Everything posted by ரசோதரன்
-
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த திருகோணமலையை சேர்ந்த சாதனை வீரன் ஹஷன் ஸலாமா!
முஹம்மட் ஹஷன் ஸலாமாவுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣.... கவனித்தேன், ஏராளன். ஆனாலும் நமக்கு பையன் சாரை எதிலாவது இழுக்காமல் பொழுது விடியாதே.......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣......... இந்த ஒரு சொல்லுக்காக அமெரிக்காவில் அரைவாசியை உங்களுக்கு எழுதி வைக்கின்றேன்......அமெரிக்கா சந்திரனை பிடித்தால் அதிலும் அரைவாசி உங்களுக்கே........ ஒரு சின்ன சந்தேகம்........ ஜாம்பவான் என்பதை 'ஜம்பவான்' என்று எழுதியதில் ஏதும் உட்குத்து உள்ளதோ, பையன் புலவரே......🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
முந்தியும் கட்டையால் பிளக்கப்பட்டிருக்கினம்..........கட்டை வெடிச்சிருக்கு..........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
13வது ஓவர் முடிய ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்திற்கு சொன்னது ' சரி சரி, நீங்கள் சின்னப் பிள்ளைகள், விளையாடினது காணும், வீட்டை போக ரெடியாகுங்கோ...'.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நேபாள் உட்பட 19 நாடுகள் இலங்கையை T20 தொடருக்கு அழைத்துள்ளார்களாம்.....
-
சட்டவிரோத மாடு கடத்தல் – பொலிஸ் அதிகாாிக்கு பொன்னாடை போா்த்திய சிவசேனை!
🫢..... மாடுகளை காப்பாற்றினதுக்கு பொன்னாடை....ஆடுகளை காப்பாற்றினதுக்கு ஒரு துவாயும் சேர்த்தே கொடுத்திருக்கலாம்... இலங்கையில் அவரவர் வேலையை செய்தால் பொன்னாடை கிடைக்கும் தருணங்களும் உண்டு.... ருத்ர சேனை, நீங்கள் எங்கேயப்பா...
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣..... இந்தக் காளியோட ஆட்டத்தை இனிமேல தான் பார்க்கப் போறீங்க என்று சொல்வீங்க என்று பார்த்தால்.... காலி என்று ஒரு வார்த்தையில் முடிச்சிட்டீங்க.... நாலு பெரிசும், நாலு சின்னனும் சூப்பர் எட்டுக்கு போகும் போல, மழை பெய்தால்...
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
இங்கு கலிபோர்னியாவில் இரண்டில் ஒரு திருமணம் விவாகரத்தில் முடிகின்றது என்று சொல்கின்றனர். அதை விட விவாகரத்து என்று சட்டப்படி போகாமலேயே 'ஒரு பெற்றோர்' தலைமையில் இருக்கும் குடும்பங்களும் மிக அதிகம். இவை இரண்டும் சேர்ந்தால், அது இங்குள்ள ஒரு பால் பெற்றோர்களை விட பல மடங்குகள் அதிகம். இதை வைத்துப் பார்த்தால், இரு பால் திருமணத்தால் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான, முழு உலகமும் அறிந்து கொள்ளக் கூடிய சூழல் அமைகின்றது என்று எப்படிச் சொல்ல முடியும்? கோவில் கட்டுவதற்கு என்று ஆகம விதிகள் இருக்கின்றன. அன்றிலிருந்தே இருக்கின்றன. கோவில் என்றால் என்ன, ஏன் கோவில் வேண்டும் என்றும் எழுதப்பட்டு இருக்கின்றன. இந்த என்றோ எழுதப்பட்ட விதிகளை மீறி யாரோ சிலர் அவர்களின் சுய விருப்பத்தில் ஒன்றைக் கட்டி, ஒரு கடவுளை உருவாக்கி வழிபடுகின்றனர் என்று வைப்போம். அதை அவர்கள் தங்கள் கோவில் என்றும் சொல்கின்றனர். 'நீங்கள் உங்கள் சுய விருப்பில் செய்வதற்கு இங்கு தடையில்லை, ஆனால் இதை நீங்கள் கோவில் என்று சொல்லக் கூடாது, கோவில் என்றால் விதிகள் வேறு, வழிகள் வேறு. வேணும் என்றால் உங்களின் இடத்தை 'கும்பிடும் இடம்' என்று சொல்லிக் கொள்ளுங்கள்' என்று மற்றயோர் சொல்வது சரியா?
-
குட்டிக் கதைகள்.
🤣........... அமெரிக்காவால் வழங்கப்படும் H1-B விசாவிற்கு இது சரியாக பொருந்துகின்றது. இது அமெரிக்காவால் சில வேலைகளுக்காக அதில் சிறப்பு தேர்ச்சி உள்ள வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக வேலை விசா. மூன்று வருடங்கங்களுக்கு வழங்கப்படும், பின்னர் இன்னும் ஒரு மூன்று வருடங்களுக்கு நீட்டிக் கொள்ளலாம். எந்த வேலைக்காக வழங்கப்பட்டதோ அந்த வேலையை மட்டுமே செய்யலாம் என்பது இதில் உள்ள நிபந்தனை. ஆனால் எங்கேயாவது, எதையாவது படித்து விட்டு இந்த விசாவில் வந்த மிக அதிகமானோர் கணினி துறையில் வேலை செய்தனர். அமெரிக்க அரசும் இதை கண்டும் காணாமல் விட்டுவிட்டது. பின்னர் ட்ரம்ப் அதிபரானார்.......... படிப்பிற்கும், தேர்ச்சிக்கும், தொழிலுக்கும் சம்பந்தம் இல்லாதவர்களின் விசாக்கள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டன. ஆகப் பகிடி என்னவென்றால், இந்தியா போய் திரும்பி வந்து கொண்டிருந்த சிலரை அதிகாரிகள் இங்கு விமான நிலையத்தில் வைத்து வேலைக்கான நேர்முகத் தேர்வில் கேட்கும் சில டெக்னிகல் கேள்விகளைக் கேட்டது தான்........🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣.... நமக்கு மூஞ்சை, முகம் எது போனாலும் பரவாயில்லை, ஆனால் பக்கத்து வீட்டுக்காரனுக்கு முழுவியலம் கெட்டுப் போக வேண்டும் என்பது ஒரு வழக்கம்......யார் வென்றாலும் வெல்லட்டும், ஆனால் 'அவன்' மட்டும் வெல்லக் கூடாது......🤣 இன்றும் மெல்லிதாக நினைவில் வந்து போகும் ஒரு நிகழ்வு. 92ம் ஆண்டென்று நினைக்கின்றேன். இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான உதைபந்தாட்டப் போட்டி. யாழ் பல்கலைக்கழக அணியை பலத்த கஷ்டங்களிற்கு மத்தியிலும் போட்டியில் பங்குபற்ற தென் பகுதிக்கு அழைத்து வந்திருந்தனர். பேராதெனிய அணியில் ஒரேயொரு சிங்கள மாணவன், மற்றவர்கள் எல்லோரும் தமிழர்கள். அணியின் தலைவர் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர். அணியின் பயிற்சியாளார் தமிழர். அவரது பெயர் ராமன் என்று ஞாபகம். இலங்கை அணி மற்றும் கொழும்பில் Renown அணிக்கு விளையாடியவர். இந்த இரண்டு அணிகளிலும் விளையாடிய சிலர் ஒரே பாடசாலை வகுப்புகளில், ஒரே ஊர்களில், ஒரே வருடங்களில் படித்த நண்பர்கள். எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்தும் இருந்தது. பேராதெனிய மாணவர்கள் மிகவும் கவனம் எடுத்து யாழ் பல்கலை மாணவர்களை பார்த்துக் கொண்டனர். போட்டியில் இரண்டு அணிகளுமே நன்றாக விளையாடினார்கள். அரை இறுதிக்கு இரண்டு அணிகளும் தெரிவாகியதாக ஞாபகம். இங்கே தான் பழைய பழக்கம் தலை தூக்கியது. 'நாங்க வெல்லாட்டியும் பரவாயில்லை, ஆனால் அவங்க வெல்லக் கூடாது.......' என்று ஆரம்பித்து, இரண்டு அணிகளுமே இறுதி ஆட்டத்திற்கு போகவில்லை.......😔
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤝... நேபாளம் வென்றிருக்க வேண்டும், பையன் சார். எவ்வளவு நல்லாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.... தென் ஆபிரிக்கா தப்பி தப்பிக் கொண்டு வருகின்றது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நேபாளம் இந்தப் போட்டியை எப்படி தோற்றதென்பது கண்டுபிடிக்க ஒரு விசாரணை குழு அமைக்க வேண்டும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உகண்டாவால் முறியடிக்க முடியவில்லை....இரண்டு ஓட்டங்களை கூட அடித்து விட்டனர்...40/10.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣........ சரி விடுங்க.......இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து அணி வீரர்களின் துயரை விடவா எம் துயர் பெரியது.......
-
13ஐ அமுல்படுத்தினால் இரத்த ஆறு ஓடும் – மேர்வின் சில்வா !
இன்றைக்கு உலக இரத்ததான தினம் என்று எங்கேயோ ஒரு செய்தி இருந்தது.......மேர்வின் டி சில்வா நல்ல அப்டேட்டாகத் தான் இருக்கின்றார்.........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வாத்தியார்கள் தப்பாக செய்தாலும், அது தப்பேயில்லாமல் போய் விடுகின்றது........🤣. நான் இங்கிலாந்தை இரண்டாவதாகவும், மேற்கிந்திய தீவுகளை முதலாவதாகவும் தெரிந்து வைத்துள்ளேன்.......தலை கீழ்.......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍... ஐசிசியின் போட்டி விதிகளின் படி, B1 ஆக அவுஸ்திரேலியா வரவே முடியாது, எந்தச் சந்தர்ப்பத்திலும். இங்கிலாந்து அல்லது ஸ்காட்லாந்து மட்டுமே வரலாம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
😶.... நீங்கள் சொல்வது சரி.......ஆனால் ஐசிசி ஏன் இப்படி செய்திருக்கின்றது? சூப்பர் 8 குருப்புகளுக்குமான எங்களின் அணித் தெரிவுகளே தப்பாக போய் விட்டனவே....
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கிரிக்கெட்டா......... நியூயோர்க் மைதானத்திற்கு நடந்த கதி தான் அமெரிக்க கிரிக்கெட்டுக்கும்... அமெரிக்காவில் கால்ப்பந்து விளையாட்டே ஒரு ஓரமாகத் தான் போய்க் கொண்டிருக்குது, உலகக் கோப்பை, மெஸ்ஸி என்று ஆராவாரம் காட்டிய பின்னும். கிரிக்கெட்டும் இப்படியே இன்னுமொரு ஓரத்தாலே போக வேண்டியது தான்......... திடீரென்று WNBAக்கு, பெண்கள் கூடைப்பந்து, வந்த வாழ்வு........இது தான் மேலே போகும்.......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍... இங்கிலாந்து வென்று, ஸ்காட்லாந்து தோற்றால் போதும், இங்கிலாந்து சூப்பர் 8க்கு உள்ளே போய்விடும்.......
-
தாய்லாந்தில் இரட்டை குட்டிகளை ஈன்றெடுத்த யானை
🤣.... இரண்டு குட்டிகளையும் பார்த்தவுடன், அம்மா யானைக்கு அப்பா யானை மேல் வந்த கோபத்தை தான் குட்டி யானைகள் மேல் கொஞ்சமாக காட்டினது போல.....
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
❤️....... நல்ல ஒரு கலெக்ஷன்...... இரண்டு இன்னிங்ஸூக்கும் பிட்ச் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று சொல்லியிருப்பவர் ஒரு விகடகவி போல.... குமரகுரு ருகுரமகு
-
தாய்லாந்தில் இரட்டை குட்டிகளை ஈன்றெடுத்த யானை
❤️....... இரண்டு குட்டிகள் என்றவுடன் திடுக்கிட்ட தாய் யானை இரு குட்டிகளையும் தாக்க ஆரம்பித்தது என்று முதலில் செய்திகளில் இருந்தது. அம்மா யானைக்கு என்ன நடந்தது என்றே விளங்கவில்லை போல...... குட்டிகள் ஏறிப் பால் குடிக்க படிகள் அமைத்திருக்கின்றனர்.......👍. இதுவே காட்டில் நடந்திருந்தால் இரண்டாவது குட்டி நிச்சயம் தப்பி இருக்காது என்று ஒருவர் சொல்லியிருந்தார். தாய் இரண்டாவது குட்டியை ஏற்றுக் கொண்டிருந்தாலும், அதனால் எட்டி பால் குடிக்க முடியாதிருந்திருக்குமாம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Logistics, logistics என்று சொல்லி ஃபுளோரிடாவில் போட்டிகளை ஒழுங்கு செய்தவர்களையும் இந்த அம்பயர்களைக் கொண்டே மிதிக்க வேண்டும்.............