Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. யாழ்ப்பாணம், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும், அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ். மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. குறித்த கடித்ததில், கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியை பொது மக்களுக்கு கையளிக்க இணைக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம். குறித்த கூட்டத்திற்கு, விகாரைக்கு பொறுப்பான விகாராதிபதியையோ, விகாரை நிர்வாகத்தினரையோ அழைத்திருக்கவில்லை எனவே அந்த இணைக்கப்பாட்டை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. விகாரை அமைக்கப்பட்டுள்ள 07 ஏக்கர் காணி, அதனை சூழவுள்ள காணி என 14 ஏக்கர் காணியையும் விகாரைக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக விகாரைக்கு சொந்தமான காணிகளை பொது மக்களுக்கு வழங்க முடியாது. விகாரைக்கு உரிய காணியில், பௌத்த சமய முன்னேற்றத்திற்கான சைத்யம், புத்த மெதுரா, போதி, அன்னதான மடம், மடாலயம் , ஓய்வு மண்டப வசதிகள், தியான மண்டபங்கள், பூங்கா போன்றவை அமைக்கப்பட வேண்டும் அதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 14 ஏக்கர் காணியும் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு சொந்தமானது - அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ். மாவட்ட செயலருக்கு கடிதம் | Virakesari.lk
  2. 06 Feb, 2025 | 04:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சபையில் அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனை படைக்கல சேவிதர்களைக் கொண்டு சபையில் இருந்து வெளியேற்ற நேரிடும் என்று பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி கடுமையாக எச்சரித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (06) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமரிடத்தில் கேள்வியெழுப்பி உரையாற்றும் போது, சபாபீடத்தை அவமதிக்கும் வகையில் அவர் வசனமொன்றை வெளியிட்டதால் ஏற்பட்ட சர்ச்சையின் போது அர்ச்சுனா எம்.பி அமைதியற்ற முறையில் நடந்துகொண்டமையினால் சபாநாயகர் இவ்வாறு எச்சரிக்கையை விடுத்தார். எதிர்க்கட்சித் தலைவரால் தெரிவிக்கப்பட்ட கருத்தொன்று தொடர்பில் பிரதி சபாநாயகர் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் போது, புதன்கிழமை பாராளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பியினால் சபாநாயகரை பார்த்து வெட்கம் என்று கூறிய வசனத்தை சுட்டிக்காட்டியும் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சபாபீட ஆசனத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். அதேபோன்று நேற்று எம்.பியொருவர் இந்த ஆசனத்தை பார்த்து 'ஷேம்' என்று கூறி அவமதித்துள்ளார். நான் அவ்வேளையில் இந்த ஆசனத்தில் இருந்திருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பேன் என்றார். இவ்வேளையில், அர்ச்சுனா எம்.பி அது தொடர்பில் ஏதோ கருத்து தெரிவிக்க முயன்றதுடன், அமைதியற்ற முறையிலும் நடந்துகொண்டார். இதன்போது ஆசனத்தில் அமருமாறும், சபையின் ஒழுக்கத்தை பேணுமாறும் பிரதி சபாநாயகர் அவரை கேட்டுக்கொண்டார். ஆனால் தொடர்ந்தும் அர்ச்சுனா எம்.பி அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட நிலையில், நீங்கள் ஆசனத்தில் அமராவிட்டால் படைக்கல சேவிதர்களை கொண்டு சபையில் இருந்து வெளியேற்ற நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்பில் அர்ச்சுனா எம்பி அமைதியாக இருந்தார். சபையை விட்டு வெளியேற்ற நேரிடும் ; அர்ச்சுனா எம்.பியை எச்சரித்த பிரதி சபாநாயகர் | Virakesari.lk
  3. 06 Feb, 2025 | 05:23 PM மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கற்சேனை, அம்பிளாந்துறை, வால்கட்டு, கடுக்காமுனை, அரசடித்தீவு போன்ற பல கிராமங்களை சூழ்ந்து காணப்படும் வில்லுக்குளத்தில் காட்டுயானைகள் சஞ்சரிப்பதை பிரதேச வாசிகள் இன்றைய தினம் வியாக்கிழமை (06) அவதானித்ததுடன், அப்பிரதேசத்திற்கு பொறுப்பான வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக வருகை தந்து காட்டுயானைகளை பார்வையிட்டனர். இது தொடர்பில் ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கூறுகையில், தற்போது பகல் வேளையாகவுள்ளது, எனினும், வேளாண்மை அறுவடை செய்யப்பட்டு கொண்டிருக்கின்ற இவ்வேளையில் கிராமவாசிகளும் விவசாயிகளும் தற்போது அதனை சூழ காணப்படுகின்றனர். எனவே காட்டு யானைகளை தற்போது விரட்டுவததானது சாத்தியமற்றது. எனினும் பிற்பகல் 6.00 மணிக்கு பின்னர் இந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் துரத்தி விடுப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம் எனத் தெரிவித்தனர். புதன்கிழமை (05) இரவு வால்கட்டு கிராமத்திற்குள் உள்நுழைந்த காட்டு யானைகள் வாழைத்தோட்டங்களையும், தென்னை மரங்களையும் வீழ்த்திவிட்டுச் சொன்றுள்ளன. இவ்வாறு காட்டு யானைகளினார் தாம் மிகுந்த மிகவும் அச்சத்துடன் வாழ்வதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம் | Virakesari.lk
  4. (நா.தனுஜா) நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கான கருத்தடைக்கு முன்னரான தடுப்பூசி வழங்கலின் ஊடாக விசர்நாய்க்கடி நோயினால் (ரேபிஸ்) மனிதர்கள் மத்தியில் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை கணிசமானளவினால் வீழ்ச்சியடைந்திருப்பதாக விலங்குகள் நலன் கூட்டிணைவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் கலாநிதி சமித் நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார். விசர்நாய்க்கடி மற்றும் தெருநாய்க்கடி போன்றவற்றால் பெரும் எண்ணிக்கையானோர் பாதிக்கப்படுவதாகக் கரிசனைகள் வெளிப்படுத்தப்பட்டுவரும் பின்னணியில், இதன் உண்மைத்தன்மை குறித்துத் தெளிவுபடுத்தியிருக்கும் சமித் நாணயக்கார, 'அண்மையில் நாய்க்கடியின் விளைவாக 6500 பேர் பதுளை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தியொன்று வெளியாகியிருந்தது. இருப்பினும் இவ்வாறான சம்பவங்களில் 90 சதவீதமானவை வீட்டில் வளர்க்கப்படும் நாய்களினாலேயே இடம்பெறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தெருநாய்களால் தாம் நெருக்கடிக்கு முகங்கொடுப்பதாகவும், எனவே இவ்விடயத்துக்கு மாவட்ட மட்டத்திலேயே தீர்வுகாணவிருப்பதாகவும் குறித்தவொரு மாவட்டக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஆகையினால் அவர்கள் இவ்விடயம் தொடர்பில் உரியவாறு ஆராயாமல், பொருத்தமற்ற உடனடித் தீர்மானங்களை எடுத்துவிடுவார்களோ என்றும், அதன்விளைவாகப் பெரும் பாதிப்பு ஏற்படுமோ என்றும் நாம் அஞ்சுகிறோம். 2007 ஆம் ஆண்டு நாய்க்கடியினால் 63 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இருப்பினும் 2024 இல் நாய்க்கடியினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆகக் குறைவடைந்திருக்கிறது. அதேவேளை நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசாங்கம் பெருமளவு நிதியை செலவிடுவதாகவும் செய்தியொன்று வெளியாகியிருக்கிறது. ஆனால் உண்மையில் 2007 ஆம் ஆண்டிலும், 2024 ஆம் ஆண்டிலும் அதற்கு ஏற்பட்டிருக்கும் செலவு 600 மில்லியன் ரூபா மாத்திரமேயாகும். ஆனால் அக்காலப்பகுதியில் 150 ரூபாவாக இருந்த டொலர் ஒன்றின் பெறுமதி இப்போது 300 ரூபா வரை உயர்வடைந்திருக்கிறது. மருந்துப்பொருட்களின் விலைகள் முன்னரை விடவும் இரு மடங்கினால் அதிகரித்திருக்கின்றன. தற்போதைய தரவுகளின் பிரகாரம் 60 சதவீதமான நாய்களுக்குக் கருத்தடை மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், 80 சதவீதமான நாய்களுக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் எமது சகல முயற்சிகளையும் பயனற்றுப்போகச்செய்யும் விதமாக சமூகப்பொறுப்பற்ற பலர் தாம் வீட்டில் வளர்க்கும் நாய்களைத் தெருவில் விட்டுச்செல்கிறார்கள். எனவே தற்போது நடைமுறையிலிருக்கும் ரேபிஸ் கட்டளைச்சட்டத்தைத் திருத்துவதன் ஊடாகவும், விலங்குகள் நலன்பேண் சட்டமூலத்தின் ஊடாகவுமே தீவிர கரிசனைக்குரிய இந்நெருக்கடிக்கு உரியவாறு தீர்வுகாணமுடியும்' எனவும் கலாநிதி சமித் நாயணக்கார தெரிவித்துள்ளார். அதேவேளை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் விசர்நாய்க்கடி நோய் ஒழிப்பு செயற்திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறு எட்டப்படாமைக்கு போதிய எண்ணிக்கையான மிருக வைத்தியர்கள் இன்மையே பிரதான காரணம் எனச் சுட்டிக்காட்டியுள்ள விலங்கு நல செயற்பாட்டாளர் சம்பா பெர்னாண்டோ, ஆகவே இச்செயற்திட்டம் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். விசர்நாய்க்கடி நோய் உயிரிழப்புக்கள் வீழ்ச்சி ; உண்மைக்கு புறம்பான செய்தி - கலாநிதி சமித் நாணயக்கார | Virakesari.lk
  5. 05 Feb, 2025 | 12:52 PM நெல் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய உத்தரவாத விலையை அரசாங்கம் இன்று புதன்கிழமை (05) அறிவித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபை, நெல் கொள்முதல் செய்யும் விலைகளை அறிவிப்பதற்காக இன்று (05) விசேட ஊடக சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர். அரிசி சந்தையின் போக்கு மற்றும் விவசாயிகளின் உற்பத்திச் செலவுகளை மதிப்பீடு செய்த பின்னரே விலைகள் தீர்மானிக்கப்பட்டதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். நாட்டு நெல் ஒரு கிலோவுக்கு 120 ரூபாய்க்கும். சம்பா நெல் ஒரு கிலோவுக்கு 125 ரூபாய்க்கும், கீரி சம்பா நெல் ஒரு கிலோவுக்கு 132 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படும். மேலும், விவசாயிகளிடமிருந்து உலர்ந்த நெல்லை மட்டுமே அரசாங்கம் கொள்வனவு செய்யும் என விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அரிசி சந்தையில் ஸ்திரத்தன்மையைப் பேணுவதுடன், விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் வலியுறுத்தினார். நெல் சந்தைப்படுத்தல் சபை இந்த விலையில் நெல் கொள்வனவுகளை உடனடியாக ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல் கொள்முதலுக்கான உத்தரவாத விலையை அறிவித்தது அரசாங்கம் | Virakesari.lk
  6. 05 Feb, 2025 | 02:43 PM வீதிகளிலுள்ள கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தி விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையாக நேற்று செவ்வாய்க்கிழமை (04) இரவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அண்மைய நாட்களாக கால்நடைகள் இரவு நேரங்களில் வீதிகளில் நிற்பதனால் அதிக வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் புதுக்குடியிருப்பு பிரதேசசபையினர் பொலிஸாரின் உதவியுடன் ஒட்டுசுட்டான், கற்சிலைமடு, மந்துவில், சிவநகர், கோம்பாவில், கைவேலி ஆகிய பிரதேசங்களில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை நேற்றைய தினம் நடைபெற்றது. குறித்த நடவடிக்கையில் 100க்கும் அதிகமான மாடுகள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் பிடிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் செயலாளர் ச.கிருசாந்தன் கூறிய போது, வெறுமனே எம்மால் மேற்கொள்ளப்படும் இந் நடவடிக்கையினால் மாத்திரம் தீர்வு பெற்றுவிட முடியும் என்பது சாத்தியமற்ற ஒன்று. கால்நடைகளின் உரிமையாளர்களிற்கு நிச்சயமாக ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். சபைக்கான வருமானமீட்டலினை பிரதானமாக கொண்டு இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை. எமக்கான சமூக பொறுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது. புதுக்குடியிருப்பு உப அலுவலக பிரிவில் 100 இற்கு மேற்பட்ட கால்நடைகள் சபைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிடிபட்ட கால்நடைகளுக்கு, கால்நடை வைத்திய அலுவலகங்களினூடாக அன்றையதினமே காதுப்பட்டி அணிவித்து தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துபவர்களிற்கு மட்டுமே குறித்த கால்நடைகள் வழமையாக நடைமுறைகளில் பிரகாரம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் உப அலுவலக பிரிவில் வீதிகளில் கால்நடைகள் மிக குறைந்த அளவில் காணப்பட்டன அவை அங்கிருந்து சபைக்கு வரும் வழியில் வேலிகள் அற்ற தனியார் காணிகளினூடாக தப்பி சென்றுவிட்டன. பெரிய மாடு 3000 ரூபாயும், சிறிய மாடு 1000 ரூபாவும், மீளவும் அதே கால்நடைகள் பிடிபடுமிடத்து 5000 ரூபா நாள் ஒன்றுக்கான பராமரிப்பு கூலி 500 ரூபா விகிதம் அறவிடப்படும் என்றார். போக்குவரத்திற்கு இடையூறு ; புதுக்குடியிருப்பில் 100 ற்கு மேற்பட்ட கால்நடைகள் மடக்கி பிடிப்பு | Virakesari.lk
  7. 05 Feb, 2025 | 05:18 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த சிறப்புரிமை மீறல் பத்திரத்தில் உள்ள விடயங்களைத் தவிர்த்து சபையில் உரையாற்றிய ஏனைய அனைத்து விடயங்களும் ஹன்சாட்டிலிருந்து நீக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார். சட்டம் அனைவருக்கும் சமமானது. பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி அமைச்சராக இருந்தாலும் சரி எவரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட முடியாது. தயவு செய்து அந்த சட்டத்துக்கமைய நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை நோக்கி சபாநாயகர் குறிப்பிட்டார் பாராளுமன்றம் புதன்கிழமை (5) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது. இதனையடுத்து ஜனாதிபதியின் அறிவிப்பு, குழுக்களின் அறிவிப்புக்களை சபாநாயகர் சபைக்கு அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. 2025.01.21ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து தான் கொழும்பு நோக்கி வரும்போது அநுராதபுரம் பகுதியில் தனது வாகனத்தை போக்குவரத்து பொலிஸார் நிறுத்தியபோது ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து அர்ச்சுனா உரையாற்றினார். அர்ச்சுனா தமிழில் உரையாற்றிய நிலையில் அதன்போது குறுக்கிட்ட சபாநாயகர் 'நீங்கள் உங்களின் சிறப்புரிமை பிரச்சினை தொடர்பான பத்திரத்தை ஆங்கிலத்தில் சமர்ப்பித்துள்ளதால் ஆங்கிலத்திலேயே உரையாற்ற வேண்டும்' என்று அறிவுறுத்தினார். இதன்போது “நான் சிங்களத்தில் உரையாற்றவா?” என்று அர்ச்சுனா சபாநாயகரிடம் கேட்டார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் “முடியாது. நீங்கள் ஆங்கிலத்தில் கடிதத்தை முன்வைத்துள்ளதால் அந்த மொழியிலேயே உரையாற்ற முடியும்” என்றார். அதனை தொடர்ந்து அர்ச்சுனா ஆங்கிலத்தில் உரையாற்றிய நிலையில், இடையில் குறுக்கிட்ட சபாநாயகர் “நீங்கள் வழங்கிய கடிதத்தில் உள்ள விடயங்களை மட்டுமே குறிப்பிட முடியும்” என்று அறிவுறுத்தினார். எனினும் அர்ச்சுனா தொடர்ந்தும் வேறு விடயங்களை முன்வைத்ததுடன் சபாநாயகரை நோக்கி விரல் நீட்டி உரையாற்றினார். இதன்போது அர்ச்சுனாவின் உரை தொடர்பில் அறிவித்தல் விடுத்த சபாநாயகர், அர்ச்சுனாவினால் முன்வைக்கப்பட்ட சிறப்புரிமை கடிதத்தில் இல்லாத விடயங்கள் அனைத்தும் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்படும் என அறிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய சபாநாயகர் அர்ச்சுனாவை நோக்கி 'நீங்கள் போக்குவரத்து விதியை மீறியுள்ளமை தொடர்பிலும், உங்களுக்கு எதிராக போக்குவரத்து சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் பொலிஸாரால் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டம் அனைவருக்கும் சமமானது. பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி அமைச்சராக இருந்தாலும் சரி எவருக்கும் சட்டத்தை மீறிச் செல்ல முடியாது. இதனால் தயவுசெய்து அந்த சட்டத்துக்கமைய நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இதேவேளை நீங்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்கான வசதிகளை வழங்குமாறும் நாங்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளோம். இதற்கு அப்பால் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார். அதனை தொடர்ந்து மீண்டும் உரையாற்ற அர்ச்சுனா முயன்ற நிலையில், “நீங்கள் சமர்ப்பித்த பத்திரத்துக்கு அப்பாற்பட்ட விடயங்களை முன்வைக்கின்றீர்கள்” என்று குறிப்பிட்டு, தொடர்ந்து உரையாற்றுவதற்கு அனுமதி வழங்குவதை மறுத்தார், சபாநாயகர். எவரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட முடியாது - அர்ச்சுனாவை நோக்கி சபாநாயகர் தெரிவிப்பு | Virakesari.lk
  8. வளி மாசடைதலினால் ஏற்படும் சுவாச நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை - விசேட வைத்திய நிபுணர் (செ.சுபதர்ஷனி) சமூகத்தில் வளி மாசு இந்நாட்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இன்றயதினம் (நேற்று) காலை காற்றின் தரம் 65 சதவீதமாக பதிவாகியிருந்தது, எனினும் சராசரியாக 50 வீதத்துக்கும் குறைவாகவே காற்றுத் தரச் சுட்டெண் அமைய வேண்டும். இந்நிலையில் நாட்பட்ட சுவாச நோயாளர்களுக்கு நோய் நிலைமை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. ஆகையால் வெளியிடங்களுக்கு செல்வதாயின் முககவசங்களை அணியுமாறு சுவாசநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் போதிக்க சமரசேகர வலியுறுத்தியுள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (05) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சமூகத்தில் வளிமாசு இந்நாட்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அசுத்தமான நீர், உணவு போன்றவற்றை நாம் உண்ணாமல் அருந்தாமல் தவிர்க்களாம். எனினும் வளி மாசடைந்திருக்குமாயின் எம்மால் சுவாசிக்காமல் இருக்க முடியாது. வளர்ந்த மனிதன் ஒருவன் சராசரியாக நாளாந்தம் 10 லிட்டர் காற்றை உள்ளெடுத்து வெளியிடுகிறான். அவ்வாறிருக்கையில் சுவாசிப்பதை எம்மால் கட்டுப்படுத்த முடியாது. நாட்டில் தற்போது வளிமாசு அதிகரித்துள்ளது. எம்மை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் எவ்வாறு உள்ளது என்பதை அறிந்துக் கொள்வது அவசியம். நவீன கையடக்க தொலைபேசிகளில் காற்றின் தரத்தை அறிந்துக் கொள்வதற்கான பிரயோக செயலிகள் உள்ளன. அதற்கமைய இன்றயதினம் (நேற்று) காலை காற்றின் தரம் 65 சதவீதமாக பதிவாகியுள்ளது. சராசரியாக 50 வீதத்துக்கும் குறைவாகவே காற்றுத் தரச் சுட்டெண் அமைய வேண்டும். இந்நிலையில் நாட்பட்ட சுவாச நோயாளர்களுக்கு நோய் நிலைமை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. விசேடமாக ஆஸ்துமா மற்றும் நாட்பட்ட சுவாச நோயாளர்கள் நோய் நிலைமைத் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுவது நல்லது. வாகனப்புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் வெளிநாடுகள் அறுவடையின் பின்னர் நிலங்கள் தீயிட்டு எரிக்கப்படுவதால் அவற்றின் புகையும் வளியில் கலந்து வளிமாசு அதிகரித்துள்ளது. வளி என்பது உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரந்துள்ளது. அதன் எல்லையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆகையால் பிற நாடகளில் இடம்பெறும் வளிமாடையும் செயற்பாடுகளால் எமது நாடும் பாதிப்புக்குள்ளாகுகிறது. வளி மாசு அதிகரித்திருக்கும் சந்தர்ப்பங்களில் தொண்டை மற்றும் கண்களில் அரிப்பு, காய்ச்சல், மூச்சுத்திணறல், வாந்தி, கலக்கம், உடல் சமநிலையின்மை போன்ற அறிகுறிகள் தென்படக்கூடும். அத்தோடு ஆஸ்துமா நோயாளர்களுக்கு இளைப்பு தீவிரமடைவதால் சுவாசிப்பதில் சிரமங்கள் ஏற்படலாம். இதன்போது அருகில் உள்ள வைத்தியசாலையை நாடுவது நல்லது. நாட்பட்ட சுவாச நோயாளர்கள், கர்ப்பிணித் தாய்மார், வயோதிபர்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோர் இந்நாட்களில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுகிறேன். வெளியிடங்களுக்கு செல்வதாயின் முககவசங்களை அணிவது பாதுகாப்பானது. அடுப்புப் புகை உள்ளிட்ட வீட்டின் உட்புற சூழலில் நிகழும் வளி மாசடைதலை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதிவரை சுவாசநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்களின் மாநாடு இடம்பெற உள்ளது. இதன்போது சமகாலத்தில் அதிகரித்துள்ள சுவாச நோய்கள் தொடர்பில் வெளிநாட்டு நிபுணர்களுடன் விரிவாக கலந்துரையாட உள்ளது என்றார். இதேவேளை சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தமித் ரொட்றிகோ கருத்து தெரிவிக்கையில், உலகளவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய தொற்றா நோய்களின் பட்டியலில் நாட்பட்ட சுவாச நோய் மூன்றாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளதுடன் நுரையீரல் புற்றுநோய் ஆறாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வளிமாசு மற்றும் புகைத்தலே பெருமளவில் சுவாச நோய்களுக்கு காரணமாக உள்ளது. சிகரெட் உள்ளிட்ட புகைத்தலுடன் தொடர்புடைய ஏனைய உற்பத்தி பொருட்களில் உள்ள நிகோடின், ஆசனிக், ஹைட்ரோ கார்பன், தார் போன்ற வேதி பொருட்களால் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்நாட்களில் இளம் வயதினரிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. தகாத பழக்கங்களினால் எதிர்காலத்தில் இவ்வாறன நோய் நிலைமைகளுக்கு ஆளாக நேரிடலாம் என்றார். வளி மாசடைதலினால் ஏற்படும் சுவாச நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை - விசேட வைத்திய நிபுணர் | Virakesari.lk
  9. கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்துக்குச் செல்லும் பாதையினை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளமையால் 50 மீற்றர் தொலைவில் உள்ள மைதானத்துக்கு மாணவர்கள் ஒரு கிலோ மீற்றர் பயணம் செய்கின்றமை தொடர்பில் இலங்கை இராணுவத் தளபதிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளது. பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியினை அடிப்படையாக கொண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனராஜ் இன்று (5) இக்கடிதத்தை எழுதியுள்ளார். கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள் 50 மீற்றர் தூரத்தில் உள்ள தங்களுடைய பாடசாலை மைதானத்துக்கு தினமும் ஒரு கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று வருகின்றனர். அதுவொரு ஆபத்தான பயணமாக காணப்படுகிறது என்பதனை சுட்டிக்காட்டிய மனித உரிமைகள் ஆணைக்குழு இது தொடர்பில் இராணுவம் 11.02.2025க்கு முன்னர் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்குமாறும் கோரியுள்ளது. இக்கடிதத்தின் பிரதிகள் கல்வி அமைச்சின் செயலாளர், வட மாகாண ஆளுநர், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இராணுவ ஆக்கிரமிப்பில் கிளிநொச்சி மகா வித்தியாலய பாதை! - மனித உரிமைகள் ஆணைக்குழு இராணுவ தளபதிக்கு கடிதம் | Virakesari.lk
  10. 03 Feb, 2025 | 02:58 PM அமெரிக்காவின் தேசிய கீதமிசைக்கப்பட்டவேளை உரத்து கூச்சலிட்டுள்ள கனடாவின் ஹொக்கி இரசிகர்கள் தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை கொள்வனவு செய்யப்போவதாக உறுதிமொழியெடுத்துள்ளனர். ஒட்டாவாவில் அமெரிக்க கனடா ஹொக்கி அணிகளிற்கு இடையிலான போட்டியின் போது அமெரிக்க தேசியகீதம் இசைக்கப்பட்டவேளை கனடா ரசிகர்கள் உரத்த குரலில் கூச்சலிட்டுள்ளனர். கனடாவிற்கு எதிராக டிரம்ப் வரிகளை அறிவித்து ஒரு சில மணித்தியாலங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரு நாடுகளினதும் அணிகளிற்கும்இடையில் இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியின் போதும் கனடா ரசிகர்கள் அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை கூச்சலிட்டுள்ளனர். வழமையாக அமைதியான முறையில் நடந்துகொள்ளும் கனடா ரசிகர்கள் கூச்சலிட்டு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளமை,டிரம்பின் வரிகள் குறித்து அவர்கள் அதிருப்தியடைந்துள்ளதை வெளிப்படுத்துகின்றது என பிபிசி தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு கனடா ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களிற்கும் டிரம்ப் விதித்துள்ள ஏற்றுமதி செவ்வாய்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றது. வலுச்சக்தி பொருட்களிற்கு டிரம்ப் பத்துவீத வரியை விதித்துள்ளார். இந்த வரிகள் அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் எச்சரித்துள்ள பொருளாதார நிபுணர்கள் இந்த வரிகள் பல மாதங்களிற்கு தொடர்ந்தால் அமெரிக்கா பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ளவேண்டிவரும் என தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியின் இந்த வரிகள் குறித்த சீற்றம் கனடாவில் அதிகரித்து வருகின்றது அதேவேளை அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து போராடவேண்டும் என்ற மனோநிலையும் காணப்படுகின்றது. கனடா பிரதமர் இந்த மனோநிலையை வெளிப்படுத்தியுள்ளார். எங்களில் பலர் இந்த புதிய வரிகளால் பாதிக்கப்படுவோம்,சில கடினமான காலங்களை நாங்கள் எதிர்கொள்வோம்,ஏனையவர்கள் குறித்து அக்கறை கொண்டு செயற்படுங்கள் என நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன் என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார் தற்போது கனடாவை தெரிவு செய்யும் தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கியப்படுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை கனடாவின் சிலர் ஏற்கனவே செவிமடுத்துள்ளனர். கனடாவின் சமூக ஊடகங்களில் அமெரிக்க பொருட்களை எவ்வாறு தவிர்ப்பது என்ற வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளன. சிலர் அமெரிக்காவிற்கான பயணங்களை இரத்து செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர். டிரம்பின் வரிவிதிப்பினால் கனடாவில் சீற்றம் - அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை கூச்சல் | Virakesari.lk
  11. அமெரிக்காவின் நியாயமற்ற வரிகளுக்கு பதிலாக வரித் திட்டம் : எமது தேசம் இலக்கு வைக்கப்படும்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை - கனேடிய அமைச்சர்கள் 03 Feb, 2025 | 04:49 PM ஐக்கிய அமெரிக்கா கனேடிய பொருட்கள் மீது விதித்த நியாயப்படுத்த முடியாததும், நியாயமற்றதுமான வரிகளுக்குப் பதில் நடவடிக்கையாக 155 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் மீது கனேடிய அரசு வரிகளை விதிக்குமென கனேடிய நிதியமைச்சரும் பல்மட்ட அரசுகளுக்கு இடையிலான விவகாரங்களுக்கான அமைச்சருமான டொமினிக் லெப்ளாங்கும் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜொலியும் இணைந்து அறிவித்தனர். கனடாவின் நலன்களையும் நுகர்வோரையும் பணியாளர்களையும் வணிக நிறுவனங்களையும் பாதுகாப்பதும் தற்காப்பதுமே இந்தப் பதில் நடவடிக்கைகளின் ஒரே நோக்கமாகும் என்றும் தேவையற்றும் நியாயமின்றியும் எமது தேசம் இலக்கு வைக்கப்படும் போது நாம் எதுவும் செய்யாது பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். வரித் திட்டம் குறித்து மேலும் குறிப்பிடுகையில், எமது பதில் நடவடிக்கையின் முதல் கட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 30 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் மீதான வரிவிதிப்பு உள்ளடங்குகின்றது. ஐக்கிய அமெரிக்க வரிகள் நடைமுறைக்கு வரும் 2025 பெப்ரவரி 4 ஆம் திகதி அன்றே இந்த வரிகளும் நடைமுறைக்கு வரும். தோடம்பழச்சாறு, கச்சான்பட்டர், வைன், மதுபானங்கள், பியர், கோப்பி, வீட்டு உபகரணப்பொருட்கள், ஆடைகள், பாதணிகள், மோட்டார் சைக்கிள்கள், அழகுசாதனப்பொருட்கள், கடதாசிக்கூழ், கடதாசி போன்றன வரிவிதிப்புப் பட்டியலில் அடங்கியிருக்கும். இந்தப் பொருட்களின் விரிவான பட்டியல் விரைவில் வெளியிடப்படும். ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 125 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மேலதிக பொருட்களுக்கும் வரிகளை விதிக்க அரசு உத்தேசித்துள்ளதாக அமைச்சர் லெப்ளாங் மேலும் அறிவித்தார். வரி நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக முழுமையான பட்டியல் பகிரங்கப்படுத்தப்பட்டு, மக்கள் கருத்து வெளியிடுதவற்கு 21 நாட்கள் வழங்கப்படும். மின்சார வாகனங்கள் உட்படப் பயணிகள் வாகனங்களும் பார ஊர்திகளும் உருக்கு மற்றும் அலுமினியப் பொருட்கள், குறிப்பிட்ட பழங்களும் மரக்கறிகளும் மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி, பாற்பொருட்கள், பார ஊர்திகள், பேருந்துகள், பொழுதுபோக்கு வாகனங்கள், பொழுதுபோக்கு படகுகள் போன்றனவும் இந்தப் பட்டியலில் அடங்கியிருக்கும். நியாயப்படுத்த முடியா வரிகளைக் கனடா மீது ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்து நடைமுறைப்படுத்தினால், முதல் கட்டப் பதில் நடவடிக்கைகளுக்கு மேலதிகமான நடவடிக்கைகளை ஆராயும் போது வரி அல்லாத நடவடிக்கைகள் உட்பட அனைத்துத் தெரிவுகளையும் அரசு கருத்திற் கொள்ளுமென அமைச்சர்கள் லெப்ளாங்கும் ஜொலியும் வலியுறுத்தியுள்ளனர். தேவையற்றும் நியாயமின்றியும் எமது தேசம் இலக்கு வைக்கப்படும் போது நாம் எதுவும் செய்யாது பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. கனேடிய நலன்களையும் வேலைவாய்ப்புக்களையும் அரசு பாதுகாக்கும். பாதிக்கப்படும் பணியாளர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் உதவியளிக்க நாம் தயாராகவிருக்கின்றோம். வரிகளை விதிக்கும் ஐக்கிய அமெரிக்க அரசின் முடிவு, அமெரிக்க பொருளாதாரத்திற்கும் மக்களுக்கும் பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தும். வரிகள் ஐக்கிய அமெரிக்க மோட்டார் கார்த் தொழிற்சாலைகளிலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் விற்பனை நிலையங்களிலும் அமெரிக்க நுகர்வோரின் செலவினத்தை அதிகரித்து, அமெரிக்க செல்வச் செழிப்பை ஆபத்துக்குள்ளாக்கும். உடனடிப் பதில் நடவடிக்கையாகக் கனடா விதித்த வரிகளாலும் எதிர்காலத்தில் விதிக்கக் கூடிய வரிகளாலும் கனேடிய தொழிலாளர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைப்பதற்கு விதிவிலக்கான நிவாரணத்தை வழங்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்கு வரி நிவாரணப் பொறிமுறை ஒன்றை உருவாக்கவும் அரச நடவடிக்கை எடுக்கின்றது. இந்தக் கட்டமைப்பு மற்றும் நடைமுறை குறித்த விபரங்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும். கனடாவின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் பலப்படுத்தவும், ரீம் கனடாவாக ( Team Canada ) உறுதியான பதில் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கும் ஐக்கிய அமெரிக்காவில் முடிவெடுப்போரிடம் அனைத்துக் கனேடியர்களின் சார்பாகவும் வாதிடவும் மாகாண, பிராந்திய அரசுகளுடனும் வணிகத்துறை மற்றும் தொழிலாளர் தலைவர்களுடனும் அரசு தொடர்ந்தும் நெருக்கமாக இணைந்து செயலாற்றி வருகின்றது. அமெரிக்காவின் நியாயமற்ற வரிகளுக்கு பதிலாக வரித் திட்டம் : எமது தேசம் இலக்கு வைக்கப்படும்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை - கனேடிய அமைச்சர்கள் | Virakesari.lk
  12. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இலங்கை விமானப்படையின் 3 விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக பரவும் செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கான தனது பயணத்திற்காக ஜனாதிபதி இலங்கை விமானப்படை விமானங்களைப் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.. இந்தப் பயணத்திற்கு இலங்கை விமானப்படையின் எந்த விமானமும் பயன்படுத்தப்படவில்லை என்றும், ஜனாதிபதி தனது உத்தியோகப்பூர்வ காரிலேயே பயணம் செய்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது. R Tamilmirror Online || விமானங்களை பயன்படுத்தினாரா ஜனாதிபதி?
  13. சட்டவிரோத விகாரைக்கு காணியை தாரைவார்க்க தையிட்டி மக்கள் தயார்! -வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!! தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் மாற்றுக்காணிகளைக் கேட்டார்கள் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தவிடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். இந்த விடயத்தில் ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்க முன்னதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கட்டப்பட்ட விகாரையை அகற்ற முடியாது என்றும், அந்தக் காணிகளின் உரிமையாளர்கள் மாற்றுக்காணிகளைப் பெற்றுக்கொள்ள சம்மதித்துள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார். தங்கள் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் செயலரும், தற்போதைய ஆளுநருமான நா.வேதநாயகன் தெரிவித்திருந்த கருத்து விமர்சனங்களைத் தோற்றுவித்திருந்தது. இந்தப் பின்னணியில் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; காணியின் உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, காணியின் உரிமையாளருடன் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டிருந்தது. திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விகாரைக்குச் சொந்தமான அயலில் உள்ள காணியை மாற்றீடாகத் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்தச் சந்திப்பில் விகாரை தற்போதுள்ள காணி தனியாருக்குச் சொந்தமானது என்று தெரிவித்த அவர்கள் அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தனர். திஸ்ஸ விகாரைக்குரிய காணி பிறிதொரு இடத்தில் அமைந்துள்ளதையும் தெளிவுபடுத்தினர். விகாரை தற்போது அமைந்துள்ள காணிக்கு மேலதிகமாகவும் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த காணி உரிமையாளர்கள், அந்தக் காணியை விடுவித்துத் தருவதுடன் விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாகத் தமக்கு வழங்க வேண்டும் என்று கோரினர். காணி உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அமைய இதுதொடர்பாக விகாராதிபதியுடனும், நயினாதீவு விகாராதிபதியுடனும் பேச்சு நடத்தப்படுகின்றது. இந்த இணக்கப்பாடு யோசனை தொடர்பாக புத்தசாசன அமைச்சின் கவனத்துக்கும் கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - என்றுள்ளது. சட்டவிரோத விகாரைக்கு காணியை தாரைவார்க்க தையிட்டி மக்கள் தயார்!
  14. யாழின் பண்பாடுகளை பறைசாற்றும் வகையில் செயற்பட்ட பழைய மாணவர்கள்! யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மாட்டுவண்டி பவனி ஒன்று நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றுகூடலின்போது, 2010ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த மாட்டுவண்டி பவனி முன்னெடுக்கப்பட்டது. பவனியில் ஈடுபட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள வீதிகளை சுற்றி பவனியாக வலம் வந்தபோது வீதியில் சென்ற மக்கள் மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு உற்சாகமூட்டுவதை அவதானிக்க முடிந்தது. தமிழர்களின் பாரம்பரியத்தை பேணிக்காப்பதற்கு இவ்வாறான செயற்பாடுகளின் ஈடுபடுகின்ற பழைய மாணவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். யாழின் பண்பாடுகளை பறைசாற்றும் வகையில் செயற்பட்ட பழைய மாணவர்கள்!
  15. கோட்டபய, மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஆகியோரை கைதுசெய்ய அரசாங்கம் அவதானம் - கம்மன்பில (இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஆகியோரை கைது செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். சுவிற்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சமடைந்துள்ள அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. அசாத் மௌலானாவுக்கு எதிராக முறைப்பாடளிக்க பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அழுத்தம் பிரயோகித்ததாக குறிப்பிடுமாறு சாய்ந்தமருது பொலிஸார் அசாத் மௌலானாவின் மனைவிக்கு ஏன் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். இதன் பின்னணியில் உள்ள அரச சக்தி என்னவென்பதை அரசாங்கம் வெளிப்படையுடன் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார். கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கோட்டபய, மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஆகியோரை கைதுசெய்ய அரசாங்கம் அவதானம் - கம்மன்பில | Virakesari.lk
  16. 02 Feb, 2025 | 05:12 PM கண்டி இராச்சியத்தின் இறுதி அரசனான ஶ்ரீ விக்ரம இராஜசிங்கனின் 193 ஆவது நினைவு தினம் அவரது வழித் தோன்றல்களினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) கண்டியில் நினைவு கூறப்பட்டது. இந்த நிகழ்வு கண்டியிலுள்ள வரலாற்றுப் புகழ்மிக்க ஶ்ரீ நாத தேவாலய வளாகத்தில் சமய நிகழ்வுகள் நடை பெற்றன. இவ்வைபவத்தில் அரசனின் மனைவியான தங்கம்மா அரசியின் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டதுடன் பல்வேறு பூஜைகளையும் மேற்கொண்டனர். அதனை அடுத்து ஶ்ரீ தலதா மாளிகையை அடுத்துள்ள இராஜமாளிகைக்கும் சென்று ஶ்ரீ விக்கரம இராஜசிங்கனின் உருவச்சிலை மற்றும் புகைப்படங்களையும் பார்வையிட்டனர். இராஜசிங்க மன்னனின் உறவினர்களின் ஒருவர் எனக் கூறப்படும் கண்டியைச் சேர்ந்த அருள் செல்வராஜ் இது பற்றித் தெரிவிக்கையில், வருடா வருடம் தமது உறவினர்கள் மேற்படி நினைவேந்தல் மற்றும் சமய நிகழ்வுகளை மேற்கொள்வதாகக் கூறினார். மேற்படி ஶ்ரீ விக்ரம இராஜசிங்கனது அரச மாளிகையை புனரமைத்துத் தந்த அமெரிக்க அரசிற்கும் அதன் தூதுவர் ஜூலி சங்கிற்கும் நன்றி தெரிவித்தார். ஶ்ரீ விக்ரம இராஜசிங்க மன்னனின் வழித் தோன்றல்களினால் கண்டியில் விசேட நிகழ்வு | Virakesari.lk
  17. (லியோ நிரோஷ தர்ஷன்) தூய்மையான அரசியல் என்று கூறினாலும், அரசாங்கத்தின் செயல்களும் நடவடிக்கைகளும் தூய்மையானதாக இல்லை என்பது கொள்கலன் விடயத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி கட்டுப்பாடுகளை, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் இலங்கைக்கும் விதித்தால் அரசாங்கம் என்ன செய்யும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர்களுடனான சந்திப்பு நேற்று கொழும்பு - 7 அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (01) இடம்பெற்ற போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் குறிப்பிடுகையில், மக்கள் நிதியை மோசடி செய்தவர்களை கைது செய்வதற்கு யாரும் எதிர்ப்ப தெரிவிக்க போவதில்லை. ஆனால் அரசியல் பழிவாங்கல் நோக்குடன் அரசாங்கம் செயல்படுவதை ஒரு போதும் ஏற்க முடியாது. பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களின் போது அரசாங்கம் முன்வைத்த திட்டங்கள், வழங்கிய உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்பட வில்லை. அதற்கான ஆரம்ப நிலை முன்னெடுப்புகள் காணப்பட வில்லை. தொலைநோக்குடன் சிந்திக்காது பொறுப்பற்ற வகையில் அரசாங்கம் செயல்படுவது நாட்டின் எதிர்காலத்திற்கு சிறப்பாக இருக்காது. சீனாவுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி கட்டுப்பாடுகளை, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் இலங்கைக்கும் விதித்தால் அரசாங்கம் என்ன செய்யும். அவ்வாறானதொரு நிலை வந்தால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஜனாதிபதி அநுரவின் அரசாங்கம் இன்னும் சிந்திக்க கூட இல்லை. தூய்மையான அரசியல் என்று கூறினாலும், அரசாங்கத்தின் செயல்களும் நடவடிக்கைகளும் தூய்மையானதாக இல்லை. 300க்கும் மேற்பட்ட கொள்கலன்களை அரசாங்கம் சட்டவிரோதமாக விடுவித்துள்ளது. இது குறிதத பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் அரச தரப்பு வாயடைத்து போகிறது. எனவே கொள்கலன் விடயத்தில் சந்தேகங்கள் உள்ளன. நாடு பொருளாதார ரீதியில் சவால்களை எதிர் கொள்கையில் இரண்டு ஆண்டுகள் கடுமையாக போராடி நிலைமையை சீராக்கினோம். அதன் பின்னர் பொருளாதார ரீதியிலான ஸ்திரதன்மையை நோக்கி நாட்டை கொண்டு செல்ல செயல்பட்டோம். ஆனால் நாட்டில் இன்று ஸ்தீரதன்மை ஒன்று உள்ளதா? என்பதை சிந்திக்க வேண்டும் . வரவு - செலவு திட்டத்தை அரசாங்கம் மார்ச் மாத்தில் நிறைவேற்ற உள்ளது. அரசாங்கத்தின் வரவு - செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் சர்வதேச நாணய நிதியத்தின் குழு இலங்கைக்கு வரும். இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் வழிகாட்டல் வரவு - செலவு திட்டத்தில் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை இதன் போது ஆராய்வார்கள். 2024 ஆம் ஆண்டு மதிப்பிடப்பட்ட தொகையை சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும். இந்த நிதியுடன் வரவு - செலவு திட்டம் எவ்வாறு பயணிக்கும் என்பதை அவர்கள் தீவிரமாக ஆராய்வார்கள் என குறிப்பிட்டார். அமெரிக்கா வரி கட்டுப்பாடுகளை விதித்தால் அரசாங்கம் என்ன செய்யும்? - ரணில் கேள்வி | Virakesari.lk
  18. யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாக தமக்கு வழங்க வேண்டும் என தன்னிடம் கோரியிருந்தனர் என வடமாகாண ஆளுநர் நா, வேதநாயகன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தையிட்டியில் தற்போது திஸ்ஸவிகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , காணியின் உரிமையாளர்களுடன் சந்திப்பு நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்பின்போது விகாரை தற்போது அமைந்துள்ள காணி தனியாருக்குச் சொந்தமானது என்றும் அது தொடர்பான ஆவணங்களையும் அவர்கள் இதன்போது சமர்ப்பித்திருந்தனர். திஸ்ஸவிகாரைக்குரிய காணி பிறிதொரு இடத்தில் அமைந்துள்ளது என்பதையும் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர். விகாரை தற்போது அமைந்துள்ள காணிக்கு மேலதிகமாகவும் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த காணி உரிமையாளர்கள் அந்தக் காணியை விடுவித்துத் தருவதுடன், விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாக தமக்கு வழங்கவேண்டும் எனக் கோரியிருந்தனர். காணி உரிமையாளர்களது கோரிக்கைக்கு அமைவாக இது தொடர்பில் விகாராதிபதியுடனும், நயினாதீவு விகாரையின் விகாராதிபதியுடனும் ஆளுநர் பேச்சு நடத்திவருகின்றார். அத்துடன் இந்த இணக்கப்பாடு யோசனை தொடர்பில் புத்தசாசன அமைச்சின் கவனத்துக்கும் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நடைபெற்ற யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திஸ்ஸ விகாரையை அகற்றி , அந்த காணியை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்த போது, ஆளுநர் குறித்த காணி உரிமையாளர்கள் மாற்று காணியை கேட்டுள்ளதாக குறிப்பிட்டார். குறித்த விடயம் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் , அதனைதெளிவு படுத்தும் முகமாக ஆளுநர் குறித்த செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் என்னிடம் மாற்று காணி கேட்டார்கள் - வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் | Virakesari.lk
  19. 02 Feb, 2025 | 05:31 PM இலங்கையின் கடல் வளத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தமது அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்றாகும். அதற்குரிய பொறிமுறையும் உருவாக்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் வெண்புரவி புனித அந்தோனியார் கடற்றொழில் கிராமிய அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். தமது பகுதியில் கடல் அரிப்பை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மீனவர்கள் இளைப்பாறுவதற்கு உரிய வசதிகள் இல்லை. உரிய வகையில் நங்கூரமிடும் ஏற்பாடு உட்பட கடற்றொழிலை உரிய வகையில் முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்துதருமாறும் அப்பகுதி கடற்தொழிலாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். அத்துடன், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை, ரோலர் படகு பயன்பாடு உள்ளிட்டவற்றால் தமக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புகள் பற்றியும் அமைச்சரிடம் முறையிட்டனர். மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடல் வளத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தமது அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்றாகும். அதற்குரிய பொறிமுறையும் உருவாக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனும் பங்கேற்று இருந்தார். கடல் வளத்தை பாதுகாக்க பொறிமுறைகளை உருவாக்குவோம் ; கடற்தொழில் அமைச்சர் | Virakesari.lk
  20. சிவபூமி அறக்கட்டளையினரால், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நிறுவப்பட்டுள்ள சிவபூமி திருக்குறள் வளாகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் கீரிமலை வீதியில் குறித்த திருக்குறள் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 1,330 திருக்குறளும் கருங்கல்லில் கைகளால் செதுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, திருக்குறள் ஆராய்ச்சி நூலகம், தியான மண்டபம், ஆய்வாளா்கள் தங்கும் வசதிகள் என்பன அங்கு அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சிவபூமி திருக்குறள் வளாகம் திறந்து வைப்பு | Virakesari.lk
  21. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேறுமாறு எழுத்து மூலம் அறிவிக்காவிட்டாலும், அதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி அவர்களே உங்களுக்கு மனசாட்சி இருந்தால், அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். செல்லவில்லை என்றால், இன்னும் சில நாட்களில் அதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்பிப்போம். அதன்படி சட்டரீதியாக வௌியேற வேண்டி வரும். இப்போதே சென்று விட்டால் கௌரமாக இருக்கும். இனி அவரே யோசிக்க வேண்டும்" என்றார். R Tamilmirror Online || மஹிந்தவை வீட்டிலிருந்து வெளியேற்ற புதிய திட்டம்
  22. வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மீனவர்களுக்கு சட்டவிரோத தொழிலில் ஈடுபட வேண்டாமென நீரியல்வளத்துறை திணைக்களத்தால் அறிவிக்கப்பட்ட போதும் அவர்கள் சட்டவிரோத தொழிலில் தொடர்ந்து ஈடுபடுவது தெரியவந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக சட்டவிரோத தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கான சிறிய மீன்களை சட்டவிரோதமாக பிடித்துவருவதுடன், பாவனைக்கு உதவாதென கூறி பெரும் தொகையான சிறிய மீன்களை கடலில் வீசி விட்டு வருவதாக அறியமுடிகிறது. கடந்த வருடமும் வடமராட்சி கிழக்கில் சுருக்குவலை தலை தூக்கிய போதும் சட்டவிரோத சுருக்குவலை தொழிலாளர்களை அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லை. இந்த புதிய அரசாங்கத்தில் வடமராட்சி கிழக்கில் மீண்டும் சட்டவிரோத சுருக்குவலை தொழில் தலை தூக்கியுள்ளதால் மீன்பிடி அமைச்சர் விரைந்து இவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். சட்டவிரோத மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் கட்டைக்காடு மீனவர்கள் | Virakesari.lk
  23. 01 Feb, 2025 | 06:57 PM அனைத்து நபர்களையும் பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ் அகதிகள் புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்கள் ஒடுக்குமுறைக்குள்ளாக கூடிய நாட்டிற்கு மீள செல்லுமாறு நிர்ப்பந்திக்க முடியாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் தடுத்துவைக்கபட்டுள்ள ரோகிங்யா அகதிகள் குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை முன்வைத்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. அனைத்து நபர்களையும் பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ் ஒரு நபர் பலவந்தமாக காணாமலாக்கப்படும் ஆபத்தை எதிர்கொள்வார் என கருதுவதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளபட்சத்தில் அந்த நபரை வேறு நாட்டிற்கு நாடு கடத்தவோமுடியாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த சூழலில் ரோகிங்யாமக்களை மியன்மாருக்கு திருப்பி அனுப்புவது குறித்த எந்தவொரு முடிவையும் எடுக்கும்போது இலங்கை அரசாங்கம்பலவந்தமாக காணாமல்செய்யப்படுதல் குறி;த்த ஆபத்தை கருத்தில் கொள்ளவேண்டும் இலங்கை அரசாங்கம் உள்நாட்டு சட்டத்திற்கு கட்டுப்படவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக கூடிய நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது – ரோகிங்யா அகதிகள் விவகாரம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு | Virakesari.lk
  24. யாழ்ப்பாணம் 35 நிமிடம் யாழ்.மாவட்ட மற்றும் தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களின் தீர்மானங்களை புறம்தள்ளி தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அதன் போது , தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியாருக்கு , அருகில் உள்ள விகாரை காணிகளை வழங்குவதற்கு , அல்லது அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என வடமாகாண ஆளுநர் தெரிவித்தார். ஜனாதிபதியும் அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். அதனை நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனும் ஏற்றுக்கொண்டார். இருந்த போதிலும் , நாடளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சட்டவிரோதமான முறையில் மதில் கட்டினாலே அகற்ற சட்டம் இருக்கையில் சட்டவிரோதமான முறையில் , ஒருங்கிணைப்பு குழு தீர்மானங்களையும் மீறி அடாத்தாக கட்டப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும். அது எந்த விதத்திலும் இந் நல்லிணக்கத்திற்கோ , மாற்றத்திற்கோ ஏற்றதல்ல என தெரிவித்தார். (ப) தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.