Everything posted by பிழம்பு
-
யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் : யாழ் கடற்தொழிலாளர் அறிவிப்பு
இந்திய துணைத் தூதரகம் முன் மீனவர்கள் போராட்டம்!!! (இனியபாரதி) இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி இந்திய துணைத் தூதரகம் முன்பாக மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்திய அரசே எமது கடல் வளத்தை சூறையாடாதே: எம்மையும் வாழவிடுங்கள் எனக் கோரி யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமாசங்களின் சம்மேளன ஏற்பாட்டில் இன்று (18) காலை இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் டொன் பொஸ்கோ பாடசாலைக்கு அண்மையிலுள்ள மருதடிச் சந்தியில் இருந்து இந்திய துணைத்தூதரகம் வரை பேரணியாகச் சென்று தூதரகம் முன்பாக கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது இலங்கை கடற்படையே நிறுத்து நிறுத்து; அத்துமீறலை தடுத்து நிறுத்து, கடற்தொழில் அமைச்சர் கண்ணை திறந்துபார், இந்திய அரசே எம்மையும் வாழ விடு, சிறிலங்கா காவல்துறையே எங்களை தடுக்காதே உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனைத்தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை மீனவர் சங்கப் பிரதிநிதிகள் துணைத்தூதரகத்தில் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஏ) இந்திய துணைத் தூதரகம் முன் மீனவர்கள் போராட்டம்!!! (newuthayan.com)
-
சென்னை விமான நிலையத்துக்கு 2 வாரத்தில் 5-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு 2 வாரத்தில் 5-வது முறையாக இன்றும் (திங்கட்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில் இமெயிலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, வெடிகுண்டுகள் கண்டறியும் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டுகளை கண்டறியும் குழுவினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான நிலையம் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. வாகனங்கள் நிறுத்தும் இடம், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம், விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் இடங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களில் சந்தேகப்பட்ட வாகனங்களை வெடிகுண்டு நிபுணர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். இது தொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “சென்னை விமான நிலையத்துக்கு கடந்த இரண்டு வாரங்களாக வெடிகுண்டு மிரட்டல் தொடர்ச்சியாக வருகிறது. இதுவரை தொலைபேசி மற்றும் இமெயில் மூலமாக 5 முறை மிரட்டல் வந்துள்ளன. வெடிகுண்டு மிரட்டல் புரளியாக இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுகிறது. இதனால் விமான சேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கி வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சமூக விரோதிகளை கண்டுபிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என்றனர். சென்னை விமான நிலையத்துக்கு 2 வாரத்தில் 5-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் | Bomb threat to Chennai airport - hindutamil.in
-
யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் : யாழ் கடற்தொழிலாளர் அறிவிப்பு
இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்த கோரி நாளை செவ்வாய்க்கிழமை (18) யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ள யாழ்ப்பாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், எமக்கு விரைவில் தீர்வு கிடைக்காவிடில் பாராளுமன்றத்தையும் முற்றுகையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் . யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (17) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தனர் . கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் சிறீ கந்தவேல் புனித பிரகாஸ் கருத்து தெரிவிக்கையில், இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாடு எமது கடற்பகுதிகளில் அரங்கேறிவருகிறது. இதனால் எமது கடற்றொழிலாளர்கள் பெருமளவு பாதிபாபை எதிர்கொள்கின்றனர். நாளைசெவ்வாய்க கிழமை காலை 10 மணிக்கு இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். ஜனாதிபதி, கடற்றொழில் அமைச்சர், துறைசார்ந்த திணைக்களங்கள் விரைந்து செயற்பட்டு இந்திய இழுவை மடி படகுகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் பாராளுமன்றத்தை முற்றுகையிட எமது அமைப்புக்கள் திட்டமிட்டுள்ளன. யாழ் மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் சம்மேளன தலைவர் செல்லத்துரை நற்குணம் கருத்து தெரிவிக்கையில், இந்திய இழுவைமடி கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் எமது மக்கள் வீதிக்கு வந்து பட்டினிச்சாவை எதிர்நோக்க வேண்டி வரும். சிறுவர் தொடங்கி பெரியவர் இதன்மூலம் பாதிப்புக்களை எதிர்கொள்வர். இலங்கை அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மனித நேயத்துடன் இந்திய மற்றும் தமிழக அரசாங்கம் செயற்படவேண்டும். இந்தியாவின் மிலேச்சத்தனமாகவே இதனை பார்க்கிறோம். இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து கடற்றொழிலாளர்களையும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம் - என்றார். யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் : யாழ் கடற்தொழிலாளர் அறிவிப்பு | Virakesari.lk
-
யாழில் கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
வாய்ப்புக்களைச் சாதகமாகப் பயன்படுத்தி எமது மக்களை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட கடலட்டைப் பண்ணையாளர்களுடன் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் சீனர்கள் கடலட்டை பண்ணை தொழிலில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அண்மையில் தெரிவித்த கருத்தைக் கோடிட்டுக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது கடலட்டை தொடர்பான தொழிலில் ஈடுபடுவதற்கு யாழ் மாவட்டத்தில் சீனர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. நல்லாட்சியில் கடலட்டை குஞ்சு உற்பத்திக்காக அனுமதிக்கப்பட்ட சீன நிறுவனமும், தற்போதை நல்லாட்சி காலத்தில் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், நூறு வீதம் யாழ் மாவட்டத்தினை சேர்ந்தவர்களே யாழ்ப்பாணத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பான பொருளாதார நன்மைகளை வழங்கிவரும் கடலட்டை உற்பத்திகளை மேலும் விரிவாக்கம் செய்து முன்கொண்டு செல்வதற்கு, பண்ணையாளர்கள் நடைமுறை ரீதியாக உணர்ந்து கொண்ட சவால்களுக்கு தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும். பொய்களுக்கு மக்கள் இடங்கொடுக்காது வெளிப்படையான உண்மைகளை இனங்கண்டு எதிர்காலத்தை வெற்றிகொள்ள வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு அவசியமானதுமாகும். எமது மக்களே எமது பிரதேசங்களின் வளங்களைப் பயன்படுத்தி உச்ச பயன்களைப் பெறவேண்டும். அதுவே எனது எதிர்பார்ப்பாகும் என மேலும் தெரிவித்தார். குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்ட கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் சுதாகரன், நெக்டா நிறுவனத்தின் வடக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் நிருபராஜ், வேலணை பிரதேச செயலர் சிவகரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். யாழில் கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா | Virakesari.lk
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
சில தினங்களிற்கு முன் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த LGBTQIA வினரின் சுயமரியாதை நடைபவனி
-
தமிழக பாஜகவில் மோதல்; மேடையிலேயே கண்டித்த அமித்ஷா - தமிழிசை அதிருப்தி
தமிழிசை செளந்தரராஜன் விளக்கம் Today at 01:01 PM IST ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற விழாவில், தமிழிசை சௌந்தரராஜனுக்கும் அமித் ஷாவுக்கும் இடையிலான உரையாடல் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். Today at 08:10 AM IST Tamil News Live Today: குவைத் தீ விபத்து: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் உயிரிழந்ததாக தகவல்| Tamil News Live Today updates dated on 13 06 2024 - Vikatan
-
Pradeep k Vijayan: `பூட்டிய வீட்டுக்குள் சடலமாகக் கிடந்த நடிகர்!' - அதிர்ச்சியில் திரையுலகம்
மரணத்திற்குரிய காரணம் குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. காவல்துறையினர் தற்போது விசாரித்து வருகின்றனர். Published:Today at 5 AMUpdated:Today at 5 AM Pradeep k Vijayan 'தெகிடி' உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரதீப் கே.விஜயன் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வில்லன், நகைச்சுவை நடிகர் என தனது நடிப்பால் ரசிகர் மத்தியில் கவனம் பெற்றவர் பிரதீப் கே.விஜயன். 'தெகிடி' படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்', 'மேயாத மான்', 'என்னோடு விளையாடு', 'மீசைய முறுக்கு', 'ஒரு நாள் கூத்து', 'திருட்டு பயலே 2', 'இரும்புத்திரை', 'ஆடை', 'கென்னடி கிளப்', உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். Pradeep k Vijayan கடைசியாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான 'ருத்ரன்' படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது பிரதீப் கே.விஜயன் உயிரிழந்திருக்கிறார். இரண்டு நாட்களாக அவரது வீடு பூட்டியிருந்திருக்கிறது. பிரதீப் வெளியே வரவில்லை. அவரது நண்பர்கள் அவரை போன் மூலம் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இறுதியாக அவரது நண்பர்கள் காவல்துறையை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கின்றனர். அப்போது அவர் இறந்தநிலையில் கிடந்துள்ளார். Pradeep k Vijayan மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் மரணத்திற்குரிய காரணம் குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. காவல்துறையினர் தற்போது விசாரித்து வருகின்றனர். Pradeep k Vijayan: `பூட்டிய வீட்டுக்குள் சடலமாகக் கிடந்த நடிகர்!' - அதிர்ச்சியில் திரையுலகம் |actor pradeep k vijayan passed away - Vikatan
-
மானிப்பாய் மகளிர் சதுரங்கத்தில் சாதனை
(ஆதவன்) வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைக்ளுக்கு இடையிலான 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சதுரங்கப் போட்டியில் முதலாம் இடம்பெற்று மானிப்பாய் மகளிர் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தைத் தனதாக்கியுள்ளது. இரண்டாமிடத்தை மகாஜனக் கல்லூரியும், மூன்றாம் இடத்தை ஸ்கந்தவரோதயக் கல்லூரியும், நான்காம் இடத்தை இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயமும் பெற்றுக் கொண்டன. (ச) மானிப்பாய் மகளிர் சதுரங்கத்தில் சாதனை (newuthayan.com)
-
யாழில் ஊடகவியலாளாின் வீட்டின் மீது தாக்குதல் : சொத்துக்களுக்கும் சேதம்!
ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் - தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் (மாதவன்) ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டுக்கும் உடமைகளுக்கும் சேதமேற்படும் வகையில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது இது கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளத் தைரியமற்ற கோழைகளின் அற்பத்தனமான சட்டவிரோத செயற்பாடாகும். இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைக் கைதுசெய்வதற்கு பொலிசாஸார் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கோருவதோடு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு எமது ஆதரவைத் தெரிவிக்கின்றோம் என்றுள்ளது. (ஞ) ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் - தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் (newuthayan.com)
-
யாழ்ப்பாணத்தில் பால்நிலை சார் வன்முறை; முறைப்பாட்டு முறைமைகள் பயிற்சிப்பட்டறை
பால்நிலை சார் வன்முறை; முறைப்பாட்டு முறைமைகள் (அமுதரசி) பால் மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான முறைப்பாட்டு முறைமைகள் , அடையாளப்படுத்தப்பட்ட சேவை வழங்குநர் மற்றும் மாவட்ட பரிந்துரை வலையமைப்பு எனும் தலைப்பில் ஒரு நாள் செல்லுபடியாக்கல் பயிற்சிப்பட்டறை , இன்று (13) யாழ்ப்பாண மாவட்ட செயலக, மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில், இலங்கையின் வடக்கு மாகாணத்தில், கிறிசலிஸ் நிறுவனம்ந டைமுறைப்படுத்தும் பெண்கள் தலைமையிலான ஒன்றிணைந்த மன்றங்களினூடாக அமைதி மற்றும் உள்ளடங்கலான தாங்குதிறன் மிக்க சமூகங்களை மேம்படுத்தல் கருத்திட்டத்தின் ஓர் அம்சமாக முன்னெடுக்கப்பட்ட மேற்படி பயிற்சிப்பட்டறையில் மாவட்ட செயலர், உதவி மாவட்ட செயலர், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவி செயலாளர், மாவட்ட மகளிர் அபிவிருத்தி அலுவலர், மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர், மனித உரிமை ஆணைகுழுவின் பிரதிநிதி, உட்பட பல துறைசார் அரச அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கிறிசலிஸ் நிறுவன அலுவலர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவங்களின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், யாழ் மாவட்ட குடிசார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், மனித உரிமை பாதுகாவலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனத் தெரிவு செய்யப்பட்ட 35 பேர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. (ஏ) பால்நிலை சார் வன்முறை; முறைப்பாட்டு முறைமைகள் (newuthayan.com)
-
சுவிற்சர்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட இலங்கை ஆதிவாசிகளின் மனித எச்சங்கள், கலைப்பொருட்கள்
Published By: DIGITAL DESK 3 13 JUN, 2024 | 02:46 PM சுவிற்சர்லாந்தில் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆதிவாசிகளின் 12 எலும்புக்கூடுகள், 30 மண்டை ஓடுகள் மற்றும் 400 கிலோகிராம் எடையுள்ள கலைப்பொருட்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த வருடம் நெதர்லாந்தில் இருந்து கலைப்பொருட்கள் நாட்டிற்கு வெற்றிகரமாக மீண்டும் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, சுவிற்சர்லாந்தில் இருந்து இந்த மனித எச்சங்கள் மற்றும் கலைப்பொருட்களை மீண்டும் கொண்டு வருவதற்கு கவனம் செலுத்தப்பட்டதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார். சுவிற்சர்லாந்தின் பேசல் அருங்காட்சியகத்தில் இருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பூர்வீக மனித எச்சங்கள் மற்றும் கலைப்பொருட்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (12) கொழும்பு தாமரைத் தடாகத்தில் இடம்பெற்றது. இதில் ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னில எத்தோ கலந்துகொண்டார். கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் தம்பன வாரிக மஹகெதரவின் கோரிக்கைக்கு அமைய சுவிஸ் அரசாங்கத்துடன் இணைந்து முறையான ஒப்பந்தத்தின் மூலம் இந்த பொருட்கள் மீண்டும் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மனித எச்சங்கள் மற்றும் கலைப்பொருட்கள் பற்றிய தகவல்களை வழங்கிய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒஷான் வெடகே சுட்டிக்காட்டியுள்ளார். சுவிற்சர்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட இலங்கை ஆதிவாசிகளின் மனித எச்சங்கள், கலைப்பொருட்கள் | Virakesari.lk
-
கிளிநொச்சியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
13 JUN, 2024 | 03:39 PM கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியில் குளவிக் கொட்டுக்கிலக்கான 20 மாணவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிக காற்று வீசி வரும் நிலையில் இன்று வியாழக்கிழமை (13) குளவிக்கூடு கலைந்துள்ளது. இதனால் மாணவர்களை குளவிகள் தாக்கியுள்ளன. குளவிக் கொட்டுக்கிலக்கான மாணவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கிளிநொச்சியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி | Virakesari.lk
-
யாழில் தேசிய மக்கள் சக்தியினரால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் !
13 JUN, 2024 | 05:02 PM தேசிய மக்கள் சக்தியினரால் யாழ்ப்பாண நகர் பகுதியில் இன்று (13) வியாழக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நாட்டை கட்டி எழுப்புவது எவ்வாறு என மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா கருத்து தெரிவிக்கையில், ரணில் விக்கிரமசிங்க தான் யாழ்ப்பாண நூலகத்தை எரித்தார். அதன் காரணமாகத்தான் தமிழ் மக்கள் பாரதி திசையை நோக்கி தள்ளப்பட்டார்கள். ரணில் விக்ரமசிங்க வாக்கின் மீது இருந்த நம்பிக்கையை செயல் இழக்க வைத்தார். உணர்வு சார்ந்த அரசியலை முன்னெடுத்து, அரசியல் இருப்புகளை தக்க வைப்பது அரசியல்வாதிகளுக்கு இலகுவான ஒன்று. இம்முறை உணர்வு சார்ந்த அரசியல்களை தவிர்த்து அறிவு சார்ந்த அரசியலை செயல்படுத்துவது தமிழ் சிங்களமாகிய இரண்டு இனங்களுக்கும் தேவையான ஒன்று என குறிப்பிட்டுள்ளார். யாழில் தேசிய மக்கள் சக்தியினரால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் ! | Virakesari.lk
-
யாழ். அனலைதீவில் கடலுக்குச் சென்ற இருவரைக் காணவில்லை
தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை - உறவினர்களிடம் டக்ளஸ் தெரிவிப்பு 13 JUN, 2024 | 05:27 PM காலநிலை சீர்கேடு மற்றும் இயந்திரக் கோளாறு போன்றவை காரணமாக தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அனலைதீவு கடற்பரப்பில் இருந்து கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் கடற்றொழிலுக்கு சென்ற குறித்த இருவரும் கரை திரும்பாத காரணத்தினால் பதற்றம் ஏற்பட்டிருந்ததுடன், அனலைதீவு கடற்பரப்பெங்கும் கடற்படையினர் மற்றும் கடற்றொழிலாளர்களால் தீவிர தேடுதல் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், தேடப்பட்டுவந்த இருவரும் தமிழக கடற்பரப்பில் கரையொதுங்கிய தகவல் கிடைக்கப்பெற்றது. இந்நிலையில் குறித்த இருவரது குடுப்பத்தினர் இன்று வியாழக்கிழமை (13) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து இருவரையும் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், கடற்றொழில் அமைச்சரினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை - உறவினர்களிடம் டக்ளஸ் தெரிவிப்பு | Virakesari.lk
-
கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய திருச்சொரூப பவானி வைபவம்
13 JUN, 2024 | 07:53 PM கொழும்பு-13 கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய திருச்சொரூப பவானி வைபவம் வியாழக்கிழமை (13) மாலை அருட்தந்தை பற்றிக் பெரேய்ரா தலைமையில் நடைபெற்றது. பூஜையை அடுத்து ஊர்வலம் புறப்பட்டு செல்வதையும் நிகழ்வில் கலந்துகொண்டோரையும் காணலாம். (படப்பிடிப்பு எஸ். எம். சுரேந்திரன்) கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய திருச்சொரூப பவானி வைபவம் | Virakesari.lk
-
அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த 4 வருடங்களில் 2632 மில்லியன் ரூபா வருமானம் - அமைச்சர் டக்ளஸ்
13 JUN, 2024 | 05:36 PM அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு வருடங்களில் 2632 மில்லியன் ரூபா (8.52 மில். அமெரிக்க டொலர்) வருமானம் நாட்டுக்கு கிடைத்திருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கடற்றொழில் அமைச்சில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், அலங்கார மீன் வளர்ப்புத் துறையை அபிவிருத்தி செய்வதற்காக கடற்றொழில் அமைச்சினால் பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இலங்கை நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் தாய் மீன்கள் வழங்கப்படுகின்றன. பயிற்சி மற்றும் வர்த்தக பொருட்காட்சிகள் ஏற்பாடு செய்து அவர்களுக்கு சந்தை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப அறிவு வழங்கப்படுகிறது. மீன் உணவு விநியோகிக்கப்படுகிறது. மாணவர்கள் மத்தியில் அலங்கார மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதற்காக பாடசாலைகளில் அலங்கார மீன் வளர்ப்பு சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அபாயகர மீன்கள் இறக்குமதி செய்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்ட ரீதியாக அலங்கார மீன் வளர்ப்பு சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த 4 வருடங்களில் 2632 மில்லியன் ரூபா வருமானம் - அமைச்சர் டக்ளஸ் | Virakesari.lk
-
அம்பாறையில் பயங்கரம் ! மக்கள் குடியிருப்புகளுக்குள் முதலைகள் படையெடுக்கும் அபாயம் !
Published By: DIGITAL DESK 7 12 JUN, 2024 | 12:50 PM அம்பாறை மாவட்டத்தில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன. தற்போது ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் சுமார் 9,5, 4அடி நீளமுடைய முதலைகள் வெளியேறுவதாக மக்கள் தெரிவிக்கினறனர். மேலும் இம்மாவட்டத்தில் கிட்டங்கி, மாவடிப்பள்ளி, சின்ன முகத்துவாரம், கஞ்சிகுடிச்சா உள்ளிட்ட களப்புக்கள் போன்ற இடங்களிலும் முதலை அச்சறுத்தல் தொடர்ந்து வருகின்றன. மேற்படி பகுதிகளிலுள்ள வாவிகள், குளங்களிலும் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறன. மேலும், தற்போது வேளாண்மை செய்கை, அறுவடை ஆரம்பமாகி உள்ளதனால் வயல் நிலங்கள் கால்வாய்களை அண்டிய பகுதிகளில் புல் மேயும் எருமை மாடுகள் முதலைகளினால் இரைக்குள்ளாகின்றன. இப்பகுதியில் இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் கட்டாக்காலிகளாக இப்பகுதியில் திரியும் மாடுகளே இம்முதலைகளுக்கு இரையாகுவதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி, பகுதிகளில் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறதுடன் முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் அறிவுறுத்துதல்கள் எச்சரிக்கை பலகைகள் உரிய இடங்களில் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லையென மக்கள் கூறுகின்றனர். முதலை அபாயம் தெரியாமல் இப்பகுதியில் பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியம் உள்ளது. இதை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர். அம்பாறையில் பயங்கரம் ! மக்கள் குடியிருப்புகளுக்குள் முதலைகள் படையெடுக்கும் அபாயம் ! | Virakesari.lk
-
நாட்டில் கணினி அறிவு 39 சதவீதமாக உயர்வு
(இராஜதுரை ஹஷான்) நாட்டில் கணினி அறிவு 39 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. மேல் மாகாணம் உயர்வான மட்டத்திலும், கிழக்கு மாகாணம் குறைவான மட்டத்திலும் காணப்படுகிறது என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சாமலி கருணாரத்ன தெரிவித்தார். தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வயது மற்றும் தொழிற்றுறை முன்னேற்றம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கணினி அறிவு தொடர்பில் கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கமைய ஆண்களின் கணினி அறிவு 40.9 சதவீதமாகவும், பெண்களின் கணினி அறிவு 37.2 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. 15 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களின் கணினி அறிவு வீதம் 79.4 சதவீதமாக காணப்படுகிறது. அத்துடன், 5 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களின் டிஜிட்டல் அறிவு 63.5 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. ஆண்களின் டிஜிட்டல் அறிவு 65.9 சதவீதமாகவும், பெண்களின் டிஜிட்டல் அறிவு 61.3 சதவீதத்தாலும் உயர்வடைந்துள்ளன. இதற்கமைய 20 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களின் டிஜிட்டல் அறிவு 93.8 சதவீதமாக காணப்படுகிறது. எழுமாற்றாக 100 நபர்களில் 51 பேர் இணைய பாவனைகளில் ஈடுபட்டுள்ளதுடன்,19 பேர் மின்னஞ்சலை பயன்படுத்துபவர்களாக காணப்படுகின்றனர். தொழில்வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகள் மத்தியில் 20 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களின் கணினி அறிவு 82.7 சதவீதமாகவும், 25 முதல் 29 வயதுக்குட்டவர்களின் கணினி அறிவு 83.7 சதவீதமாகவும் காணப்படுகிறது. மாகாண மட்டத்திலான தரப்படுத்தலில் மேல் மாகாணம் 33.55 சதவீதமளவில் கணினி அறிவில் உயர்வான நிலையிலும், கிழக்கு மாகாணம் 8.6 சதவீதமளவில் குறைவான நிலையிலும் காணப்படுகிறது என்றார். நாட்டில் கணினி அறிவு 39 சதவீதமாக உயர்வு | Virakesari.lk
-
நினைவேந்தல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்குக் கையளிப்பு
12 JUN, 2024 | 05:06 PM இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. சிரேஷ்ட பேராசிரியர் ஜகத் வீரசிங்க, கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டி. சனாதனன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பர்ஸானா ஹனீபா, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் துஷாரி சூரியாராச்சி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானராச்சி ஆகியோர் உள்ளடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. 22-05-2023 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டது. 1983-2009 காலகட்டத்தில் இலங்கையில் நடந்த ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரங்கள் என்பவற்றினால் உயிரிழந்த பொதுமக்கள், ஆயுதப்படை உறுப்பினர்கள், பொலிஸார், முன்னாள் போராளிகள் உட்பட அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக நினைவிடமொன்றை அமைப்பது குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது. இதற்காக, நிபுணர் குழு கடந்த நாட்களில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் அமர்வுகளை நடத்தியதுடன், ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான நிபுணர்களுடன் ஆலோசனைகளையும் நடத்தியது. இந்த பொதுமக்கள் அமர்வுகள் அந்தந்த பகுதிகளில் பணியாற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தேசிய ஒருங்கிணைப்பு அதிகாரிகளினால் ஒருங்கிணைக்கப்பட்டன. பங்குபற்றிய மக்களுக்குத் தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்திற்கான தமது அபிலாஷைகள், யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. நினைவேந்தல் செய்வதற்கான மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று குழு வலியுறுத்தியதோடு பல்வேறு குழுக்களும் தனிநபர்களும் நினைவேந்தல் மற்றும் நல்லிணக்க நிகழ்வுகளை வெவ்வேறு வழிகளில் முன்னெடுப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. வளமான அறிவுக் கட்டமைப்பையே இது வெளிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டியுள்ள நிபுணர் குழு, நாட்டின் மோதல்கள் தொடர்பான கடந்த காலத்தைப் பற்றி அறிக்கையிடவோ, கருத்துத் தெரிவிக்கவோ அல்லது வேறுவிதமாகக் கையாளும் முயற்சியின் போது இந்தப் பங்களிப்புகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த சந்திப்புகளின் போது முன்வைக்கப்பட்ட பரந்த அளவிலான யோசனைகளைப் பரிசீலித்த பின்னர் இந்தக் குழு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இலங்கையின் மோதல்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுடன் உருவான கலை மற்றும் கலாச்சார வெளிப்பாடுகளைப் பாதுகாத்து வைக்கும் குறியீட்டு ரீதியிலான கட்டடமொன்றை அமைக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காகக் கூட்டு அர்ப்பணிப்பை உறுதி செய்வதும் அனைத்து இலங்கையர்களிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும். குழுவின் அறிக்கையைக் கையளித்த போது ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் உடன் இருந்தார். நினைவேந்தல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்குக் கையளிப்பு | Virakesari.lk
-
சித்தார்த்தன் – அநுரகுமார விசேட சந்திப்பு
12 JUN, 2024 | 05:24 PM எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்கவுக்கும் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (11) சித்தார்த்தன் எம்.பி.,யின் கந்தரோடை இல்லத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேசிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினரும் யாழ். மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் கௌதமன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள். ஒன்றரை மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இச்சந்திப்பின்போது சித்தார்த்தன் கூறுகையில், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக அதாவது அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக தங்களது கட்சி எடுத்துள்ள நிலைப்பாடு என்ன என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. ஆகவே, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டினை தமிழ் மக்களுக்கு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். இணைந்த வடக்கு, கிழக்கை நீதிமன்றத்தினூடாக தனித்தனி மாகாணங்களாக பிரிப்பதற்கு பிரதான பங்காளியாக ஜே.வி.பி கட்சி செயற்பட்ட விடயத்தில் எம் மக்கள் மத்தியில் இன்று வரை அதிருப்தி இருப்பதால் இவ்விடயத்தில் தேசிய மக்கள் சக்தியின் உறுதியான நிலைப்பாட்டினை நீங்கள் வெளிப்படுத்தும் பட்சத்தில், உங்கள் கட்சி சம்பந்தமான தமிழ் மக்களது மனநிலையில் மாற்றம் ஏற்படலாம் என தெளிவுபடுத்தினார். அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நியமிப்பதற்கு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கின்ற ஐந்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளோம். சமூக மட்ட அமைப்புக்களும் அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றன. தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக நாங்கள் முழுமையாக அவருடனேயே செயற்படுவோம் என்பதையும் சித்தார்த்தன் தெரிவித்தார். தொடர்ந்து, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் காணப்படும் பிந்திய நிலைமைகள் பற்றி அங்கு கலந்துரையாடப்பட்டதோடு, எதிர்காலத்திலும் தொடர்ந்து சந்திப்புக்களை மேற்கொள்ய இரு தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. சித்தார்த்தன் – அநுரகுமார விசேட சந்திப்பு | Virakesari.lk
-
யாழ். கல்வி வலயங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களுக்கு முன்பாக 12ஆம் திகதி புதன்கிழமை மதியம் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என வலயக் கல்வி அலுவலகங்களுக்கு முன்பாக பதாகைகளைத் தாங்கியவாறு அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குமாறும், அதிபர் ஆசிரியர்களின் பதவி உயர்வை நடைமுறைப்படுத்து, அதிபர் ஆசிரியர்களில் கொள்ளை அடிக்கும் பணத்தை வழங்கு, மாணவர்களின் போசாக்கை உறுதிப்படுத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைத் தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் நாடாளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ். கல்வி வலயங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் | Virakesari.lk
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
10 JUN, 2024 | 12:49 PM தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு நாம் இறங்கி செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு தான் வேண்டும் என்பதனை இனியும் நிறுவ தேவையில்லை. கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுவி விட்டோம். திரும்ப திரும்ப அதனை நிறுவ தேவையில்லை. பொது வேட்பாளர் என்பது விஷ பரீட்சை என சொல்வதனை விட உதவாத விஷ பரீட்சை என்று கூட சொல்ல முடியாது. இது தமிழ் மக்களின் இருப்பை இல்லாது செய்யும் நிகழ்வு. இதற்கு தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களாக நாங்கள் செல்ல கூடாது. அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள் முன்னெடுக்க வேண்டிய விடயம். சிவில் சமூகம் ஆலோசனைகளை மட்டும் வழங்கலாம். அவர்களின் ஆலோசனைகளை வரவேற்போம். தேர்தல் என்பது அரசியல் நிகழ்ச்சி. அந்த அரசியலில் மக்களை வழி நடத்த சிவில் சமூகத்தை மக்கள் தெரிவு செய்து அனுப்பவில்லை. மக்கள் எமக்கே ஆணை தந்துள்ளார்கள். நாங்களே மக்களை அரசியல் ரீதியாக வழி நடத்த கூடியவர்கள். நாங்கள் எங்கள் பொறுப்பை விட்டு விட்டு மக்களை உதாசீனப்படுத்த முடியாது. இதையெல்லாம் தாண்டி நாங்கள் நிறுத்தி தான் ஆவோம் என யாராவது ஒற்றைக்காலில் நின்றால் அவர்களுக்கு எதிராக மக்களை விழிப்படைய செய்ய வேண்டியது எங்களுடைய பொறுப்பு. அதற்கு எதிராக நாங்கள் செயற்பட்டால் எங்களுக்கு உடனடியாக துரோகி பட்டம் கட்டுவார்கள். அதற்காக நங்கள் ஒழிந்து ஓட போவதில்லை. துரோகி பட்டத்திற்கு இன்று பெறுமதியே இல்லாமல் போய்விட்டது. ஆனால் என்ன தான் செய்தாலும் எங்கள் மக்களின் அடிப்படை உரித்தை விட்டுக்கொடுக்கவோ , விலை பேசவோ நாம் அனுமதிக்க போவதில்லை. தமிழ் வேட்பாளர் என ஒருவரை அடையாளப்படுத்தி முற்படுத்தினால் அதற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் நாங்கள் . ஏனென்றால் அவர் தேர்தலில் படு தோல்வி அடையும் போது, இது எங்களின் அரசியல் நிலைப்பாடு அல்ல. இது யாரோ செய்த கோமாளி கூத்து என நாங்கள் சொல்ல கூடியதாக இருக்க வேண்டும். எனவே எமது கட்சியை சார்ந்தவர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். என்னையும் துரோகி என்று சொல்லி விடுவார்களோ என ஒழிந்து ஓட வேண்டாம். பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு நங்கள் செயற்பட வேண்டும் என தெரிவித்தார். தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் ! | Virakesari.lk
-
தமிழகம் உள்ளிட்ட ஆறு இந்திய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு
10 JUN, 2024 | 04:22 PM தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி எனும் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய திமுகவைச் சேர்ந்த என். புகழேந்தி உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. காலியான அந்தத் தொகுதிக்கு எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் திகதியன்று இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் பீகார்(1), மேற்கு வங்காளம் (4), மத்திய பிரதேசம் (1) ,உத்தரகாண்ட்( 2), பஞ்சாப் (1), இமாச்சல் பிரதேசம்(3) ஆகிய மாநிலங்களில் காலியாக இருக்கும் மொத்தம் பதிமூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஜூலை 10 ஆம் திகதியன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், பதிவான வாக்குகள் ஜூலை 13-ஆம் திகதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஜூன் 14-ஆம் திகதியன்று தொடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே விக்கிரவாண்டி தொகுதிக்கான சட்டப்பேரவை இடைத் தேர்தலில் திமுகவிற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும் என அக்கட்சியின் மாநில தலைவரான செல்வ பெருந்தகை அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் உள்ளிட்ட ஆறு இந்திய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு | Virakesari.lk
-
இலங்கை தமிழர்களுக்காக தனி நாடு அமைக்க வேண்டுமென விரைவில் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளேன்-மதுரை ஆதீனம்!
10 JUN, 2024 | 04:58 PM மக்களவைத்தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் தான் அதிமுக தோல்வி தழுவியதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். மதுரையில் மதுரை 293 ஆவது ஆதீனமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “இந்தியாவின் 3 ஆம் முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், அமைச்சர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களே கொன்று குவிக்க காரணமானவர்களும் வெற்றி பெற்று விட்டார்களே என மன வருத்தம் உள்ளது. இந்த காரணத்திற்காகவே காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆள முடியவில்லை, வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டு கோரிக்கைகளை முன் வைக்கிறேன். இந்திரா காந்தி தாரை வார்த்து கொடுத்த கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். கச்சத்தீவு மீட்டெடுத்தால் தமிழகத்தின் மீன்வளம் அதிகரிக்கும். ஆகவே கச்சத்தீவு மீட்டு தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களே பாதுகாக்க பிரதமர் மோடி தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார். கச்சத்தீவு மீட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். 60 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் குறித்து யாரும் பேசவில்லை. பாஜகவின் கூட்டணி ஆட்சி சரியாக வரும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் மக்கள் முறையாக வாக்களித்து அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். மக்களின் முடிவு சரியானதாக உள்ளது. இருந்தபோதிலும் இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்காக வாக்கு அளித்துஇருக்கிறார்களே அதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது. இலங்கை தமிழர்கள் விவகாரம்மற்றும் கச்சத்தீவு விவகாரம் என இரண்டிற்காக நான் பிரதமர் மோடியை ஆதரிக்கிறேன். பிரதமர் மோடி எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். பாஜக குறைந்த தொகுதிகளில்வெற்றி பெற்றதால் அக்கட்சியை தோல்வி அடைந்த கட்சி என விமர்சனம் செய்கிறார்கள்.பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருந்தால் பட்டனை அமுக்கியவுடன்தாமரைக்கு ஓட்டு விழுகிறது என கூறியிருப்பார்கள். ஜனநாயக நாட்டில் தோல்வி வெற்றி என்பது மக்கள் கொடுக்கக்கூடிய தீர்ப்பாகும்.60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்களே 90 தொகுதிகளில் தான் வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் ஆட்சி கால கட்டத்தில் எத்தனை முறை ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சி புரிந்த காலகட்டத்தில் யாருடைய ஆட்சிகளையும் கலைக்கவில்லை. இலங்கை தமிழர்களுக்காக தனி நாடு அமைக்க வேண்டுமென விரைவில் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளேன். பிரதமர் மோடி சிவபெருமான் மீது பக்தியாக இருக்கிறார். தியானம் செய்கிறார், விபூதி பூசி கொள்கிறார். காசி விசுவநாதர் . பிரதமர் எல்லா நாடுகளுக்கும் செல்கிறார் எல்லா மதங்களையும் ஆதரிக்கிறார். ஆகவே அவரை நான் ஆதரிக்கிறேன், பாஜகவிற்காக நான் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டதில்லை. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் அதிமுக தோல்வி தழுவியுள்ளது. அதிமுக கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை. இந்த தேர்தலில் பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தமிழகத்தில் நல்ல கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நான் ஆதரவு கொடுப்பேன். இலங்கைக்கு நான் நேரில் சென்றால் என்னை சுட்டு விடுவார்கள். இலங்கையில் தமிழர்கள் இருந்தாலும் சிங்கள வெறியர்கள் அங்கே தான் இருக்கிறார்கள்” என கூறினார். இலங்கை தமிழர்களுக்காக தனி நாடு அமைக்க வேண்டுமென விரைவில் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளேன்-மதுரை ஆதீனம்! | Virakesari.lk
-
மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல்
10 JUN, 2024 | 07:00 PM (எம்.நியூட்டன்) மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணம் குருநகரில் உயிரிழந்த மீனவர்களின் நினைவுத்தூபி அமைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள், மதகுருமார்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு கொல்லப்பட்ட மீனவர்களுக்காக வழிபாடுகளில் ஈடுபட்டு, அஞ்சலி செலுத்தினர். 1986ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் திகதி குருநகர், இறங்குதுறையில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர்கள் 31 பேரும் மண்டைதீவு கடலில் வைத்து கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் | Virakesari.lk