Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. 01 MAY, 2024 | 07:00 PM தலைமன்னார் ஊர்மனை கிராம மக்கள் இம்முறை மே தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இக்கிராம மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார பின்னடைவு மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளடங்களாக பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த கிராம மக்கள் இன்றைய தினம் (1) மே தினத்தை ஒன்றுதிரண்டு மிகவும் ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். தலைமன்னார் ஊர்மனை கிராமத்தின் புனித லோறன்சியார் ஆலய பங்குத்தந்தை சந்தியோகு மார்க்கஸ் அடிகளார் தலைமையில் புனித லோரன்சியார் மீனவ கூட்டுறவு சங்கம் மற்றும் லோரன்சியார் விளையாட்டு கழகம் கூட்டாக இணைந்து மே தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர். தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் மீன்பிடி துறையில் அமைந்துள்ள சுரூபத்தடியில் இன்று காலை மே தின கொண்டாட்ட நிகழ்வு திருப்பலியுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த மக்கள் யாவரும் ஒன்றுதிரண்டு மீன்பிடி துறைமுகத்தில் போட்டி நிகழ்வுகளில் ஈடுபட்டனர். நீச்சல் போட்டி, தெப்பம் வலிக்கும் போட்டி, பெரிய மற்றும் சிறிய படகுகளின் போட்டி, பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன. தலைமன்னார் ஊர்மனை கிராமத்தின் கடற்படையினர் மற்றும் பொலிஸ் தரப்பினர் உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர். மன்னர் மாவட்டத்தில் பல்வேறு மீன கிராமங்களில் மே தின கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. மே தினத்தை கொண்டாடி மகிழ்ந்த தலைமன்னார் ஊர்மனை கிராம மக்கள்! | Virakesari.lk
  2. ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள்... ‘சிக்கிய’ தேவகவுடா பேரன் - கர்நாடகாவில் பாஜக-வுக்கு பின்னடைவா? கர்நாடகாவில் இருக்கும் 28 மக்களவைத் தொகுதிகளில், 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்த 14 தொகுதிகளுக்கு வரும் மே 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. மோடி பா.ஜ.க-வுக்கு தென் மாநிலங்களில் செல்வாக்கு இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா மட்டுமே. அங்கு, கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.பி-க்கு எதிராக எழுந்திருக்கும் பாலியல் புகார், கர்நாடகா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. இந்த விவகாரம், பா.ஜ.க கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகாவில் ஹாசன் மக்களவைத் தொகுதி எம்.பி-யாக இருப்பவர், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா. இவர், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் என்பதும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமியின் சகோதரர் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹாசன் தொகுதியின் சிட்டிங் எம்.பி-யான பிரஜ்வல் ரேவண்ணா, இந்த முறையும் அந்தத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முந்தைய நாள், பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான பாலியல் வீடியோக்கள் வெளியாகின. ‘பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வக்கிரங்கள்’ என்ற பெயரில் 300 பாலியல் வீடியோக்கள் வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டன. இந்த விவகாரத்தால் பா.ஜ.க - ஜே.டி.எஸ் கூட்டணியினர் பேரதிர்ச்சியடைந்தனர். அடுத்த சில மணி நேரத்தில், பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 2,800-க்கும் மேற்பட்ட பாலியல் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவின. தன் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண், தனது கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் என்று தொடங்கி, அரசுப் பணியில் இருக்கும் பெண் அதிகாரிகள் வரை பாலியல் ரீதியாக பிரஜ்வல் ரேவண்ணா சீரழித்திருக்கிறார் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த பாலியல் காட்சிகளை அவரே வீடியோவும் எடுத்திருக்கிறார். 16 வயது சிறுமி முதல் 60 வயதுடைய பெண்கள் வரை பாலியல் அத்துமீறல்களில் பிரஜ்வல் ஈடுபட்டிருக்கிறார் என்பதை கர்நாடகா முழுவதும் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள். பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகிவிட்டார். தற்போது, அவர் ஜெர்மனியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு கர்நாடகா மாநில அரசு அமைந்திருக்கிறது. மேலும், புகார்கள் அடிப்படையில் பிரஜ்வல் ரேவண்ணா மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்யக்கோரி கர்நாடகா முழுவதும் பெண்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். தேவகவுடாவின் மகனும் பிரஜ்வலின் தந்தையுமான ரேவண்ணா, முன்னாள் அமைச்சர் ஆவார். தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் மீதும் பாலியல் புகார் எழுந்திருக்கிறது. பிரஜ்வல் ரேவண்ணாவைப் போலவே அவரது தந்தையும் தன்னை கொடுமைப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார் என்று, அவரது வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் தந்தை, மகன் இருவர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். பிரஜ்வல் ரேவண்ணாவை பா.ஜ.க பாதுகாக்கிறது என்று கர்நாடகா அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் குற்றம் சாட்டியிருக்கிறார். அவர், ‘இந்து பெண்களின் தாலி குறித்து பிரதமர் மோடி பேசிவருகிறார். ஆனால், தனது கூட்டணிக் கட்சியினரின் பாலியல் வக்கிரங்களுக்கு மோடி என்ன சொல்லப்போகிறார்? அரசியல் ஆதாயத்துக்காக பிரஜ்வல் ரேவண்ணாவை பா.ஜ.க பாதுகாக்கிறது. இது உலக அளவில் நடைபெற்றிருக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் மிக மோசமான வன்கொடுமை நிகழ்வாக இருக்கிறது. எனவே, இது தொடர்பான தனது நிலைப்பாட்டை பா.ஜ.க தெரிவிக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். இந்த விவகாரம் பா.ஜ.க-வுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகாவில் அதிக தொகுதிகளில் வெல்ல வேண்டுமென்பதற்காக பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், காங்கிரஸை கடுமையாக விமர்சித்ததுடன், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தையும் கர்நாடகாவில்தான் மோடி கிளப்பினார். “ஓ.பி.சி இடஒதுக்கீட்டிலிருந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியிருக்கிறார்கள். மதரீதியில் இடஒதுக்கீடு வழங்கியிருப்பது சட்டவிரோதம்” என்றெல்லாம் பேசியதோடு, காங்கிரஸையும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தார் மோடி. ஆனால், அவரது பிரசாரத்தை தவிடுபொடியாக்கிவிட்டது பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோ விவகாரம். இதனிடையே இந்த விவகாரம் குறித்து பேசிய அமித் ஷா, ``நாட்டின் பெண்கள் சக்தியுடன் நிற்போம் என்ற பா.ஜ.க-வின் நிலைப்பாடு எப்போதும் தெளிவாக இருக்கிறது. கர்நாடகாவில் யாருடைய அரசு ஆட்சியில் இருக்கிறது என்பதை காங்கிரஸிடம் கேட்க விரும்புகிறேன். காங்கிரஸ் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? இது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை. மாநில அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் அரசு இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆதரவாக இருக்கிறோம். எங்களின் கூட்டணிக் கட்சியான ஜேடி(எஸ்)-ம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்கிறது. இன்று இது தொடர்பான அக்கட்சியின் முக்கிய கூட்டம் ஒன்று நடக்க இருக்கிறது. அதில் சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்” என்றார். இந்நிலையில் இன்று அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பிரஜ்வல் ரேவண்ணவை இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் என்.டி.ஏ கூட்டணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்பது, அக்கட்சி அடுத்தடுத்து எடுக்கும் நடவடிக்கை மூலம் தெரிய வருகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள்... ‘சிக்கிய’ தேவகவுடா பேரன் - கர்நாடகாவில் பாஜக-வுக்கு பின்னடைவா? | Will JDS candidate videos affect nda alliance in karnataka - Vikatan
  3. நிர்மலா தேவி: `மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் 10 ஆண்டுகள் சிறை' - நீதிமன்றம் தீர்ப்பு! க.பாலசுப்பிரமணியன்சே. பாலாஜி 2 Min Read மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில், 5 பிரிவுகளின் கீழ் நிர்மலா தேவிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் அரசியலாளர்கள் மற்றும் ஆளுநர் மாளிகையும் இணைத்து பேசப்பட்டதால் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்பிறகு சூடுப்பிடித்த வழக்கின் விசாரணையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மேலும் பலரின்மீது சந்தேகங்கள், விசாரணைகள் நடத்தப்பட்ட போதும் இறுதியாக பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மட்டுமே குற்றவாளிகள் என இறுதி செய்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் 1360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 2018-ல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் தொடர்ந்து பல்வேறு கட்ட விசாரணைகளும் வாதங்களும் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பினை கடந்த 26-ம் தேதி வழங்குவதாக கூறியிருந்தார். 26-ம் தேதி தீர்ப்பிற்காக நிர்மலா தேவி வழக்கு எடுத்துக்கொண்ட போது பேராசிரியர் நிர்மலா தேவி நேரில் ஆஜராகாததால், தீர்ப்பினை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார். அதன்படி, பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரின் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை அரசு தரப்பில் ஆவணங்களோடு நிரூபிக்க தவறியதால், அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம் வழக்கில் முதல் நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிர்மலா தேவி குற்றவாளி எனவும் கோர்ட் தீர்மானித்தது. மேலும், நிர்மலா தேவியின் தண்டனை விவரங்கள் இன்று தெரிவிக்கப்படும் எனவும் நீதிபதி பகவதியம்மாள் தெரிவித்தார். இந்த நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் 5 பிரிவுகளின் கீழ் நிர்மலா தேவிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- 370-1பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறை 370-3பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறை 5(i)a பிரிவின் கீழ் 5 ஆண்டுகள் சிறை 67 ITP பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறை 9 ITP பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டதால், அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தும்... மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி பகவதியம்மாள் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். நிர்மலா தேவி: `மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் 10 ஆண்டுகள் சிறை' - நீதிமன்றம் தீர்ப்பு! | court sentenced 5 years prison to nirmala devi - Vikatan
  4. தமிழகத்தை உலுக்கிய வழக்குகளில் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கும் ஒன்று. கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் அரசியலாளர்கள் மற்றும் ஆளுநர் மாளிகையும் இணைத்து பேசப்பட்டதால் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்பிறகு சூடுப்பிடித்த வழக்கின் விசாரணையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மேலும் பலரின்மீது சந்தேகங்கள், விசாரணைகள் நடத்தப்பட்ட போதும் இறுதியாக பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மட்டுமே குற்றவாளிகள் என இறுதி செய்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் 1360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 2018-ல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் தொடர்ந்து பல்வேறு கட்ட விசாரணைகளும் வாதங்களும் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பினை கடந்த 26-ம் தேதி வழங்குவதாக கூறியிருந்தார். 26-ம் தேதி தீர்ப்பிற்காக நிர்மலா தேவி வழக்கு எடுத்துக்கொண்ட போது பேராசிரியர் நிர்மலா தேவி நேரில் ஆஜராகாததால், தீர்ப்பினை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார். அதன்படி, பரபரப்பான சூழ்நிலையில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியை நிர்மலா தேவி ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரின் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை அரசு தரப்பில் ஆவணங்களோடு நிரூபிக்க தவறியதால், அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம் வழக்கில் முதல் நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிர்மலா தேவி குற்றவாளி எனவும் கோர்ட் தீர்மானித்தது. இந்த சூழலில் நிர்மலா தேவிக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், வழக்கில் முதல் நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ளவருக்கு வழங்கப்படும் தீர்ப்பு குறித்து வாதங்களை முன்வைக்க விரும்புவதாக நீதிபதியிடம் பேசினார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து சி.பி.சி.ஐ.டி. சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன் பேசினார். இரு தரப்பிலும் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை பிற்பகல் 2:30 மணிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி பகவதியம்மாள் கூறினார். தொடர்ந்து நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'வழக்கில் 2-ம் மற்றும் 3-ம் நபர்களாக குற்றம்சாட்டப்பட்ட முருகன், கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து நிர்மலா தேவிக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து வாதங்களை முன் வைப்பதற்கு நீதிபதியிடம் அவகாசம் கேட்டிருக்கிறோம். வாதங்கள் குறித்து பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றார். சி.பி.சி.ஐ.டி.தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன் பேசுகையில், 'நிர்மலாதேவி வழக்கில் 2,3-ம் நபர்களாக குற்றம் சாட்டப்பட்ட முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு எதிராக அரசு தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அவர்களுக்கு தண்டனை வாங்கி தருவதற்கு போதுமானது தான். ஆனால் வழக்கு விசாரணையின்போது முருகன் மற்றும் கருப்பசாமிக்கு எதிராக ஆரம்பக்கட்டத்தில் வாக்குமூலம் அளித்தவர்கள், பிறழ் சாட்சிகளாக மாறியதால் நீதிமன்றம் பிறழ்சாட்சிகளை கருத்தில் எடுத்துக்கொண்டு உதவி பேராசிரியர் முருகன், மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்திருக்கிறது. அதேசமயம் நிர்மலா தேவியை குற்றவாளி எனவும் தீர்மானித்துள்ளது. மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவருக்குமே தண்டனை பெற்று தருவதில் அரசு தரப்பு உறுதியாக உள்ளது. இந்த வழக்கிலே அரசுத் தரப்பில் 104 சாட்சிகள் வழங்கப்பட்டதில் 82 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். 194 ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. 46 சான்று பொருட்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் முருகன், கருப்பசாமியின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கை எடுப்போம். அதேசமயம் பிறழ் சாட்சிகளாக மாறிய நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பது குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் முடிவு செய்வார்கள். பிற்பகலில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்படும் நிர்மலா தேவி வழக்கில் வாதங்களுக்கான சிறப்பு கால அவகாசம் வழங்கக் கூடாது, இன்றைக்கே வாதங்களை முன்வைக்கவும் நியாயத்திற்கான தீர்ப்பை வழங்க வேண்டும் எனவும் கேட்டிருக்கிறோம். எதுவாகினும் பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு பின்பு எதையும் உறுதியாக சொல்ல முடியும்' என்றார். பிற்பகலில், தீர்ப்பிறக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில், நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், 'இம்மார்டல் ட்ராஃபிக் ப்ரெவென்ஷன் ஆக்ட் சட்டத்தின்படி குற்றம்சாட்டப்பட்டுள்ள நபருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து வாதங்களை முன்வைக்க எங்களுக்கு இறுதி வாய்ப்பு தர வேண்டும். இதேப்போல, பிரசாந்த் பூஷன் மீதான வழக்கிலும்கூட சுப்ரீம் கோர்டு இறுதிக்கட்டத்தில் எதிர்தரப்புக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறது' என மேற்கோள் காட்டி தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார். இதைத் தொடர்ந்து அரசு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பகவதியம்மாள், நாளை ஒரு நாள் அவகாசம் அளித்து `தீர்ப்பு நாளை பிற்பகலில் வழங்கப்படும்' என வழக்கை ஒத்தி வைத்துள்ளார். `நிர்மலா தேவி குற்றவாளி; மற்ற இருவர் விடுதலை!'- மாணவிகளை தவறாக நடத்த முயன்ற வழக்கில் கோர்ட் தீர்ப்பு | srivilluputhur court convicted nirmala devi in the case of misbehaving with the students - Vikatan
  5. யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
  6. யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது. பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது. அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
  7. மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது. ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது! | Virakesari.lk
  8. 25 APR, 2024 | 02:04 PM வவுனியா வைரவபுளியங்குளத்தில் வன்னியின் மகளிர் பலத்தால் கட்டியெழுப்பப்பட்ட நச்சற்ற சூழல் நேயமிக்க உற்பத்திப் பொருட்களுக்கான மாபெரும் உழவர் சந்தை மாவட்ட செயலாளர் சரத் சந்திரவினால் இன்று (25) திறந்துவைக்கப்பட்டது. குளங்கள் கிராமங்கள் மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்களிடம் இருந்து இடைத்தரகர் இல்லாமல் வாடிக்கையாளர்கள் பெருட்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த சந்தை அமைந்துள்ளது. குளங்கள் கிராமங்கள் மறுமலர்ச்சித் திட்டத்தின் பிரதி திட்ட பணிப்பாளர் கனிசியஸ் தலைமையில் இந்த சந்தை திறக்கப்பட்டது. சந்தை திறப்பு விழாவில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன், யுன்டிபி நிறுவனத்தின் கள இணைப்பாளர் கலாநிதி கீர்த்திகா மற்றும் அரச உயர் அதிகாரிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர். வவுனியா வைரவபுளியங்குளத்தில் மாபெரும் உழவர் சந்தை | Virakesari.lk
  9. பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் கோட்டா- ஆணைக்குழுஅறிக்கை வெளியான பின்னர் அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ளவில்லை என தெரிவிப்பு Published By: RAJEEBAN 25 APR, 2024 | 03:19 PM 1 பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டஇரு தரப்புகள் குறித்த உண்மைகளை கர்தினால் மறைக்கின்றார் அல்லது வெளிப்படையாக தவிர்க்கின்றார் 2 சிஐடி அதிகாரியை விசாரணைகளை சீர் குலைப்பதற்காக நான் பதவி நீக்கவில்லை 3 உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இஸ்லாமிய தீவிரவாதிகளே மேற்கொண்டனர் ------------------- பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வைத்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரை கடுமையாக சாடியுள்ளார் உயிர்த்த ஞாயிறு தொடர்பான கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டஇரு தரப்புகள் குறித்த உண்மைகளை கர்தினால் மறைக்கின்றார் அல்லது வெளிப்படையாக தவிர்க்கின்றார் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு என்னிடம் கையளிக்கப்பட்ட மறுநாள் நான் கர்தினால்மல்கம் ரஞ்சித்தைதொடர்புகொண்டேன் என கர்தினால் தெரிவித்துள்ளார் ஆனால் நான் அந்தஅறிக்கைசமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நான் கர்தினாலை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளவேயில்லை என கோட்டாபய தெரிவித்துள்ளார். முஸ்லீம் சமூகத்தினர் எனக்கு வாக்களிக்கவில்லை என்னை ஆதரிக்கவில்லை என்பது நன்கு தெரிந்த விடயம் இதன் காரணமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தடைசெய்யப்படவேண்டிய எந்த அமைப்பிலும் நான் ஏன் ஆதரவாளர்களை வைத்திருக்கவேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2021 ம் ஆண்டு பெப்ரவரிமுதலாம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை என்னிடம் கையளிக்கப்பட்டது நான் அதனை ஆராய்ந்த பின்னர் சட்டமாஅதிபரிடம் பாரப்படுத்தினேன் 2021 பெப்ரவரி 23ம் திகதி அது நாடாளுமன்ற சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது மார்ச் முதலாம் திகதி அதன் பிரதிகள் பௌத்த கர்தினால் மற்றும் கத்தோலிக்க ஆயர்களிற்கு கையளிக்கப்பட்டது எனவும் கோட்டாபய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை சமர்ப்பித்ததும் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நான் ஆறுபேர் கொண்ட அமைச்சரவை உபகுழுவை நியமித்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொலிஸ்மா அதிபரின் பரிந்துரையின் கீழ் சிஐடியின் அப்போதைய இயக்குநர் 2019 நவம்பர் மாதம் பொலிஸ் ஆணைக்குழுவால்பதவிமாற்றம்செய்யப்பட்டார் இந்த பொலிஸ் ஆணைக்குழு 19வது திருத்தத்தின் கீழ் முன்னைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டது என தெரிவித்துள்ள கோட்டபாய ராஜபக்ச உயர்நீதிமன்ற வழக்கு தொடர்பில் நீதிபதிகளை செல்வாக்கிற்கு உட்படுத்துவது தொடர்பில் ரஞ்சன்ராமநாயக்கவுடன் மேற்கொண்டதொலைபேசிஉரையாடல்களை கசிந்தமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு இந்த சிஐடி அதிகாரியை சில வாரங்களின் பின்னர் பணியிலிருந்து இடைநிறுத்தியது எனவும் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதற்கு சில மாதங்களின் பின்னர் முன்னாள் பொலிஸ் அதிகாரியொருவருக்கு எதிரானகுற்றவியல் சம்பவமொன்று தொடர்பில் பொய்யான ஆதாரங்களை உருவாக்கியமை தொடர்பிலான விசாரையின் பின்னர் இந்த சிஐடி அதிகாரி நீதிமன்றகாவலில்வைக்கப்பட்டார் என தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ச உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை சீர்குலைப்பதற்காக இந்த அதிகாரியை நானே பதவி நீக்கம்செய்தேன் என தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ளார். இந்த குறிப்பிட்ட சிஐடி அதிகாரி2017 இல் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் இடம்பெற்று பல மாதங்களின் பின்னரும் தொடர்ந்து பதவியிலிருந்தார் என குறிப்பிட்டுள்ள கோட்டபாய உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முந்தைய காலப்பகுதியில் வவுணதீவு விவகாரம் தொடர்பில் சிஐடியினரே விசாரணைகளை மேற்கொண்டனர் மாவனெல்லயில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டமை வனாவில்லில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பிலும் சிஐடியினரே விசாரணைகளை மேற்கொண்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட குழுவினரும் நபர்களுமே தொடர்புபட்டிருந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சட்ட அமுலாக்கல் தரப்பினர் மேலும் எச்சரிக்கையுடன்இருந்திருந்தால் உயிர்த்த ஞாயிறுதாக்குதலிற்கு முன்னரே ஜஹ்ரான் குழுவினரை கைதுசெய்திருக்கலாம் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச இந்த தாக்குதலை தடுக்க தவறியது சிஐடியின் இயக்குநரின் தவறே எனவும் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்தவில்லை என கர்தினால்தனது உரையில் குற்றம்சாட்டியுள்ளார் எனினும் குற்றவாளிகளை அரசியல்வாதிகளால் நீதியின் முன் நிறுத்தமுடியாது பொலிஸாரினாலேயே அதனை செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச சட்டமா அதிபர் திணைக்களமும் நீதிகட்டமைப்பும் இணைந்து இதனைமுன்னெடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இஸ்லாமிய தீவிரவாதிகளே முன்னெடுத்தனர் புலனாய்வு விசாரணைகளில் மிக முக்கிய அமை;பப்பான சிஐடி இந்த தாக்குதலிற்கு பல மாதங்கள்முன்னராகவே இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் மற்றும் அமைப்பு குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.ஆனால் அவர்கள் தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் அவர்களை கண்டுபிடிக்க தவறிவிட்டது எனவும் கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் கோட்டா- ஆணைக்குழுஅறிக்கை வெளியான பின்னர் அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ளவில்லை என தெரிவிப்பு | Virakesari.lk
  10. Published By: VISHNU 25 APR, 2024 | 06:17 PM மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுவரும் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யுமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் கிராம மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டடில் வியாழக்கிழமை (25) மட்டக்களப்பு நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இயற்கை வளங்களை அழிக்கும் செயற்திட்டங்கள் தமக்கு வேண்டாம், இறால்பண்ணை, மற்றும் இல்மனைட் கம்பனிகளைத் தடைசெய்ய வேண்டும், எனத் தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இத்திட்டங்கள் தொடர்பில் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆளுனர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்புக்கூற வேண்டும். ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோசங்களை முன்வைத்தனர். வாகரையில் முன்னெடுக்கப்படும் இறால்பண்ணை, இல்மனைட் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டு நகரில் மக்கள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk
  11. Published By: VISHNU 25 APR, 2024 | 06:56 PM வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் முடிவடைந்து பதினைந்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் 1,500ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்விடங்களை இழந்துள்ளமை தெரியவந்துள்ளது. இவர்களில் 10 குடும்பங்கள் இன்னமும் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வருவதாக கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வடமாகாண ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் இடம்பெற்றதாக மாகாண ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த 4,567 மக்களுக்கு அரசாங்கம் இதுவரை எதனையும் செய்யவில்லை என, இக்கூட்டத்தில் கலந்து கொண்ட யாழ். மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் ஆளுநருக்கு அறிவித்தார் “1,512 குடும்பங்களைச் சேர்ந்த 4,567 பேர் இருக்கின்றனர். இவர்களில் 10 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களிலும் 1,502 குடும்பங்கள் உறவினர் நண்பர்களின் வீடுகளில் தங்கியிருக்கின்றனர். இவர்களுக்கு எதுவுமே செய்யவில்லை. இவர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டியவர்கள்.” ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இந்த வருடத்திற்குள் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிற்கு ஆளுநர் அறிவித்துள்ளார். இதுவரை மீள்குடியேறாத மக்களை மீள்குடியேற்றுவதற்கான வேலைத்திட்டம் மற்றும் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கு மின்சாரம் உள்ளிட்ட ஏனைய வசதிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஆளுநர் மாவட்ட செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார். “உரித்து” காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்கமையை மே மாத நிறைவுக்குள் வடக்கு மாகாணத்தில் 60,000 பேருக்கான காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் குழாய் கிணறுகள் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு ஆளுநர் அறிவித்துள்ளதாக வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கீழ் நீர் தொடர்பான ஆய்வுகள் உரியவாறு மேற்கொள்ளாது சில தனியார் நிறுவனங்கள் குழாய் கிணறுகளை அமைப்பதாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கூற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதை அடுத்து, இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஆளுநர், விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிந்து 15 வருடங்களாகியும் யாழ்ப்பாணத்தில் 1,500 குடும்பங்கள் அகதி வாழ்வு! | Virakesari.lk
  12. Published:Today at 6 AMUpdated:Today at 6 AM மன்சூர் அலிகான் - செல்வப் பெருந்தகை வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி சார்பாகப் போட்டியிடும் அதன் நிறுவனர் மன்சூர் அலிகான், காங்கிரஸில் இணையப்போவதாக அறிவித்திருக்கிறார். முன்னதாக, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை மன்சூர் அலிகான் இன்று நேரில் சந்தித்தார். மன்சூர் அலிகான் - செல்வப்பெருந்தகை அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், ``தாய் கழகத்தில் இணைவதற்காகக் கடந்த ஆண்டு நவம்பரிலேயே கடிதம் கொடுத்திருந்தேன். 15 ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடனான கருத்து வேறுபாடு காரணமாக விலகிவிட்டேன். பின்னர் மீண்டும் இணைய கடிதம் கொடுத்திருந்தேன். ஆனால், அது யாரிடமும் சேரவில்லை என்று நினைக்கிறேன். அதனால்தான், இடையில் கட்சி ஆரம்பித்தேன். தற்போது, வேலூர் தொகுதியைத் தவிர எல்லா இடங்களிலும் இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறேன் என்று கூறிவந்தேன். அதோடு, சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி என்ற மகராசிக்கு பிரதமருக்கான முகராசி இருக்கு, அவர்தான் பிரதமராக வரவேண்டும் அல்லது ராகுல் காந்தி வரவேண்டும் என்று எனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தேன்'' என்று தெரிவித்தார். பிரதமர் மோடி மேலும், பிரதமரின் சமீபத்திய மத ரீதியிலான பேச்சு குறித்து பேசுகையில், ``முன்னாள் பிரதமர் மன்மோகன் 2006-ல் பேசியதைத் திரித்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார். மனிதராக இருப்பதற்கே தகுதியற்றவர். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை ஆளும் பிரதமர், வேலைவாய்ப்பை ஏற்படுத்தாமல் நாட்டு மக்களை யாசகர்களாக்கிவிட்டு, இன்றைக்கு இவரைக் கொலைசெய்ய வெளிநாட்டு சதி நடப்பதாக இவரே கூறுகிறார். இந்த மாதிரி எதையாவது பேசி குழப்பத்தை ஏற்படுத்துகிறார். முதலில் அவரை சிறைக்கு அனுப்புங்கள். இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும்" என்று கூறினார். Mansoor AliKhan: `தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு | actor and politician Mansoor Ali Khan announced he will join Congress (vikatan.com)
  13. இலங்கை இராணுவத்தினர் உக்ரைன் - ரஷ்யா யுத்தகளத்தில் மோதிக்கொள்கிறார்கள் -தயாசிறி ஜயசேகர (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக போராடிய இலங்கை இராணுவத்தினர் இன்று உக்ரைன் மற்றும் ரஷ்யா இராணுவத்தில் சேர்ந்து மோதிக் கொள்கிறார்கள். இராணுவ முகாம் உதவியாளர்களாக இலங்கையர்கள் அழைக்கப்பட்டு பலவந்தமான முறையில் யுத்த களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற அமர்வின் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இலங்கை இராணுவ சேவையில் இருந்து ஓய்வுப் பெற்ற இராணுவத்தினர் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இராணுவ முகாம் உதவியாளர் சேவைக்கு அழைத்து பின்னர் பலவந்தமான முறையில் யுத்த களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அண்மையில் குசந்த குணதிலக என்ற ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரி உட்பட இருவர் பலவந்தமான முறையில் யுத்த தாங்கிக்குள் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்.இவ்வாறான நிலையில் இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளார்.குசந்த குணதிலக என்பவர் காணாமல் போயுள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்ய இராணுவ சேவையில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு பாரிய மோசடிகள் முன்னெடுக்கப்படுகிறது.ஒரு நபரிடமிருந்து தலா 18 இலட்சம் ரூபா பெற்றுக்கொள்ளப்படுகிறது. சமூக வலைத்தளங்கள் ஊடாகவே தொழில் வாய்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விடுதலை புலிகள் அமைப்பை இல்லாதொழித்த எமது இராணுவத்தினர் இன்று ரஷ்யா - உக்ரைன் யுத்த களத்தில் மோதிக் கொள்கிறார்கள்.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். ஆகவே இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார். இதன்போது எழுந்து பதிலளித்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முக்கியமானதொரு விடயத்தை முன்வைத்துள்ளார். இலங்கை இராணுவத்தினர் இலங்கையர்கள் உக்ரைன் மற்றும் ரஸ்யா இராணுவத்தில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக செல்கிறார்கள். இதன் ஊடாக மோசடிகள் இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது. இவ்விடயம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சு மட்டத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடி முழுமையான விபரத்தை அறிவிக்கிறேன் என்றார். இலங்கை இராணுவத்தினர் உக்ரைன் - ரஷ்யா யுத்தகளத்தில் மோதிக்கொள்கிறார்கள் -தயாசிறி ஜயசேகர | Virakesari.lk
  14. யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால் திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
  15. (இனியபாரதி) யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள் குற்றச் சாட்டுகின்றனர். அரச மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
  16. வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில் நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  17. `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார். வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  18. மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது. டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது. டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
  19. By KELUM BANDARA Colombo, April 18 (Daily Mirror) - Sri Lanka is still at a loss to thwart the efforts by a city council in Canada to construct what it called a Tamil genocide monument, and to counter the allegations by the Canadian politicians, an informed source said . Brampton city council in Canada has approved the final design for the Tamil Genocide Memorial, a monument the city promised three years ago, according to foreign media. The media said it is a 4.8-metre tall stainless steel monument built in Chinguacousy Park in the Bramalea area to commemorate the lives lost in the Sri Lankan civil war — what many people in the Tamil community call a genocide. Canada's Parliament unanimously voted to recognize May 18 as Tamil Genocide Remembrance Day in 2022. A well placed diplomatic source said that Sri Lanka remains on high alert as Canadian leaders may make genocide allegations next month when the country marks the war victory. Last year, Canadian Prime Minister Justin Trudeau’s genocide accusations sparked a diplomatic dispute between the two nations. Sri Lanka responded with protests by summoning the Canadian envoy. A well-placed diplomatic source informed Daily Mirror yesterday that the Sri Lankan government is keen to ascertain whether such allegations will be repeated this time, despite previous protests by Sri Lanka. “Canadian leaders have a history of making such allegations, even though the Canadian federal government has concluded that the events in Sri Lanka during the war do not amount to genocide,” the official said. However, the official said Sri Lanka had been unable to thwart the efforts by the Brampton city council to construct the monument. The Canadian Federal government which rejected genocide allegations, however, has no jurisdiction over the city council making it difficult for Sri Lanka to stop the move. SL on alert on possible genocide allegations by Canada - Top Story | Daily Mirror
  20. மாதவன். யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் தொடக்கம் பண்ணை வரையான பகுதியை தூய்மையான சுற்றுலா வலையமாக்கும் கலந்துரையாடல் யாழிலுள் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் போது கோடீஸ்வரன் றுசாங்கன் கருத்து தெரிவிக்கையில்; யாழ்ப்பாண மாநகரத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஏற்கனவே பல திட்டங்கள் வகுக்கப்பட்ட நிலையில் தற்போது அவை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதன் முன்னேற்பாடாக உள்ளூர் சுற்றுலா ஊக்குவிப்பாளர்களுடன் இணைந்து மாநகரத்தின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கும் வினை திறனாக செயல்படுத்துவதற்குமான கலந்துரையாடலாக பார்க்கிறேன். நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் தேவைப்பாடு அதிகரித்துள்ள நிலையில் யாழ். மாநகரமும் அத்தகைய செயல்பாட்டை முன்னெடுத்து வருகிறது. கடந்த 30ஆம் திகதி பூஜ்ஜிய கழிவு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் யாழ். ஆரோக்கிய பவனி இடம்பெற்றது. யாழ்ப்பாண மாநகரத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பொது நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை தூய்மையாக்கும் சுற்றுலா அபிவிருத்தியில் ஈடுபடுத்தி அதன் மூலம் மாநகரத்தின் இயங்கு நிலை செலவினங்களை பெறும் முயற்சி தயாரிக்கப்பட்டு வருகிறது . ஆகவே யாழ்ப்பாண மாநகரத்தை தூய்மை ஆரோக்கியமான சுற்றுலா நகராக நகர் உருவாக்குவதற்கு யாழ். மாநகரசபை தனது முழுமையான பங்களிப்பை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் கவிதா சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கோடீஸ்வரன் றுசாங்கன் மற்றும் தனியார் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (ச) யாழ். நகரின் சுற்றுலாத்துறை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்.! (newuthayan.com)
  21. Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:56 AM 7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14 வாரங்களில் கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம் 718,315 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 82,531 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சி வேகம் சீராக இருப்பதை காட்டுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு நாளாந்த சுற்றுலா பயணிகளின் வருகை 3000 ஆக குறைந்து இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாத்தில் 5,502 ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 168,539 ற்கும் 182,724 ற்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் வருகையை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய நாளாந்தம் சராசரியாக 5,617 முதல் 6,090 வரை சுற்றுலாப் பயணிகள் வருகை தரவேண்டும். தற்போதைய வருகையின் வேகம் இலங்கை மாதத்திற்கான வருகை இலக்கின் கீழ் எல்லையை எட்டக்கூடும் என்பதைக் காட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதிவு செய்யப்பட்ட 105,498 சுற்றுலா பயணிகளின் வருகையை நாடு விஞ்சும். 2018 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணகளின் வருகையை நாடு அடைய மேம்பட்ட வேகம் தேவை. ஏப்ரல் மாத்தில் 17 சதவீதமான சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். 11 சதவீதமான சுற்றுலா பயணிகள் பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) தளர்த்தியுள்ளமையினால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. 10 சதவீதமான சுற்றுலா பயணிகள் ரஷ்காவிலிருந்து வருகை தந்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தரவரிசையில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளன. 14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை | Virakesari.lk
  22. Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 03:43 PM கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அத்தோடு, 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணமும் மாரடைப்பு என்று சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதுமட்டுமன்றி, மாரடைப்பு ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், உடல் உறுப்புகளின் செயற்பாடுகள் பற்றிய கவனமின்மை, புகையிலை , போதைப்பொருள் பாவனை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களினால் மாரடைப்பு ஏற்படுவதாகவும் சுகாதாரத் துறை திணைக்களம் சுட்டிகாட்டியுள்ளது. இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம் மாரடைப்பு! | Virakesari.lk
  23. Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:21 PM ( எம்.நியூட்டன்) யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவு வேளை சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் இது தொடர்பில் மக்களால் முறையிடப்பட்ட இடங்களை பார்வையிட்டபோது அங்கு 20 முதல் 25 அடிவரை அகழப்பட்டு இருக்கிறது. அவ்வாறு அகழப்பட்ட சுண்ணகற்கள் பிறிதொரு இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்த பின்னர் நள்ளிரவு வேளை திருகோணமலைக்கு கொண்டுசெல்லப்படுகிறது. இந்த செயற்பாட்டிற்கு யார் அனுமதி வழங்கியது? கற்களை அகழ்வதற்கு எந்த திணைக்களம் பொறுப்பு கூறுவது இராணுவம், பொலிஸாரின் அனுமதியுடன் இது நடைபொறுகிறதா? யார் தான் பொறுப்பு கூறுவது? 12,14 கன்ரர், டிப்பர் வாகனங்களில் கற்களை கொண்டு செல்கிறார்கள். நள்ளிரவில் இந்த வேலைகளை செய்வதால் இரவு கடமையில் நிற்கும் பொலிஸார் இராணுவத்தினர் இதனை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கிறார்களா? ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் இணைத்தலைவர்களில் ஒருவராகிருக்கிறார். அமைச்சரும் இணைத்தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். எனவே இந்த விடயத்தில் யாரால் இந்த செயற்பாடு நடைபெறுகிறது. இதனை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் பொலிஸார் இராணுவத்தினரிடம் இவை தொடர்பில் நள்ளிரவு வேளை கடமையில் இருக்கின்றபோது வீதியில் செல்லும் கனரக வாகனம், டிப்பர் வாகனங்களை சேதனைக்குட்படுத்தி உரிய அனுமதிகளை சோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கடத்தப்படுகிறதா ? சிறிதரன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி | Virakesari.lk
  24. Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:29 PM யாழ்ப்பாணத்தில் குழாய்க்கிணறுகளைத் தோன்றுவது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு முடிவெடுப்பது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோரின் இணைத்தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதன்போது யாழ்ப்பாணத்தில் அனுமதியற்ற முறையில் அதிகளவான குழாய்க்கிணறுகள் அடிக்கப்பட்டு வருவதாகவும் , அதனால் நிலத்தடி நீர் அற்று போகும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது அதனை தொடர்ந்து கூட்டத்தில் வாத பிரதிவாதங்கள் எழுந்தன. அதனை அடுத்து குழாய்க்கிணறு அடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு ,அதன் அடிப்படையில் அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி அவற்றை முற்றாக கட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை | Virakesari.lk
  25. Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:27 PM வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கல், மீள் குடியேற்றம், புதிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில், இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விசேட கூட்டம் நடத்தப்பட வேண்டும். அத்துடன் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் . இதேவேளை, வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. "உரித்து" காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமையை மே மாத நிறைவுக்குள் வடக்கு மாகாணத்தில் 60 ஆயிரம் பேருக்கான காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார். மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும் - வடக்கு ஆளுநர் | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.