Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. 04 Mar, 2025 | 12:04 PM வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடை ஒன்றிற்குள் சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது. வவுனியா, பழைய பேரூந்து நிலையத்துக்கு அருகில் சைவ உணவகம் ஒன்றிற்கு நேற்று திங்கட்கிழமை (03) சென்ற ஒருவர் அங்கு வடையினை கொள்வனவு செய்துள்ளார். குறித்த வடையை வீட்டில் சென்று சாப்பிட்ட போது அவ் வடைக்குள் பெரிய சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த வடையை அதன் முகாமையாளரிடம் காட்டி ஊசி காணப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டது. தவறுதலாக இடம்பெற்றுள்ளதாகவும், இனிவரும் காலத்தில் இவ்வாறு நடைபெறாது எனவும் கூறி வடையை வாங்கியவரிடம் சைவ உணகவ முகாமையாளர் மன்னிப்பு கோரியுள்ளார். வவுனியாவில் உணவகம் ஒன்றில் வடைக்குள் சட்டை ஊசி | Virakesari.lk
  2. 4 Mar, 2025 | 12:56 PM இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அந்நாட்டு கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் நேற்று திருவோடு ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படையால் கடந்த ஜனவரி முதல் 18 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு, 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், 38 மீனவர்கள் தண்டனை பெற்று, அங்குள்ள சிறைகளில் உள்ளனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 42 மீனவர்கள், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் நீதிமன்றக் காவலில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் பிப். 24 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேசுவரம் மீனவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். பின்னர், சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினர். ஞாயிற்றுக்கிழமை 3-வது நாள் போராட்டத்தின்போது தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி காத்திருப்பு பந்தலில் அமர்ந்திருந்த மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், '' மீனவர் பிரச்சினை குறித்து உடனடியாக தான் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக உறுதி அளித்தார். இந்நிலையில் நேற்று (திங்கட்கிழமை) 4-வது நாள் போராட்டத்தில் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தினர். இதில் மீனவர் சங்கத் தலைவர்கள் சகாயம், சேசுராஜா, தேவதாஸ், எமரிட், ராயப்பன் மற்றும் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு கட்சிப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை தோல்வி: இதற்கிடையே, தங்கச்சிமடம் போராட்ட பந்தலில் மீனவர்களிடம், நேற்று (திங்கள்) மாலை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆகியோர் தமிழக அரசின் நடவடிக்கைகளை எடுத்துக்கூறி போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டனர். ஆனால், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் அதற்கு ஒப்புக் கொள்ளாமல், போராட்டத்தை தொடர்வதாக அறிவித்தனர். ராமேசுவரத்தில் திருவோடு ஏந்தி மீனவர்கள் போராட்டம்: அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்பு | Virakesari.lk
  3. 04 Mar, 2025 | 01:08 PM யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 4,255 கடலட்டைகளுடன் 17 சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (03) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தை அண்மித்த கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட வேளையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபரகள் கடலுக்கு கொண்டு சென்ற நான்கு படகுகள், சுழியோடி உபகரணங்கள், பிடிக்கப்பட்ட 4ஆயிரத்து 255 கடலட்டைகள் என்பவற்றையும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள், மணியத்தோட்டம், உதயபுரம், குருநகர் மற்றும் அரியாலை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் 21 முதல் 56 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களையும், மீட்கப்பட்ட பொருட்களையும் மேலதிக சட்ட நடடிக்கைக்காக யாழ்ப்பாண நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். யாழில் 4,000 கடலட்டைகளுடன் 17 பேர் கைது | Virakesari.lk
  4. 04 Mar, 2025 | 01:22 PM ஜெனீவாவில் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை ஐக்கிய நாடுகள் சபையின் “பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை மாநாட்டின் (CEDAW)” 90 வது அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்து கொண்டார். இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக மேலதிக செலவுகளுக்காக ஒரு நாளைக்கு 40 அமெரிக்க டொலர்கள் படி 6 நாட்களுக்கு வழங்கப்பட்ட 240 அமெரிக்க டொலர்களை அரசாங்கத்திற்கு திருப்பி கொடுத்துள்ளார். அவர் அந்த பணத்தை செலவு செய்யாமல் அப்படியே திருப்பி கொடுத்துள்ளார். பணத்தை திருப்பிக் கொடுத்தமைக்கான பற்றுச்சீட்டை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 240 அமெரிக்க டொலர்களை திருப்பிக்கொடுத்த அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் | Virakesari.lk
  5. 04 Mar, 2025 | 01:50 PM யாழ். நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று (4) ஒன்றுகூடிய மக்கள் மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தீவில் வட மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் நடமாடும் சேவை நாளை புதன்கிழமை (5) முன்னெடுக்கப்படவுள்ள நிலையிலேயே இன்றைய தினம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது நெடுந்தீவில் அமைந்துள்ள மதுபானசாலையை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். “வேணாம் வேணாம் சாவு வேணாம்”, “போதையை ஒழிப்போம் நல்ல பாதையை வகுப்போம்”, “எம் குடும்ப விளக்கை அணைத்து விடாதே”, “குடியை விடு பிள்ளைகளை படிக்க விடு” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷம் எழுப்பினர். அத்துடன் மதுபானசாலையை அகற்றுவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெடுந்தீவில் மதுபானசாலைக்கு எதிராக மக்கள் போராட்டம் | Virakesari.lk
  6. (நா.தனுஜா) இலங்கையின் கையிருப்புக்கள் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின் ஊடாக அடைவதற்கு எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் அரைவாசியை அடைந்திருப்பதாகவும், இது பெரிதும் வரவேற்கத்தக்க விடயம் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் பீற்றர் ப்ரூயர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் குறித்த மூன்றாம் கட்ட மீளாய்வு தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை ஒப்புதல் அளித்தது. அதனையடுத்து வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத் தலைமையகத்தில் இலங்கை நேரப்படி நேற்று திங்கட்கிழமை (03) மு.ப 8.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் பீற்றர் ப்ரூயர், பிரதித்தலைவர் கற்ஸியரினா ஸ்விரிட்ஸென்கா மற்றும் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்த்தா டெஸ்ஃபாயே வோல்ட்மைக்கல் ஆகியோர் கலந்துகொண்டு, இலங்கையின் சமகால பொருளாதார நிலைவரம் தொடர்பில் தெளிவுபடுத்தினர். அதன்படி இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றம் குறித்துக் கருத்துரைத்த பீற்றர் ப்ரூயர், 'நான் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதற்தடவையாக இலங்கைக்கு வருகைதந்தபோது, நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்தது. பொதுமக்கள் எரிபொருள், எரிவாயு, உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்ததுடன் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. அக்காலப்பகுதியில் தீவிர நெருக்கடியின் விளைவாக இலங்கை அதன் பொருளாதாரத் தொழிற்பாடுகள் மூலமான வருமானத்தில் 10 சதவீதத்தை இழந்திருந்தது' எனச் சுட்டிக்காட்டினார். இருப்பினும் கடந்த 2023 ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து தற்போதுவரை இலங்கை கடந்த 5 வருடகாலத்தில் இழந்த வருமானத்தில் 40 சதவீதத்தை மீளப்பெற்றிருப்பதாகவும், இலங்கையின் அண்மைய பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக அமைந்திருப்பதே இம்மீட்சிக்கு சான்று எனவும் அவர் தெரிவித்தார். அத்தோடு எதிர்வருங்காலத்தில் இலங்கையில் பொருளாதார வாய்ப்புக்கள் அதிகரிக்கும், வருமானம் உயர்வடையும், வறுமை மட்டம் வீழ்ச்சியடையும், புதிய வாய்ப்புக்களைத்தேடி மக்கள் புலம்பெயரும் எண்ணிக்கை குறைவடையும் என்றும் பீற்றர் ப்ரூயர் நம்பிக்கை வெளியிட்டார். இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு | Virakesari.lk
  7. 04 Mar, 2025 | 06:36 PM பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம் மற்றும் ஆனையிறவு உப்பளம் ஆகிய இடங்களுக்கு நேற்று திங்கட்கிழமை (03) விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தக்கரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் ஆனையிறவு உப்பு உற்பத்தி குறித்த கட்டிடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், கைத்தொழில் அமைச்சர் எதிர்வரும் 7ம் திகதி யாழ்ப்பாணம் வருகை தர இருக்கின்றார். அதனுடன் பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம் மற்றும் ஆனையிறவு உப்பளத்திற்கும் வருகை தரவுள்ளார். அவரின் விஜயம் தொடர்பாக முன்னாயத்த விடயங்களை பார்வையிட இன்றைய கள விஜயம் அமைந்தது. ஆனையிறவு உப்பளத்தை கடந்த காலங்களில் இவ்வாறான உற்பத்திகளை முடிவுப்பொருள் ஆக முன்பே வேறு தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்தது. நாங்கள் முடிவுப்பொருளாக்கி அதிக இலாபம் ஈட்டுவதுடன், இவற்றின் ஊடாக இப்பிரதேசத்தைச் சார்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியும் என்றார். பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம், ஆனையிறவு உப்பளத்துக்கு இளங்குமரன் எம்பி விஜயம் | Virakesari.lk
  8. (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்வம் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டணி உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேசத்தில் கடந்த மாதம் 20ஆம் திகதி வாள்வெட்டு குழுவினால் அங்கு வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யாமல் இருப்பது தொடர்பில் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். அத்துடன் கைதுசெய்யப்படாமல் இருப்பது தொடர்பில் மக்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவும் கல்லடி நகரிலும் வாள்வெட்டு குழுவொன்று மட்டக்களப்பு நகரில் வாள்வெட்டு சம்பவம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறது. ஜனாதிபதி இந்த சபையில் வந்து இறுதியாக உரையாற்றும்போது பாதாள குழுக்களால் மட்டக்களப்பு நகரிலும் பாதாள சம்பவங்கள் இடம்பெறலாம் என தெரிவித்திருந்தார், அதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் இவ்வாறான சம்பவம் தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான் அமைச்சர் கூடிய கவனம் செலுத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என கேட்டுக்கொள்கிறேன் என்றார். மட்டக்களப்பில் இடம்பெறும் வாள்வெட்டுக்களுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - சாணக்கியன் | Virakesari.lk
  9. மீனவர் பிரச்சினைக்கு மத்தியஇ மாநில அரசுகள் இணைந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி ராமேசுவரம் செம்மமடம் பகுதியில் மனோலயா மனநல காப்பகக் கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை விமானம் மூலம் மதுரை சென்றார் ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம் செல்லும்வழியில் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மூன்றாவது நாளாக நடைபெற்ற மீனவர்களின் காத்திருப்பு போராட்ட பந்தலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சென்றார். மீனவர்கள் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும். இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளையும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தண்டனை அனுபவித்து வரும் மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்தனர். காத்திருப்பு பந்தலில் அமர்ந்திருந்த மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய ஆளுநர் ஆர்.என். ரவி மீனவர் பிரச்சினை குறித்து உடனடியாக தான் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். இது குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: ராமேசுவரத்துக்கு நான் சென்றிருந்தபோது துன்பத்தில் உழலும் நமது மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளைச் சந்தித்தேன். அவர்களின் நிலை மீது நான் ஆழ்ந்த இரக்கம் கொள்கிறேன். 1974 ஆம் ஆண்டு மத்தியிலும் மாநிலத்திலும் இருந்த அரசுகள் கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியை அநியாய ஒப்பந்தம் மூலம் கொடுத்து பெரும் பாவத்தை மீனவர்களுக்கு இழைத்தன. அன்றிலிருந்து இன்று வரை நமது மீனவ சமூகம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இலங்கை அரசால் அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். இதற்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இந்தப் பிரச்சினையை அரசியலாக்குவதற்குப் பதிலாகவும் மத்திய அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாகவும் ஆக்கபூர்வமான அணுகுமுறையை மாநில அரசு மேற்கொண்டால் அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு பெரிதும் உதவும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 1974 ஆம் ஆண்டுமத்தியிலும் மாநிலத்திலும் இருந்த அரசுகள் கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியை அநியாய ஒப்பந்தம் மூலம் கொடுத்து பெரும் பாவத்தை மீனவர்களுக்கு இழைத்தன.-தமிழக ஆளுநர் | Virakesari.lk
  10. 03 Mar, 2025 | 03:00 PM யாழ்.நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்கள் குழுவொன்று பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை ஒன்று திரட்டி உருவாக்கப்பட்ட சமூக ஊடக வலையமைப்பின் ஊடாக பல்வேறு தவறான நடத்தைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக ஊடக வலையமைப்பில் 10ஆம் மற்றும் 11ஆம் ஆண்டு மாணவர்கள் மாத்திரமன்றி யாழ்ப்பாணப் பாடசாலைகளில் பயிலும் மாணவிகளும் உள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள தன்னார்வ அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த சமூக ஊடக வலையமைப்பின் உறுப்பினர்கள் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற பாலியல் காட்சிகளை பரிமாறிக்கொள்வதுடன், அந்த உறுப்பினர்களின் தனிப்பட்ட பாலியல் செயல்பாடுகளும் பரிமாறிக்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த சமூக ஊடக வலையமைப்பை பயன்படுத்தி மது மற்றும் போதைப்பொருள் பாவனைக்கான விருந்துகளை நடாத்தியதாக யாழ். தன்னார்வ அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. யாழில் மாணவர்களை தவறான நடத்தைகளுக்குள்ளாக்கும் புதிய வலையமைப்பு ! | Virakesari.lk
  11. 03 Mar, 2025 | 03:11 PM இவ் வருடத்தின் முதல் மாதத்தில் 400.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலாப் பயணிகளால் வருமானமாக கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகளில் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 341.8 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில் இது 17.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை மொத்தமாக 232,341 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது. இதன்மூலம் இவ்வருடத்தில் பெப்ரவரி ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தமாக 485,102 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 362.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலா வருமானமாக கிடைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான மொத்த சுற்றுலா பயணிகளால் கிடைத்த வருமானமாக 3,168.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளது என்றும் மத்திய வங்கியின் தரவு தெரிவிக்கின்றன. இது 2023 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 2,068.0 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்துடன் ஒப்பிடும் போது 53.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளால் ஜனவரியில் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் | Virakesari.lk
  12. இந்திய அமைதி காக்கும் படைகளால் சிறிலங்காவில்மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வு வழங்கவேண்டிய கடப்பாடு இந்தியஅரசாங்கத்திற்கு உள்ளது. என யாழ் வடமராட்சியில் நேற்று வெளியான வல்வெட்டித்துறை ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள் என்ற அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது அந்த அறிக்கை இந்திய அரசாங்கத்திற்கு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- வல்வெட்டித்துறை படுகொலையிலும் இலங்கையில் இருந்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான உரிமை மீறல்களிலும் இந்திய அமைதிகாக்கும் படையினரின் வகிபாகம் தொடர்பாக பொறுப்புக்கூறல் மட்டில் சர்வதேச சட்டத்தின் கீழ் தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதுடன் இந்திய அமைதிப்படையின் கட்டளை அதிகார வலையமைப்பினையும் மூத்த அதிகாரிகளின் பெயர் பட்டியல்களையும் வெளியிடவேண்டும். இவ்வன்முறைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அவர்களது கட்டளை அதிகாரிகளும் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுஇபொறுப்புக்கூறல் செயற்பாட்டின் குற்றச்சாட்டினை எதிர்கொள்வதை உறுதிப்படுத்தவேண்டும். இதன் மூலமாக இவர்களால் இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும்அதனால் ஏற்பட்ட இழப்புகளுக்கும்இவல்வெட்டித்துறை மக்கள் முறைப்பாடுகளை மேற்கொள்வதை ஏதுவாக்கும் நிலையேற்படும். பரிகாரங்கள் வல்வெட்டித்துறைப் படுகொலையில் பாதிக்கப்பட்டமக்களுக்கு இழப்பீடு மற்றும் ஆதரவினை வழங்க உறுதியளிக்கவும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களைநிவர்த்தி செய்யவும் அவர்களது குடும்பங்கள் மற்றும்பாதிக்கப்பட்ட வல்வெட்டித்துறைச் சமூகத்திற்குபொருளாதார மற்றும் அடையாள உதவிகளை வழங்குவதையும் மேற்கொள்வதற்கு உறுதியளிக்க வேண்டும். ஒரு விரிவான இழப்பீட்டு மற்றும் புனர்வாழ்வு செயல்திட்டத்தை உருவாக்குதல் இதில் பிரதானஉழைப்பாளிகள் காயமடைந்தவர்கள் சொத்திழப்புக்கள்வருமான இழப்புக்கள் வாழ்வாதார இழப்புக்கள்பொருளாதார வாய்ப்புக்களில் இழப்புக்களுக்கானபதிலீடுகள் மருத்துவ மற்றும் உளவியல் சமூக ஆதரவுகள்என்பன உள்ளடக்கப்படல் வேண்டும வல்வெட்டித்துறைப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள்மற்றும் அவர்களது குடும்பத்திடமும் வல்வெட்டித்துறைச்சமூகத்திடமும் எழுத்து மூலமான பொது மன்னிப்புக்கோருதல் இந்திய அமைதி காக்கும் படைகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வு வழங்கவேண்டிய கடப்பாடு இந்திய அரசாங்கத்திற்கு உள்ளது - வல்வெட்டித்துறை படுகொலையின் வாக்குமூலங்கள் அறிக்கையில் வேண்டுகோள் | Virakesari.lk
  13. ‘போலீஸ் விசாரணையில் புதிய கேள்விகள் ஏதும் கேட்கப்படவில்லை’ - சீமான் சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் வெள்ளிக்கிழமை (பிப்.28) போலீசார் சுமார் 1 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சீமான் சந்தித்தார். “போலீஸ் விசாரணையில் சென்ற முறை கேட்ட அதே பழைய கேள்விகளையே இந்த முறையும் கேட்டனர். புதிய கேள்விகள் ஏதும் கேட்கப்படவில்லை. விசாரணைக்கு தாமதமாக வர காவல் துறையினரே காரணம். என்னை அவமானப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். விசாரணைக்கு மீண்டும் தேவைப்பட்டால் ஆஜராக தயார். போலீஸ் விசாரணையில் என்ன நல்ல முறையில் நடத்தினர். இந்த வழக்கை விசாரித்து முடிக்க மூன்று மாதம் கால அவகாசம் உள்ளது. மூன்றே நாளில் இதை விரைந்து செய்ய வேண்டிய அவசியம் என்ன? எனக்கு சம்மன் கிடைத்த போது நான் பயணத்தில் இருப்பதாக தெரிவித்தேன். மீண்டும் கொடுத்த சம்மனை அடுத்து போலீஸ் விசாரணைக்கு ஆஜரானேன். போலீஸ் தரப்புக்கு இந்த வழக்கில் அழுத்தம் தரப்படுகிறது. ஆளும் திமுக அரசு இந்த வழக்கை நீட்டித்துக் கொண்டு செல்கிறது. என் வீட்டின் கதவில் ஒட்டப்பட்ட சம்மனை அகற்றியதில் எந்த தவறும் இல்லை. எங்கள் வீட்டில் இருந்த இருவரை கைது செய்ததும், அவர்களை தாக்கியதும் தவறு. சம்மனை ஒட்டியது வளசரவாக்கம் காவல் நிலைய அதிகாரிகள். அப்படி இருக்கும் போது நீலாங்கரை காவல் நிலைய அதிகாரிகள் ஏன் எங்கள் வீட்டில் இருந்தவர்களை கைது செய்ய வேண்டும். கருணாநிதி என்னை கைது செய்து தலைவர் ஆக்கினார். இப்போது இவர்கள் என்னை கைது செய்து முதல்வர் ஆக்க உள்ளனர். கடந்த தேர்தலில் தனித்து நின்று அடையாளம் பெற்றோம். எங்களுக்கு 36 லட்சம் வாக்குகள் விழுந்தன. வாக்குக்கு பணம் கொடுக்காமல் இதை பெற்றுள்ளோம். என் மீதுள்ள நற்பெயரை சிதைக்கும் வகையில் அரசு இதை செய்துள்ளது. புகார் அளித்த நடிகை கடந்த 15 ஆண்டுகளாக என்னை அவமானப்படுத்தி வருகிறார். விரும்பி வந்து அவர் உறவு வைத்துக் கொண்டார். எனக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. குழந்தைகள், குடும்பம் ஆகிவிட்டது. என் மீதான பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டதா?” என தெரிவித்தார். “அரசியல் களத்தில் நான் ஒரு பக்கமும், விஜய் ஒரு பக்கமும் நிற்கிறார். என்றைக்கும் அவர் எனது அன்புத் தம்பி தான். மாண்புமிகு முதல்வர் அப்பா ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என சீமான் இந்த சந்திப்பின் போது தெரிவித்தார். முன்னதாக, காவல் துறை சம்மனை ஏற்று சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் இந்த வழக்கு தொடர்பாக சுமார் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் போலீஸ் தரப்பில் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு சீமான் அளித்த பதில் அனைத்தும் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. காவல் துறையின் இணை ஆணையர் அதிவீர பாண்டியன், உதவி ஆணையர் செம்பேடு பாபு மற்றும் வளசரவாக்கம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஆகியோர் சீமானிடம் விசாரணை நடத்தினர். திரண்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்: போலீஸ் விசாரணைக்கு சீமான் ஆஜரான நிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் வளசரவாக்கம் காவல் நிலையம் அருகே திரண்டனர். அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புகளை காவல் துறை அமைத்திருந்தது. பாதுகாப்பு கருதி 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காவல் நிலையத்துக்குள் சீமான் மற்றும் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதன் காரணமாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காவல் நிலையத்துக்கு வெளியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதை கண்டித்து நாதக நிர்வாகிகள் கண்டன குரல் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னணி என்ன? - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில், பாதுகாவலரை போலீஸார் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், சென்னை வளசரவாக்கம் போலீஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். ஆனால், வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம், 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இது தொடர்பாக அனுப்பிய சம்மனில் குறிப்பிட்டபடி சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் கதவில் வியாழக்கிழமை மீண்டும் சம்மன் ஒட்டப்பட்டது. அதில், பிப். 28-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆஜராகத் தவறினால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் அந்த சம்மனை கிழித்தெறிந்தார். இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்காக, நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன்ராஜேஷ் மற்றும் போலீஸார் சீமான் வீட்டுக்குச் சென்றனர். அப்போது, சீமான் வீட்டில் பாதுகாவலராகப் பணியாற்றி வரும் ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்புப் படை வீரர் அமல்ராஜ், போலீஸாரை வீட்டின் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் ஆவேசமடைந்த காவல் ஆய்வாளர் அவரைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றார். அப்போது, இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அமல்ராஜை போலீஸார் கைது செய்ய முயன்றதால், அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து, ஆய்வாளர் உள்ளிட்ட 3 போலீஸார் அமல்ராஜின் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்று, காவல் துறை ஜீப்பில் ஏற்றினர். இதற்கிடையில், பாதுகாவலர் அமல்ராஜ் வைத்திருந்த கைத்துப்பாக்கியை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவரிடமிருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், சம்மனை கிழித்ததாக சீமானின் உதவியாளர் சுபாகர் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் நடந்தபோது சீமான் மனைவி கயல்விழி வீட்டிலிருந்து வெளியே வந்து, காவல் ஆய்வாளரிடம் மன்னித்து விடுமாறு முறையிட்டார். கைது செய்யப்பட்ட அமல்ராஜ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘நான் கைதுக்கு பயப்பட மாட்டேன்’ - சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த சீமான் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்ம் கூறும்போது, “காவல் ஆய்வாளர் ப்ரவீன் போன்றவர்களின் அணுகுமுறையால் காவல் துறைக்கே களங்கம். எனக்கு மட்டுமே வழங்கப்பட்ட அழைப்பாணையை அனைவரும் படிக்கும் விதத்தில் ஊடகங்கள் முன்னிலையில் ஒட்டிய அணுகுமுறையே தவறானது. அதேபோல் காவலாளி அமல்ராஜோ உள்ளிட்டோர் அழைப்பாணையை ஒட்டியபோது தடுக்கவில்லை, அப்படி தடுத்திருந்தால் தவறு. இதுபற்றி எனக்கும், எனது மனைவிக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு அந்த அழைப்பாணை அங்கு ஏன் இருக்க வேண்டும். திமுக கருத்தியல் ரீதியாக எதிர்க்காமல் தனிப்பட்ட முறையில் அனைவரையும் எதிர்க்கிறது. இதை பார்க்கும் போது, அந்த பயம் இருகட்டும் என்ற திமிர் தான் தனக்கு ஏற்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக விவகாரம், சாரயம் காய்ச்சுவது, பள்ளிகளில் போதை பொருள் புழக்கம், கூட்டு பாலியல் பலாத்காரம் போன்றவற்றில் சட்டம் தன் கடமையை ஏன் செய்யவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக ஒரு பெண்ணை (நடிகை விஜயலட்சுமி) பேச வைத்து பிரச்சினை செய்து வருகிறார்கள். நான் கைதுக்கு பயப்பட மாட்டேன். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அது முடிந்ததும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கபடும்” என்றார். ‘போலீஸ் விசாரணையில் புதிய கேள்விகள் ஏதும் கேட்கப்படவில்லை’ - சீமான் | No new questions asked in police investigation says Seeman - hindutamil.in
  14. “நீலாங்கரை போலீஸாரின் ஈகோதான் அனைத்துக்கும் காரணம்” - சீமான் மனைவி கயல்விழி குற்றச்சாட்டு சென்னை: “காவல் துறையினர் ஈகோவில்தான் எல்லாம் செய்கிறார்கள். வீட்டில் ஆள் இருந்தும், எதுவுமே சொல்லாமல் சம்மன் ஒட்டப்பட்டது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி குற்றம்சாட்டியுள்ளார். நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் வழக்கு தொடர்பாக, சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டில், வளசரவாக்கம் போலீஸார் சம்மன் ஓட்டிய நிலையில், அதை கிழித்த பணியாளர் மற்றும் வீட்டின் காவலாளி ஆகிய இருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அப்போது அங்கிருந்த சீமானின் மனைவி கயல்விழி, போலீஸாரிடம் மன்னிப்பு கேட்டும், இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சீமானின் மனைவி கயல்விழி, சென்னை நீலாங்கரையில் வீட்டின் முன்பு செய்தியாளர்களிடம் கூறியது: “காவல் துறையினர் சம்மன் கொண்டு வருகிறார்கள் என்ற செய்தி எனக்கு வந்தது. முன்னதாக இரண்டு வாரத்துக்கு முன்பு வளசரவாக்கம் காவல் துறையினர் வீட்டுக்கு வருகை தந்து சீமானிடம் சம்மன் வழங்கிவிட்டு சென்றனர். அப்போது அவரே போலீஸாரிடம் 2 வாரத்துக்கு தேதியில்லை என்றார். பின்னர் போலீஸார் 27-ம் தேதி தங்களது வழக்கறிஞர்கள் வந்து எழுதி கொடுக்கட்டும் என்று சொல்லிவிட்டு சென்றனர். சீமான் நேற்று ஊரில் இல்லை. அந்தவகையில் காவல் துறையினர் சம்மன் கொண்டுவந்தால், கையெழுத்து போட்டு வாங்கிக்கொள்ளலாம் என்ற முடிவில் தான் நான் இருந்தேன். ஆனால், வீட்டுக்கு வந்த போலீஸார் எங்களிடம் எதுவுமே தெரிவிக்காமல், வீட்டில் யாருமே இல்லாததுபோல சம்மனை ஒட்டிவிட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டபோது, காவல் துறையினர் சம்மனை ஒட்டிவிட்டு சென்றுவிட்டால், அதன்பின் எடுத்துவிடலாம் என தெரிவித்தனர். இதையடுத்து சம்மனை படிப்பதற்காக நான்தான் கிழிக்கச் சொன்னேன். பின்னர் படித்து கொண்டிருந்தபோது திடீரென வீட்டின் முன்கதவு திறக்கப்பட்டு கூச்சலிடும் சத்தம் கேட்டது. காவலாளி அமல்ராஜ் முன்னாள் ராணுவ அதிகாரி ஆவார். ஆனால், அவரை குப்பை மாதிரி தூக்கிப் போட்டு கைது செய்து அழைத்துச் சென்றனர். நான் முதலில் காவலாளிதான் போலீஸை தள்ளி விட்டார் என்று நினைத்துதான் மன்னிப்பு கேட்டேன். ஆனால், அவர்கள் கைது அளவுக்கு கொண்டு செல்வார்கள் என நினைக்கவில்லை. காவலாளி அமல்ராஜ் போலீஸாரை தள்ளவில்லை. அவர் கதவை திறந்தவுடன் போலீஸார் கதவை தள்ளிவிட்டு, அவரை கைது செய்தனர். இது முழுக்க முழுக்க திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் நாடகமாகும். வளசரவாக்கம் போலீஸார் ஒட்டி விட்டு சென்ற சம்மனை, நீலாங்கரை போலீஸார் ஏன் வந்து பார்க்க வேண்டும்? சம்மன் எங்களுக்கு தானே. அதை எடுத்து படிப்பதில் என்ன தவறு உள்ளது? அந்த சம்மனை நானே எடுத்திருப்பேன். ஆனால் இரவு உடையில் வெளியே வரமுடியாததால் பணியாளரை எடுக்க சொன்னேன். அதுதான் நான் செய்த தவறு. நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன். எனில், போலீஸார் என்னிடம் பேசியிருக்கலாமே அல்லது என்னையே கைது செய்திருக்கலாமே? போலீஸார் கதவை தள்ளிவிட்டு வீட்டுக்குள் வரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? தொடர்ந்து பணியாளரை காவல் நிலையத்துக்கு அனுப்பவில்லை என்றால் படையை இறக்குவோம் என்றும் சொன்னார்கள். அதேபோல் காவலாளி அமல்ராஜ் துப்பாக்கிக்காக உரிமம் பெற்று வைத்திருப்பவர். தன்னிடம் ஆயுதம் இருக்கிறது என்பதை போலீஸாரிடம் சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லி, அவரே எடுத்து கொடுத்திருக்கிறார். ஆனால், துப்பாக்கி காட்டி மிரட்டியதாக வழக்கு போட்டுள்ளனர். நீலாங்கரை ஆய்வாளருக்கு எங்கள் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. அதனால் கைது செய்யப்பட்ட காவலாளி அமல்ராஜ் மற்றும் பணியாளர் சுபா இருவரும் நேரடியாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படவில்லை. மாறாக, ஒரு பூங்காவுக்கு அழைத்துச் சென்று அடித்திருக்கின்றனர். அதன்பின் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று இரும்பு ராடில் துணியை சுற்றி வைத்து இருவரையும் போலீஸார் அடித்துள்ளனர். எதற்கு காவல் துறை இவ்வாறு செய்ய வேண்டும்? அந்தளவுக்கு என்ன தப்பு செய்தார்கள் இருவரும்? சீமான் ஊரில் இல்லை என போலீஸாருக்கும் தெரியும். அதனால் வேண்டும் என்றே இதை செய்தனர். இரண்டு வாரமாக தொடர் பயணத்தில் இருக்கும் சீமான், ஒரு நாளில் 2 அல்லது 3 முறையாவது ஊடகங்களை சந்திக்கிறார். அவர் எங்கே இருக்கிறார் என எல்லாருக்குமே தெரியும். அவர் மீது எவ்வளவோ வழக்குகள் உள்ளன. அவர் என்ன ஓடியா போய்விட போகிறார். அத்தனையையும் நேர்மையாக அவர் எதிர்கொண்டு தான் வருகிறார். எங்களுக்கு சிறையை கண்டு பயமில்லை. இது முழுக்க முழுக்க காவல் துறை திட்டமிட்ட செய்த செயலாகும். காவல் துறை மீது அதிக மரியாதை இருக்கிறது. ஆனால், அவர்கள் இப்படி நடந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கவில்லை. நீலாங்கரை போலீஸார் ஈகோவில்தான் அனைத்தையும் செய்திருக்கிறார்கள். சீமான் மீது எத்தனையோ வழக்குகள் இருக்கும்போது பாலியல் குற்றம், பாலியல் குற்றம் என தொடர்ந்து பேசி அசிங்கப்படுத்த வேண்டும் என்றுதான் முயற்சிக்கின்றனர். அந்தப் பெண் (நடிகை விஜயலட்சுமி) எத்தனையோ நாளாக அதைப் பேசி வருகிறார். இந்த வழக்கில் பல குழப்பங்கள் உள்ளன. அதை காவல் துறை நேர்மையாக விசாரிக்கட்டும்” என்று அவர் கூறினார். “நீலாங்கரை போலீஸாரின் ஈகோதான் அனைத்துக்கும் காரணம்” - சீமான் மனைவி கயல்விழி குற்றச்சாட்டு | Seeman wife Kayalvizhi alleges Police over summon issue - hindutamil.in
  15. நீதிமன்றங்களில் 1,131,818 வழக்குகள் நிலுவையில் இருப்பதால், சட்டத்தை நிலைநாட்டும் செற்பாட்டில் கணிசமான காலதாமதம் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைபாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, உயர்நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட வேண்டிய 5,785 வழக்குகள் நிலுவையில் இருப்பதுடன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4,572 வழக்குகளும், மேல் நீதிமன்றங்களில் 6,286 வழக்குகளும், வணிக மேல்நீதிமன்றங்களில் 6,146 வழக்குகளும், மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றங்களில் 3 வழக்குகளும்,மேல்நீதிமன்றங்களில் 27,324 வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் 262,665 வழக்குகளும், சிறுவர் நீதவான் நீதிமன்றங்களில் 1260 வழக்குகளுமாக ஒட்டுமொத்தமாக தீர்க்கப்பட வேண்டிய 1,131,818 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக, அதிகாரிகள் குழுவில் சுட்டிக்காட்டினர்.AN Tamilmirror Online || ‘1,131,818 வழக்குகள் நிலுவையில் உள்ளன’
  16. 27 Feb, 2025 | 05:00 PM (எம்.மனோசித்ரா) சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் கூட, தனக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனா அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். எனது உடல் நிலையைக் கருத்திற் கொண்டு தினமும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வைத்தியர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் சிறைச்சாலை அதிகாரிகள் வெளியிலிருந்து உணவைப் பெற்றுக் கொள்ள எனக்கு அனுமதியளிக்கவில்லை. இதற்கு முன்னர் 4 சந்தர்ப்பங்களில் சிறை தண்டனை அனுபவித்த போது நான் இவ்வாறு நடத்தப்படவில்லை. உண்மையில் இது அரசாங்கத்தின் முடிவா அல்லது சிறை அதிகாரிகளின் தன்னிச்சையான செயலா? என்னைப் போன்று சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள கைதிகள் பலரும் மனிதாபிமானமற்ற முறையிலேயே நடத்தப்பட்டுகின்றனர். இன்று சமூக வலைத்தளங்களை அதிகமாக உபயோகப்படுத்துவோர் செல்வாக்கு மிக்கவர்களாகவுள்ளனர். அவ்வாறானவர்களது அழுத்தங்கள் காரணமாகவே எனக்கான மருத்துவ தேவைகள் கூட புறக்கணிக்கப்பட்டன. கைதிகள் இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். மருத்துவ தேவைகள் காணப்படும் கைதிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றார். சிறைச்சாலைக்குள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன் - கலகொட அத்தே ஞானசார தேரர் | Virakesari.lk
  17. 8 Feb, 2025 | 04:40 PM யாழ்ப்பாணம் பிரவுண் வீதி சந்தியில் நேற்று வியாழக்கிழமை (27) மாலை மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பிரவுண் வீதி சந்தியில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ள நிலையில் குறித்த முச்சக்கரவண்டியானது வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடனும் மோதியுள்ளது. இந்த விபத்தில் பாரிய சேதங்கள் இல்லாது தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். மேலும், குறித்த சந்தியில் நாளாந்தம் தொடர்ச்சியாக வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது, ஆகையினால் குறித்த சந்தியில் வீதிச் சமிக்ஞை விளக்கு பொருத்தப்பட வேண்டுமென தொடர்ச்சியாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. யாழில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! | Virakesari.lk
  18. கிளிநொச்சியில் கடல் நீரை நன்னீராக்கும் நிலையத்தை பார்வையிட்டார் வடக்கு ஆளுநர் கிளிநொச்சியில் கடல் நீரை நன்னீராக்கும் நிலையத்தை பார்வையிட்டார் வடக்கு ஆளுநர் 28 Feb, 2025 | 06:23 PM யாழ்ப்பாணம் - கிளிநொச்சி குடிநீர் விநியோக திட்டத்தின் கீழ் தாளையடியில் அமைந்துள்ள கடல் நீரை நன்னீராக சுத்திகரிக்கும் நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று வெள்ளிக்கிழமை (28) நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது திட்டப் பணிப்பாளரும் பொறியியலாளருமான எஸ்.மாலதி மற்றும் பொறியியலாளர் விஜயகாந் தலைமையிலான குழுவினர் ஆளுநரை வரவேற்றனர். அதனை தொடர்ந்து, குடிநீர் விநியோகத் திட்டத்தின் கட்டுப்பாட்டு அறையின் செயற்பாடுகளை ஆளுநர் பார்வையிட்டார். அதன் பின்னர், கடல் நீரை உள்ளெடுக்கும் நிலையம், சுத்திகரிப்பு மற்றும் விநியோகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார். இது தொடர்பாக திட்டப் பணிப்பாளர் மற்றும் பொறியியலாளர்கள் ஆளுநருக்கு விளக்கமளித்தனர். கிளிநொச்சியில் கடல் நீரை நன்னீராக்கும் நிலையத்தை பார்வையிட்டார் வடக்கு ஆளுநர் | Virakesari.lk
  19. 28 Feb, 2025 | 05:02 PM (நமது நிருபர்) தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குழுவாகச் செயற்படுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குழுவாக ஒன்றுபட்டு ஒன்றினைந்து செயற்படுதல் விடயத்தின் தேவையையும் முக்கியத்துவத்தையும் அறிந்து தெளிந்து உணர்ந்து பொதுவான விடயங்களில் ஒன்றுபட்டு செயற்படுவது சாலச்சிறந்தது. இந்த குழுவை நம்மத்தியில் உருவாக்கி செயற்பட தங்கள் ஒவ்வொருவருடைய ஒத்துழைப்பினையும் வேண்டி நிற்கின்றேன். இது தமது இனத்தின் பிரச்சனைகளை சீர்தூக்கிபார்த்து கலந்துரையாடி முடிவுகளை எடுக்க உதவும் என்று நம்புகின்றேன். இவ்வாறான ஓர் குழுவாக பாரளுமன்றத்தில் செயற்பட உங்களது மேலான ஒத்துழைப்பை தருமாறு வேண்டிநிற்கின்றேன் என்றுள்ளது. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள கோரிக்கை | Virakesari.lk
  20. “போலீஸ் சம்மனுக்கு ஆஜராக மாட்டேன்... என்ன செய்ய முடியும்?” - சீமான் திட்டவட்டம் ஓசூரில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஓசூர்: “போலீஸார் அனுப்பியுள்ள சம்மனுக்கு ஆஜராகியே வேண்டும் என்றால் கூட நான் ஆஜராக மாட்டேன். என்ன செய்ய முடியும்?” என்று நடிகை விஜயலட்சுமி வழக்கு விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக வேண்டும் என போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகததால் அவரது வீட்டின் கதவில் போலீஸார் சம்மனை இன்று (பிப்.27) ஒட்டினர். கதவில் ஒட்டப்பட்ட அந்த சம்மனை, அங்கிருந்த காவலர் கிழித்ததாகவும், இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வீட்டு காவலாளி உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்ததாகவும் செய்திகள் வெளியானது.இது தொடர்பாக ஓசூரில் சீமான் செய்தியாளர்களிடம் கூறியது: “என்னால் வரமுடியாது. சென்னை வந்தவுடன் வருவதாக கூறியிருந்தேன். நான் எங்கும் ஓடவில்லை. தினமும் செய்தியாளர்களை சந்தித்து கொண்டுதான் இருக்கிறேன். இன்று ஓசூரில் இருக்கிறேன் என்பது குறித்து போலீஸாருக்கும் தெரியும். நான் வருகிறேன் என்று கூறியும், வீட்டில் சம்மன் ஒட்டி வைத்து, என்னை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர். அதற்கு எல்லாம் நான் அச்சப்பட மாட்டேன். நடிகையின் புகார் குறித்த வழக்கை ரத்து செய்யக் கோரி நான்தான் வழக்குத் தொடர்ந்தேன். இருவரையும் உட்கார வைத்து விசாரணை செய்ய வேண்டும். ஜெயலலிதா, எடப்பாடி முதல்வராக இருந்த, கடந்த 10 ஆண்டுகள் அந்த நடிகை (விஜயலட்சுமி) வரவில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, என்னை அவர்களால் சாமளிக்க முடியாத நேரங்களிலும், தேர்தல் சமயங்களிலும் இந்த நடிகையை வரழைத்து விடுகின்றனர். இந்த வழக்கில் உடனடியாக ஆஜராக என்ன அவசரம் இருக்கிறது? கடந்த 15 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் விசாரணை செய்கின்றனர். இதையே தான் சொல்லி வருகிறேன். இந்த வழக்கில், போலீஸார் அனுப்பியுள்ள சம்மனுக்கு ஆஜராகியே வேண்டும், என்றால் கூட நான் ஆஜராக மாட்டேன். என்ன செய்ய முடியும்?,” என்று அவர் கூறியுள்ளார். பின்னணி என்ன? - முன்னதாக, தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னையில் உள்ள வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011-ல் புகார் அளித்திருந்தார். அதையடுத்து போலீஸார் சீமானுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக அண்மையில் நடந்தது. அப்போது ‘‘இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நடிகை விஜயலட்சுமி புகாரை திரும்பப் பெற்றாலும்கூட பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கில் போலீஸார் 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து, முதல்கட்டமாக வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு அண்மையில் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று (பிப்.27) சீமானின் வழக்கறிஞர்கள் அவரது சார்பாக நேரில் ஆஜராகினர். சீமான் தற்போது கிருஷ்ணகிரியில் கட்சி ரீதியான பணியில் ஈடுபட்டிருப்பதால் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி காவல்துறையில் விளக்கம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. “போலீஸ் சம்மனுக்கு ஆஜராக மாட்டேன்... என்ன செய்ய முடியும்?” - சீமான் திட்டவட்டம் | Cannot appear on police summons, say ntk leader Seeman - hindutamil.in
  21. சீமான் மீதான வழக்கு: சம்மன் கொடுத்த இடத்தில் நடந்த சம்பவம்... பின்னணி என்ன? நடிகை விஜயலட்சுமி, கடந்த 2011-ம் ஆண்டு ஜீன் மாதம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனால் ஏழு தடவை கர்ப்பம் அடைந்து அதை கலைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் சீமான் என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். அதன்‌பேரில் வளசரவாக்கம் போலீஸார், சீமான் மீது மோசடி , கொலை மிரட்டல் , பாலியல் பலாத்காரம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட (417,420,354,376, 506(1)) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த வழக்கு கடந்த 14 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சீமான் தரப்பு நடிகை விஜயலட்சுமியிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த வழக்கில் மனவருத்தமடைந்த நடிகை விஜயலட்சுமி, வழக்கை வாபஸ் பெறுவதாகக் கூறினார். அதனால் சீமான் தரப்பு, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி சீமான் தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.. அதுமட்டுமின்றி சீமான் மீது உள்ள வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மீண்டும் இந்த வழக்கு சூடுபிடித்திருக்கிறது. நீதிமன்றத்தில் உத்தரவின்பேரில் நடிகை விஜயலட்சுமியிடம் போலீஸார் கடந்த சில தினங்களாக விசாரித்தனர். அப்போது விஜயலட்சுமி, சீமானுக்கு எதிரான சில முக்கிய ஆதாரங்களையும் தகவல்களையும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சீமானிடம் விசாரிக்க அவருக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்திலிருந்து கடந்த 24-ம் தேதி முதல் சம்மன் அனுப்பப்பட்டது. அதில் பிப்ரவரி 27-ம் தேதி காலை 11 மணிக்கு விசாரணக்கு ஆஜராகும்படி குறிப்பிட்டிருந்தது. ஆனால் சீமான் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதோடு, அவர் தரப்பில் வழக்கறிஞர்கள் டீம் காவல் நிலையத்தில் ஆஜராகி, ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக சீமான் ஆஜராகி எழுத்துபூர்வமாக விளக்கம் கொடுத்துவிட்டார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பதாக போலீஸாரிடம் கூறினர். ஆனால் சீமான் தரப்பு வழக்கறிஞர்களின் விளக்கத்தை வளசரவாக்கம் போலீஸார் ஏற்றுக் கொள்ளவில்லை. நடிகை விஜயலட்சுமி அதனால் பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டில் இரண்டாவது சம்மனை வளசரவாக்கம் போலீஸார் ஒட்டினர். போலீஸார் அங்கிருந்து சென்றதும் சீமான் வீட்டிலிருந்து வந்தவர், அந்த சம்மனை கிழித்தெறிந்தார். அதனால் நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் தலைமையிலான போலீஸார், சம்மன் கிழிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த சீமான் வீட்டுக்குச் சென்றனர். அப்போது சீமான் வீட்டுக்குள் போலீஸார் நுழைய முற்பட்டனர். அவர்களை காவலாளி ராஜ் தடுத்தார். அப்போது போலீஸாருக்கும் சீமான் வீட்டு காவலாளி ராஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அது கைகலப்பாக மாறியது. அதைத் தொடர்ந்து காவலாளி ராஜை போலீஸார் பிடித்து போலீஸ் வாகனத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது ராஜிடம் கைத்துப்பாக்கி இருப்பதைக் கவனித்த போலீஸார் அதை பறித்தனர். ஆனால் ராஜ், நான் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்னுடைய பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கி வைத்திருக்கிறேன் என்று கூறினார். அப்போது ராஜிக்கும் போலீஸாருக்கும் போலீஸ் வாகனத்துக்குள்ளேயே கடும் போராட்டம் நடந்தது. இறுதியில் ராஜிடமிருந்து போலீஸார் கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து சீமான் வீட்டிலிருந்த சுபாகர் என்பவரும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரையும் போலீஸார் பிடித்து நீலாங்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. சீமான் இதுகுறித்து வளசரவாக்கம் போலீஸார் கூறுகையில், ``நாங்கள் சம்மனை ஒட்டிவிட்டு நாளை (28-ம்தேதி) ஆஜராகும்படி கூறிவிட்டு வந்துவிட்டோம். அதன்பிறகு சம்மனை சீமான் வீட்டிலிருந்தவர்கள் கிழித்திருக்கிறார்கள். இந்தத் தகவலைத் தெரிந்து விசாரிக்க நீலாங்கரை போலீஸார் சென்றபோதுதான் அவர்களை காவலாளி ராஜிடம், ஊழியர் சுபாகரும் மிரட்டியிருக்கிறார்கள். நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். சீமான் வீட்டில் நடந்த சம்பவத்தை நீலாங்கரை போலீஸார் விசாரிக்கிறார்கள்" என்றனர். இதுகுறித்து நீலாங்கரை போலீஸாரிடம் கேட்டதற்கு, ``சம்மனை ஏன் கிழித்தீர்கள் என விசாரித்துக் கொண்டிருந்தபோது அவதூறாக எங்களை காவலாளியும் அங்கிருந்த ஊழியரும் பேசினர். அதனால் அவர்களைப் பிடித்து வழக்கு பதிவு செய்திருக்கிறோம். காவலாளி ராஜிடமிருந்து துப்பாக்கி ஒன்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். அதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது" என்றனர். சீமான் மீதான வழக்கு: சம்மன் கொடுத்த இடத்தில் நடந்த சம்பவம்... பின்னணி என்ன? | Complaint case against Seeman: police arrested Seeman house security - Vikatan
  22. எதிர்வரும் 27ஆம் திகதி பொன் அணிகலன்களின் போர் ஆரம்பம்!.. சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108வது பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் மாசி மாதம் 27,28, மற்றும் பங்குனி 01 (வியாழன், வெள்ளி, சனி) ஆகிய மூன்று தினங்களிலும் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. சென் பற்றிக்ஸ் கல்லூரி 175வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்வாண்டு பொன் அணிகள் போரின் வரலாற்றில் முதன் முறையாக மூன்று தின போட்டியாக இது நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. இத் தொடரின் தொடர்ச்சியாக 32வது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி 08/03/2025 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கும், அருட் திரு G.A. பிரான்சிஸ் யோசப் வெற்றிக் கிண்ணத்துக்கான 5வது இருபதுக்கு இருபது (T-20) கிரிக்கெட் போட்டி மார்ச் 12 புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கும் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை காலமும் நடைபெற்ற போட்டிகளில் இரு நாள் போட்டிகளில் சென் பற்றிக்ஸ் கல்லூரி 35 தடவைகளும் யாழ்ப்பாணக் கல்லூரி 16 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. 31 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன. ஒரு போட்டி கைவிடப்பட்டது. ஒரு நாள் போட்டியில் (மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள்) 23 தடவைகள் சென் பற்றிக்ஸ் கல்லூரியும் 7 தடவைகள் யாழ்ப்பாணக்கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளன. 1 போட்டி இடைநிறுத்தப்பட்டது. T-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மூன்று தடவைகளும் யாழ்ப்பாணக் கல்லூரி ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளன. இவ்வருடம் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கு செல்வன் பற்குணம் மதுஷன் அவர்களும் யாழ்ப்பாண கல்லூரி அணிக்கு செல்வன் சிதம்பரலிங்கம் மதுஷன் அவர்களும் தலைமை தாங்குகின்றனர். (ப) எதிர்வரும் 27ஆம் திகதி பொன் அணிகலன்களின் போர் ஆரம்பம்!..
  23. வெளிநாட்டு ஆசைகாட்டி பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது! பிரிட்டனுக்கு அனுப்புவதாக ஆசைகாட்டி பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: பிரிட்டனில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பிரிட்டனுக்கு அழைப்பதாகவும், இதற்கு முற்பணமாக யாழ்ப்பாணம் கம்பர்மலையில் வசிக்கும் தனது தாயாரிடம் 5 லட்சம் ரூபாவை வழங்குமாறும் கூறியுள்ளார். இதன்படி அந்த இளைஞரும், மேற்படி பெண்ணிடம் ஐந்து லட்சம் ரூபாவை வழங்கியதுடன், பிரிட்டனில் உள்ளவராலும், அவரின் தாயாராலும் கூறப்பட்ட திகதிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார். இதன்பின்னரே அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இதையடுத்து, யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிய அந்த இளைஞர் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஆசைகாட்டி பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது!
  24. ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பல அடிப்படை பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். இருப்பினும் வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான தீர்வுகள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. எம் மக்களுக்கு முரண்பாடற்ற தீர்வு கிடைக்கும் வரையில் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதை தவிர வேறு எந்த தெரிவுகளும் தமக்கு கிடையாது. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் தமிழர் பிரதேசங்களில் ஆக்கிரமிப்புக்கள் இன்றும் தொடர்கின்றன என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, சுதந்திரத்தின் பின்னரான 76 வருடங்களாக இந்த நாட்டை இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் மாத்திரமே ஆட்சி செய்தன. பெயர்கள் மாறுபட்டாலும் அந்த இரண்டு கட்சிகளே ஆட்சி செய்துவந்துள்ளன. இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் கடந்த 76 வருடங்களை காட்டிலும் மாறுபட்ட காலகட்டமாக தற்போதைய நிலை இருக்கின்றது. இனப்பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசிய வாதம் தொடர்பில் அவர்களின் கருத்துக்களை கேட்காவிட்டாலும் அவர்களின் கொள்கையை முன்னெடுப்பவர்களாக இருக்கின்றனர். ஆனால் தாம் ஆட்சிக்கு வந்தால் இனவாதத்தை முற்றாக இல்லாமல் செய்வதாக கூறினர். இனப்பிரச்சினைக்கான அடிப்படை காரணம் இனவாதமாகும் .இதனை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். காலம்காலமாகஇனவாதத்தால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சிறந்த ஆரம்பத்தை அரசாங்கம் முன்வைக்கும் என்றும் எதிர்பார்த்தோம். ஆனால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வாக ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டவாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம். இந்த மாகாணங்களுக்காக விசேடமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. வடக்கில் வீதி அபிவிருத்திருக்காக 5000 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதாக கூறப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்கள் உள்ளன. அதன்படி ஒரு மாவட்டத்திற்கு ஆயிரம் மில்லியன் ரூபாவே கிடைக்கும். அடிப்படை உட்கட்டமைப்புக்கு குறைந்தப்பட்சம் 1300 மில்லியன் ரூபாவாவது தேவையாகும். அதேபோன்று யாழ். நூலக அபிவிருத்திக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல. அத்துடன் கச்சேரிக்கான மூலதன செலவை எடுத்துக்கொண்டால் யாழ்ப்பாணத்திற்கு 187 மில்லியன் ரூபாவும், மன்னாருக்கு 189 மில்லியனும், வவுனியாவுக்கு 100 மில்லியனும், முல்லைத்தீவுக்கு 126 மில்லியனும், கிளிநொச்சிக்கு 179 மில்லியனும் ஒதுக்கப்படுகின்றது. எனினும் அம்பாந்தோட்டைக்கு 500 மில்லியனுக்கும் அதிகமாகவும், மாத்தறைக்கு 400 மில்லியனுக்கும் அதிகமாகவும், கம்பஹாவுக்கு 500 மில்லியனுக்கும் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளன. கேகாலை, இரத்தினபுரி,அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் அவ்வாறே அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் எமது மாவட்டங்களுக்கு 200 மில்லியனுக்கும் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் இவை. இங்கே என்ன செய்தியை கூற விரும்புகின்றீர்கள். இந்த மாவட்டங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி கூறினாலும் அதற்கு மாற்றமான வகையிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கீழுள்ள கல்வி அமைச்சின் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவதுடன், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 20 ஆயிரத்திற்கும் மேல் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. ஏன் இவ்வாறு வேறுபட்ட வகையில் கொடுப்பனவு, இது கல்வியை இராணுவ மயமாக்கும் விடயம்தானே. கடந்த அரசாங்கத்தின் இந்த கொள்கையை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்தும் தற்போதும் அடக்குமுறையான செயற்பாடுகளே இருக்கின்றன. கிழக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால் நிதி கேந்திரமாக மாற்றப்படும் என்று கூறப்பட்டு, அந்த பொறுப்பை இந்தியா ஏற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் சர்வதேச ரீதியில் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியா இதை ஏற்றுக்கொள்ளுமா? இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா அவற்றை பெற்றுக்கொள்ள விரும்புகின்றது. ஆனால் நீங்கள் வேறு நிறுவனங்களுக்கு கொடுக்க முயற்சிக்கின்றீர்கள். இந்நிலையில் இந்தியா கிழக்கில் அபிவிருத்திகளை செய்யுமா? நீங்கள் இதில் பல சந்தேகங்கள் எழுகின்றன. விவசாயத்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு துறைகளை எடுத்துக்கொண்டால் வடக்கு மற்றும் கிழக்கில் வன பாதுகாப்பு திணைக்களம், உயர் பாதுகாப்பு வலயங்களாக பெரும்பாலான காணிகளை கைப்பற்றியுள்ளன. பொதுமக்கள் தமது விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. அந்த மக்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் மயிலத்தமடு போன்ற இடங்களில் தமிழ்ர்களின் பால் பண்ணை தொழிலுக்கு எதிரான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மயிலத்தமடு மேய்ச்சல் தரை பகுதிக்காக மக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால் முன்னைய அரசாங்கங்களின் வரவு செலவுத் திட்டத்தை போன்றதாகிவிடும். இந்த அரசாங்கத்தின் கொள்கை முன்னைய அரசாங்கங்களின் கொள்கை மற்றும் செயற்பாடுகளில் இருந்து மாறுபடாது. நாங்கள் கடந்த அரசாங்கங்களின் வரவு செலவுத்திட்டங்களுக்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தோம். இவ்வாறான அடிப்படை பிரச்சினைகள் வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம்கொடுக்கின்றனர். இந்த அரசாங்கத்தின் ஊடாக பாரிய மாற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எம் மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால் இந்த வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தீர்வுகள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. அரசாங்கமானது எங்களுக்கு குழப்பமில்லாத தீர்வை வழங்கும் வரையில் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதை தவிர எங்களுக்கு வேறு தெரிவுகள் கிடையாது என்றார். அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதை தவிர வேறு எந்த தெரிவுகளும் எமக்கு கிடையாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Virakesari.lk
  25. 26 Feb, 2025 | 04:55 PM யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இருந்து கைதடி நோக்கி செல்லும் வீதியில் கடந்த 21ஆம் திகதி விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் ஒன்று இன்று புதன்கிழமை (26) கோப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கைதடி - தச்சன்தோப்பு பகுதியில் குறித்த வாகனம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் திகதி மரணச் சடங்கின் இறுதி ஊர்வலத்தில் ஈடுபட்டவர்களை இந்த வாகனம் மோதியதில் அறுவர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து வாகனத்தின் உரிமையாளர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார். மேலும், வாகனத்தின் உரிமையாளர் கொழும்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாழில் மரணச் சடங்கின் இறுதி ஊர்வலத்தில் ஈடுபட்டவர்களை மோதிய வாகனம் மீட்பு! | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.