Everything posted by பிழம்பு
-
யாழ்ப்பாணத்தில் நூற்றாண்டு கடந்த வேப்பமரம் ஒன்று சட்டவிரோதமாக அழிப்பு
நூற்றாண்டு கடந்த வேப்பமரம்:சட்டவிரோதமாக அழிப்பு! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் நூற்றாண்டு கடந்த வேப்பமரம் ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட நிலையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு மௌனம் காப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் உள்ள மதஸ்தாபனம் ஒன்றின் வளாகத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த காணியில் பல வருடங்களுக்கு முன்னர் சுற்று சூழலை பாதுகாக்கும் நோக்குடன் பல்வேறு மரங்கள் நாட்டப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு பொறுப்பாக உள்ள குருவானவர் ஒருவரால், சில மரங்கள் வளாகத்தில் இடையூறாக உள்ளதாக தெரிவித்து கிராம சேவையாளர் ஊடாக அகற்றுவதற்கான அனுமதி கோரப்பட்டு பிரதேச செயலகம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த அனுமதியை தவறாக பயன்படுத்தி, அனுமதி வழங்கப்படாத வேம்பு ஒன்று அகற்றப்பட்டுள்ளதுடன் சுமார் 80,000 ரூபாவிற்கு குறித்த வேம்பு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்த (30.04.2024) அன்று இடம்பெற்றுள்ளது. அச்சம்பவம் தொடர்பில் அவதானித்த மற்றுமொரு குருவானவர் புகைப்படங்களை எடுத்ததுடன், ஆதீன பொருளாளர் மற்றும் சொத்து பாதுகாப்பு அலுவலரிடம் வினவியுள்ளார். ஆயினும், குறித்த சம்பவம் தொடர்பில் தமக்கு தெரியாது என அவர்கள் கூறியதுடன், பேராயரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குருவானவர், முறையாக அனுமதி பெறப்பட்டே மரம் வெட்டப்பட்டதாகவும், பேராயரும், செயலாளரும் அனுமதித்ததாகவும் கூறுவதுடன், சட்ட ரீதியான அனுமதிகளை காண்பிக்க மறுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் உடுவில் பிரதேச செயலாளரிடம் வினவியபோது, மரம் வெட்டுவதற்கான அனுமதி கோரப்பட்ட நிலையில் மரங்களை பார்வையிட்ட பின்னர் அனுமதி வழங்கப்பட்டதாகவும், வெட்டப்பட்ட குறித்த மரத்துக்கு அனுமதி கோரப்பட நிலையில் தாம் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் மாதப் பொறுப்பானவரிடம் வினா வினவியபோது குறித்த விடையம் தொடர்பில் ஆராய்ந்து பதிலளிப்பதாக தெரிவித்த நிலையில் உரிய பதில் வழங்கப்படவில்லை.(ப) நூற்றாண்டு கடந்த வேப்பமரம்:சட்டவிரோதமாக அழிப்பு! (newuthayan.com)
-
கிளிநொச்சி - கடும் வெப்பநிலை : மக்கள் குடிநீருக்காக சிரமம்!!
கடும் வெப்பநிலை : மக்கள் குடிநீருக்காக சிரமம்!! கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் வெப்பநிலையுடன் கூடிய வறட்சி காரணமாக குடிநீருக்காக பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். கடும் வெப்பநிலையுடன் கூடிய வறட்சி காரணமாக பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 239 குடும்பங்களைச்சேர்ந்த 732 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் நல்லூர் செட்டியார்குறிச்சி, ஆலங்கேணி,ஞானிமடம், கொல்லக்குறிச்சி, மட்டுவில் நாடு கிழக்கு, பரமன் கிராய் போன்ற கிராம அலுவலர் பிரிவுகளைச்சேர்ந்த மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதி மக்கள் குடிநீருக்காக பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.இவர்களுக்கான குடிநீரை பூநகரி பிரதேச சபை பெளஷர் மூலம் விநியோகித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.(ப). கடும் வெப்பநிலை : மக்கள் குடிநீருக்காக சிரமம்!! (newuthayan.com)
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
விசா விநியோகித்தல், அனுமதித்தல், இரத்து செய்தல் அதிகாரத்தை வி.எப்.எஸ்.நிறுவனத்துக்கு வழங்கவில்லை - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம். (இராஜதுரை ஹஷான்) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ள விசா அனுமதித்தல், விநியோகித்தல் மற்றும் விநியோகித்தாதிருத்தல் ஆகிய அதிகாரங்களை சர்வதேச நிறுவனத்துக்கு வழங்கவில்லை. சரியான முறையில் தெளிவைப் பெற்றுக் கொள்ளாத காரணத்தால் எழுந்துள்ள தவறான கருத்துக்களை நீக்கி புதிய செயற்திட்டத்துக்கு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்கின்ற அங்கிகாரத்தை அதாவது இலத்திரனியல் பயண அங்கீகாரம் எனும் நிகழ்ச்சித் திட்டம் இணைய வழியில் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த முறைமையின் கீழ் வெளிநாட்டவர்களிடமிருந்து எழுத்துக்களுடனான தரவுகள் மாத்திரமே பெற்றுக் கொள்ளப்பட்டன. இதன் பின்னர் இந்த நிகழ்ச்சித் திட்டமானது திணைக்களத்தின் தொழில்நுட்ப தேவைகளுக்கு பொருத்தமான வகையில் உரிய காலத்தில் இற்றைப்படுத்தாத காரணத்தால் புதிய வழிமுறையை அறிமுகப்படுத்துவதற்கான தேவை தோற்றம் பெற்றது. புதிய விசா முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த தேவைப்பாடானது மேலும் தீவிரமடைந்தது. அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் 17 புதிய விசா முறைமை அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த விசா முறைமைகளில் பெரும்பாலானவை நீண்ட காலத்துக்கு சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கு சார்பானதாக அமைந்ததுடன் தேசிய பாதுகாப்பு தொடர்பில் திணைக்களத்தின் பொறுப்புக்கு இந்த ஒவ்வொரு விசா வகைகளும் போதியளவிலான ஆவணங்களை இணைய வழியில் பெற்றுக் கொள்ளல் மற்றும் அவற்றின் செம்மைத் தன்மையை உறுதிப்படுத்தி கொள்வதற்கு அவசியமாக அமைந்தன. விசா வழங்கும் போது திணைக்களம் எதிர்கால சவால்களை வெற்றிக் கொள்வதற்கான தடைகளை இனங்காணல் திணைக்களத்தால் பயன்படுத்தப்பட்ட 'இ.டி.எ' நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடக இற்றைப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படாததால் மேற்குறிப்பிட்ட நிலைமைகள் மேலும் தீவிரமடைந்தன. விண்ணப்பதாரியின் புகைப்படங்கள்,கடவுச்சீட்டின் நிகழ் பிரதிகள்,வேறு சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இணைய வழியில் முறைமைக்குப் பெற்றுக்கொள்ள முடியாமை,காலாவதியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் வினைத்திறனற்ற சேவையாக மாறியமை,இந்த முறைமையை நவீனமயப்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்பமின்மை,பல்வேறு சந்தர்ப்பங்களிவ் ஏற்படுகின்ற செயலிழப்புக்களை உடனடியாக சீர் செய்வதற்கு தேவையான வசதிகள் இன்மை,பன்மொழி அமைப்பு மையத்தின் வசதி காணப்படாததால் ஆங்கில மொழியைப் பயன்படுத்தாத சுற்றுலா பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாதல்,விசா மற்றும் விசா தொடர்பான சேவைகளை வழங்கல்,ஏனைய சர்வதேச சேவைகளுடன் ஒப்பிடுகையில் பலவீனமானதொரு சேவையாக காணப்படல். இலங்கையில் மாத்திரம் நடைமுறையில் உள்ள முறை என்பதால் பாவனையாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்ததன் கரணமாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான விளம்பரம் இல்லாததால் ஏனைய நாடுகளைப் போன்று இதனை ஓர் உத்தியாகப் பயன்படுத்த முடியாமை,இவ்வாறான சிக்கல்களினால் இந்த பணிகளை நிறைவேற்றுவதற்கு மிகப் பொருத்தமான நிறுவனமொன்றை பயன்படுத்துவது திணைக்களத்தின் பிரதான எதிர்பார்ப்பாக அமைந்தது.இதன் பொருட்டு வி.எப்.எஸ்.நிறுவனத்திடமிருந்து கிடைக்கப் பெற்ற முன்மொழிவானது அமைச்சரவையின் இணக்கப்பாட்டுடன் நியமிக்கப்பட்ட குழுவுக்கு முன்வைக்கப்பட்டது. வி.எப்.எஸ்.நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுவது புதிய விசா அறிமுகப்படுத்தல் செயற்திட்டத்தை இந்த நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளும் போது விசாவுக்கான அனுமதிக்காக ஏற்புடைய ஆவணங்களை அனுப்புவதற்கு இணைய வழியில் விண்ணப்பதாரியிடமிருந்து பெற்றுக்கொண்டு,திணைக்களத்திடம் சமர்ப்பித்தல்,அதற்கான இணையத்தளத்தை உருவாக்குதல்,பேணல் மற்றும் பராமரித்தல்,ஏற்புடைய ஆவணங்களை இணைய வழியில் அனுப்புவதற்கு முன்னர் விண்ணப்பதாரியினால் சமர்ப்பிக்கப்படும் அனைத்து தகவல்களையும் தரப்பரிசோதனை செய்தல்,ஏற்புடைய விசாவுக்கான அனுமதியை வழங்கிய பின்னர் பொதுத்தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (ஜி.டி.ஆர்.பி)பிரகாரம் தரவுகளை உரிய தொகுதியில் இருந்து முறையாக அழித்து விடல் வேண்டும். இவ்வாறான சேவைகளை பெற்றுக் கொள்வதுடன் 1948 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியர்வு சட்டத்தின் பிரகாரம் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ள விசா அனுமதித்தல்,விநியோகித்தல் அல்லது விநியோகிக்காமலிருத்தல் அதிகாரம் இந்த நிறுவனத்துக்கு வழங்கவில்லை.இந்த புதிய செயற்திட்டம் தொடர்பில் சமூகத்தின் மத்தியில் தவறான நிலைப்பாடு தோற்றம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.ஆகவே தவறான கருத்துக்களை நீக்கி இந்த புதிய செயற்திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார். விசா விநியோகித்தல், அனுமதித்தல், இரத்து செய்தல் அதிகாரத்தை வி.எப்.எஸ்.நிறுவனத்துக்கு வழங்கவில்லை - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் | Virakesari.lk
-
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானியாக பணிபுரிந்த பெல்ஜியத்தைச் சேர்ந்த விமானி இலங்கை விமானிகளை உடல்ரீதியாக அவமானப்படுத்தினார் ; இனப்பாரபட்சத்தை வெளிப்படுத்தினார் - வெடித்தது புதிய சர்ச்சை
Published By: RAJEEBAN 07 MAY, 2024 | 01:21 PM ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானியாக பணிபுரிந்த பெல்ஜியம் விமானியும் விமான பணியாளரும் தங்களை உடல்ரீதியாக அவமானப்படுத்தினார்கள், இன பாரபட்சத்தை வெளிப்படுத்தினார்கள் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகளும் பணியாளர்களும் முறைப்பாடு செய்துள்ளதை தொடர்ந்து பாரிய இனவெறி மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஏப்பிரல் 30 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் டெய்லிமிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பலத்த நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தனது விமான சேவையை வலுப்படுத்துவதற்காக டிசம்பரில் பெல்ஜியத்திடமிருந்து இரண்டு விமானங்களை குத்தகைக்கு பெற்றுக்கொண்டது. இந்த விமானங்கள் கொழும்பிலிருந்து பிராங்பேர்ட், டாக்கா, துபாய், பாரிஸ், சென்னை விமான நிலையங்களிற்கு பயணிக்கின்றன. இந்த விமானத்தில் பெல்ஜியம் விமானிகளுடன் இலங்கையை சேர்ந்த விமானிகளும் விமான பணியாளர்களும் காணப்படுவார்கள். ஏப்பிரல் 30 திகதி குறிப்பிட்ட விமானம் கொழும்பிலிருந்து பிரான்ஸ் தலைநகருக்கு செல்வதற்காக கொழும்பு விமான நிலையத்தில் தயாராகயிருந்தவேளை இலங்கையை சேர்ந்த விமானிகளிற்கு பிசினஸ் கிளாசில் ஆசனங்களை ஒதுக்கவில்லை என அறிவித்துள்ளனர். அந்த பிரிவில் ஒரு ஆசனம் மாத்திரம் உள்ளதால் ஆசனங்களை ஒதுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர். விமானத்தை மீள செலுத்திவருவதற்காக விமானிகள் வெளிநாடுகளிற்கு பயணம் மேற்கொள்ளும் போது விமானிகளுக்கு பிசினஸ் கிளாசில் ஆசனங்களை ஒதுக்குவதே வழமை . இதேவேளை ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான பணியாளர்களிற்கு அறிவிக்காமல் எயர்பெல்ஜியத்தை சேர்ந்த விமான பணியாளருக்கு பிசினஸ் கிளாசில் ஆசனத்தை வழங்கியுள்ளனர். விமானத்தில் ஏறுவதற்காக விமானத்தை நோக்கி சென்ற ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானிகள் இதனை அறிந்ததும் விமானத்தில் ஏற மறுத்துள்ளனர். இலங்கை விமானிகள் விமானத்தில் ஏற மறுத்தவேளை யுஎல் 501 இன் விமானியான கப்டன் பிலிப்பே எனெக்கென் இலங்கை விமானிகளை இனரீதியில் நிந்தித்துள்ளார். ஐந்து நிமிடத்திற்குள் அவர்கள் விமானத்தில் ஏறாவிட்டால் அவர்கள் விமானத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என எச்சரித்துள்ளார். இலங்கை விமானிகளை ஆபாசவார்த்தைகளால் நிந்தித்த எயர்பெல்ஜியம் விமானி விமானத்திற்குள் சென்றுள்ளார். பின்னர் அவர் பயணிகளுக்கான அறிவித்தலில் பெரிய பருமனான கப்டன் உட்பட இலங்கை விமானிகள் ஆசனங்களிற்காக அடம்பிடிப்பதால் விமானத்தின் பயணம் தாமதமாகின்றது என அறிவித்துள்ளார். இதனை செவிமடுத்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானிகள் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரி உட்பட பல அதிகாரிகளை தொடர்புகொண்டுள்ளனர். ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானியாக பணிபுரிந்த பெல்ஜியத்தைச் சேர்ந்த விமானி இலங்கை விமானிகளை உடல்ரீதியாக அவமானப்படுத்தினார் ; இனப்பாரபட்சத்தை வெளிப்படுத்தினார் - வெடித்தது புதிய சர்ச்சை | Virakesari.lk
-
நெடுந்தீவில் தடையற்ற மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் - துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!
07 MAY, 2024 | 12:12 PM நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் என துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் பாரிய மின்பிறப்பாக்கிகள் மூலமாக நெடுந்தீவு மக்களுக்கு தடையற்ற பின்சாரம் இலங்கை பின்சார சபையின் மூலம் நீண்டகாலமாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக நெடுந்தீவு பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டதால் அப்பகுதி மக்கள் குறிப்பாக தற்போதைய அதி வெப்பமான சூழ்நிலையில் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க நேரிட்டிருந்தது. இதற்கு இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளே காரணம்.என துறைசார் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த விடயம் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்து துறைசார் தரப்பினருடன் குறித்த தடங்கல் தொடர்பில் தொலைபேசியில் கேட்டறித்துகொண்ட அமைச்சர் சீரமைக்கும் பணிகளை மிக விரைவாக முன்னேடுத்து தடையற்ற மின்சார வழங்கலை உறுதி செய்யுமாறு பணித்திருந்தார். இந்நிலையில் தற்போது குறித்த மின் பிறப்பாக்கிகள் சீர் செய்யப்பட்டு மின்சார சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன. இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் - தற்போது சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் நாட்டில் அதி வெப்ப நிலையும் காணப்படுகின்றது. இதனால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படும் ஏது நிலைகள் அதிகளவில் உள்ளன. அதுமட்டுமல்லாது மக்களின் பல்வேறு வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளும் பிரச்சினைகளை ச்ந்தில்க நேரிடும். இதேவேளை நாடு முழுவது இருளில் மூழ்கிய சந்தர்ப்பங்களில் கூட இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது கிடையாது. அந்தவகையில் எதுவித தடைகளும் ஏற்படாது வகையில் சேவையை வழங்குவது துறைசார் தரப்பினரது கடமையாகும். இதேநேரம் இப்பகுதியில் காற்றலை மின் உற்பத்திக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை நிறைவுற்றதும் தடையற்ற மின்சாரத்துடன் குறைந்த செலவிலும் இப்பகுதி மக்கள்.மின்சார சேவையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நெடுந்தீவில் தடையற்ற மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் - துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு! | Virakesari.lk
-
யாழ். இணுவில் பகுதியில் குப்பைக் கிடங்கில் தீ ; குப்பைகளை அகற்றுமாறு போராட்டம்
Published By: DIGITAL DESK 3 07 MAY, 2024 | 02:53 PM யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான இணுவில் குப்பைக் கிடங்கில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இணுவில் காரைக்கால் குப்பைக் கிடங்கில் நேற்று திங்கட்கிழமை (06) தீ பரவியது. யாழ்.மாநகர சபை மற்றும் ஏனைய பகுதி பிரதேச சபையினரின் தீயணைப்பு படையினரின் நீண்ட நேர பிரயத்தனத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. குறித்த இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், இதற்கு முன்பும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குப்பை மேட்டுக்கு விஷமிகள் யாராவது தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தீ பரவியமைக்கான காரணம் உறுதியாக தெரியாத நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த குப்பைக் கிடங்கில் 2 ஆண்டுகளுக்கு முன்னரும் பாரிய தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை குறித்த பகுதியில் குப்பை கிடங்கை அகற்றக்கோரி அப்பகுதி இளைஞர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (07) காலை போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ். இணுவில் பகுதியில் குப்பைக் கிடங்கில் தீ ; குப்பைகளை அகற்றுமாறு போராட்டம் | Virakesari.lk
-
மட்டக்களப்பில் 3 இலட்சம் ரூபா கப்பம்கோரி கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ மேஜருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு
Published By: DIGITAL DESK 3 07 MAY, 2024 | 04:25 PM கல்முனை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ மேஜர் ஒருவர் 3 இலட்சம் ரூபாய் பணம் தருமாறு அச்சுறுத்தி மிரட்டிவருவதாக மட்டக்களப்பைச் சேர்ந்த நபரொருவர் நேற்று திங்கட்கிழமை (6) முறைப்பாடு செய்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது, மட்டக்களப்பைச் சேர்ந்த ரங்கன் என அழைக்கப்படும் சாமித்தம்பி வேலாயுதம் என்பவர் வெளிநாட்டுக்கு அனுப்பும் இடை தரகராக கல்முனையைச் சோந்த ஒருவரிடம் 5 இலச்சத்து 70 ஆயிரம் ரூபாவையும் அதனுடன் 5 பேரிடம் பணத்தை வாங்கி அதனை வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் ஒருவருக்கு வழங்கியுள்ளார். இந்நிலையில் குறித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஏமாற்றி வந்த நிலையில் அவருக்கு எதிராக இடைதரகர் கல்முனையைச் சேர்ந்த நபரின் சாட்சியுடன் மாவட்ட விசேட குற்றப் புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து வேலைவாய்ப்பு முகவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டு வழக்கு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந்த பின்னணியில் கல்முனை இராணுவ முகாம் மேஜர் இடைத்தரகரான ரங்கனிடம் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கல்மனையில் உள்ள நபரிடம் வாங்கிய பணத்தை தன்னிடம் தருமாறும் உடன் 3 இலட்சம் ரூபாவை தனது வங்கி கணக்கிற்கு போடுமாறு கப்பம் கோரியதுடன் பணம் தர மறுத்தால் போதைப் பொருளை வீட்டில் வைத்து மனைவியையும் உன்னையும் தூக்கி கொண்டு சென்று இல்லாமல் செய்வேன், 4ம் மாடிக்கு அனுப்புவேன் நான் கொழும்பில் பெரிய பின்னணியைச் சேர்ந்தவன் விளையாடக் கூடாது என அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதனையடுத்து குறித்த இராணுவ மேஜர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு இடை தரகரான ரங்கன் 30 ஆயிரம் ரூபாவை கப்பமாக அனுப்பியுள்ளார். தொடர்ந்து இராணுவ மேஜர் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரி வருவதாகவும் எனக்கும் எனது மனிவிக்கும் உயிர் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். குறித்த இராணுவ அதிகாரியை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, பாதிக்கப்பட்டவர் மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிடம் இராணுவ மேஜருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை (7) செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பில் 3 இலட்சம் ரூபா கப்பம்கோரி கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ மேஜருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு | Virakesari.lk
-
கொழும்பு விளக்கமறியல் சிறையில் தமிழ் கைதிகளை பார்வையிட்டனர் கஜேந்திரன் -சிறீதரன்
07 MAY, 2024 | 05:02 PM கடந்த பெப்ரவரி மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளி செல்வநாயகம் ஆனந்தவர்ணன் மற்றும் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக நீதிமன்றில் முற்படுத்தப்படாமல் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் மூதூரைச் சேரந்த எஸ்.சுதாகரன் ஆகிய இருவரையும் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டார்கள் . அதன்போது தனது விடுதலையை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆனந்தவர்ணன் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்ததாகவும், தனது விடுதலைக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். தான் பொய்க்குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் தனது தரப்புக் கருத்துக்களை கூறுவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் வழங்கப்படாமலேயே விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வழக்குத தவணை எப்போது என்றுகூடத் தெரியாத நிலையில் தன்னைத் தடுத்து வைத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். அதேபோன்று மூதூரைச் சேரந்த எஸ்.சுதாகரன் என்பவரும் இந்தியாவிலிருந்து திரும்பும்போது கைது செய்யப்பட்டு கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தனது விடுதலைக்காகவும் நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன் உறுப்பினர்கள் ஆனந்தவர்ணன் உடல்நலக்குறைவால் அவதியுறுவதாகவும், உணவு தவிர்ப்புப் போராட்டம் தொடர்ந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதனால் அவரது கோரிக்கையை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட தரப்புக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திள்ளார்கள். மேலும் இவ்விடயம் தொடர்பில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளது கவனத்திற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள். கொழும்பு விளக்கமறியல் சிறையில் தமிழ் கைதிகளை பார்வையிட்டனர் கஜேந்திரன் -சிறீதரன் | Virakesari.lk
-
இலங்கையில் நடப்பது பொலிஸ் இராஜ்ஜியமல்ல : இலங்கை ஜனநாயக நாடு - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் எச்சரிக்கை
Published By: DIGITAL DESK 3 07 MAY, 2024 | 05:15 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) கருத்து தெரிவித்தமைக்காக விசாரணைக்கு அழைப்பதற்கு இலங்கையில் நடப்பது பொலிஸ் இராஜ்ஜியமல்ல. இலங்கை ஜனநாயக நாடு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) விசேட கூற்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் பேசுகையில், விசா பிரச்சினை குறித்து அண்மையில் விமான நிலையத்தில் கருத்துத் தெரிவித்த சந்தரு குமாரசிங்கவை பொலிஸுக்கு அழைத்து அது குறித்து வாக்குமூலம் பெறப்பட்டது. இது பொலிஸ் இராஜ்ஜியமல்ல, இது ஏகாதிபத்திய நாடல்ல, இது ஜனநாயக நாடு. பேச்சுச் சுதந்திரம் அவருக்கு இருப்பதால் அவருக்கு இடையூறு விளைவிக்க முடியாது, அவரை தொந்தரவு படுத்த வேண்டாம். சந்தரு குமாரசிங்க அண்மையில் விமான நிலையத்தில் விடயமொன்று தொடர்பில் தனது கருத்தை முன்வைத்ததை சமூக ஊடகங்கள் மூலம் காண முடிந்தது. இந்நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் அவருக்கு பேச்சுச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரம் உள்ளது. இதற்கு இடையூறு ஏற்படுத்த முடியாது. அவர் அவரது கருத்தை முன்வைத்துள்ளார். அதனால் இந்த விடயத்தை மேலும் கொண்டு செல்வதில் அர்த்தமில்லை என்பதால் இந்த விடயத்தை இநத நிலையில் முடிவுக்கு கொண்டு வருமாறு பிரதமரிடம் கோருகின்றேன் என்றார். இலங்கையில் நடப்பது பொலிஸ் இராஜ்ஜியமல்ல : இலங்கை ஜனநாயக நாடு - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் எச்சரிக்கை | Virakesari.lk
-
ஏப்ரலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி
Simrith / 2024 மே 06 , மு.ப. 07:43 - 0 - 55 இந்த ஆண்டு முதல் தடவையாக சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 200,000க்கு கீழ் வீழ்ச்சியடைந்ததன் மூலம் இலங்கை சுற்றுலாத்துறை ஏப்ரல் மாதத்தில் வேகமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மொத்தம் 148, 867 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) தற்காலிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தை விட 41 சதவீதம் அதிகமாக இருந்தாலும், கடந்த மாதத்தில் (மார்ச்) பதிவு செய்யப்பட்ட 209,181 சுற்றுலாப் பயணிகளின் வருகையை விட இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும். டிசம்பர் 2023 முதல், இலங்கை ஒவ்வொரு மாதமும் 200,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் வெற்றிகரமாக உள்ளது, இது கொவிட் தொற்றுநோய் வெடித்ததில் இருந்து முதல் முறையாக மைல்கல்லை எட்டியது. இந்த வேகம் நான்கு மாதங்கள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டது, ஆனால் ஏப்ரல் மாதத்தில் ஒரு சுருக்கம் காணப்பட்டது எவ்வாறாயினும், ஒரு சுருக்கம் எதிர்பார்க்கப்பட்டாலும், சுற்றுலா அதிகாரிகள் கடந்த வாரம் வீழ்ச்சிக்கு பிற காரணிகளும் காரணம் என சுட்டிக்காட்டியுள்ளனர். ஏப்ரல் 17 முதல் நடைமுறைக்கு வந்த புதிய விசா முறையானது, இது மிகவும் விலை உயர்ந்ததுடன் முன்பு இருந்த ETA போல வசதியாக இல்லாததால், அது வெளியிடப்பட்டதிலிருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், மாதாந்திர சுற்றுலா வருகை புதுப்பிப்பில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விசா வகைகளின்படி வருகை எண்கள் "புதுப்பிக்கப்பட்டுள்ளன" என்று SLTDA குறிப்பிட்டது. புதுப்பிப்பு வருகை எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காட்டுகிறது. இது தொடர்பில் குடிவரவு அதிகாரிகளிடம் இருந்து தெளிவுபடுத்தப்பட்டதன் பின்னர் இன்னும் தெளிவான யோசனையை இன்று பகிர்ந்து கொள்ள முடியும் என்று அதன் தலைவர் பிரியந்த பெர்னாடோ தெரிவித்தார். “வருகைத் தரவைப் பெறுவதற்கான ஆதாரம் குடியேற்றம். அவற்றை வகைப்படுத்தலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்வையிடுதல், வணிகம், MICE போன்றவை" என்று அவர் கூறினார். ஏப்ரலில் இலங்கை சுற்றுலாவுக்கான சிறந்த மூல சந்தைகளாக இந்தியா, ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் இங்கிலாந்து ஆகியன இருந்தன, அவை மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் முறையே 18 சதவீதம், 10 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என பங்களித்தன என்பது குறிப்பிடத்தக்கது. Tamilmirror Online || ஏப்ரலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி
-
கிளிநொச்சியில் இராணுவத்தினரின் சட்ட விரோத விளையாட்டு பூங்காவுக்கு எதிர்ப்பு!
கிளிநொச்சியில் சட்ட விரோத விளையாட்டு பூங்காவுக்கு எதிர்ப்பு! யோகி. கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் இராணுவத்தினரின் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்ட இடத்தில் சட்ட விரோதமாக இராணுவத்தினர் விளையாட்டு பூங்கா ஒன்றை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் நேரில் சென்று பார்வையிட்டதோடு இவ்விடத்தில் தொடர்ந்து இராணுவத்தினர் ஆதிக்கம் செலுத்துவதை தொடர்ந்தால் மக்களே ஒருமித்து அளவிலான போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பூநகரி பொன்னாவெளியில் வளங்கள் சூறையாடப்படுகின்றது. உருத்திரபுரம் உருத்திரபுரீச்வரர் ஆலயம் ஆக்கிரமிக்க முயற்சிக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் அனுமதியில்லாது இராணுவம் மேற்கொள்ளும் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்தார். அத்துடன் கரைச்சி பிரதேச சபைக்குச் சென்று அங்கு கரைச்சிபிரதேச செயலரிடம் இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச) கிளிநொச்சியில் சட்ட விரோத விளையாட்டு பூங்காவுக்கு எதிர்ப்பு! (newuthayan.com)
-
புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த நபரை கைது செய்யக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய நபரை கைது செய்யக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் 06 MAY, 2024 | 04:26 PM வவுனியா, புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் முன்னிலையில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய நபரை கைது செய்யுமாறு கோரி வவுனியா - கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக இன்று (06) கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. தாக்குதலுக்குள்ளான நபர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் 'பொலிஸார் பக்கசார்பாக செயற்படாது குழாய் கிணறு ராசனை கைது செய்', 'பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து தாக்கியவருக்கு பாதுகாப்பு கொடுக்காதே', 'பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீதும் நடவடிக்கை வேண்டும்' என்றவாறு கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்ப்பாட்டக்காரர்களின் சார்பாக 10 பேரை அழைத்துப் பேசியிருந்தார். இதன்போது பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய வெளிநாட்டில் இருந்து வருகைதந்த நபரை 3 தினங்களுக்குள் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் மீதும் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். அதன் பின்னரே ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றிருந்தனர். கடந்த மாதம் 15ஆம் திகதி வவுனியா, சின்னப் பூவரசன்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தரை புளியங்குளம் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உட்பட சில பொலிஸார் பிடித்து வைத்திருக்க, வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து அந்த தந்தையை தாக்கியிருந்தார். தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய நபரை கைது செய்யக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய நபரை கைது செய்யக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk
-
மட்டக்களப்பில் சிறுமிக்கு ஊசி ஏற்றிய சம்பவம் போலியானது !
Published By: DIGITAL DESK 3 06 MAY, 2024 | 04:53 PM மட்டக்களப்பில் பாடசாலை சிறுமி ஒருவருக்கு இனம் தெரியாத நபரொருவர் ஊசி ஏற்றியதால் சிறுமி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதுடன், அந்த பொய் செய்தியை திரிவுபடுத்தி சமூக ஊடகங்களில் குரல்பதிவிட்ட ஆசிரியரை எச்சரித்து இன்று திங்கட்கிழமை (6) விடுவித்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.பி.ஆர். பண்டார தெரிவித்தார். “நகரிலுள்ள உள்ள பாடசாலையில் தரம் 5 ஆம் ஆண்டில் கல்விகற்றுவரும் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த வியாழக்கிழமை (02) பாடசாலை முடிந்து பிற்பகல் 2.30 மணியளவில் பாடசாலை வளாகத்தில் பெற்றோர் வருவதற்காக காத்திருந்துள்ளார். அப்போது அங்கு கறுப்பு நிறத்திலான ரவுசரும் சேட்டும் முகத்திற்கு கறுப்பு நிறத்திலான முகக்கவசமும் அணிந்துகொண்டு இளைஞன் ஒருவர் வந்து பெற்றோரதும் சிறுமியின் பேரை கேட்டு பாடசாலையில் அனைவருக்கும் ஊசி பேடுவதாகவும், உங்களுக்கு ஊசி போடவில்லை என தெரிவித்து சிறுமிக்கு ஊசி ஒன்றை ஏற்றிவிட்டு அவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். அதனால் சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே ஏனைய பிள்ளைகள் கவனம் என ஆசிரியர் ஒருவர் குரல்பதிவிட்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது. இது தொடர்பாக மட்டு தலைமையக சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி சப் இன்பெக்ஸ்டர் விவேகானந்தன் தலைமையில் விசாரணைகளை முன்னெடுத்தனர். சம்பவதினமான கடந்த வியாழக்கிழமை (02) சிறுமியை பாடசாலையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு வீட்டிற்கு தந்தையார் மோட்டர் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுமி தாயாரிடம் பாடசாலையில் இன்று ஊசி போட்டதாகவும் அதனால் வாந்தி எடுத்ததாகவும் மயக்கமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தாயார் வகுப்பு ஆசிரியர், அதிபர் மற்றும் மாணவர்களின் பெற்றோரிடம் விசாரித்தபோது அப்படி ஊசி எதுவும் போடவில்லை என அறிந்து கொண்டுள்ளார். இதன் பின்னர் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை சிறுமிக்கு காய்ச்சல் காரணமாக பாடசாலைக்கு செல்ல வில்லை. இந்நிலையில், தந்தையாரிடம் தாயார் சிறுமி தனக்கு ஊசி போட்டதாக தெரிவித்த சம்பவத்தை தெரிவித்தநிலையில் மாலை 3 மணிக்கு மட்டு. போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் சிறுமியை அனுமதித்துள்ளனர். வைத்தியசாலையில், சிறுமி தெரிவித்ததை தெரிவித்து இரத்த சோதனை செய்யுமாறு தந்தையர் கேட்டுக் கொண்டதையடுத்து இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை பாடசாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி கமராவை சோதனை செய்த பொலிஸார் சிறுமிக்கு ஊசி ஏற்றியதாக சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிய வந்துள்ளது. சிறுமி பொய் செல்லியுள்ளார் என்பதும், சிறுமி தெரிவித்தமை பொய் என அறியாது அதனை ஆசிரியர்களுக்கு தந்தையார் தெரிவித்துள்ளார். அதனை தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் குரல்பதிவிட்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே குறித்த சிறுமி மீது ஊசி ஏற்றிய எந்த தடையமும் இருக்கவில்லை என வைத்திய பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாரஞ்சனி தெரிவித்தார். இதனையடுத்து சமூக ஊடகங்களில் குரல் பதிவிட்ட ஆசிரியரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டு அவரை எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் சிறுமிக்கு வைத்திய பரிசோதனையின் இடம்பெற்று வருகின்றது. எனவே, இவ்வாறு உறுதிப்படுத்தப்படாமல் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பொதுமக்களை பீதியடைச் செய்பவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். மட்டக்களப்பில் சிறுமிக்கு ஊசி ஏற்றிய சம்பவம் போலியானது ! | Virakesari.lk
-
போதனா வைத்தியசாலைகள் தொடர்பில் வெளியாகும் போலி செய்திகளால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை - சுகாதார அமைச்சர்
Published By: DIGITAL DESK 3 06 MAY, 2024 | 05:01 PM (எம்.மனோசித்ரா) போதனா வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் சத்திரசிகிச்சைகள் வெற்றியளிப்பதில்லை என தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை. எனவே மக்கள் இவ்வாறான போலி செய்திகள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், போதனா வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் சத்திரசிகிச்சைகள் வெற்றியளிப்பதில்லை என தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை. நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான போதனா வைத்தியசாலைகளில் ஆயிரக்கணக்கான சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன. உலகில் இலவச சத்திரசிகிச்சைகளை வழங்கும் நாடுகள் பாரியளவில் இல்லை. ஆனால் இலங்கையில் சாதாரண காய்ச்சலுக்கான மருந்து உட்பட மூளை சத்திரசிக்சை வரை இலவச தரமான சுகாதார சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. கொவிட் காலத்திலுள் மிகவும் வெற்றிகரமாக தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. உலகில் வளர்ச்சியடைந்த பல நாடுகளை விட இலங்கை முன்னிலை வகித்தது. அந்த வகையில் இந்த கட்டமைப்பை மேலும் மேம்படுத்தி முன்னெடுத்துக் கொண்டு செல்வதற்கு துறைசார்ந்தவர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். யாழ் போதனா வைத்தியசாலை என்பது மிகவும் சிறந்த சேவையை வழங்கும் ஒரு வைத்தியசாலையாகும். எனவே போதனா வைத்தியசாலைகள் தொடர்பில் தெரிவிக்கப்படும் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் மக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார். போதனா வைத்தியசாலைகள் தொடர்பில் வெளியாகும் போலி செய்திகளால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை - சுகாதார அமைச்சர் | Virakesari.lk
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
- விசா நடைமுறை குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
06 MAY, 2024 | 08:26 PM வெளிநாட்டவர்கள் எமது நாட்டுக்கு வரும்போது 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட 50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு இன்று திங்கட்கிழமை (6) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் , மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா சேவையை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டவர் ஒருவர் நாட்டிற்குள் நுழையும் போது அதற்கான விசா விநியோகிக்கும் முழுப் பொறுப்பையும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ஏற்கும் ஏற்கும் என்றும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விசா நடைமுறை குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Virakesari.lk- ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது’ - இதய தானம் கொடுத்தவரின் தாயாருக்கு இறுதி சடங்கு செய்த நபர்
கண்ணூர்: கேரள மாநிலத்தில் இதய தானம் கொடுத்த நபரின் தாயாருக்கு இறுதி சடங்கு செய்து நெகிழ செய்துள்ளார் அசோக் எனும் நபர். தனது உடலின் இயக்கத்துக்கு உறுதுணை புரியும் உள்ளத்தின் பேச்சைக் கேட்டு அவர் இந்த செயலை செய்துள்ளார். கோழிக்கோடு பகுதியில் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார் இளைஞரான விஷ்ணு. அவரது மருத்துவ சிகிச்சைக்கு உள்ளூர் மக்கள் திரண்டு வந்து உதவியுள்ளனர். இருந்தும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதை கேட்டு விஷ்ணுவின் பெற்றோர் ஷாஜி மற்றும் ஷஜனா தம்பதியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருந்தும் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் அரசின் மிருத சஞ்சீவனி திட்டத்தின் மூலம் அந்த உறுப்புகள் தேவைப்படும் நபர்களுக்கு கொடுத்துள்ளனர். அவர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது நிபந்தனையாக இருந்தது. அந்த வகையில் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த 44 வயதான அசோக்கிற்கு விஷ்ணுவின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நாளன்று தான் ஷஜனாவை அவர் முதல் முறையாக சந்தித்துள்ளார். அதன் பிறகு ஷஜனாவுடன் தொடர்ந்து பேசி வந்த அசோக், விஷ்ணு குறித்து தெரிந்துக் கொண்டுள்ளார். ஷஜனாவை தனது அம்மாவாகவே அசோக் கருதியுள்ளார். இந்த சூழலில் தான் ஏற்கெனவே புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஷஜனாவுக்கு நோய் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. அதற்கான சிகிச்சையில் அவர் இருந்தபோதும் அசோக் உடன் இருந்துள்ளார். இந்த சூழலில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஷஜனா உயிரிழந்தார். இதையடுத்து ஒரு மகனாக இருந்து ஷஜனாவுக்கு இறுதி சடங்கை அசோக் செய்துள்ளார். இதற்கு ஷாஜியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த செயல் மிகவும் நெகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. உடல் அளவில் அசோக் இருந்தாலும், தனது உள்ளத்தளவில் வாழும் விஷ்ணுவின் உருவாக நின்று இறுதி சடங்கை செய்துள்ளார். https://www.hindutamil.in/news/life-style/1241046-man-performed-funeral-rites-for-heart-donor-s-mother-kerala.html- வடக்கு - கிழக்கு மாகாணத்தை பிரித்த ஜே.வி.பி, தமிழ் மக்களின் உரிமைகளை எவ்வாறு தரும்?
வடக்கு - கிழக்கு மாகாணத்தை பிரித்த ஜே.வி.பி; தமிழ் மக்களின் உரிமைகளை எவ்வாறு தரும்: சிறீரங்கேஸ்வரன் கேள்வி..... இனிய பாரதி. இணைந்திருந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தை உச்ச நீதிமன்றம் சென்று பிரித்த ஜே.வி.பி தமிழ் மக்களின் அதிகாரத்துக்கான நியாயமான உரிமைகளை எவ்வாறு தரும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் ஊடக சந்திப்பை மேற்கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்திருந்ததுடன் அவ்விடயம் தொடர்பில் மேலும் கூறுகையில், பிரபல ஆங்கில ஊடகமான சண்டே ரைம்ஸ் ஊடகத்திற்கு ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸ்சநாயக்க நாட்டில் பல ஆண்டுகளாக ஆட்சியாளர்களால் தொடர்ந்து மறுக்கப்பட்டுவந்த தமிழ் மக்களின் அதிகாரத்துக்கான நியாயமான உரிமைகளை உறுதி செய்வதோடு இலங்கையில் இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுத்து தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப தன்னால் முடியும் என கூறியுள்ளார். அதேநேரம் 2019 ஆம் ஆண்டு தங்களது கொள்கை குறித்த ஆவணத்திலும் 13 ஆவது திருத்தம் மற்றும் மாகாணசபைகள் குறித்து தமது நிலைப்பாட்டை வெளியிட்டிரப்பதாகவும் சூசகமாக கூறியுள்ளார். இந்திய இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தை தமிழர்களின் ஒரு நிலத் தொடருள்ள தாயக பூமியாக தமிழ் மக்கள் வாழ்வதை கூட விரும்பாத ஜே.வி.பி அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடி வடக்கு கிழக்கை தனித்தனி மாகாணங்களாக பிரித்தது. குறைந்தபட்சமாக வடக்கு கிழக்கு மாகாணத்தை தமிர்கள் ஒன்றிணைந்து வாழ்வதைக் கூட விரும்பாத இனவாத சிந்தனையுடன் செயற்பட்ட ஜே.வி.பி இப்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெறக் கூடும் என்ற சூழலில் தமிழ் மக்களுக்கான நியாயமான உரிமைகளை உறுதி செய்வதாக அந்த ஊடகத்திற்கு கூறியுள்ளார். இதிலிருந்து பட்டவர்த்தனமாக புலப்படுவது தேர்தலை இலக்குவைத்து சமிபத்தில் புலம்பெயர் தேசம் சென்றிரந்த ஜே.வி.பி தலைவர் அங்குள்ள அமைப்புகளின் கருத்துக்களை அறிந்து வாக்கை அபகரிக்கின்ற யுக்தியாக இவ்வாறான ஒரு கருத்தை சொல்ல முனைந்துள்ளார். உண்மையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமை மற்றும் தீர்வுகளை முன்னெடுக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஜே.வி.பி எவ்வாறான முட்டுக்கட்டைகளை அரசாங்கங்களுக்கு போட்டிருந்தது என்பதை தமிழ் மக்கள் கண்ணூடக பார்த்துள்ளனர். கடந்த ஏப்ரல் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் வலம்புரி விருந்தினர் விடுதியில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த ஜே.வி.பி தலைவர் நான் சமஷ்டியை தருவேன் என்றோ, 13 ஆவது திருத்தத்தை தருவேன் என்றோ இங்கு பேரம் பேச வரவில்லை என இனவாத மமதை கலந்த போக்குடன் கூறியிருந்தார். எனவே குறைந்தபட்சமாக உள்ள மாகாண முறைமையை கூட ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு எவ்வாறு நியாயமான உரிமைகளை வழங்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வடக்கு - கிழக்கு மாகாணத்தை பிரித்த ஜே.வி.பி; (newuthayan.com)- யாழ். கோட்டையை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றால் போல மேம்படுத்த புதிய திட்டங்களை வகுக்குமாறு ஆளுநர் பணிப்பு
Published By: DIGITAL DESK 7 03 MAY, 2024 | 11:38 AM யாழ்.நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாக காணப்படும் கோட்டையை, சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்றாற்ப்போல மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை (2) நடைபெற்ற கூட்டத்தின் போதே ஆளுநர் இந்த பணிப்புரையை விடுத்தார். யாழ் கோட்டையின் உட்புறம் மற்றும் வெளிப்புறச் சூழலை, சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் அழகுபடுத்த தேவையான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் தெரிவித்துள்ளார். யாழ் மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியன இணைந்து புதிய திட்டங்களை வடிவமைக்குமாறும், அதற்கான அனுமதியை மத்திய அமைச்சு மற்றும் துறைசார் திணைக்களங்களிடம் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தினார். வரலாற்றுச் சின்னமாக காணப்படும் கோட்டையை பாதுகாப்பதற்கும், அதனூடாக வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கும் ஏற்ற வகையில் புதிய திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய சுற்றுலா இடங்களையும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராயுமாறு ஆளுநர் தெரிவித்துள்ளார். இதேவேளை தொல்பொருள் திணைக்களமும், மத்திய கலாசார நிதியமும் மாகாண சபையுடன் இணைந்து செயற்படும் போது, அதற்கான ஒத்துழைப்புகளை வழங்க முடியும் என கௌரவ ஆளுநர் கூறினார். கௌரவ ஆளுநரின் பணிப்புரைகளை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், பணிப்புரையை துரிதமாக செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். யாழ். கோட்டையை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றால் போல மேம்படுத்த புதிய திட்டங்களை வகுக்குமாறு ஆளுநர் பணிப்பு | Virakesari.lk- 2024 பத்திரிகை சுதந்திர குறிகாட்டியில் இலங்கைக்கு 150வது இடம்
Published By: RAJEEBAN 03 MAY, 2024 | 01:06 PM 2024ம் ஆண்டிற்கான பத்திரிகை சுதந்திர குறிகாட்டியை வெளியிட்டுள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு இலங்கையை 150 வது இடத்தில் பட்டியலிட்டுள்ளது. 2023ம் ஆண்டு இலங்கை 135வது இடத்தில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் பத்திரிகை சுதந்திர விடயங்கள் 2009ம் ஆண்டுவரை அந்த நாட்டில் காணப்பட்ட உள்நாட்டு யுத்தத்துடன் தொடர்புபட்டவையாக காணப்படுகின்றன என தெரிவித்துள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு தமிழ்கிளர்ச்சி ஒடுக்கப்பட்டவேளை பல பத்திரிகையாளர்களிற்கு எதிராக இடம்பெற்ற இன்னமும் தண்டிக்கப்படாத வன்முறைகுற்றங்களிற்கும் பத்திரிகை சுதந்திரத்திற்கும் தொடர்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஊடகத்துறையில் பன்முகத்தன்மை இன்மை ஊடகத்துறை அரசியல் உயர் குழாத்தினை சார்ந்துள்ளமை போன்றவற்றின் காரணமாக 22 மில்லியன் மக்கள் வசிக்கும் இலங்கையில் இதழியல்துறை இன்னமும் ஆபத்தில் உள்ளது எனவும் எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக ஊடக தொழில்துறையினர் கொல்லப்பட்டனர் அல்லது காணாமலாக்கப்பட்டனர் என தெரிவித்துள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு 2015ம் ஆண்டின் பின்னர் எந்த பத்திரிகையாளரும் கொல்லப்படவில்லை ஆனால் முந்தைய கொலைகளுக்கானவர்கள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்கள் இன்னமும் இராணுவத்தினர் பொலிஸாரினால் திட்டமிட்ட முறையில் கண்காணிக்கப்படுகின்றார்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிற்கு செல்வதற்கு சுயாதீன ஊடகங்களிற்கு அனுமதிமறுக்கப்படுகி;ன்றது எனவும் எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. 2024 பத்திரிகை சுதந்திர குறிகாட்டியில் இலங்கைக்கு 150வது இடம் - எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு அறிக்கை - 2023 இல் 135வது இடம் | Virakesari.lk- கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
விசா விநியோகிக்கும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி போராட்டம் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குறித்த போராட்டத்தை இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான அமைப்பினர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்பாக முன்னெடுத்தனர். (படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்) விசா விநியோகிக்கும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி போராட்டம் | Virakesari.lk- லண்டன் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வியன்னாவில் தரையிறக்கம்!
லண்டன் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் பயணியொருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சிகிச்சைக்காக ஆஸ்திரியாவின் வியன்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த சம்பவம் கடந்த 1ஆம் திகதி அன்று இடம்பெற்றுள்ளது. 272 பயணிகளுடன் பயணித்த இந்த விமானமானது, பயணியொருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சிகிச்சைக்காக ஆஸ்திரியாவின் வியன்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. பின்னர் மீண்டும் லண்டன் நோக்கிப் புறப்படவிருந்த இந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வியன்னாவில் இருந்து புறப்படத் தாமதமாகியது. இந்நிலையில், விமானம் புறப்படும் வரை ஐரோப்பாவுக்கான விசாவை பெற்றிருந்த அனைத்து பயணிகளையும் வியன்னா நகரில் தங்க வைக்க வசதிகள் செய்யப்பட்டன. பின்னர் இந்த விமானமானது நேற்று (2) லண்டன் நேரப்படி 21:30 மணிநேரத்தில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை வந்தடைந்தது. லண்டன் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வியன்னாவில் தரையிறக்கம்! | Virakesari.lk- கனடாவில் வயதானோர்களை ஏமாற்றி பண மோசடி: இரு தமிழர்கள் கைது
கனடா , ஒன்ராரியோ மாகாணத்தில், டுறம் பிரதேசத்தில் வசிக்கும் இரு தமிழர்களான லக் ஷாந்த் செல்வராஜா (27 வயது), மற்றும் அக் ஷயா தர்மகுலேந்திரன் (25 வயது) ஆகியோர் 90 வயதானவர்கள் உட்பட பல வயதானவர்களை ஏமாற்றி மோசடி செய்து அவர்களது கடனட்டை மற்றும் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்மை வங்கியில் மற்றும் கடனட்டை கம்பெனிகளில் வேலை செய்வதாகக் கூறி, வயதானவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து, அவர்களது கணக்குகள் மற்றும் கடனட்டை விபரங்கள் Hack செய்யப்பட்டதாக கூறி, அவர்களது முகவரிக்கு கூரியர் அனுப்பி, அவர்களது கடனட்டை மற்றும் பண அட்டை (Debit card) ஆகியவற்றின் கடவுச் சொல்லை பெற்றுக் கொண்டு அவற்றின் மூலம் பணத்தை அவர்களது கணக்குகளில் இருந்து திருடியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மேலதிக விபரங்கள்: 90-year-olds among victims in Durham frauds targeting seniors, 2 face charges Lakshanth Selvarajah, 27, (left) and Akshayah Tharmakulenthiran, 25, both of Ajax, are facing dozens of charges, including fraud over $5,000 and unauthorized use of credit card. By Michael Talbot Posted May 1, 2024 10:41 am. A man and woman are facing 40 charges after Durham Regional Police allege, they targeted seniors in a bank and credit card scam. Investigators say the suspects would call seniors impersonating bank and credit card companies, telling them their accounts were compromised. They would then arrange to obtain their cards. “A courier was sent to the victim’s homes to retrieve their bank cards and passwords, which were then used for fraudulent purchases,” a police release states. Police say the victims included a couple in their 90s. Lakshanth Selvarajah, 27, and Akshayah Tharmakulenthiran, 25, both of Ajax, are facing dozens of charges, including fraud over $5,000 and unauthorized use of credit card. 2 charged in Durham fraud case targeting seniors: police (citynews.ca)- யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்
கிளிநொச்சி 8 மணி நேரம் முன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தடங்களை மீட்டுக்கொண்ட எரிக்சொல்ஹெய்ம்! (அமுதரசி) நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இன்று (01) கிளிநொச்சிக்கு தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டார். தான் சமாதான தூதுவராக பணியாற்றிய போது கிளிநொச்சிக்கு பயணம் செய்து விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய இடங்களை மீண்டும் ஒரு தடவை பார்த்துவிட்டு செல்வதற்காக கிளிநொச்சிக்கு இன்று சென்றிருந்தார். இவ்வாறாக அவர் பரவிபாஞ்சானில் அமையப்பெற்றிருந்த அரசியல்துறை நடுவப் பணியகம், மற்றும் சமாதான செயலகத்தைப் பார்வையிட்டார். குறித்த இடங்களின் பௌதீக சூழல் மாறியிருந்ததன் காரணமாக அவரால் இடங்களை அடையாளப்படுத்த முடியாமல் போனதாகவும், அந்தக் காலத்தில் அவ்விடங்களில் வைத்து விடுதலைப்புலிகளின் தலைவரை சந்தித்த படங்களை இணையத்தளத்திலிருந்து தரவிறக்கி நிகழ்காலத்துடன் அவ்விடங்களை ஒப்பிட்டு பசுமையான நினைவுகளை அவர் மீட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர் சமாதான தூதுவராக கிளிநொச்சிக்கு வருகை தந்த காலத்தில் ஈழநாதம் பத்திரிகையில் பணியாற்றிய தமிழ்ச்செல்வன் என்பவரையும் சந்தித்து தனது கடந்தகால நினைவுகளை பகிர்ந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது அங்கு வசிக்கின்ற ஒரு பெண்ணிடம் நாட்டின் நிலைமை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என வினவிய போது சண்டை மட்டுமே இப்போது இல்லை, மற்றும்படி நாங்கள் எதிர்பார்த்த வேறு எதுவும் நடக்கவில்லை என்று ஒற்றை வரியில் ஆழமான ஒரு பதிலை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. (ஏ)தமிழீழ விடுதலைப்புலிகளின் தடங்களை மீட்டுக்கொண்ட எரிக்சொல்ஹெய்ம்! (newuthayan.com)- இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக படகில் தப்பி வர முயன்ற இருவர் உட்பட 8 பேர் கைது
Published By: DIGITAL DESK 3 01 MAY, 2024 | 03:57 PM இந்தியாவில் தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பி வர முயன்ற இலங்கை தம்பதி இருவர் மற்றும் தப்பி வர உதவிய ஆறு பேர் என 8 பேரை தங்கச்சிமடம் பொலிஸார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியைச் சேர்ந்த சைபுல்லா நவீத், இம்ரான், நைனா முகமது, ரகுமான் உள்ளிட்ட நான்கு பேர் நேற்று (30) இரவு தங்கச்சி மடம் பேருந்து நிலையத்தில் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். அவர்கள் நால்வர் மீதும் முன்னதாக இலங்கைக்கு ஆட்களை சட்டவிரோதமாக அனுப்பி வைத்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சந்தேகமடைந்த இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தங்கச்சிமடம் பொலிஸார் நால்வரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த தம்பதிகளான சாந்தி மற்றும் ராஜேஸ்வரன் ஆகிய இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு விமானம் மூலம் சென்னை வந்ததாகவும், சென்னையில் தங்கி இருந்த நிலையில் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல முடியாததால் சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் கணேசன் லிங்கம் ஆகியோரை தொடர்பு கொண்டு சட்டவிரோதமாக தனுஷ்கோடி கடல் வழியாக படகில் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர். இதனை அடுத்து ராஜேஸ்வரனிடம் பணத்தை பெற்றுக் கொண்ட கணேசலிங்கம் மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரும் வேதாளை பகுதியை சேர்ந்த நவீத் இம்ரானை தொடர்பு கொண்டு இலங்கைக்கு இருவரையும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதையடுத்து ராஜேஸ்வரன், சாந்தி, கணேசலிங்கம், வினோத் குமார் ஆகிய நால்வரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் வந்து தங்கச்சிமடம் அடுத்துள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி இருந்துள்ளனர். இன்று (1) புதன்கிழமை இரவு தங்கச்சிமடம் மாந்தோப்பு கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் வழியாக வவுனியா தப்பி செல்ல திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இலங்கை தம்பதிகள் இருவர் மற்றும் இலங்கைக்கு தப்பிச் செல்ல உதவிய ஆறு பேர் என மொத்தம் எட்டு பேரை தங்கச்சிமடம் பொலிஸார் கைது செய்து தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் உள்ள எட்டு பேரிடம் மத்திய, மாநில உளவுத்துறை, மரைன் பொலிஸார் மற்றும் சட்ட ஒழுங்கு பொலிஸார் அடுத்தடுத்து தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தங்கச்சிமடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக படகில் தப்பி வர முயன்ற இருவர் உட்பட 8 பேர் கைது | Virakesari.lk - விசா நடைமுறை குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.