Everything posted by பிழம்பு
-
இலங்கையில் ஆண் - பால் பாலினம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு யு.எஸ்.எய்ட் நிறுவனம் 7.9 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது என்பது பிரச்சினைக்குரியதொரு விடயம் - நாமல்
11 Feb, 2025 | 10:32 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கையில் ஆண் -பால் பாலினம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கு யு.எஸ்.எய்ட் நிறுவனம் 7.9 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது என்பது பிரச்சினைக்குரியதொரு விடயமாகும்.இது நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது. ஆகவே இவ்விடயம் குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் எழுத்து மூலமாக வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த காலங்களில் யு.எஸ்.எய்ட் என்ற அரச சார்பற்ற நிறுவனம் 7.9 மில்லியன் டொலரை செலவழித்து ஊடகவியலாளர்களுக்கு பல்வேறு பயிற்சி வழங்கியுள்ளதாகவும், ஆண் மற்றும் பெண் பாலினத்தை பயன்படுத்தி அழைக்க வேண்டாம் என்று ஊடகவியலாளர்களுக்கு குறிப்பிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் உள்ளக மட்டத்தில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் 'இலங்கை,பங்களாதேஸ்,உக்ரைன், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 09 நாடுகளின் அரசாங்கத்தை மாற்றியமைப்பதற்காக யு.எஸ்.எய்ட் என்ற அரச சார்பற்ற நிறுவனம் 260 மில்லியன் டொலரை செலவு செய்துள்ளதாக' பதிவேற்றம் செய்துள்ளார். இதற்கு முன்னரும் இலங்கையில் சட்டத்தின் பிரகாரம் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் நாட்டின் இன நல்லிணக்கம்,தேசியத்தை வீழ்த்தும் வகையில் செயற்பட்டதாக பல குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. இவ்வாறான பின்னணியில் இலங்கையில் ஆண் -பால் பாலினம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கு இந்த நிறுவனம் 7.9 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது என்பது பிரச்சினைக்குரியதொரு விடயமாகும். இலங்கையில் போராட்ட காலத்தில் இந்த நிதி பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து ஆராய வேண்டும்.அத்துடன் இந்த நிதியை பெற்றுக் கொண்ட நபர் அல்லது நிறுவனங்கள் தொடர்பிலும், அந்த நிதி எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பதை ஆராய்வது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு இன்றியமையாததாக அமையும். ஆகவே இவ்விடயம் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்குமாறு வலியுறுத்துகிறேன். இலங்கையில் ஆண் - பால் பாலினம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு யு.எஸ்.எய்ட் நிறுவனம் 7.9 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது என்பது பிரச்சினைக்குரியதொரு விடயம் - நாமல் | Virakesari.lk
-
யாழ்ப்பாணத்தில் மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து மக்கள் எதிர்ப்பு போராட்டம்
12 Feb, 2025 | 01:10 PM யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (11) எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ எரியூட்டியில் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படுவதால் அதில் இருந்து கிளம்பும் புகை காரணமாக சுவாசப் பிரச்சினை, தூர் நாற்றம் என்பன ஏற்படுவதால் அயலில் வசிக்கும் தாம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர். இந்நிலையில் போராட்டக்காரர்களை சந்தித்த தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி குறித்த விடயம் தொடர்பில் உரிய தரப்புக்களுடன் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் இழுபறி காணப்பட்டநிலையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்பில் குறித்த பகுதியில் எரியூட்டி கடந்த வருடம் உருவாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து மக்கள் எதிர்ப்பு போராட்டம் | Virakesari.lk
-
குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் தோல்வி
நாட்டின் பல பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட டோக் குரங்குகளுக்கான கருத்தடை திட்டம் தோல்வியடைந்துள்ளது. குரங்குகளால் ஏற்படும் அச்சுறுத்தலுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாத்தளை மாவட்டத்தின் ஹரஸ்கமவில் முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் பல சவால்கள் காரணமாக தற்போது முடங்கியுள்ளதாக மாவட்ட விவசாயப் பணிப்பாளர் அஜித மணிக்கும தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இதனை தெரிவித்துள்ளார். கருத்தடை செய்வதற்கு கால்நடை மருத்துவர்களின் பற்றாக்குறையும், கிரித்தலை கால்நடை மருத்துவப் பிரிவுக்கு குரங்குகளை ஏற்றிச் செல்வதற்கு அதிக செலவினங்கள் ஏற்படுவதும் முதன்மையான தடையாக இருப்பதாக விவசாயப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கமகெதர திஸாநாயக்க மற்றும் விவசாய அபிவிருத்தி பிரதியமைச்சர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். திட்டத்திற்கு தேவையான உபகரணங்களுக்கு 12 மில்லியன் ரூபா செலவாகும் என அதிகாரி தெரிவித்துள்ளார். குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் தோல்வி | Virakesari.lk
-
தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு தொப்புள்கொடி உறவுகள் எனக்கூறுவதில் பயனில்லை – அமைச்சர் சந்திரசேகர்
இலங்கையின் கடல் வளத்தை அழிதொழிக்கும் நடவடிக்கையில் தமிழக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில் தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். தமிழக மீனவர்கள் அத்துமீறும் செயற்பாடு தொடர்பில் இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தமிழக மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் மூன்று நாட்கள் வந்தார்கள், தற்போது ஏழு நாட்களுக்கும் வருவதற்கு முற்படுகின்றார்கள். எமது நாட்டு மீன்களை பிடிப்பது மட்டுமல்ல கடல் வளத்தையே நாசம் செய்கின்றனர். இதனால் நாளைய தலைமுறையினருக்குரிய கடல் வளம் இல்லாமல் போகின்றது. எனவே, இலங்கை எல்லைக்குள் வந்து மீன்பிடிக்க வேண்டாம் என தமிழக மீனவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அதற்கான உரிமை அவர்களுக்கு கிடையாது. எமது நாட்டு கடல் எல்லைக்குள் வந்து மீன்களை பிடித்துக்கொண்டு செல்லும் வழியில் எங்களை தொப்புள்கொடி உறவுகள் எனக்கூறுவதில் பயன் இல்லை. தமிழக மீனவர்கள் மீதோ, தமிழக தலைவர்கள் மீதோ எமக்கு எவ்வித கோபமும் இல்லை. ஒரு சில மீனவர்கள் தான் டோலர் படகுகளைப் பயன்படுத்தி, தடைசெய்யப்பட்ட வலைகளையும் பயன்படுத்தி எமது கடல் வளத்தை நாசமாக்குகின்றனர். அதனையே நாம் எதிர்க்கின்றோம். எமது நாட்டு எல்லைக்குள் அத்துமீறாவிட்டால் எவரையும் கைது செய்யவேண்டியது தேவைப்பாடு எழாது. எனவே, எங்களது கடல் எல்லைக்குள் புகுந்து, கடல் வளங்களை நாசமாக்க வேண்டாம் என போராடும் தமிழக மீனவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அவர்கள் எல்லைத்தாண்டாவிட்டால் எவ்வித பிரச்சினையும் எழாது என்றார். தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு தொப்புள்கொடி உறவுகள் எனக்கூறுவதில் பயனில்லை – அமைச்சர் சந்திரசேகர் | Virakesari.lk
-
மாகாண சபை முறைமை என்பது தாம் வென்றெடுத்த உரிமையென தமிழர்கள் கருதுவதால் அந்த உரிமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைவைக்காது – அமைச்சர் சந்திரசேகர்
மாகாண சபை முறைமை என்பது தாம் வென்றெடுத்த உரிமை என தமிழர்கள் கருதுவதால் அந்த உரிமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைவைக்காது. இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். மக்களுக்கான எமது நேர்வழி அரசியல் பயணத்தின்போது எதற்கும் அஞ்சி, அடிபணியப்போவதில்லை. போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். ஏனெனில் மக்கள் சக்தி எமது பக்கம் எனவும் அவர் கூறினார். சீனா - இலங்கை நட்புறவின் பயனாக "சீனாவின் சகோதர பாசம்" எனும் வாசகத்துடன் யாழ். மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனாவின் உதவியில் உலருணவுப் பொதிகள் வழங்கப்படும் நிகழ்வு இன்றைய தினம் (10) யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலாளர் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டதோடு, இதில் இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி பொறுப்பதிகாரி ஜு யான்வேய் (Zhu Yanwei), வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரும் இணைந்துகொண்டு யாழ். மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 1070 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் அதிகாரிகள், ஏனைய உத்தியோகத்தர்கள், சீனத் தூதரகத்தின் ஏனைய அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் பின்னர் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், சீனாவின் சகோதரப்பாசம் தொடர வேண்டும். தேசிய மக்கள் சக்தி ஆட்சிபீடம் வந்து 80 நாட்களுக்கு மேல் ஆகிறது. இக்காலப்பகுதிக்குள் நாட்டை கட்டியெழுப்பும் பயணத்துக்கான அடித்தளம் இடப்பட்டு வருகிறது. இதற்குரிய ஆணையை வழங்கிய மக்களுக்கு எமது நன்றிகள். யாழ். மக்களும் தேசிய மக்கள் சக்தியை முதன்மைக் கட்சியாக தெரிவுசெய்துள்ளனர். அதற்காக மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வறுமை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல் உட்பட ஒட்டுமொத்த நாட்டையும் மேம்படுத்தவதற்கான திட்டமே தூய்மை ஸ்ரீலங்கா திட்டமாகும். அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ்வரும் மாகாண சபை முறைமை நீண்டு நிலைக்கக்கூடிய நிரந்தர தீர்வு என நாம் நம்பவில்லை. எனினும், மாகாண சபை முறைமையை தமக்கு கிடைத்த உரிமையாக தமிழ் மக்கள் நம்புகின்றனர். எனவேதான் மாகாண சபை முறைமை மீது கைவைக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண சபை முறைமையை அர்த்தமுள்ள முறைமையாக மாற்றியமைப்போம். இவ்வருடத்துக்குள் அல்லது அடுத்த வருடம் முற்பகுதியில் அதற்கான தேர்தல் நடத்தப்படும். சிறுபான்மையின மக்கள் உட்பட நாட்டு மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகின்ற புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும். அதேவேளை, மக்களுடன் கலந்துரையாடி, நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதம் ஏற்படாத வகையில் தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றார். மாகாண சபை முறைமை என்பது தாம் வென்றெடுத்த உரிமையென தமிழர்கள் கருதுவதால் அந்த உரிமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைவைக்காது – அமைச்சர் சந்திரசேகர் | Virakesari.lk
-
தமிழ்த்தேசியக்கட்சிகள் பொதுக்குறிக்கோளின் அடிப்படையில்; புதிய கூட்டமைப்பை உருவாக்கவேண்டும் - சி.வி.விக்கினேஸ்வரன்
10 Feb, 2025 | 07:19 PM தமிழ்த்தேசியக்கட்சிகள் இணைந்து பேசி தமது பொதுவான குறிக்கோள் எதுவென்று தீர்மானிக்கவேண்டும். அதனடிப்படையில் சகல தமிழ்த்தேசியக்கட்சிகளையும் உள்ளடக்கி புதியதொரு கூட்டமைப்பை உருவாக்கவேண்டும். அக்கூட்டமைப்பில் உள்ளடங்கும் பிரதிநிதிகள் தமிழர்களுக்கான ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். கேள்வி - பதில் பகுதியில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் தற்போதைய நிலை மிகப்பரிதாபகரமாக இருக்கிறது எனவும், தமிழ்த்தேசியம் மீண்டும் வலுப்பெற என்ன செய்யவேண்டும் எனவும் எழுப்பட்டிருக்கும் கேள்விக்கு அளித்திருக்கும் பதிலிலேயே சி.வி.விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: தமிழ்த்தேசியம் எனும் பதத்துக்கு பலவிதமான அரசியல் வியாக்கியானங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. உருத்திரகுமாரனின் நாடு கடந்த தமிழீழ அரசு ஜனநாயக, மதச்சார்பற்ற தமிழீழ அரசாங்கமொன்றை ஏற்படுத்தவேண்டும் என்ற முனைப்புடன் அதற்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களது தமிழ்த்தேசியம் பிரிவினை சார்ந்தது. அவர்கள் இனிமேல் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழமுடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். உள்நாட்டிலும், சர்வதேச நாடுகளிலும் இயங்கிவரும் வேறுபல தமிழர் அமைப்புக்களும் அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானமும் தமிழீழத்தையே வலியுறுத்தியதுடன், அதனையடுத்தே 6 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. பிரிவினை கோருவது சட்டப்படி குற்றமாக்கப்பட்டது. ஆகவே உள்நாட்டில் இயங்கிவரும் சகல தமிழ்த்தேசியக் கட்சிகளும் இப்போது தமது குறிக்கோள் சமஷ்டியே என்று கூறிவருகின்றன. அவர்கள் அனைவரும் எமது நாட்டுக்கு சமஷ்டி அரசியலமைப்பு அவசியம் எனும் ஒத்த முடிவை எடுத்திருக்கிறார்கள். எனது கட்சி மாத்திரம் கூட்டு சமஷ்டியை வலியுறுத்தியுள்ளது. வட, கிழக்கு மக்கள் வெளியகத்தரப்பினரின் தலையீடின்றி ஒரே நாட்டினுள் தம்மைத் தாமே ஆளும் உரித்தைப் பெறவேண்டும் என்பதே சகல தமிழ்த்தேசியக் கட்சிகளினதும் குறிக்கோளாகும். இலங்கையில் தமிழ்மொழி சுமார் மூவாயிரம் ஆண்டுகளாகப் பேசப்பட்டுவந்திருக்கிறது. ஆனால் அப்போது சிங்களவர் என்ற மக்கள் கூட்டம் இருக்கவில்லை. மாறாக தமிழ்மொழி பேசிய மக்கள் தான் 6 ஆம், 7 ஆம் நூற்றாண்டுகளில் சிங்களமொழி பேச முற்பட்டனர். பௌத்த மொழியான பாளி மொழி தமிழ்மொழியுடன் கலந்தமையினாலேயே சிங்களமொழி உருவானது. தமிழ்த்தேசியம் என்பது வட, கிழக்கு மாகாணங்கள் பாரம்பரியமாகத் தமிழ்பேசும் இடங்கள், அங்கிருப்பவர்கள் தமிழ்மொழியினால் பரிபாலிக்கப்படவேண்டியவர்கள், அவர்களுக்கு அந்தப் பாரம்பரிய நிலங்களின் தன்னாட்சி வழங்கப்படவேண்டும் என்பதை அடிப்படைக்கொள்கையாகக் கொண்டதாகும். தன்னாட்சி எனும்போது, அது நாட்டைப் பிரிப்பதாக அமையும் என்ற அச்சம் சிங்கள மக்களுக்கு உண்டு. ஆனால் உண்மையில் வட, கிழக்கில் பெரும்பான்மையினர் தமிழ்மொழி பேசுவோர் என்றதால், இந்தப் பிரிவினை ஏற்கனவே உண்டு என்பது புலப்படும். இதனை சிங்களத் தலைவர்களுக்குப் புரியவைத்து, தமிழ்பேசும் இடங்களும், அங்கு வாழும் மக்களும் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மேம்படுவதற்கு அரசியல் ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை உணர்த்துவதற்கு எமது அரசியல் பலம் மேம்படவேண்டும். எமக்குள் வேற்றுமைகள் இருந்தால் எமது பலம் குன்றிவிடும். ஆனால் உண்மையில் எமக்குள் குறிக்கோளில் வேற்றுமை இல்லை. மாறாக சுயநல சிந்தனைகளில் தான் வேற்றுமை உள்ளது. இன்றளவிலே தமிழ்த்தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தமது தனித்துவக்கட்சியின் முன்னுரிமையையே வலியுறுத்தி வருகிறார்கள். வட, கிழக்கு மக்கள் மற்றைய கட்சிகளைப் புறக்கணித்துத் தமது கட்சிக்கே வாக்களிக்கவேண்டும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் நடைபெற்றுமுடிந்த தேர்தலில் அந்த எதிர்பார்ப்புக்கு எதிராக மக்கள் தற்போதைய ஆளுங்கட்சிக்கு வாக்களித்தார்கள். தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கு முரணாக ஒற்றையாட்சியை வலியுறுத்திய அக்கட்சிக்கு தமிழர்கள் வாக்களித்தனர். எது எவ்வாறெனினுமு; கடந்த பாராளுமன்றத்தேர்தல் முடிவுகள் தமிழ் வாக்காளர்களின் விரக்தி மனப்பான்மையையே அடிக்கோடிட்டுக் காண்பிக்கின்றன. இந்நிலையில் தமிழ்த்தேசியக்கட்சிகள் இணைந்து பேசி தமது அரசியல் குறிக்கோள்கள் எவையென்பதை அறியவேண்டும். அதன்போது தனிப்பட்ட நலன்களைப் புறந்தள்ளி தமிழ் பேசும் மக்களின் நலன்கருதி தீர்மானம் மேற்கொள்ளவேண்டும். யதார்த்தமாக சிந்தித்து, வட, கிழக்கானது இலங்கையின் ஓரங்கமாகத் தொடர்ந்து இருப்பதே அதன் பாதுகாப்புக்கும், வருங்கால வாழ்க்கைக்கும் உசிதமானது என்ற எண்ணம் வேரூன்றிவிட்டால் தமிழ்த்தேசியக்கட்சிகள் பொதுவானதொரு அரசியல் குறிக்கோளை முன்வைப்பதில் சிக்கல் எதுவும் ஏற்படாது. அதனடிப்படையில் சகல தமிழ்த்தேசியக்கட்சிகளையும் உள்ளடக்கி புதியதொரு கூட்டமைப்பை உருவாக்குவது கடினமானதன்று. அதற்கமைய தமிழ்த்தேசியக்கட்சிகள் அனுபவமுள்ள படித்த, பண்புள்ள, சுயநலமற்ற பிரதிநிதிகளை புதிய கூட்டமைப்பில் உள்வாங்குவதற்கு வழியேற்படுத்தவேண்டும். உணர்ச்சிகளுக்கும், சுயலாபத்துக்கும் இடம்கொடுக்காது தமிழ் மக்களின் வருங்காலம் கருதி பேச்சுவார்த்தைகள் அறிவுபூர்வமாக அமையவேண்டும். ஒவ்வொரு கட்சியும் மூன்றுக்கு மேற்படாமல் தமது பிரதிநிதிகளை உடனடியாக சிபாரிசு செய்யவேண்டும். அவர்கள் இணைந்து தமக்குள் இருந்து ஒரு தவிசாளரை நியமிக்கவேண்டும். இக்குழு கட்சிகளின் சார்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும். பிரதிநிதிகள் அரசியல்வாதிகள் அல்லாததால், அரசாங்கமும் விடயம் அறிந்த உறுப்பினர்களை அல்லது அலுவலர்களை நியமிப்பார்கள். அவர்கள் இணைந்து முன்வைக்கும் முன்மொழிவு அனைத்துக் கட்சிகளாலும் பரிசீலிக்கப்படும். அதனைத்தொடர்ந்து தமிழ்மக்களுக்கு எவ்வாறான அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டும் என அரசாங்கம் சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்மானிக்கலாம். இதற்குரிய ஆரம்பகட்ட வேலைகளை எமது பல்கலைக்கழகப் புத்திஜீவிகள் ஆரம்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தமிழ்த்தேசியக்கட்சிகள் பொதுக்குறிக்கோளின் அடிப்படையில்; புதிய கூட்டமைப்பை உருவாக்கவேண்டும் - சி.வி.விக்கினேஸ்வரன் | Virakesari.lk
-
தையிட்டி விகாரையை அகற்ற முடியாது!; மாற்றுக் காணியே ஒரே தீர்வு!; அநுர அரசு திட்டவட்டம்
தையிட்டி விகாரை விவகாரம்: மக்களின் விருப்பமே எமது தீர்மானம்; இன,மத வாதத்துக்கு இடமில்லை - அமைச்சர் சந்திரசேகரர் 10 Feb, 2025 | 05:33 PM தையிட்டி விகாரை விடயத்தில் மக்களின் விருப்பத்துக்கு அமைவாக எமது தீர்மானம் இருக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மீண்டும் இனவாதம், மதவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். யாழ்.மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை (9) சீன அரசாங்கத்தின் உதவிப்பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் பங்கெடுத்திருந்த அவர் அதன்பின்னர் தையிட்டி விகாரை சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், முதலில் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் கருத்து என்னவென்பதை நாம் பார்க்க வேண்டும். தையிட்டியில் விகாரை கட்டப்படும்போது அதுதொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்காதவர்கள் தற்போது அந்தப்பிரச்சினையை பூதகரமாக தூக்கிப்பிடிக்கின்றார்கள். தையிட்டி விகாரை விடயத்தினை தூக்கிப்பிடிப்பவர்கள் உண்மையிலேயே அந்த விடயத்தினை முன்னெடுக்கின்றார்களா? இல்லை விரைவில் உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல் வரவிருப்பதால் அதற்கான துருப்புச்சீட்டாக இதனைப் பயன்படுத்தப் பார்க்கின்றார்களா? தையிட்டி விகாரை விடயம் இனவாதத்தினை, மதவாத்தினை தூண்டக்கூடியது. இனவாதத்தினையும், மதவாத்தினையும் மக்கள் தோற்கடித்திருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி, நாட்டின் அபிவிருத்தி வேகமாக முன்னெடுக்கப்படுகின்றது. ஆகவே அதுபற்றிக் கதைப்பதற்கு ஒன்றுமில்லை. அந்த வகையில் மதவாத்தினை இலகுவாகத் தூண்டி அதன் மூலமாக அரசியல் இலாபத்தைப் பெற்றுக்கொள்ளவே பார்க்கின்றார்கள். எவ்வாறாக இருந்தாலும் எமது அரசாங்கத்தின் கீழேயே இந்தப்பிரச்சினைக்கும் தீர்வினை எட்டுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். மக்களுடன் கலந்துரையாடி, மக்கள் பரிந்துரைக்கும் தீர்மானத்துக்கு செல்வதற்கு நாம் தயாராகவே உள்ளோம். விகாரை அமைக்கப்பட்டமை சட்டவிரேதமானதா இல்லையா என்பது தொடர்பில் நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைக்க முடியும். ஆனால், விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலமானது மக்களுடையது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதனால் அந்தக் நிலத்துக்குச் சொந்தக்காரர்களுக்கு மாற்றுக் காணிகளை அல்லது நட்டஈட்டை வழங்க வேண்டிய தேவையுள்ளது. விகாரையை உடைத்து நொருக்குவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்பது பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. ஆகவே சுமூகமான தீர்வொன்றிணை மேற்கொள்ள வேண்டும். இனவாதம்,மதவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கக் கூடாது. அதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்றார். தையிட்டி விகாரை விவகாரம்: மக்களின் விருப்பமே எமது தீர்மானம்; இன,மத வாதத்துக்கு இடமில்லை - அமைச்சர் சந்திரசேகரர் | Virakesari.lk
-
அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை இந்தியா கொண்டு வரும் ராணுவ விமானம் - நிலவரம் என்ன?
'வழியில் சடலங்களைப் பார்த்தோம்' - காடு, மலை, கடலைத் தாண்டி உயிரைப் பணயம் வைத்து அமெரிக்கா சென்ற இந்தியர்கள் ஹரியானாவின் குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த குஷ்ப்ரீத் சிங், ஆறு மாதங்களுக்கு முன்பு 45 லட்சம் ரூபாய் செலவழித்து அமெரிக்கா சென்றிருந்தார். குஷ்ப்ரீத் சிங்கின் தந்தை, தனது நிலம், வீடு மற்றும் கால்நடைகள் மீது கடன் வாங்கி குஷ்ப்ரீத்தை அமெரிக்காவுக்கு அனுப்பினார். ஆனால், தற்போது அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ள இந்தியர்களில் குஷ்ப்ரீத் சிங்கும் ஒருவர். ஜனவரி 22-ம் தேதி, தான் எல்லை தாண்டியதாகவும், பிப்ரவரி 2-ம் தேதி திருப்பி அனுப்பப்பட்டதாகவும் குஷ்ப்ரீத் கூறுகிறார். "தண்ணீர் குடித்துவிட்டு காட்டைக் கடக்கச் சொன்னார்கள். யாராவது பின்னால் விழுந்தால், திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை, உங்கள் பாதையில் முன்னோக்கிச் செல்லுங்கள், வழிகாட்டி செல்பவரைப் பின்பற்றுபவர்களால் மட்டுமே பாதையைக் கடக்க முடியும், பின்னால் விழுபவர்கள் எப்போதும் அங்கேயே தான் இருப்பார்கள்." என்று அவர்கள் கூறியதை விவரிக்கிறார் குஷ்ப்ரீத். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,Kamal Saini/BBC படக்குறிப்பு,குஷ்ப்ரீத் தனது பாஸ்போர்ட்டைக் காட்டி, அதில் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார் அமெரிக்காவில் பிடிபட்ட குஷ்ப்ரீத் 12 நாட்கள் ஒரு முகாமில் தங்க வைக்கப்பட்டார். இதுகுறித்து பேசிய அவர், "முதல் நாளில் எங்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவார்கள் என்று சொன்னார்கள், ஆனால் அவர்கள் எங்களை கேலி செய்கிறார்கள் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், அதில் அவர்கள் தீவிரமாக இருந்தார்கள், நாங்கள் தான் அதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டோம்." என்கிறார். ராணுவ விமானத்தில் அவர் எப்படி ஏற்றப்பட்டார், அப்போது எப்படி நடத்தப்பட்டார் என்பது குறித்து குஷ்பிரீத் விவரித்தார். "அவர்கள் எங்களுக்கு கைவிலங்கிட்டபோது, சூழலின் தீவிரத்தை உணர்ந்தோம். முதலில் அவர்கள் எங்களை வரவேற்பு மையத்துக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார்கள். நாங்கள் அங்கேயே விடப்படுவோம் என்று நினைத்தோம், ஆனால் நாங்கள் தரையிறங்கியபோது, எங்கள் முன் ஒரு ராணுவ விமானம் நிற்பதைக் கண்டோம்" என்று விவரிக்கிறார். குஷ்பிரீத் கடந்த சில நாட்களில் தான் எதிர்கொள்ள நேர்ந்ததை நினைத்து மிகவும் கவலையடைந்தவராகக் காணப்பட்டார். அமெரிக்காவை அடைய நிறைய பணம் செலவானது, மேலும் "எங்கள் பணத்தை நாங்கள் திரும்பப் பெற்றால், நாங்கள் இங்கே ஏதாவது வேலை செய்வோம்" என்று நம்பிக்கை தெரிவித்த அவர், ஆனால் இப்போது நாங்கள் வெளியே வேலை தேட மாட்டோம்" என்றும் கூறினார். குஷ்பிரீத் சிங்கின் தந்தை உணர்ச்சிவயப்பட்டு காணப்பட்டார். அழுதுகொண்டே, "எங்கள் பணத்தை எங்களுக்குத் திருப்பிக் கொடுங்கள், முழுத் தொகையையும் கொடுக்கவில்லை என்றாலும், குறைந்தபட்சம் பாதியையாவது கொடுங்கள்" என்றார். 'வழியில் இறந்த உடல்களையும் பார்த்தேன்' பட மூலாதாரம்,Pradeep Sharma/BBC படக்குறிப்பு,சுக்பால் சிங் நான்கு மாதங்களுக்கு முன்புதான் வீட்டை விட்டு வெளியேறினார் பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டத்தின் உர்மர் தாண்டாவைச் சேர்ந்த சுக்பால் சிங், காடுகள் மற்றும் கடல் வழியாக அமெரிக்காவை அடைந்ததாகக் கூறினார். சுக்பால் சிங், பிபிசி நிருபர் பிரதீப் சர்மாவிடம், வீட்டை விட்டு வெளியேறி நான்கு மாதங்கள் ஆகிவிட்டதாகக் கூறினார். வழியில் உள்ள சிரமங்களைப் பற்றி அவர் கூறுகையில், "யாரும் தவறான பாதையில் செல்ல வேண்டாம், முடிந்தால் அங்கு செல்லவே வேண்டாம் என்று எல்லோரிடமும் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். இங்கே உணவு கிடைத்தால் அதை மட்டும் சாப்பிடுங்கள். அங்கு உணவு இல்லை. மேலும், அவர்கள் உங்கள் பணத்தை பறித்துச் செல்கிறார்கள், பாதுகாப்பும் இல்லை" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "அவர்கள் எங்களை முதலில் இத்தாலிக்கு அழைத்துச் சென்றனர், பின்னர் எங்களை லத்தீன் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றனர். நாங்கள் சுமார் 15 மணிநேரம் ஒரு படகில் பயணம் செய்தோம். மலைகளில் 45 கிலோமீட்டர் தூரம் நடந்தோம், அங்கே யார் விழுந்தாலும், அவர்களை அங்கேயே விட்டுவிடுவார்கள். வழியில் பல சடலங்களைப் பார்த்தோம்" என்று பகிர்ந்தார். பட மூலாதாரம்,Pradeep Sharma/BBC படக்குறிப்பு,அமெரிக்கா செல்ல ஹர்விந்தர் சிங் ரூ.42 லட்சம் செலவளித்துள்ளார் ஹோஷியார்பூர் மாவட்டத்தின் தாசுவா நகரைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங்கின் கதையும் இதே போன்றதுதான். முதலில் டெல்லிக்கும், பின்னர் கத்தாருக்கும், அங்கிருந்து பிரேசிலுக்கும் அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறுகிறார். "நான் பிரேசிலில் ஒரு ஹோட்டலில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன், பின்னர் அவர்கள் என்னிடம் பெருவிலிருந்து உங்களுக்கு விமானம் இருப்பதாக சொன்னார்கள், நாங்கள் பேருந்தில் பெரு சென்றோம், ஆனால் அங்கு விமானம் இல்லை, அங்கிருந்து நாங்கள் டாக்ஸியில் சென்றோம்." என்றார். இதற்கு 42 லட்சம் ரூபாய் செலவிட்டதாக ஹர்விந்தர் சிங் கூறுகிறார். "நாங்கள் பனாமாவை அடைந்தபோது சிக்கிக்கொண்டோம். அங்கு ஒன்றிரண்டு பேர் இறந்தனர், ஒருவர் கடலில் மூழ்கி இறந்தார், இன்னொருவர் காட்டில் இறந்தார்," எனக் குறிப்பிடுகிறார் ஹர்விந்தர் சிங். செல்லுபடியாகும் விசா இருந்தபோதிலும் திருப்பி அனுப்பப்பட்டது ஏன்? பட மூலாதாரம்,Gurminder Grewal/BBC படக்குறிப்பு,முஸ்கானுக்கு செல்லுபடியாகும் இங்கிலாந்து விசா இருந்தது, ஆனாலும் அவர் திருப்பி அனுப்பப்பட்டார் பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ள ஜாக்ரோன் பகுதியைச் சேர்ந்த முஸ்கான் என்பவர் மூன்றாண்டு படிப்பு விசாவில் பிரிட்டன் சென்றிருந்தார். அவருக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கான விசா மீதமுள்ளது, ஆனால் அவர் அமெரிக்கா சென்றவுடன், இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். பிபிசிக்கு செய்திகள் வழங்கும் நிருபர் குர்மிந்தர் கிரேவாலின் கருத்துப்படி, அவர் ஜனவரி 5, 2024 அன்று பிரிட்டனுக்குச் சென்றார். முஸ்கான் கூறுகையில், "நாங்கள் அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள துஹாவானாவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தோம். காவல்துறையினர் எங்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் வந்து எங்களை அழைத்துச் செல்வதாகக் கூறினர். அவர்கள் எங்களை 10 நாட்கள் தங்களுடனேயே வைத்திருந்து, எங்களை மிகவும் நன்றாக உபசரித்தனர்" என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "கலிஃபோர்னியா காவல்துறையினர் எங்களை அழைத்துச் செல்ல வந்தார்கள். பிறகு எங்களை இந்தியாவுக்கு அனுப்பினர். இங்கு வந்த பிறகுதான் நாங்கள் இந்தியாவுக்கு வந்திருப்பதையே உணர்ந்தோம். அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டோம். நாங்கள் முறையான விசாவில் தான் சென்றோம். எந்த எல்லையையும் தாண்டவோ அல்லது எந்த சுவற்றிலும் ஏறியோ செல்லவில்லை" என்கிறார் முஸ்கான். அது மட்டுமின்றி, "செல்லுபடியாகும் பிரிட்டிஷ் விசா என்னிடம் உள்ளது, ஆனால் நாங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு எங்கும் செல்ல முடியாது என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்றும் குறிப்பிட்டார். "குழந்தையின் எதிர்காலத்தை உருவாக்குவதற்காக நாங்கள் அவரை அனுப்பியிருந்தோம், ஆனால் அவர் துன்புறுத்தப்பட்டுள்ளார். அரசாங்கம் இப்போது இதில் கவனம் செலுத்த வேண்டும். கடன் வாங்கி குழந்தையை அனுப்பியுள்ளோம்" என்று கவலை தெரிவித்தார் முஸ்கானின் தந்தை ஜெகதீஷ் குமார். முஸ்கானின் வீட்டுக்குச் சென்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ சரப்ஜித் கவுர் மனுகே, "இன்னும் இரண்டு வருடம் செல்லுபடியாகும் பிரிட்டிஷ் விசா அந்தப் பெண்ணிடம் இருந்தாலும் அவர் திருப்பி அனுப்பப்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்றார். முஸ்கானின் குடும்பத்துடன் தங்களுக்கு நல்ல உறவு இருப்பதாக மனுகே கூறுகிறார். "எங்கள் மகள் துஹாவானாவைப் பார்க்கச் சென்றார், அவர்களே அவரை அங்கு அழைத்துச் சென்றார்கள், அதன் பிறகு எல்லாம் நடந்துள்ளது. அமெரிக்கா போன்ற ஒரு நாட்டிலிருந்து இதுபோன்ற விஷயங்களை எதிர்பார்க்கவில்லை" என வருத்தம் தெரிவித்தார். 11 நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றவர் பட மூலாதாரம்,BBC/Gurpreet Chawla படக்குறிப்பு,ஜஸ்பால் சிங் அமெரிக்காவை அடைந்து 11 நாட்கள் தான் ஆகியிருந்தது பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஃபதேகர் சூரியன் பகுதியைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் பிடிபட்டு திருப்பி அனுப்பப்பட்டபோது அமெரிக்காவில் 11 நாட்கள் மட்டுமே இருந்துள்ளார். பிபிசி செய்தியாளர் குர்பிரீத் சாவ்லாவிடம் பேசிய அவர், "அமெரிக்கா செல்லும் கனவு கலைந்து விட்டது" என்று கனத்த இதயத்துடன் கூறினார். அவரது அமெரிக்க பயணம் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அதைத் தொடர்ந்து, இந்தக் கனவுக்காக அவர் 40 லட்ச ருபாய் இழந்துள்ளார். புதன்கிழமையன்று, அமெரிக்க ராணுவ விமானம் மூலம் 104 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அந்த 104 இந்தியர்களில் ஜஸ்ப்ரீத்தும் ஒருவர். 2022 ஆம் ஆண்டு பார்வையாளர் விசாவில் இங்கிலாந்து சென்றதாகவும், அங்கு ஸ்பெயினில் இருந்து பஞ்சாபி ஏஜென்ட் ஒருவரை தொடர்புகொண்டதாகவும் ஜஸ்பால் சிங் கூறுகிறார். பின்னர் 2024ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஐரோப்பாவை அடைந்தார் ஜஸ்பால் சிங். இதற்குப் பிறகு, வெவ்வேறு நாடுகளில் சுமார் 6 மாதங்கள் கழித்த பிறகு, பனாமா காடுகளின் வழியாக அமெரிக்காவுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடித்துள்ளார். ஜஸ்பால் சிங் கூறுகையில், "கழுதையில் பயணம் செய்த அனுபவம் மிகவும் ஆபத்தானது. அங்கு சிறுவர்கள் மட்டுமின்றி பெண் குழந்தைகளின் உடல்கள் உருண்டு கிடப்பதையும் கண்டேன், எலும்புக்கூடுகளையும் பார்த்தேன். பயணத்தின்போது எங்களுக்கு சிறிது ரொட்டியும், ஒன்றிரண்டு பிஸ்கட்டுகளும் மட்டுமே கிடைத்தன" என தனது பயணத்தை விவரித்தார். அமெரிக்க எல்லையைத் தாண்டியதும், அமெரிக்க ராணுவம் தன்னைக் கைது செய்ததாக ஜஸ்பால் கூறுகிறார். மேலும் " பல வழிகளில் நாங்கள் சித்திரவதை செய்யப்பட்டோம். விமானத்தில் ஏறிய பிறகு, கைகளும் கால்களும் கட்டப்பட்டன. விமானம் பல இடங்களில் நின்றது, ஆனால் அமிர்தசரஸை அடைந்த பிறகுதான் என் கைகளும் கால்களும் விடுவிக்கப்பட்டன" என தெரிவித்தார் . "நிலத்தை விற்ற பிறகும், என் மகனால் எங்கும் செல்ல முடியவில்லை" பட மூலாதாரம்,Kamal Saini/BBC படக்குறிப்பு,தனது கைகள் மற்றும் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக ராபின் ஹண்டா கூறினார் ஹரியாணா மாநிலம் குருக்ஷேத்ராவில் வசிக்கும் ராபின் ஹண்டாவும் தனது கனவை நிறைவேற்றுவதற்காக 7 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றார். இந்நிலையில், அவரும் திருப்பி அனுப்பப்பட்டார். ஹண்டா கணினி பொறியியல் படித்துவிட்டு சிறந்த எதிர்காலத்தைத் தேடி அமெரிக்கா சென்றார். தொடர்ந்து பேசிய அவர், "நான் அமெரிக்கா செல்வதற்காக 7 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினேன். ஒரு மாதமாக வழியில் பல இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டேன். வழியில் பல சிரமங்களை சந்தித்தேன். சில சமயங்களில் எனக்கு உணவு கிடைத்தது, சில சமயங்களில் கிடைக்கவில்லை. கடலிலும், சில நேரங்களில் படகுகளிலும் இருந்தேன். சில இடங்களில் பலர் என் பணத்தைப் பறித்துச் சென்றனர், இதுபோல பல வகையான பிரச்னைகளை எதிர்கொண்டேன்" என ஹரியாணாவைச் சேர்ந்த பிபிசி செய்தியாளர் கமல் சைனியிடம் ராபின் ஹண்டா தெரிவித்தார். "ஜனவரி 22-ம் தேதி நான் எல்லையைத் தாண்டிவிட்டேன். பின்னர் நாங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முடித்து ராணுவத்திடம் சரணடைந்தோம். அவர்கள் எங்களை ஒரு முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நாங்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்பட்டோம்" என்றும் குறிப்பிட்டார் ராபின் ஹண்டா . அதன் பிறகு, "முகாமிலிருந்து எங்களை எங்கு அழைத்துச் செல்வார்கள் என்று கூட எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை, எங்கள் கைகளும் கால்களும் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தன. எங்கள் முன் ராணுவ விமானம் நிற்பதைப் பார்த்தபோது, நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்" என்பதையும் அவர் பகிர்ந்தார். மேலும், "நான் யாரையும் இந்த வழியில் வெளியே செல்ல அறிவுறுத்த மாட்டேன். இது மிகவும் கடினமான பாதை." என ஹண்டா இப்போது கூறுகிறார். தனது மகனை அனுப்புவதற்காக ரூ.45 லட்சம் செலவு செய்ததாக ராபின் ஹண்டாவின் தந்தை தெரிவித்துள்ளார். ராபின் ஹண்டாவின் தந்தை கூறுகையில், "ஏஜென்சி எங்களை ஏமாற்றி விட்டது. மகன் ஒரு மாதத்தில் வந்து விடுவான் என்று சொன்னார்கள், ஆனால் நாங்கள் 6-7 மாதங்கள் வீடு வீடாக அலைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் எங்களை சித்திரவதை செய்தனர், மின்சார அதிர்ச்சி கூட கொடுத்தனர்." என்கிறார். "எங்கள் குழந்தையை அடிக்கும் வீடியோக்களும் எங்களிடம் உள்ளன. நல்ல வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து, எங்கள் நிலத்தை விற்றோம், ஆனால் அது நடக்கவில்லை" என்று வருத்தத்துடன் தெரிவித்தார். நடந்தவற்றை அவர் விவரிக்கும்போது, ராபின் ஹண்டாவின் பாட்டி பியார் கவுர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார். "பசியாலும் தாகத்தாலும் என் மகன் அவதிப்பட்டார்" என்றும் கூறினார். மேலும், "அவர் நிலத்தை விற்று ராபின் ஹண்டாவை அனுப்பினார். நிலத்தை விற்றதால் ஹண்டாவின் தாத்தாவும் நோய்வாய்ப்பட்டார். இது அவரது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், இப்போது அவருக்கு எதுவும் தெரியாது" என்று தெரிவித்தார். 'அமெரிக்கா செல்ல 50 லட்ச ரூபாய் செலவழித்தேன்' படக்குறிப்பு,ஜஸ்விந்தர் சிங் கைது செய்யப்பட்டபோது 22 நாட்களுக்கு முன்புதான் அமெரிக்காவை அடைந்திருந்தார் பஞ்சாபின் ஃபதேஹ்கர் சாஹிப் மாவட்டத்தில் உள்ள கஹான்புரா கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்விந்தர் சிங், அக்டோபர் 2024 இல் அமெரிக்கா சென்றார். "இரவு நேரத்தில் காவல்துறை அதிகாரிகளால், ஜஸ்விந்தர் வீட்டில் இறக்கிவிடப்பட்டார்," என ஜஸ்விந்தர் சிங்கின் மாமா கர்னைல் சிங் பிபிசியிடம் கூறினார். 'நாங்கள் அமெரிக்காவிலிருந்து கைவிலங்குகள் போடப்பட்டு விமானத்தில் அழைத்து வரப்பட்டோம்' என அவர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். ஜஸ்விந்தர் சிங் கைது செய்யப்பட்ட 22 நாட்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. "ஜஸ்விந்தர் வீட்டுக்கு வந்ததிலிருந்து அவரது உடல்நிலை மோசமாக உள்ளது, ஒருவேளை அவர் மன அழுத்தத்தில் இருக்கலாம்" என்று கர்னைல் சிங் கூறுகிறார். இந்நிலையில், ஜஸ்விந்தர் சிங்குக்கு காலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து லூதியானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். "முகாமில் சாப்பிட எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும், பாதி ஆப்பிள் அல்லது ஜூஸ் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும், அதுவும் எப்போதாவது மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் ஜஸ்விந்தர் குடும்பத்தினரிடம் கூறினார்," என்பதையும் அவர் குறிப்பிட்டார். ஜஸ்விந்தர் சிங்குக்கு ஒரு மூத்த சகோதரர் உள்ளார், இரு சகோதரர்களுக்கும் சொந்தமாக நிலம் உள்ளது. அங்கே அவர் விவசாயம் செய்து வந்தார். அதனையடுத்து, கடந்த ஆண்டு ஒரு ஏஜென்ட் மூலம் அமெரிக்கா செல்ல முடிவு செய்தார். அமெரிக்கா செல்ல அவரது குடும்பம் சுமார் 50 லட்சம் ரூபாய் செலவிட்டதாக அவர் குறிப்பிட்டார். "இந்தப் பணத்துக்காக, நாங்கள் எங்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து உறவினர்களிடமிருந்து நிறைய பணம் கடன் வாங்கியிருந்தோம்" என வருத்தத்துடன் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c863dvqeq87o
-
சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?
எத்தனை பேருக்கு இதை இணைத்தது பிழம்பா என்று சந்தேகம் வந்தது?😀😀
-
அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை இந்தியா கொண்டு வரும் ராணுவ விமானம் - நிலவரம் என்ன?
‘கைவிலங்கு’ விவகாரம்: அமெரிக்காவிடம் கவலை தெரிவித்த இந்தியா! புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள், மோசமாக நடத்தப்பட்டது குறித்து இந்தியா தனது கவலையை அமெரிக்காவுக்கு தெரிவித்துள்ளது என்று வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “அமெரிக்க அதிபரின் அழைப்பின் பேரில் பிப்ரவரி 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி அங்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது. ட்ரம்பின் இரண்டாவது பதவிக் காலம் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், அமெரிக்காவுக்குச் செல்லும் முதல் சில உலகத் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர். புதிய நிர்வாகம் பதவியேற்ற மூன்று வாரங்களுக்குள் பிரதமர், அமெரிக்காவுக்கு வருகை தர அழைக்கப்பட்டிருப்பது, இந்திய - அமெரிக்க உறவின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. புதிய நிர்வாகத்துடன் பரஸ்பர ஆர்வமுள்ள அனைத்துத் துறைகளிலும் ஈடுபடுவதற்கு இந்தப் பயணம் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாக இருக்கும். இந்தப் பயணத்தின்போது அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த பிரமுகர்களும் பிரதமர் மோடியைச் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் வணிகத் தலைவர்கள் மற்றும் இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடும் வாய்ப்பையும் அவர் பெறுவார். அதிபர் ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை பிரதமர் மோடி அமெரிக்காவுக்குப் பயணம் செய்தார். இந்த முறை, அவரது தேர்தல் வெற்றிக்குப் பிறகு, பிரதமர் மோடி அவரை அழைத்து வாழ்த்து தெரிவித்த முதல் உலகத் தலைவர்களில் ஒருவர். பதவியேற்புக்குப் பிறகு பிரதமர் மீண்டும் அவரை அழைத்தார். அந்த சந்தர்ப்பத்தில்தான் அவர்கள் மிக விரைவில் சந்திக்க ஒப்புக்கொண்டனர்" என்று தெரிவித்தார். அப்போது, அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் மோசமாக நடத்தப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த விக்ரம் மிஸ்ரி, "நாடு கடத்தல் பிரச்சினையில் இந்தியா தனது கவலைகளை அமெரிக்காவிடம் பதிவு செய்துள்ளது. இதில், உண்மையான பிரச்சினை என்பது சட்டவிரோதக் குடியேற்றத்தை மேற்கொள்ள அப்பாவிகளைத் தவறாக வழிநடத்துவதுதான். இதைச் செய்பவர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும். நாடு கடத்தப்படுபவர்களை அழைத்துக் கொண்டு மேலும் பல அமெரிக்க விமானங்கள் வரக்கூடும். 487 இந்திய குடிமக்கள் இப்போது நாடு கடத்தப்படுவதற்காக காத்திருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது" என்று தெரிவித்தார். பின்னணி என்ன? - அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இதில் 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்கும். ராணுவ விமானத்தில் வந்த அவர்கள் நேற்று முன்தினம் பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கினர். இது தொடர்பான வீடியோவை அமெரிக்க எல்லை பாதுகாப்பு ரோந்து படையின் தலைவர் மைக்கேல் பாங்க் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில் இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. அதோடு மைக்கேல் பாங்க் வெளியிட்ட பதிவில், “சட்டவிரோத ஏலியன்களை இந்தியாவுக்கு வெற்றிகரமாக திருப்பி அனுப்பி உள்ளோம். இது மிக நீண்ட தொலைவு பயணம். சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நீங்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தால், நிச்சயமாக விரட்டியடிப்போம்” என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்தியா திரும்பிய பஞ்சாபை சேர்ந்த ஜஸ்பால் சிங் கூறும்போது, “வேலைவாய்ப்புக்காக ஒரு ஏஜெண்டிடம் ரூ.42 லட்சம் அளித்து அமெரிக்கா சென்றேன். கத்தார், பிரேசில், பெரு, கொலம்பியா, பனாமா, மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்தேன். தற்போது கை, கால்களில் விலங்கிடப்பட்டு கைதி போல இந்தியாவுக்கு திரும்பி உள்ளேன்” என்று தெரிவித்தார். பெயர் வெளியிட விரும்பாத நாடு திரும்பிய இந்தியர்கள் கூறும்போது, “சுமார் 40 மணி நேர விமான பயணத்தில் போதிய உணவு வழங்கப்படவில்லை. கழிப்பறையை பயன்படுத்த முடியவில்லை. அமெரிக்க அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் செயல்படவில்லை” என்று குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது. மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டது ஏன்? இந்தியர்களை தீவிரவாதிகளை போன்று நடத்தியது ஏன் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக மாநிலங்களவையில் விரிவான விளக்கம் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “வெளிநாடுகளில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை திரும்ப அழைத்துக் கொள்வது அந்தந்த நாடுகளின் கடமை. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பப்படுவது புதிது கிடையாது. இது ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் கை, கால்களில் விலங்கிடுவது அந்த நாட்டின் சட்டம். எனினும் இந்தியர்களை திருப்பி அனுப்பும்போது அவர்களை கண்ணியமாக நடத்துவது தொடர்பாக அமெரிக்க அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களில் ஆண்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. பெண்கள், குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை” என்றார். அதேவேளையில், இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்ட விவகாரம் தொடர்பாக இருவரும் விரிவான ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின இதுதொடர்பாக அமெரிக்க அரசுடன் தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ‘கைவிலங்கு’ விவகாரம்: அமெரிக்காவிடம் கவலை தெரிவித்த இந்தியா! | MEA flags mistreatment of Indian illegal migrants deported from US says Vikram Misri - hindutamil.in
-
சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?
“சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?” எனும் கேள்வி, தமிழக அரசியல் களத்தில் முன்னெப்போதையும் விடத் தற்போது அதிகமாகவே கேட்கப்படுகிறது. இதுவரை அரசியல் தலைவர்கள் யாரும் கையாளாத, சாமானியர்களுக்கு நெருக்கமான பேச்சு மொழியைச் சீமான் கைக்கொண்டதே காரணம் என்பதை, அவரது மேடைப் பேச்சுகளைத் தொடர்ந்து அவதானிக்கும் எவரும் உணரமுடியும். வெகுமக்களுக்கான நல அரசியலிலிருந்து புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலைச் சாமானியர்கள் அரசியல் பேசுவதையே தவிர்த்து, அது அறிஞர்களுக்கானது, பேரறிஞர்களுக்கானது என்று, கிட்டத்தட்ட வாக்கு செலுத்துவதைத் தவிர அரசியல் விருப்பற்று ஒதுக்கிய வாழப் பழகினர். தங்களையொத்த குரலற்றவர்கள், உரிமை மறுக்கப்பட்டவர்கள் துன்புறுவது குறித்துப் பேசவும் அவர்களுக்காகக் குரல்கொடுக்கத் துணிவற்றும் வாழும் நிலையே அவர்களிடம் இருந்து வந்துள்ளது. இப்படிப்பட்ட தருணத்தில்தான் கடந்த 2009-இல், தமிழ்நாட்டின் தொப்புள் கொடி மனிதர்களான சாமானிய ஈழத் தமிழர்கள் 70 ஆயிரம் பேர் இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டனர். ‘முள்ளிவாய்க்கால் படுகொலை’ என்று ஒட்டுமொத்த உலகமும் ஓர் இனப்படுகொலைக்குப் பெயர் சூட்டிவிட்டு, நீதிகேட்டு ஈனக்குரல் எழுப்பிய எஞ்சியிருந்த இலங்கைத் தமிழர்களுக்கு மவுனத்தை மட்டும் பதிலாக அளித்தது. அந்த ‘மாஸ் கில்லிங்’ இனப் படுகொலையில் இதயம் நொறுங்கி ரத்தம் கொதித்த ஒருவனின் நீதி கேட்கும் குரல், கோபம் கொந்தளிக்கும் எளியவர்களுக்கான மொழியாடலாக வெடித்துச் சிதறத் தொடங்கியது. அந்த மொழியும் குரலும்தான் சீமானுடையது... சாமானிய வியாபாரிகள், தினக்கூலிகள், சீரியல் பார்க்கும் பெண்கள், சினிமாவில் அடிமைப்பட்டுக் கிடந்த இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் என்று ஒரு கூட்டம் சீமானின் அந்த மொழியாடலால் ஈர்க்கப்பட்டு, மொழிவழி தேசியமும் அதன் வழியான அரசியல் இறையான்மையும் தமிழர்களுக்கும் உரியதே; அதை ஏன் இழந்தோம் என அறிந்து தெளிந்து அரசியல் கற்றுக்கொண்டு, சீமான் பேசுவதைக் கூர்ந்து கேட்கத் தொடங்கியது. சீமான் தொடங்கிய நாம் தமிழர் கட்சியில் இணையாவிட்டாலும் அந்த ஜனநாயக அரசியல் அமைப்பின் பெரும் ஆதரவு சக்தியாக அவர்களை உருமாற்றியிருக்கிறது. அந்த வகையில், சீமானைத் தங்களுடைய அரசியல் எதிரியாகக் கருதும் யாரும், ‘சீமானின் குரல் என்பது சீமான் என்கிற தனி மனிதனின் குரல் அல்ல; அது உரிமையிருந்த, வாய்ப்பிழந்த, வேலையும் அதிகாரமும் மறுக்கப்பட்ட பெரும்பான்மையான தமிழர்களின் குரல்’ என்பதை அறிந்தே உள்ளனர். திராவிடக் கட்சிகளின் திராவிட மாடல் அரசியல், விஜய் முன்னெடுத்துள்ள திராவிட - தமிழ் தேசிய அரசியல், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு நடுவேதான் தமிழ்த் தேசியமும் வீறுகொண்டு வளர்ந்து வருகிறது. அந்த வளர்ச்சியின் ஆணிவேராக இருக்கிறது சீமான் முன்வைக்கும் ‘உரிமை இழந்தவர்களுக்கான அரசியல்’. அதில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு புதிய புரிதலோடு நாம் தமிழர் கட்சியையும் அதன் முக்கிய இலக்கான தமிழரின் அரசியல் இறையாண்மையை மீட்டெடுத்தல் என்பதையும் நோக்கி தனது மொழியாடலைக் கூர் திட்டி வருகிறார். அந்தக் கூர்தீட்டலில் இப்போது பெரியார் ஈ.வே.ராவை மறுதளித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. பெரியார் மறுப்பையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முதன்மைப் பிரச்சாரமாகவும் மேற்கொண்டது. பெரியார் மறுப்பைச் சாமானியர்களுக்கான மொழியில் சீமான் முன்வைத்த காரணத்தாலேயே இன்று வெகுமக்களிடம் அது பேசுபொருளாகியிருக்கிறது. பெரியாரைக் கடந்த காலத்தில் எத்தனையோ பேர் விமர்சித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் சட்டை செய்யப்படாத எதிர்ப்பு, இப்போது எழக் காரணம், சீமானின் எளியவர்களுக்கான மொழியாடலே. அந்த மொழியாடலே அவரது அரசியல் எதிரிகளுக்கு கோபத்தையும் பதற்றத்தையும் உருவாக்கிவிட்டது. - சந்திரன் ராஜா - ஒரு தமிழ் தேசியர், அரசியல் விமர்சகர். | தொடர்புக்கு: Krishjai2006@gmail.com சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்? | about seeman way of speeching was explained - hindutamil.in
-
ரஸ்ய உக்ரைன் போர்முனையில் 56 இலங்கையர்கள் இதுவரை பலி
Freelancer / 2025 பெப்ரவரி 07 , பி.ப. 02:04 - 0 - 44 கடந்த ஜனவரி 20ஆம் திகதி வரையில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். ரஷ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்தார். எனினும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதின், ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளவர்கள் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவிப்பதாக சுட்டிக்காட்டினார். இதேவேளை ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள வடக்கைச் சேர்ந்தவர்கள் தற்போது உயிருடன் உள்ளார்களா அல்லது பாதுகாப்பாக உள்ளார்களா என்பதைத் தெளிவுபடுத்துமாறும் தற்போது உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை வெளிப்படுத்துமாறும் சிறிதரன் கேட்டுக்கொண்டார். R Tamilmirror Online || ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் மரணம்
-
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏஐ சாட்போட் மூலம் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது
07 Feb, 2025 | 12:37 PM ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயற்கை நுண்ணறிவால் (Artificial intelligence) இயங்கும் ‘யான’ (Yaana) என்ற சாட்போட் ஊடாக வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயற்கை மொழி செயலாக்க தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து பயணிகளின் கேள்விகளுக்கு 'யானா' சாட்போட் பதிலளிக்கிறது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் சர்வதேச விற்பனை மற்றும் விநியோகத் தலைவர் திமுத்து தென்னகோன் தெரிவிக்கையில், ‘யான’ ஏஐ சாட்போட் சுமார் 12,000 பயணிகளின் கேள்விகளுக்கு 88 சதவீதம் சுயாதீனமாக பதிலளித்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. குறித்த வாடிக்கையாளர் சேவை சாட்போட் கோட்ஜென் இன்டர்நேஷல் மென்பொருள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது. இதனை தற்போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன இணையதளத்தில் பயன்படுத்தலாம். புதிய சாட்போட் ஆங்கிலம், பிரஞ்சு மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏஐ சாட்போட் மூலம் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது | Virakesari.lk
-
இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
07 Feb, 2025 | 12:40 PM புதுடெல்லி: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை மீண்டும் தாயகம் அழைத்து வரக் கோரி தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கை வசம் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி, "இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து துன்புறுத்தி வருகின்றனர். தற்போது கிட்டத்தட்ட 97 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சருக்கும் பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அவர் இங்கு வரும் ஒவ்வொரு முறையும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமரிடம் வலியுறுத்துகிறார். இலங்கை கடற்படையினர் நமது மீனவர்களின் கிட்டத்தட்ட 210 படகுகளை எடுத்துச் சென்றுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் தங்கள் படகுகள் இல்லாமல் என்ன செய்ய முடியும்? இது தமிழ்நாட்டில், குறிப்பாக மீனவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. அவர்களின் முழு வாழ்வாதாரம், குடும்பம் மற்றும் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. மீனவர் குழுக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க குழுக்களை அமைப்பதாக உறுதியளித்த மத்திய அரசு, இதுவரை இது குறித்து எதுவும் செய்யவில்லை. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அவர்களை விடுவிக்க அவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும். மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்." என்று தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடந்த 3ம் தேதி கைது செய்தனர். முன்னதாக, ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜனவரி 26-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 34 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. கடந்த ஒரு மாத காலத்தில் 5 வெவ்வேறு சம்பவங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 63 மீனவர்கள் மற்றும் 5 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2024-ம் ஆண்டில் 36 வெவ்வேறு சம்பவங்களில் 530 மீனவர்கள் மற்றும் 71 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கை சிறைகளில் 97 மீனவர்கள் உள்ளனர். அதோடு, அவர்களின் 216 மீன்பிடிப் படகுகளும் மீட்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், மீனவர்கள் அச்சத்துடனேயே மீன்பிடிக்கச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களின் வலைகளை சேதப்படுத்துவது, அவர்கள் பிடித்த மீன்களை பறிமுதல் செய்வது போன்ற அராஜகங்களை செய்து வந்த இலங்கை கடற்படை, கடந்த மாதம் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தியது. இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk
-
விடாமுயற்சி Review: அஜித் ‘க்ளாஸ்’ + மேக்கிங் ‘ஸ்டைலிஷ்’, ஆனால்..!
இரண்டு ஆண்டுகளாக ரசிகர்களின் தீவிர காத்திருப்புக்குப் பிறகு ஒருவழியாக வெளியாகியுள்ளது ‘விடாமுயற்சி’ திரைப்படம். ட்ரெய்லர், பாடல்கள் பெரிதாக ஹைப் எதுவும் ஏற்றவில்லை என்றாலும், அஜித் என்ற நடிகருக்காக பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் அதற்கு நியாயம் செய்ததா என்று பார்க்கலாம். அஜர்பைஜான் நாட்டில் காதல் திருமணம் கொண்ட அர்ஜுன் (அஜித்) - கயல் (த்ரிஷா) தம்பதியின் வாழ்க்கையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு விரிசல் ஏற்படுகிறது. இருவரும் பிரிந்துவிடுவதாக முடிவெடுத்த தனது மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் கொண்டு போய் விடுவதற்காக காரில் அழைத்துச் செல்கிறார் அர்ஜுன். செல்லும் வழியில் ஓரிடத்தில் கார் பிரேக்டவுன் ஆகிறது. அந்த வழியாக ஒரு டெலிவரி டிரக்கில் வரும் ரக்ஷித் (அர்ஜுன்), தீபிகா (ரெஜினா) தம்பதி, அவர்களுக்கு உதவும் பொருட்டு த்ரிஷாவை அழைத்துச் சென்று பக்கத்தில் இருக்கும் ஒரு கஃபேயில் இறக்கிவிடுவதாக உறுதி அளிக்கின்றனர். கார் சரியானதும் அந்த கஃபேவுக்கு செல்லும் அர்ஜுன், அங்கு தனது மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைகிறார். பல இடங்களில் தேடி அலைகிறார். இந்த தேடும் படலத்தில் பல முடிச்சுகள் அவர் முன்னால் அவிழ்கின்றன. மனைவியை அவரால் கண்டுபிடிக்க முடிந்ததா என்பதே ‘விடாமுயற்சி’யின் திரைக்கதை. இயக்குநர் மகிழ் திருமேனி இந்தப் படத்துக்கான பேட்டிகளில் சொன்னது போலவே இது வழக்கமான அஜித் படம் அல்ல. ஓரிரு இடங்களை தவிர படத்தில் எந்தவித கமர்ஷியல் அம்சங்களும் இல்லை. இதனை முதலிலேயே மனதில் கொள்ளவேண்டியது அவசியம். படத்தின் முதல் காட்சியிலேயே எந்தவித ஆர்ப்பாட்டமோ, அலப்பறையோ, பில்டப்போ இல்லாமல் மிக மிக சாதாரணமாக அறிமுகம் ஆகிறார் அஜித். படம் முழுக்க தன்னுடைய இடத்தை விட பல படிகள் கீழே இறங்கி வந்து நடித்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். எந்த இடத்திலும் கைதட்டல் பெறவேண்டும் என்பதற்காக பில்டப்களை வலிந்து திணிக்காமல் இருந்ததற்கே அவரை மனதார பாராட்டலாம். படத்தின் முதல் பாதி முழுவதுமே கிட்டத்தட்ட ஒரு ஹாலிவுட் படம் பார்ப்பது போன்றே உணர்வே இருந்தது. படம் முழுக்க அஜர்பைஜானில் எடுக்கப்பட்டிருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். ஒளிப்பதிவு, இசை, நடிப்பு என எந்த இடத்திலும் மிகைத்தன்மை இல்லாமல் கொண்டு சென்றது சிறப்பு. படத்தின் தொடக்கத்தில் வரும் காதல் காட்சிகள் தவிர இடைவேளை ட்விஸ்ட் வரை படம் விறுவிறுப்பாகவே செல்கிறது. ஆரவ் - அஜித் இடையிலான காட்சிகள், அதன் பிறகு அர்ஜுன், ரெஜினா அறிமுகம், அவர்களின் பின்னணி என அடுத்தடுத்து வரும் காட்சிகள், திரைக்கதையை பில்டப் செய்ய உதவுகின்றன. ஆனால், படத்தின் பிரச்சினையே இரண்டாம் பாதியில்தான். இடைவேளையில் வைக்கப்பட்ட ட்விஸ்டை இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே உடைத்தது மைனஸ். இதனால் பார்ப்பவர்களுக்கு இதன் பிறகு என்ன இருந்துவிடப் போகிறது என்ற மனநிலை வந்துவிடுகிறது. அதிலும் அஜித் பேங்க் ஒன்றில் போய் பணம் எடுப்பது, மீண்டும் த்ரிஷாவை தேடி அலைவது என சலிப்பை ஏற்படுத்தும் காட்சிகளால் திரைக்கதை நகராமல் ஒரே இடத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. முதல் பாதியில் இருந்த எங்கேஜிங்கான காட்சிகள் முற்றிலுமாக இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். இதுபோன்ற த்ரில்லர் கதைக்களத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது ஓரிரண்டு புத்திசாலித்தனமான காட்சிகளைத்தான். ஆனால் அதற்காக திரைக்கதையில் பெரிதாக மெனக்கெடாமல் ஒரே நேர்க்கோட்டில் கதையை சொல்லியிருப்பது ஏமாற்றம். ஒரு நடிகராக அஜித்துக்கு இது புதிய பரிமாணம். வழக்கமான கமர்ஷியல் அம்சங்களை இல்லாமல் இதில் அவருக்கு நடிப்பதற்கான இடங்கள் அதிகம். அதை கச்சிதமாக பயன்படுத்தவும் செய்திருக்கிறார். மூன்று விதமான ‘கிளாஸ்’ ஆன லுக்கில் கவர்கிறார். த்ரிஷா வரும் காட்சிகள் வெகு குறைவு என்பதால் அவருக்கு பெரிதாக வேலை இல்லை. அர்ஜுன் தன்னுடைய பங்கை சிறப்பாக் செய்திருக்கிறார். அஜித்தை வங்கிக்கு அனுப்பி பணத்தை எடுத்து வரச் சொல்லும் காட்சியில் அவரது நடிப்பு சிறப்பு. ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் குறையில்லாத நடிப்பை வழங்கியுள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு பெரும் பலம். புழுதி வீசும் அஜர்பைஜான் நிலப்பரப்பை அட்டகாசமாக காட்சிப்படுத்தியிருக்கிறது ஓம் பிரகாஷின் கேமரா. அனிருத்தின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆக்ஷன் காட்சிகள் சில இடங்களில் ரசிக்கும்படி இருந்தாலும் அஜித் - அர்ஜுன் மோதிக் கொள்ளும் இடங்களில் ‘மங்காத்தா’ ரேஞ்சுக்கு எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றமே. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பை இரண்டாம் பாதியிலும் கொண்டு வந்து இழுவையான காட்சிகளை கத்தரி போட்டிருந்தால் ஒரு நேர்த்தியான த்ரில்லர் படமாக வந்திருக்கும். ஸ்டைலிஷ் ஆன மேக்கிங் இருந்தும் கொட்டாவி வரவைக்கும் ‘ஜவ்வான’ இரண்டாம் பாதியால் ‘விடாமுயற்சி’ வீண்முயற்சி ஆகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். விடாமுயற்சி Review: அஜித் ‘க்ளாஸ்’ + மேக்கிங் ‘ஸ்டைலிஷ்’, ஆனால்..! | Vidaamuyarchi Movie review - hindutamil.in
-
திருச்சி: மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு! -மக்கள் அதிர்ச்சி... போலீஸார் தீவிர விசாரணை!
தண்ணீர் தொட்டி+ ( தே.தீட்ஷித் ) திருச்சி, காந்தி மார்க்கெட் அருகே 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டியில் ஏறிய சில மர்ம நபர்கள் மர்ம பொருளை வீசி சென்றதை அந்த பகுதி மக்கள் கவனித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தை அறிந்து ஸ்பாட்டுக்கு வந்த அந்த பகுதி வார்டு கவுன்சிலர் தண்ணீரில் இருந்தது என்ன என்று பார்த்தபோது, அது மனித கழிவு என்பது தெரியவந்தது. இந்த நிலையில், திருச்சி மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு வீசியவர் யார் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி தே.தீட்ஷித் இந்த பகுதியில் கஞ்சா போதையில் சிலர் சுற்றித் திரிவதாகவும், அவர்களில் யாரேனும் தான் தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்து இருக்கலாம் என்றும் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, போலீஸார் அந்த கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாநகராட்சியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி: மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு! -மக்கள் அதிர்ச்சி... போலீஸார் தீவிர விசாரணை! | Trichy: Human waste found in water tank! - People shocked - Vikatan
-
மன்னாரில் மேய்ச்சல் தரை இன்றி உயிரிழக்கும் கால்நடைகள்!
நல்லது, இதற்கான ஆதாரத்தை, செய்தியின் இணைப்பைத் தாருங்கள்.
-
14 ஏக்கர் காணியும் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு சொந்தமானது - அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ். மாவட்ட செயலருக்கு கடிதம்
தையிட்டிக் காணியை கையளிக்க முடியாது; அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ். மாவட்டச் செயலருக்கு ’சண்டித்தனக்’கடிதம் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி உட்பட 14 ஏக்கர் காணிகள் திஸ்ஸ விகாரைக்குச் சொந்தமானவை. அந்தக் காணியை ஒருபோதும் எவருக்கும் கையளிக்க முடியாது. அதற்கான எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதிக்கமாட்டோம் என்று அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலருக்குத் தெரியப்படுத்தியுள்ளது. அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தால் டிசெம்பர் மாதம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலருக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் சாரம்சம் வருமாறு- யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 13 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் விகாரையின் நிலத்தைப் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என்று அறியமுடிகின்றது. அந்தச் சந்தர்ப்பத்தில் விகாரைக்குப் பொறுப்பான தேரர் மற்றும் விகாரையின் நிர்வாக சபையினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. திஸ்ஸ விகாரை நிலத்தின் எந்தவொரு பகுதியும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணக்கப்பாட்டுக்கு அமைவாக பொதுமக்களுக்கு வழங்க முடியாது. விகாரை அமைக்கப்பட்டுள்ள 7 ஏக்கர் 3 றூட் 9.97 பேர்ச் உட்பட 14 ஏக்கர் 5097 பேர்ச் காணி, விகாரைக்கே சொந்தமானது. அந்தக் காணியை விகாரையிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக விகாரைக்குச் சொந்தமான நிலத்தின் எந்தவொரு பகுதியையும் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு சந்தர்ப்பம் இல்லை. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவை. அரசியலமைப்பின் 9ஆவது பிரிவின்படி பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதாலும், பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளதாலும் காணியை விகாரைக்குக் கையளிக்க எந்தத் தடையும் இல்லை. விகாரைக்குரிய காணியில் பௌத்த சமயத்தின் முன்னேற்றத்துக்காக சைத்யம், புத்த மெதுரா, போதி, ஆவாச மனை, அன்னதான மடம் மற்றும் மடாலயம் ஆகியவற்றைக் கொண்ட பூங்கா தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்துக்குப் புனித யாத்திரை செல்லும் பௌத்த பத்தர்களுக்காக ஓய்வு மண்டப வசதிகள், அன்னதான மண்டபம், தியான மண்டபங்கள், தர்ம பாடசாலை கட்டடங்கள் என்பன நிர்மாணிக்கப்படுவதும் அவசியம். நில அளவைத் திணைக்களத்தால் அடையாளம் காணப்பட்டுள்ள 14 ஏக்கர் 5097 பேர்ச் காணியை மீள விகாரையிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்றுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கடந்த 31ஆம் திகதி நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்தக் கூட்டத்தில் தையிட்டியில் பொதுமக்களின் காணிகளில் எவ்வித அனுமதியும் பெறாது அமைக்கப்பட்டிருக்கும் விகாரை தொடர்பாகப் பிரஸ்தாபித்தார். யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தீர்மானம், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தீர்மானம் என்பற்றை மீறி எந்தவித அனுமதியும் பெறாது பொதுமக்களின் காணிகளில் அமைக்கப்பட்டிருக்கும் விகாரை தொடர்பாக அவர் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தார். கூட்டத்தில் கருத்துத் தெரிவித்திருந்த வடக்கு மாகாண ஆளுநர், விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்படுகின்றது என்றும், மாற்றுக்காணிகளைப் பெற்றுக்கொள்ள காணிகளின் உரிமையாளர்கள் உடன்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார். காணிகளின் உரிமையாளர்கள் மாற்றுக் காணிகளைப் பெற்றுக்கொள்ள உடன்படவில்லை என்று அந்தச் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியிருந்தார். ஆயினும் இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இந்தக் கடிதம் தொடர்பாக எந்தக் கருத்தும் முன்வைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தையிட்டிக் காணியை கையளிக்க முடியாது;
-
பலமான எதிரணிக்காக சஜித் தரப்பு வியூகம்! தமிழ்க் கட்சிகளும் சங்கமம்
பலமான எதிரணிக்காக சஜித் தரப்பு வியூகம்! தமிழ்க் கட்சிகளும் சங்கமம் பலமானதொரு எதிரணியைக் கட்டியெழுப்பி நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் கூட்டாகச் செயற்படுவது தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கிடையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தலைமையில் நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர். சமகால மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்குள்ளும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் கூட்டாக இணைந்து செயற்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதே இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கம் என்று எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் எம்.பி.க்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். பலமான எதிரணிக்காக சஜித் தரப்பு வியூகம்! தமிழ்க் கட்சிகளும் சங்கமம்
-
பெப்ரவரி 15 முதல் உத்தரதேவி ரயில்!
பெப்ரவரி 15 முதல் உத்தரதேவி ரயில்! பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிமுதல் யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில், உத்தரதேவி ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி, காலை 5:30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படுகின்ற ரயில் மதியம் 1:15 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையவுள்ளது. கொழும்பிலிருந்து காலை 11.50 மணியளவில் பயணிக்க ஆரம்பிக்கும் ரயில் மாலை 6:50 மணியளவில் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய சேவைகள் கடந்த 31ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்பட்ட இரவு நேர தபால் சேவையானது காங்கேசன்துறையிலிருந்து இரவு 8 மணிக்கு பயணத்தை ஆரம்பித்து, அதிகாலை 4.20 மணியளவில் கொழும்பு கோட்டையைச் சென்றடையும். கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 8 மணியளவில் பயணத்தை ஆரம்பிக்கும் ரயில் யாழ்ப்பாணத்தை அதிகாலை 3.55 மணிக்கு வந்தடையும். இதேவேளை ஏற்கனவே இடம்பெற்று வருகின்ற யாழ் தேவி ரயில்சேவையானது காலை 5:45 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து சேவையினை ஆரம்பித்து யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை 12:20 மணியளவிலும், காங்கேசன்துறையை 1.45 மணியளவிலும் வந்தடையும். காங்கேசன்துறையிலிருந்து இரவு 10:30 மணியளவில் சேவையை ஆரம்பிக்கும் யாழ் தேவி ரயில் சேவையானது யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை இரவு 11 மணியளவில் அடைந்து தொடர்ந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை காலை 7 மணியளவில் சென்றடையும். வழமைபோல யாழ்ராணி ரயில் சேவையானது காலை 6 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து சேவைகளை ஆரம்பித்து யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை காலை 6:35 மணியளவில் அடைந்து தொடர்ந்து அனுராதபுரத்தினை 10:30 இற்கு சென்றடையும் இதேவைளை அனுராதபுரத்திலிருந்து மாலை 2:30 மணிக்கு சேவைகள் ஆரம்பமாகி யாழ் ரயில் நிலையத்தினை மாலை 6:10 மணியளவில் அடைந்து காங்கேசன்துறைக்கு மாலை 6:50 மணிக்கு சென்றடையும். மேலும் விசேட சேவையாக சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கடுகதி ரயில் சேவை கொழும்பு கோட்டையிலிருந்து காலை 5:30 மணிக்கு ஆரம்பித்து யாழ்ப்பாணத்தை காலை 11:50 மணியளவில் வந்தடையும். மேலும் யாழிலிருந்து மாலை 2:15 மணிக்கு ஆரம்பமாகி கொழும்பை இரவு 8:50 இற்கும் சென்றடையும். பெப்ரவரி 15 முதல் உத்தரதேவி ரயில்!
-
வித்தியா கொலை வழக்கில் புதிய திருப்பம்!
கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது. குறித்த மேன்முறையீட்டு மனுக்கள் இன்று நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சட்டமா அதிபரின் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, நீதிமன்றத்தின் முன் விடயங்களை முன்வைத்து, குறித்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதியை நிர்ணயிக்குமாறு கோரினார். அதன்படி, மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், சம்பந்தப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை ஓகஸ்ட் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது. 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 7 பேருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு மரண தண்டனை விதித்துள்ளது. மேற்படி, மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தங்களுக்கு தண்டனை விதித்த விதம் சட்டத்திற்கு முரணானது என்றும், எனவே மேல் நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்து அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் கூறி, பிரதிவாதிகள் இந்த மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வித்தியா கொலை வழக்கில் புதிய திருப்பம்!
-
மன்னாரில் காற்றாலை மூலம் 50 மெகாவாட் மின்சாரம் : தனியார் நிறுவனத்திற்கு வழங்க அனுமதி
மன்னாரில் காற்றாலை மூலம் 50 மெகாவாட் மின்சாரம் : தனியார் நிறுவனத்திற்கு வழங்க அனுமதி 06 Feb, 2025 | 02:43 PM மன்னாரில் 50 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை மேம்படுத்த ஹேலிஸ் பென்டன்ஸ் லிமிடெடுக்கு ஒப்பந்தம் வழங்க அரசாங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த முடிவு, கொள்முதல் முறையீட்டு சபையின் (PAB) மேற்பார்வையில் நடத்தப்பட்ட விரிவான மற்றும் வெளிப்படையான முறையீட்டு செயல்முறைக்குப் பின்னர் எடுக்கப்பட்டுள்ளது.. ஆரம்பத்தில், ஹேலிஸ் பென்டன்ஸ் நிறுவனம் சமர்ப்பித்த விண்ணப்பம் திட்டக் குழுவால் பரிசீலிக்கப்படவில்லை. எனினும், 2024 ஆகஸ்ட் 6 ஆம் திகதி, ஹேலிஸ் பென்டன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த முறையீட்டை பரிசீலித்த பின்னர், கொள்முதல் முறையீட்டு சபை (PAB) அமைச்சரவைக்கு பரிந்துரை செய்து, கூடுதல் தகவல்கள் ஒப்பந்த பாதுகாப்பை மேலும் உறுதி செய்வதால், இவ்விண்ணப்பத்தையும் மதிப்பீடு செய்ய வேண்டுமென அறிவுறுத்தியது. இதன்படி, ஒரு அலகு (kWh) மின்சாரத்தை 4.65 அமெரிக்க டொலர் சதத்திற்கு மிகக் குறைந்த விலையில் ஹேலிஸ் பென்டன்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னர், ஒரு அலகு மின்சாரத்தை 4.88 அமெரிக்க டொலர் சதத்திற்கு வழங்கப்பட்ட ஏலத்துடன் ஒப்பிடும் போது, 3 பில்லியன் ரூபாவை சேமிக்க முடியுமென தெரிவிக்கப்படுகின்றது. மன்னாரில் காற்றாலை மூலம் 50 மெகாவாட் மின்சாரம் : தனியார் நிறுவனத்திற்கு வழங்க அனுமதி | Virakesari.lk
-
வறிய மக்களின் பொருளாதாரத்தை அபகரிக்கின்றது யாழ். மாநகர சபை – பழக்கடை வியாபாரிகள் போராட்டம்
06 Feb, 2025 | 12:07 PM யாழ். மத்திய பேருந்து நிலைய வளாகத்தின் பின்புறமாக வைரவர் கோயில் வீதியில் உள்ள பழக்கடை வியாபாரிகள் யாழ். மாநகர சபையின் மனிதாபிமானமற்ற செயற்பாட்டை கண்டித்து வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்தி போராட்டம் ஒன்றை இன்று வியாழக்கிழமை (06) முன்னெடுத்தனர். குறித்த பகுதியில் தற்காலிக கடைகளை அமைத்து பழங்களை விற்பனை செய்துவரும் வியாபாரிகள் இந்த மனிதாபிமானமற்ற செயற்பாட்டால் தமது குடும்ப வருமானம் முழுமையாக மாநகர சபையினரால் பறிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். யாழில் தமது கடை தொகுதியின் முன்றலில் போராட்டத்தை நடத்திய பழக்கடை உரிமையாளர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், வியாபாரிகளாகிய நாம் அன்று அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக எமது வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவை கொண்ட ஈ.பி.டி.பியின் ஆட்சி அதிகார வரையறைக்குள் யாழ் மாநகர சபை இருந்தபோது இந்த கடைகள் எமக்கு வழங்கப்பட்டன. இதற்காக நாம் யாழ். மாநகரசபைக்கு ஆரம்பதில் 3000 ரூபாவும் தற்போது 7500 ரூபாவும் வரியாக செலுத்தி வருகின்றோம். இந்நிலையில் தற்போதும் மேலும் 300 ரூபா வரி உயர்வு என கூறுகின்றனர் அதையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இதேநேரம் கடைகளின் முகப்பு போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக அதிகாரிகள் எம்மிடம் தெரிவித்ததற்கு இணங்க அதையும் சில அடிகள் உள்ளே எடுப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளோம். இதேநேரம் வாழ்வாதாரத்தினை அடிப்படையாகக் கொண்டு கடைகளை அமைத்து ஏறக்கறைய 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரு கடையில் குறைந்தது மூன்று பேர் வேலை செய்கின்றனர். இங்கு 31 கடைகள் உள்ளன. இவற்றில் கறைந்தது 100 பேர் தொழில் செய்கின்றனர். அதுமட்டுமல்லாது 100 குடும்பங்களின் வாழ்வாதாரம் இதில் தங்கியுள்ளது. இந்நிலையில் யாழ். மாநகரசபையின் அதிகரிகள் எமது கடைகளின் அளவை அதாவது அகலந்தை குறைத்து அடையாளமிடும் நடவடிக்கையை நேற்றையதினம் முன்னெடுத்தினிருந்தனர். ஆனால் நாம் எதிர்ப்பு காட்டியதை அடுத்து அது தடுத்து நிறுத்தப்பட்டது. ஏற்கனவே 6 அடிகள் தான் ஒரு கடைக்கான இடப்பரப்பாக வழங்கப்பட்டது. இந்த 6 அடிக்கள் பொருட்டகள், பழங்களை வைத்து விற்பனை செய்யும் தளபாடங்கள், குறைந்தது 3 வியாபாரிகள் என வியாபார நடவடிக்கைகளை கடும் சிரமத்தின் மத்தியில் மேற்கொண்டு வருகின்றோம். இந்நிலையில் அந்த 6 அடி அகலத்ததையும் மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்க தற்போது முயற்சி செய்து அதற்கான அடையாளமிடலுக்காக நேற்றையதினம் வருகை தந்து நடவடிக்கை மேற்கொள்ள முயற்சித்தனர். அதற்கு நாம் கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த நடவடிக்கையை நிறுத்தியிருந்தோம். அதுமட்டுமல்லாது பல்வேறு கடன்களை பெற்றே நாம் இந்த சிறு முதலீடுகளை ஏற்படுத்தியுள்ளோம். இதன் வருமானத்தை வைத்தே பிள்ளைகள் இன்று கல்வி கற்று வருகின்றார்கள். மாநகரசபையின் இந்த செயற்பாட்டால் அவர்களுடைய நிலையும் கவலைக்கிடமானதாக முடியும். இதேநேரம் நாட்டை சுத்தம் செய்வோம் என கோசமிட்டு எமது வாக்குகளை வசப்படுத்தி வெற்றியீட்டிய அனுர தலைமையிலான அரசாங்கம் தான் கூறிய வாக்கறுதிகளை மீறி எம்மை ஏமாற்றிவருகின்றது. அனுர அரசின் கட்டளைப்படியே தாம் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அவ்வாறாயின் மக்களின் அனைத்து செயற்பாடகளையும் பொருளாதார ஈட்டலையும் ஒட்டுமொத்தமாக அழித்து மக்களை வீதியில் விடுவதா இந்த அரசின் “கிளின் சிறீலங்கா” திட்டம் என்ற சந்தேகம் எழுகின்றது. இதேநேரம் நாம் நாட்டுக்கு சுமையாக இருக்கவில்லை. வேலை வாய்ப்பு தா என கோரவில்லை. அதற்காக வீதியில் இறங்கி போராடவும் இல்லை. சுய தொழில் நடவடிக்கைகளையே எம்மால் முடிந்த முதலீடுகளை செய்து முன்னெடுத்துவருகின்றோம். இதேநேரம் எமது இந்த சுயதொழில் நடவடிக்கையை தடுத்து, தமது வருமானத்தை மட்டும் குறியாக கொண்டு இயங்கும் தற்போதைய அரசும் மாநகரசபையும் இந்த மாநகரசபை எமக்கான பொருளாதார ஈட்டலை வழங்குமா? எனவே எமக்கான நியாயம் கிடைக்காவிடின் நியாயத்திற்காக நாம் எம்மால் முடிந்தவரை தொடர்ந்தும் போராடுவதற்கு தயாராகவே இரக்கின்றோம் என தெரிவித்தனர். இதேவேளை குறித்த எமது பகுதியில் எத்தனையோ அத்தியாவசிய தேவைகள் யாழ் மாநகரசபையினால் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிள்ளது. ஆனால் அவற்றைந அவர்கள் செய்வதில்லை. குறிப்பாக பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள கழிவுநீர் வடிகால் பகுதியில் ஏறத்தாள 2 அடிக்கும் மேலாக கழிவு நீர் தேங்கி நிற்கின்றது. அதனால் துர்நாற்றம் அதிகமாக உள்ளது. இதை எடுத்துக் கூறி சீர் செய்ய கோரினாலும் யாழ் மாநகரசபை கண்டுகொள்வதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
மன்னாரில் மேய்ச்சல் தரை இன்றி உயிரிழக்கும் கால்நடைகள்!
06 Feb, 2025 | 01:42 PM மன்னார் மாவட்டத்தில் மாந்தை மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் மேய்ச்சல் தரை பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்துவரும் நிலையில், அண்மைக்காலமாக மேய்ச்சல் தரை இன்றி அதிகளவான கால்நடைகள் உயிரிழந்து வருகின்றன. குறிப்பாக மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாயாற்றுவெளி பகுதியில் அதிகளவான கால்நடைகள் மேய்ச்சலுக்காக கொண்டு செல்லப்படுகின்ற நிலையில், சீரற்ற வானிலையுடனான அதிக பனி காரணமாக அதிகமான மாடுகள் உயிரிழக்கின்றன. அதேவேளை, அதிகளவு மாடுகள் ஒரே பகுதிகளில் மேய்வதால் பட்டினியால் உடல் மெலிந்து இறந்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புகளால் வாழ்வாதாரத்தை இழந்த கால்நடை மேய்ப்பாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். மன்னார் மாவட்ட செயலகத்தினால் மேய்ச்சல் தரைக்கு என பல வருடங்களுக்கு முன் ஒதுக்கப்பட்ட பல ஏக்கர் காணிகள் பல்வேறு அரச திணைக்களங்களினால் இதுவரை மேய்ச்சல் த ரைக்கு விடுவிக்கப்படாதுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் பொருத்தமற்ற இடங்களில் மேய்ச்சல் நடவடிக்கைகளுக்கு மாடுகளை கொண்டுசெல்வதால், அவை உயிரிழக்கின்ற அவலம் ஏற்பட்டுள்ளது. மன்னாரில் மேய்ச்சல் தரை இன்றி உயிரிழக்கும் கால்நடைகள்! | Virakesari.lk
-
கருணா அம்மான் பிள்ளையானை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் என பிள்ளையானிற்கு தெரிவித்த சுரேஸ்சாலே- டெய்லி மிரர்
06 Feb, 2025 | 01:57 PM கருணா அம்மான் பிள்ளையானை கொலை செய்வதற்கான சதிமுயற்சியில் ஈடுபட்டுள்ளார் என இராணுவபுலனாய்வு பிரிவின் தலைவராக பணியாற்றிய சுரேஸ் சாலே பிள்ளையானிடம் தெரிவித்தார் என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் டெய்லிமிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது 2007 நவம்பர் 2ம் திகதி போலிகடவுச்சீட்டில் பிரித்தானியாவிற்குள் நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் அந்த நாட்டில்கைதுசெய்யப்பட்டார். இலங்கையின் தேசிய புலனாய்வு சேவையே இந்த கடவுச்சீட்டை வழங்கியிருந்தது. கருணா அம்மானை அகற்றிவிட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவராக பிள்ளையானை கொண்டுவருவதற்கு இலங்கையின் தேசிய புலனாய்வு அமைப்பு விரும்பியது. கருணா அம்மான் பிள்ளையானை கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளார் என இராணுவபுலனாய்வு பிரிவின் தலைவராக விளங்கிய சுரேஸ்சாலே பிள்ளையானிற்கு தெரிவித்தார் என இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். கருணா அம்மானின் மெய்ப்பாதுகாவலர்களை பிள்ளையான் கொலை செய்யவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பிள்ளையானின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது அவர் அதன் தலைவரானார். கருணா அம்மான் பிள்ளையானை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் என பிள்ளையானிற்கு தெரிவித்த சுரேஸ்சாலே- டெய்லி மிரர் | Virakesari.lk