Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. 09 MAY, 2024 | 04:03 PM சர்வதேச அளவில் சுற்றுலாத்துறை போக்குவரத்து கலாச்சாரம் போன்ற விடயங்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்துவரும் டிரவல் இன்புளுன்சர் வில்டேவிஸ் இலங்கையின் விசா வழங்கும்; அமைப்புமுறையிலிருந்து தரவுகள் வெளியே கசிந்துள்ளமை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு சுற்றுலாமேற்கொள்ளவுள்ளவர்களிற்கான விசா விபரங்கள் பெயர் முகவரி கடவுச்சீட்டு இலக்கங்கள் போன்ற தனிப்பட்ட விபரங்கள் எனது மின்னஞ்சலிற்கு நாளாந்தம் வருகி;ன்றன என அவர் தெரிவித்துள்ளார். எனக்கு பல மாதங்களிற்கு முன்னரே விசா கிடைத்துள்ள போதிலும் விஎஸ்எவ்விடம் விசாவிற்காக விண்ணப்பித்தவர்களின் விபரங்கள் எனக்கு நாளாந்தம் வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். சில வாரங்களிற்கு இலங்கையில் விசா தொடர்பில் இடம்பெற்ற விடயங்களை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள் எனக்கு எப்போதோ விசாகிடைத்துள்ள போதிலும் ஏனைய சுற்றுலாபயணிகளின் பெயர்கள் கடவுச்சீட்டு இலக்கங்கள் உட்பட தனிப்பட்ட விபரங்களுடன் மின்னஞ்சல்கள் எனக்கு நாளாந்தம் வருகின்றன என வில்டேவிஸ் தெரிவித்துள்ளார். நான் இதனை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன் ஆனால் பெருமளவானவர்களின் தனிப்பட்ட விபரங்கள் வெளியில் கசிந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை செல்வதற்காக விண்ணப்பித்த ஏனையவர்களின் விபரங்கள் எனது மின்னஞ்சலிற்கு நாளாந்தம் வருகின்றன - வெளிநாட்டு சமூக ஊடக பிரபலம் அதிர்ச்சி தகவல் | Virakesari.lk
  2. டயானாவின் இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான் J.A. George / 2024 மே 08 , பி.ப. 01:48 - 0 - 81 டயானா கமகே பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. அத்துடன், இந்த முன்மொழிவு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். Tamilmirror Online || டயானாவின் இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான்
  3. (புதியவன்) கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் பன்றி இறைச்சி உட்கொண்டதால் உயிரிழந்துள்ளனர். பன்றி இறைச்சி கறி சாப்பிட்டு உயிரிழந்த குறித்த சிறைக் கைதிகளின் உடல்கூற்றுப் பரிசோதனை தொடர்பில் இறப்பு விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் வெளிப்படையான அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளார். இதன்படி, இருவரது உடல் உறுப்புகளையும் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொரளை மற்றும் தெஹிவளை பிரதேசத்தில் வசிக்கும் இருவர் ஐஸ் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் கைதி ஒருவரின் வீட்டில் தயாரிக்கப்பட்ட பன்றி இறைச்சியுடன் கூடிய சோறு பொதி ஒன்றை உறவினர்கள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த சோற்றுப் பொதியை சுமார் 15 கைதிகள் சாப்பிட்டுள்ளதுடன் 3 கைதிகள் ஒவ்வாமை காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும், ஆபத்தான நிலையில் உள்ள மற்றொரு கைதி தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இருவரினதும் இறப்பு விசாரணைகள் நேற்று (07) மேற்கொள்ளப்பட்டு அங்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைப் பணிமனை மட்டத்தில் விசாரணை நடத்தப்படும் என சிறைச்சாலைப் பணிமனை தெரிவித்துள்ளது.(ஏ) பன்றி இறைச்சியால் இரு கைதிகள் சாவு! (newuthayan.com)
  4. இந்தியாவில் இருந்து அதிக அளவில் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதால், சீன வெங்காயத்தின் தேவை குறைந்துள்ளதால், அவற்றை கையிருப்பில் இருந்து நீக்க வேண்டியுள்ளதாக புறக்கோட்டையில் உள்ள வர்த்தகர்கள் கூறுகின்றனர். கடந்த நாட்களில் ஒரு கிலோ சீன வெங்காயம் 300 ரூபாவுக்கு விற்கப்பட்டதாகவும், தற்போது ஒரு கிலோ சீன வெங்காயம் 100 ரூபாவுக்கு கூட விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் இரண்டு கிலோ 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ இந்திய வெங்காயத்தின் விலை 150 முதல் 250 ரூபா வரை குறைந்துள்ளது. இந்திய வெங்காய இறக்குமதி; தேவை இழந்த சீன வெங்காயம் (newuthayan.com)
  5. பேருந்தில் கைவிடப்பட்ட பணம் அடங்கிய பை; பேருந்து காப்பாளருக்கு குவியும் பாராட்டு! வெளிநாட்டவரின் பெரும் தொகை பணம் அடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்து காப்பாளர் - குவியும் பாராட்டுக்கள் வெளிநாட்டவரின் பெரும் தொகை பணம் அடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்து காப்பாளரரின் செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை சாலையில் காப்பாளராக கடமையாற்றும் பாலமயூரன் என்பவர் கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி சேவைக் கடமையில் இன்று ஈடுபட்டிருந்தார். குறித்த பேருந்தில் வெளிநாட்டவர் ஒருவரினால் தவறவிடப்பட்ட பாஸ்போர்ட், ஒரு லட்சத்து இருபதாயிரத்து எண்ணூற்றுநாற்பது இலங்கை ரூபா பணம் மற்றும் 300 யூரோ பணத்தினை இன்று (07) சாலையில் ஒப்படைத்துள்ளார். அண்மை நாட்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலையில் உணவுகள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் செய்திகள் வெளியாகி நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பேருந்து காப்பாளரின் குறித்த செயல் பலராலும் பாராட்டப்படுகின்றது. அத்துடன் இவர் 2021ஆம் ஆண்டு மற்றுமொரு பயணி ஒருவரால் தவற விடப்பட்ட இரண்டு லட்சத்து ஐம்பது ஓராயிரம் ரூபா பணம் மற்றும் எழுபதாயிரம் ரூபாய் பெறுமதியான போன் ஒன்றினையும் சாலை நிர்வாகத்திடம் ஒப்படைத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. (ச) பேருந்தில் கைவிடப்பட்ட பணம் அடங்கிய பை; பேருந்து காப்பாளருக்கு குவியும் பாராட்டு! (newuthayan.com)
  6. Published By: VISHNU 08 MAY, 2024 | 01:24 AM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) சுற்றுலாப் பயணிகளுக்கு விசா சேவை வழங்கும் தனியார் நிறுவனத்துக் கிடைக்கும் நிதி, மத்திய வங்கி மோசடியைவிடப் பல மடங்கு அதிகமாகும். அதனால் இது தொடர்பில் விசேட விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் ஊழல் மோசடிகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எமது நாட்டுக்கு புதிய முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், நாட்டுக்குள் வரும் வெளிநாட்டவர்களுக்கான விசா வழங்குவதில் பாரிய மோசடி இடம்பெற்று வருவது தொடர்பில் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் அரசாங்கம் இது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது.? சுற்றுலாப் பயணிகளிடமிருந்து மேலதிகமாக 25 டொலர்களை அறவிட நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த வருடத்தில் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தர இருப்பதாக எதிர்வு கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்தால் அவர்களுக்கு விசா வழங்கும் குறித்த தனியார் நிறுவனத்துக்கு அதன் மூலம் மாத்திரம் 62.5மில்லியன் அமெரிக்க டாெலர் கிடைக்கப்பெறுகிறது. இதனை இலங்கை ரூபாவில் தெரிவிப்பதாக இருந்தால், 18 பில்லியனே 750 மில்லியன் ரூபா (1875 கோடி). ஆனால் இந்த வருட வரவு செலவு திட்டத்தில் குடிவரவு குடி அகல்வு திணைக்களத்துக்குச் சம்பளம் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளுக்கு 992 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில், குறித்த தனியார் நிறுவனத்துக்கு இந்த விசா வழங்கும் சேவை மூலம் 18.6 மடங்கு அதிகமாகும். மத்திய வங்கி மோசடி தொடர்பில் நாங்கள் கதைக்கிறோம். ஆனால் தற்போது இடம்பெற்றுவரும் இந்த மோசடி மத்திய வங்கி மோசடியைவிடப் பல மடங்கு அதிகமாகும். அத்துடன் இந்த விசா சேவையை எஸ்.எல்.டி. மொபிடல் நிறுவனம் குறித்த நிதியில் நூற்றுக்கு 4 வீதத்தைப் பெற்றுக்கொண்டு வழங்குவதற்குத் தயாராக இருந்த நிலையில். இவ்வாறான பாரிய நிதியை செலுத்துவதால், இந்த பணம் யாருடைய பொக்கெட்டுக்கு செல்கிறது என கேட்கிறோம். இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றார். சுற்றுலாப் பயணிகளிடம் அறவிடப்படும் விசா சேவை கட்டண அறவீடு மத்திய வங்கி மோசடியை விட பல மடங்கு அதிகம் - ரவூப் ஹக்கீம் | Virakesari.lk
  7. 08 MAY, 2024 | 02:34 PM வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையை ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், முழுமையான கடன் மறுசீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுப்பதன் மூலம் இலங்கையின் கடன் சுமையை 17 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைக்க முடியும் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கடன் தவணையைப் பெற்ற பின்னர் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தொடர முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார். இலங்கை அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்றி அனைத்து நாடுகளுடனும் உறவுகளைப் பேணி இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாத்து வருவதனால் இலங்கைக்கு பல சலுகைகள் கிடைத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். சீனா மற்றும் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி மேலும் சுட்டிக்காட்டினார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், “அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையைப் பேணுவதுடன் அனைத்து நாடுகளுடனும் நல்ல உறவு முறையை இலங்கை பேணி வருகிறது. இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாத்து ஒவ்வொரு நாட்டுடனும் சிறப்பான தொடர்புகளைப் பேணுவது, வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பதை எளிதாக்கியது. சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் பெரிஸ் கிளப் ஆகியவை கடன் மறுசீரமைப்பிற்கு பெரும் ஆதரவை வழங்கின. சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையைப் பெற்ற பின்னர் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தொடர முடியும். சீனாவுடனும் இந்தியாவுடனும் எமக்கு நெருங்கிய உறவை ஏற்படுத்த முடிந்துள்ளது. சீனாவுடன் ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்தியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இலங்கையில் அதிகளவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியில் முதலீடு செய்ய அதானி நிறுவனம் முன்வந்துள்ளது. மேலும் இலங்கையில் முதலீடுகள் செய்வது குறித்து சவுதி அரேபியாவும் கவனம் செலுத்தியுள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள் தங்களது எரிபொருள் சார்ந்த பொருளாதாரத்தை தாண்டி ஏனைய நாடுகளில் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி தங்கள் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றன. அதனை இலங்கைக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நாம் நடவடிக்கை எடுக்கின்றோம். வெளிநாட்டலுவல்கள் அமைச்சு சர்வதேச விதிகளுக்கு அமைய வெளிநாடுகளுடன் உறவுகளைப் பேணி வருவதால், ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை. ஈரான் வழங்கிய உமா ஓயா திட்டமானது அடுத்த மாதம் முதல் தேசிய மின்சார கட்டமைப்பில் 120 மெகாவொட் மின்சாரத்தை வழங்கும். இதன் மூலம் அடுத்த மாதம் மின்கட்டண திருத்தத்தின் போது இதன் பலன் மக்களுக்கு கிடைக்கும். இலங்கையை சுற்றுலா மையமாக மாற்ற வேண்டுமாயின், விசா கட்டணத்தில் கவனம் செலுத்தாமல், சுமார் ஐம்பது நாடுகளுக்கு இலவச விசா வழங்க வேண்டும். இதன் ஊடாக சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கலாம். கடந்த வாரம் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இலங்கையின் பொருளாதார சீர்திருத்த முன்னேற்றத்திற்கு ஜப்பான் ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ள ஜப்பான் அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் தொடங்க ஜப்பான் ஒப்புக் கொண்டுள்ளது. தற்போது மியான்மாரில் உள்ள இளைஞர்களைக் காப்பாற்ற இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சட்டபூர்வமற்ற முறையில் ரஷ்யா – உக்ரைன் யுத்தம் சார்ந்த கூலிப்படைக்கு அனுப்பப்பட்டுள்ள நமது இளைஞர்களை காப்பாற்ற இராஜதந்திர ரீதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் பாதுகாப்புப் படையினருடனும் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது” என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார். இலங்கையின் கடன் சுமையை 17 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைக்க முடியும் - வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி | Virakesari.lk
  8. யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான வீதிகளை பயன்படுத்த அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகளை திறக்குமாறும், இணைந்த வீதிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பாதுகாப்பு பிரிவினரிடம் நேற்று (07) தெரிவித்தார். ஒட்டகப்புலம் பகுதிக்கு நேற்று விஜயம் செய்த ஆளுநர் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட்டத்துடன், காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார். யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். வசாவிளான் கிழக்கு (J/244), வசாவிளான் மேற்கு (J/245), பலாலி வடக்கு (J/254), பலாலி கிழக்கு (J/253), பலாலி தெற்கு (J/252) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குட்பட்ட 234.8 ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டது. இங்கு வசித்த 327 குடும்பங்கள் காணி உரிமை கோரி பதிவு செய்துள்ளதுடன், அவர்களில் 171 குடும்பங்களைச் சேர்த்தவர்கள் தங்களின் காணிகளை அடையாளப்படுத்தி துப்பரவு செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், விடுவிக்கப்பட்டுள்ள காணிகளுக்குள் இலகுவாக பிரவேசிக்கக்கூடிய வகையில் பாதைகளை திறக்கவும், வீதிகளை பயன்படுத்தவும் அனுமதிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டதற்கமைய, அதற்கான அனுமதியினை பாதுகாப்பு பிரிவினருடன் கலந்துரையாடி ஆளுநர் பெற்றுக்கொடுத்தார். அதற்கமைய, பொன்னாலை - பருத்தித்துறை கடற்கரை வீதியில் கண்ணகி அம்மன் கோவில் சந்தியிலிருந்து நாகதம்பிரான் கோவில் வீதி ஊடாக விடுவிக்கப்பட்ட காணிக்குள் பிரவேசிக்க முடியும். அத்துடன் வீரப்பளை வீதியில் பலாலி வீதி நோக்கி 100 மீற்றர் தூரத்துக்குள்ளும், வீரப்பளை சந்தியில் தெற்கு நோக்கி தம்பாளை வீதி (விமான நிலைய வீதி) ஊடாகவும் விடுவிக்கப்பட்ட காணிக்குள் பிரவேசிக்க முடியும். யாழ். தெல்லிப்பழை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பிரவேசிப்பதற்கான வீதிகளை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி | Virakesari.lk
  9. டயனா கமகேவினால் உருவாக்கப்பட்ட ஐ.ம.சக்தி சட்டப்பூர்வமானதா? எதிரணி சிறந்த சட்டத்தரணிகளை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் - காஞ்சன விஜேசேகர (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை பிரஜையல்லாத டயனா கமகேமவினால் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சட்டப்பூர்வமானதா? பொதுத் தேர்தலின் போது கட்சியின் வேட்பு மனுவில் அவர் கையெழுத்திட்டிருந்தாலோ, தற்போதைய கட்சி செயலாளருடன் அவர் உடன்படிக்கையைச் செய்திருந்தாலோ அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடலாம். ஆகவே சிறந்த சட்டத்தரணிகளை எதிரணியினர் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற இராஜதந்திர சிறப்புரிமை சட்டத்தின் கீழ் 2348/48ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்,பெற்றோலிய உற்பத்தி பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2340/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது இராஜாங்க அமைச்சர் டயனா கமகேமவின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பைச் சவாலுக்கு உட்படுத்தப் போவதில்லை. ஆனால் தற்போது புதிய பிரச்சினையொன்று எழுந்துள்ளது. டயனா கமகே இலங்கை குடியுரிமையற்றவர் என்பதால் அவரின் பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது. இங்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமைக்கு அவரே கைச்சாத்திட்டுள்ளார். ஆகவே ஐக்கிய மக்கள் சக்தி சட்டப்பூர்வமானதா? என்ற பிரச்சினைகள் எழும். அவரே கட்சியை இவர்களிடம் கொடுத்துள்ளார். அவர் அந்தக் கட்சியை பதிவு செய்யும் போது அவர் இலங்கை பிரஜையாக இல்லாமலே இருந்துள்ளார். இந்த நாட்டை சேர்ந்தவர் அல்லாத ஒருவருக்குக் கட்சியை பதிவு செய்ய முடியாது. அத்துடன் 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவிலும் அவரா? கையெழுத்திட்டார் என்பதும் தெரியாது. அப்படி அவர் கையெழுத்திட்டிருந்தால் அது தொடர்பாகக் கவனம் செலுத்தலாம். எதிரணியின் உறுப்பினர்கள் பலர் பாராளுமன்ற உணவகத்தில் கதைக்கும் போது மிகவும் குழப்பத்தில் இருப்பது போன்றே இருந்தது என்றார். இதன்போது எழுந்த ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க கட்சி பதவிகள் ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது இதில் பிரச்சினைகள் கிடையாது என்றார். டயனா கமகேவினால் உருவாக்கப்பட்ட ஐ.ம.சக்தி சட்டப்பூர்வமானதா? எதிரணி சிறந்த சட்டத்தரணிகளை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் - காஞ்சன விஜேசேகர | Virakesari.lk
  10. Published:Today at 7 AMUpdated:Today at 7 AM wounded Rakus மனிதர்களே… தங்களது நோய்களுக்கும், காயங்களுக்கும் சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதுண்டு. அதுவே விலங்குகள் சிகிச்சைகளை எடுத்துக் கொள்கிறதா என்பது தெரியாது. ஆனால், சமீபத்தில் ஓராங்குட்டான் ஒன்று தனது காயத்திற்கு தானே சிகிச்சை எடுத்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். அதாவது சில விலங்குகள் காடுகளில் உள்ள மருத்துவ தாவரத்தின் மூலம் வைத்தியம் பார்த்து தங்களது நோய்களையும், காயங்களையும் குணப்படுத்திக் கொள்வதாக அவர்கள் கூறியுள்ளனர். ரகுஸ் (Rakus) எனப் பெயரிடப்பட்ட ஓராங்குட்டானின் கண்ணிற்குக் கீழே ஒரு பெரிய காயம் இருந்துள்ளது. இந்த ஓராங்குட்டான் தென்கிழக்கு ஆசியாவில் மக்கள் வலி மற்றும் வீக்கத்திற்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தும் மருத்துவ தாவரத்தின் இலைகளை மென்று அதன் சாற்றைக் காயத்தின் மீது தடவியுள்ளது. அதன்பின் மென்ற தாவரத்தை பேண்டேஜ் கட்டுவது போலக் காயத்தின் மீது வைத்து அழுத்தியுள்ளது. உடலில் எந்த ஒரு பாகத்திற்கும் அந்த சாற்றைத் தடவாமல், காயத்தின் மீது மட்டும் தடவியுள்ளதால், இது ஒரு சுய சிகிச்சை முறை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஒரு மாதத்திற்குள் அதன் பெரிய காயம் மூடி குணமடைந்தது. இதற்கு முந்தைய ஆராய்ச்சியில் பல வகையான குரங்குகள் காடுகளில் மருந்துகளைத் தேடுகின்றன என ஆவணப்படுத்தப் பட்டிருந்தன. ஆனால், அவை எப்படி தன்னை குணப்படுத்திக் கொள்கின்றன என்பது ஆவணப்படுத்தப்படவில்லை. முதல்முறையாக விஞ்ஞானிகள் விலங்குகள் தங்கள் காயங்களுக்கு எவ்வாறு சிகிச்சை எடுத்துக் கொள்கின்றன என்பதை ஆவணப்படுத்தியுள்ளனர். 2022-ல் ஓராங்குட்டானின் நடத்தைகள் வீடியோவாக ரெக்கார்டு செய்யப்பட்டது. இந்தோனேசியாவின் மேடானில் உள்ள சுவாக் திட்டத்தின் இணை ஆசிரியரும் கள ஆய்வாளருமான உலில் அஸாரி இதனை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Orangutans: தனக்கு சுய மருத்துவம் செய்த குரங்கு... முதல்முறையாக ஆவணப்படுத்திய விஞ்ஞானிகள்! | Scientists found, orangutan used a medicinal plant to treat a wound - Vikatan
  11. நெல்லை பெருமாள்புரம் பகுதியில் வசிப்பவர், பானுமதி. 40 வயதான அவர், சில வருடங்களுக்கு முன்பு கணவரை விட்டுப் பிரிந்து வெள்ளத்துரை என்பவருடன் குடித்தனம் நடத்தி வருகிறார். சபலம் கொண்ட தொழிலதிபர்களை சமூக வலைதளங்களில் தேடிக் கண்டுபிடித்து, முகநூல் நண்பர்களாகி ஏமாற்றி மோசடி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார், பானுமதி. 20-க்கும் அதிகமான தொழிலதிபர்கள் மூலம் கோடிக்கணக்கில் பணத்தைப் பறித்த விவரம் வெளியாகியுள்ளது. முகநூல் பழக்கத்தில் தொழிலதிபர்களை கடத்திய தம்பதி அவரிடம் அண்மையில் சிக்கிய சேலம் மாவட்டம், அய்யன்பெருமாள்பட்டியை சேர்ந்த நித்யானந்தன் மூலமாகவே இந்த வில்லங்க விவகாரம் வெளியில் தெரியவந்துள்ளது. அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து பானுமதி அவரது கூட்டாளிகள் வெள்ளத்துரை, பார்த்தசாரதி, சுடலை, ரஞ்சித் ஆகிய ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரிக்கும் பெருமாள்புரம் காவல்துறையினரிடம் பேசினோம். “இந்த கும்பலின் மூளையாக பானுமதியும் வெள்ளத்துரையும் செயல்பட்டுள்ளனர். சேலத்தில் காற்றாலைகளுக்கு உதிரிப் பாகங்கள் சப்ளை செய்யும் தொழில் செய்யும் நித்யானந்தனுக்கு முகநூலில் பானுமதியின் நட்பு கிடைத்துள்ளது. மூன்று மாதப் பழக்கத்தில் நித்யானந்தனின் நிதிநிலையை அறிந்துகொண்ட பானுமதி, அவரிடம் ஆசையாகப் பேசி தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். பெருமாள்புரம் காவல் நிலையம் அதை நம்பிய நித்யானந்தன் நெல்லை வந்திருக்கிறார். பானுமதியின் வீட்டில் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது வெள்ளத்துரை தனது நண்பர்களான பார்த்தசாரதி, சுடலை, ரஞ்சித் ஆகியோருடன் நுழைந்து சரமாரியாகத் தாக்கியுள்ளார். பின்னர் நித்யானந்தனை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றிருக்கிறார்கள். எப்படியோ தனது நண்பரைத் தொடர்பு கொண்டு நித்யானந்தன் இந்த விவரங்களைச் சொல்லியிருக்கிறார். அவர் மூலமாகவே எங்களுக்கு தகவல் தெரியவந்தது. பிடிபட்டவர்களிடம் விசாரித்த பிறகே இந்த கும்பல் பானுமதி மூலம் தொழிலதிபர்களை வீட்டுக்கு வரவழைத்து பணம் பறிக்கும் விவரம் தெரியவந்தது. இவர்களிடம் பலர் 50 லட்சம், 60 லட்சம் என இழந்திருக்கிறார்கள். வெளியே சொன்னால் அசிங்கம் என பாதிக்கப்பட்டவர்கள் ஒதுங்கிச் சென்றதை சாதகமாகப் பயன்படுத்தி நீண்ட காலமாக இந்த மோசடியைச் செய்திருக்கிறார்கள்” என்றார்கள். கடத்தல் கும்பலிடம் பிடிபட்ட சொகுசு கார் பானுமதிக்கு உடந்தையாக இருந்த நான்கு பேரும் ஊருக்குள் பெரிய மனிதர்கள் போல வலம் வந்திருக்கிறார்கள். அரசியல்வாதிகளுடனும் நல்ல தொடர்பில் இருந்துள்ளனர். அனைத்துக் கட்சியினருடனும் நெருக்கமாக இருந்ததோடு, தேர்தல் நேரத்தில் பல கட்சியினருக்கும் நன்கொடையை வாரி வழங்கியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ”மோசடி மூலமாகக் கிடைக்கும் பணத்தை சமமாக பிரித்துக் கொள்வோம். பணம் கைக்கு வந்ததும் பானுமதியை அடுத்த அசைன்மெண்டை பார்க்கச் சொல்லிவிட்டு நாங்கள் நான்கு பேரும் கோவா, மும்பை என வெளி மாநிலங்களுக்கு செல்வோம். அங்குள்ள பெரிய ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கி பெண்களோடு இருப்போம். சில சமயம் சென்னையில் இருந்து விமானம் மூலம் துணை நடிகைகளை வரவழைத்து தங்கியிருப்போம். பணம் தீர்ந்த பிறகே ஊருக்குத் திரும்புவோம்” என விசாரணையின்போது அவர்கள் தெரிவித்ததைக் கேட்டு போலீஸாரே அதிர்ந்து விட்டார்களாம். நெல்லை காவல்துறை ஆணையர் மூர்த்தி நீண்ட காலமாக போலீஸ் பிடியில் சிக்காத இந்த மோசடி கும்பலிடம் 20-க்கும் அதிகமான தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் பணத்தை இழந்திருக்கிறார்கள். இந்த கும்பல் பிடிபட்டது எப்படி என நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் மூர்த்தியிடம் கேட்டோம். ”சேலத்தை சேர்ந்த நித்யானந்தன் கடத்தப்பட்ட விவரத்தை அவரது நண்பர் எங்களுக்கு தெரியப்படுத்தினார். அதன் மூலமாகவே இந்த கும்பலைப் பிடிக்க முடிந்திருக்கிறது. பானுமதியின் மூன்று மாத முகநூல் பழக்கத்தை நம்பி நெல்லைக்கு வந்த நித்யானந்தனை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வீட்டுக்குள் அடைத்து வைத்த பானுமதி அவரிடம் இருந்த நகை பணத்தைப் பறித்துள்ளார். அவரின் ஏ.டி.எம் கார்டு மற்றும் ஜி-பே மூலமாக ஒன்றே கால் லட்சம் பணத்தை எடுத்த பின்னர் காரில் கடத்திச் சென்று அடித்து மிரட்டியுள்ளனர். மோசடி கும்பலை பிடித்த சிறப்புப்படை உயிரோடு ஊர் திரும்ப வேண்டுமானால் 10 லட்சம் ரூபாய் பணத்தை செக் மூலம் எடுத்துக் கொடுக்க வேண்டும் என மிரட்டி வங்கிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வங்கியில் கிடைத்த சிறிய வாய்ப்பை பயன்படுத்தி தனது நண்பருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். அவர் மூலமாக எங்களுக்கு தகவல் கிடைத்ததும் நித்யானந்தன் செல்போன் நம்பரை வாங்கி, அதன் டவரை வைத்து மீட்க முடிவு செய்தோம். நெல்லை மாநகர துணை ஆணையர் ஆதர்ஷ் பசோரா தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் நாங்குநேரி பகுதியில் சென்று கொண்டிருந்த காரை மடக்கிப் பிடித்தனர். அவர்களை அழைத்து வந்து பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த போதுதான் பானுமதி மூலம் இந்தக் கும்பல் பலரிடம் மோசடி செய்த விவரம் தெரியவந்தது. திறமையாகச் செயல்பட்ட காவல்துறையினருக்கு வெகுமதி பலரை மிரட்டி பணம் பறித்த இந்த கும்பலிடம் இருந்து கையெழுத்திட்ட காசோலைகள், அடமான பத்திரங்கள், கடன் பத்திரங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளோம். சிறையில் இருக்கும் பானுமதி உள்ளிட்ட ஐந்து பேரையும் கஸ்டடி எடுத்து விசாரித்தால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்பதால் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர், இவர்களிடம் 60 லட்சம் ஏமாந்திருக்கிறார். அவரும் புகார் அளித்துள்ளதால் இதுவரை இரண்டு வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. பாதிக்கப்பட்ட மேலும் சிலர் எங்களிடம் பேசியுள்ளனர். முகநூல் மூலம் நட்பாகப் பழகி மோசடி செய்யும் கும்பல் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும். தங்களைப் பற்றிய விவரத்தை மறைக்க நினைத்தால் எங்களிடம் நேரில் வந்து தகவல் மட்டும் கொடுக்கலாம். இந்த கும்பல் மோசடியாகச் சேர்ந்த பணத்தை தொழில்களில் முதலீடு செய்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதனால் அவர்களை கஸ்டடி எடுத்து விசாரித்த பின்னர் பணத்தை இழந்தவர்களுக்கு திருப்பிக் கொடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். நெல்லை: தொழிலதிபர்களை குறிவைத்து முகநூலில் வலை; கோடிக்கணக்கில் மிரட்டி பறித்த பெண் - சிக்கியதெப்படி? | an industrialist kidnapped by a lady and her associates are arrested by police - Vikatan
  12. நூற்றாண்டு கடந்த வேப்பமரம்:சட்டவிரோதமாக அழிப்பு! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் நூற்றாண்டு கடந்த வேப்பமரம் ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட நிலையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு மௌனம் காப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் உள்ள மதஸ்தாபனம் ஒன்றின் வளாகத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த காணியில் பல வருடங்களுக்கு முன்னர் சுற்று சூழலை பாதுகாக்கும் நோக்குடன் பல்வேறு மரங்கள் நாட்டப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு பொறுப்பாக உள்ள குருவானவர் ஒருவரால், சில மரங்கள் வளாகத்தில் இடையூறாக உள்ளதாக தெரிவித்து கிராம சேவையாளர் ஊடாக அகற்றுவதற்கான அனுமதி கோரப்பட்டு பிரதேச செயலகம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த அனுமதியை தவறாக பயன்படுத்தி, அனுமதி வழங்கப்படாத வேம்பு ஒன்று அகற்றப்பட்டுள்ளதுடன் சுமார் 80,000 ரூபாவிற்கு குறித்த வேம்பு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்த (30.04.2024) அன்று இடம்பெற்றுள்ளது. அச்சம்பவம் தொடர்பில் அவதானித்த மற்றுமொரு குருவானவர் புகைப்படங்களை எடுத்ததுடன், ஆதீன பொருளாளர் மற்றும் சொத்து பாதுகாப்பு அலுவலரிடம் வினவியுள்ளார். ஆயினும், குறித்த சம்பவம் தொடர்பில் தமக்கு தெரியாது என அவர்கள் கூறியதுடன், பேராயரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குருவானவர், முறையாக அனுமதி பெறப்பட்டே மரம் வெட்டப்பட்டதாகவும், பேராயரும், செயலாளரும் அனுமதித்ததாகவும் கூறுவதுடன், சட்ட ரீதியான அனுமதிகளை காண்பிக்க மறுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் உடுவில் பிரதேச செயலாளரிடம் வினவியபோது, மரம் வெட்டுவதற்கான அனுமதி கோரப்பட்ட நிலையில் மரங்களை பார்வையிட்ட பின்னர் அனுமதி வழங்கப்பட்டதாகவும், வெட்டப்பட்ட குறித்த மரத்துக்கு அனுமதி கோரப்பட நிலையில் தாம் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் மாதப் பொறுப்பானவரிடம் வினா வினவியபோது குறித்த விடையம் தொடர்பில் ஆராய்ந்து பதிலளிப்பதாக தெரிவித்த நிலையில் உரிய பதில் வழங்கப்படவில்லை.(ப) நூற்றாண்டு கடந்த வேப்பமரம்:சட்டவிரோதமாக அழிப்பு! (newuthayan.com)
  13. கடும் வெப்பநிலை : மக்கள் குடிநீருக்காக சிரமம்!! கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் வெப்பநிலையுடன் கூடிய வறட்சி காரணமாக குடிநீருக்காக பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். கடும் வெப்பநிலையுடன் கூடிய வறட்சி காரணமாக பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 239 குடும்பங்களைச்சேர்ந்த 732 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் நல்லூர் செட்டியார்குறிச்சி, ஆலங்கேணி,ஞானிமடம், கொல்லக்குறிச்சி, மட்டுவில் நாடு கிழக்கு, பரமன் கிராய் போன்ற கிராம அலுவலர் பிரிவுகளைச்சேர்ந்த மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதி மக்கள் குடிநீருக்காக பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.இவர்களுக்கான குடிநீரை பூநகரி பிரதேச சபை பெளஷர் மூலம் விநியோகித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.(ப). கடும் வெப்பநிலை : மக்கள் குடிநீருக்காக சிரமம்!! (newuthayan.com)
  14. விசா விநியோகித்தல், அனுமதித்தல், இரத்து செய்தல் அதிகாரத்தை வி.எப்.எஸ்.நிறுவனத்துக்கு வழங்கவில்லை - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம். (இராஜதுரை ஹஷான்) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ள விசா அனுமதித்தல், விநியோகித்தல் மற்றும் விநியோகித்தாதிருத்தல் ஆகிய அதிகாரங்களை சர்வதேச நிறுவனத்துக்கு வழங்கவில்லை. சரியான முறையில் தெளிவைப் பெற்றுக் கொள்ளாத காரணத்தால் எழுந்துள்ள தவறான கருத்துக்களை நீக்கி புதிய செயற்திட்டத்துக்கு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்கின்ற அங்கிகாரத்தை அதாவது இலத்திரனியல் பயண அங்கீகாரம் எனும் நிகழ்ச்சித் திட்டம் இணைய வழியில் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த முறைமையின் கீழ் வெளிநாட்டவர்களிடமிருந்து எழுத்துக்களுடனான தரவுகள் மாத்திரமே பெற்றுக் கொள்ளப்பட்டன. இதன் பின்னர் இந்த நிகழ்ச்சித் திட்டமானது திணைக்களத்தின் தொழில்நுட்ப தேவைகளுக்கு பொருத்தமான வகையில் உரிய காலத்தில் இற்றைப்படுத்தாத காரணத்தால் புதிய வழிமுறையை அறிமுகப்படுத்துவதற்கான தேவை தோற்றம் பெற்றது. புதிய விசா முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த தேவைப்பாடானது மேலும் தீவிரமடைந்தது. அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் 17 புதிய விசா முறைமை அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த விசா முறைமைகளில் பெரும்பாலானவை நீண்ட காலத்துக்கு சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கு சார்பானதாக அமைந்ததுடன் தேசிய பாதுகாப்பு தொடர்பில் திணைக்களத்தின் பொறுப்புக்கு இந்த ஒவ்வொரு விசா வகைகளும் போதியளவிலான ஆவணங்களை இணைய வழியில் பெற்றுக் கொள்ளல் மற்றும் அவற்றின் செம்மைத் தன்மையை உறுதிப்படுத்தி கொள்வதற்கு அவசியமாக அமைந்தன. விசா வழங்கும் போது திணைக்களம் எதிர்கால சவால்களை வெற்றிக் கொள்வதற்கான தடைகளை இனங்காணல் திணைக்களத்தால் பயன்படுத்தப்பட்ட 'இ.டி.எ' நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடக இற்றைப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படாததால் மேற்குறிப்பிட்ட நிலைமைகள் மேலும் தீவிரமடைந்தன. விண்ணப்பதாரியின் புகைப்படங்கள்,கடவுச்சீட்டின் நிகழ் பிரதிகள்,வேறு சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இணைய வழியில் முறைமைக்குப் பெற்றுக்கொள்ள முடியாமை,காலாவதியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் வினைத்திறனற்ற சேவையாக மாறியமை,இந்த முறைமையை நவீனமயப்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்பமின்மை,பல்வேறு சந்தர்ப்பங்களிவ் ஏற்படுகின்ற செயலிழப்புக்களை உடனடியாக சீர் செய்வதற்கு தேவையான வசதிகள் இன்மை,பன்மொழி அமைப்பு மையத்தின் வசதி காணப்படாததால் ஆங்கில மொழியைப் பயன்படுத்தாத சுற்றுலா பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாதல்,விசா மற்றும் விசா தொடர்பான சேவைகளை வழங்கல்,ஏனைய சர்வதேச சேவைகளுடன் ஒப்பிடுகையில் பலவீனமானதொரு சேவையாக காணப்படல். இலங்கையில் மாத்திரம் நடைமுறையில் உள்ள முறை என்பதால் பாவனையாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்ததன் கரணமாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான விளம்பரம் இல்லாததால் ஏனைய நாடுகளைப் போன்று இதனை ஓர் உத்தியாகப் பயன்படுத்த முடியாமை,இவ்வாறான சிக்கல்களினால் இந்த பணிகளை நிறைவேற்றுவதற்கு மிகப் பொருத்தமான நிறுவனமொன்றை பயன்படுத்துவது திணைக்களத்தின் பிரதான எதிர்பார்ப்பாக அமைந்தது.இதன் பொருட்டு வி.எப்.எஸ்.நிறுவனத்திடமிருந்து கிடைக்கப் பெற்ற முன்மொழிவானது அமைச்சரவையின் இணக்கப்பாட்டுடன் நியமிக்கப்பட்ட குழுவுக்கு முன்வைக்கப்பட்டது. வி.எப்.எஸ்.நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுவது புதிய விசா அறிமுகப்படுத்தல் செயற்திட்டத்தை இந்த நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளும் போது விசாவுக்கான அனுமதிக்காக ஏற்புடைய ஆவணங்களை அனுப்புவதற்கு இணைய வழியில் விண்ணப்பதாரியிடமிருந்து பெற்றுக்கொண்டு,திணைக்களத்திடம் சமர்ப்பித்தல்,அதற்கான இணையத்தளத்தை உருவாக்குதல்,பேணல் மற்றும் பராமரித்தல்,ஏற்புடைய ஆவணங்களை இணைய வழியில் அனுப்புவதற்கு முன்னர் விண்ணப்பதாரியினால் சமர்ப்பிக்கப்படும் அனைத்து தகவல்களையும் தரப்பரிசோதனை செய்தல்,ஏற்புடைய விசாவுக்கான அனுமதியை வழங்கிய பின்னர் பொதுத்தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (ஜி.டி.ஆர்.பி)பிரகாரம் தரவுகளை உரிய தொகுதியில் இருந்து முறையாக அழித்து விடல் வேண்டும். இவ்வாறான சேவைகளை பெற்றுக் கொள்வதுடன் 1948 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியர்வு சட்டத்தின் பிரகாரம் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ள விசா அனுமதித்தல்,விநியோகித்தல் அல்லது விநியோகிக்காமலிருத்தல் அதிகாரம் இந்த நிறுவனத்துக்கு வழங்கவில்லை.இந்த புதிய செயற்திட்டம் தொடர்பில் சமூகத்தின் மத்தியில் தவறான நிலைப்பாடு தோற்றம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.ஆகவே தவறான கருத்துக்களை நீக்கி இந்த புதிய செயற்திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார். விசா விநியோகித்தல், அனுமதித்தல், இரத்து செய்தல் அதிகாரத்தை வி.எப்.எஸ்.நிறுவனத்துக்கு வழங்கவில்லை - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் | Virakesari.lk
  15. Published By: RAJEEBAN 07 MAY, 2024 | 01:21 PM ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானியாக பணிபுரிந்த பெல்ஜியம் விமானியும் விமான பணியாளரும் தங்களை உடல்ரீதியாக அவமானப்படுத்தினார்கள், இன பாரபட்சத்தை வெளிப்படுத்தினார்கள் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகளும் பணியாளர்களும் முறைப்பாடு செய்துள்ளதை தொடர்ந்து பாரிய இனவெறி மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஏப்பிரல் 30 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் டெய்லிமிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பலத்த நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தனது விமான சேவையை வலுப்படுத்துவதற்காக டிசம்பரில் பெல்ஜியத்திடமிருந்து இரண்டு விமானங்களை குத்தகைக்கு பெற்றுக்கொண்டது. இந்த விமானங்கள் கொழும்பிலிருந்து பிராங்பேர்ட், டாக்கா, துபாய், பாரிஸ், சென்னை விமான நிலையங்களிற்கு பயணிக்கின்றன. இந்த விமானத்தில் பெல்ஜியம் விமானிகளுடன் இலங்கையை சேர்ந்த விமானிகளும் விமான பணியாளர்களும் காணப்படுவார்கள். ஏப்பிரல் 30 திகதி குறிப்பிட்ட விமானம் கொழும்பிலிருந்து பிரான்ஸ் தலைநகருக்கு செல்வதற்காக கொழும்பு விமான நிலையத்தில் தயாராகயிருந்தவேளை இலங்கையை சேர்ந்த விமானிகளிற்கு பிசினஸ் கிளாசில் ஆசனங்களை ஒதுக்கவில்லை என அறிவித்துள்ளனர். அந்த பிரிவில் ஒரு ஆசனம் மாத்திரம் உள்ளதால் ஆசனங்களை ஒதுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர். விமானத்தை மீள செலுத்திவருவதற்காக விமானிகள் வெளிநாடுகளிற்கு பயணம் மேற்கொள்ளும் போது விமானிகளுக்கு பிசினஸ் கிளாசில் ஆசனங்களை ஒதுக்குவதே வழமை . இதேவேளை ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான பணியாளர்களிற்கு அறிவிக்காமல் எயர்பெல்ஜியத்தை சேர்ந்த விமான பணியாளருக்கு பிசினஸ் கிளாசில் ஆசனத்தை வழங்கியுள்ளனர். விமானத்தில் ஏறுவதற்காக விமானத்தை நோக்கி சென்ற ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானிகள் இதனை அறிந்ததும் விமானத்தில் ஏற மறுத்துள்ளனர். இலங்கை விமானிகள் விமானத்தில் ஏற மறுத்தவேளை யுஎல் 501 இன் விமானியான கப்டன் பிலிப்பே எனெக்கென் இலங்கை விமானிகளை இனரீதியில் நிந்தித்துள்ளார். ஐந்து நிமிடத்திற்குள் அவர்கள் விமானத்தில் ஏறாவிட்டால் அவர்கள் விமானத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என எச்சரித்துள்ளார். இலங்கை விமானிகளை ஆபாசவார்த்தைகளால் நிந்தித்த எயர்பெல்ஜியம் விமானி விமானத்திற்குள் சென்றுள்ளார். பின்னர் அவர் பயணிகளுக்கான அறிவித்தலில் பெரிய பருமனான கப்டன் உட்பட இலங்கை விமானிகள் ஆசனங்களிற்காக அடம்பிடிப்பதால் விமானத்தின் பயணம் தாமதமாகின்றது என அறிவித்துள்ளார். இதனை செவிமடுத்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானிகள் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரி உட்பட பல அதிகாரிகளை தொடர்புகொண்டுள்ளனர். ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானியாக பணிபுரிந்த பெல்ஜியத்தைச் சேர்ந்த விமானி இலங்கை விமானிகளை உடல்ரீதியாக அவமானப்படுத்தினார் ; இனப்பாரபட்சத்தை வெளிப்படுத்தினார் - வெடித்தது புதிய சர்ச்சை | Virakesari.lk
  16. 07 MAY, 2024 | 12:12 PM நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் என துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் பாரிய மின்பிறப்பாக்கிகள் மூலமாக நெடுந்தீவு மக்களுக்கு தடையற்ற பின்சாரம் இலங்கை பின்சார சபையின் மூலம் நீண்டகாலமாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக நெடுந்தீவு பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டதால் அப்பகுதி மக்கள் குறிப்பாக தற்போதைய அதி வெப்பமான சூழ்நிலையில் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க நேரிட்டிருந்தது. இதற்கு இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளே காரணம்.என துறைசார் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த விடயம் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்து துறைசார் தரப்பினருடன் குறித்த தடங்கல் தொடர்பில் தொலைபேசியில் கேட்டறித்துகொண்ட அமைச்சர் சீரமைக்கும் பணிகளை மிக விரைவாக முன்னேடுத்து தடையற்ற மின்சார வழங்கலை உறுதி செய்யுமாறு பணித்திருந்தார். இந்நிலையில் தற்போது குறித்த மின் பிறப்பாக்கிகள் சீர் செய்யப்பட்டு மின்சார சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன. இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் - தற்போது சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் நாட்டில் அதி வெப்ப நிலையும் காணப்படுகின்றது. இதனால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படும் ஏது நிலைகள் அதிகளவில் உள்ளன. அதுமட்டுமல்லாது மக்களின் பல்வேறு வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளும் பிரச்சினைகளை ச்ந்தில்க நேரிடும். இதேவேளை நாடு முழுவது இருளில் மூழ்கிய சந்தர்ப்பங்களில் கூட இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது கிடையாது. அந்தவகையில் எதுவித தடைகளும் ஏற்படாது வகையில் சேவையை வழங்குவது துறைசார் தரப்பினரது கடமையாகும். இதேநேரம் இப்பகுதியில் காற்றலை மின் உற்பத்திக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை நிறைவுற்றதும் தடையற்ற மின்சாரத்துடன் குறைந்த செலவிலும் இப்பகுதி மக்கள்.மின்சார சேவையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நெடுந்தீவில் தடையற்ற மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் - துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு! | Virakesari.lk
  17. Published By: DIGITAL DESK 3 07 MAY, 2024 | 02:53 PM யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான இணுவில் குப்பைக் கிடங்கில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இணுவில் காரைக்கால் குப்பைக் கிடங்கில் நேற்று திங்கட்கிழமை (06) தீ பரவியது. யாழ்.மாநகர சபை மற்றும் ஏனைய பகுதி பிரதேச சபையினரின் தீயணைப்பு படையினரின் நீண்ட நேர பிரயத்தனத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. குறித்த இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், இதற்கு முன்பும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குப்பை மேட்டுக்கு விஷமிகள் யாராவது தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தீ பரவியமைக்கான காரணம் உறுதியாக தெரியாத நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த குப்பைக் கிடங்கில் 2 ஆண்டுகளுக்கு முன்னரும் பாரிய தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை குறித்த பகுதியில் குப்பை கிடங்கை அகற்றக்கோரி அப்பகுதி இளைஞர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (07) காலை போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ். இணுவில் பகுதியில் குப்பைக் கிடங்கில் தீ ; குப்பைகளை அகற்றுமாறு போராட்டம் | Virakesari.lk
  18. Published By: DIGITAL DESK 3 07 MAY, 2024 | 04:25 PM கல்முனை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ மேஜர் ஒருவர் 3 இலட்சம் ரூபாய் பணம் தருமாறு அச்சுறுத்தி மிரட்டிவருவதாக மட்டக்களப்பைச் சேர்ந்த நபரொருவர் நேற்று திங்கட்கிழமை (6) முறைப்பாடு செய்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது, மட்டக்களப்பைச் சேர்ந்த ரங்கன் என அழைக்கப்படும் சாமித்தம்பி வேலாயுதம் என்பவர் வெளிநாட்டுக்கு அனுப்பும் இடை தரகராக கல்முனையைச் சோந்த ஒருவரிடம் 5 இலச்சத்து 70 ஆயிரம் ரூபாவையும் அதனுடன் 5 பேரிடம் பணத்தை வாங்கி அதனை வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் ஒருவருக்கு வழங்கியுள்ளார். இந்நிலையில் குறித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஏமாற்றி வந்த நிலையில் அவருக்கு எதிராக இடைதரகர் கல்முனையைச் சேர்ந்த நபரின் சாட்சியுடன் மாவட்ட விசேட குற்றப் புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து வேலைவாய்ப்பு முகவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டு வழக்கு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந்த பின்னணியில் கல்முனை இராணுவ முகாம் மேஜர் இடைத்தரகரான ரங்கனிடம் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கல்மனையில் உள்ள நபரிடம் வாங்கிய பணத்தை தன்னிடம் தருமாறும் உடன் 3 இலட்சம் ரூபாவை தனது வங்கி கணக்கிற்கு போடுமாறு கப்பம் கோரியதுடன் பணம் தர மறுத்தால் போதைப் பொருளை வீட்டில் வைத்து மனைவியையும் உன்னையும் தூக்கி கொண்டு சென்று இல்லாமல் செய்வேன், 4ம் மாடிக்கு அனுப்புவேன் நான் கொழும்பில் பெரிய பின்னணியைச் சேர்ந்தவன் விளையாடக் கூடாது என அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதனையடுத்து குறித்த இராணுவ மேஜர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு இடை தரகரான ரங்கன் 30 ஆயிரம் ரூபாவை கப்பமாக அனுப்பியுள்ளார். தொடர்ந்து இராணுவ மேஜர் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரி வருவதாகவும் எனக்கும் எனது மனிவிக்கும் உயிர் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். குறித்த இராணுவ அதிகாரியை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, பாதிக்கப்பட்டவர் மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிடம் இராணுவ மேஜருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை (7) செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பில் 3 இலட்சம் ரூபா கப்பம்கோரி கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ மேஜருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு | Virakesari.lk
  19. 07 MAY, 2024 | 05:02 PM கடந்த பெப்ரவரி மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளி செல்வநாயகம் ஆனந்தவர்ணன் மற்றும் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக நீதிமன்றில் முற்படுத்தப்படாமல் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் மூதூரைச் சேரந்த எஸ்.சுதாகரன் ஆகிய இருவரையும் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டார்கள் . அதன்போது தனது விடுதலையை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆனந்தவர்ணன் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்ததாகவும், தனது விடுதலைக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். தான் பொய்க்குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் தனது தரப்புக் கருத்துக்களை கூறுவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் வழங்கப்படாமலேயே விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வழக்குத தவணை எப்போது என்றுகூடத் தெரியாத நிலையில் தன்னைத் தடுத்து வைத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். அதேபோன்று மூதூரைச் சேரந்த எஸ்.சுதாகரன் என்பவரும் இந்தியாவிலிருந்து திரும்பும்போது கைது செய்யப்பட்டு கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தனது விடுதலைக்காகவும் நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன் உறுப்பினர்கள் ஆனந்தவர்ணன் உடல்நலக்குறைவால் அவதியுறுவதாகவும், உணவு தவிர்ப்புப் போராட்டம் தொடர்ந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதனால் அவரது கோரிக்கையை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட தரப்புக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திள்ளார்கள். மேலும் இவ்விடயம் தொடர்பில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளது கவனத்திற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள். கொழும்பு விளக்கமறியல் சிறையில் தமிழ் கைதிகளை பார்வையிட்டனர் கஜேந்திரன் -சிறீதரன் | Virakesari.lk
  20. Published By: DIGITAL DESK 3 07 MAY, 2024 | 05:15 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) கருத்து தெரிவித்தமைக்காக விசாரணைக்கு அழைப்பதற்கு இலங்கையில் நடப்பது பொலிஸ் இராஜ்ஜியமல்ல. இலங்கை ஜனநாயக நாடு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) விசேட கூற்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் பேசுகையில், விசா பிரச்சினை குறித்து அண்மையில் விமான நிலையத்தில் கருத்துத் தெரிவித்த சந்தரு குமாரசிங்கவை பொலிஸுக்கு அழைத்து அது குறித்து வாக்குமூலம் பெறப்பட்டது. இது பொலிஸ் இராஜ்ஜியமல்ல, இது ஏகாதிபத்திய நாடல்ல, இது ஜனநாயக நாடு. பேச்சுச் சுதந்திரம் அவருக்கு இருப்பதால் அவருக்கு இடையூறு விளைவிக்க முடியாது, அவரை தொந்தரவு படுத்த வேண்டாம். சந்தரு குமாரசிங்க அண்மையில் விமான நிலையத்தில் விடயமொன்று தொடர்பில் தனது கருத்தை முன்வைத்ததை சமூக ஊடகங்கள் மூலம் காண முடிந்தது. இந்நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் அவருக்கு பேச்சுச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரம் உள்ளது. இதற்கு இடையூறு ஏற்படுத்த முடியாது. அவர் அவரது கருத்தை முன்வைத்துள்ளார். அதனால் இந்த விடயத்தை மேலும் கொண்டு செல்வதில் அர்த்தமில்லை என்பதால் இந்த விடயத்தை இநத நிலையில் முடிவுக்கு கொண்டு வருமாறு பிரதமரிடம் கோருகின்றேன் என்றார். இலங்கையில் நடப்பது பொலிஸ் இராஜ்ஜியமல்ல : இலங்கை ஜனநாயக நாடு - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் எச்சரிக்கை | Virakesari.lk
  21. Simrith / 2024 மே 06 , மு.ப. 07:43 - 0 - 55 இந்த ஆண்டு முதல் தடவையாக சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 200,000க்கு கீழ் வீழ்ச்சியடைந்ததன் மூலம் இலங்கை சுற்றுலாத்துறை ஏப்ரல் மாதத்தில் வேகமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மொத்தம் 148, 867 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) தற்காலிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தை விட 41 சதவீதம் அதிகமாக இருந்தாலும், கடந்த மாதத்தில் (மார்ச்) பதிவு செய்யப்பட்ட 209,181 சுற்றுலாப் பயணிகளின் வருகையை விட இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும். டிசம்பர் 2023 முதல், இலங்கை ஒவ்வொரு மாதமும் 200,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் வெற்றிகரமாக உள்ளது, இது கொவிட் தொற்றுநோய் வெடித்ததில் இருந்து முதல் முறையாக மைல்கல்லை எட்டியது. இந்த வேகம் நான்கு மாதங்கள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டது, ஆனால் ஏப்ரல் மாதத்தில் ஒரு சுருக்கம் காணப்பட்டது எவ்வாறாயினும், ஒரு சுருக்கம் எதிர்பார்க்கப்பட்டாலும், சுற்றுலா அதிகாரிகள் கடந்த வாரம் வீழ்ச்சிக்கு பிற காரணிகளும் காரணம் என சுட்டிக்காட்டியுள்ளனர். ஏப்ரல் 17 முதல் நடைமுறைக்கு வந்த புதிய விசா முறையானது, இது மிகவும் விலை உயர்ந்ததுடன் முன்பு இருந்த ETA போல வசதியாக இல்லாததால், அது வெளியிடப்பட்டதிலிருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், மாதாந்திர சுற்றுலா வருகை புதுப்பிப்பில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விசா வகைகளின்படி வருகை எண்கள் "புதுப்பிக்கப்பட்டுள்ளன" என்று SLTDA குறிப்பிட்டது. புதுப்பிப்பு வருகை எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காட்டுகிறது. இது தொடர்பில் குடிவரவு அதிகாரிகளிடம் இருந்து தெளிவுபடுத்தப்பட்டதன் பின்னர் இன்னும் தெளிவான யோசனையை இன்று பகிர்ந்து கொள்ள முடியும் என்று அதன் தலைவர் பிரியந்த பெர்னாடோ தெரிவித்தார். “வருகைத் தரவைப் பெறுவதற்கான ஆதாரம் குடியேற்றம். அவற்றை வகைப்படுத்தலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்வையிடுதல், வணிகம், MICE போன்றவை" என்று அவர் கூறினார். ஏப்ரலில் இலங்கை சுற்றுலாவுக்கான சிறந்த மூல சந்தைகளாக இந்தியா, ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் இங்கிலாந்து ஆகியன இருந்தன, அவை மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் முறையே 18 சதவீதம், 10 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என பங்களித்தன என்பது குறிப்பிடத்தக்கது. Tamilmirror Online || ஏப்ரலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி
  22. கிளிநொச்சியில் சட்ட விரோத விளையாட்டு பூங்காவுக்கு எதிர்ப்பு! யோகி. கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் இராணுவத்தினரின் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்ட இடத்தில் சட்ட விரோதமாக இராணுவத்தினர் விளையாட்டு பூங்கா ஒன்றை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் நேரில் சென்று பார்வையிட்டதோடு இவ்விடத்தில் தொடர்ந்து இராணுவத்தினர் ஆதிக்கம் செலுத்துவதை தொடர்ந்தால் மக்களே ஒருமித்து அளவிலான போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பூநகரி பொன்னாவெளியில் வளங்கள் சூறையாடப்படுகின்றது. உருத்திரபுரம் உருத்திரபுரீச்வரர் ஆலயம் ஆக்கிரமிக்க முயற்சிக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் அனுமதியில்லாது இராணுவம் மேற்கொள்ளும் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்தார். அத்துடன் கரைச்சி பிரதேச சபைக்குச் சென்று அங்கு கரைச்சிபிரதேச செயலரிடம் இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச) கிளிநொச்சியில் சட்ட விரோத விளையாட்டு பூங்காவுக்கு எதிர்ப்பு! (newuthayan.com)
  23. புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய நபரை கைது செய்யக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் 06 MAY, 2024 | 04:26 PM வவுனியா, புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் முன்னிலையில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய நபரை கைது செய்யுமாறு கோரி வவுனியா - கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக இன்று (06) கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. தாக்குதலுக்குள்ளான நபர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் 'பொலிஸார் பக்கசார்பாக செயற்படாது குழாய் கிணறு ராசனை கைது செய்', 'பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து தாக்கியவருக்கு பாதுகாப்பு கொடுக்காதே', 'பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீதும் நடவடிக்கை வேண்டும்' என்றவாறு கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்ப்பாட்டக்காரர்களின் சார்பாக 10 பேரை அழைத்துப் பேசியிருந்தார். இதன்போது பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய வெளிநாட்டில் இருந்து வருகைதந்த நபரை 3 தினங்களுக்குள் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் மீதும் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். அதன் பின்னரே ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றிருந்தனர். கடந்த மாதம் 15ஆம் திகதி வவுனியா, சின்னப் பூவரசன்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தரை புளியங்குளம் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உட்பட சில பொலிஸார் பிடித்து வைத்திருக்க, வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து அந்த தந்தையை தாக்கியிருந்தார். தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய நபரை கைது செய்யக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய நபரை கைது செய்யக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk
  24. Published By: DIGITAL DESK 3 06 MAY, 2024 | 04:53 PM மட்டக்களப்பில் பாடசாலை சிறுமி ஒருவருக்கு இனம் தெரியாத நபரொருவர் ஊசி ஏற்றியதால் சிறுமி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதுடன், அந்த பொய் செய்தியை திரிவுபடுத்தி சமூக ஊடகங்களில் குரல்பதிவிட்ட ஆசிரியரை எச்சரித்து இன்று திங்கட்கிழமை (6) விடுவித்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.பி.ஆர். பண்டார தெரிவித்தார். “நகரிலுள்ள உள்ள பாடசாலையில் தரம் 5 ஆம் ஆண்டில் கல்விகற்றுவரும் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த வியாழக்கிழமை (02) பாடசாலை முடிந்து பிற்பகல் 2.30 மணியளவில் பாடசாலை வளாகத்தில் பெற்றோர் வருவதற்காக காத்திருந்துள்ளார். அப்போது அங்கு கறுப்பு நிறத்திலான ரவுசரும் சேட்டும் முகத்திற்கு கறுப்பு நிறத்திலான முகக்கவசமும் அணிந்துகொண்டு இளைஞன் ஒருவர் வந்து பெற்றோரதும் சிறுமியின் பேரை கேட்டு பாடசாலையில் அனைவருக்கும் ஊசி பேடுவதாகவும், உங்களுக்கு ஊசி போடவில்லை என தெரிவித்து சிறுமிக்கு ஊசி ஒன்றை ஏற்றிவிட்டு அவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். அதனால் சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே ஏனைய பிள்ளைகள் கவனம் என ஆசிரியர் ஒருவர் குரல்பதிவிட்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது. இது தொடர்பாக மட்டு தலைமையக சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி சப் இன்பெக்ஸ்டர் விவேகானந்தன் தலைமையில் விசாரணைகளை முன்னெடுத்தனர். சம்பவதினமான கடந்த வியாழக்கிழமை (02) சிறுமியை பாடசாலையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு வீட்டிற்கு தந்தையார் மோட்டர் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுமி தாயாரிடம் பாடசாலையில் இன்று ஊசி போட்டதாகவும் அதனால் வாந்தி எடுத்ததாகவும் மயக்கமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தாயார் வகுப்பு ஆசிரியர், அதிபர் மற்றும் மாணவர்களின் பெற்றோரிடம் விசாரித்தபோது அப்படி ஊசி எதுவும் போடவில்லை என அறிந்து கொண்டுள்ளார். இதன் பின்னர் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை சிறுமிக்கு காய்ச்சல் காரணமாக பாடசாலைக்கு செல்ல வில்லை. இந்நிலையில், தந்தையாரிடம் தாயார் சிறுமி தனக்கு ஊசி போட்டதாக தெரிவித்த சம்பவத்தை தெரிவித்தநிலையில் மாலை 3 மணிக்கு மட்டு. போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் சிறுமியை அனுமதித்துள்ளனர். வைத்தியசாலையில், சிறுமி தெரிவித்ததை தெரிவித்து இரத்த சோதனை செய்யுமாறு தந்தையர் கேட்டுக் கொண்டதையடுத்து இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை பாடசாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி கமராவை சோதனை செய்த பொலிஸார் சிறுமிக்கு ஊசி ஏற்றியதாக சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிய வந்துள்ளது. சிறுமி பொய் செல்லியுள்ளார் என்பதும், சிறுமி தெரிவித்தமை பொய் என அறியாது அதனை ஆசிரியர்களுக்கு தந்தையார் தெரிவித்துள்ளார். அதனை தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் குரல்பதிவிட்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே குறித்த சிறுமி மீது ஊசி ஏற்றிய எந்த தடையமும் இருக்கவில்லை என வைத்திய பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாரஞ்சனி தெரிவித்தார். இதனையடுத்து சமூக ஊடகங்களில் குரல் பதிவிட்ட ஆசிரியரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டு அவரை எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் சிறுமிக்கு வைத்திய பரிசோதனையின் இடம்பெற்று வருகின்றது. எனவே, இவ்வாறு உறுதிப்படுத்தப்படாமல் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பொதுமக்களை பீதியடைச் செய்பவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். மட்டக்களப்பில் சிறுமிக்கு ஊசி ஏற்றிய சம்பவம் போலியானது ! | Virakesari.lk
  25. Published By: DIGITAL DESK 3 06 MAY, 2024 | 05:01 PM (எம்.மனோசித்ரா) போதனா வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் சத்திரசிகிச்சைகள் வெற்றியளிப்பதில்லை என தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை. எனவே மக்கள் இவ்வாறான போலி செய்திகள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், போதனா வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் சத்திரசிகிச்சைகள் வெற்றியளிப்பதில்லை என தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை. நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான போதனா வைத்தியசாலைகளில் ஆயிரக்கணக்கான சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன. உலகில் இலவச சத்திரசிகிச்சைகளை வழங்கும் நாடுகள் பாரியளவில் இல்லை. ஆனால் இலங்கையில் சாதாரண காய்ச்சலுக்கான மருந்து உட்பட மூளை சத்திரசிக்சை வரை இலவச தரமான சுகாதார சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. கொவிட் காலத்திலுள் மிகவும் வெற்றிகரமாக தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. உலகில் வளர்ச்சியடைந்த பல நாடுகளை விட இலங்கை முன்னிலை வகித்தது. அந்த வகையில் இந்த கட்டமைப்பை மேலும் மேம்படுத்தி முன்னெடுத்துக் கொண்டு செல்வதற்கு துறைசார்ந்தவர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். யாழ் போதனா வைத்தியசாலை என்பது மிகவும் சிறந்த சேவையை வழங்கும் ஒரு வைத்தியசாலையாகும். எனவே போதனா வைத்தியசாலைகள் தொடர்பில் தெரிவிக்கப்படும் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் மக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார். போதனா வைத்தியசாலைகள் தொடர்பில் வெளியாகும் போலி செய்திகளால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை - சுகாதார அமைச்சர் | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.