Everything posted by பிழம்பு
-
இ.வி.எம்-மில் பாஜக-வுக்கு அதிக வாக்குகள் பதிவாகின்றனவா? - சர்ச்சையும் தேர்தல் கமிஷன் விளக்கமும்!
காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. கேரள மாநிலத்தில் 3-ம் கட்டமாக வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை நடத்தப்பட்டு, தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காசர்கோடில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் மோக் போல் (Mock Poll) நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. இதையடுத்து எந்த சின்னத்திலும் ஒருமுறை வாக்களித்தால் இரண்டு வாக்குகள் பதிவாவதாகவும், அதில் மற்றொரு வாக்கு பா.ஜ.க-வுக்கும் பதிவாவதாக புகார் எழுந்தது. மோக் போலிங்கில் முதல் ரவுண்டில் இது போன்ற பிரச்னை எழுந்ததாகவும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ஒரு ஒட்டு வீதம் செலுத்தியபோது, பா.ஜ.க வேட்பாளருக்கு கூடுதலாக ஒரு வாக்கு பதிவானதாகவும், முதல் மூன்று ரவுண்டுகளில் அப்படி நடந்ததாகவும், பின்னர் அது சரிசெய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் கூட்டணியில் காசர்கோடு பூத் ஏஜென்ட்டாச் செயல்படும் செர்க்களா நாசர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரிப் படம் அதே சமயம், முதலில் உள்ள வேட்பாளரின் சின்னம் ஒரு டம்மி ரசீதாக பதிவாகும் எனவும், அந்த ரசீது மற்ற ரசீதுகளைவிட அளவில் சிறியதாக இருக்கும் எனவும, அது எண்ணுவதற்கு தகுந்தது அல்ல என ரசீதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒருபுறம் இருக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ள விவி பேட் ரசீதுகளையும் எண்ண வேண்டும் என பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காசர்கோடில் மோக் போலிங்கில் ஏற்பட்ட குழறுபடி குறித்தும் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுசென்றிருந்தார். தேர்தல் ஆணையம் அது குறித்து இன்று மதியத்துக்கு மேல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குழறுபடி செய்ய வாய்ப்பே இல்லை எனவும், காசர்கோடில் பா.ஜ.க-வுக்கு அதிக வாக்குகள் பதிவாவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும், ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையிலே பிரசாந்த் பூஷன் அதை தெரிவித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. மேலும், காசர்கோடு கலெக்டர் மற்றும் ரிட்டனிங் ஆபீசர் ஆகியோர் இது குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி சந்தேகம் கிளப்பிவரும் நிலையில், மோக் போலிங்கில் எழுந்துள்ள குளறுபடி சர்ச்சையாகியுள்ளது. இ.வி.எம்-மில் பாஜக-வுக்கு அதிக வாக்குகள் பதிவாகின்றனவா? - சர்ச்சையும் தேர்தல் கமிஷன் விளக்கமும்! | Reports of EVMs showing ‘extra votes’ during mock poll in Kerala are false: ECI informs Supreme Court - Vikatan
-
சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றும் பல்வேறு உதவிகள்!
யாழ்ப்பாணம் 32 நிமிடம் நேரம் முன் சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றும் பல்வேறு உதவிகள்! மாதவன். யாழ்ப்பாணம் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் பல்வேறு உதவிகள் நேற்று செவ்வாய்க்கிழமை(16) வழங்கி வைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முத்து ஐயன்கட்டு, ஜீவநகர் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பயன்பாட்டிற்காக மலசலகூடம் கட்டுமானப் பணிக்காக 1ஆம் கட்ட நிதியாக 75ஆயிரம் ரூபா வழங்கப்பட்டதுடன் வவுனியா - கணேசபுரம் கிராமசேவகர் பிரிவிலுள்ள அறநெறிப் பாடசாலையின் கட்டிடம் அமைப்பதற்கான 2ஆம் கட்ட நிதியாக 1லட்சத்து 50ஆயிரம் ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த உதவிகளை சந்நிதியான் ஆச்சிரிம சுவாமிகள் கலாநிதி மோகனதாஸ் மற்றும் ஆச்சிரம தொண்டர்களுடன் நேரில் சென்று வழங்கிவைத்தார். சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றும் பல்வேறு உதவிகள்! (newuthayan.com)
-
கெஹலியவின் குடும்ப உறுப்பினர்கள் சுகாதார அமைச்சின் வாகனங்களிலேயே வெலிக்கடை சிறைசாலைக்குச் செல்கின்றனராம்!
17 APR, 2024 | 12:16 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டு சுமார் மூன்று மாதங்களாகும் நிலையில், அவர் அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்கள் தொடர்ச்சியாக அவரது குடும்ப உறுப்பினர்களால் பயன்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், விஜேராம மாவத்தையில் அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் ஏன் இதுவரை கையகப்படுத்தப்படவில்லை எனவும் அந்த அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார். அரச உத்தியோகத்தர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டால், அவர் பெற்றிருந்த அனைத்துச் சலுகைகளும் உடனடியாக இரத்துச் செய்யப்படும், ஆனால், கெஹலிய ரம்புக்வெலவுக்கு ஏன் விசேட கவனம் செலுத்தப்படுகிறது என அந்த அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்கள் அதே உத்தியோகபூர்வ வாகனங்களில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு வருவதாகவும் அந்த அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். கெஹலியவின் குடும்ப உறுப்பினர்கள் சுகாதார அமைச்சின் வாகனங்களிலேயே வெலிக்கடை சிறைசாலைக்குச் செல்கின்றனராம்! | Virakesari.lk
-
வடகிழக்கில் 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும் - ஞானமுத்து ஸ்ரீநேசன்
Published By: DIGITAL DESK 3 17 APR, 2024 | 09:56 AM வடக்கு கிழக்கிலும், வடகிழக்கிற்கு வெளியிலும், தமிழ் பேசுகின்ற மக்களின் விருபுக்களைப் பெறுகின்ற ஆளுமையுள்ள, வடக்கு கிழக்கில் 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்கிழமை(16.04.2024) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர் ஒருவரை பொதுவேட்பாளரை நிறுத்தக்கூடாது என்று கூறுகின்றவர்கள், ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் ஊடாக என்ன தீர்வைத் தருவார்கள்? அவ்வாறு தரக்கூடியவர்கள் யார்? என்பதை தெரிவிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்த்தலில் தமிழ் மக்கள் சரியாகவும் நிதானமாகவும் முடிவெடுக்க வேண்டும் என்பது எதிர்பார்க்கப்படுகின்றது. சிவில் சமூகமும், புத்திஜீவிகளும், இத்தேர்தலை எவ்வாறு கையாளப்படல் வேண்டும் என்பது தொடர்பில் சிந்திக்கின்றார்கள். இந்நிலையில் தமிழ் தேசிகள் கட்சிகள் இத்தேர்தலை எவ்வாறு கையாளப்படல் வேண்டும் என்பதும் எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்துள்ளன. ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டு 46 ஆண்டுகள் கடந்திருக்கின்றன, யுத்தம் முடிவடைந்த 15 ஆண்டுகள் கடக்கும் நிலமை காணப்படுகின்றது. இந்நிலையில் தமிழர்களின் இனப்பிரச்சனை சுந்தரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து வருகின்றது. இதனைத் தீர்ப்பதற்காக அகிம்சை ரீதியாக தழிர் தேசியக் கட்சிகள் பல முயற்சிகளைச் செய்து வந்திருக்கின்றன. அதற்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை. 30 வருடகாலமாக ஆயுதரீதியாகப் போராடினார்கள், பலநாடுகளின் யுக்திகளின் மூலமாக அந்த போராட்டமும் மௌனிக்கப்பட்டுள்ளது. அதன்மூலமும் தமிழர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. இராஜதந்திர ரீதியாக பேச்சுவார்த்ததை மூலமாக இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்றால் அதுவும் நிறைவேற்றப்படவில்லை. 1978 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டது. தேசியஇனப்பிரச்சனைக்குரிய தீர்வை ஜே.ஆர்.ஜெயவர்த்தன யுத்தம் என்ற ரீதியில்தான் சிந்தித்தார். பின்னர் இந்தியாவில் நிர்ப்பற்த்தின் மூலம் 13 வது திருத்தத்தின் மூலம் 1987 ஆம் ஆண்டு மாகாணசபை முறை கொண்டுவரப்பட்டது. அந்த மாகாணசபையிலும்கூட இலங்கை இனப்பிரச்சனைக்கு முழுமையான தீர்வு இல்லை. மாகாணசபை தேர்தல் நிறுத்தப்பட்டு 6 வருடங்களாகின்றன, மைலத்தமடு மேச்சல்தலைப் பிரச்சனையைக்கூட மாகாணசபை முறையால் தீர்க்கப்படாமலுள்ளன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாக்கப்படல் வேண்டும் என்பதற்காக அப்பகுதி மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இதற்குக்கூட 13வது திருத்ததின்மூலம் கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு தீர்க்க முடியவில்லை. 1987 ஆம் ஆண்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமை எமக்குத் தீர்வாக அமையவில்லை. இந்நிலையில் 1994 நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் நியாயமான தீர்வைத்தருவார் என் நம்பி சந்திரிக்காவை ஆதரித்தோம், பின்னர் 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவிற்கும் வாக்களித்தோம், எக்குரிய தீர்வு கிடைக்கும் என எம்மை நம்பவைத்தார்கள். இவ்வாறு இரு ஜனாதிபதித் தேர்லிலும் நம்பி வாக்களித்தும் எமக்கு எதுவும் கிடைக்கவில்லை. தற்போதைய நிலையில 3 ஜனாதிபதி வேட்பாளர்கள் முகம் காட்டுகின்றார்கள். நான் 13 வதுதிருத்தத்தையோ, சமஸ்ட்டியைத் தருவேன் என்றோ கூறமாட்டேன் என அனுரகுமார திசாநாயக்க தெரிவிக்கின்றார். 13 வதுதிருத்தச் சட்டத்தை தரலாம் என சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார் ஆனாலும் சிங்கள பேரினவாதம் குறுக்கிடுகின்றபோது பொலிஸ் அதிகாரத்தை அவரும் தரக்கூடிய வாய்ப்பு இல்லை. தற்போதைய ஜனாபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மைலத்தமடு, பிரச்சனை, கல்முனை பிரதேச செயலக பிரச்சனை, உள்ளிட்ட மிகவும் சாதாரண பிரச்சனையைத் தீர்க்க அவர் இன்னும் முன்வரவில்லை. 13வது திருத்தத்தை தரலாம் பொலிஸ் அதிகாரம் தரமுடியாது என தெரிவிக்கின்றார். எனவே நாம் கடந்த காலத்திலும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம், நிகழ்காலத்திலும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எதிர்காலத்திலும் எந்தவொரு வேட்பாளரும் நம்பிக்கையூட்டக்கூடிய கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதி வேட்பாளர்களை தமிழ் தேசியக் கட்சிகள் சந்தித்து உங்களிடம் என்ன தீர்வு உள்ளது என்பதைக் கேட்கவேண்டும். அதனை மக்களிடதில் தெரிவிக்கவேண்டும். இந்நிலையில் பேரினவாதத்திலுள்ளவர்கள் எமக்கான தீர்வைத் தருவதற்கு மிகவும் பின்னடித்துக் கொண்டு வருகின்றார்கள். யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு மக்களின் மக்கள் ஆணையைப் பெறவேண்டும். அதற்கான தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தெரிவித்துக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவர் பொதுவேட்பாளராக களமிறங்கினால் என்ன என்ற கேள்ளி கேட்க்கப்படுகின்றது. இது தொடர்பில் வடக்கு கிழக்கிலுள்ள பலரும் ஆர்வம் காட்டிவருகின்றார்கள். எனவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவரை பொது வேட்பாளராக போட்டியிடச் செய்து அதன்மூலம் வடக்கு கிழக்கு மக்களின் மக்கள் ஆணையை சர்வதேசத்திடம் தமிழ பேசும் மக்கள் உரத்த குரலில் கூறுவதற்குரிய சந்தர்ப்பமாக பயன்படுத்தினால் என்ன என்ற கேள்வி எழுகின்றது. எமது வேட்பாளர் வடக்கு கிழக்கிலும், வடகிழக்கிற்கு வெளியிலும், தமிழ் பேசுகின்ற மக்களின் விருபுக்களைப் பெறுகின்ற ஆளுமையுள்ளவதராக இருக்க வேண்டும். எனவே வடக்கு கிழக்கில் 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஆளுமையுள்ள ஒருவரைகளமிறக்க வேண்டும். தமிழர் ஒருவரை பொதுவேட்பாளரை நிறுத்தக்கூடாது என்று கூறுகின்றவர்கள், ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் ஊடாக என்ன தீர்வைத் தருவார்கள்? அவ்வாறு தரக்கூடியவர்கள் யார்? என்பதை தெரிவிக்க வேண்டும். எனத் தெரிவித்த அவர் மகாணசபை, உள்ளுராட்சிமன்றம் போன்ற தேர்தல்கள் இன்னும் நடாத்தப்படவில்லை. எனவே மக்கள் தங்களது பிரதிநிதிகளைக்கூட தெரிவு செய்ய முடியாத ஜனநாயக முறை இங்கு காணப்படுகின்றது. தேர்தல் தொடர்பில் சுயவிருப்பு வெறுப்புக்களைப் பார்த்துக் கொண்டிருக்கினார்கள். நாடு வங்குறோத்து நிலையில், உள்ள இக்காலகட்டத்தில் உலக நாடுகளிலிருந்து கடன்பெற்று ஆங்காங்கே சில அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. இச்சந்தர்ப்பத்திலும் லஞ்சம், மோசடி, என்பன இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. எனவே கடன்பெற்று வந்த பணத்திலும் கையூட்டுப் பெறுகின்ற நிலமைதான் காணப்படுகின்றது. உதாரணமாக ஒரு முட்டையிலிருந்து சுமார் 15 ரூபா கொள்ளையடிக்கப்படுகின்றது. கச்சதீவை இந்தியா மீள பெறவேண்டும் என எழுந்துள்ள சர்சையானது இலங்கையின் இறைமைக்கு ஓர் சவால் விடுகின்ற விடையமாகவும், மீனர்களுக்கும் அச்சுறுத்தல் விடுகின்றதாகவும் அமைந்துள்ளது. இது இந்திய தேர்தலுக்காக கொள்ளப்படுகின்ற உத்தியாகவே பார்க்கப்படுகின்றது. அந்நாட்டில் தேர்தல் முடிவுறதும் இவ்வடையம் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என அவர் இதன்போது தெரிவித்தார். வடகிழக்கில் 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும் - ஞானமுத்து ஸ்ரீநேசன் | Virakesari.lk
-
யாழ். சாவகச்சேரி நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய இரு கைதிகள் மீள கைது
Published By: DIGITAL DESK 3 17 APR, 2024 | 04:52 PM யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதிகள் சுமார் 30 நிமிட இடைவெளியில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவரும், விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரும் வழக்கொன்றுக்காக யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து, சாவகச்சேரி நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர். அவர்களை சுமார் 30 நிமிட இடைவேளையில் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். அதனை அடுத்து, தப்பியோடிய இருவருக்கு தலா 6 மாத கால சிறைத்தண்டனை விதித்த சாவகச்சேரி நீதவான், ஆயிரத்து 500 ரூபாய் தண்டமும் விதித்தார். தண்ட பணத்தினை கட்ட தவறின் மேலும் ஒரு மாத சாதாரண சிறைத்தண்டனை அனுவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். யாழ். சாவகச்சேரி நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய இரு கைதிகள் மீள கைது | Virakesari.lk
-
இலங்கையில் இடம்பெறும் சிறுவர் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பான செய்திகள்
17 வயது மகளை 5 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது! மனைவி உயிரிழந்ததையடுத்து தனது 17 வயது மூத்த மகளை 5 வருட காலமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தந்தை இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவரது மனைவி 6 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் இதனையடுத்து இவர் தனது மூத்த மகளை சுமார் 5 வருட காலமாகப் பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் அவர் தனது இரண்டாவது மகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற போது அதனைக் கண்ட மூத்த மகள் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனது இரண்டாவது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபருக்கு எதிராக அவிசாவளை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர் குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் ஆஜராவதைத் தவிர்த்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், சந்தேக நபரின் ஒரு பிள்ளை சுகயீனமடைந்துள்ளதுடன் சுகயீனமடைந்த பிள்ளையை தன்னால் பராமரித்துக் கொள்ள முடியாததால் இவர், தனது பிள்ளையை உயிரிழந்த மனைவியின் சகோதரியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் வீட்டின் உரிமையாளரான உயிரிழந்த மனைவியின் சகோதரி மூன்று பிள்ளைகளையும் இங்கிரிய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 17 வயது மகளை 5 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது! | Virakesari.lk
-
சௌதியில் மரண தண்டனை: ஓட்டுநரை காப்பாற்ற 40 நாளில் ரூ.34 கோடி 'குருதிப் பணம்' திரட்டிய கேரள மக்கள் - எப்படி?
கேரள மக்கள் - எப்படி? பட மூலாதாரம்,INDIA TODAY படக்குறிப்பு,அப்துல் ரஹீமின் பழைய படம். இப்போது அவருக்கு 41 வயதாகிறது 15 ஏப்ரல் 2024, 09:13 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் `தி கேரளா ஸ்டோரி’ படம் தொடர்பாக சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், சமீபத்தில் சமூக ஊடகங்களில் ‘உண்மையான கேரளா ஸ்டோரி’ (தி ரியல் கேரளா ஸ்டோரி) என்ற தலைப்பில் இரண்டு செய்திகள் பகிரப்பட்டு வந்தன. முதல் செய்தி காங்கிரஸ் எம்பி சசி தரூரின் ட்வீட் பற்றியது. அதில், கேரளாவில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான துர்கை கோயிலின் படத்தை பதிவிட்டு, “400 ஆண்டுகள் பழமையான துர்கை கோயிலை இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து புதுப்பித்து அழகுபடுத்திய, கேரளாவின் உண்மையான கதைக்கு இது மற்றொரு உதாரணம்,” என்று அவர் பதிவிட்டிருந்தார். அவரது இந்த ட்வீட் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது. கடந்த சனிக்கிழமையன்று மற்றொரு செய்தி வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. அது, அப்துல் ரஹீம் என்ற தனி மனிதரின் உயிரைக் காப்பாற்ற 40 நாட்களில் 34 கோடி ரூபாய் வசூலிக்க, உலகம் முழுவதும் பரவியிருக்கும் கேரள மக்களின் ஒன்றிணைந்து பரஸ்பர ஒத்துழைப்பை வழங்கியதைப் பற்றியது. ஒரு உயிரைக் காப்பாற்றத் திரட்டப்பட்ட ரூ.34 கோடி அப்துல் ரஹீமை மரண தண்டனையில் இருந்து மீட்க முன்னெடுக்கப்பட்ட இந்தப் பரப்புரையை கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியிருக்கிறார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “கேரள மக்கள் மனிதநேயத்தின் மூலம் தங்கள் அடையாளத்தை நிலை நிறுத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் வெறுப்பைப் பரப்புபவர்கள் பொய்யான கதைகளைப் பரப்புகிறார்கள். கேரள மக்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளனர்,” என்று அப்பதிவில் அவர் தெரிவித்திருக்கிறார். “கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் ரஹீ சௌதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்கிறார். அவரைக் காப்பாற்ற 34 கோடி ரூபாயைத் திரட்ட கேரள மனங்கள் ஒன்றுபட்டிருக்கின்றன." “ஒருவரது உயிரைக் காப்பாற்றுவதிலும், ஒரு குடும்பத்தின் கண்ணீரைத் துடைப்பதிலும், கேரளா அன்பிற்கு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது. வகுப்புவாதத்தால் அழிக்க முடியாத சகோதரத்துவத்தின் கோட்டையாக கேரளா திகழ்கிறது என்பதற்கு இதுவே சான்று. இது தான் உண்மையான கேரளா ஸ்டோரி," என்று பெருமிதத்துடன் பகிர்ந்திருந்தார். பட மூலாதாரம்,X/CONGRESS KERALA காங்கிரஸ் கட்சியின் பதிவு அதேசமயம், கேரள மாநில காங்கிரஸ், அப்துல் ரஹீமின் கதையை தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டு, அதை 'தி ரியல் கேரளா ஸ்டோரி’ என்று குறிப்பிட்டிருந்தது. அப்பதிவில், "கேரளாவின் உண்மையான கதை இது! தொடர்ச்சியான வெறுப்புப் பிரச்சாரத்தை எதிர்கொண்டாலும், கேரள மக்களின் அசைக்க முடியாத மனிதாபிமானத்தை இந்நிகழ்வு பிரதிபலிக்கிறது,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், “கடந்த 18 ஆண்டுகளாக ரியாத்தில் சிறை வைக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கும் அப்துல் ரஹீமின் விடுதலைக்காக கிட்டத்தட்ட 34 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. மகனின் உயிரைக் காப்பாற்ற முயன்ற தாய்க்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து உதவினர். இந்த மனிதாபிமான முயற்சிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி,’’ என அப்பதிவு தெரிவித்திருந்தது. யார் இந்த அப்துல் ரஹீம்? கொல்கத்தாவின் ஆங்கில நாளிதழான 'தி டெலிகிராப்' வெளியிட்ட செய்தியின்படி, கோழிக்கோட்டைச் சேர்ந்த 41 வயதான அப்துல் ரஹீம் ஆட்டோ ஓட்டுநராக இருந்தவர். 'இந்தியா டுடே' இணையதளத்தின்படி, அவர் 2006-இல் ஹவுஸ் டிரைவிங் விசா மூலம் ரியாத் சென்றடைந்தார். வாகனம் ஓட்டுவதைத் தவிர, மாற்றுத் திறனாளி குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் வேலையும் அவருக்குக் கிடைத்தது. இந்நிலையில் அந்தக் குழந்தை ஒரு விபத்தில் இறந்தது. அந்தச் சிறுவனைப் பார்த்துக் கொள்வதும், காரில் ஏற்றிச் செல்வதும் அப்துல் ரஹீமின் வேலை. ஆனால் சிறுவனின் கழுத்தில் சுவாசத்திற்காக பொருத்தப்பட்டிருந்த மருத்துவ கருவியை ரஹீம் தவறுதலாக கீழே போட்டதன் விளைவாக சிறுவன் உயிர் பறிப்போனது. அதற்காக, 2012-இல் சௌதி நீதிமன்றம் ரஹீமுக்கு மரண தண்டனை விதித்தது. அவர் கடந்த 18 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். ரஹீமுக்காக சட்ட உதவி பெற கேரள மக்கள் முயற்சி செய்யத் துவங்கினர். மேலும், அவரது குடும்பத்தினரை அவருக்காக 'குருதிப் பணம்' (blood money) திரட்ட சம்மதிக்க வைத்தனர். முன்னதாக அப்துல் ரஹீமின் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் விசாரணை நீதிமன்றம் வழங்கப்பட்ட மரண தண்டனையை 2017 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் உறுதி செய்தது. 'தி டெலிகிராப்' செய்தியின்படி, சௌதி அரேபியாவில் வசிக்கும் கேரள தொழிலதிபர் அஷ்ரஃப் வெங்கட், கடந்த வெள்ளிக்கிழமை கொடுத்த பேட்டியில், விபத்தில் உயிரிழந்த குழந்தையின் குடும்பம் பல ஆண்டுகளாக ரஹீமை மன்னிக்க மறுத்ததை தொடர்ந்து, 2023-இல் 1.5 கோடி ரியால் குருதிப் பணம் கொடுப்பதாக அவர்களிடம் பேசப்பட்டது. அப்துல் ரஹீமின் உயிரைக் காப்பாற்ற அவர்கள் சம்மதித்ததாக தெரிவித்தார். "குழந்தையை இழந்த குடும்பம் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி குருதிப் பணத்தை ஏற்றுக் கொண்டு ரஹீமுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த எழுத்துப்பூர்வ வாக்குறுதியைக் கருத்தில் கொண்டு, மரண தண்டனை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது." என்று அஷ்ரஃப் வெங்கட் கூறினார். 'தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்' செய்தியின்படி, அப்துல் ரஹீமின் விடுதலைக்காக 2021-இல் அமைக்கப்பட்ட `அப்துல் ரஹீம் சட்ட நடவடிக்கைக் குழு’ மூலம் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அப்துல் ரஹீமை காப்பாற்றும் பிரசாரம் தொடங்கியது எப்படி? இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கீழ் இயங்கும் கேரள முஸ்லிம் கலாச்சார மையத்தின் சவூதி பிரிவின் பொதுச் செயலாளர் அஷ்ரஃப் வெங்கட் சமீபத்தில் கோழிக்கோடு வந்திருந்தார். கேரளாவில் உள்ள பாஜக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் உதவியுடன் ரஹீமுக்கான நன்கொடை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதே அஷ்ரஃப்பின் நோக்கம். “ரஹீமின் உயிரைக் காப்பாற்ற அமைக்கப்பட்ட குழுவில் இந்து, முஸ்லிம், பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் இடம் பெற்றுள்ளனர்,” என்கிறார் வெங்கட். கடந்த வெள்ளியன்று (ஏப்ரல் 12), “அவரது விடுதலைக்குத் தேவையான ரூ.34 கோடி இலக்கை எட்டியுள்ளோம். தயவுசெய்து மேலும் பணம் அனுப்ப வேண்டாம். தற்போது, ரூ.34.45 கோடி வசூலித்துள்ளோம். அதிகமாக பெறப்படும் தொகை தணிக்கை செய்யப்பட்டு நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும்,” என்று அவர் தெரிவித்தார். “குழந்தையை இழந்த குடும்பத்தினருடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை முன்னெடுத்து அப்துல் ரஹீமின் விடுதலையை உறுதி செய்ய, எங்கள் அறக்கட்டளை ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளும்,” என்று அவர் கூறினார். மேலும், “இந்தத் தொகை பாதிக்கப்பட்டக் குடும்பத்தினருக்கு அப்துல் ரஹீமின் மன்னிப்பை கோரும் ‘குருதிப் பணமாக’ வழங்கப்படும்,” என்றும் வெங்கட் குறிப்பிட்டார். அப்துல் ரஹீமின் தாய் சொல்வது என்ன? அப்துல் ரஹீமைக் காப்பாற்ற சவூதி அரேபியாவில் உள்ள கேரள மக்களின் அமைப்பு முக்கிய பங்காற்றிய நிலையில், சுரேஷ் என்ற நபரும் பெரிதும் உதவினார். சட்ட உதவிக் குழுவின் தலைவரான சுரேஷ், கடந்த மார்ச் 3-ஆம் தேதி கோழிக்கோட்டில் 'சேவ் அப்துல் ரஹீம்' என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார். ரூ.34 கோடியை வசூலிக்கத் தொடங்கப்பட்ட இந்தப் பரப்புரை, தொழிலதிபர்கள் மற்றும் சமூக வலைத்தள பதிவர்கள் இணைந்தபோது வேகம் பெற்றது. “எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை,” என அப்துல் ரஹீமின் தாய் ஃபாத்துமா கூறியதாக 'தி டெலிகிராப்' செய்தி வெளியிட்டுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இங்குள்ள மக்களின் உதவியால் இவ்வளவு பெரிய தொகையை இவ்வளவு விரைவாக வசூலிக்க முடிந்தது. அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்,” என்றார். இதுகுறித்து பேசிய அஷ்ரஃப் வெங்கட், ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு பணம் அனுப்பும் பணி துவங்கியுள்ளது, என்றார். அந்தத் தொகை வஃக்ப் வாரியம் மற்றும் நீதிமன்ற கண்காணிப்பு வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும், என்றார். பணம் அனுப்பப்பட்ட பின், அப்துல் ரஹீமின் விடுதலையை எதிர்பார்க்கலாம் என்றும், ஆனால் அதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை என்றும் வெங்கட் கூறினார். தி ரியல் கேரளா ஸ்டோரி: சௌதி அரேபியாவில் அப்துல் ரஹீமை காப்பாற்ற 40 நாளில் ரூ.34 கோடி திரட்டிய கேரள மக்கள் - எப்படி? - BBC News தமிழ்
-
யாழில் போதையில் குழப்பங்களை ஏற்படுத்திய 7 இளைஞர்கள் கைது
15 APR, 2024 | 03:50 PM யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) போதையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு , யாழ்.பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இசைநிகழ்வில் போதையில் , குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் வன்முறை கும்பலைச் சேர்ந்த 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் விசாரணைகளின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழில் போதையில் குழப்பங்களை ஏற்படுத்திய 7 இளைஞர்கள் கைது | Virakesari.lk
-
இ.போ.ச - தனியார் இணைந்த நீண்ட தூர பேருந்து சேவை விவகாரம் - டக்ளஸின் தலையீட்டையடுத்து சுமுகமான தீர்வு
15 APR, 2024 | 04:46 PM இ.போ.ச மற்றும் தனியார் இணைந்த பேருந்து சேவையை முன்னெடுப்பதில் இருந்துவரும் இழுபறி நிலையையடுத்து, யாழ். நீண்ட தூர தனியார் பேருந்து சேவையில் ஈடுபட்டுவரும் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கான முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையால் எழுந்த பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டை அடுத்து பரீட்சார்த்த அடிப்படையில் சேவைகளை நடத்துவது என சுமுகமான தீர்வு காணப்பட்டுள்ளது. முன்பாக முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூர் மற்றும் நீண்ட தூர தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் யாழ். மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர். இந்நிலையில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடி, தீர்வு வழங்கப்படும் என வட மாகாண ஆளுநர் உறுதி வழங்கியிருந்தார். இதையடுத்து இவ்விடயம் தொடர்பில் ஆளுநரால் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அரச மற்றும் தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும் தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டது. இதன்போது சுமுகமான தீர்வு எட்டப்படாமையால் அன்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுநர் தலைமையில் 5 பேர் அடங்கிய விசேட குழு ஒன்றை நியமித்து, பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பொறிமுறைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி கோரியிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் (15) அந்த பிரச்சினைக்கான தீர்வினை வழங்கும் வகையில் ஆளுநர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் பரீட்சார்த்தமான முறையில் அரச மற்றும் தனியார் பேருந்துகள் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகாமையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இருந்து இணைந்த சேவை பரீட்சார்த்த அடிப்படையில் நெடுந்தூர சேவைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இ.போ.ச - தனியார் இணைந்த நீண்ட தூர பேருந்து சேவை விவகாரம் - டக்ளஸின் தலையீட்டையடுத்து சுமுகமான தீர்வு | Virakesari.lk
-
கொழும்பு கோட்டை ரயில் நிலைய பயண மேடையை உடைத்துக் கொண்டு சென்ற ரயில்!
15 APR, 2024 | 05:32 PM கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து சிலாபம் நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில், கோட்டை ரயில் நிலையத்தின் முதலாவது மேடையில் நிறுத்த முயற்சித்தபோது அங்கிருந்த தடுப்பையும் ரயில் மேடையையும் உடைத்துக் கொண்டு சென்று நின்றதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் முதலாம் பயண மேடையின் ஒரு பகுதியும் தடுப்பும் ரயில் எஞ்ஜினின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரயில் சேவைகளில் பாதிப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலைய பயண மேடையை உடைத்துக் கொண்டு சென்ற ரயில்! | Virakesari.lk
-
வேற்றுக்கிரகத்துக்கு செல்ல உயிரை மாய்த்துக்கொண்ட மூவர்... - கேரளாவை உலுக்கிய பிளாக் மேஜிக் மரணம்!
Published:Yesterday at 3 PMUpdated:Yesterday at 3 PM நவீன் தாமஸ் - தேவி, ஆர்யா 6Comments Share கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூவர், அருணாசலப் பிரதேசத்தில் கொடூரமான முறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ‘பிளாக் மேஜிக்’ குறித்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு அருகேயுள்ள வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்தவர் அனில்குமார். இவரின் மகள் ஆர்யா (29), திருவனந்தபுரத்திலுள்ள தனியார் பள்ளியில் பிரெஞ்ச் மொழி ஆசிரியராகப் பணிபுரிந்துவந்தார். பள்ளிக்குச் செல்வதாகப் புறப்பட்ட ஆர்யா வீட்டுக்குத் திரும்பவில்லையென, கடந்த மாதம் 27-ம் தேதி வட்டியூர்காவு போலீஸில் புகாரளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் ஆர்யா, அவரின் நெருங்கிய தோழி தேவி, அவரின் கணவர் நவீன் தாமஸ் ஆகியோர் அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றில் இறந்துகிடப்பதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த மூவரின் மரணம் குறித்து அருணாச்சல் போலீஸார் கூறுகையில், “அருணாச்சலப் பிரதேசம், ஜீரோ வேலியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் 28-03-2024 அன்று மூவரும் அறை எடுத்துத் தங்கியிருக் கிறார்கள். ஏப்ரல் 1 முதல் 2-ம் தேதிவரை அவர்கள் அந்த அறையிலிருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் அறையின் கதவை அன்லாக் செய்து உள்ளே சென்று பார்த்தபோது, மூவரும் ரத்தவெள்ளத்தில் சடலமாகக் கிடந்திருக்கிறார்கள். இது குறித்துத் தகவலறிந்ததும் நாங்கள் அந்த அறையைச் சோதனையிட்டோம். அறையின் கட்டிலில் ஆர்யாவும், தரையில் தேவியும் பாத்ரூமில், நவீனும் கை நரம்புகளை அறுத்த நிலையில் இறந்து கிடந்தார்கள். தேவி, ஆர்யா இருவரின் முகங்களிலும், உடலின் வேறு பாகங்களிலும் பிளேடால் கீறப்பட்டிருந்தது. கறுப்பு நிற வளையல்கள், அறுக்கப்பட்ட தலைமுடி ஆகியவை ஒரு தட்டில் வைக்கப்பட்டிருந்தன. மேலும் ரத்தம் உறையாமல் இருப்பதற்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரையுடன் மூன்று பிளேடுகளும், ஒரு கடிதமும் அவர்களின் அறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. அந்தக் கடிதத்தில், ‘சந்தோஷமாக வாழ்ந்தோம். இனி நாங்கள் போகிறோம்’ என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து, ஆர்யாவின் லேப்டாப்பையும், இரு செல்போன்களையும் கைப்பற்றி அவற்றை ஆய்வுசெய்தோம். அவற்றில், வேற்றுக்கிரகங்களில் வசிப்பவர்கள் குறித்து இணையதளத்தில் தேடியதோடு, அது சம்பந்தமான பி.டி.எஃப் ஃபைல்களையும் அவர்கள் டௌன்லோடு செய்திருப்பது தெரியவந்தது. நவீன் தாமஸ் - தேவி ‘டைனோசர் இனம் அழியவில்லை. அவை வேறு கிரகங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. பூமியிலுள்ள உயிர்கள் இரு வெவ்வேறு கிரகங்களுக்குச் சென்றிருக்கின்றன. 90 சதவிகித மனிதர்களும் அவ்வாறே வேறு கிரகங்களுக்குச் சென்றிருக்கின்றனர். பூமி தனது எனர்ஜியை இழந்து கொண்டிருக்கிறது. எனவே, எஞ்சியிருக்கும் மனிதர்கள் இனி வேறு கிரகத்துக்குச் சென்றுதான் வாழ முடியும்’ என்பது போன்ற கருத்துகள் விவரிக்கப்பட்டிருந்தன. இது போன்ற அறிவியலுக்குப் புறம்பான தகவல்களெல்லாம் ‘டான் போஸ்கோ’ என்ற ஐ.டி-யிலிருந்து ஆர்யாவுக்குப் பல இ-மெயில்களாக வந்திருக்கின்றன. அவற்றில் சொல்லப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, வேற்றுக்கிரகத்துக்குச் செல்லலாம் என்ற மூடநம்பிக்கையில், ரத்தம் உறையாமல் இருக்க மாத்திரை எடுத்துக்கொண்டு மூவரும் தங்களின் கை நரம்புகளை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்திருக்கிறார்கள்’’ என்கின்றனர். இது குறித்து திருவனந்தபுரம் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, “நவீனும் தேவியும் ஆயுர்வேத மருத்துவர்கள். காதலித்து 13 ஆண்டுகளுக்கு முன்பு சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். பிளாக் மேஜிக், வேற்றுக்கிரக வாசிகள் குறித்து நவீன் தாமஸ், டெலகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேடியிருக்கிறார். உயிர் வெளியேறும் சமயத்தில் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும், மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும், உடலிலிருந்து ஆன்மாவை விடுவிப்பது எப்படி என நவீன் டெலகிராமில் விரிவாகத் தேடிப் படித்திருக்கிறார். ஈஸ்டர் சமயத்தில் இமயமலை அடிவாரத்திலுள்ள அருணாச்சல் ஜீரோ வேலிக்குச் சென்று கிரியைகள் செய்து உயிரைவிட்டால், எளிதில் வேற்றுக்கிரகங்களுக்குச் சென்றுவிடலாம் என்ற மூடநம்பிக்கை நவீனுக்கு ஏற்பட்டிருக்கலாம். அதை மனைவி தேவியையும் நம்பவைத்திருக்கிறார். தேவியின் மூலம் ஆர்யாவுக்கு இந்தச் சிந்தனை ஏற்பட்டிருக்கலாம். ஆர்யா தேவியின் தந்தை பாலன் மாதவனிடம் நடத்திய விசாரணையில் தேவியும் நவீனும் மாந்திரீக விஷயங்களை நம்பிச் செயல்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார். துர் மந்திரவாதம் குறித்து ஆர்யா இணையதளத்தில் தேடியதை அவரின் தந்தை பார்த்திருக்கிறார். வரும் மே 7-ம் தேதி ஆர்யாவுக்குத் திருமணம் செய்ய அவரின் பெற்றோர் நிச்சயித்திருக்கிறார்கள். இதற்கிடையேதான் மூவரும் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு, மார்ச் மாதமும் நவீனும் தேவியும் ஜீரோ வேலி பகுதிக்குச் சென்றிருக்கின்றனர். எனவே, ‘அங்கு வேற்றுக்கிரகங்கள் குறித்துப் பிரசாரம் செய்யும் குழு இருக்கிறதா?’ என்ற கோணத்திலும் விசாரித்துவருகிறோம். இவர்களைத் தவறாக வழிநடத்திய ‘டான் போஸ்கோ’ என்ற இ-மெயில் ஐ.டி குறித்தும் விசாரித்துவருகிறோம்” என்றனர். படிப்பறிவு வேறு... பகுத்தறிவு வேறு என்பதை தெள்ளத் தெளிவாக்கியிருக்கிறது இந்தச் சம்பவம்! Junior Vikatan - 14 April 2024 - வேற்று கிரகத்துக்குச் செல்ல உயிரை மாய்த்துகொண்ட மூவர்... - கேரளாவை உலுக்கிய பிளாக் மேஜிக் மரணம்! | black magic death in kerala - Vikatan
-
தமிழர்களின் மாடுகளை சிங்கள விவசாயிகள் கொல்வதாக குற்றச்சாட்டு - மட்டக்களப்பு மக்கள் போராட்டம்
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு விவகாரம் : பின்னணியிலுள்ள 'பொருளாதார முனைப்பு' குறித்து வெளிச்சம் பாய்ச்சவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார் அலன் கீனன் (நா.தனுஜா) மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு விவகாரத்தின் பின்னணியில் இருக்கக்கூடிய 'பொருளாதார ரீதியிலான முனைப்புக்கள்' தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன், அதனை அறிக்கையிடுவது மிக ஆபத்தானது என்பதனால் முதலாவது மட்டத்தில் இடம்பெறும் அரசியல் ரீதியிலான அநீதி குறித்தே அனைவரும் அவதானம் செலுத்துவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் ஆரம்பமாகிக் கடந்த முதலாம் திகதியுடன் 200 நாட்கள் பூர்த்தியடைந்திருக்கின்றன. மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பயிர்ச்செய்கையாளர்கள் தொடர்ச்சியாக அத்துமீறலில் ஈடுபட்டுவருகின்ற போதிலும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவரையில் அரசாங்கத்தினால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பண்ணையாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக் குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன், மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு விவகாரம் தொடர்பான அறிக்கையிடல்களில் இக்காணி சுவீகரிப்பின் பின்னால் இருக்கக்கூடிய பொருளாதார ரீதியிலான முனைப்புக்கள் (நோக்கம்) தொடர்பில் மிக அரிதாகவே ஆராயப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இன அடிப்படையிலான பிளவுகள் அரசியலுடன் தொடர்புடைய அதிகாரத்தையும், நலன்களையும் அடைந்துகொள்வதற்கான ஆயுதமாக இருக்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இருப்பினும் இவ்விவகாரத்தின் பின்னணியில் இருக்கக்கூடிய பொருளாதார முனைப்புக்களை அறிக்கையிடுவது மிகவும் ஆபத்தானது என்பதனால் நாம் முதலாவது மட்டத்தில் இடம்பெறும் அநீதியை மாத்திரமே கவனத்திற்கொள்கின்றோம் என விசனம் வெளியிட்டுள்ளார். மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு விவகாரம் : பின்னணியிலுள்ள 'பொருளாதார முனைப்பு' குறித்து வெளிச்சம் பாய்ச்சவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார் அலன் கீனன் | Virakesari.lk
-
பராமரிப்பில்லாது மூக்கைப் பொத்தவைக்கும் நாவாந்துறை சந்தை! பொதுமக்கள், வியாபாரிகள் அசௌகரியம்
யாழ்ப்பாணம் 8 மணி நேரம் முன் பராமரிப்பில்லாது மூக்கைப் பொத்தவைக்கும் நாவாந்துறை சந்தை! பொதுமக்கள், வியாபாரிகள் அசௌகரியம் (ஆதவன்) யாழ்ப்பாண மாநகரசபையின் ஆழுகைக்கு உட்பட்ட நாவாந்துறை பொதுச்சந்தை போதிய பராமரிப்பு வசதிகள் இன்றி துர்நாற்றத்தோடு காணப்படுகின்றது என்று பிரதேச மக்களும் வியாபாரிகளும் சுட்டிக்காட்டியுள்னர். இந்தச் சந்தையில் மரக்கறிகள், இறைச்சி வகைகள், மீன்கள் போன்ற வற்றுக்கான விற்பனை நிலையங்கள் உள்ளன. அதிகளவான மக்கள் இந்தச் சந்தையில் ஒன்றுகூடுகின்றனர்.ஆயினும் சந்தை போதிய பராமரிப்பின்றிக் காணப்படுகின்றது. சரியான முறையில் சுத்திகரிப்புச் செய்யப்படாமை மற்றும் கழிவகற்றப்படாமையால் அங்கு துர்நாற்றம் வீசுகின்றது. கழிவுகளில் புழுக்கள் உருவாகி விற்பனைநிலையங்களுக்குள்ளும் புகுகின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடுகள் உருவாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகரசபைக்குப் பல முறை தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வடிகாலமைப்பு, நீர் மற்றும் மலசலகூட வசதிகளையும், உரியமுறையில் கழிவுகளை அகற்றுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பராமரிப்பில்லாது மூக்கைப் பொத்தவைக்கும் நாவாந்துறை சந்தை! பொதுமக்கள், வியாபாரிகள் அசௌகரியம் (newuthayan.com)
-
கிளிநொச்சி - பொன்னாவெளி பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார்
உந்துருளியில் ஏறி தப்பித்த அமைச்சர் டக்ளஸ்!!! கிளிநொச்சி பொன்னாவெளியிலிருந்து மக்களால் துரத்தப்பட்டார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. (மாதவன்) கிளிநொச்சி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்கச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது. பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்கச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னாவெளி பகுதியில் சீமெந்து தொழிற்சாலைக்கான சுன்னக்கற்களை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தொடர்ச்சியாக தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்றைய தினம் அமைச்சரினால் குறித்த தொழிற்சாலையை ஆரம்பித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போது மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதன்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அத்தோடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், போராட்டக்காரருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பொலிசார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்தும் போராட்டம் இடம்பெற்றதுடன், திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றது. ஆயினும், மக்களின் தொடர் எதிர்ப்பினால் குறித்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டு அமைச்சர் திரும்பியுள்ளார். (ஏ) உந்துருளியில் ஏறி தப்பித்த அமைச்சர் டக்ளஸ்!!! (newuthayan.com)
-
ஜே.வி.பி தலைவரின் திமிர் பேச்சு; சிறீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு
ஜே.வி.பி தலைவரின் திமிர் பேச்சு; சிறீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு தமிழர்களும் நாட்டின் சம பிரஜைகள் என்பதை ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை என யாழ் வந்த ஜே.வி.பி தலைவரின் திமிர் பேச்சு வெளிப்படுத்தி நிற்கின்றது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு! (இனியபாரதி) இணைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு என்பதையும் நாம் இந்த நாட்டின் சம பிரஜைகள் என்பதையும் மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த அதன் தலைவருடைய பேச்சு வெளிப்படுத்தி நிற்கின்றது என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் 13 ஆவது அரசியலமைப்பு அதிகாத்தையே தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வாக தர தயாரில்லை என்பதையும் அரசியல் உரிமைப் பிரச்சினை தமிழ் மக்களுக்கு உள்ளது என்பதையும் அவர்கள் நிராகரித்திருப்பதையே அவருடைய பேச்சு மிகத் துல்லியமாக காட்டுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (05) நடந்த ஊடக சந்திப்பில் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார். அவர் மேலும் கூறுகையில் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை என்பது வெறும் பொருளாதாரம், அபிவிருத்தி மட்டுமல்ல. அவர்களுக்கு அரசியல் உரிமைப் பிரச்சினையே மிகவும் பிரதானமானது என்பதையும் ஜே.வி.பி அறியாதது அல்ல. இலங்கை வரலாற்றில் பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், இலங்கை இந்திய ஒப்பந்தம் தமிழர்களுக்கான உரிமைப் பிரச்சினை உண்டென்பதை எடுத்தக்காட்டியிருக்கின்ற சூழ்நிலையிலும் யாழ்ப்பாணம் வந்த ஜே.வி.பி தலைவர் அனுர குமார திஸநாயக்க "13 ஐ தருகின்றோம், 13 பிளஸ் தருகின்றோம் சமஸ்டி தருகின்றோம் என்று கொடுக்கல் வாங்கல் செய்ய வரவில்லை என திமிராகப் பேசிச் சென்றிருக்கின்றார். அத்துடன் தமிழ் மக்களின் அபிலாசைகளை சற்றும் புரிந்தவராக வெளிப்படுத்தியிருக்கவில்லை. இதன் மூலம் இப்போது தமிழ் மக்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே ஒரு குறைந்தளவு அதிகாரமுள்ள 13 ஆவது அரசியலமைப்பை கூட ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மிகவும் தெளிவாக புலப்படுகின்றது. இந்நிலையில் அனைவரும் கூட்டு முயற்சியுடன் ஒன்றிணைய வேண்டும் புதிய பாதைக்கு செல்ல வேண்டும் என ஜே.வி.பியினர் கூறுவது ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் வாக்கு வைப்பகத்தை இலக்கு வைத்தே என்பது புலனாகின்றது. இதேநேரம் இந்தியாவுக்கு சென்றிருந்த ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திசநாயக்க, வடக்கு மீனவர் பிரச்சினை தொடர்பாகவோ எல்லை தாண்டும் இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல் தொடர்பாகவோ அங்கு பேசியிருக்கவில்லை. அதேபோன்று குடாநாட்டுக்கு வந்திருந்தபோதும் கூட வடக்கு மீனவர்களுடைய பாதிப்புகள் தொடர்பாக எந்தவிதமான அக்கறையையும் கொண்டிருக்கவில்லை. மாறாக எடுத்ததற்கெல்லாம் இந்திய எதிர்ப்பு பேசிவந்த ஜே.வி.பி தற்போது அதிலிருந்து விலகி மௌனம் சாதித்துவருவதும் ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது இந்திய பருப்பை உண்ண மாடம்டோம், இந்தியாவிலிருந்து இறக்கமதி செய்யப்பட்ட பேருந்துகளில் ஏறமாட்டோம், தீவுப் பிரதேசங்கள் இந்தரியாவுக்கு தாரைவார்க்கப்படுகின்றது என் விமர்சனங்களை கடுமையாக முன்வைத்தவர்கள் இந்த ஜே.வி.பியினர். ஆனால் அரச தலைவர் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அவ்விடயத்தில் அமைதி காத்து வருகின்றனர். அதேபோன்று கச்சதீவு விவகாரத்திலும் அது இலங்கைக்கே சொந்தம் என நாம் வெளிப்படுத்தியிருந்த போதும் ஜே.வி.பி அது தொடர்பாக எவ்வித கருத்தையும் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கவில்லை. இவ்வாறான நிலையில் எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் இவர்களுக்கு வாக்களிப்பார்களா எனவும் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஏ) ஜே.வி.பி தலைவரின் திமிர் பேச்சு; சிறீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு (newuthayan.com)
-
முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் இன்று இலங்கை வருகின்றனர்
'' மூவரின் நிலை இதுதான் '' இனியபாரதி இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள், இலங்கைக்கு கடும் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாட்டுடனேயே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 வருடங்களின் பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் நால்வரும், திருச்சி சிறப்பு முகாமில் சுமார் ஒன்றரை வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் சாந்தன், நாடு திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தார். ஏனைய மூவரும் இலங்கைக்கு வருவது தமக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி தாம் வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வந்திருந்தனர். அதற்கு இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கைத் துணைத் தூதரகமும் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டை வழங்க மறுத்தது. இந்நிலையில், கடந்த மாதம் சாந்தன் உயிரிழந்தமையால், சிறப்பு முகாமிலிருந்த ஏனைய மூவரின் மனநிலை பாதிக்கப்பட்டது. அதனால், அவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. சிறப்பு முகாமில் தொடர்ந்து இருந்தால் நாமும் உயிரிழந்து விடுவோம் என்ற பயம் அவர்களிடம் ஏற்பட்டமையால், இலங்கை திரும்ப சம்மதித்தனர். இலங்கை திரும்ப யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வருவதற்கான வானூர்தி பயணச்சீட்டு எடுக்க முயன்ற வேளை சிறிலங்கன் எயார்லைன்ஸ் வானூர் மூலமே பயணிக்க முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. குறித்த விமானம் சென்னையிலிருந்து, கொழும்புக்கே இருந்தமையால் அதில் பயணிக்க வேண்டி ஏற்பட்டது. அதேபோன்று, சென்னை வானூர்தி நிலையம் வரையில் மூவருக்கும் பாதுகாப்பு வழங்கும் முகமாக அதிகாரிகள் செயற்பட்டனர். அனைத்துப் பயணிகளும் விமானத்திலிருந்து இறங்கிய பின்னரே இறங்க வேண்டும் போன்ற சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ஒருவரை நாடு கடத்தும் போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இலங்கை வந்திறங்கியதும் அதிகாரிகள், இவர்கள் மூவரின் கடவுச்சீட்டையும் மூவரையும் ஆயப்பகுதி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சுமார் இரண்டு மணிநேரம் விசாரணைகளை முன்னெடுத்தனர். எவ்வாறு நாட்டை விட்டு வெளியேறினீர்கள்? எதற்காக சென்ற நீங்கள்? எப்ப சென்ற நீங்க? போன்ற பல்வேறு கேள்விகளைக் கேட்டு அவற்றைப் பதிவு செய்தனர். பின்னர் இவர்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறியமையால் இவர்களுக்கு எதிராக நீர்கொழும்பு நீதிமன்றில் தாம் வழக்குத் தாக்கல் செய்யப் போகின்றோம் எனத் தெரிவித்தனர். பிறகு உயர் அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடி, இவர்களுக்கு எதிராக இலங்கையில் எந்தக் குற்றச்சாட்டு இல்லை என்பதாலும் 33 வருடங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் வெளியேறியமை தொடர்பில் வழக்குத் தொடர்வதில் உள்ள சிக்கல்கள் காரணமாகவும் வழக்குத் தொடராது விட்டனர். ஆயப்பகுதி அதிகாரிகளின் விசாரணைகளின் போது, மூவருடன் நானும் அருகில் இருந்தேன். அவர்களின் விசாரணை முடிவடைந்த பின்னர், புலனாய்வுப் பிரிவினர் அவர்களைப் பொறுப்பெடுத்து தமது விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது, அவர்கள் மூவரையும் தாம் தனித்தனியாக விசாரணை செய்ய வேண்டும் எனக் கூறி மூவரையும் தனித்தனியே அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் விடுவித்தனர் என மேலும் தெரிவித்தார். (க) '' மூவரின் நிலை இதுதான் '' (newuthayan.com)
-
கடந்த ஆண்டு சிங்கப்பூரில் இந்தியா, இலங்கையைச் சேர்ந்த 500 பணிப்பெண்களிடம் மோசடி
Published By: DIGITAL DESK 3 05 APR, 2024 | 03:09 PM 2023 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதில் புலம்பெயர்ந்தவர்களிடம் இடம் பெற்ற மோசடிகள் 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக மோசடிகளால் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் மொத்தமாக 46,563 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதோடு, மக்கள் 651.8 மில்லியன் சிங்கபூர் டொலரை இழந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டிலிருந்து மோசடி குற்றச் செயல்கள் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், அதிக எண்ணிக்கையிலான மோசடி வழக்குகள் 2023 இல் பதிவாகியுள்ளதாக சிங்கபூர் பொலிஸ் தெரிவித்துள்ளது. மோசடிகளால் பாதிக்கப்பட்ட சுமார் 500 வெளிநாட்டு பணிப்பெண்கள் தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா, இலங்கை மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து சிறந்த வேலை வாய்ப்புகள், அதிக ஊதியம் மற்றும் நிலையான அரசியல், பொருளாதார சூழலைத் தேடி புலம்பெயர்ந்தவர்களாவர். 2020 ஆம் ஆண்டு மியான்மரைச் சேர்ந்த பணிப்பெண்ணை ஒருவர் வைபர் செயலி ஊடாக தொடர்பு கொண்டுள்ளார். அவர் தன்னை வங்கி ஊழியர் கூறி பணிப்பெண்ணிடம் வங்கி அட்டையை "புதுப்பிக்க" விவரங்களைக் கோரியுள்ளார். பின்னர் அவரது வங்கியிலிந்து 2,600 சிங்கபூர் டொலரை எடுக்கபட்டு 45 சிங்கபூர் டொலர் மட்டுமே மீகுதியாக இருந்துள்ளது. இந்நிலையில், வங்கியிலிருந்து 1,700 சிங்கபூர் டொலரை மீட்டெடுத்துள்ளதாக சிங்கப்பூர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இந்த மோசடி குற்றச் செயல்களில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்க உள்நாட்டலுவல்கள் அமைச்சு கண்காணிக்கிறதா? நிதிக் குற்றங்களைத் தடுக்க அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என கேள்விகைள் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கே.சண்முகம், மோசடிகளுக்கு எதிராக தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பயிற்சி அளித்து தங்களால் இயன்றதைச் செய்வது வருகிறோம். சிங்கப்பூருக்குப் புதிதாக வேலைக்கு வரும் பணிப்பெண்களைத் தவிர்த்து ஏற்கெனவே வேலை செய்யும் பணிப்பெண்களுக்கும் அவ்வப்போது பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நடப்பில் உள்ள மோசடி உத்திகள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்படுகிறது. இதன் வாயிலாக அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர மோசடி புள்ளிவிவரங்களின்படி, சிங்கப்பூரில் உள்ள மக்கள் 2019 ஆம் ஆண்டு முதல் $2.3 பில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடிக்காரர்களால் இழந்துள்ளனர். பலர் தங்கள் வருமானம் மற்றும் வாழ்நாள் சேமிப்புகளில் பெரும் பகுதியை இழந்துள்ளனர். நிதி மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மட்டுமல்லாமல், வீடுகளை உடைத்தல், அத்துமீறி நுழைதல் மற்றும் துஷ்பிரயோகம் போன்ற பொதுவான குற்றங்களைத் தடுப்பது மற்றும் பாதுகாத்துக் கொள்வது குறித்து புலம்பெயர்ந்த பணிப்பெண்களுக்கு பயிற்சியளிகளை பொலிஸ் வழங்குகின்றது. கடந்த ஆண்டு சிங்கப்பூரில் இந்தியா, இலங்கையைச் சேர்ந்த 500 பணிப்பெண்களிடம் மோசடி | Virakesari.lk
-
வலி வடக்கில் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை ; மக்கள் எதிர்ப்பினால் அளவீட்டுப்பணி நிறுத்தம்
(எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணிகளை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிப்பதற்கான அளவீட்டுப்பணி இன்று வெள்ளிக்கிழமை (05) முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன், நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காணி உரிமையாளர்களின் எதிர்ப்பினை அடுத்து காணியினை அளவீடு செய்வதற்கு தமக்கு விருப்பம் இல்லை என காணி உரிமையாளர்கள் கடிதம் எழுதி கையொப்பமிட்டு வழங்கியதை அடுத்து நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் ஜே/226 மற்றும் காங்கேசன்துறை ஜே/233 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான், புதுக்காடு, சோலைசேனாதிராயன் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 29 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் இந்த அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது. வலி வடக்கில் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை ; மக்கள் எதிர்ப்பினால் அளவீட்டுப்பணி நிறுத்தம் | Virakesari.lk
-
இலங்கையில் இடம்பெறும் சிறுவர் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பான செய்திகள்
10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; கராப்பிட்டிய வைத்தியசாலையில் சம்பவம்! 05 APR, 2024 | 05:20 PM கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவர் இன்று (5) கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் பாதிக்கப்பட்ட சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்த அதே வார்டில் ( விடுதி) அனுமதிக்கப்பட்டுள்ள மற்றுமொரு சிறுமியின் தந்தையாவார். சிறுமியின் தாய் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், சந்தேக நபர் இந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி இது தொடர்பில் தனது தாயிடம் தெரிவித்ததையடுத்து வைத்தியசாலை அதிகாரிகளினால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 39 வயதுடைய சந்தேக நபர் காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; கராப்பிட்டிய வைத்தியசாலையில் சம்பவம்! | Virakesari.lk
-
தலாய்லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதை சீனா தடுக்கிறது - இந்திய ஊடகத்திற்கு இலங்கை பௌத்த மதகுரு கருத்து
Published By: RAJEEBAN 05 APR, 2024 | 05:55 PM திபெத்தின் ஆன்மீக தலைவர்தலாய்லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதை சீனா தடுக்கின்றது என இலங்கையை சேர்ந்த பௌத்த மதகுரு ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார் இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தலாய் லாமாவிற்கு புத்தரின் புனிதநினைவுச்சின்னத்தை வழங்கிய இலங்கை பௌத்தபிக்குகள் குழுவில் இடம்பெற்றிருந்த கலாநிதி வஸ்கடுவே மகிந்தவன்ச தேரர் இதனை தெரிவித்துள்ளார். தலாய்லாமா குறித்து சீனா என்ன நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பது உங்களிற்கு தெரியும் நீங்கள் நினைவுச்சின்னத்தை வழங்கியமை குறித்து சீனா சீற்றமடைந்திருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் சில வருடங்களிற்கு முன்னர் இலங்கையை சேர்ந்த பௌத்தமத தலைவர்கள் தலாய்லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தனர் என தெரிவித்துள்ளார். ஆனால் பிரச்சினை சீனாவிடமிருந்து வருகின்றது ஏன் என தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பௌத்ததலைவர் என்ற அடிப்படையில் நாங்கள் தலாய்லாமாவை மதிக்கின்றோம் அவர் வர்த்தகர் இல்லை என தெரிவித்துள்ள கலாநிதி வஸ்கடுவே மகிந்தவன்ச தேரர் நாங்கள் அவரை மதித்து இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைத்தோம் சீனா அதனை விரும்பவில்லை சீனா எங்கள் அரசாங்கத்திற்கு இது குறித்து அழுத்தம் கொடுத்தது எனவும் தெரிவித்துள்ளார். இது எங்களிற்கு பிடிக்கவில்லை அவர் ஒரு பௌத்த தலைவர் அவருக்கு சுதந்திரம் உள்ளது அவரை இலங்கைக்கு அழைப்பதற்கான சுதந்திரம் எங்களிற்குள்ளது எனவும் பௌத்தமதகுரு தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தலாய்லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டால் நாங்கள் பெரும்கிழ்ச்சி அடைவோம் இலங்கையர்கள் இமயமலைக்கு சென்றனர் அதில் என்ன பிரச்சினை அவர் பௌத்ததலைவர் அவர் பௌத்தத்தை போதிக்கின்றார் எனவும் இலங்கையை சேர்ந்த பௌத்தமதகுரு தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கை உறவுகளை எப்படி பார்க்கின்றீர்கள் என்ற கேள்விக்கு இந்தியாவே எங்கள் தாய்நாடு எனது கலாச்சார மத தொடர்புகள் இந்தியாவிலிருந்தே இலங்கைக்கு வந்தன எங்கள் மொழியும் இந்தியாவிலிருந்தே ஆரம்பமாகின்றது சமஸ்கிருதம்-;பாலி நாங்கள் இந்தியாவுடன் எங்கள் நட்புறவை வளர்க்கவேண்டும் எங்கள் மூத்த சகோதரர் இந்தியா என குறிப்பிட்டுள்ளார். தலாய்லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதை சீனா தடுக்கிறது - இந்திய ஊடகத்திற்கு இலங்கை பௌத்த மதகுரு கருத்து | Virakesari.lk
-
கெஹெலிய ரம்புக்வெலவும் சுகாதார அதிகாரிகளும் 100 மில்லியன் நஷ்;டஈட்டினை வழங்கவேண்டும் - கண்மருந்தினால் பார்வைபாதிக்கப்பட்ட நோயாளி
05 APR, 2024 | 04:12 PM அரசாங்க மருத்துவமனையில் கண்புரை அறுவைசிசிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட மருந்து காரணமாக கண்பார்வையை இழந்த நோயாளியொருவர் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடமிருந்து 100 மில்லியன் நஷ்டஈட்டை கோரியுள்ளார். கந்தபொலவை சேர்ந்த மகரி ராஜரட்ணம் என்ற நபர் சட்டநிறுவனம் ஊடாக நஷ்டஈட்டை கோரியுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தேசிய மருந்துகட்டுப்பாட்டு அதிகார சபையின் அதிகாரிகள் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தனக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக நஸ்டஈட்டை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ராஜரட்ணம் இழப்பீடு வழங்கப்படாவிட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இன்விக்டஸ் என்ற சட்டநிறுவனத்தின் ஊடாகவே அவர் தனது நஷ்டஈட்டு கோரிக்கையை முன்வைத்துள்ளார். 2023ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் திகதி தனது கட்சிக்காரர் நுவரேலியா மருத்துவமனையில் கண்சத்திரசிகிச்சை செய்துகொண்டார் ஆறாம் திகதி அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார் மருத்துவமனையில் ப்ரெட்னிசோலோன் அசிடேட்என்ற மருந்தினை பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார்கள் என தெரிவித்துள்ளது. எனினும் குறிப்பிட்ட கண் மருந்தினை பயன்படுத்தியதை தொடர்ந்து தனது கட்சிக்காரர் தலைவலி உட்பட பல பாதிப்புகளை எதிர்கொண்டனர் என சட்டநிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவபரிசோதனைகள் இடம்பெற்றன எனது கட்சிக்காரர் பத்தாம் திகதி மீண்டும் தேசிய கண்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு இடம்பெற்ற மருத்துவபரிசோதனைகள் மூலம் குறிப்பிட்ட கண்மருந்து காரணமாக அவர் தனது கண்பார்வையை இழந்துகொண்டிருப்பது தெரியவந்தது எனவும் குறிப்பிட்டுள்ளது. அந்த கண்மருந்துகள் தரமற்றவை அந்த மருந்தினை பயன்படுத்தியவர்கள் எண்டோபனைட்டிஸ் நோய் பாதிப்பிற்குள்ளானார்கள் எனவும் அந்த சட்டநிறுவனம் தெரிவித்துள்ளது.கெஹெலிய ரம்புக்வெலவும் சுகாதார அதிகாரிகளும் 100 மில்லியன் நஷ்;டஈட்டினை வழங்கவேண்டும் - கண்மருந்தினால் பார்வைபாதிக்கப்பட்ட நோயாளி | Virakesari.lk
-
கிளிநொச்சி - பொன்னாவெளி பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார்
Published By: DIGITAL DESK 3 05 APR, 2024 | 05:05 PM கிளிநொச்சி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (05) பகல் இடம்பெற்றுள்ளது. பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னாவெளி பகுதியில் சீமெந்து தொழிற்சாலைக்கான சுன்னக்கற்களை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்றைய தினம் அமைச்சர் குறித்த தொழிற்சாலையை ஆரம்பித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதன்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும், போராட்டக்காரருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பொலிசார் கட்டுப்படுத்தியிருந்தனர். தொடர்ந்தும் போராட்டம் இடம்பெற்றதுடன், திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றது. ஆயினும், மக்களின் தொடர் எதிர்ப்பினால் குறித்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டு அமைச்சர் திரும்பியுள்ளார். கிளிநொச்சி - பொன்னாவெளி பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார் | Virakesari.lk
-
வடக்கில் பதிவாகிய அனல் பறக்கும் வெப்பம்!
வடக்கில் பதிவாகிய அனல் பறக்கும் வெப்பம்! (புதியவன்) நேற்றைய தினம் (03) வடக்கு மாகாணத்தின் உள் நிலப்பகுதிகள் பலவற்றில் நாளின் அதிகூடிய வெப்பநிலை 40 பாகை செல்சியஸ்க்கு மேலாக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கீரிசுட்டானில் 40.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பிற்பகல் 1.38 மணிக்கு பதிவாகியுள்ளது. அதேவேளை சில இடங்களில் பிற்பகலுக்கு பின்னர் மிதமான மழை கிடைத்துள்ளது. எதிர்வரும் 9ம் திகதி செங்கலடி,ஏறாவூர் பிரதேசங்களுக்கு மேலாகவும், 10ம் திகதி தாண்டிக்குளம், புளியங்குளம், வாகரை பகுதிகளுக்கு மேலாகவும், 11ம் திகதி கிண்ணியா, ஈரற்பெரியகுளம் பகுதிகளுக்கு மேலாகவும், 12ம் திகதி திரியாய், வஞ்சையன்குளம், புதுக்கமம், ஓமந்தை, மருதன்குளம், இரணைமடு, அம்பகாமம் பகுதிகளுக்கு மேலாகவும், 13 ம் திகதி அக்கராயன், முறிகண்டி, கெருடாமடு,குமுழமுனை, தண்ணீருற்று, பகுதிகளுக்கு மேலாகவும் 14ம் திகதி மண்டைதீவு, நயினாதீவு, புங்குடுதீவு, மணற்காடு, மருதங்கேணி,உடுத்துறை பகுதிகளுக்கு மேலாகவும் 15ம் திகதி பருத்தித்துறை, நெடுந்தீவுக்கு மேலாகவும் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இக்காலப்பகுதிகளில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வெப்பநிலை மிக உயர்வாக காணப்படும். அதேவேளை இப்பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட காலங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வெப்பநிலை மிக உயர்வாக இருக்கும் என்பதனால் போதுமான ஏற்பாடுகளுடன் செயற்படுவது சிறந்தது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். (ஏ) வடக்கில் பதிவாகிய அனல் பறக்கும் வெப்பம்! (newuthayan.com)
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து ஒரு கொள்கலனை மாத்திரம் இலங்கையில் இறக்க திட்டமிட்டிருந்தனர் - அமைச்சர் நிமால் Published By: RAJEEBAN 04 APR, 2024 | 11:45 AM டாலி சரக்கு கப்பலில் 56 கொள்கலன்கள் ஆபத்தான பொருட்களுடன் காணப்பட்டன அவற்றில் ஒன்றை மாத்திரம் கொழும்பு துறைமுகத்தில் இறக்க திட்டமிட்டிருந்தனர் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பல்டிமோரில் பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளான கப்பல் இலங்கையை நோக்கி ஆபத்தான பொருட்களுடன் பயணித்துக்கொண்டிருந்தது என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். கப்பலின் இலங்கை முகவர் உத்தியோகபூர்வமாக இதனை தெரியப்படுத்தியிருந்தார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகமே குறிப்பிட்ட கப்பலின் இறுதி இலக்கு இல்லை இறுதி இலக்கு சீனா எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். சர்வதேச கடல்சார் விதிமுறைகளிற்கு இணங்க துறைமுகத்தை அடைவதற்கு இரண்டு நாட்களி;ற்கு முன்னர் கப்பலில் உள்ள பொருட்கள் குறித்த விபரங்களை தெரிவிக்கவேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர் வெளிப்படைதன்மை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்வதற்காக கடுமையான சுங்க பரிசோதனைகள் இடம்பெறும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். டாலி போன்ற கப்பல்களில் பொதுவான மற்றும் ஆபத்தான பொருட்கள் காணப்படும் அவ்வாறான கப்பல்களை திருப்பி அனுப்புவது சாத்தியமற்ற விடயம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து ஒரு கொள்கலனை மாத்திரம் இலங்கையில் இறக்க திட்டமிட்டிருந்தனர் - அமைச்சர் நிமால் | Virakesari.lk
-
முஸ்லிம்களிடம் அரசு முறையாக மன்னிப்புக்கோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன்
Published By: DIGITAL DESK 3 04 APR, 2024 | 03:13 PM கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட ‘கட்டாய சடலம் எரிப்பு’ (ஜனாசா எரிப்பு) கொள்கை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் அரசு முறையாக மன்னிப்புகோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். முஸ்லிம் மக்களின் உணர்வுகள், மத நம்பிக்கை என்பன கருத்திற்கொள்ளப்படாமல் கொரோனா காலப்பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் அந்த சமூகத்தினர் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். அதற்கான மன்னிப்பு கோருகின்றேன் எனவும் அமைச்சர் கூறினார். அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் நேற்று (02 நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “கடந்த வருடம் ஜனவரி மாதமே நான் அமைச்சராக பதவியேற்றேன். எனினும், இதுவிடயத்தில் நீர்வழங்கல் அமைச்சு தொடர்புபட்டிருந்ததால் மன்னிப்பு கோருகின்றேன். அதேபோல அக்காலப்பகுதியில் இவ்விடயதானம் தொடர்பில் அமைச்சராக இருந்தவர்கள் இதற்கு பொறுப்புகூறவேண்டும். கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை புதைப்பதால் நிலத்தடி நீருக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது, நீர்வளம் மாசுபடாது என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டி இருந்தபோதிலும், விஞ்ஞானப்பூர்வமான விடயங்களைக் கருத்திற்கொள்ளாமல் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டது. நான் அமைச்சராக பதவியேற்ற பின்னர் மேற்படி திட்டம் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டது. துறைசார் நிபுணர்களால் தவறான கொள்கையே கடைபிடிக்கப்பட்டுள்ளது என ஆய்வுகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, முஸ்லிம் மக்களிடம் அரசு முறையாக மன்னிப்பு கோர வேண்டும் என்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும்.” – என்றார். முஸ்லிம்களிடம் அரசு முறையாக மன்னிப்புக்கோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன் | Virakesari.lk