையும் மாற்றத் தேவையில்லை, மாறாக அந்த பெருவிரலால் பந்தை குத்துகின்ற சிறுவனை ஊக்கப்படுத்த வேண்டும் என்றனர். இங்கு பலருக்கும் கால்பந்து விளையாட்டு தெரியாது. அதன் அடிப்படைகள் தெரியாது. மூன்றாம் நம்பர் பந்தை காலால் குத்தலாம், நாலாம் நம்பர் பந்தைக் கூட குத்தி விடலாம், ஆனால் ஐந்தாம் நம்பர் பந்தை குத்த முடியாது என்றேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும், ஒவ்வொரு தூரத்திற்கும் பந்தை அடிக்கும் முறைகளே வித்தியாசமானவை என்றேன். வெளிப்பக்கம், உட்பக்கம், நடுப்பக்கம் என்று பந்தை அடிக்கும் முறைகளைத் தெரிந்து கொண்டு, அவற்றை பழக வேண்டும் என்றேன். அது எல்லாம் அனுபவத்தில் வரும் என்றனர். அடிப்படை வேறு, அனுபவம் வேறு. அடிப்படைகளை தெரிந்து கொள்ளாமல் அனுபவத்தில் எதுவும் வராது என்றேன். வெறும் கால ஓட்டம் என்பது அனுபவமே கிடையாது. பதினாலு வயதின் பின் நான் அந்தச் சிறுவனை கால்பந்து விளையாட்டில் காணவேயில்லை. அந்தச் சிறுவனால் இனி இந்த விளையாட்டை விளையாடவும் முடியாது. காலப்போக்கில், அனுபவம் வரவர சரியாவார்கள் என்று நாங்கள் நினைக்கும் சில மனிதர்கள், அவர்களின் அடிப்படையே தவறாக இருப்பதால், பெரும் ஏமாற்றமாகவே இறுதியில் முடிவார்கள்.
  17. 🤣............. எங்களின் தமிழ் மொழி மட்டும் ஏன் இவ்வளவு சிக்கலானதாக இருக்கின்றது என்று இடைக்கிடை நான் யோசிப்பதுண்டு. சாதாரண புணர்ச்சி விதிகளே தொண்டைக்குள் 'க்' என்ற எழுத்தை கொண்டு போய் செருகின மாதிரி சில்லெடுத்தவை. ஆனால், இப்ப தான் தெரியுது, இந்த செயற்கை நுண்ணறிவிடம் இருந்து இந்த மொழியைக் காப்பாற்றவே எங்கள் முன்னோர்கள் அப்பவே திட்டம் போட்டே இதைச் செய்திருக்கின்றார்கள் என்று...........🤣.
  18. 🤣.... சாஸ்திரியார் குசால் குமாரும் இதையே தான் சொல்லியிருக்கின்றார்............... யாழ் களத்தில் ஏற்கனவே இந்தச் செய்தி வந்துவிட்டது................. ட்ரம்பும் இங்கே களத்தில் இருக்கின்றாரோ.......😜.
  19. 🤣.......... உலகம் ஈரானை சும்மா உசுப்பி விட்டுக் கொண்டிருக்கின்றது. அவர்களே தாங்கள் வைத்திருக்கின்ற பழைய சாமான்களில் பழுதாகப் போய் விட்ட பாகங்களை புதிதாக எங்கே வாங்கலாம் என்று தேடிக் கொண்டிருக்கின்றார்கள்....... இதில சண்டைக்குப் போ, சண்டைக்கு போ என்றால் அவர்கள் எங்கே போவது........
  20. இப்பொழுது உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் ஒரு இரணுவ முகாமில் இறங்கியுள்ளார். இவரின் சகோதரி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். இங்கிலாந்திற்கு சென்று இனி சகோதரியுடன் தங்குவதே இவரின் தற்போதைய முடிவு என்று சொல்லப்படுகின்றது. இந்தியாவைச் சுற்றி இருக்கும் எந்த நாடாவது கொஞ்சமாவது உருப்படுவது போலத் தெரிந்தால், அடுத்த கணமே அந்த நாடு அதல பாதாளத்திற்கு தள்ளப்படும். அதற்கேற்ப அந்தந்த நாடுகளின் ஆட்சியாளர்களும் முன் யோசனையற்ற, நடைமுறைக்கு ஒவ்வாத முடிவுகளை எதேச்சதிகாரமாக எடுத்து, பிராந்திய வல்லரசின் வேலையை இலகுவாக்கிக் கொடுப்பார்கள்.
  21. ஆதவனில் ஆரம்பித்தது இப்ப தினக்குரல் வரை வந்திருக்கின்றது............. தினக்குரலிற்கும் இது தேவையா.........🫣.
  22. 🤣.......... 87ம் ஆண்டில் காலி பூஸா முகாமுக்கு போகாமல் சில பேர் தப்பினதிற்கும் ஹாட்லியில் படித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் காரணம்.......... ஆனால், பாடசாலை அதிபர் (பாலசிங்கம் மாஸ்டர்) அங்கு வர முன்னரே கப்பலில் ஏற்றப்பட்டவர்களை இராணுவம் திரும்ப இறக்கி விடவில்லை, காலியில் போய் தான் கப்பல் நின்றது...............
  23. ஒரு நாள் பின் வளவுக்குள் போட்டிருந்த பனம் பாத்தியை சுற்றி நின்று கொண்டனர். இது என்ன, இதை தோண்டிப் பார்க்கப் போகின்றோம் என்று அவர்கள் ஒரே ஆரவாரம். அப்ப தான் பனங்கிழங்கே பிடிக்க ஆரம்பித்திருக்கும். இது பனம் பாத்தி, இதற்குள்ள பனங்கொட்டைகளை தாட்டிருக்கின்றோம், அவை முளைத்து கிழங்காக வரும், இன்னும் இரண்டு மாதங்கள் போக வேணும்............ இதையெல்லாம் அவர்களுக்கு இங்கிலீசில் சொல் என்று என் வீட்டார் எனக்குச் சொன்னார்கள். இதை இப்ப இங்கிலீசில் சொல்லச் சொன்னாலே அது ஒரு நல்ல முடிவைக் கொடுக்கும் என்று எனக்கு நம்பிகையில்லை.............. 🤣.
  24. இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 19 28 27 74 2 China 21 17 14 52 3 France 12 14 18 44 4 Great Britain 10 12 16 38 5 Australia 12 11 8 31 6 Republic of Korea 11 8 7 26 7 Japan 10 5 11 26 8 Italy 8 10 6 24 9 Canada 5 4 8 17 10 Netherlands 6 5 4 15 11 Germany 6 5 2 13 12 Brazil 2 4 5 11 13 Hungary 3 3 2 8 14 Spain 1 2 5 8 15 Romania 3 3 1 7 16 New Zealand 2 4 1 7 17 Sweden 2 3 2 7 18 Ukraine 2 2 3 7 19 Ireland 3 0 3 6 20 Israel 1 4 1 6 21 Switzerland 1 1 4 6 22 Belgium 2 0 3 5 23 Greece 0 1 4 5 24 Croatia 2 1 1 4 25 Hong Kong 2 0 2 4 26 Georgia 1 2 1 4 27 Kazakhstan 1 1 2 4 27 South Africa 1 1 2 4 29 Chinese Taipei 1 0 3 4 30 Poland 0 1 3 4 31 Uzbekistan 1 0 2 3 32 Jamaica 0 2 1 3 32 Mexico 0 2 1 3 32 DPR Korea 0 2 1 3 35 India 0 0 3 3 35 Tajikistan 0 0 3 3 37 Azerbaijan 2 0 0 2 37 Philippines 2 0 0 2 37 Serbia 2 0 0 2 40 Czech Republic 1 0 1 2 40 Guatemala 1 0 1 2 42 Kosovo 0 1 1 2 42 Turkey 0 1 1 2 44 Dominican Republic 0 0 2 2 44 Malaysia 0 0 2 2 44 Moldova 0 0 2 2 47 Algeria 1 0 0 1 47 Argentina 1 0 0 1 47 Chile 1 0 0 1 47 Dominica 1 0 0 1 47 Ecuador 1 0 0 1 47 Norway 1 0 0 1 47 Slovenia 1 0 0 1 47 Saint Lucia 1 0 0 1 47 Uganda 1 0 0 1 56 Armenia 0 1 0 1 56 Colombia 0 1 0 1 56 Denmark 0 1 0 1 56 Ethiopia 0 1 0 1 56 Fiji 0 1 0 1 56 Mongolia 0 1 0 1 56 Tunisia 0 1 0 1 63 Austria 0 0 1 1 63 Cape Verde 0 0 1 1 63 Cuba 0 0 1 1 63 Egypt 0 0 1 1 63 Grenada 0 0 1 1 63 Indonesia 0 0 1 1 63 Lithuania 0 0 1 1 63 Portugal 0 0 1 1 63 Slovakia 0 0 1 1
  25. 👍..... இனி மீதமிருக்கும் போட்டிகளில் அமெரிக்காவிற்கு சீனாவை விட வாய்ப்புகள் அதிகம் தான்.....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.