Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. Published By: Rajeeban 21 Feb, 2025 | 04:08 PM அமெரிக்காவினால் பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் பனாமாவில் டாரியன் காட்டுப்பகுதியில் உள்ள தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் வேறு நாட்டிற்கு நாடு கடத்தப்படலாம் எனபனாமா தகவல்கள் தெரிவித்துள்ளன. பனாமா கோஸ்டரிகா குவாத்தமாலா ஆகிய நாடுகள் அமெரிக்கா நாடு கடத்தும் ஏனைய நாட்டவர்களை ஏற்பதற்கும் அவர்கள் நாடு கடத்தப்படும் வரை தங்கள் நாட்டில் வைத்திருப்பதற்கும் இணங்கியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பனாமா கால்வாயை கைப்பற்றப்போவதாக எச்சரித்த சூழ்நிலையில் சமீபத்தில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் இந்த நாடுகளிற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் அமெரிக்க நாடுகள் இதற்கு இணங்கியுள்ளன. கடந்த பல நாட்களாக 300 குடியேற்றவாசிகள் அனேகமாக ஆசியாவை சேர்ந்தவர்கள் பனாமாவின் தலைநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதுவரை 97 பேரை டாரியன் மாகாணத்தில் உள்ள சான் வின்சென்டே நிலையத்திற்கு மாற்றியுள்ளோம் பனாமாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பகுதி கொலம்பிய எல்லையில் உள்ளது. தலைநகரிலிருந்து கிழக்காக உள்ள மெட்டேய் பகுதியில் உள்ள இந்த நிலையத்தை அமெரிக்க எல்லைக்கு செல்வதற்காக ஆபத்தான காட்டுப்பாதையை கடந்து கொலம்பியா ஊடாக மெக்சிக்கோவிற்குள் நுழைபவர்கள் இதுவரை பயன்படு;த்தி வந்தனர். அமெரிக்கா இதுவரை நாடுகடத்தியுள்ள 199 குடியேற்றவாசிகளில் 175 பேர் சுயவிருப்புடன் தங்கள் நாடுகளிற்கு திரும்புவதற்கு இணங்கியுள்ளனர்.இவர்கள் இன்னமும் பனாமாவின் தலைநகரில் உள்ள ஹோட்டலில் உள்ளனர். இதுவரை 41 பேர் விமானபயணச்சீட்டுகளை வாங்கியுள்ளனர் இவர்களில் 17 பேர் இந்தியர்கள் என பனாமாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குடியேற்றவாசிகளை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தடுத்துவைத்திருக்கவில்லை என பனாமா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாங்கள் இந்த நாட்டில் பாதுகாப்பாக இல்லை என கையால் எழுதப்பட்ட அட்டையை தாங்கியவாறு சிலர் ஜன்னல்களில் காணப்படும் படங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா நாடுகடத்திய இலங்கையர் உட்பட பலர் பனாமாவில் | Virakesari.lk
  2. இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தீவக கடற்தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் வடக்கில் குறிப்பாக எமது தீவக பிரதேச கடற்தொழிலாளர்கள் மிக மோசமாக பாதிப்படைந்து வருகின்றனர். இதை தடுத்து நிறுத்துமாறு நாம் பல போராட்டங்கள் கோரிக்கைகளை முன்வைத்தாலும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் எமது வாழ்வுரிமைக்கான பொருளாதார ஈட்டலை உறுதி செய்ய நாம் வீதிக்கிறங்கி போராட தீர்மானித்துள்ளோம். அதனடிப்படையில் தீவக கடற்றொழில் அமைப்புக்களான மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, வேலணை, புங்குடுதீவு உள்ளிட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ் பண்ணையில் உள்ள கடல்வள நீரியல் திணைக்களம் முன்பாக போராட்டத்தினை ஆரம்பித்து வடமாகாண ஆளுநர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று, ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் வழங்கவுள்ளோம். எமது இந்த போராட்டத்துக்கு யாழ் மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பு வழங்கி போராட்டத்தை வலுவூட்டுமாறு அழைப்பு விடுகின்றோம் என தெரிவித்தனர் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி 27 ஆம் திகதி யாழ் நகரில் போராட்டம் - தீவக கடற்தொழில் அமைப்பு | Virakesari.lk
  3. சென்னை: ‘எந்திரன்’ திரைப்பட கதை விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி அசையா சொத்துக்ளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆரூர் தமிழ்நாடன் என்பவர் எழுதிய ‘ஜுகிபா’ கதை, ‘திக்திக் தீபிகா’ என்ற பெயரில் கடந்த 2007-ம் ஆண்டு நாவலாக வெளியானது. இந்நிலையில் 2010-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படம் வெளியானது. அதைப் பார்த்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதை தன்னுடைய ‘ஜுகிபா’ கதை எனக்கூறி, ‘எந்திரன்’ படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார். தொடர்ந்து, தனது கதையைத் திருடி ‘எந்திரன்’ படத்தை எடுத்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும், இது காப்புரிமை சட்டத்தின்படி கிரிமினல் குற்றம் எனவும் கூறி எழும்பூர் கீழமை நீதிமன்றத்தில் ஆரூர் தமிழ்நாடன் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்நிலையில், ‘எந்திரன்’ திரைப்பட கதை விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான 3 அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘எந்திரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.290 கோடி வசூல் செய்துள்ளது. இந்த திரைப்படத்துக்காக இயக்குநர் சங்கர் ரூ.11.5 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் கதை அமைப்பு, கதாப்பாத்திரம், கருப்பொருள் கூறுகளை, ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (ஃஎப்டிஐஐ) ஆய்வு செய்தது. ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ‘ஜுகிபா’ கதைக்கும் ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதைக்கும் இருக்கும் ஒற்றுமையை அறிக்கையாக சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் இயக்குநர் ஷங்கர் மீதான கதை திருட்டு குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது. அந்தவகையில், காப்புரிமை சட்டத்தை இயக்குநர் ஷங்கர் மீறியுள்ளார். இது சட்டவிரோத பணப்பரிமாற்றம் 2022 சட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ் இயக்குநர் ஷங்கரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரூ.10.11 கோடி மதிப்புள்ள 3 அசையா சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி அசையா சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை | Director Shankar immovable assets worth Rs. 10.11 crore frozen: ED - hindutamil.in
  4. புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் ராஜினாமா செய்து, ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதற்கான வாய்ப்பை வழங்குவார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பல எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவரைத் தொடர்பு கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு கட்சிகள் ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றத்திற்கு வருமாறு முன்மொழிந்துள்ளன. சமீபத்தில் ரணில் விக்கிரமசிங்க காலி பகுதிக்கு விஜயம் செய்தபோது, மக்கள் அவரை பாராளுமன்றத்திற்கு வந்து பொது சேவையில் சேருமாறு கேட்டுக்கொண்டனர். இந்த கட்டத்தில், ரணில் விக்கிரமசிங்க, "தயவுசெய்து பொறுமையாக இருங்கள்" என்று கூறியிருந்தார் Tamilmirror Online || எம்.பி ஆகிறார்‌ ரணில் ?
  5. பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டார் ரஜீவன் எம்பி! Published By: Digital Desk 7 20 Feb, 2025 | 11:04 AM யாழ். மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவிக்கான நியமனத்தினை ஜனாதிபதியின் உத்தரவின் பெயரில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாசம் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை), தீவகம் தெற்கு (வேலணை), நல்லூர், வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) ஆகிய பிரதேச செயல்களிகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக செவ்வாய்க்கிழமை (18) முதல் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டார் ரஜீவன் எம்பி! | Virakesari.lk
  6. மித்தேனிய கொலை- கொல்லப்பட்டவர் ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கனமானவரா? 20 Feb, 2025 | 02:42 PM மித்தேனிய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்ட 39 வயது நபர் கஜா என அழைக்கப்படும் அருண விதானகமகே என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக மிரட்டி பணம் பறித்தல் உட்பட ஏனைய குற்றச்சாட்டுகள்இருந்தன என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 18ம் திகதி இரவு இவர் மோட்;டார் சைக்கிளில் தனது இரண்டு பிள்ளைகளுடன் பயணித்துக்கொண்டிருந்தவேளை சுடப்பட்டார்.கடவத்தை சந்திக்கு அருகில் 10.15 அளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்,படுகாயமடைந்த அவரது ஆறு வயது மகளும் 9 வயது மகனும் தங்காலை எம்பிலிப்பிட்டிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர், தங்காலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சில நிமிடங்களில் மகள் உயிரிழந்தார்,காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகன் பின்னர் உயிரிழந்தார். கொல்லப்பட்டவரின் மனைவி வெளிநாட்டில் வசிக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொல்லப்பட்டவர் ஊடகவியலாளர் சமுடித்த சமரவிக்கிரமவுடனான யூடியுப் நேர்காணல் ஒன்றின் போது ராஜபக்ச குடும்பத்தின் நண்பன் என தன்னை அடையாளம் காட்டியிருந்தார். அந்த பேட்டியில் இலங்கையில் பெரும் குற்றவாளி கும்பலொன்று இயங்குவதாக தெரிவித்திருந்த அவர் அதிகாரிகள் அந்த குற்றவாளி கும்பலிற்கு ஆதரவளிக்கின்றனர் தனது உயிருக்கு ஆபத்து என தெரிவித்திருந்தார். விதானகமகே ஆயுதங்களை வைத்திருந்தார்,தினமின தெரிவித்துள்ளது. இந்த நபருக்கு மகிந்த குடும்பத்துடன் நெருங்கிய உறவிருந்தது ஆனால் இவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் உறவுகள் பாதிக்கப்பட்டன என தினமின தெரிவித்துள்ளது. யூடியுப் பேட்டியில் ராஜபக்ச குடும்பத்தினரின் சர்ர்பில் பல குற்றநடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவித்தவரே விதானகமகே. முன்னாள் எஜமான்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்ட பின்னர் தான்சிறையிலிருந்தவேளை தன்னை கொலை செய்வதற்காக ஒருவரை நியமித்திருந்தனர் என இவர் தெரிவித்திருந்தார். மித்தேனிய கொலை- கொல்லப்பட்டவர் ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கனமானவரா? | Virakesari.lk
  7. 20 Feb, 2025 | 05:38 PM தையிட்டி விகாரை போராட்டம் தொடர்பாக செல்வராஜா கஜேந்திரன், வாசுகி சுதாகரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் 20ஆம் திகதி வியாழக்கிழமை பலாலி பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளனர். தையட்டி விகாரையில் கடந்த 12 ஆம் தேதி மேற்கொண்ட போராட்டத்து தொடர்பில் விகாரையின் பிக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய பொலிசாரால் குறித்த வாக்குமூலம் பெறப்பட்டது. வாக்கு மூலம் அளிப்பதற்காக மூவரையும் வியாழக்கிழமை 12 மணிக்கு சமூகம் அளிக்குமாறு தெரிவித்த பொலிசார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் அவர்களை காத்திருக்கச் செய்து அதன் பின்னர் அவர்களிடம் வாக்கு மூலம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் குறித்த விகாரை அமைக்கப்பட்ட இடம் மக்களின் உறுதியுள்ள காணிகள் என்பதை அரச திணைக்களங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. என்ற விடயத்தை பொலிசாருக்கு தெரியப்படுத்திய நிலையில் தாம் குறித்த விரோத விகாரை அகற்றப்படும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என செல்வராஜா கஜேந்திரன் வாக்கு மூலம் அளித்த பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் - 02 மணி நேரம் காக்க வைத்து வாக்குமூலம் பெற்ற பொலிஸார் | Virakesari.lk
  8. பாடசாலை மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றி செல்வோருக்கு எதிராக எதிராக நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவிடம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகம் பணித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ஆளுநர், பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லும் பெற்றோர் உள்ளிட்ட எவரும் மாணவர்களுக்கு தலைக்கவசம் அணிவிக்காது ஏற்றிச் செல்வதாக முறையிடுகின்றனர். குறிப்பாக மருத்துவர்களால் இந்த விடயம் அதிகளவில் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. தலைக்கவசம் அணியாது பயணிப்பதால் விபத்துக்களில் மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர். எனவே, சட்டம் ஒழுங்கைப்பேணும் வகையில் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் எவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவும். மாணவர்களை அவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் ஏற்றிச் செல்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் கோரினார். அதற்கு யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், இது தொடர்பில் போக்குவரத்துப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும், அதனை இறுக்கமாகப் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பின்போது, யாழ் ராணி ரயில் மீது இனந்தெரியாதவர்கள் கல் வீச்சு தாக்குதல் நடத்துவதாக சுட்டிக்காட்டப்படுவதாக ஆளுநர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் குறித்த சில பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறவில்லை என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதிலளித்ததுடன், ஆளுநர் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார். யாழில். மாணவர்களுக்கு தலைக்கவசம் அணியாது ஏற்றி செல்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பணிப்பு | Virakesari.lk
  9. புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பொது அமர்வுகளின் போதும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தமக்கு பலரால் கடந்த சில வாரங்களாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த அமர்வுகள் முடிந்து மீண்டும் யாழ்ப்பாணம் செல்ல திட்டமிட்டுள்ளோம்.எமது நாட்டில் இந்த விவகாரம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளதால், பொது அமர்வுகளின் போதும் எமக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சபாநாயகருக்கு அனுப்பப்படும் என்று பிரதி சபாநாயகர் தெரிவித்தார். Tamilmirror Online || மாற்றி அடித்தார் அர்ச்சுனா எம்.பி
  10. கொலை செய்த நபர் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியானது Freelancer / 2025 பெப்ரவரி 19 , பி.ப. 07:32 - 0 - 140 'கனேமுல்ல சஞ்சீவ' என்ற சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார், தற்போது சட்டத்தரணி வேடத்தில் வந்து கொலை செய்த நபரை கைது செய்ததுடன், அவர் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி, குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர், கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர். R Tamilmirror Online || கொலை செய்த நபர் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியானது
  11. யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் நேற்று மாலை யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், குறித்த மயானத்தின் நிர்வாக உறுப்பினருமான கிருபாகரனினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டது. யாழ். செம்மணியில் உள்ள சிந்துபாத்தி இந்து மயானத்தில் அண்மையில் அபிவிருத்திப் பணிகளுக்காக நிலத்தைத் தோண்டியபோது மண்டையோடு உள்ளிட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. இந்த விடயம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் மேற்படி விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பொலிஸாரிடம் நேற்று முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டுக்கமைவாக பொலிஸார் குறித்த விடயத்தை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அந்தவகையில் நாளையதினம் மாலை 3மணிக்கு குறித்த பகுதியை நீதிவான் பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிடவுள்ள நீதிவான்!
  12. வேளாண்மை அறுவடையின் பின்னர் யானைக் கூட்டம் புதிதாக முளைக்கின்ற புல் இனங்களை உண்பதற்காக நாடி வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில் திடீரென சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி வில்லுக்குளப் பகுதிகளை ஊடறுத்து யானைகள் இவ்வாறு காலை முதல் மாலை வருகை தந்துள்ளன. இதன்போது குறித்த யானைகள் அங்குள்ள புதிய புல் இனங்களை உண்ணுவதுடன், கூட்டத்தில் உள்ள யானை குட்டிகள் விளையாடுவதையும் காண முடிந்தது. இன்று சுமார் பெரிய யானைகள் மற்றும் குட்டிகள் என 100 க்கும் அதிகமான யானைகள் அப்பகுதியில் உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை நோக்கி வருகை தந்திருந்தன. தினமும் அப்பகுதிக்கு வரும் யானை கூட்டத்தை மக்கள் பார்வையிட்டு வருகின்றதுடன், இவ்வாறு வயல்வெளிகளை நோக்கி வருகை தந்துள்ள யானைகள் ஊருக்குள் பிரவேசிக்க முடியாத வகையில் பார்வையாளர்களாக உள்ள மக்கள் சத்தங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர். மேலும் இப்பிரதேசத்தில் அண்மையில் வேளாண்மை அறுவடை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தீ வைக்கப்படுவதனாலும் அங்கு கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 130 க்கும் மேற்பட்ட யானைகள் உண்ணுவதற்கு வருகை தருவதுடன், அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அம்பாறை - வளத்தாப்பிட்டி வில்லுக்குளம் பகுதியில் சுற்றித் திரியும் யானைக் கூட்டம் | Virakesari.lk
  13. 19 Feb, 2025 | 05:10 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ். நூலகம் தீக்கிரையாக்கப்பட்டமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரியதை போன்று தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதலை மேற்கொண்டமைக்காக மக்கள் விடுதலை முன்னணி மன்னிப்புக் கோர வேண்டும். 75 ஆண்டுகால சாபத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி பொறுப்புக் கூற வேண்டும். 75 ஆண்டு கால அரசாங்கத்தை சாபம் என்று இனியும் குறிப்பிட்டு மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தாதீர்கள். சாயம் வெளுத்து விட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டத்தை பார்க்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்றாவது வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார் என்றே தோன்றுகிறது. 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட பல முக்கிய அம்சங்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கம் இன்று இருந்திருந்தால் நிதியமைச்சர் என்ற அடிப்படையில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்திருந்தார். சர்வதேச நாணய நிதியத்தில் யோசனைகளில் பாதகமான பல யோசனைகள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியினர் கடந்த காலங்களில் 75 ஆண்டுகால அரசியலை சாபம் என்று விமர்சித்தார்கள். ஆனால் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அன்று சாபம் என்று குறிப்பிட்டதை தவறென்று தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார்கள். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கடந்த காலங்களில் ஜே.வி.பி யினர் ஏலம் விட்ட பல கொள்கைகள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் அரசியல் தலைவர்களை மக்கள் விடுதலை முன்னணி வதைத்தது அவர்கள் இறந்ததும் அவர்களின் ஆத்மாக்களையும் விமர்சித்தது. இன்று அவர்களின் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளை அமுல்படுத்துகின்றீர்கள்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் இன்றும் விமர்சிக்கின்றீர்கள். நாட்டுக்காக சேவையாற்றியவர்களையும் காட்டிக் கொடுத்தீர்கள். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரவு - செலவுத் திட்டத்தின் மீதான உரையில் யாழ். நூலகம் பற்றி குறிப்பிட்டிருந்தார். யாழ். பல்கலைக்கழகத்துக்குள் செல்லும் போது தமிழர்கள் காலணிகளை கழற்றி வைத்து விட்டுச் செல்வார்கள். யாழ். நூலகம் அரசியல் கட்சியின் ஒத்துழைப்புடன் தீ வைக்கப்பட்டது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். யாழ் நூலகம் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் எமது தாய் கட்சியின் பெயர் குறிப்பிடப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பின்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.இதனையிட்டு நாங்கள் இன்றும் கவலையடைகிறோம். யாழ். நூலகம் தீ வைக்கப்பட்ட சம்பவத்துக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார். யாழ். நூலகம் பற்றி பேசிய ஜனாதிபதிக்கு மக்கள் விடுதலை முன்னணி அன்று தலதா மாளிகைக்கு குண்டுத்தாக்குதல் நடத்தியது நினைவுக்கு வரவில்லையா, மன்னிப்பு கேட்க தோன்றவில்லையா, யாழ் நூலகம் தீக்கிரையானது தவறு. அதேபோன்று தலதா மாளிகைக்கு குண்டுத்தாக்கியதற்கும் மன்னிப்பு கோருங்கள்.ஆகவே பிறருக்கு போதனையளிக்க மக்கள் விடுதலை முன்னணிக்கு உரிமையில்லை. 75 ஆண்டுகால சாபத்துக்கு மக்கள் விடுதலை முன்னணியே பொறுப்புக் கூற வேண்டும்.1980 ஆம் ஆண்டு சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுத்த போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹன விஜேவீர அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.இதனால் நாட்டில் பொருளாதார வலயங்கள் உருவாக்கப்படவில்லை. 1981 ஆம் ஆண்டு ஜப்பான் நிறுவனம் இலங்கையில் வாகன உற்பத்திக்கு பிரவேசிக்கும் போது மக்கள் விடுதலை முன்னணி வீதிக்கு இறங்கி போரட்டத்தில் ஈடுபட்டது.இதனால் ஜப்பான் நிறுவனம் நாட்டை விட்டு வெளியேறியது.இதனால் பல கோடி ரூபா நட்டத்தை அரசாங்கம் அப்போதே எதிர்கொண்டது.பலர் தொழில்வாய்ப்புக்களை இழந்தனர். 1980 ஆம் ஆண்டு ஆங்கில கல்வி முறைமைக்கு எதிராகவும் மக்கள் விடுதலை முன்னணி போராட்டத்தில் ஈடுபட்டது. இன்றும் நடுத்தர மக்கள் ஆங்கில கல்வியில் பின்னடைந்துள்ளமைக்கு இதுவும் ஒரு காரணியாகும்.1981 ஆம் ஆண்டு ஜே. ஆர். ஜயவர்தன ராமக வைத்திய கல்லூரியை ஆரம்பித்து வைத்தார். மக்கள் விடுதலை முன்னணி 1988 ஆம் ஆண்டு அந்த கட்டிடத்துக்கு தீ வைத்தனர். நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அந்த மருத்துவ கல்லூரியை இழுத்து மூடினார்.இவற்றை பார்த்துக் கொண்டிருந்த மலேசியாவின் அப்போதைய தலைவர் மாதீர் மொஹமட் இலங்கையின் வைத்தியர்களுக்கு அழைப்பு விடுத்தார். அனைவரும் அங்கு சென்றார்கள்.மலேசியாவில் சர்வதேச மட்டத்தில் மருத்துவ கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது.இன்று இலங்கை மாணவர்கள் பல பில்லியன் டொலரை செலவழித்து மலேசியாவுக்கு மருத்துவ படிப்புக்காக செல்கிறார்கள். இந்த பாவத்துக்கு மக்கள் விடுதலை முன்னணியே பொறுப்புக் கூற வேண்டும். ஆகவே சாயம் வெளுத்து விட்டது. இனியும் 75 ஆண்டுகாலத்தை சாபம் என்று குறிப்பிடாதீர்கள் என்றார். தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதலை மேற்கொண்டமைக்காக மக்கள் விடுதலை முன்னணி மன்னிப்புக் கோர வேண்டும் - கபீர் ஹாசிம் | Virakesari.lk
  14. 19 Feb, 2025 | 08:24 PM கடந்த பௌர்ணமி தினத்தன்று நடைபெற்ற சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்கு வேலன் சுவாமிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 20ஆம் திகதி வியாழக்கிழமை பலாலி பொலிஸ் நிலையத்திற்கு, நண்பகல் 12 மணிக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரையானது மக்களது காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்ட நிலையில், அந்த விகாரைகயை அகற்றுமாறு கோரி இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தையிட்டி போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமியை விசாரணைக்கு அழைப்பு! | Virakesari.lk
  15. 19 Feb, 2025 | 05:46 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாதாள குழுக்களில் ஈடுபடும் அல்லது ஒழுங்கமைக்கும் தரப்பில் பலர் இலங்கையில் இல்லை. பாதுகாப்பு தரப்பின் ஒருசில அதிகாரிகள் பாதாள குழுக்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள். கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற அமர்வின்போது கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிரணியின் உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது.பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதாள குழுக்கள் பணம் தூயதாக்கல், போதைப்பொருள் வியாபாரம், பல சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையது. பாதாள குழுக்களில் ஈடுபடும் அல்லது ஒழுங்கமைக்கும் தரப்பில் பலர் இலங்கையில் இல்லை. விசாரணைகளை முன்னெடுத்துச் செல்கையில் பாதுகாப்பு தரப்பின் ஒருசில அதிகாரிகள் பாதாள குழுக்களுடன் தொடர்பு கொண்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினை கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.ஆகவே பாதாள குழுக்கள் குறித்து அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது.அனுமதிப்பத்திரமளிக்கப்பட்ட துப்பாக்கிகளை மீண்டும் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா, துபாய் ஆகிய நாடுகளில் தலைமறைவாகியுள்ள பாதாள குழுவினரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விசாரணை அனைத்தையும் பாராளுமன்றத்தில் குறிப்பிட முடியாது. பாதாள குழுவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். பாதுகாப்புத் தரப்பினர் சிலர் பாதாள குழுக்களுடன் தொடர்பு ; கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன - ஆளும் தரப்பு | Virakesari.lk
  16. 19 Feb, 2025 | 08:32 PM யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 19ஆம் திகதி புதன்கிழமை மாலை மூவர் மீது மோசமான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குடும்ப தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும் வவுனியா பகுதியில் இருந்து (NP CAH - 0636) என்ற இலக்கமுடைய வாகனத்தில் ஆட்களை அழைத்து வந்து வீட்டிற்குள் புகுந்து கம்பி, கற்களால் தாக்குதல் நடாத்தியதாக தெரியவருகின்றது. வாகனத்தில் வருகை தந்த தாக்குதல் கும்பல் வானத்திற்குள் வாள்களை மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அடி காயங்களுக்குள்ளான மூவரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாழில் மூவர் மீது கல், கம்பிகளால் தாக்குதல் - வாளால் வெட்டவும் முயற்சி! | Virakesari.lk
  17. கோவை: கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், கல்லூரி மாணவர்கள் 7 பேரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். கோவை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு 17 வயதில் மகள் உள்ளார். பிளஸ் 2 படித்து வந்த இவர், குடும்பச் சூழல் காரணமாக படிப்பை நிறுத்திவிட்டார். தனது தாத்தா உயிரிழந்ததால் பாட்டிக்கு துணையாக அவரது வீட்டில் இச்சிறுமி தங்கி வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி இரவு சிறுமி மாயமானார். இதையடுத்து சிறுமியின் பாட்டி, பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து சிறுமி மாயம் குறித்து அவரது பாட்டி, உக்கடம் போலீஸாரிடம் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர். சிறுமியின் செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மறுநாள் அதிகாலை சிறுமி வீட்டுக்கு வந்தார். அவரிடம் பெற்றோர் மற்றும் பாட்டி விசாரித்த போது, நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்ததாக கூறினார். தொடர்ந்து உக்கடம் போலீஸார், சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது, சமூக வலைதளம் மூலம் பழக்கமான கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றிருந்தாகவும், அங்கு கல்லூரி மாணவர்கள் 7 பேர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதுகுறித்து விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீஸார் கூறும்போது, “மாயமானது தொடர்பாக சிறுமியிடம் விசாரிக்கப்பட்டது. சிறுமிக்கு ஸ்னாப்சாட் எனப்படும் சமூக வலைதள செயலி பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அதன் மூலம் கோவையில் உள்ள கோவைப்புதூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஜெபின் (20), ரக்‌ஷித் (19) ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். தொடர்ந்து சில நாட்கள் பேசிய பின்னர், அந்த சிறுமியை தாங்கள் தங்கியிருக்கும் அறைக்கு வருமாறு சிறுமியை அழைத்துள்ளனர். அதன்படி, கடந்த 16-ம் தேதி சிறுமி, மேற்கண்ட இருவருடன் சேர்ந்து அவர்கள் தங்கியுள்ள அறைக்குச் சென்றுள்ளார். அந்த அறையில் அபினேஷ்வரன்(19), தீபக் (20), யாதவ்ராஜ் (19), முத்து நாகராஜ் (19), நித்தீஷ் (19) ஆகிய மேலும் 5 மாணவர்கள் இருந்துள்ளனர். தொடர்ந்து மேற்கண்ட 7 பேரும் சேர்ந்து சிறுமியை கூட்டாகவும், தனித்தனியாகவும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து சிறுமி மாயம் என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை போக்சோ பிரிவுக்கு மாற்றி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஜெபின், ரக்‌ஷித், அபினேஷ்வரன், தீபக், யாதவ்ராஜ், முத்து நாகராஜ், நித்தீஷ் ஆகியோர் இன்று (பிப்.18) கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் திருநெல்வேலி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இவர்கள் 7 பேரும் கோவைப்புதூர், குனியமுத்தூர் ஆகிய இடங்களில் உள்ள 3 தனியார் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு, 3-ம் ஆண்டு படித்து வருபவர்கள் ஆவர். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.சிறுமியை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்றனர். கோவையில் 17 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது | 7 college students arrested for gang-raping 17-year-old girl in Coimbatore - hindutamil.in
  18. ஜனாதிபதி வாக்குறுதியளித்தவாறு வடக்குக்கு பெருமளவு நிதி ஒதுக்கீடு! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார் என்றும் அவருக்கு எமது வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமீளாய்வு கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற போதே ஆளுநர் இதனை தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதியினால், நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. அதன்படி, வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு வகையிலும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதிகளவான நிதியும் வடக்கு மாகாண சபைக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி தனது உரையில், வடக்கு அதிகாரிகள் கோரிய நிதியையே வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நாம் முழுமையாகச் செலவு செய்யவேண்டும் என்றும் எவ்வளவு விரைவாக அந்த நிதியை செலவு செய்து முடித்து மேலதிக நிதியை நாம் கோரவேண்டும். இது எமக்கு சவாலானதுதான். நாம் நிதியை திருப்பி அனுப்பாமலே நிதியை திருப்பி அனுப்பியதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், பெருமளவு நிதி எமக்கு கிடைக்கப்பெறும் நிலையில் அதை உரிய முறையில் செலவு செய்யவேண்டும். எமது செயற்பாடுகளை ஊடகங்கள் உட்பட பல தரப்புக்களும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன. எனவே வெளிப்படைத்தன்மையாக நிதியை விரைவாக செலவு செய்யவேண்டும். அத்துடன் ஜனாதிபதி வீதி அபிவிருத்திக்காக விசேட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கு சமமாகப் பகிரத் தேவையில்லை. தேவைப்பாடுகள் எங்கு அதிகமோ அங்கு அதிகளவு நிதியை ஒதுக்குங்கள். மேலும், இந்தத் திட்டத்துக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு தெரிவுகளை முன்னெடுக்காமல் வன்னிப் பிராந்தியத்தின் ஒவ்வொரு இடத்துக்கும் சென்று நேரடியாகப் பார்த்து தெரிவு செய்யுங்கள். அப்போதுதான் அந்த மக்கள் அனுபவிக்கின்ற வலி உங்களுக்குத் தெரியும் என்றார். ஜனாதிபதி வாக்குறுதியளித்தவாறு வடக்குக்கு பெருமளவு நிதி ஒதுக்கீடு!
  19. 18 Feb, 2025 | 03:21 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். என்றாலும் வைத்தியர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லாமல் இருப்பதையிட்டு கவலையடைகிறேன் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனா இராமநாதன் தெரிவித்தார். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வரவு செலவு திட்டத்தில் வைத்தியர்கள் தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடந்த வருடம் மாத்திரம் 2ஆயிரம் டாக்டர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். பட்டப்பின் படிப்பு பயிலுனர்களுக்காவது அரசாங்கம் ஏதாவது ஒரு விடயத்தை செய்திருக்க வேண்டும். அதேபோன்று வடக்கு கிழக்கு மீனவர் தொடர்பில் வரவு செலவு திட்டத்தில் எதுவும் இல்லை. குறிப்பாக வடக்கு கிழக்கு மீனவர்கள் இந்திய மீனவர்களின் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றனர். அதற்கு எந்த தீர்வும் இதில் இல்லை. மேலும் யாழ் மாவட்ட உறுப்பினர் என்றவகையில் வரவு செலவு திட்டத்தை வரவேற்கிறேன். ஏனெனில் யாழ்ப்பாண நூலகத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வட்டுவாக்கல் பாலத்தை புனரமைக்க 1000 மில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மாகாண பாதைகளை செப்பனிடுவதற்கு 500 மில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுவுக்கு வருகை தந்து, நாங்கள் அங்கு முன்வைத்த பல விடயங்களை ஏற்றுக்கொண்டிருந்தார். அதன் பிரகாரம் எமது கோரிக்கைக்கமைய யாழ் மாவட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதனையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என்றார். ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்; வைத்தியர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை - அர்சுனா இராமநாதன் | Virakesari.lk
  20. (எம்.நியூட்டன்) யாழ். மாவட்டத்தில் உள்ள வீதிகளின் முழுமையான விபரங்கள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தயாரிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு கையளிக்கப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்துக்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டு ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தை நடத்தியபோது யாழ். மாவட்டத்துக்கு வீதிகளை புனரமைக்க எவ்வளவு நிதி தேவை, எத்தனை கிலோ மீற்றர் தூர வீதிகள் புனரமைக்கப்படவேண்டும் என்ற கேள்விகளை கேட்டபோது அதற்கு முறையான பதில்களை அரசாங்க அதிகாரிகள் தெரியப்படுத்தவில்லை. மேலும், யாழ். மாவட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பான ஒருங்கிணைப்பு குழுவின் மீளாய்வு கூட்டம் நடை பெற்றபோதும் அமைச்சர் சந்திரசேகரனால் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக, யாழ். மாவட்டத்தில் கிராமங்களின் தேவைப்பாடுகள், வீதிகளின் விபரங்கள், வீட்டுத்திட்டங்கள், மக்களுக்கான தேவைகள் தொடர்பில் ஒவ்வொரு பிரதேச செயலகங்கள், கிராமங்களின் விபரங்கள் பெறப்பட்டு பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகத்திலும் ஆவணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் தான் மாவட்டத்துக்கான விசேட நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கும்போது அல்லது விபரங்கள் யாரும் கேட்கின்றபோது அவற்றை வழங்குவதன் மூலம் மாவட்டத்தின் அபிவிருத்தியை துரிதப்படுத்த முடியும். எனவே, இந்த விடயத்தில் அதிகாரிகள் கூடிய கவனமெடுத்து அதற்கேற்ப துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த விடயங்கள் தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கூறுகையில், மாவட்டத்தின் பிரதேச செயலர்களை அழைத்து கலந்துரையாடி, வீதி அபிவிருத்தி திணைக்கள வீதிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை வீதிகள், மாகாண சபை உள்ளூராட்சி சபை வீதிகள் பற்றிய முழுமையான விபரங்களை பெற்றுக்கொள்ளவுள்ளதுடன் முன்னுரிமை அளிக்கப்படவேண்டிய வீதிகளின் விபரங்கள் அடையாளப்படுத்தப்பட்டு மார்ச் மாதம் முதலாம் வாரத்தில் கையளிக்கப்படும் என்றார். யாழ். மாவட்ட வீதிகளின் முழு விபரங்களும் மார்ச் முதல் வாரத்தில் தயாரிக்கப்படும் - அரச அதிபர் பிரதீபன் | Virakesari.lk
  21. 18 Feb, 2025 | 05:32 PM சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவிக்கையில், இந்த விலை அதிகரிப்பானது இன்று செவ்வாய்க்கிழமை (18) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்திற்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரைட் ரைஸ், கொத்து ஆகியவற்றின் விலைகள் 30 ரூபாவினாலும், தேநீரின் விலை 05 ரூபாவினாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு! | Virakesari.lk
  22. அத்துமீறிய இந்திய இழுவை மடி படகுகளால் எமது மீனவர்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையை சீனா தனக்கு சாதகமாக்கிக்கொண்டு, இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுவதற்காக எம்மை பயன்படுத்த இடமளிக்க மாட்டோம் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாஜத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரம் சீன தூதரக அதிகாரிகளை எமது கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் சந்தித்தோம். கொரோனா காலங்களிலும் இந்திய இழுவைப் படகுகளினால் எமது மீனவர்கள் பாதிக்கப்பட்டபோதும் எமது மக்களுக்கு பல்வேறு உதவிகளை சீன அரசாங்கம் செய்தது. அவர்கள் செய்த உதவிக்கு இந்த சந்திப்பின்போது நன்றி தெரிவித்தோம். அத்துடன், இந்திய இழுவை மடிப் படகுகளால் பாதிக்கப்பட்டு வரும் எமது மீனவர்களுக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தோம். இந்திய அரசிடமும் இதே கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். யார் எமது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினாலும் அதை நாம் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். அத்துமீறிய இந்திய இழுவை மடிப் படகுகளால் தொடர்ச்சியாக நாம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சீனா எமக்கு உதவி செய்வதாக கூறி, எமது கடல் பிராந்தியத்தால் இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுவதற்காக எம்மை பயன்படுத்த எதிர்பார்த்தால், அதற்கு இடமளிக்க முடியாது. இந்தியா எமது அயல் நாடு. அது மாத்திரமல்ல, எமது தொப்புள்கொடி உறவு என்ற ரீதியில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்க, எமது கடற்பரப்பை பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்றார். எமது மீனவர்களை பயன்படுத்தி இந்தியாவை சீனா அச்சுறுத்த இடமளியோம் - யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் | Virakesari.lk
  23. பிரபாகரனிசத்தை முன்வைத்து கட்சி தொடங்கிய நீங்கள் இப்போது சீமானிசத்தில் கொண்டு போய் கட்சியை நிறுத்தியிருக்கிறீர்கள். - தவெக விஜய் தவெகவின் கொள்கைப் பரப்பு இணைச்செயலாளரான சம்பத் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், '*அறிக்கை* ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் எதையாவது உளறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். சமகால சமூகச் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ளாமல் பணக் கொழுப்பு என்று பகிரங்கமாக அறிவித்துள்ள அண்ணன் சீமானுக்கு நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை என்று தான் அர்த்தமாகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட அண்ணன் சீமான் இன்னும் எத்தனை ஆண்டுகள் "வென்றால் மகிழ்ச்சி,.தோற்றால் பயிற்சி" என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை? திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று. அண்ணே, நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம், நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். விஜய் நாங்கள் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது எப்படி என்று சிந்திக்கிறோம் நீங்கள் தமிழ்தேசிய அரசியலை எப்படி வெற்றி பெறாமல் வைத்திருப்பது என்று சிந்திக்கிறீர்கள். பிரபாகரனிசத்தை முன்வைத்து கட்சி தொடங்கிய நீங்கள் இப்போது சீமானிசத்தில் கொண்டு போய் கட்சியை நிறுத்தியிருக்கிறீர்கள். ஒன்று சொல்லட்டுமா அண்ணே, எங்கள் தலைவர் தளபதி விஜய் தன் ரசிகர்களை அரசியல் கட்சியின் தொண்டர்களாக உருமாற்றம், செய்து வருகிறார். நீங்கள் உங்கள் கட்சியின் தொண்டர்களை உங்கள் ரசிகர்களாக உருமாற்றம் செய்து வருகிறீர்கள். உங்களோடு என்றும் எங்களுக்கு ஒத்து போகாது அண்ணே....' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. TVK : 'கட்டுத்தொகையை இழப்பதே தேர்தல் வியூகமாகக் கொண்ட...' - சீமானுக்கு தவெக பதில்! | TVK Condemns Seeman - Vikatan
  24. பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த இ.போ.ச. பேருந்தும், தனியார் பேருந்தும் நேற்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளன. பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏட்டிக்குப் போட்டியாக 'பந்தய ஓட்டத்தில்' ஈடுபட்டபோதே அந்தப் பேருந்துகள் இரண்டும் விபத்தில் சிக்கியுள்ளன. பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இரண்டு பேருந்துகளையும் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து, மாற்றுப் பேருந்துகள் வரவழைக்கப்பட்டு பயணிகள் தமது பயணத்தைத் தொடர்ந்தனர். வடமாகாணத்தில், தொடர்ச்சியாகவே இ.போ.ச. பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் பயணிகளை ஏற்றியபடி 'பந்தய ஓட்டத்தில்' ஈடுபடுகின்றன என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பந்தய ஓட்டம்; இ.போ.ச. - தனியார் பேருந்துகள் விபத்து!
  25. அமைச்சர் சந்திரசேகரின் திடீர் கள விஜயம்! கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு நேற்று (11.02.2025) திடீர் கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். மேற்படி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதாகரனுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர், முக்கிய பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தார். மேற்படி திணைக்களம் ஊடாக மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் முறையாக இடம்பெறுகின்றனவா, சேவைகளை வழங்குவதில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எவ்வாறான வளங்கள் தேவை, மீனவர்களின் தரவுகள் என்பன பற்றி அமைச்சர் கேட்டறிந்தார். அத்துடன், இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும்போது கைப்பற்றப்பட்ட படகுகளின் நிலை பற்றியும் அமைச்சர் இதன்போது அவதானம் செலுத்தினார். அரசாங்கம் மூலம் மீனவர்களுக்கென வழங்கப்படும் நிவாரணங்களை எவ்வித தடையுமின்றி உரியவகையில் பெற்றுக்கொள்வதற்குரிய சூழ்நிலை உள்ளதா என்பது பற்றியும் அமைச்சர், அதிகாரிகளிடம் வினவினார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.