Everything posted by ரசோதரன்
-
குறுங்கதை 9 -- லவ் பேர்ட்ஸ்
🤣...... அப்ப பஸ்ஸூக்குள்ள இருந்த சிலர் பின்னர் ஒரு நாளில் இப்படி எதிர்க்கட்சி சாட்சிகளாக மாறுவார்கள் என்ற அறிவு அப்ப இருக்கவில்லை......... ஒருவருக்கு பெண் நிச்சயமானது. என் நண்பன் ஒருவனுக்கு அந்தப் பெண் உறவினர். பெண் வீட்டார் பேசிய மாப்பிள்ளை எப்படி என்று நண்பனை விசாரித்தனர். 'அந்த ஆளுக்கு அக்காவை கட்டிக் கொடுப்பதை விட நீங்களே அக்காவை கிணத்துக்குள்ளே தள்ளி விடலாம்..........' என்ற மாதிரி நண்பன் நன்னடத்தை சான்றிதழ் ஒன்று கொடுத்தான். கல்யாணம் நின்று போனது........ அந்த மாப்பிள்ளையாகி இருக்க வேண்டியவர் 'எவண்டா, அவன்..........' என்று கொலைவெறியுடன் என் நண்பனைத் தேடிக் கொண்டிருந்தார்..........
-
குறுங்கதை 9 -- லவ் பேர்ட்ஸ்
நன்றிகள் ஜஸ்டின். நல்ல காலம், நாய் பூனைகளில் இந்த ஜீன்கள் அடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. மரத்திற்கு மேலே இருந்து ஒன்று சவால் விட, மரத்திற்கு கீழே இருந்து இன்னொன்று பதில் சவால் விட.......... எப்படி இருக்கும் இவை எல்லாம் பேச ஆரம்பித்தால்.......😀.
-
பூமியை நெருங்கும் பாாிய ஆபத்து – எச்சாிக்கை விடுக்கும் இஸ்ரோ!
🫣.......... இஸ்ரோ தலைவர் சோம்நாத் அவர்கள் ஆதவனை சரியாக 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் திகதி நேரடியாகத் தாக்குவதற்கு 50 வீதம் சாத்தியம் இருக்கின்றது............... இந்த விண்கல் பற்றிய நாசாவின் குறிப்பு கீழே உள்ள இணைப்பில் உள்ளது. 2068இல், அது கூடமிகக் குறைந்த சாத்தியமே, பூமிக்கு அருகே வருவதால் ஒரு தாக்கம் இருக்கலாம் என்று சொல்லியிருக்கின்றார்கள். அந்த விண்கல்லை ஈலான் மஸ்க்கே தனியாளாக சமாளித்து விடுவார்........ ஆனால் இந்த ஆதவனை எவராலும் சமாளிக்க முடியவே முடியாது............🤣. https://science.nasa.gov/solar-system/asteroids/apophis/
-
குறுங்கதை 9 -- லவ் பேர்ட்ஸ்
🤣........ வெறும் அப்சவேர்ஷன் தானுங்க.......... மற்றபடி இந்த ஏரியாவிற்கு சுத்தமாக லாயக்கில்லாத ஆளுங்க.......
-
படித்ததில் பிடித்தது.
ஒருவர் தன் தந்தைக்கு உணவு கொடுக்கும் சட்டியை அவரின் மகன் பாதுகாப்பாக எடுத்து வைக்கும் ஒரு நிகழ்வு ஒரு பிரபல சிறுகதையில் இருக்கின்றது. அதன் இன்னொரு வடிவம் இது. சொல்லிச் சொல்லி தீராது மனித வாழ்வில் அறம்.........
-
குறுங்கதை 9 -- லவ் பேர்ட்ஸ்
🤣........... 'மகளிர் மட்டும்' என்று சில பேரூந்துகள் அப்பொழுது ஓடிக் கொண்டிருந்தது. நூல் விடு, நூல் விடு என்றால் இதில எங்க நூலை விடுகிறது, அந்த பேரூந்திற்கு கிட்டவே எங்களை விடமாட்டார்களே .............😜. ஊரில் எத்தனையோ பேர்கள் நூல்கள் விட்டார்கள் தான். நமக்கு துணிவும் இருக்கவில்லை, சோலியும் கூட... இப்ப சுற்றும் முற்றும் பார்த்தால், நூல் விடப்பட்ட பலர் நூலே விடாதவர்களை கட்டியும், நூல் விட்டவர்கள் வீட்டில் சொன்னவர்களைக் கட்டியும் என்று எல்லோரின் கதையும் முடிந்து விட்டது..........
-
குறுங்கதை 9 -- லவ் பேர்ட்ஸ்
❤️..... இவைகளும் கதைக்கும் என்பது ஆச்சரியமாக இருக்கின்றது.... அவைகளின் சைஸிற்கு ஒரு கதை வேற....🤣
-
குறுங்கதை 9 -- லவ் பேர்ட்ஸ்
அவருக்கு சுவாசம் சம்பந்தமான ஒரு நோய் ஏற்கனவே இருந்தது என்றும், கோவிட் தொற்றால் வந்த பாதிப்பில் இருந்து பல காலம் மீள முடியாமல் அவதிப்பட்டார் என்றும் இருந்தது. பின்னர் நீங்கள் சொல்வது போலவும் நடந்திருக்கக்கூடும்.
-
குறுங்கதை 9 -- லவ் பேர்ட்ஸ்
ஆலங்குழையை கட்டாக பருத்தித்துறை சந்தையில் விற்பார்கள். பள்ளிக்கூடம் முடிந்த பின் ஓடிப் போய் அதில் ஒரு கட்டை வாங்கிக் கொண்டு பஸ்ஸில் ஏறவேண்டும். இன்னும் வேறு சிலரும் ஆலங்குழை வாங்குவார்கள். பனம் ஓலைகளை, இவை மாடுகளிற்கு, ஒரு வண்டிலில் பின்னேரங்களில் பொலிகண்டிப் பக்கம் இருந்து கொண்டு வந்து விற்பார்கள். அதையும் ஊரவர்கள் வாங்குவார்கள். நீங்கள் சொல்லும் இந்தச் சின்னக் கிளிகள் பலவற்றை இங்கு கடைகளில், சந்தைகளில் பார்த்திருக்கின்றேன். ஆஸ்திரேலியாவில் இவைகளில் சில வகை சுதந்திரமாக பறந்து திரிவதையும் பார்த்திருக்கின்றேன். அங்கு ஒரு பறவைகள் பூங்காவில் எத்தனையோ வகையான இந்தச் சின்னக் கிளிகள் இருக்கின்றன. கை பெருவிரல் அளவில் கூட அங்கு பச்சைக் கிளிகள் இருக்கின்றன. பல தனி வெள்ளை மயில்களும் அங்கு நின்றன.
-
குறுங்கதை 9 -- லவ் பேர்ட்ஸ்
🤣........... ஒரு 'ஆடு ஜீவிதம்' கூட எழுதலாம்.......... பள்ளிக்கூடம் விட்டு வரும் போது பருத்தித்துறைச் சந்தையிலிருந்து ஆட்டுக்கு குழை வாங்கி வரவேண்டும். அதில் இரண்டு சிக்கல்கள்: முதலாவது, அந்தக் கூட்டத்தில் குழையையும் காவிக் கொண்டு பஸ்ஸில் ஏறுவது. இரண்டாவது, 'என்னடா, உங்கள் ஊரில் குழையும் கிடையாதோ........' என்ற வேறு ஊர் நண்பர்களின் கேலி...........🤣
-
குறுங்கதை 9 -- லவ் பேர்ட்ஸ்
🤣.... அவர்கள் இரண்டு பேரும் தான் அந்த ஜோடி....👍 இந்த படம் முதலில் வந்த போது நான் பிறக்கவேயில்லை.....😀.
-
குறுங்கதை 9 -- லவ் பேர்ட்ஸ்
🤣..... பொய் என்று சொன்னால் பிரச்சனை வந்தாலும் வரும் போல.... பல ரசிகர்கள் இங்கே இருப்பார்கள்....
-
குறுங்கதை 9 -- லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ் -------------------- 'அன்பே வா' படத்தில் எம்ஜிஆர் நடிக்கவே மாட்டார் என்று சொல்லி விட்டாராம். ஒரு அம்மா, தங்கை செண்டிமென்ட், வில்லன்களை புரட்டி எடுத்தல், சில போதனைகள் இல்லாமல் என்னுடைய படம் எப்படி ஓடும் என்று நேரடியாகவே கேட்டார் என்பார்கள். வாத்தியார் நடிகர்களிலே மிகவும் தெளிவானவர். முன்னும் அவர் போல ஒருவர் இருக்கவில்லை, பின்னும் ஒருவரும் வரப் போவதில்லை. 'சரி, உங்களுக்காக நடிக்கிறேன்....... உங்களின் படம் என்றே சொல்லுங்கள்.....' என்று ஏவிஎம்மில் அவர் வைத்திருந்த மதிப்பு காரணமாக நடிக்க ஒத்துக் கொண்டார். படம் பெரிய வெற்றி. வாத்தியாரின் படங்களிலேயே வித்தியாசமான ஒரு படமாக இது என்றும் நிற்கின்றது. சரோஜாதேவி 'லவ் பேர்ட்ஸ்.......லவ் பேர்ட்ஸ்........' என்று ஒரு பாடலுக்கு சுற்றி சுற்றி துள்ளிக் குதித்து ஆடுவார். கண்ணை கடகடவென்று வெட்டுவார். அவர் முகத்தை குளோஸ்அப்பில் காட்டுவார்கள். வெள்ளை பெயிண்ட் அடித்தது போல மேக்அப் அவருக்கு போடப்பட்டிருக்கும். எலுமிச்சை நிற எம்ஜிஆருக்கு சோடியாக கலர்ப் படத்தில் நடிக்க வைக்க இப்படி ஒரு ஒப்பனையை கன்னடத்து பைங்கிளிக்கு செய்தார்கள் போல. படம் பார்த்த பின், எப்படியாவது லவ் பேர்ட்ஸ் வாங்குகின்றோம், வளர்க்கின்றோம் என்று முடிவெடுத்தோம். வீட்டில் அனுமதியும், காசும் கேட்கும் போது இன்னும் மேலதிகமாகவே சொன்னோம் - வாங்குகின்றோம், வளர்க்கின்றோம், பெருக்குகின்றோம், விற்கின்றோம் என்று. வீட்டுப் பொறுப்பாளர்களில் ஒருவர், வழமை போலவே, இதையும் நம்பவில்லை. மற்ற பொறுப்பாளர், அவரும் வழமை போலவே, இதையும் நம்பினார். முதலில் கூடு செய்தோம். தச்சு வேலை தெரிந்தவர் ஒருவர் வந்தார். நாங்கள் இருவர் அவருக்கு உதவியாளர்கள். அப்பொழுது கூட்டுக் கோழி வளர்ப்பது சரியான பிரபலம். கோழிக் கூடு செய்தது போக மிகுதியாக 'கோழி வலைகள்' சில தெரிந்தவர்களிடம் இருந்தது. இலவசமாகவே கொடுத்தார்கள். யாழ் கொட்டடியில் இருக்கும் ஒருவர் தான் மிகப் பிரபலமான லவ் பேர்ட்ஸ் விற்பனையாளர் என்று அறிந்து அங்கு போனோம். அவர் வீட்டில் இரண்டு கூடுகள். இரண்டும் பெரியவை. ஒன்றுக்குள் விற்பதற்கென்றே நூற்றுக் கணக்கில் வைத்திருந்தார். இன்னொன்றில் அவரின் ஆசைக் கிளிகள். அவை விற்பனைக்கு இல்லை என்றார். மொத்தமாகவே இரண்டு தான் வாங்கப் போயிருந்தோம். எப்படி ஆண், பெண் பார்ப்பது என்று தெரியவில்லை. கோழி, சேவல் போல தெளிவாக வித்தியாசங்கள் எதுவும் தெரியவில்லை. அவரே சொல்லித் தந்தார். மூக்கின் நிறம் தான் அந்தச் சூத்திரம். நீல மூக்கு ஆண், வெள்ளை மூக்கு பெண். ரோஸ் கலர் மூக்கும் வரும், அதுவும் பெண் தான். ஒரு நீல மூக்கும், ஒரு வெள்ளை மூக்கும் சிமெந்துப் பைக்குள் போட்டுக் கொடுத்தார். இரண்டிலிருந்து நாலாகி, நாலிலிருந்து பதினாறு ஆகி என்று பவளக்கொடி போலவே சிந்தனை ஓடியது. பலர் வந்து பார்த்து போனார்கள். ஊரில் எவரிடமும் லவ் பேர்ட்ஸ் இருக்கவில்லை. கொட்டடியில் ஒரு குவியலாக இவை இருக்கின்றன என்ற விபரமும் ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. திணை மட்டும் தான் சாப்பிடும், சாமை சாப்பிடாது என்று நாங்கள் கொடுத்த விளக்கம் கேட்டு அவர்கள் மூக்கில் விரலை வைக்காத குறை. எது திணை, எது சாமை என்று கண்டு பிடிப்பதே ஒரு பெரிய இயற்கை அறிவாகிக் கொண்டிருந்தது. லவ் பேர்ட்ஸ் சோடி மாறாது, அவை ஒன்று போனால் மற்றதும் போய் விடும் என்ற விளக்கமும் நன்றாகவே விலை போனது. ஒரு நாள் கூடு வெறுமாகக் கிடந்தது. குருவி இரண்டும் கோழி வலையின் கண்களுக்குள்ளால் வெளியில் வந்து பறந்து போய்விட்டது. கோழி வளர்த்திருந்தாலும் வீட்டிற்கு ஏதாவது பிரயோசனமாக இருந்திருக்கும் என்று ஒரு பொறுப்பாளர் அடிக்க வந்தார். 'பிள்ளைகள் ஆசைப்பட்டுதுகள்.......' என்று மற்ற பொறுப்பாளர் அன்றும் காப்பாற்றிவிட்டார். அந்தக் குருவிகள் லவ் பேர்ட்ஸ் இல்லை என்று வளர்ந்த பின்னர் தெரிய வந்தது. 'அன்பே வா' படத்தில் அவர்கள் பொய் சொல்லிவிட்டார்கள். அந்தக் குருவிகள் பரகீட். லவ் பேர்ட்ஸ் என்பவை வேறு. ஆனாலும் எங்கள் வீட்டில் எப்போதும் லவ் பேர்ட்ஸ் இருந்தது இப்போது தெரிகின்றது.
-
'கடவுள் மட்டுமே என்னை தேர்தல் போட்டியில் இருந்து தடுக்க முடியும்' - ஜோ பைடன் சொன்னது என்ன?
🤣........... கடவுளும் இறங்கி வந்து எத்தனை அதிபர்களிடம் தான் தனித்தனியாக 'சரி சரி, போதும் போதும், காணும் போங்கோ....' என்று சொல்ல முடியும்? எவரும் ஒரு தடவை வந்தால், அதற்குப் பிறகு விட்டு விட்டுப் போக மாட்டோம் என்று அடம் பிடிக்கின்றார்களே. நல்ல காலம் அமெரிக்காவில் இரண்டு தடவைகள் தான் என்ற அரசியல் சட்டம் ஒன்று இருக்கின்றது. இவர் மீண்டும் வந்தாலும் இங்கு ஒன்றும் கெட்டு விடப் போவதில்லை. 'கடுமையான குளிர்' என்று ஜோ சொல்லவில்லை, தனக்கு தடிமன்/ஜலதோசம் என்று தான் சொல்ல வந்தவர். மொழிபெயர்ப்பில் ஜோவின் தடிமன் அமெரிக்காவில் கடும் குளிர் என்று ஆகிவிட்டது. இங்கு கோடை காலம்.........வெயில் பல இடங்களில் உச்சியை பிளக்கின்றது..........🤣 ஜோ தன்னால் இப்பொழுது 110 மீட்டர் தடைதாண்டி ஓடும் ஓட்டம் ஓட இயலாது, ஆனால் மற்றபடி எல்லாம் செய்ய முடியும் என்றும் சொன்னார்............ முக்கியமாக ட்ரம்பை தன்னால் வெல்ல முடியும் என்று சொன்னார்......😜.
-
மன்னார் மாந்தை மேற்கைச் சேர்ந்த முன்னாள் போராளி மரணம்!
😔.......... ஆழ்ந்த இரங்கல்கள். 2016ம் ஆண்டில் இவரின் 'கம்பிகளின் மொழி' என்னும் முதலாவது நூல் வெளியிடப்பட்டது. 'குமரிக்கண்டம் முதல் முள்ளிவாய்க்கால் வரை' என்னும் நூலை எழுதி முடித்துள்ளார், இன்னும் வெளியிடப்படவில்லை.
-
குறுங்கதை 8 - ஒரே ஒரு மன்னிப்பு
🤣.......... கிட்டக் கிட்ட வந்திட்டீர்கள்........... 'சிலுப்பா ராயர்' என்று தான் எல்லோரும் சொல்லுவார்கள்.
-
யாரோடும் தேரோடும்
🤣.... அந்தக் கண்ணாடிக் கூரை.... தள்ளி நின்று சில தடவைகள் பார்த்திருக்கின்றேன்.....
-
யாழ்ப்பாண வைத்தியர்களின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்
மருத்துவர் கேதீஸ்வரவின் பிறந்தநாள் விழா, 60வது என்று நினைக்கின்றேன், ஒரு இரண்டு மாதங்களின் முன் கொண்டாடப்பட்டது என்று ஞாபகம். அப்பொழுது அவரின் சேவைகளைப் பற்றி நீண்ட கட்டுரை ஒன்றைப் பார்த்திருந்தேன்................ எல்லாமே பொய்யா.......?
-
ஹைட்ரஜன் பெராக்ஸைட் சுவாசித்தால் நோய்த்தொற்று குறையுமா? - கொந்தளிக்கும் மருத்துவர்கள்
நானே ஒரு நல்ல மாற்று வைத்தியத்தை கண்டு பிடித்திருக்கின்றேன் என்று சொல்வதற்கு எவ்வளவு................ அசட்டுத்தனம் வேண்டும்...........🫣. கோவிட் தொற்றின் போது, சார்ஸ் வைரஸைக் கொல்ல கிளீனர்களை உள்ளுக்குள் உறிஞ்சி எடுக்கச் சொன்ன ஒரு முன்னாள் அதிபர் போலவே இவருடைய யோசனையும் போயிருக்கின்றது...........🤣.
-
தமிழ்நாடு: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
🫣............ எத்தனை கொலைகளும், சாவுகளும் தமிழ்நாட்டில்..... ஆற்காடு சுரேஷ் என்ற ரவுடி போன வருடம் கொல்லப்பட்டிருக்கின்றார். அவரின் கூட்டாளி ஒருவரும் சில மாதங்களின் முன்னர் கொல்லப்பட்டிருக்கின்றார். பின்னர் அதற்கு ஒரு பழி வாங்கும் கணக்கில் இவர் இப்பொழுது கொல்லப்பட்டிருக்கின்றார் என்று இன்னொரு செய்தியில் இருக்கின்றது..........
-
யாரோடும் தேரோடும்
தென்கலை போல.......... சாயல் எங்களையே மாதிரி..........
-
குறுங்கதை 8 - ஒரே ஒரு மன்னிப்பு
🤣.......... களத்தில் சில திரிகள் ஒரு மாதிரித்தான்.............. தலையில் மண் எண்ணையை ஊத்தி வைத்துக் கொண்டு நெருப்பு பெட்டி இருக்குதா என்று கேட்கிற மாதிரி இருக்கும்......... கிட்டப் போனால் நாங்களும் வெந்து போடுவோமே என்று சுத்தி சுத்தி ஓடிக் கொண்டிருக்கின்றோம்.........🤣.
-
யாரோடும் தேரோடும்
ஒவ்வொரு விசயத்திலும், நாட்டு நடப்புகளிலும் எவ்வளவு மாறுபட்ட சிந்தனைகள் எங்களுக்குள்ளே...........🤣. ஒன்றோ இரண்டு மாதங்களின் முன், கர்நாடகாவில் என்று நினைக்கின்றேன், ஒரு தேரை இழுக்கும் போது, அது அப்படியே கவிழ்ந்து விழுந்து விட்டது. உயிர்ச்சேதங்கள் பற்றிய கணக்கு ஞாபகத்தில் இல்லை. இனிமேல் எங்கு தேர் இழுக்கப்பட்டாலும், தேரின் பின்னால் தான் இனி இடைவெளி ஒன்று விட்டு போவது என்று ஒரு முடிவை எடுத்திருந்தேன். இந்த இரண்டு பேருக்கும் அந்த விடயம் தெரியாது போல......... தேரில், அதுவும் சூலத்தோடு, ஏறி இருக்கின்றார்கள்...........😜.
-
குறுங்கதை 8 - ஒரே ஒரு மன்னிப்பு
🤣......... அண்ணை, இப்ப எங்களின் ஒரு அரசியல் தாத்தா இறந்து போனார் தானே........ அவரும் கடைசி நாளன்று 'மன்னித்து விடுங்கப்பா.......... என்னாலே எதுவும் முடியல்ல........' என்ற மாதிரி ஒன்றைச் சொல்லியிருந்தால், அவரின் மறைவிற்கு பின் நிலைமை கொஞ்சம் சுமுகமாக இருந்திருக்குமோ........
-
குறுங்கதை 8 - ஒரே ஒரு மன்னிப்பு
ஒரே ஒரு மன்னிப்பு ------------------------------ அவர் எனக்கு ஒரு ஒன்று விட்ட தாத்தா முறை. மூன்று அல்லது நான்கு தலைமுறைகள் பின்னோக்கி போய்ப் பார்த்தால், ஒரு குடும்பத்தில் இருந்து நாங்கள் இன்று பல கிளைகளாக, பல குடும்பங்களாக வந்தது தெளிவாகவே தெரிந்தது. அவரின் பதிவுப் பெயர் எனக்கும், ஊரில் பலருக்கும் தெரியாது. எல்லோரும் அவரை கூப்பிடும் பெயர் கொஞ்சம் விநோதமானது. ஒரு காலத்தில் நீண்ட தலைமுடி வைத்து, அதை சிலுப்பிக் கொண்டு ஊருக்குள்ளே சுற்றித் திரிந்திருக்கின்றார் போல. அதனால் அப்படியே அந்தப் பட்டப் பெயர் அவருடன் ஒட்டிவிட்டது. ஊரில் அநேகமாக எல்லோருக்கும் பட்டப் பெயர்கள் இருந்தன, பெரும்பாலும் அந்தப் பெயர்களே பாவனைகளிலும் இருந்தன. ஒன்று விட்ட தாத்தாவின் விநோதமான பெயரைப் போலவே அவரின் வீடும் கொஞ்சம் விநோதமானது. இரண்டு ஒழுங்கைகள் முடிகின்ற, அல்லது அவை தொடங்குகின்ற இடத்தில் அவரின் வீடு இருந்தது. இரண்டு பக்கங்களிலும் கதவுகள் இருந்தன. ஊரவர்கள் அவரின் வீட்டு வளவினூடு மிகச் சாதாரணமாகப் போய் வருவார்கள். ஒன்று விட்ட தாத்தாவின் மனைவியான அந்த அப்பாச்சி மிகவும் அன்பானவர். அந்த அன்பே ஊரவர்களை அந்த வீட்டை பாதையின் ஒரு பகுதியாக பயமின்றி நினைக்க வைத்துக் கொண்டிருந்தது. அவர் வீட்டில் ஒரு பெரிய கொய்யா மரம் நின்றது. எல்லோரும் காய்களும், பழங்களும் பிடுங்குவார்கள். அப்பாச்சி பார்த்தால் சிரித்துக் கொண்டு போய்விடுவார். ஒன்று விட்ட தாத்தா வெளியே வந்தால் எவரென்றாலும் ஓடிவிடுவார்கள். ஒரு சமயம் ஒன்று விட்ட தாத்தா சில நாட்கள் எங்கள் வீட்டில் தங்க வேண்டி வந்தது. அவர்களின் குடும்பத்தில், தாத்தாவின் இளைய மகனுக்கு, தமிழ்நாட்டில் திருமணம் நடப்பதாக முடிவாகியிருந்தது. அந்த மகன் இலங்கைக்கு வர முடியாத சூழ்நிலையால், திருமணச் சடங்கை தமிழ்நாட்டில் வைப்பதாக முடிவெடுத்திருந்தார்கள். அந்த நேரத்தில் ஒன்று விட்ட தாத்தாவால் பயணம் போக முடியாது என்று அவரை எங்கள் வீட்டில் விட்டுப் போயிருந்தனர் அப்பாச்சியும், அவரின் குடும்பமும். ஒன்று விட்ட தாத்தா வந்த நாளிலிருந்தே ஆரம்பித்துவிட்டார். வீட்டில் இருப்பவர்களுக்கு அவருடன் காலம் தள்ளும் ஒவ்வொரு பொழுதும் போதும் போதும் என்றாகியது. என் தந்தை வீட்டிலே நிற்கும் நேரம் வெகு குறைவு. அவருக்கு இப்படி ஒரு விடயம் வீட்டில் நடந்து கொண்டிருக்கின்றது என்பதே தெரியாது. தெரிந்திருந்தாலும், அவர் பிரச்சனையை தீர்த்து வைத்திருப்பார் என்றும் இல்லை. முக்கியமாக இந்தப் பிரச்சனைக்கு தீர்வு என்று ஒன்றும் இல்லை. என்ன ஆனாலும் ஒன்று விட்ட தாத்தாவின் குடும்பம் திரும்பி வரும் வரை அவர் எங்கள் வீட்டில் இருந்து தான் ஆகவேண்டும். இரண்டு வாரங்கள் ஓடியது. அம்மாதான் மிகவும் கஷ்டப்பட்டு போனார். விருப்புகளையும், வெறுப்புகளையும் அடக்கி அடக்கி வெளிக் காட்டாமல் வாழும் அன்றிருந்த எல்லா குடும்ப தலைவிகளையும் போன்றவர் தான் அவரும். ஒன்று விட்ட தாத்தாவின் வீட்டார்கள் இந்தியாவிலிருந்து திரும்பி வந்து, அப்பாச்சியும் அவரின் மூத்த மகனும் ஒன்று விட்ட தாத்தாவை கூட்டிப் போவதற்கு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். வாசல் வரை போன ஒன்று விட்ட தாத்தா, நாங்களும் ஒரு இடைவெளி விட்டு பின்னால் போய்க் கொண்டிருந்தோம், திடீரென்று நின்று அம்மாவை கையெடுத்துக் கும்பிட்டார். 'நான் ஏதும் பிழைகள் செய்திருந்தால் என்னை மன்னித்து விடு, பிள்ளை............' என்று கலங்கி நின்றார். அம்மா அழுதேவிட்டார். ' என்ன இப்படி சொல்லிறியள், நீங்க எனக்கு அப்பா மாதிரி......... எப்ப வேணுமென்றாலும் வாங்கோ.........' என்று வழிந்த கண்ணீரை துடைத்தார் அம்மா. ஒன்று விட்ட தாத்தாவின் எந்த ஒரு சொல் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது என்ற கேள்வி பல நாட்களாக என்னுள்ளே வந்து வந்து போனது.