Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. பத்திரிகையாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் விடுதலைப்புலிகளின் மாத்தையாவை பேட்டி கண்டு வெளியிட்டமைக்காக கைதுசெய்யப்பட்டவேளை, அவருக்காக ஜே.ஆர். ஜெயவர்த்தன, காமினி திசாநாயக்க ஆகியோருடன் இந்து பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதை தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கம் நினைவுபடுத்தினார். அத்துடன் டி.பி.எஸ். ஜெயராஜின் எழுத்தின் மீது கொண்டுள்ள ஆர்வம் காரணமாக அவர் எதை எழுதினாலும் போடுவார்கள்; அந்தளவுக்கு நம்பகத்தன்மை மிக்கது என்றும் அவர் தெரிவித்தார். அனுர குமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி குறித்து டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய ஆங்கில கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்துள்ள தினக்குரல் முன்னாள் பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கம், அவற்றை “அரசியல் அதிகாரத்தின் வர்க்கமாற்றம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளார். இந்த நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்றவேளை உரையாற்றிய தனபாலசிங்கம் மேலும் தெரிவித்ததாவது. டிபிஎஸ் ஜெயராஜ் தமிழர் விடுதலை போராட்டத்தின் அபிமானியாக திகழ்ந்தவர். இலங்கையில் தற்போது இரண்டே இரண்டு பத்திரிகைகளிற்குதான் எழுதுகின்றார் டெய்லிமிரர் பினான்சியல் டைம்ஸ்.கூடுதலாக அரசியல்தான் எழுதுவார்.ஆனால்டிபிஎஸ் ஜெயராஜின் எழுத்தின் மீது கொண்டுள்ள ஆர்வம் காரணமாக அவர் சினிமாவில் நாகேஸ் பற்றி எழுதினால் கூட நாகேஸ் யார் என தெரியாத ஆசிரியர் கூட அதனை முழு பக்கத்திலே வெளியிடுவார். ஆங்கிலத்திலே இந்திய திரைப்பட நடினர்கள் பற்றி ஜெயலலிதாவின் பிறந்த நாள் அண்மையில் வந்தது அதுபற்றி எழுதுவார் சிவாஜி கணேசன் பற்றி எழுதுவார் எம்ஜிஆர் பற்றி எழுதுவார். பழைய இசையமைப்பாளர்கள் பற்றி எழுதுவார்.அவரை போன்று அரசியல் ஆர்வம் உள்ளவர்கள் சினிமாத்துறை கலைத்துறை இவ்வளவு ஆழமாக விடயங்களை அறிந்து வைத்திருப்பதை நான் இதுவரை காணவில்லை. அவருடைய எழுத்துக்களிற்கு ஆங்கில பத்திரிகை உலகில் பெரும் வரவேற்புள்ளது எதை எழுதினாலும்போட்டுவிடுவார்கள் என நான் நினைக்கின்றேன். அண்மையில் வீரகேசரியிலே இ நாங்கள் பிறப்பதற்கு முன்னர் 46 தொடக்கம் யாழ்ப்பாண செய்தியாளராகயிருந்தவர் செல்லத்துரை என்பவர்.அவருடைய நூற்றாண்டு வந்தது. அவருடைய நூற்றாண்டு வந்தபோது தில்லைநாதன் என்ற வடமராச்சி நிருபர் வீரகேசரியில் ஒரு கட்டுரை எழுதினார். ஜெயராஜிடம் நான் கேட்டேன் செல்லத்துரையை பற்றி ஆங்கிலத்தில் எழுதினால் என்ன என்று . அடுத்த நாளே அவர் அதனை எழுதினார். செல்லத்துரையை யார் என்று தெரியாதவர் தான் டெய்லி மிரர் ஆசிரியராக உள்ளார் ஆனால் ஜெயராஜ் எழுதியதால் ஒரு பிரசுரித்தார்கள். அவர் எதை எழுதினாலும் போடுவார்கள் ஏன் என்றால் அவ்வளவிற்கு நம்பகதன்மை. ஆங்கில பத்திரிகை உலகிலே நம்பகத்தன்மை பெற்றுக்கொண்டார். அவரது திறமை மற்றும் ஒரு விடயத்தை அவர் ஆராய்கின்ற பாங்கு எல்லாமே வித்தியாசமானது. அவர் ஒரு குருவிசேர்த்த மாதிரி - அவர் ஒரு கட்டுரையை எழுதுகின்றார் என்றால் எங்களுடன் ஒரு மணித்தியாலம் இரண்டுமணித்தியாலம் கதைப்பார் என்னுடன்தான் அவர் கதைக்கின்றார் என நான் நினைப்பதுண்டு ஆனால் இலங்கையில்உள்ள 25 பத்திரிகையாளர்களுடன் கதைத்திருப்பார். .துல்லியமாக தகவல்களை சேகரித்த பின்னர்தான் கட்டுரை எழுதுவார். நாங்கள் 1200 சொற்களுக்கு மேலே எழுதுவதற்கு பத்திரிகை ஆசிரியர்கள்அனுமதிக்கமாட்டார்கள்.அவர் 3500 சொல் எழுதினால் கூட அது முழுமையாக பிரசுரிக்கப்படும் அதுதான் அவரின் திறமை அந்த மாதிரி ஒரு பத்திரிகையாளர் அவருடைய எழுத்துக்கள் ஆங்கிலத்தில் மாத்திரம் இருப்பதால்அவருடைய கருத்துக்கள்தமிழ் வாசகர்களை அடையவேண்டும் என நான் விரும்பினேன். இதன் காரணமாக நான் அவரை கேட்டேன் அண்மையிலே இலங்கையில் அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியானது அனுரகுமார திசநாயக்க குறித்து டிபிஎஸ் ஜெயராஜ் ஆறு கட்டுரைகளை எழுதியுள்ளார். அவருடைய வாழ்க்கை அவரது அரசியல் பிரவேசம்அரசியலில் எப்படி முன்னேறினார் அரசியலில் எப்படி வந்தார் என்பது பற்றி. நாடாளுமன்ற தேர்தலில் வடக்குகிழக்கில் தமிழ் கட்சிகளிற்கு ஏற்பட்ட பின்னடைவு தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றி ஆகியவற்றை பின்னணியாக கொண்டு மூன்று கட்டுரைகளை எழுதியுள்ளார். அந்த மூன்று கட்டுரைகளும் இந்த புத்தகத்திலே இருக்கின்றது. அனுரகுமாரதிசநாயக்கவை பாராட்டி எழுதவில்லை,அவர் ஒரு இடதுசாரி சிந்தனையாளரும் இல்லை ஆனால் இடதுசாரி சிந்தனையாளர்களுடன் நெருக்கமானவர். சில நண்பர்கள் கேட்டார் இந்த புத்தகத்தின் தலைப்பை பார்த்துவிட்டு அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்- ஜெயராஜ் மார்க்சிய அடிப்படையில் ஆராய்ந்து எழுதக்கூடியவரா என ஒருவர் கேட்டார். நான் சொன்னேன் அவர் மார்க்சிசத்தை பற்றி தெரிந்திருப்பார் பலதும்பத்தும் வாசிக்கின்றார்.ஆனால் அவர் ஒரு மார்க்ஸிசவாதியில்லை,ஆனால் மாக்ஸிசவாதிகளை பற்றி எழுதியிருக்கின்றார். அவர் அனுரகுமாரதிசநாயக்கவை பத்திரிகையாளர் என்ற அடிப்படையில் அவரது வளர்ச்சியை எழுதியிருக்கின்றார். அவர் தமிழ்தேசியவாத அரசியலை அண்மைக்காலத்தில் எழுதுவது பலருக்கு பிடிப்பதில்லை. தன்னை மதியாபரணம் சுமந்திரனின் மச்சான் என எல்லாரும் சொல்கின்றார்கள் என காரணம் சொல்வார் .அதனால்தான் இவர் அவருக்கு சார்பாக எழுதுவதாக எல்லாம் சொல்வார்கள். எங்களிடம் இவர் அவரின் ஆள் என முத்திரை குத்துகின்ற பழக்கம் உள்ளதுதானே. அவர் எனக்கு சொல்வார் நான் 50 வருடங்களாக அரசியல் கட்டுரை எழுதுகின்றேன் சுமந்திரன் அரசியலுக்கு வந்து 15 வருடங்களே ஆகின்றது என்னை ஏன் சுமந்திரனுடன் இணைத்து வைத்து பேசுகின்றார்கள். இவர் அவருடைய ஆள் என கதைத்தே பழகிப்போய்விட்டது, எழுத்தை பற்றி கதைப்பதில்லை,அதன் தரத்தை பற்றி பார்ப்பதில்லை.அதுமாதிரியான ஒரு கலாச்சாரத்திற்குள் தமிழ் சமூகம் வளர்ந்துவிட்டது அதற்கு நாங்கள்ஒன்றும் செய்ய முடியாது. 1987 - 88 இல் இந்து பத்திரிகையின் கொழும்பு செய்தியாளராக பணியாற்றினார்.புரோன்ட்லைனிற்கும் அவர் செய்தியாளர். இந்திய இராணுவத்துடன் விடுதலைப்புலிகள் சண்டையை தொடங்கிய பின்னர் வன்னியில் மாத்தையாவை பேட்டி கண்டு ஐலண்டில் வெளியிட்டார். முழுப்பக்க பேட்டி. யுத்தம் தொடங்கிய காலம் என்பதால் உடனே அவரை கைதுசெய்தனர்.இரகசிய பொலிஸார் ஐந்தாறு நாட்கள் அவரை நான்காம் மாடியில் வைத்திருந்தார்கள். இதனை அறிந்த இந்து நாளிதழின் ஆசிரியர் என் ராம் அப்போது அமைச்சராகயிருந்த காமினிதிசநாயக்கவை தொடர்புகொண்டு டிபிஎஸ் ஜெயராஜின் கைது குறித்து பேசினார். அவர்கள் கூட்டாளிகள் இதற்கு காமினிதிசநாயக்க உங்கள் பத்திரிகையில் வராத விடயத்திற்காக ஏன் பேசுகின்றீர்கள் உங்கள் பத்திரிகையில் இந்த பேட்டி வரவில்லை தானே என்றார். ராம் இவரை விடுவிக்கவேண்டும் என அக்கறை கொண்டவர் ஜேஆர் ஜெயவர்த்தனவுடன் கதைப்பதற்கு முன்னர் ராம் உடனடியாக அந்த பேட்டியை இந்து நாளிதழில் பிரசுரித்துவிட்டு இலங்கை வந்து அவ்வேளை ஜனாதிபதியாகயிருந்த ஜேஆர் ஜெயவர்த்தனவை சந்தித்தார். இந்து நாளிதழ் வேறு ஒரு பத்திரிகையில் வந்த பேட்டியை பிரசுரித்தது அதுவே முதல்தடவை. ஆனால் அவர் ஜெயராஜிற்காக அதனை பிரசுரித்தார். பின்னர் இலங்கை வந்து ஜேஆர் ஜெயவர்த்தனவுடன் கதைத்து ஜெயராஜை வெளியில் எடுத்தார். ஜேஆருக்கு ஜெயராஜ் ஒரு யாழ்ப்பாணத்தவர் என்பது தெரியாது. இந்து ராமுடனான சந்திப்பின்போது ஜேஆர் டிபிஎஸ் ஏன் வடக்கு விடயங்களை எழுதுகின்றார் இயக்கங்களை வைத்திருக்கின்றார் அது தேவையில்லை என சொல்லுங்கள் என ராமிற்கு ஜேஆர் சொல்லியுள்ளார். இந்த மாதிரி நடக்கவேண்டாம் கொழும்பு அரசியலுடன் நிற்க சொல்லுங்கள் என ஜேஆர் ஆலோசனை வழங்கியுள்ளார். ராம் சொன்னாராம் இல்லை அவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என அதன் பின்னரே ஜேஆருக்கு ஜெயராஜ் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பது தெரியும். இன்றும் கூட பலர் கேட்டார்கள் அவர் எந்த ஊர் ஆள் என்று. அவரை பலர் குருநாகல் கொழும்பிலே வளர்ந்தவர். அவர் யாழ்ப்பாணத்தில் வளர்ந்திருக்கின்றார் எங்கட ஊர்தான் ஆனால் எனக்கு கொழும்பு வந்து வீரகேசரியில் பழகிதான் தெரியும். ஏன் நான் ராமின் கதையை சொல்கின்றேன் என்றால் அந்தளவிற்கு மரியாதையிருந்தது. அவர் பத்திரிகை துறைக்கு முக்கியமானவராகயிருந்தார் நீலம் திருச்செல்வம் தான் அவருக்கு ஹவார்ட் பல்கலைகழகத்திற்குரிய பெலோசிப்பை எடுத்துக்கொடுத்தார் அதனுடன் அவர் போய்விட்டார் நான் அவருக்கு சொன்னேன் நீலன் தமிழர்களிற்கு நன்மை செய்திருக்கின்றாரோ தெரியாது ஆனால் தீமை செய்திருக்கின்றார் நல்லதொரு பத்திரிகையாளனை ஹவார்ட்டிற்கு அனுப்பிஎங்களிற்கு நல்ல பத்திரிகையாளனை இல்லாமல் செய்துவிட்டார். ஜெயராஜ் ஒரு அரசியலில் ஒரு காண்டாமிருகம். விடுதலைப்புலிகளின் பேட்டியை பிரசுரித்தமைக்காக டிபிஎஸ் கைதுசெய்யப்பட்டவேளை இந்து ராம் அவருக்காக ஜேஆருடன் பேசினார்- நூல் வெளியீட்டு நிகழ்வில் சிரேஸ்ட பத்திரிகையாளர் தனபாலசிங்கம் | Virakesari.lk
  2. அட்வெஞ்சர் வீடியோக்கள் வெளியிட்டு ‘வியூஸ்’ அள்ளும் ரிஷி (ரிச்சி), மெல்வின் (தேவராஜ்), அங்கிதா (சுகன்யா), ஜெனிபர் (அரியா) ஆகிய யூடியூபர்கள், முழுநிலா நாளில் குழுவாக ஜவ்வாது மலை காட்டுப் பகுதிக்குச் செல்கிறார்கள். காந்தா (யுவிகா) என்ற மலைக்கிராமத்துப் பெண் வழிகாட்டிபோல் செல்கிறாள். காட்டின் நடுவில் இருக்கும் குளத்தில் குளிக்க வரும் சிறுதெய்வங்களான ‘சப்த கன்னியர்’களையும் அவர்களைத் தடுக்கும் மங்கை என்கிற ஆவியையும் கேமராவில் பதிவு செய்து வெளியிட வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். அதை அவர்களால் சாதிக்க முடிந்ததா, அவர்கள் உயிரோடு வீடு திரும்பினார்களா என்பது கதை. சக்தி வழிபாட்டின் அங்கமாக இருக்கும் ‘சப்த கன்னியர்’ வழிப்பாட்டை பேய்க் கதையுடன் இணைக்க முயல்கிறது திரைக்கதை. மங்கை என்கிற சூனியக்காரி யார்? அவளை காத்தூர் என்ற மலைக்கிராம மக்கள் ஒன்றுகூடி ஏன் கொலை செய்தார்கள், உண்மையில் அவளுடைய ஆவி, அந்த கிராம மக்களின் சப்த கன்னியர் வழிபாட்டை தடுக்கிறதா என்பது உள்ளிட்ட முன் கதை, சுவாரஸ்யமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வனப்பகுதியை மையமாகக் கொள்ளும் பேய்ப் படங்கள் பொதுவாக ஹாரர் த்ரில்லர் சினிமாக்களாக இருக்கும். அதிலிருந்து மாறுபட்டு, கிராம மக்களின் நம்பிக்கை உண்மையா, பொய்யா என்பதைத் தங்களுடைய பார்வையாளர்களுக்குக் காட்டுவதை நோக்கமாகக் கொண்ட யூடியூபர்கள், தாங்கள் கொண்டுசெல்லும் 2 கேமராக்களில் பதிவு செய்த காட்சிகளின் தொகுப்பாகச் சித்தரிக்கும் வகையில் இப்படத்தின் கேமரா கோணங்களை அமைத்திருக்கிறார்கள். ‘ஃபவுண்ட் ஃபுட்டேஜ் ஹாரர்' என்கிற இந்த வகைக் காட்சிமொழிக்குச் சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ். 4 கதாபாத்திரங்களைக் கொண்ட இப்படத்துக்கு, இவரும், ஒலி வடிவமைப்பு செய்துள்ள கேவ்யன் பிரெடெரிக்கும்தான் உண்மையான கதாநாயகர்கள். 3-வதாக ஃபவுண்ட் புட்டேஜிலிருந்து விரியும் காட்சிகள் என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்தியபடி இருக்க சரியான வெட்டுகளை கையாண்டிருக்கிறார், படத் தொகுப்பாளர் ரோஹித். யூடியூபர்களாக வரும் நால்வரும் தொடக்கத்தில் கெத்துக் காட்டினாலும் முழுநிலா இரவில் காட்டில் நடக்கும் நிகழ்வுகளுக்குள் சிக்கும்போது நடிப்பால் கதிகலங்க வைக்கிறார்கள். மெல்வின் - ஜெனிஃபர் இடையிலான காதல் இடரும் இடமும், ரிஷி - ஜெனிபர் இடையிலான தோழமை மலரும் இடமும் பயம், நம்பிக்கை இரண்டையும் ஒரு சேர உணர வைக்கிறது. கதை, திரைக்கதை, உரையாடல், நடிப்பு ஆகியவற்றை மட்டுமே நம்பியிருக்காமல், காட்சிமொழி, ஒப்பனை, ஒலி, ஒளி, படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களைச் சற்று அதிகமாக நம்பிக் களமிறங்கியிருக்கும் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், தன் படக்குழுவிடம் நன்றாக வேலை வாங்கி பார்வையாளர்களுக்குத் தரமான முறையில் பயம் காட்டியிருக்கிறார். மர்மர்: திரை விமர்சனம் | Murmur Movie Review - hindutamil.in
  3. itorial / 2025 மார்ச் 09 , பி.ப. 07:39 - 0 - 19 ஆபாசப் பட நடிகையின் ஆப்கானிஸ்தான் பயணம் தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பெண்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் தலிபான்கள் ஆளும் நாட்டில் ஆபாசப் பட நடிகை எடுத்துக் கொண்ட சில போட்டோக்கள் இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆபாசப் பட நடிகை விட்னி ரைட் இவர், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆபாசப் பட நடிகை ஆவார், தொடர்ச்சியாகச் சர்ச்சைகளை இவர், கிளப்பி வருகிறார். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் எப்போதும் ஆகாது. ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது. அப்படியிருக்கும் போது ஈரானுக்காகப் பேசி வருபவர் தான் இந்த விட்னி ரைட். இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆபாசப் பட நட்டியை ஆவார். இதற்காக ஏற்கனவே அமெரிக்காவில் இவர் கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறார். அவர் சமீபத்தில் ஈரான் நாட்டிற்கும் சென்று திரும்பியுள்ளார். ஈரானை பொறுத்தவரை அது கடுமையான இஸ்லாமியச் சட்டங்களைப் பின்பற்றும் ஒரு நாடாகும். அங்கு ஆபாசப் படங்களைப் பார்ப்பதே தண்டனைக்குரிய குற்றம். ஆபாசப் படங்களில் நடிப்போருக்கு மரண தண்டனையே விதிக்கப்படும். ஆனால், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் விட்னி ரைட் சமீபத்தில் ஈரான் சென்று, அங்கு எடுத்த போட்டோக்களையும் பகிர்ந்திருந்தார். இது இணையத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருந்தது. இந்தச் சர்ச்சை முடிவதற்குள் அவர் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது ஈரானில் இருந்து நேரடியாக அவர் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான் சென்றிருக்கிறார். ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு நகரங்களுக்குச் சென்று பல இடங்களைச் சுற்றிப் பார்த்து இருக்கும் விட்னி ரைட் இது தொடர்பான போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். குறிப்பாக அதில் ஒரு படத்தில் புர்கா அணிந்து, கையில் ஏகே-47 துப்பாக்கியை வைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் தாலிபான்களின் முழு பாதுகாப்பிலேயே பயணிப்பது இதன் மூலம் உறுதியாகிறது. அவரது இந்த போஸ்ட்கள் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏனென்றால் தாலிபான் அரசு அங்கு வசிக்கும் பெண்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆப்கான் பெண்கள் ஆண் துணை இல்லாமல் தனியாக 72 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பூங்காக்கள், உணவகங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களில் பெண்களுக்கு மொத்தமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளன. இப்படி ஆப்கான் நாட்டுப் பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் ஆபாசப் பட நடிகைக்கு அதே அரசு பாதுகாப்பு தந்து ஊரையும் சுற்றிக் காட்டுவது எந்த விதத்தில் நியாயம் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் பெண்கள் உரிமைகள் மற்றும் கல்வி ஆர்வலரான வாஷ்மா டோகி இதை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். Tamilmirror Online || தலிபான் நாட்டில் பிரபல ஆபாச பட நடிகை
  4. யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா போதைப்பொருள் கலந்த மாவா பாக்கினை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார் வண்ணார் பண்ணை பகுதியில் வீடொன்றில் வைத்து, மாணவர்களை இலக்கு வைத்து மாவா பாக்கினை இளைஞன் ஒருவர் விற்பனை செய்து வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த வீட்டில் இருந்து, கஞ்சா கலந்த 4 kg 250g மாவா பாக்கு, பீடித்தூள் 12 kg 500g, மற்றும் வாசனை திரவியம் 24 ரின்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றினர். அதனை அடுத்து மாவா பாக்கினை தயாரித்தமை மற்றும் அதனை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டில் இளைஞனை கைது செய்த பொலிஸார் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழில். பாடசாலை மாணவர்களுக்கு மாவா விற்பனை – இளைஞன் கைது!
  5. உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் யூடியூப் சேனல் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா என்பவர் சற்று முன்னர் பண்டத்தரிப்பு மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு யாழ்.இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டுள்ளார். குறித்த யூடியூப்பர்பெண் பிள்ளைகளை அவமானப்படுத்துவது போன்று பேசி காணொளிகளை பதிவேற்றி வந்த நிலையில் அந்த விடயம் சர்ச்சையாகி இருந்தது. இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது. அந்த வகையில் பல்வேறு தரப்பினரும் குறித்த யூடியூப்பருக்கு எதிராக கருத்தினை முன்வைத்து வந்தனர். இந்நிலையில், சர்ச்சையான காணொளியில் உள்ள குடும்பத்தின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (09) குறித்த யூடியூப்பர் வந்திருந்த நேரம் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு யாழ். இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட யூடியூப்பர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு! | Virakesari.lk
  6. அநுர அலையை குறைத்து மதிப்பிட முடியாது : தமிழரசுக் கட்சி கொழும்பில் இம்முறை போட்டியிடுவதில்லை - எம்.ஏ.சுமந்திரன் 09 Mar, 2025 | 05:13 PM அநுர அலை இன்னும் குறையவில்லை. அதனை குறைத்து மதிப்பிட முடியாது. அத்துடன் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை என தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பதில் பொதுச் செயலாளருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (09) முதல் மதியம் வரை வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. அதன் பின் வவுனியா, குருமன்காடு காளி கோவில் வீதியில் கட்சியின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டு ஊடக சந்திப்பு நடைபெற்றது. அதில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பாக மட்டுமே ஆராயப்பட்டது. கட்சியின் மத்திய செயற்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பான தீர்மானங்களை ஏகமனதாக எடுத்துள்ளது. அதன்படி, வடக்கு - கிழக்கு மாவட்டங்களின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியடும். இந்த தேர்தல் முக்கியமானதொரு தேர்தல். நாங்கள் ஒவ்வொரு தேர்தல்களையும் முக்கியமானதொரு தேர்தல் என்றே கூறி வந்துள்ளோம். உண்மை அது தான். ஒவ்வொரு தேர்தல்களில் அவ்வக் காலப்பகுதிகளில் வேறு வேறு நோக்கங்களுக்காக முக்கியமான தேர்தலாக இருக்கும். இம்முறை நாடு அநுர அலையில் உள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தனிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது. வடக்கு, கிழக்கில் மட்டக்களப்பு தவிர ஏனைய மாவட்டங்களில் அநுர அலையில் எமது மக்களின் வாக்குகள் சென்றுள்ளது. திருகோணமலையில், மட்டக்களப்பில் நாம் பெரும்பான்மை பெற முடியாது. வடக்கில் நாம் தான் பெரும்பான்மை. எனினும் மக்கள அநுர அலையில் சிக்கி ஜனாதிபதி தேர்தலைக் காட்டிலும் பாராளுன்ற தேர்தலில் அதிக வாக்குளை வழங்கியிருந்தார்கள். ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஆதரவு வழங்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச அவர்களே வடக்கு - கிழக்கில் பெரும்பான்மை பெற்றார். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் இந்த நிலை மாறியது. தற்போது அநுர அலை குறைந்து விட்டது என்கிறார்கள் சிலர். அப்படி கூற முடியாது. அநுர அலை தற்போதும் இருக்கிறது. அது குறைவடைய சில காலம் செல்லலாம். நாம் கவனமாக கையாண்டு நாடு அநுரவோடு இருக்கட்டும். நமது ஊர் நம்மோடு. நாம் வீட்டோடு என செயற்பட வேண்டும். எமது உள்ளூர் அதிகாரங்களை நாம் விட முடியாது. எனவே நாம் இந்த தேர்தலில் சிறப்பானவர்களை, செல்வாக்கு மிக்கவர்களை நிறுத்த வேண்டும். அதன் மூலமே அதிக வெற்றி வாய்ப்பை பெற முடியும். அவ்வாறான தீர்மானங்கள் எடுக்கும் அதிகாரம் எமது மாவட்ட கிளைகளுக்கு வழங்கியுள்ளோம். தேர்தல் முடிந்த பின் ஆட்சி அமைக்கின்ற போது ஏனைய தமிழ் கட்சிகளுடனும் பேசி ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டு அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் சில சபைகளின் நிலமையை கருத்தில் கொண்டு ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடலாம் என தீர்மானித்துள்ளோம். அந்தவகையில் வவுனியா வடக்கு, சம்மாந்துறை, ஏறாவூர் ஆகிய பகுதிகளில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதற்கான தமிழரசுக் கட்சியின் வாசல் திறந்தே உள்ளது. வவுனியா வடக்கில் நாம் பிரிந்து செயற்படுவோமாக இருந்தால் பெரும்பான்மையினரிடம் அப் பிரதேச சபை செல்லும் வாய்ப்புள்ளது. சம்மாந்துறை, ஏறாவூர் ஆகிய பகுதிகளில் எம்மிடம் பெரும்பான்மை இல்லை. ஆகவே இணைந்து போட்டியிடலாம் என தீர்மானத்துள்ளோம். கொழும்பு மாநகர சபையில் தமிழ் மக்கள் வசிக்காத வட்டாரங்களும் உள்ளது. அங்கு வேட்பாளர்களை நியமிப்பது சவாலான ஒரு நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டாலும், அதன் வேட்பாளர்களின் பின்புலம் தொடர்பாக ஆராய்வதில் பல்வேறு சவால்கள் உள்ள காரணத்தினால் இம்முறை கொழும்பில் போட்டியிடுவதில்லை என மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது என்றார். அநுர அலையை குறைத்து மதிப்பிட முடியாது : தமிழரசுக் கட்சி கொழும்பில் இம்முறை போட்டியிடுவதில்லை - எம்.ஏ.சுமந்திரன் | Virakesari.lk
  7. ‘வதந்தியை நம்பாதீர்கள்’ - பாடகி கல்பனா வீடியோ மூலம் விளக்கம். ஹைதராபாத்: மயங்கிய நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகி கல்பனா. இந்த நிலையில் தன்னை குறித்து வெளியாகும் வதந்தியை நம்ப வேண்டாம் என வீடியோ பதிவு மூலம் அவர் கூறியுள்ளார். சுமார் 2 நிமிடங்களுக்கு மேல் நீளம் கொண்ட அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பது: “வணக்கம். நான் உங்கள் கல்பனா ராகவேந்தர். என்னை குறித்தும், எனது கணவரைக் குறித்தும் தவறான வதந்தி பரவி வருகிறது. அது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கும் வகையில் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளேன். நான் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு, எல்எல்பி போன்ற படிப்புகளை படித்து வருகிறேன். இதோடு நான் சார்ந்துள்ள இசைத்துறையில் அதீத கவனம் செலுத்தி வருகிறேன். இதனால் எனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக எனக்கு பல ஆண்டுகளாக தூக்கம் என்பது இல்லை. அதற்காக மருத்துவர்களை அணுகிய போது எனக்கு இன்சோம்னியா பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நான் மருந்து எடுத்துக் கொண்டு வருகிறேன். நான் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்தின் டோஸ் அண்மையில் கொஞ்சம் கூடிய காரணத்தால் எனக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு நான் மயக்க நிலைக்குச் சென்றேன். இப்போது நான் உயிரோடு உங்கள் முன்பு பேசக் காரணம் எனது கணவர் தான். அவர் வெளியூரில் இருந்தாலும் இந்த தகவல் அவருக்கு கிடைத்ததும் முதலில் போலீஸ் தரப்புக்கு தகவல் சொல்லி உள்ளார். அதோடு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவிகளை துரிதமாக ஏற்பாடு செய்தார். அதனால் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று நான் உயிர் தப்பித்தேன். அதனால் எந்தவிதமான வதந்தியையும் தயவு செய்து நம்ப வேண்டாம். எனக்கு தனிப்பட்ட சிக்கல் எதுவும் இல்லை. கடவுளின் அருளினால் என் வாழ்வில் எனக்கு கிடைத்த அருமையான விஷயம் என்றால் அது எனது கணவர் பிரசாத் பிரபாகர் மற்றும் எனது மகள் தயா பிரசாத். இந்த தருணத்தில் போலீஸ், ஊடகம், சக இசைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பேன்” என்றார். பின்னணி பாடகி கல்பனா தனது வீட்டில் மயங்கிய இருந்த நிலையில், ஹைதராபாத் போலீஸாரால் மீட்கப்பட்டு செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வெண்டிலேட்டரின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. குடும்ப பிரச்சினை காரணமாக கல்பனா தற்கொலைக்கு முயன்றார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், அதை அவரது மகள் மறுத்தார். தனது தாயாரின் உடல்நிலை குறித்து புதன்கிழமை (மார்ச் 5) அன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது கல்பனா விளக்கம் தந்துள்ளார். ‘வதந்தியை நம்பாதீர்கள்’ - பாடகி கல்பனா வீடியோ மூலம் விளக்கம் | singer kalpana explains via video to not believe rumors about her family - hindutamil.in
  8. வடமாகாணத்தில் ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சல் தீவிரமாகப் பரவியுள்ளது. இந்தத் தொற்றுக்கு உட்பட்டு 800 பன்றிகள் உயிரிழந்த நிலையில், ஐந்து பண்ணைகள் மூடப்பட்டுள்ளன என்று வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிவகுருநாதன் வசீகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயக் குழுக்கூட்டத்தில், ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, அது தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோது மருத்துவர் சிவகுருநாதன் வசீகரன் மேலும் தெரிவித்ததாவது: ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சலானது பன்றிகள் மூலம் பன்றிகளுக்குப் பரவும் தன்மை வாய்ந்தது. வடக்கில் பல இடங்களில் இந்த வைரஸ்தொற்று பரவலாக அவதானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் 50 பன்றிகள் இறந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இரண்டு பண்ணைகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளியில் உள்ள பன்றி வளர்ப்புப் பண்ணையில் 40 பன்றிகள் இறந்த நிலையில் அந்தப் பண்ணையும் முடக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் 700 பன்றிகள் இறந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரண்டு பண்ணைகள் முடக்கப்பட்டுள்ளன. மன்னார் உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளிலும் பன்றிகள் உயிரிழந்த நிலையில், அவற்றின் குருதி மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. ஆபிரிக்கப் பன்றிக்காய்ச்சலானது மனிதரில் நோயை ஏற்படுத்தாத போதும், பன்றிகளில் மிக வேகமாகப் பரவி அவற்றில் பலத்த உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நோயாகும். நோயுற்ற பன்றிகளின் நேரடி தொடுகை மூலமாக மட்டுமன்றி மனித உடல், உடை மற்றும் வாகனங்கள் ஊடாகவும் வேறு பண்ணைகளில் நோய் பரவும் வாய்ப்புகள் அதிகம். ஆதலால், ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சலின் பரவுகையை தடுத்துநிறுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன – என்றார். ஆபிரிக்கப் பன்றிக்காய்ச்சல் வடக்கில் தீவிரமாகப் பரவல்! முடக்கப்பட்டன ஐந்து பண்ணைகள்
  9. கொழும்பு றோயல் கல்லூரி மாணவர்கள் சிலரின் செயற்பாடு கிறிஸ்தவ மக்களின் மனங்களை நோகடிக்கும் செயல் - தேசிய மற்றும் கத்தோலிக்க கல்விப் பணிப்பாளர் கொழும்பு றோயல் கல்லூரி அதிபருக்கு கடிதம் 07 Mar, 2025 | 01:08 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) கொழும்பு றோயல் கல்லூரியின் மாணவர்களில் சிலர் கிறிஸ்தவ மதத்தின் புனித சின்னமான சிலுவையை அகெளரவப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டுள்ள சம்பவம் உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களை மனங்களை நோகடிக்கச் செய்துள்ளதாக தேசிய மற்றும் கத்தோலிக்க கல்விப் பணிப்பாளரும் கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளருமான அருட் தந்தை கெமுனு டயஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அருட் தந்தை கெமுனு டயஸ் அடிகளார் கொழும்பு றோயல் கல்லூரி அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஏனைய மதங்களையும், அவர்களின் புனித சின்னங்களை அகெளரவப்படுத்தல் மற்றும் அசெளகரியங்கள் ஏற்படுத்துகின்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் விதத்தில் வாழ்வது எப்படி என்பதை உங்கள் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுப்படுத்தும்படி அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்கள் நேற்று முன்தினம் (05) தவக்காலத்தின் ஆரம்ப தினமான விபூதிப் புதன்தினத்தை அனுஷ்டித்திருந்தனர். இதுபோன்றதொரு புனிதமான நாளில் கிறிஸ்தவர்களின் மனம் நோகும்படியாக கொழும்பு றோயல் கல்லூரி மாணவர்கள் சிலரின் செயற்பாடு அமைந்திருந்தமை வருத்தமளிக்கிறது. கொழும்பு றோயல் கல்லூரியின் மாணவர்களில் சிலர் கிறிஸ்தவ மதத்தின் புனித சின்னமான சிலுவையை அகெளரவப்படுத்தும் விதத்திலான காணொளிப் பதிவொன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருந்தமை கிறிஸ்தவ மக்களின் மனங்களை வேதனைக்கு உட்டுபடுத்தியுள்ளது. மேற்படி சம்பவத்தால் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை உள்ளிட்ட குருக்கள் மற்றும் கத்தோலிக்க மக்கள் அனைவரையும் மனதளவில் பெரும் காயத்தை உண்டு பண்ணியுள்ளது. நாம் எந்தவொரு மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஏனைய மதங்களின் புனித சின்னங்களை அகெளரவப்படுத்தல் மற்றும் அசெளகரியங்கள் ஏற்படுத்துகின்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் விதமாக வாழ வேண்டும் என்பதை உங்கள் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். கொழும்பு றோயல் கல்லூரியானது மிகவும் சிறந்த தர பாடசாலையாகும். இந்நாட்டை பிரித்தானியர்கள் ஆட்சி செய்திருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு றோயல் கல்லூரியின் முதலாவது அதிபராக சேவையாற்றியவர் ஜோசப் மார்ஷ் அருட் தந்தை ஆவார் என்பதையும் , உங்கள் பாடசாலையின் நீண்ட வரலாற்றுக்கு அவரே முன்னோடி என்பதையும் நினைவுப்படுத்த விரும்புகின்றோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு றோயல் கல்லூரி மாணவர்கள் சிலரின் செயற்பாடு கிறிஸ்தவ மக்களின் மனங்களை நோகடிக்கும் செயல் - தேசிய மற்றும் கத்தோலிக்க கல்விப் பணிப்பாளர் கொழும்பு றோயல் கல்லூரி அதிபருக்கு கடிதம் | Virakesari.lk
  10. ஊடகவியல் என்ற போர்வையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் - ரணிலுக்கு சார்பாக அலிசப்ரி கருத்து 07 Mar, 2025 | 02:39 PM அல்ஜசீராவின் மெஹ்தி ஹசனுடனான முன்னாள் ஜனாதிபதிரணில்விக்கிரமசிங்கவின் சர்ச்சைக்குரிய நேர்காணலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவை நியாயப்படுத்தியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அந்த பேட்டியை ஊடகவேடமிட்டு நடத்தப்பட்டதாக்குதல் என குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடக பதிவில் அலிசப்ரி மேலும் தெரிவித்துள்ளதாவது நான் மெஹ்தி ஹசனை முன்னரும் பார்த்திருக்கின்றேன்,அவர் எப்போதும் மோதல்போக்கை கொண்ட ஆக்ரோஷமானவராக காணப்படுவார். ரணில்விக்கிரமசிங்க உடனான அவரது நேர்காணால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. இது பதில்களைபெறுவது பற்றியது அல்ல.இது ஊடகத்துறை தொடர்பானது இல்லை. இது நிகழ்ச்சிநிரல் ஒன்றை முன்னெடுப்பது தொடர்பானது இது தாக்குவதை நோக்கமாக கொண்ட ஒரு நேரடி விசாரணை. பேட்டி வழங்குபவருக்கு எதிரியின் பகுதிக்குள் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதற்காகஇலங்கை எதிர்ப்பு உணர்வு கொண்ட பார்வையாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். நியாயமான விதத்தில் கடுமையான கேள்விகளை கேட்பதற்கான வழிமுறைகள் உள்ளன. அதற்கு பதில் மெஹ்தி பதில்கள் குறித்து கூச்சலிட்டார்,விளக்கங்களை துண்டித்தார்,மேலும் தனது சொந்த சொல்லாடலிற்கு ஏற்றவாறு வார்த்தைகளை திரித்தார். பதில்கள் தனது விருப்பத்திற்கு ஏற்ப இல்லாவிட்டால் அவர் செவிமடுக்க மறுத்தார். அவர் எப்படி செயற்படுவார் என நான் பார்த்திருக்கின்றேன் ஆனால் உலகின் பலம்வாய்;ந்த நாடுகளின் தலைவர்களை அவர் இவ்வாறு கையாள்வாரா என்ற கேள்வி எழுகின்றது.அவர்களின் யுத்த குற்றங்கள்,அவர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்து இதேயளவு ஆக்ரோசத்துடன் விமர்சிப்பாரா? அல்லது நம்மை போன்ற சிறிய நாடுகளின் தலைவர்களிற்காக இது ஒதுக்கப்பட்டுள்ளதா? எவரும் இலங்கை தவறுகள் அற்றது என தெரிவிக்கவில்லை,நாங்கள் பூர்த்தி செய்யவேண்டிய வேலை உள்ளது நாங்கள் சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும், பொறுப்புக்கூறலை முன்னெடுக்கவேண்டும்,ஆனால் இது எங்களின் போராட்டம். இலங்கை மக்கள் தங்கள் எதிர்காலங்களை தாங்களே தீர்மானிப்பார்கள் நிகழ்ச்சி நிரலுடன் செயற்படும் ஊடகவியலாளர்களோ தெரிவு செய்யப்பட்ட ஆய்வுடன் கூடிய சர்வதேச ஊடகமோ இல்லை. ஊடகவியல் என்ற போர்வையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் - ரணிலுக்கு சார்பாக அலிசப்ரி கருத்து | Virakesari.lk
  11. 07 Mar, 2025 | 04:44 PM யுத்தம் காரணமாக மூடப்பட்ட இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அமைச்சர் குழு இன்று வெள்ளிக்கிழமை கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர். கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகிய அமைச்சர் குழுவினரே சீமெந்து தொழிற்சாலையை பார்வையிடனர். இதன்போது, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா , யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். அத்துடன் குறித்த குழுவினர் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு விஜயம் செய்து பார்வையிட்டதுடன் அதன் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தது தேவைப்பாடுகள் பற்றி ஆராய்ந்தனர். வடக்கின் கைத்தொழிலை மேம்படுத்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அமைச்சர்கள் குழு விஜயம் | Virakesari.lk
  12. யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தை வகுக்க சுற்றாடல் அமைச்சர் மற்றும் பிரதிவாதிகளுக்கு உத்தரவிடக் கோரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர் உமா சுகி நடராஜாவினால் தாக்கல் செய்த மனு இன்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி முகமது லபார் தாஹிர் மற்றும் நீதிபதி சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் காற்றின் தரம் குறித்து ஒரு மாத காலத்திற்கு ஆய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படி, தொடர்புடைய கணக்கெடுப்பு அறிக்கை சட்டமா அதிபர் மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கையை ஆய்வு செய்தபோது, யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள காற்றில் நிலையான அளவை விட அதிகமான தீங்கு விளைவிக்கும் கூறுகள் இருப்பதாகத் தகவல் தெரியவந்துள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே, நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்தார். யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார். இதற்காக பெரும் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்றும், இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து நிதியைப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார். அதன்படி, இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து எதிர்காலத்தில் அறிக்கை வழங்குமாறு நீதிமன்றம் இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டது. அதற்கமைய, குறித்த மனுவை ஜூலை 5 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல்வேறு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் வெளியேற்றப்படுவதாலும், இந்தியா போன்ற அண்டை நாடுகளிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கூறுகள் காரணமாகவும், யாழ்ப்பாணக் குடாநாட்டில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டார். இது தொடர்பாக பொறுப்பான அதிகாரிகளிடம் முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், காற்றின் தரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான எந்த நடவடிக்கையும் செயல்படுத்தப்படவில்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, யாழ்ப்பாணக் குடாநாட்டில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தை வகுக்குமாறும் மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழில் காற்று மாசுபாட்டைக் குறைக்க விசேட திட்டம்!
  13. 06 Mar, 2025 | 03:47 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மடக்களப்பில் வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் இறந்துள்ளார். ஆரையம்பதியிலும் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சமூகத்தை குழப்பும் விதத்தில் பல்வேறு செயற்பாடுகள் நடக்கின்றன. ஆவா குழுவென்று ஒரு குழுவை யாழ்ப்பாணத்தில் உருவாக்கியிருந்தனர். கிரீஸ் மனிதர்களையும் உருவாக்கியிருந்தனர். இதனை உருவாக்கியவர்கள் யாரென மக்களுக்கு தெரியும். இப்போது மட்டக்களப்பிலும் வாள்வெட்டு கலாசாரத்தை உருவாக்குகின்றனர். ஜனாதிபதியும் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இதனால் இவற்றை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, கடற்றொழில் நீரியல் வளம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்ட பல உற்பத்தி முயற்சிகள் விடுபட்டு கிடக்கும் நிலையில் உள்ளதை குறிப்பிட வேண்டும். கடற்றொழில் அமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். மட்டக்களப்பு தர்மபுரம் கடற்கரை ஓரத்தில் இறால் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் நிலையம் செயற்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அது இயங்காது பூச்சிய நிலையில் உள்ளது. எனவே அதனை மீளவும் ஆரம்பிக்க அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகின்றேன். அத்துடன் புதுக்குடியிருப்பில் கிரான் குளத்தை அண்டிய பிரதேசத்தில் மின்குஞ்சுகளை உற்பத்தி செய்ய அமைக்கப்பட்ட நிலையமும் தற்போது இயங்காது இருக்கின்றது. இதனையும் இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளை கல்லடி பிரதேசத்தில் ஐஸ் உற்பத்தி கட்டடம் பாழடைந்த நிலையில் உள்ளது. அதனையும் செயற்படுத்த வேண்டும். வாகரை வட்டவான் பிரதேசத்தில் இறால் வளர்ப்பு திட்டம் நடத்தப்பட்டது. அங்கே உள்ளூர் சமுகத்தினர் இரால் வளர்ப்பில் ஈடுபடும் நிலையில் அவர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் புதுப்பிக்கப்படவில்லை. இதனை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கே கம்பனி மூலம் 100 ஏக்கரில் இறால் வளர்ப்பு மேற்கொள்ளப்படுகின்றது. அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளனவா என்றும் பரிசீலனை செய்ய வேண்டும்.அத்துடன் மின்பிடித்துறையை விருத்திச் செய்யக் கூடிய நிலையமொன்று கல்லடியில் உள்ளது. அதனையும் இயங்கச் செய்ய வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் கதிரவெளி முதல் கல்லாறு வரையிலான கடற்கரை மின்பிடிக்கு மிகவும் வசதியாக உள்ளன. இதனால் இந்தப் பிரதேசத்தில் மின்பிடி அபிவிருத்தியை செய்ய வேண்டும். கதிரவெளி வாகரையில் இருந்து மீன்பிடிக்க உகந்த இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மீன்பிடிப்பதற்கான வசதிகள் இருந்தாலும் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படவில்லை. அதனை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலுவூட்டல் மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பில் கூறும் போது கசிப்பு மற்றும் போதைப் பொருள் இவற்றுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. மட்டக்களப்பில் வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் இறந்துள்ளார். ஆரையம்பதியிலும் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. சமுகத்தை குழப்பும் விதத்தில் பல்வேறு செயற்பாடுகள் நடக்கின்றன. ஆவா குழுவென்று ஒரு குழுவை யாழ்ப்பாணத்தில் உருவாக்கியிருந்தனர். கிரீஸ் மனிதர்களையும் உருவாக்கியிருந்தனர். இதனை உருவாக்கியவர்கள் யாரென மக்களுக்கு தெரியும். இப்போது மட்டக்களப்பிலும் வாள்வெட்டு கலாச்சாரத்தை உருவாக்குகின்றனர். ஜனாதிபதியும் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இதனால் இவற்றை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். சமூக விரோத செயற்பாடுகளையும் தடுக்க வேண்டும். கசிப்பு உற்பத்தி விடயத்தில் பொலிஸார் உற்பத்தியாளர்களுக்கு சார்பாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. சமூகத்தில் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டுமாயின் அவற்றை ஒழிக்க வேண்டும் இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றார். மட்டக்களப்பிலும் வாள்வெட்டு கலாசாரம் ; முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் - ஸ்ரீநேசன் | Virakesari.lk
  14. கோட்டாபய ராஜபக்சவை நான் காப்பாற்றினேனா?- ரணில் மறுப்பு – அல்ஜசீரா பேட்டியின் இடைநடுவில் வெளியேறப்போவதாக மிரட்டல் அல்ஜசீராவிற்கு வழங்கிய பேட்டியொன்றின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பாதுகாத்ததாக தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேட்டியின் இடைநடுவில் வெளியேறப்போவதாக எச்சரித்தார். அல்ஜசீராவின் இன்று ஒளிபரப்பாகவுள்ள ஹெட் டு ஹெட் பேட்டியில் கோத்தாபய ராஜபக்சவை தான் பாதுகாத்தார் என்ற குற்றச்சாட்டை ரணில்விக்கிரமசிங்க மறுத்துள்ளார். பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தனது அரசாங்கம் நம்பகதன்மை மிக்க விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளையும் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார். பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து நாட்டிலிருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பாதுகாப்பு அளித்தீர்களா என்ற கேள்விக்கு எனது நாட்டில் அரசியல்தொடர்பற்றவரான சட்டமாஅதிபரே வழக்குதாக்கல் செய்வது குறித்து தீர்மானிப்பார் எங்களால் அவருக்கு ஆதாரங்களை அனுப்பமுடியும் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்சவை நான் காப்பாற்றினேனா?- ரணில் மறுப்பு – அல்ஜசீரா பேட்டியின் இடைநடுவில் வெளியேறப்போவதாக மிரட்டல் | Virakesari.lk
  15. யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு , பல்வேறு தரப்பினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, புலம்பெயர் நாடொன்றிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சந்தேக நபர் ஒருவர் ரிக் ரொக் தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு பல்வேறு தரப்பினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார். சந்தேக நபர் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் , வரணி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு சென்று , வெளிநாட்டு பணத்தினை உள்ளூர் பெறுமதிக்கு மாற்ற வங்கியில் கால தாமதம் ஏற்பட்டதாக நேரலையில் காணொளி பதிவிட்டு, வங்கியின் முகாமையாளர் , உத்தியோகஸ்தர்கள் , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார். அதேபோன்று சந்தேக நபர் சில வாரங்களுக்கு முன்னர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தினுள் சென்று , பொலிஸார் முறைப்பாடுகளை பதிய கால தாமதம் செய்வதாக நேரலை காணொளிகளைப் பதிவிட்டு பொலிஸாருடனும் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் வரணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் இல்ல மெய்வல்லுனர் போட்டி ஒன்றுக்குச் சென்று , மாணவிகளின் அனுமதியின்றி , ரிக் ரொக் தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்ட போது , பாடசாலையில் கடமையில் நின்ற பொலிஸார், அதிபரின் அனுமதியின்றி மாணவிகளைக் காணொளி எடுக்க முடியாது என அறிவுறுத்திய போது , பொலிஸ் உத்தியோகத்தர்களுடனும் முரண்பாட்டில் ஈடுபட்டு , அவற்றினையும் காணொளிகளாக பதிவிட்டுள்ளார். குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து , பொலிஸ் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் சந்தேக நபர் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல் | Virakesari.lk
  16. 06 Mar, 2025 | 03:12 PM கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பாகங்களிலும் வேகமாகப் பரவி பன்றி வளர்ப்புப் பண்ணைகளில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது. இந்த ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி - பளை மற்றும் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேசங்களில் அமைந்திருந்த 5 பன்றிப்பண்ணைகளிலும் பரவி பன்றிகளுக்கு பல இறப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் தெரிவித்தார். வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மேற்படி ஐந்து பண்ணைகளிலும் பன்றிகளின் குருதிமாதிரிகள் பெறப்பட்டு பேராதனை மிருகவியல் ஆராய்ச்சி நிலையத்தால் நோய் உறுதிப்படுத்தப்பட்டமையை தொடர்ந்து இப்பண்ணைகளை உடனடியாக மூடி பண்ணையின் சகல நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு இப்பண்ணைகள் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கடந்த மூன்றுதினங்களுள் மூடப்பட்டுள்ளன. ஆபிரிக்க பன்றிக்காய்சலானது மனிதரில் நோயை ஏற்படுத்தாத போதும் பன்றிகளில் மிக வேகமாகப் பரவி அவற்றில் பல இழப்புக்களை ஏற்படுத்தக்கூடிய நோயாகும். நோயுற்ற பன்றிகளின் நேரடி தொடுகை மூலமாக மட்டுமன்றி மனித உடல், உடை மற்றும் வாகனங்கள் ஊடாகவும் வேறு பண்ணைகளில் நோய் பரவும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் நோய்தொற்று கண்டறியப்பட்ட சகல பண்ணைகளையும் தற்காலிகமாக மூடி பண்ணை நடவடிக்கைகளை முடக்கி வைப்பதற்கு திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் ; பல பன்றிகள் இறந்துள்ளன - வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் | Virakesari.lk
  17. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட மூவருக்கு விளக்கமறியல் கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்கள் மூவரும் இன்று வியாழக்கிழமை (06) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (05) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட மூவருக்கு விளக்கமறியல் | Virakesari.lk
  18. சென்னை: “தமிழகத்தின் உரிமைகளைப் பறித்து, தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கத் துடிக்கும் பாஜகவும், அதன் சில ஏஜண்டுகளும் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தார்கள். அவர்கள் என்றும் தமிழகத்தின் பகைவர்கள்தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்” என்று திமுக சாடியுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பாஜக, நாதக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய 5 கட்சிகள் புறக்கணித்தது கவனிக்கக்கது. தமிழக அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில், “தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழகத்துக்கு ஏற்படப்போகும் பேராபத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலினால் கூட்டப்பட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த அனைத்துக் கட்சிக் கூட்டமானது தலைமைச்செயலகத்தில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 2.30 வரைக்கும் நடைபெற்றது. 63 அரசியல் கட்சிகள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் 58 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழகத்துக்கு ஏற்படப்போகும் பேராபத்தை விளக்கமாக எடுத்துரைத்து, பவர்பாய்ன்ட் மூலம் தகவல்களை விளக்கி அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவைக் கோரினார் முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தின் ஒட்டுமொத்த கூட்டுணர்வை வெளிப்படுத்தும் வகையில் சிறிய கட்சிகள், பெரிய கட்சிகள் என்ற பாகுபாடு இன்றி கலந்துகொண்ட அனைவரின் குரல்களும் தமிழகத்தின் உரிமை காக்க ஒருமித்த கருத்தில் ஒன்றாக ஒலித்தன. கலந்து கொண்டவர்கள் ஆக்கபூர்வமான கருத்துகளைப் பகிர்ந்ததோடு தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான தீர்மானத்துக்கும் தங்களது ஆதரவையும் அளித்தார்கள். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு செய்து, நாடாளுமன்ற அவைகளில் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க திட்டமிட்டிருந்த பாஜகவின் சதிக்கு எதிராக, இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பு குரலும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டது. பாஜகவின் கூட்டணிக் கட்சிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானங்கள் அனைத்து கட்சிப் பிரதிநிதிகளால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிரான இந்த எதிர்ப்புக் குரல் திமுகவுடையது மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உரிமைக் குரல் என்பது இன்று ஒன்றிய பாஜக அரசுக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் உரிமைகளைப் பறித்து, தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கத் துடிக்கும் பாஜகவும், அதன் சில ஏஜண்டுகளும் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தார்கள். அவர்கள் என்றும் தமிழகத்தின் பகைவர்கள்தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.தமிழகத்தின் உரிமைகளை காக்க வேண்டும் எனும் ஒற்றை நோக்கத்தோடு கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழகத்தின் ஒற்றுமைக் குரல் ஒலிக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலினின் நோக்கம் வெற்றியடைந்திருக்கிறது. நாட்டின் கூட்டாட்சிக்கும், தமிழகத்தின் உரிமைக்கும் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் ஏற்பட்டிருக்கும் பேராபத்தை எதிர்த்து நின்று இணைந்து போராடி வெற்றி பெற அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தென்னிந்திய மாநில முதல்வர்களை ஒருங்கிணைத்து, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் உரிமை பறிப்பிற்கு எதிரான போராட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கேட்டுக்கொண்டனர். முதல்வரின் தலைமையில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாய் இணைந்து எழுச்சியுடன் போராடும்; இந்த உரிமைப் போராட்டத்தில் வெல்லும்!’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பாஜக, நாதக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய 5 கட்சிகள் புறக்கணித்தது கவனிக்கக்கது. முதல்வர் நன்றி - தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “அநீதியான தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக, தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி. இதன்மூலம், தொகுதி மறுவரையறைக்கு எதிரான தெளிவான, சமரசமற்ற செய்தியை நாம் பதிவு செய்திருக்கிறோம்,” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். முன்னதாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 5) தலைமைச் செயலகத்தில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு - மாநில உரிமையை காப்பது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இதில், 58 கட்சிகள் பங்கேற்றன. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்: > இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய - மக்கள் தொகை அடிப்படையிலான “நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை” இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமையாக எதிர்க்கிறது. > நாட்டின் நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டை முனைப்பாகச் செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. இந்த வகையில், மக்கள் தொகை கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026-இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும். மேலும், அரசமைப்பு சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். > நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், “1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது. > தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக் கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. > தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை என்றும், அதேசமயம் கடந்த ஐம்பதாண்டுகளாக சமூக, பொருளாதார நலத்திட்டங்களைச் சிறப்புற செயல்படுத்தியதற்கான தண்டனையாகத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது எனவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது. > இக்கோரிக்கைளைத் தமிழ்நாட்டின் குறைந்தபட்ச கோரிக்கைகளாக அனைத்துக் கட்சிக் கூட்டம் முன்வைக்கிறது. > இக்கோரிக்கைளையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கைக் குழு” ஒன்றை அமைத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது, என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ‘தமிழகத்தின் பகைவர்கள்...’ - அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்த பாஜக, நாதக மீது திமுக காட்டம் | CM MK Stalin thanks to political parties on All party meeting and dmk on delimitation issue - hindutamil.in
  19. கொழும்பிலிருந்து கண்டிக்கு அதிக சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிளில் நிர்வாணமாகவும், உடலில் எந்த ஆடையும் இல்லாமல் பயணித்த இளைஞன் ஒருவரை, வீதித் தடைகளைப் பயன்படுத்தி மிகவும் சிரமப்பட்டு கைது செய்ததாக கடுகண்ணாவ பொலிஸார் தெரிவித்தனர். கண்டி-கொழும்பு வீதியில் அதிக சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிளில் அந்த இளைஞன் பயணிப்பதை பல பொலிஸ் அதிகாரிகள் கவனித்து, அவரை கைது செய்ய பின்தொடர்ந்த போதிலும், அவர்களில் எவராலும் அவரை அடைய முடியவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். கேகாலை மற்றும் மாவனெல்ல பொலிஸார் அந்த நபரைத் துரத்திச் சென்ற போதிலும், அவர்களால் அவரைக் கைது செய்ய முடியவில்லை. கடுகண்ணாவை மற்றும் பேராதனை பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்த பின்னர், கடுகண்ணாவை பொலிஸார் வீதித் தடைகளைப் பயன்படுத்தி வாகனங்களைத் தடுத்து அந்த நபரைப் பிடித்தனர். கைது செய்யப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, அவர் பீதுருதலாகலைப் பார்வையிட வந்ததாகக் கூறினார். அவர் அஹங்கமவிலிருந்து வந்து கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியதாகவும், திங்கட்கிழமை (03) காலை புறப்பட்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்ததாகவும், அவ்வப்போது தான் அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றி வீசிவிட்டதாகவும் கூறினார். வாழ்க்கையை சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அவர் தனது ஆடைகளைக் கழற்றியதாகவும், அவர் பயன்படுத்தி வந்த ஆப்பிள் போனையும் வழியில் தூக்கி எறிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். அவரது விளக்கமறியல் மார்ச் 19 ஆம் திகதி வரை கண்டி நீதவானால் நீடிக்கப்பட்டுள்ளது. Tamilmirror Online || நிர்வாண சைக்கிள் ஓட்டிக்கு விளக்கமறியல் நீடிப்பு
  20. Simrith / 2025 மார்ச் 05 , பி.ப. 06:37 - 0 - 13 இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால மீனவர் பிரச்சினையைத் தீர்க்க இந்திய அரசு தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியதுடன் இது இலங்கையின் வடபகுதி சமூகங்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரத்நாயக்க, இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க இந்திய மத்திய அரசும் தமிழக நிர்வாகமும் தங்கள் சொந்த சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். "வடக்கு மக்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர். இந்த வாழ்வாதாரம் அவர்களிடமிருந்து பறிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு இந்திய அரசாங்கத்தையும், தமிழக அரசாங்கத்தையும் நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் கூறினார். இந்தியா இலங்கைக்கு பல்வேறு வகையான உதவிகளை வழங்கியிருந்தாலும், இந்த முக்கியமான பிரச்சினையை தீர்க்கத் தவறியது ஒரு கேள்வியை எழுப்புகிறது என்று அமைச்சர் கூறினார். "இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வளவு உதவி செய்திருந்தாலும், இந்த குறிப்பிட்ட பிரச்சினையில் வடக்கின் மக்களுக்கு உதவத் தவறினால், இது உண்மையில் உதவியா என்ற கேள்வி எழுகிறது," என்று அவர் கூறினார். உள்ளூர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரப் போராட்டங்களை எடுத்துரைத்த அமைச்சர், தெற்கத்திய சமூகங்களுடன் ஒப்பிடும்போது இலங்கையின் வடக்கில் உள்ள மீன்பிடி சமூகங்கள் பொருளாதார ரீதியாகப் போராடி வருவதாகக் கூறினார். "மன்னாரில் உள்ள மீனவர்கள், முன்பு ஒரே நாளில் சம்பாதித்ததை ஐந்து நாட்கள் கடலில் எப்படிச் செலவிடுகிறார்கள் என்பது பற்றி என்னிடம் கூறியுள்ளனர்," என்று அமைச்சர் கூறினார். "மக்களுக்கு உதவுவது என்பது வெறும் வெள்ள நிவாரணத்தை விநியோகிப்பதல்ல; அவர்கள் சுயமாக நிற்க வாய்ப்புகளை உருவாக்குவதாகும்" என்று ரத்நாயக்க கூறினார். "இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அமைச்சர் கூறினார். Tamilmirror Online || ”இந்தியா விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”
  21. 05 Mar, 2025 | 05:26 PM யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான “டெய்சி ஆச்சி” என அழைக்கப்படும் டெய்சி பொரஸ்ட் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டார். யோஷித ராஜபக்‌ஷவின் பாட்டியான டெய்சி ஆச்சி, பணத் தூய்மையாக்கல், தொடர்பில் இன்று (5) புதன்கிழமை குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட டெய்சி ஆச்சி, கடுவெல நீதவான் நீதிமன்றத்தில ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து தலா ரூ. 5 மில்லியன் பெறுமதியான 2 சொந்தப் பிணைகளில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. யோஷித ராஜபக்ஷவின் டெய்சி பாட்டி பிணையில் விடுதலை ! | Virakesari.lk
  22. (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் கரைதுறைப்பற்று பிரதேச சபை அதிகார பிரதேசம் மற்றும் மன்னார் நகர சபை அதிகார பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் தீயணைப்பு பிரிவு அமைப்பதற்காக உலக வங்கியின் உதவியுடன் 60.5 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நிலையியல் கட்டளை 27/ 2 இன் கீழ் கேள்வியெழுப்பி உரையாற்றிய ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 27/2 இன் கீழ் கேள்விகளை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முல்லைத்தீவு மன்னார் பிரதேசங்களில் தீயணைப்பு படை என்பதொன்று இல்லை. முல்லைத்தீவு நிலப்பரப்பில் பெரிய மாவட்டமாக இருக்கின்ற நிலையில் அங்கு மக்கள் தீயால் பாதிக்கப்படுகின்ற போது அல்லது கடைத் தொகுதிகள் எரியும் போது யாழ்ப்பாணம் அல்லது வவுனியாவில் இருந்தே தீயணைப்பு வாகனங்கள் செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு செல்லும் போது அங்கிருந்த உடமைகள் அழியும் நிலைமை உள்ளது. இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு படையை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த அரசாங்கத்திடம் முன்வைத்திருந்த போதும் இன்னும் அது நடக்கவில்லை. அதனால் புதிய அரசாங்கத்திடம் அந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம். இதேவேளை மன்னார் மாவட்டத்தில் கடைகள் பல தீக்கிரையான பின்னரே வவுனியாவில் இருந்து தீயணைப்பு படை வருகின்றது. இந்த மாவட்டத்திலும் தீயணைப்பு படை இல்லாமையினால் அங்குள்ள மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் குறித்த மாவட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகின்றோம் என்றார். இதற்கு பதிலளித்த பொதுநிருவாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் முன்வைத்த விடயம் சரியானதே. மன்னாரில் மட்டுமன்றி நாட்டில் இன்னும் பல பிரதேசங்களில் நிலவும் பிரச்சினையாக உள்ளது. அவர் முன்வைத்துள்ள பிரச்சினை தொடர்பில் நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம். உள்ளூராட்சி நிறுவனங்களில் தீயணைப்புக்காக மத்திய அரசாங்கத்தினால் நிதியை வழங்குமாறு தொடர்ச்சியாக கோரிகக்கை முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் தேவையான உபகரணங்கள் கொரிய அரசாங்கத்தினால் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் கரைதுறைப்பற்று பிரதேச சபை அதிகார பிரதேசம் மற்றும் மன்னார் நகர சபை அதிகார பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் தீயணைப்பு பிரிவை அமைப்பதற்காக உலக வங்கியின் உதவியுடன் 60.5 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கூடிய விரைவில் அவை அமைக்கப்படும் என்றார். முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு பிரிவு அமைப்பதற்கான 60.5 மில்லியன் ரூபா திட்டம் | Virakesari.lk
  23. Editorial / 2025 மார்ச் 04 , பி.ப. 07:18 - 0 - 25 பாலித ஆரியவன்ச இந்தியாவின் தமிழ்நாடு புதுக்கோட்டை கிராமத்தில் பிறந்த தெய்வானை ராமசாமி, தனது 4 வயதில் தனது தந்தையுடன் இலங்கைக்கு வந்தார். அவர் தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலைக்குச் சென்றபோது அவருக்கு 8 வயது. ஒரு தேயிலைச் செடியை விட உயரமில்லாத இந்தப் பெண், முதுகில் தொங்கும் ஒரு பிரம்புக் கூடையுடன் கொழுந்துகளை பறிக்கும்போது, கங்கனியால் பலமுறை பிரம்பால் அடிக்கப்பட்டிருக்கிறாள். வேறு எந்தக் குற்றத்தாலும் அல்ல. ஏனென்றால் தேவையான அளவு தேயிலை கொழுந்து பறிக்கப்படவில்லை என்பதற்காக. இந்தத் துன்பங்களையெல்லாம் தாங்கிக்கொண்டு வேலை செய்யக் கற்றுக்கொண்ட தெய்வானி, டீன் ஏஜ் பருவத்தை அடையும் போது, தோட்டத்தில் அதிக கொழுந்துகளை பறிக்கும் திறமையான இலை பறிப்பாளராக மாறிவிட்டார். நான் என் மாமாவுடன் சாப்பிட ஆரம்பித்தபோது எனக்கு 15 வயது. பின்னர், அந்தப் பெயர் முத்து தெய்வானை என மாற்றப்பட்டது. பெற்றோரின் அழுத்தம் காரணமாக, அந்தத் தம்பதியினரின் வாழ்க்கை இப்படித்தான் தொடங்கியது. இந்த தகவலை அன்னை தேவி சுமார் 2 வருடங்களுக்கு முன்பு என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவள் எனக்குக் கூடுதல் தகவல்களைச் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. அன்று அன்னை தெய்வானியின் கதையை நான் ஆவலுடன் கேட்டேன். "கடந்த காலத்தில், தோட்டங்கள் வெள்ளையர்களால் நிர்வகிக்கப்பட்டன. தேயிலைத் தோட்டம் மிகவும் அழகாக இருக்கிறது. நாங்கள் சுண்ணாம்பு அறைகளில் இருந்தோம். அவர்கள் சுண்ணாம்பு அறைகளை உரம் மற்றும் களிமண்ணைப் பயன்படுத்தி மிகவும் சுத்தமாக வைத்திருந்தனர். வெள்ளைக்கார மனிதர் குதிரையில் வந்து எலுமிச்சை பழங்களின் சுத்தத்தைப் பரிசோதிக்கிறார். அது அழுக்காக இருந்தால், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆனால் இப்போது போலல்லாமல், அப்போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். அரிசி ரேஷன் மற்றும் மாவு ரேஷன் தோட்டத்திலிருந்தே வழங்கப்படுகிறது. விறகுகளும் தோட்டத்திலிருந்துதான். தோட்டத்தில் கிடைக்கும் தேயிலை இலைகள் மற்றும் பிற பொருட்களின் விலை மிகவும் குறைவு. நாங்கள் பெரும்பாலும் அரிசி, கொண்டைக்கடலை உள்ளிட்ட தானியங்களை சாப்பிட்டோம். நோய் குறைவாக உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு நம் நாடு சிறிது காலம் நன்றாகச் செயல்பட்டாலும், இப்போது தோட்டங்கள்இடிந்து விழுந்துவிட்டன. நான் இப்போது ஸ்பிரிங் வெலி தோட்டத்தில் கொட்டகொட பிரிவில் இருக்கிறேன், அது ஒரு எலும்புக்கூடு போல தோற்றமளிக்கும் ஒரு தொழிற்சாலை. தொழிற்சாலை மூடப்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது போன்ற பல தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன என்று என் பேரக்குழந்தைகள் கூறும்போது என் இதயம் உடைகிறது. ஊட்டச்சத்து இல்லை. குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள். பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து, குழந்தைகள், குழந்தைகளின் குழந்தைகள், அவர்களின் குழந்தைகளின் குழந்தைகள் படும் துன்பங்களைப் பார்க்கும்போது, சில சமயங்களில் நானும் பாவம் செய்துவிட்டேன் என்று நினைக்கத் தோன்றுகிறது.அன்று தெய்வானை சொன்னாள். கடைசியாக அவளைப் பற்றி செய்தி வெளியிட்டபோது, அவளுக்கு 108 வயது. வீட்டின் முன் இருந்த சிறிய முற்றத்தை அவர் பெருக்கி சுத்தம் செய்த விதம், கோழிக் கூடுக்குள் புகுந்து முட்டைகளை வெளியே எடுத்த விதம், கடந்த காலத்தை நினைத்து சிரித்த விதம் ஆகியவற்றை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். ஏழு குழந்தைகள், 45 பேரக்குழந்தைகள் மற்றும் 15 நான்காம் தலைமுறை குழந்தைகளைப் பார்க்கும் ஆசீர்வாதத்துடன் தாய் தெய்வானை 110 ஆண்டுகள் வாழ்ந்தார். ஸ்பிரிங் வேலி தேயிலைத் தோட்ட மக்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அவர்களின் நீண்ட பயணத்திற்குப் பிறகு சிறிது நேரத்திலேயே அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். தேவியின் பேத்தி மலகமட ராசலிங்கம் மல்லிகா, அவரது வாழ்க்கையை பின்வருமாறு விவரித்தார்: "பாட்டிக்கு ஒருபோதும் உடம்பு சரியில்லாமல் போனதில்லை." மிகவும் ஆரோக்கியமான பாட்டி. எங்கள் குழந்தைகளைக் கூட பாட்டி கவனித்துக் கொண்டார். நான் என் வீட்டுப்பாடத்தை நன்றாகச் செய்தேன். என் பாட்டியின் 103வது பிறந்தநாளுக்கு நாங்கள் அழகாகத் தயாராகிக் கொண்டிருந்தபோது, இந்தியாவில் ஒரு மகன் (என் மாமாக்களில் ஒருவர்) இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். அதனால் நாங்கள் அந்த பிறந்தநாளைக் கொண்டாடவில்லை. பாட்டி இறக்கும் வரை அந்த மரணம் பற்றி அவளுக்குத் தெரியாது. ஆனால் நாங்கள் பாட்டியின் 110வது பிறந்தநாளைக் கொண்டாடினோம். அன்று இலங்கையில் தனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார், அழகான கேக் வாங்கப்பட்டது, பல உணவுகளை சமைத்தார். இந்தியாவில் உள்ள ஒரு மகளின் மகனால் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை, அதனால் அவர் சில நாட்களுக்குப் பிறகு வந்தார், அவர் அங்கு இருந்தபோது, அவரது பாட்டி இறந்துவிட்டார். இந்த மரணம் வயது முதிர்வு காரணமாக நிகழ்ந்தது என்று தீர்மானிக்கப்பட்டது. அவளே அழுது கொண்டே, இந்தியாவிலிருந்து வந்திருந்த தன் பேரன் தன் பிறந்தநாளுக்குக் கொண்டு வந்திருந்த அழகான புடவையைத் தன் ஆச்சியின் உடலின் மேல் போர்த்தினாள் என மல்லிகா என்னிடம் சொன்னாள். பேரன் தியாடகராஜா, தனது பாட்டியைப் பற்றி மேலும் கூறினார். "பாட்டி தெய்வீகப் பாடல்களையும் நாட்டுப்புறப் பாடல்களையும் அழகாகப் பாடுவார், சில சமயங்களில் அருட வேலயில் பக்தியுடன் நடனமாடுவார்." நீங்கள் குழந்தைகளை, குழந்தைகளின் குழந்தைகளை, அந்தக் குழந்தைகளின் குழந்தைகளைப் பார்த்தால், சுமார் 60 தலைமுறைகள் உள்ளன. ஆனால் அவர்களில் பெரும்பாலோர் இந்தியாவில் இருக்கிறார்கள், அவர்களில் சிலர் எங்களைப் பார்த்ததே இல்லை. "இந்த மரணம் எங்களுக்கு துக்கத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது," என்று பேரன் கூறினார். இறுதி ஊர்வலத்தில் உடன் சென்ற நானும் ஒரு பெரிய அதிர்ச்சியை உணர்ந்தேன். உடல் மரியாதையுடன் ஒரு விலையுயர்ந்த சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. கொடிகளை உடைக்காத தோட்ட மக்கள், தங்கள் இரங்கலைப் பகிர்ந்து கொள்ள வந்தனர். சுற்றுவட்ட மக்களும், ஸ்பிரிங் வேலி மற்றும் கோடா கிராம மக்களும் மூன்று நாட்களாக உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்ததாக அறியப்பட்டது. இந்து வழக்கப்படி, மதச் சடங்குகளைச் செய்த பிறகு, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியில் உடல் வைக்கப்பட்டது. இந்த தேனா இந்தியாவில் உள்ள பிரமுகர்கள் மட்டுமே பயன்படுத்தும் தேனாவைப் போலவே தயாரிக்கப்பட்டது என்று அறியப்பட்டது. இறுதி ஊர்வலம் லைம்பேலா வழியாக பிரதான சாலைக்கு கொண்டு வரப்பட்டது. முன்னால் ஒரு இசைக்குழு அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தது. தோட்டங்களில் இறுதிச் சடங்குகளில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் இறுதிச் சடங்கு இசைக்குப் பதிலாக, மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஒரு இசைக்குழு கொண்டுவரப்பட்டதாக சிலர் கூறினர். ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கேட்டபோது, "நீங்கள் ஏன் மகிழ்ச்சியாக இல்லை? வேறு யாரும் இவ்வளவு காலம் வாழ்ந்ததில்லை" என்றார்கள். இறந்தவருடன் சென்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர். நாங்கள் மீண்டும் பாரம்பரிய பாடல்களைப் பாடி, கைதட்டி மகிழ்ச்சியடைகிறோம். ஏன் அப்படி? நான் கேட்டேன். தேயிலைத் தோட்டங்களில் வசிக்கும் இந்து மக்கள், அப்படி மகிழ்ச்சியாக இருக்கும்போது, இறந்தவருக்கு நல்ல ஆன்மா கிடைக்கும் என்று நம்புவதாக அவர்கள் கூறினர். மக்களின் ஆயுட்காலம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால், அன்னை தெய்வத்திடமிருந்து நீண்ட ஆயுளைப் பெறுவது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தோட்டத்தின் ராணியாக இருந்த அவளுடைய பாசத்தை இழப்பது அனைவருக்கும் ஒரு துக்கமாகும். எனக்கு உயிர் கொடுத்த தேயிலை மரம், தேயிலை புதர்களுக்கு மத்தியில் நான் கல்லறையில் தனியாக படுத்திருந்த தேயிலை மரம், தேயிலை மரத்தை குடிக்கக் கொடுத்த கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் போது, ஒரு மழைத்துளி கண்ணீர் துளியாக விழுந்து தேயிலை மரத்தை முத்தமிட்டது. Tamilmirror Online || 110 ஆண்டுகள் ராணியாகவே வாழ்ந்த தெய்வானை
  24. யாழ்ப்பாணம் 20 மணி நேரம் முன் யாழ். மாநகரசபையால் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு உதவித் தொகை வழங்கி வைப்பு!.. யாழில் வீதியோரத்தில் பழக்கடை நடத்தி வந்த இளைஞனிடம் யாழ். மாநகர சபை வரி அறவீட்டு உத்தியோகத்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு, இளைஞனின் வியாபாரத்தை இடை நிறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனுக்கு இன்று(03) ஒரு இலட்சம் ரூபா உதவித் தொகை வழங்கிவைக்கப்பட்டது. லஷ்மிகா அறக்கட்டளையின் நிறுவுனர் தர்மிகா அவர்கள் ஒரு இலட்சம் ரூபாய் உதவித் தொகையை வடமராட்சி கிழக்கு சமூக மாற்றத்திற்கான ஊடக மையம் ஊடாக இன்று வழங்கிவைத்தார். சமூகமாற்றத்திற்கான ஊடக மையத்தில் வைத்து இளைஞனிடம் உதவித் தொகையை கையளித்த ஊடகமைய தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் சி.த காண்டிபன் கருத்து தெரிவிக்கையில், லஷ்மிகா அறக்கட்டளை நிறுவுனருக்கு நன்றி தெரிவிப்பதுடன் மனிதர்கள் மனிதர்களாக மதிக்கப்பட்டு, அவர்களது மனித உரிமைகளும் மதிக்கப்பட்டு சமூக மாற்றம் ஒன்றை உருவாக்க அனைவரும் முன்வரவேண்டுமென தெரிவித்தார். (ப) யாழ். மாநகரசபையால் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு உதவித் தொகை வழங்கி வைப்பு!..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.