Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. 17 Mar, 2025 | 05:23 PM வடக்கு பிராந்தியத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒரு பயனுள்ள பாதையை உருவாக்கும் நோக்கில் கனேடிய - இலங்கை வர்த்தக சம்மேளனம் யாழ்ப்பாணத்தில் கனேடிய கல்வி கண்காட்சி மற்றும் யாழ்ப்பாண முதலீட்டு வர்த்தக மாநாடு ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (17) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த கனேடிய - இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் முகமட் ஹமீட் இவ்வாறு கூறியதுடன் அது குறித்து மேலும் கூறுகையில், யாழ். குடா நாட்டு இளைஞர் யுவதிகளின் கல்வி மற்றும் தொழில்துறை குறித்த எதிர்கால கனவுகளை நனவாக்கிக் கொடுக்கும் வகையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. அதனடிப்படையில் குறித்த மாநாடு மே 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. குறித்த மாநாட்டில் முதலாம் நாளன்று கனடா மற்றும் பிற சந்தைகளுக்கு இலங்கை மாணவர்களை பணிக்கமர்த்தல், இலங்கையில் கனேடிய கல்வியை வழங்கல், தொழில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டை நிறுவுதல், கனடா கல்வி மற்றும் திதன் பயிற்சி உரிமையாளர்களை ஊக்குவித்தல், திறன் இடப்பெயர்வு மற்றும் வேலை வாய்ப்புக்கான பயிற்சி மற்றும் திறன்களை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி நடைபெறவுள்ளது. அதேநேரம் யாழ். வேலைவாய்ப்பு வாய்ப்பு மற்றும் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் என்ற தலைப்பில் இரண்டாம் நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதில் யாழ் வேலை வாய்ப்பும் தொழிலாளர்களுக்கான சாதக நிலைகளை உருவாக்கல். இளைஞர்களுக்கு வேலவாய்ப்பு வழங்கல், பல நூறு படித்த பட்டதாரிகளுக்கு பயிற்சி வழங்கல் மற்றும் வர்த்தகம் தொடர்பான மாநாடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், விவசாயம் மற்றும் மீன் வளர்ப்பு, சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான எதிர்கால திட்டங்கள் முதலீடுகளை உருவாக்குவது தொடர்பான பயிற்சிகளும் இதன்போது இடம்பெறவுள்ளது. குறிப்பாக காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளம் ஆகிய பகுதிக்கு உருவாக்கப்பட இருக்கும் முதலீட்டு வலயங்களில் இத்தகைய வாய்ப்புக்களை அரச மற்றும் தனியார் இணைந்த கட்டமைப்பில் உருவாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம். எமது இந்த நிகழ்வுக்கு இலங்கையின் பிரதமர் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ள இருக்கின்றார். வலம்புரி விருந்தினர் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வினூடாக கனடாவிலிருந்து முதலீடுகளைக் குறிப்பாக வடபகுதிக்குக் கொண்டுவர முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளோம். அதுமட்டுமல்லாது இலங்கையிலிருந்து சென்று வெளிநாடுகளில் கற்று மீளவும் வரும் மாணவர்களுக்குத் தகுதிக்கேற்ப வேலைகளும் ஊக்குவிப்பு வழங்கவும் ஏற்பாடுகள் இருக்கின்றது. அந்தவகையில் இந்த வாய்ப்பை வடக்கின் இளைஞர் யுவதிகள் சரியாகப் பயன்படுத்தி வாழ்வை வெற்றிகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழில் மே மாதம் கனேடிய கல்வி கண்காட்சி, முதலீட்டு வர்த்தக மாநாடு ; கனேடிய - இலங்கை வர்த்தக சம்மேளனம் | Virakesari.lk
  2. 17 Mar, 2025 | 05:24 PM யாழில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தோமஸ் டக்ளஸின் படகில் இரண்டு மீனவர்கள் சனிக்கிழமை (15) ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் இறங்கு தளத்தில் இருந்து IDAY-A-0035 JFN நீலம் மற்றும் வெள்ளை நிற படகில் மீன்பிடிக்கச் சென்றனர். ஆனால் அவர்களில் எவரும் இன்னும் கடலுக்குத் திரும்பவில்லை என யாழ்ப்பாண மாவட்ட நீரியல் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜே.சுதாகரன் தெரிவித்துள்ளார். காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை! | Virakesari.lk
  3. அர்ச்சனா சுக்லா மற்றும் நிகில் இனாம்தார் பதவி,பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா மீதான டொனால்ட் டிரம்பின் பதிலடி வரி விதிப்பு இன்னும் ஒரு மாதத்தில் அமலாகும் சாத்தியக்கூறு உள்ள நிலையில் லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த வாரம் திடீர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். வர்த்தக ஒப்பந்தம் குறித்து அவர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரிகளுக்குப் பதிலடியாக ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் இந்தியா மீது வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் பின்னர் அறிவித்தார். இந்தியாவின் முக்கியமான ஏற்றுமதித் தொழில்களாக இருக்கும் மருந்து பொருட்கள் ஏற்றுமதி மீதான வரி உயர்வை நிறுத்த பியூஷ் கோயல் விரும்புகிறார். அமெரிக்காவில் விற்கப்படும் ஜெனரிக் மருந்துகளில் கிட்டத்தட்ட பாதி இந்தியாவில் இருந்துதான் வருகிறது. பிராண்ட் பெயர் கொண்ட மருந்துகளின் மலிவான பதிப்புகளான ஜெனரிக் மருந்துகள், இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அமெரிக்காவில் மருத்துவர்களால் மக்களுக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் 10இல் ஒன்பது இதுபோன்ற மருந்துகளே. இது வாஷிங்டனுக்கு பல பில்லியன் டாலர் சுகாதாரச் செலவை மிச்சமாக்குகிறது. 2022ஆம் ஆண்டில் மட்டும் இந்திய ஜெனரிக் மருந்துகள் காரணமான சேமிப்பு 219 பில்லியன் டாலர்களை (169 பில்லியன் பவுண்டுகள்) எட்டியதாக ஆலோசனை வழங்கும் நிறுவனமான IQVIA-இன் ஆய்வு தெரிவிக்கிறது. இந்திய மருந்துகளைச் சார்ந்திருக்கும் அமெரிக்கர்கள் வர்த்தக ஒப்பந்தம் இல்லாதபட்சத்தில் டிரம்பின் இந்த வரி சில இந்திய ஜெனரிக் மருந்துகளை எட்ட முடியாத ஒன்றாக ஆக்கிவிடும். சில நிறுவனங்கள் சந்தையில் இருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படும். இதன் காரணமாகத் தற்போதுள்ள மருந்து பற்றாக்குறை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "இந்த வரிவிதிப்பு, தேவை-விநியோக சமநிலையின்மையை மோசமாக்கலாம். காப்பீடு இல்லாதவர்கள் மற்றும் ஏழை மக்கள் அதிக செலவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று யேல் பல்கலைக்கழகத்தின் மருந்து செலவு நிபுணர் டாக்டர். மெலிசா பார்பர் கூறுகிறார். இது பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்படும் மக்களை மேலும் பாதிக்கலாம். அமெரிக்காவில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் மனநல நோய்களுக்கான மருந்துகளில் 60%க்கும் அதிகமானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் என்று இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணி நிதியளித்த IQVIA ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்கர்கள் இந்திய அத்தியாவசிய மருந்துகளை எவ்வாறு சார்ந்து இருக்கிறார்கள் என்பதற்கு அமெரிக்காவில் பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் ஆன்டி-டிப்ரஸன்ட் மருந்தான செர்ட்ராலைன் ஒரு பிரதான உதாரணம். இதுபோன்ற பல மருந்துகள், இந்தியா அல்லாத நிறுவனங்களுடைய மருந்துகள் விற்கப்படுவதில் இருந்து பாதி விலையில் கிடைக்கின்றன. "இதுகுறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்," என்று மருந்துகளுக்கான அணுகலுக்காகப் போராடும் குழுவான 'பப்ளிக் சிட்டிசன்ஸின்' வழக்கறிஞர் பீட்டர் மேபர்டுக் கூறுகிறார். மருந்துகளின் விலை காரணமாக நான்கு அமெரிக்க நோயாளிகளில் ஒருவர் மருந்துகளை எடுக்கத் தவறுகிறார் என்று அவர் மேலும் தெரிவித்தார். சீன இறக்குமதிகள் மீதான வரிகள் காரணமாக டிரம்ப் ஏற்கெனவே அமெரிக்க மருத்துவமனைகள் மற்றும் ஜெனரிக் மருந்து தயாரிப்பாளர்களிடம் இருந்து அழுத்தத்தை எதிர்கொள்கிறார் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் விற்கப்படும் மருந்துகளின் 87% மூலப்பொருட்கள் நாட்டிற்கு வெளியில் இருந்து வருகின்றன. மேலும் அவை முக்கியமாக சீனாவில் குவிந்துள்ளன. இது உலகளாவிய விநியோகத்தில் சுமார் 40 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது. டிரம்ப் பதவியேற்றதில் இருந்து சீன இறக்குமதிகள் மீதான வரிகள் 20% அதிகரித்துள்ளதால், மருந்துகளுக்கான மூலப்பொருட்களின் விலை ஏற்கெனவே அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் இந்திய மருந்துகளை உற்பத்தி செய்ய முடியுமா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்காவில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் மனநல நோய்களுக்காக மருத்துவர்களால் அளிக்கப்படும் மருந்துகளில் சுமார் 60% இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளாகும். வரிகளைத் தவிர்க்க நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்ற வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார். பிராண்ட் பெயர் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளை விற்கும் ஃபைசர், எலி லில்லி போன்ற பெரிய மருந்து நிறுவனங்கள், தங்களின் ஒரு சில உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்ற ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால் குறைந்த விலை கொண்ட மருந்துகளுக்கு இது சாத்தியமில்லை. தனது நிறுவனம் அமெரிக்காவில் ஒரு பாட்டிலுக்கு 1 டாலர் முதல் 5 டாலர் வரையிலான விலையில் மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும், வரிகள் காரணமாக உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்றுவது கட்டுப்படியாகாது என்றும் இந்தியாவின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பாளரான சன் ஃபார்மாவின் தலைவர் திலீப் ஷாங்வி கடந்த வாரம் ஒரு தொழில்துறை கூட்டத்தில் கூறினார். "அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது மருந்துகளை இந்தியாவில் உற்பத்தி செய்வது குறைந்தது மூன்று முதல் நான்கு மடங்கு மலிவானது" என்று ஐபிஏ-வின் சுதர்சன் ஜெயின் கூறுகிறார். எந்தவொரு விரைவான இடமாற்றமும் கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஒரு புதிய உற்பத்தி வசதியைக் கட்டுவதற்கு 2 பில்லியன் டாலர் வரை செலவாகும். மேலும் அது செயல்படுவதற்கு ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும் என்று லாபி குழு PhRMA தெரிவித்துள்ளது. இந்திய நிறுவனங்களைப் பாதிக்கும் வரிவிதிப்பு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு காலகெடு நெருங்கி வரும் நிலையில் இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த வாரம் அமெரிக்காவுக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டார் இந்த வரிவிதிப்பு இந்தியாவில் உள்ள உள்ளூர் மருந்து நிறுவனங்களையும் மோசமாகப் பாதிக்கலாம். மருந்துப் பொருட்கள், இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை ஏற்றுமதியாக உள்ளதாக வர்த்தக ஆராய்ச்சி நிறுவனமான ஜி.டி.ஆர்.ஐ தெரிவிக்கிறது. இந்தியா கிட்டத்தட்ட எந்த வரியும் செலுத்தாமல் ஆண்டுதோறும் சுமார் 12.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்துகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இருப்பினும் இந்தியாவுக்குள் வரும் அமெரிக்க மருந்துகள் 10.91% வரி செலுத்துகின்றன. இது 10.9% 'வர்த்தக வித்தியாசத்தை' ஏற்படுத்துகிறது. அமெரிக்காவின் எந்தவொரு பதிலடி வரிவிதிப்பும் ஜெனரிக் மருந்துகள் மற்றும் சிறப்பு மருந்துகளுக்கான விலையை அதிகரிக்கும் என்று ஜி.டி.ஆர்.ஐ தெரிவித்துள்ளது. அமெரிக்க சந்தையில் விலை உயர்வு ஏற்படும் அதிக வாய்ப்புள்ள துறைகளில் ஒன்றாக மருந்துகள் துறை உள்ளதாக அது சுட்டிக்காட்டுகிறது. பெரும்பாலும் ஜெனரிக் மருந்துகளை விற்கும் இந்திய நிறுவனங்கள் ஏற்கெனவே குறைவான லாபத்தில் செயல்படுகின்றன. அதிக வரிவிதிப்பை அந்த நிறுவனங்களால் சமாளிக்க முடியாது. போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது அவை மிகக் குறைந்த விலையில் மருந்துகளை விற்கின்றன. மேலும் உலகின் மிகப்பெரிய மருந்து சந்தையில் இதயம், மனநலம், தோல் மருத்துவம் மற்றும் பெண்கள் சுகாதார மருந்துகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. "செலவுக் குறைப்புகள் மூலம் சிறிய அளவு வரிவிதிப்பைச் சமாளிக்க முடியும். ஆனால் வரிவிதிப்பு மிகவும் அதிகமாக இருந்தால் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும்," என்று தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத ஒரு முன்னணி இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் நிதித்துறை தலைவர் பிபிசியிடம் கூறினார். பட மூலாதாரம்,Getty Images அமெரிக்காவின் மருந்து சந்தை வட அமெரிக்கா இந்த நிறுவனங்களின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாகும். இது பெரும்பாலான நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபத்தில் மூன்றில் ஒரு பங்கை வழங்குகிறது. "இது வேகமாக வளர்ந்து வரும், மிகவும் முக்கியமான சந்தை. மற்ற சந்தைகளுக்கு மருந்துகளைக் கொண்டு சென்றாலும்கூட அமெரிக்க சந்தையில் ஏற்படும் இழப்புகளை அது ஈடுசெய்யாது," என்று அவர் மேலும் தெரிவித்தார். வணிக நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை வரிகள் முடிவு செய்யக்கூடாது. ஏனெனில் 'நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வரிகள் நீங்கிவிடக்கூடும்' என்று இந்தியாவின் மூன்றாவது பெரிய மருந்து நிறுவனமான சிப்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி உமங் வோஹ்ரா சமீபத்தில் ஒரு கூட்டத்தில் தெரிவித்தார். ஆனால் நான்கு ஆண்டுகள் என்பது நீண்ட காலம். பல நிறுவனங்களின் அதிர்ஷ்டத்தை உருவாக்கவோ அல்லது உடைக்கவோ இதனால் முடியும். அமெரிக்க மருந்துகளின் மீதான இந்தியாவின் இறக்குமதி வரிகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தியா வரிகளை 'பெருமளவு குறைக்க' ஒப்புக்கொண்டுள்ளதாக டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் கூறினார். "இவற்றையெல்லாம் தவிர்க்க இந்தியா மருந்துப் பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளைக் குறைக்க வேண்டும்" என்று மூத்த சந்தை நிபுணர் அஜய் பக்கா பிபிசியிடம் கூறினார். "இந்தியாவுக்குள் வரும் அமெரிக்க மருந்துகளின் மதிப்பு சுமார் 50 கோடி டாலர்கள் மட்டுமே. எனவே தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார். பதிலடி வரி காரணமாக இந்தியா எதிர்மறையாக பாதிக்கப்படாமல் இருக்க, அமெரிக்கா இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் மருந்துகள் மீதான வரிவிதிப்பை விலக்க வேண்டும் என்று இந்தியாவின் மிகப் பெரிய மருந்து உற்பத்தியாளர்களைக் கொண்ட ஐபிஏ பரிந்துரைத்துள்ளது. இந்தியாவின் சமீபத்திய பட்ஜெட்டில், அடிப்படை சுங்க வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலில் 36 உயிர் காக்கும் மருந்துகள் சேர்க்கப்பட்டன. இந்தியா தனது அழுத்தத்திற்கு அடிபணியக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் கோடிட்டுக் காட்டினார். "யாரோ ஒருவர் இறுதியாக அவர்கள் செய்ததை அம்பலப்படுத்தியதால், 'பெருமளவில் வரியைக் குறைக்க' இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது" என்று அவர் கூறினார். இந்தியா இதற்கு இன்னும் பதிலளிக்கவில்லை. ஆனால் இரு நாடுகளிலும் உள்ள மருந்து நிறுவனங்கள், உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வர்த்தக ஒப்பந்தத்தின் வடிவத்தைக் காண பதற்றமாகக் காத்திருக்கின்றன. "புதிய வரிவிதிப்பு காரணமாக குறுகியகால சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் இன்னும் சில மாதங்களில் முதல் கட்ட (வர்த்தக) ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கிறேன்," என்று அமெரிக்க-இந்திய செயல் உத்திக் கூட்டாண்மை மன்றத்தின் மூத்த ஆலோசகர் மார்க் லின்ஸ்காட் பிபிசியிடம் கூறினார். "மருந்து விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் முறிவை இரு நாடுகளாலும் தாங்க முடியாது" என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு இந்திய மருந்துகள் மீது டிரம்ப் வரி விதிப்பது அமெரிக்கர்களுக்கே சுமையாக மாறும் அபாயம் - BBC News தமிழ்
  4. 15 Mar, 2025 | 05:30 PM மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குரு முதல்வராக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் இந்த நியமனத்தை வழங்கினார். மடு திருப்பதியில் ஐந்து நாட்கள் நடைபெற்ற மன்னார் மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானத்தின் நிறைவில் வெள்ளிக்கிழமை (14) இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது. ஒரு மறைமாவட்டத்தில் குரு முதல்வர் பதவி என்பது மறைமாவட்ட ஆயருக்கு அடுத்த நிலையில் உள்ள உயர் பதவியாகும். மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குருமுதல்வராக நியமிக்கப்பட்டுள்ள அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் மன்னார் மாவட்டத்தின் முருங்கன் கிராமத்தில் காலம்சென்ற சந்தான் பாவிலு தம்பதியருக்கு பதினொராவது மகனாக 1969ஆம் ஆண்டு பிறந்தார். முருங்கன் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியையும், யாழ்ப்பாணம் புனித சம்பத்திரிசியார் கல்லூரியில் தனது உயர்தரக் கல்வியையும் கற்றார். யாழ்ப்பாணம் புனித மாட்டினார் சிறிய குருமடத்தில் தனது ஆரம்ப குருத்துவ உருவாக்கத்தைப் பெற்ற இவர், தனது மூன்று வருட மெய்யியல் கல்வியை கண்டி தேசிய குருத்துவக் கல்லூரியிலும், நான்கு வருட இறையியல் கல்வியை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியிலும் கற்றார். 1997ஆம் ஆண்டு அன்றைய மன்னார் ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகையினால் மன்னார் மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். வங்காலை, மன்னார் ஆகிய பங்குகளில் உதவி பங்குத்தந்தையாகவும், தலைமன்னாரில் பங்குத்தந்தையாக மூன்று வருடங்களும் பணியாற்றினார். தொடர்ந்து, மன்னார் மறை கல்வி இயக்குனராக ஐந்து வருடங்களும், கலையருவி எனப்படும் சமூகத்தொடர்பாடல் அருட்பணி மைய இயக்குனராக ஏழு வருடங்களும், மன்னார் மறைமாவட்ட கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் சர்வமத உரையாடல் ஆணைக்குழுவின் இயக்குனராக ஒன்பது வருடங்களும், 'மன்னா' என்ற மறை மாவட்டப் பத்திரிகையின் ஆசிரியராக 16 வருடங்களும், மன்னார் சிறிய குருமட அதிபராக ஐந்து வருடங்களும், மன்னார் மறைமாவட்ட செனட் சபையின் செயலாளராக ஐந்து வருடங்களும் பணியாற்றினார். தற்போது தோட்டவெளி வேதசாட்சிகள் இராக்கினி திருத்தலத்தின் பரிபாலகராகவும், தோட்டவெளி பங்கு தந்தையாகவும், மன்னார் மறைக்கோட்ட முதல்வராகவும் பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில் இந்தப் புதிய பணிப்பொறுப்பு அடிகளாருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ் நேசன் அடிகளார் சிறந்த கல்வித் தகைமை கொண்டவராக விளங்குகின்றார். ரோமாபுரியில் உள்ள ஊர் பானியா பல்கலைக்கழகத்தில் மெய்யியல் மாணிப் பட்டத்தையும் இறையியல் மாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்ட இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் எம். ஏ. பட்டத்தையும் கிறிஸ்தவ நாகரீகத்தில் எம். பில். பட்டத்தையும் பெற்றுள்ளார். தற்போது கண்டிபேராதெனிய பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் கலாநிதிப் பட்டத்தை நிறைவு செய்யும் நிலையில் உள்ளார். சிறந்த தமிழ் அறிஞராக திகழும் தமிழ் நேசன் அடிகளார் பத்துக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளமை குறமிப்பிடத்தக்கது. மேலும், இவர் பல தேசிய, சர்வதேச தமிழ் மாநாடுகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு நாடுகளில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். அத்தோடு, 2009 ஆம் ஆண்டு மன்னாரில் மன்னார் தமிழ்ச் சங்கத்தை நிறுவி அதன் தலைவராக இரண்டு தடவைகள் பணியாற்றியுள்ளார். 2010ஆம் ஆண்டு நான்கு நாள் மன்னார் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையும், 2013ஆம் ஆண்டு மூன்று நாள் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவையும் மன்னாரில் பிரமாண்டமாக நடாத்தி தேசிய சர்வதேச கவனத்தைப் பெற்றுக்கொண்டார். இந்த இரண்டு மாநாடுகளும் அடிகளாரின் செயற்திறனை வெளிப்படுத்திய இருபெரும் நிகழ்வுகளாகும். அடிகளாரின் தந்தை சந்தான் பாவிலு அவர்களும். அவருடைய தந்தை மரியான் சந்தான் அவர்களும் பல கத்தோலிக்க நாட்டுக் கூத்து நாடகங்களை எழுதிய புலவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தின் முதுபெரும் தமிழ் அறிஞர்களான நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் மற்றும் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் வழியில் தமிழ் பணி புரியும் அடிகளார் தொடர்ந்து எழுதியும், தமிழ் மாநாடுகளில் பங்கெடுத்தும் வருகின்றார். சமயப் பணியையும், தமிழ்ப் பணியையும் தனது இரு கண்களாகக் கொண்டு இடையறாது பணியாற்றும் அடிகளாரின் திறமையையும் செயற்திறனையும் அங்கீகரிக்கும் முகமாக மன்னார் மறைமாவட்ட திருச்சபை மறைமாவட்ட குருமுதல்வர் பணிப்பொறுப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குரு முதல்வராக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் நியமனம் | Virakesari.lk
  5. 15 Mar, 2025 | 06:55 PM (எம்.நியூட்டன்) தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இலங்கை இந்திய மீனவ பிரச்சினை தொடர்பாக அமைச்சர் கச்சத்தீவில் தமிழக மீனவர்களை சந்தித்து கலந்துரையாடினார். அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரிவித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த முறை இந்திய பக்தர்கள் பங்கேற்கவில்லை. இம்முறை பங்கேற்றிருந்தனர். கச்சத்தீவு திருவிழாவை எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இராமேஸ்வரத்தின் அனைத்து மீனவ கூட்டமைப்பின் தலைவர் ஜேசுராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டேன். இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையென்பது நீண்டகாலமாக நிலவும் பிரச்சினை.இதற்கான தீர்வு தொடர்பில் நீண்டகாலமாக கலந்துரையாடப்பட்டுவருகின்றது. இந்திய மீனவர்களை கைது செய்ய வேண்டும், சிறையில் அடைக்க வேண்டும் என நாம் நினைக்கவில்லை. அதற்கான தேவைப்பாடும் எமக்கு கிடையாது. எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாலும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமையை கடைபிடிப்பதாலுமே கைது செய்யப்படுகின்றனர். இந்திய மீனவர்கள் இழுவை படகை பயன்படுத்தி அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடல்வளத்தை அழித்தால் இந்து சமுத்திரமே பாலவனம் ஆகக்கூடும். போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்கள் இன்னும் மீண்டெழவில்லை. இந்நிலையில் தமிழக மீனவர்கள் அவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல என்றார். தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல ; சந்திரசேகர் | Virakesari.lk
  6. 5 Mar, 2025 | 05:42 PM (எம்.மனோசித்ரா) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் கொலை, கொள்ளை கலாசாரத்தை மக்கள் விடுதலை முன்னணியே (ஜே.வி.பி.) கற்றுக் கொடுத்தது. எனவே தற்போது நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இவ்வாறான சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த இயலுமைய இந்த அரசாங்கத்துக்கே காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். கண்டியில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்மிக்க நிலையிலேயே காணப்படுகிறது. நாட்டில் கொலை, கொள்ளை கலாசாரத்தை ஜே.வி.பி. தான் முதன் முதலில் ஆரம்பித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஜே.வி.பி. தான் இவற்றை கற்றுக் கொடுத்தது. 1984, 1985களில் ஜே.வி.பி.யிலிருந்து கொண்டு அதன் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்காதவர்கள் அந்தக் கட்சினராலேயே கொல்லப்பட்டனர். எனவே தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் துப்பாச்சூடுகள், வாள் வெட்டுக்களை கட்டுப்படுத்தக் கூடிய இயலுமையும், அனுபவமும் ஜே.வி.பி.க்கு காணப்படுகிறது. தற்போதுள்ள அரசாங்கம் அதற்கு மிகப் பொறுத்தமானதாகும். எனவே இந்த கொலை, கொள்ளை கலாசாரத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசபந்து தென்னகோன் தலைமறைவாகுமளவுக்கு ஒன்றும் இடம்பெறவில்லை. அவர் தலைமறைவாகாமல் இருந்திருந்தால் கைது செய்யப்பட்டிருந்தாலும், பிணையில் விடுதலையாகியிருக்கலாம். எவ்வாறிருப்பினும் அவர் ஓரிரு தினங்களில் வெளியே வருவார். அவர் இந்தளவுக்கு அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை. நாட்டு மற்றும் மக்கள் மீதான அன்பின் அடிப்படையிலேயே அரசியலில் ஈடுபட வேண்டும். அதனை விடுத்து தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்ல. நான் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதற்கான காலம் வந்துவிட்டது. எனவே உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் என்ன நடக்கும் என்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றேன் என்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை, கொள்ளை கலாசாரத்தை மக்கள் விடுதலை முன்னணியே கற்றுக்கொடுத்தது : எஸ்.பி.திஸாநாயக்க | Virakesari.lk
  7. (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மனித உரிமை பேரவையில் அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்கள் கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருந்து பாரியளவில் வேறுபட்டிருக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அதுதொடர்பான விடயங்களை அரசாங்கம் தெளிவாக தெரிவித்திருக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த மாதம் 25ஆம் திகதி இடம்பெற்றிருந்த 25ஆவது மனித உரிமை பேரவையில் எமது வெளிவிவகார அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றி இருந்தார். கடந்த வருடம் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பல விடயங்கள் அங்கு கையாளப்பட்டிருந்தன. எனினும் கடந்த கால அரசாங்கங்கள் கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருந்து அரசாங்கம் பாரியளவில் வேறுபட்டிருக்கவில்லை. மனித உரிமை தொடர்பில் பல விடயங்களை அமைச்சர் கூறி இருந்தார். அதனை நாங்கள் வரவேற்கிறோம். எமது நாடு பொருளாதார ஸ்திரதன்மைற்று இருக்கிறது. அதில் இருந்து மீள்வதற்கு தேவையான விடயங்களை செய்துவருகிறது என்பதை நாங்கள் அறிவோம். தமிழ் பேசும் பொலிஸார் இணைத்துக்கொள்ளல் போன்ற பல விடயங்களை தெரிவித்திருந்தீர்கள். ஆனால் இவை அனைத்தும் ஒரு அடையாளமாக மட்டுமே எமக்கு தெரிகிறது. அதிகாரிகளிடமிருக்கும் பணி நிலை தொடர்பான செயற்பாட்டையே நீங்களும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவகம், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அதுதொடர்பான விடயங்களை அரசாங்கம் தெளிவாக தெரிவித்திருக்க வேண்டும். அதன் நடைமுறைகள் தொடர்பில் தெரிவித்திருக்க வேண்டும். பொறுப்புக்கூறும் விடயம் காலதாமதாகி இருக்கிறது. இது தொடர்பில் சர்வதேச எம்மை குற்றம் கூறி இருக்கிறது. மனித உரிமை ஆணைக்குழு தொடர்பில் இலங்கையில் மனித உரிமை செயற்திட்டம் தொடர்பில் நேற்று ஆவணம் ஒன்று வெளிவந்திருக்கிறது. இணையத்தளத்தில் அது இருக்கிறது. செப் டெம்பர் அமர்வுகளுக்காக தயாராகி வருவதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அக்காலப்பகுதியில் மனித உரிமை தொடர்பில் அரசாங்கம் எடுத்த முன்னேற்றம் தொடர்பில் கூறுவதாக தெரிவித்திருந்தார்.அதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் தற்போது மனித உரிமை ஆணைக்குழுவினால் வெளியிட்டிருக்கும் அறிக்கையை அரசாங்கம் பார்க்க வேண்டும். அதில் பல்வேறு தலைப்புகளில் பல விடயங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. நீதி நியாயம் தொடர்பில் உறுப்பு நாடுகளின் நிலைப்பாட்டு தொடர்பில் கேட்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்திலான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளின் ஏற்பாடுகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 51 (1) பிரேரணைக்காகவும் அரசாங்கம் தெரிவித்துள்ள கருத்து தொடர்பிலும் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் இலங்கை ஆக்கப்பூர்வமாக செயற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அதேபோன்று பொறுக்கூறும் விடயத்தில் அவர்கள் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாதல், தேசிய ரீதியாக அல்லது பிராந்திய ரீதியாக அல்லது சர்வதேச ரீதியாக அவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுத்தல் என்பனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே கடந்த காலத்தில் இடம்பெற்ற அனைத்து தவறுகளும் இங்கு திருத்தப்பட்டிருக்கின்றன.பல கோரிக்கைகள் இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மனித உரிமை வன்முறைகள் வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் பின்பற்றப்படும் மரபுரிமைகள் இதற்கான டிஜிட்டல் தொழிநுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு, இந்த சாட்சியங்களும் தரவுகளும் சுருக்கமாக பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளன. எனவே அரசாங்கத்தின் புலனாய்வு துறையை பயன்படுத்தி அனைத்து சிவில் அமைப்பினராலும் இதனை செய்ய முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையை கண்டறிவதற்கு பல விடயங்கள் நாங்கள் வெளிக்கொண்டுவர வேண்டும். உண்மையை கண்டறிதல் எனும்போது முஸ்லிம்கள் பாரிய துன்பங்களுக்கு முகம்கொடுத்திருக்கின்றார்கள். முஸ்லிம்கள, தமிழர்கள் சிங்களவர்கள் என அனைவரும் துன்பப்பட்டிருக்கிறார்கள். அதனால் நாங்கள் இதில் இருந்து வெளியில் வரவேண்டும். மனித உரிமை ஆணைக்குழுவின் கோரிக்கைக்கமைய அனைத்தும் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்றார். அநுர அரசாங்கமும் வேறுபடவில்லை : ஹக்கீம் | Virakesari.lk
  8. கூறியது ஏன்? பட மூலாதாரம்,DHILEEPAN RAMAKRISHNAN கட்டுரை தகவல் எழுதியவர்,நந்தினி வெள்ளைச்சாமி பதவி,பிபிசி தமிழ் 13 மார்ச் 2025 பெரியார் மீது அவருடைய எதிர்ப்பாளர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படும் ஒரு விமர்சனம், அவர் தமிழை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறினார் என்பதுதான். நாடாளுமன்ற மக்களவையில் மார்ச் 11ஆம் தேதியன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரியாரின் பெயரைக் குறிப்பிடாமல், "தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்தை ஒவ்வொரு அறையிலும் (திமுகவினர்) வைத்திருக்கின்றனர். அவருக்கு மாலை அணிவித்து வணங்குகின்றனர், திராவிட இயக்கத்தின் அடையாளம் என்கின்றனர். ஆனால், அவர் தமிழை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறியுள்ளார்" எனப் பேசினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இத்தகைய விமர்சனத்தைப் பெரியார் மீது வைத்திருக்கிறார். உண்மையிலேயே பெரியார் தமிழ் மொழியை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறினாரா? தமிழ் மொழி குறித்த அவருடைய பார்வை என்ன? பெரியார் கூறியது என்ன? தமிழை 'காட்டுமிராண்டி மொழி' என்று பெரியார் கூறியிருப்பதாகத் தெரிவிக்கிறார், பிபிசி தமிழிடம் பேசிய திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன். ஆனால், அதை எந்த அர்த்தத்தில் கூறினார் என்பதைப் பொருத்திப் பார்க்க வேண்டும் என்கிறார் அவர். "இதிகாசங்கள், புராணங்களைச் சுட்டிக்காட்டி, தமிழ் மொழியில் சாதி, மதத்தைப் பாதுகாக்கும் வகையிலான அம்சங்கள் இருப்பதை பெரியார் பல சந்தர்ப்பங்களில் கோடிட்டுக் காட்டியுள்ளார். மாறாக, மனித வளர்ச்சிக்கும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பதற்கும் தமிழில் எதுவும் இல்லை என்பதை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். அந்த அர்த்தத்தில்தான் காட்டுமிராண்டித்தனமான விஷயங்கள் தமிழ் மொழியில் இருப்பதாக பெரியார் கூறினார்" என்கிறார் கலி. பூங்குன்றன். பெரியாரின் நோக்கம், தமிழ் மொழியைக் குறை கூறுவதாக அல்லாமல், விஞ்ஞான ரீதியாக தமிழ் மொழி சீர்திருத்தம் அடைய வேண்டும் என்பதே இதன் பொருள் எனச் சுட்டிக்காட்டுகிறார் அவர். இருப்பினும், மேடைகளில் 'தமிழ் காட்டுமிராண்டி மொழி' என்று பெரியார் பிரசாரம் செய்ததில்லை என்றும் ஓரிரு சமயங்களில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகின்றன, பெரியாரிய இயக்கங்கள். தாய் மொழி என்பதற்காகவே அதிலுள்ள பிற்போக்குத்தனத்தைச் சுட்டிக்காட்டக் கூடாது என்று அர்த்தம் இல்லை என்பதே பெரியாரின் வாதமாக இருந்ததாக பூங்குன்றன் கூறுகிறார். மேலும், தமிழ் மொழியின் பழம்பெருமையை மட்டுமே பேசிக்கொண்டிராமல், புதுமையை நோக்கி நவீனத்துடன் மொழி பரிணமிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகவே பெரியார் ஒரு குறையாக இதைக் கூறாமல், ஓர் அக்கறையின் வெளிப்பாடாகவே குறிப்பிட்டதாக, திராவிட இயக்கத்தினர் கூறுகின்றனர். தமிழ் மொழி குறித்த பெரியாரின் பார்வை பெரியாரை பொறுத்தவரையில் தனக்கு எவ்விதமான பற்றும் இல்லை என்றே தொடர்ந்து கூறி வந்திருக்கிறார். "எவனொருவன் மனித சமுதாயத்துக்காகத் தொண்டாற்ற வருகிறானோ அவனுக்கு நாட்டுப் பற்று, சாதிப் பற்று, மொழிப் பற்று உள்ளிட்ட எவ்விதப் பற்றும் இருக்கக் கூடாது," என்று அவர் கூறியிருக்கிறார். "மொழி என்பது போர்க்கருவி போல, போர்க் கருவிகளில் மாறுதல் ஏற்பட்டதைப் போல், மொழியிலும் மாறுதல் ஏற்பட வேண்டும்" என்பதே மொழி குறித்த பெரியாரின் பார்வை என்று, 'தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?' என்ற தனது புத்தகத்தில் விளக்குகிறார், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. "தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழிக் கலப்பாய் இடது கைபோல் பிற்படுத்தப்பட்டுவிட்டது. இந்த நோய்க்கு முக்கியக் காரணம், மதச்சார்புடையோரின் கையில் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான்" எனப் பெரியார் கூறியுள்ளதாக, அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பான 'மொழி - எழுத்து' நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மொழி குறித்த தனது கருத்துகளை 'விடுதலை' நாளிதழில் தொடர்ச்சியாகப் பதிவு செய்திருக்கிறார் பெரியார். அவற்றைத் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் கி.வீரமணி. 1970ஆம் ஆண்டு, டிசம்பர் 1 விடுதலை நாளிதழில் பெரியார் குறிப்பிட்டுள்ளவை: ''தமிழ் மொழி, ஆங்கில மொழி இரண்டைப் பற்றியும் என்னுடைய கருத்தைப் பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி, விஞ்ஞான மொழி என்பதும், தமிழ் வளர்ச்சியடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ் மொழி, ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும் பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ் மீது எனக்குத் தனி வெறுப்பு எதுவும் இல்லை.'' ''நான் வீட்டிலும், வெளியிலும் பேசுவது தமிழ், படிப்பது தமிழ், எழுதுவதும் தமிழ், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்று சில முறைகளைப் புகுத்தியவனும் நான்தான். தமிழ் வளர்ச்சியடையாத பழங்கால மொழியாக அப்படியே இருந்து வருகிறது. விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை. ஆகையால், தமிழ் மொழியைப் பயிற்சி மொழியாக எடுத்துப் படிக்கும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பில் சலுகை தருவதாகக் கூற வேண்டியதாகிறது." பெரியார் தமிழுக்காக என்ன செய்தார்? படக்குறிப்பு,பெரியாரின் மொழி குறித்த பார்வையைத் தனது புத்தகத்தில் விளக்கியுள்ளார் கி.வீரமணி "பெரியார் தமிழுக்கான எழுத்து சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். 1930களில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களை பெரியார் முன்னின்று நடத்தினார். அப்போதுதான், தமிழ்நாட்டிலேயே தமிழ் மொழியில் மறுமலர்ச்சி வருகிறது. அந்தக் காலகட்டதில் தமிழில் பல வடமொழி வார்த்தைகள் கலந்திருந்தன. அதையெல்லாம் மாற்றி, தமிழ் வார்த்தைகளை அன்றாடம் உபயோகிக்குமாறு செய்தார்," என்று பெரியார் தமிழ் மொழிக்காகச் செய்துள்ளவற்றைப் பட்டியலிட்டார் கலி. பூங்குன்றன். மேலும், தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதை ஊக்குவித்தார். ஊர்களின் பெயர்களில் சமஸ்கிருத ஊடுருவல் ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டியதாகவும், கோவிலில் வழிபாட்டு மொழியாக தமிழ் இருக்கக்கூடாதா என்று பெரியார் கேள்வியெழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார். அதோடு, தமிழ் மொழியின் ஆக்கபூர்வமான விஷயங்களை சுட்டிக் காட்டிய அதே நேரம், அதன் குறைகளையும் எடுத்துரைத்தவர் பெரியார் என்கிறார் கலி. பூங்குன்றன். தான் நடத்திய பத்திரிகைகளுக்கு விடுதலை, குடிஅரசு, உண்மை, பகுத்தறிவு, புரட்சி என தமிழ் பெயர்களையே பெரியார் சூட்டியுள்ளார். இந்தப் பத்திரிகைகளில், ஆயிரக்கணக்கிலான கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். தமிழை அறிவார்ந்த மொழியாக மாற்ற நினைத்தே அனைத்து மேடைகளிலும் பெரியார் திருக்குறளை முன்னிறுத்தி, திருக்குறள் மாநாடுகளை நடத்தியதாக, பெரியாரிய இயக்கத்தினர் கூறுகின்றனர். தமிழ் மொழியை எழுதுவதை எளிமையாக்கி எழுத்துச் சீர்திருத்தத்தை பெரியார் முன்னிறுத்தியுள்ளார். தமிழ் மொழியில் சீர்திருத்தம் தமிழ் மொழியில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த பெரியார் பல முயற்சிகளை மேற்கொண்டதாக மூத்த பத்திரிகையாளர் ப. திருமாவேலன் எழுதிய 'இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?' எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, "தமிழ்நாட்டு ஆட்சி தமிழில்தான் இருக்க வேண்டும். அது தமிழாட்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லிக் கொண்டே இருந்தார் பெரியார்" எனத் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் திருமாவேலன். "தமிழையும் மதத்தையும் பிரித்து, தமிழை அறிவு மற்றும் அறிவியல் மொழியாக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த அடிப்படையில் அனைத்து இடங்களிலும் தமிழ் ஆட்சி செல்ல வேண்டும்" என பெரியாரின் நோக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார் அவர். இந்திய விடுதலைக்குப் பிறகு மொழி வாரி ராஜ்ஜியங்களாக பிரிக்கப்பட்டபோது, 1956ஆம் ஆண்டு திராவிடர் கழகம் தஞ்சையில் நடத்திய மாநாட்டில், சென்னை ராஜ்ஜியம் எனும் பெயருக்குப் பதிலாக தமிழ்நாடு எனும் பெயரை வழங்க வேண்டும் என முதன்முதலில் கூறியது பெரியாரும் திராவிடர் கழகமும்தான் என்று கி.வீரமணி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஹிந்தி, சமஸ்கிருதம் குறித்து பெரியார் கூறியது என்ன? ஹிந்தி எதிர்ப்பில் பெரியார் மிகவும் வலுவாக இருந்ததாக திருமாவேலன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். "பெரியாரின் போராட்ட குணத்தை அதிகமாக்கியது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்தான். 1938ஆம் ஆண்டில் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வடிவத்தைக் கொண்டாலும், பெரியார் தமது ஹிந்தி எதிர்ப்பை 1929ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டார். 7.3.1929 நாளிட்ட 'குடிஅரசுவில்' ஹிந்தி எதிர்ப்பைத் தொடங்கினார். 'தமிழிற்குத் துரோகமும் ஹிந்தி பாஷையின் ரகசியமும்' என்பதுதான் 'சித்திரபுத்தன்' எனும் புனைப்பெயரில் அவர் எழுதிய கட்டுரைக்கு இட்ட தலைப்பு" என்று தனது நூலில் திருமாவேலன் குறிப்பிட்டுள்ளார். ஹிந்தி திணிப்புக்கு எதிராக மட்டுமின்றி சமஸ்கிருத ஆதிக்கத்துக்கு எதிராகவும் தொடர்ச்சியாகத் தனது கருத்துகளை பெரியார் பதிவு செய்துள்ளார். "இன்று தமிழ்நாட்டில் 'சமஸ்கிருதம்' என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா? எதற்காகவாவது பயன்படுகிறதா? அதற்கும் நமக்கும் எதிலாவது ஒற்றுமை-பொருத்தம் இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில், தமிழர்களின் வாழ்வில், சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், விஞ்ஞானத்தில் மற்றும் ஏதாவது ஒரு காரியத்துக்கு இந்த சமஸ்கிருதம் பயன்படுகிறதா?" என்று பெரியார் கேள்வியெழுப்பியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு பெரியார் தமிழ் மொழியை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறியது ஏன்? - BBC News தமிழ்
  9. சென்னை: நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டியபோது போலீஸாருடன் பிரச்சினை செய்ததாக கைதான சீமான் வீட்டுக் காவலர் மற்றும் பணியாளருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் பதியப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வீட்டில் வளசரவாக்கம் போலீஸார் சம்மன் ஒட்டினர். இந்த சம்மனை சீமான் வீட்டில் இருந்த பணியாளர் கிழித்தார். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டதாக சீமான் வீட்டுப் பணியாளரான சுபாகர் மற்றும் வீட்டின் பாதுகாவலரான அமல்ராஜ் ஆகியோரை கைது செய்த நீலாங்கரை போலீஸார், அமல்ராஜ் வைத்திருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், “இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் பதியப்பட்டுள்ளது. துப்பாக்கி வைத்திருப்பதற்கு உரிமம் இருப்பதால் தங்களை ஆயுத தடுப்புச் சட்ட பிரிவில் கைது செய்திருப்பது சட்டவிரோதமானது. ஜாமீனில் வெளியே வரக்கூடிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளபோதும் கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை,” என வாதிடப்பட்டது. காவல் துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் அருள்செல்வம், “சம்மனைக் கிழித்தது தொடர்பாக கேட்கச் சென்ற காவல் ஆய்வாளரை சீமான் வீட்டுப் பாதுகாவலர் உள்ளே செல்ல விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டார். அவரது வீட்டுப் பணியாளர் சம்மனைக் கிழித்துள்ளார். ஒருவேளை பாதுகாவலர் வைத்திருந்த துப்பாக்கி வெடித்து இருந்தால் அசம்பாவிதம் நிகழ்ந்து இருக்கும். துப்பாக்கி உரிமம் சொந்த பாதுகாப்புக்குத்தான் வழங்கப்படுகிறதே தவிர, அடுத்தவர்களை மிரட்ட துப்பாக்கியை பயன்படுத்த முடியாது,” என்றார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, “துப்பாக்கியை தவறாக பயன்படுத்தியிருந்தால் அதை ரத்து செய்வது தொடர்பாக அரசு முடிவு எடுக்கலாம். இருவர் மீதான குற்றச்சாட்டுக்குள் செல்ல விரும்பவில்லை. அதை அவர்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்ளட்டும். எனவே இருவரும் தினமும் காலை 10.30 மணிக்கு சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சீமான் வீட்டுக் காவலர், பணியாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்! | Summons tearing incident: Two people including Seeman domestic worker granted bail - hindutamil.in
  10. 13 Mar, 2025 | 02:19 PM யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான அங்கிகரிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்காக புதன்கிழமை (13) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு வருகைதந்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா, தொகுதி அமைப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட சிலரும் வருகை தந்திருந்தனர். யாழில் 17 உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றுவோம் - அமைச்சர் சந்திரசேகர் | Virakesari.lk
  11. 13 Mar, 2025 | 04:10 PM யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வசித்துவரும் குடும்பம் தெருவோரங்களில் ஆதரவற்று நிற்கும் நாய்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்த்து வருகின்றனர். ஆரம்பத்தில் இரண்டு நாய்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணியானது தற்போது 39 நாய்கள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் நாய்களை தங்களது சொந்த பிள்ளைகள் போலவே வளர்த்து வருகின்றனர். அயல் வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர், குறித்த குடும்பத்தினரால் வளர்க்கப்படுகின்ற நாய் ஒன்றின் மீது தாக்குதல் நடாத்திய நிலையில், அயல் வீட்டில் வசிக்கும் நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்துள்ளனர். அத்துடன், அவர்களது நாய்கள் காணாமல்போகின்ற சந்தர்ப்பங்களில் ஜோசியம் பார்த்தல், சமூக ஊடகங்கள் மூலம் பதிவுகளை பகிர்தல் ஆகியவற்றின் மூலம் நாய்களை கண்டுபிடிக்கின்றனர். குறித்த குடும்பத்தின் தலைவர் எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் நடைபயணம் ஒன்றினை மேற்கொண்டு, பலரது கையொப்பங்களை பெற்று நாய்களின் பாதுகாப்புக்கான சட்டங்களை இயற்றுவதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். யாழில் ஆதரவற்ற தெருநாய்களை வளர்க்கும் குடும்பம் | Virakesari.lk
  12. 13 Mar, 2025 | 05:31 PM (எம்.மனோசித்ரா) அரசாங்கத்தின் அவசர கோரிக்கையை ஏற்று மருத்துவமனைகளில் நிலவும் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக, இந்திய அரசாங்கம் 50,000 புரோஸ்மைட் ஊசி மருந்துகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வியாழக்கிழமை (13) சுகாதார அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் அவற்றை ஒப்படைத்தார். சுகாதாரத்துறை உட்பட பல்வேறு துறைகளில் நெருக்கடிகள் ஏற்பட்ட காலங்களில் இந்தியா இலங்கைக்கு நம்பகமான நண்பராகவும் முதலில் பதிலளிப்பவராகவும் இருந்து வருகிறது. கொவிட்-19 தொற்றுநோய் காலத்தில், 2020 மே மாதத்தில் சிறப்பு விமானம் மூலம் இந்தியா 25 தொன்களுக்கும் அதிகமான மருந்துகளை இலங்கைக்கு வழங்கியது. 2021 ஜனவரியில் 500,000 கொவிஷீல்ட் தடுப்பூசியை வழங்கியது. 2022 பெப்ரவரியில் ஒரு இலட்சம் அன்டிஜென் சோதனை கருவிகளை வழங்கியது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, 2022 இல், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான 1 பில்லியன் டொலர் கடன் வசதி ஒரு வருட காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது. அது மாத்திரமின்றி சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறைக்காக பல்வேறு ஒத்துழைப்புக்களை இந்திய வழங்கியுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அவசர கோரிக்கையை ஏற்று ஊசி மருந்துகளை அன்பளிப்பாக வழங்கியது இந்தியா | Virakesari.lk
  13. 13 Mar, 2025 | 05:38 PM வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தின் பௌர்ணமி நாள் செயற்பாட்டுத் தொடர்ச்சியில், பெண்களுக்கு எதிரான அனைத்துச் சுரண்டல்களையும் முடிவுக்கு கொண்டுவர “மௌனத்தைக் கலைப்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று வியாழக்கிழமை (13) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்ட பேரணியானது தந்தை செல்வா கலையரங்கு வரை சென்று நிறைவடைந்தது. பெண்களுக்கு எதிரான சுரண்டல்களை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் | Virakesari.lk
  14. மனநலம் பாதிக்கப்பட்ட யுவதி மீது துஷ்பிரயோகம்; துப்புரவுப் பணியாளர் கைது! யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டு, உளவியல் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் துப்புரவுப் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் முடிப்பதாக வாக்குறுதி வழங்கியே மனநலம் பாதிக்கப்பட்ட அந்த யுவதியை அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்று தெல்லிப்பழை பொலிஸாரிடம் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேக நபரான துப்புரவுப் பணியாளரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. சந்தேகநபரை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் நகர்வுகளும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மனநலம் பாதிக்கப்பட்ட யுவதி மீது துஷ்பிரயோகம்; துப்புரவுப் பணியாளர் கைது!
  15. 12 Mar, 2025 | 03:13 PM யாழ்ப்பாணத்தில் பாரிய வன்முறை குற்றங்களில் ஈடுபட்டுவரும் கும்பலொன்றின் தலைவர் என கூறப்படும் நபருக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. யாழில் வன்முறையில் ஈடுபட்டுவந்த கும்பலொன்றின் தலைவர் என கூறப்படும் நபரை வன்முறை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், அந்த சந்தேக நபர் 2022ஆம் ஆண்டு உரும்பிராய் பகுதியில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்து சென்றபோது, கூரிய ஆயுதங்களை காட்டி பொலிஸாரை அச்சுறுத்தி, சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனை தொடர்ந்து, பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டதையடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதனையடுத்து, சந்தேக நபருக்கு எதிராக தொடுக்கப்பட்ட இவ்வழக்குக்கான தீர்ப்புத் திகதியென மார்ச் 11ஐ நீதிமன்றம் குறிப்பிட்டிருந்த நிலையில், வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேக நபர் மீதான குற்றச்சாட்டுக்களில் ஒன்றுக்கு 3 மாதகால கட்டாய சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம், ஏனைய குற்றச்சாட்டுக்களுக்கு 2 வருடங்கள் 4 மாத காலமென சிறைதண்டனை விதித்து, அதனை 10 வருட காலத்துக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தது. யாழில் வன்முறை கும்பலொன்றின் தலைவராக இயங்கியவருக்கு சிறைத்தண்டனை! | Virakesari.lk
  16. இந்தியாவின் மும்பை நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணிப்பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று புதன்கிழமை (12) உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கை மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் இரட்டைக் குடியுரிமையை பெற்ற 65 வயதுடைய நபரொருவரே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் இன்றைய தினம் அதிகாலை 12.45 மணியளவில் இந்தியாவின் மும்பை நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்துள்ள நிலையில் மது போதையில் பயணிகள் மற்றும் பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. விமானப் பயணிகள் , பணிப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் : சந்தேக நபர் பிணையில் விடுதலை | Virakesari.lk
  17. யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவில் நல்ல நிலையில் காற்றின் தரம் 11 Mar, 2025 | 11:52 AM யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் நல்ல நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், நாட்டில் நேற்று திங்கட்கிழமை (10) காற்றின் தரக் குறியீடு பெரும்பாலான பகுதிகளில் மிதமான அளவிலும், வவுனியா, கேகாலை, நுவரெலியா, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் நல்ல நிலையிலும் காணப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை (07) காற்றின் தரக்குறியீடு 44 மற்றும் 88க்கு இடையில் பதிவாகும். அதன்படி, பெரும்பாலான நகரங்களில் மிதமான நிலையிலும், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் நல்ல நிலையிலும் காணப்படும். நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரக் குறியீடு மிதமாான நிலையில் காணப்படும். அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1.00 மணி முதல் 2.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவில் நல்ல நிலையில் காற்றின் தரம் | Virakesari.lk
  18. கொழும்பிலிருந்து புத்தூரை துவிச்சக்கரவண்டியில் சென்றடைந்து 74 வயது சிரேஷ்ட பிரஜை சாதனை! 11 Mar, 2025 | 04:52 PM கொழும்பிலிருந்து 450 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள வடபகுதி புத்தூர் நகரை துவிச்சக்கரவண்டியின் மூலம் மூன்றே நாட்களில் சென்றடைந்து பருத்தித்துறையைச் சேர்ந்த 74 வயதுடைய செல்வத்தம்பி குலராசா சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணம் - புத்தூர் சென்ற் லூக்ஸ் மெதடிஸ்ற் மிஷன் வைத்தியசாலைக்கு (St.Luke's Methodist Mission - hospital, Puttur) அத்தியாவசிய சுகாதார வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான நிதியை திரட்டுவதற்காக இவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 3 தசாப்த காலத்துக்கு முன்பு அவுஸ்திரேலியா நாட்டுக்கு புலம்பெயர்ந்து சென்ற செல்வத்தம்பி குலராசா பருத்தித்துறை - புலோலி கிழக்கை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். இவரது துவிச்சக்கரவண்டி சவாரியில் அவரது இரண்டு ஆண்பிள்ளைகள் உட்பட 70 துவிச்சக்கரவண்டி செலுத்துநர்கள் பங்குபற்றியிருந்தனர். இதன் மூலம் 1,30,000 பவுண்ட் நிதி திரட்டப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து புத்தூரை துவிச்சக்கரவண்டியில் சென்றடைந்து 74 வயது சிரேஷ்ட பிரஜை சாதனை! | Virakesari.lk
  19. 11 Mar, 2025 | 05:24 PM கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தகர்கள் இன்றையதினம் (11) பின்வரும் விடயத்தை சுட்டிக்காட்டி முழு கடையடைப்பை மேற்கொண்டனர். அந்த கோரிக்கைகளாவன, நீண்டகாலமாக தற்காலிகமாக தகரக் கொட்டகைகளில் வர்த்தகத்தில் ஈடுபடும் புடைவை, அழகுசாதன மற்றும் ஏனைய வாணிப வர்த்தகர்களுக்கு நிரந்தரக் கட்டடத்தை கட்டி வழங்குவதாக பலதரப்பினராலும் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் இதுவரை காலமும் அவை நிறைவேற்றப்படவில்லை. தற்போது உலக வங்கியின் அனுசரணையில் ரூ40மில்லியன் நிதியில் மேற்படி வர்த்தகர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கரைச்சி பிரதேச சபையால் திட்டமிடப்பட்டு 08 கடைகள் அமைக்கப் பெற்று தற்போது வர்த்தகர்களுக்கு எதுவித பயனும் இன்றி கேள்வி கோரல் மூலம் (டென்டர்) கடைகளை வழங்க பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளமையானது வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மீறும் செயலாகும். 04.06.2024 அன்று வடமாகாண பிரதம செயலாளர் தலைமையில் வர்த்தகர் அபிவிருத்திச் சங்க மற்றும் உள்ளூராட்சித் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி இணக்கம் காணப்பட்ட தற்காலிக கடைகளை A9 வீதியையும், கனகபுர வீதியையும் பார்க்கக் கூடியவாறு வழங்குதல் எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கெனவே அரச திணைக்களத்தால் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் பிரகாரம் கிளி சேவைச்சந்தை வர்த்தகர்களுக்கு கட்டடங்களைக் கட்டி வாழ்வாதார கடைகளாக வழங்குவதாகவே உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தது. இவ்விடயத்தில் வர்த்தகர்களாகிய நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம். பொதுவாக கிளிநொச்சி சேவைச்சந்தையின் பிரதான மரக்கறி வாணிபம், மீன் வாணிபம், புலால் வாணிபம், பழ வாணிபம் போன்றவற்றுக்கு இடையூறாக சேவைச்சந்தையினை அண்மித்த பகுதிகளில் மேற்படி வியாபாரங்களை மேற்கொள்ள கரைச்சி பிரதேச சபை அனுமதித்துள்ளமையால் சேவைச்சந்தை வர்த்தகர்கள் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளனர். அம்பாள்குளத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் மொத்த வியாபாரம் எனப் பெயரிடப்பட்டு தற்போது அங்கு காலை 5.00 மணி தொடக்கம் மாலை 10.00 மணி வரை சில்லறை வியாபாரம் நடைபெற்று வருதலும் அங்கு வரிநடைமுறை பின்பற்றப்படாமையால் சேவைச்சந்தைக்கு உற்பத்தியாளர்களும், நுகர்வோரும் வருகை தரும் வீதம் வீழ்ச்சியடைந்து செல்கின்றது. கிளிநொச்சி சேவைச்சந்தையின் மரக்கறி, வெற்றிலை. மீன். பழ வாணிபம் அனைத்து வாணிபங்களுக்கும் 4% சதவீத வரி அறவீட்டால் உற்பத்தியாளர்களின் வருகையும், சந்தைப்படுத்தும் வாய்ப்பும் குறைந்துள்ளது. கிளிநொச்சி சேவைச்சந்தையை அண்மித்த பகுதியில் நடைபெறும் நடைபாதை வியாபாரங்களால் சேவைச்சந்தை முற்றுமுழுதாக செயல் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையால் நிரந்தர கட்டடங்களுக்கான முறையற்ற திட்டமிட்ட இடவாடகை அதிகரிப்பும் சேவைச்சந்தை வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. சேவைச்சந்தையின் வர்த்தகர்களுக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை போன்ற விடயங்களை முன்வைத்து இன்றைய நேரம் முழு வர்த்தகர்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தவர்கள் கவனையீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் இன்றைய தினம் 11.03.2025 இதற்கான உரிய தீர்வு வழங்கப்பபடாவிட்டால் தொடர் போராட்டத்தை சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தமக்கான உரிய தீர்வினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து தமக்கான தீர்வினை பெற்று தர வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளனர். கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தகர்களினால் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டி முழு கதவடைப்பு | Virakesari.lk
  20. 11 Mar, 2025 | 06:25 PM தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (ரெலோ) நீண்டகாலமாக செயற்பட்டுவந்த விந்தன் கனகரட்ணம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் ஆயுட்கால உறுப்பினராக இணைந்துகொண்டார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், தனது கல்வியங்காடு அலுவலகத்தில் வைத்து விந்தன் கனகரட்ணத்திற்கான கட்சி உறுப்புரிமையை வழங்கி வைத்தார். வடக்கு மாகாணசபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை, யாழ் மாநகரசபைகளில் முன்னாள் உறுப்பினராக விந்தன் கனகரட்ணம் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது விந்தன் கனகரட்ணத்தின் புதல்வனும் யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவனுமான வி.கே.மார்க் அன்ரனியும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் இணைந்து கொண்டார். தமிழரசுக் கட்சியில் ஆயுட்கால உறுப்பினராக இணைந்தார் விந்தன் கனகரட்ணம்! | Virakesari.lk
  21. எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பில் நேரில் சென்று ஆராயவுள்ளதாகவும் இதுவிடயத்தில் நியாயமான முறையில் தலையிட முடியும் என தான் நம்புவதாகவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார். பத்தாவது பாராளுமன்றத்தின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சர் தலைமையில் கூடியபோது யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பில் குழுவில் வினவப்பட்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இனங்களுக்கிடையில் சுமுகத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் உரிய தலையீட்டை மேற்கொள்ளும். யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள விகாரை அமைந்துள்ள இடத்திற்கு விஜயம் செய்து அதனைப் பார்வையிடவுள்ளேன், இதுவிடயத்தில் நியாயமான முறையில் தலையிட முடியும் என நம்புகின்றேன் என்றார். யாழ். வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பில் ஆராய்ந்து நியாயமான முறையில் தலையிட முடியும் - ஹினிதும சுனில் செனவி | Virakesari.lk
  22. 10 Mar, 2025 | 10:30 AM நோய்களை குணப்படுத்துவதாக இந்தியாவிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் தீவிர மதபிரசாரத்தில் ஈடுபட்ட குழுவினர் சுற்றுலா விசா நடைமுறைகைள மீறிய குற்றச்சாட்டில் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். குறித்த குழுவினரை குடிவரவு குடியகல்வுத்துறை புலனாய்வாளர்களால் கண்டறியப்பட்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரண்டு மதபோதகர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக நாடுகடத்தப்பட்டனர். இதேவேளை, இந்தியாவில் சுற்றுலா விசாவில் வந்து, யாழ்ப்பணத்தில் சிற்பவேலைகளில் ஈடுபட்டிருந்த எட்டு பேர் மற்றும் யாழில் உள்ள உணவகங்களில் பணிபுரிந்த ஐவர் என மேலும் 13 இந்தியப் பிரஜைகள் யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக சென்னைக்கு நாடுகடத்தப்பட்டனர். யாழில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தல் | Virakesari.lk
  23. 10 Mar, 2025 | 02:28 PM இலங்கையில் உள்ள ரோகிங்யா அகதிகள் இன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உணவு வீடு போன்ற நிரந்தர மற்றும் உடனடி உதவிகளை கோரி அவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். கடலில் இருந்து மீட்கப்பட்டோம் ஆனால் தரையில் உயிரிழக்க விடப்பட்டுள்ளோம் என தெரிவிக்கும் பதாகைள் உட்பட தங்கள் துயரங்களை தெரிவிக்கும் பல்வேறு பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர். கடலில் இருந்து மீட்கப்பட்டோம் ஆனால் தரையில் உயிரிழக்கின்றோம் - ஐநா அலுவகத்தின் முன்னால் ரோகிங்யா அகதிகள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk
  24. 10 Mar, 2025 | 03:51 PM இலங்கை முதலீட்டிற்கு ஒரு கவர்ச்சிகரமான இடம் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டுவதில் ஒரு பங்காளராக இருக்க விரும்புவதாகவும், இலங்கை அரசாங்கத்துடனும் தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டத்திற்கான ஆரம்ப கட்ட திட்டங்களுடன் ஒத்துழைப்புடன் செயற்பட இது சிறந்த வாய்ப்பு என்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடகர், பாடலாசிரியர் மற்றும் தொழில்முனைவோர் அலோ பிளெக் (Aloe Blacc) தெரிவித்தார். இசைக்கு அப்பால் பரந்துபட்ட மிக முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடகர், பாடலாசிரியர் மற்றும் தொழில்முனைவோர் அலோ பிளெக் (Aloe Blacc) மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று (10) காலை இலங்கைக்கு வருகை தந்தார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் அதிகாரிகள் ஆகியோர் அலோ பிளெக்கிற்கு அமோக வரவேற்பளித்தனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே பிளெக் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தற்பொழுது காணப்படும் மற்றும் புதிய நிறுவனங்கள் ஆகிய இரு பிரிவுகளும் உள்ளடங்கியதாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு முதலீடுகள் மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் புதிய கருத்துக்களை மேற்பார்வை செய்ய சந்தர்ப்பம் கிடைத்திருப்பது மிகவும் தனித்துவமானது என்று குறிப்பிட்ட அலோ பிளெக், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள பல முதலீட்டாளர்களுடன் தான் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருப்பதாகவும், இலங்கையில் காணப்படும் மூலங்கள் குறித்து அவர்களுடன் கலந்துரையாட தான் எதிர்பார்ப்பதாகவும் கூறினார். அவரின் ‘I Need a Dollar’ ('ஐ நீட் எ டாலர்') மற்றும் ‘Wake Me Up’(வேக் மீ அப்') போன்ற பாடல்கள் உலகளவில் மிகவும் பிரபலமான பாடல்களாகும். அலோ பிளெக்கின் எமது நாட்டுக்கான வருகை உயிரியல் தொழில்நுட்பம், சுகாதார சேவை புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் அவர் கொண்டுள்ள ஆர்வத்தை பிரதிபலிக்கிறது. இலங்கையில் மூன்று நாள் தங்கியிருக்கும் அவர், உள்ளூர் தொழில்முனைவோர் மற்றும் கலைஞர்களைச் சந்தித்து, கலாசார மற்றும் அறிவியல் துறைகளில் ஒத்துழைப்புகளை மேம்படுத்த உள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பல கலந்துரையாடல்கள் நடத்த உள்ளதோடு இலங்கை கருவா, மரமுந்திரிகை உற்பத்திகள், தெங்கு சார்ந்த பொருட்கள், சேதனப் பொருட்கள், சக்திதரும் இயற்கை பானங்கள், உணவு மற்றும் விவசாயம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற உள்ளூர் தொழில்முனைவோரையும் சந்திக்க உள்ளார். இது தவிர அலோ பிளெக் உயிரியல் தொழில்நுட்ப நிபுணர்களுடனும் முதலீட்டாளர் மாநாடுகளிலும் பங்கேற்க இருக்கிறார். மேலும் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் மற்றும் புத்தாக்குநர்களுடன் பல சந்திப்புகளிலும் அவர் பங்கேற்க உள்ளார். சீகிரிய, மின்னேரியா உள்ளிட்ட கலாசார முக்கியத்துவம்வாய்ந்த இடங்களையும் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது. இசை, தொழில்முனைவு மற்றும் சமூக சேவை நடவடிக்கைகளில் ஆலோ பிளெக் மிகுந்த முகாமைத்துவத்துடன் ஈடுபட்டு வருகிறார். ஒரு விஞ்ஞானியாக வர ஆசைப்பட்ட அவர் 2022 ஆம் ஆண்டு கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான உயிரியல்த் தொழில்நுட்ப தீர்வுகளில் விசேட கவனம் செலுத்தி Major Inc. நிறுவனத்தை ஆரம்பித்தார். அமெரிக்க கடற்படை வீரரான ஆலோ பிளெக்கின் தந்தையின் ஊக்கத்தினால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், தற்போது உலகின் முன்னணி விஞ்ஞானிகளுடன் இணைந்து வைரஸ் தொற்றுகளை எதிராக செயற்பட்டு வருகிறது. உயிரியல் தொழில்நுட்பத்திற்கு அப்பால், புத்தாக்கம் மீதான அவரின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் பொலிகிராப் மற்றும் ஜிரோப்டிக் போன்ற தொழில்நுட்ப வர்த்தகங்களிலும் அவர் முதலீடு செய்துவருகிறார். இந்த வணிக நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, அலோ பிளெக் இசை மற்றும் சமூக சேவை நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். அவரது அண்மைய இசைவெளியீடான Stand Together -2025 ஊடாக , ஒற்றுமை மற்றும் தாங்கும் இயலுமையை ஊக்குவிக்கிறது. அலோ பிளெக்கின் இலங்கை விஜயம் அவரது இசை நிபுணத்துவத்தை மட்டுமல்ல, புத்தாக்கம், அறிவியல் மற்றும் சமூகப் பொறுப்பு மீதான அவரது ஆர்வத்தையும் எடுத்துக்காட்டுகிறது. இலங்கை முதலீட்டிற்கு உகந்த இடம் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டுவதில் ஒரு பங்காளராக இருக்க விரும்புகிறேன் - அமெரிக்க பாடகர் அலோ பிளெக் | Virakesari.lk
  25. 10 Mar, 2025 | 04:39 PM கே .குமணன் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்டு தற்போது இராணுவத்தினரின் வசமுள்ள நீச்சல் தடாகத்தை முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில் நீச்சல் பயிற்சிகளை விளையாட்டு வீரர்கள் பெறும் வகையிலும் பயன்படுத்துவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனிடன் கோரிக்கை ஒன்று விடுக்கப்படுள்ளது. கடந்த சனிக்கிழமை (08) முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினரின் ஏற்பாட்டில் முல்லை பிரிமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி புதுக்குடியிருப்பில் நடைபெற்றிருந்தது. இந்த போட்டியின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் கலந்துகொண்ட போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்படுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் வைத்தியர் உதயசீலனால் இந்த கோரிக்கை ஆளுநர் முன்பாக முன்வைக்கப்படுள்ளது. அதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தில் நீச்சல் பயிற்சிகள் கடல்களில் நிகழ்த்தப்பட்ட போதிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சகல வசதிகளுடனும் நீச்சல் தடாகம் ஒன்று இரணைப்பாலை பகுதியில் ஒரு வளமான நீச்சல் தடாகம் ஒன்று உள்ளது. அதனை முல்லைத்தீவு மாவட்டம் மட்டுமல்ல ஏனைய மாவட்ட வீரர்களும் பயன்படுத்தும் வகையில் பயன்படுத்த கூடியவகையில் அந்த நீச்சல் தடாகத்தை ஒரு நீச்சல் பயிற்சி மையமாக பயன்படுத்த மாவட்ட விளையாட்டுக்குழுவோ அல்லது வேறு யாராவது பொறுப்பேற்று நடத்த ஆவன செய்ய வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் வைத்தியர் உதயசீலன் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். முல்லைத்தீவு இரணைப்பாலை பகுதியில் அமைந்துள்ள இந்த நீச்சல் தடாகம் தமிழீழ விடுதலைப்புலிகளால் நீச்சல் பயிற்க்காக பயன்படுத்தப்பட்டு வந்த நீச்சல் தடாகம் என்பதோடு இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் தற்போதுவரை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்டு இராணுவத்தினர் வசமுள்ள நீச்சல் தடாகத்தை விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்த ஆளுநரிடம் கோரிக்கை | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.