Everything posted by பிழம்பு
-
வவுனியாவில் 15 வயது சிறுமிக்கு போதைமருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வு : உடந்தையாக செயற்பட்ட பெண் உட்பட நால்வர் கைது
Published By: DIGITAL DESK 3 15 MAY, 2024 | 03:13 PM வவுனியா, தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று புதன்கிழமை (15) தெரிவித்தனர். வவுனியா, பண்டாரிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயது பெண் ஒருவரை வவுனியா நகரையண்டிய தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றிற்கு இளைஞரொருவர் அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு இளைஞர் போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும், அதற்கு உடந்தையாக செயற்பட்ட பெண் உட்பட 4 பேர் அண்மையில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் வவுனியா பொலிஸார் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் அவரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். வவுனியாவில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் ; விடுதி முகாமையாளர் கைது | Virakesari.lkவவுனியாவில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் ; விடுதி முகாமையாளர் கைது | Virakesari.lk
-
இந்தியாவுடன் இணைந்து சிறிய ஆயுதங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க இலங்கை முயற்சி - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
15 MAY, 2024 | 04:43 PM சிறியஆயுதங்களை உற்பத்திசெய்யும் ஆயுத தொழிற்சாலையை அமைப்பது குறித்து இந்தியாவுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இராணுவம் இந்தியாவின் பாதுகாப்பு தொழில்துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சிகுறித்து இலங்கை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் இலங்கை இராணுவத்திற்கு நிபுணத்துவம் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை உற்பத்தி தொழில்துறை குறித்து கவனம் செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நாங்கள் ஏற்கனவே ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றோம் ஆனால் சிறிய அளவில் என தெரிவித்துள்ள அவர் நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் இது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த தருணத்தில் நாங்கள் இந்தியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இந்திய இலங்கை பாதுகாப்பு உறவுகள் சிறந்த நிலையில் உள்ளன கடந்த இரண்டு தசாப்தகாலத்தில் இந்தியாவின் ஆயுத உற்பத்தி துறை பல மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் இணைந்து சிறிய ஆயுதங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க இலங்கை முயற்சி - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் | Virakesari.lk
-
ரஷ்ய, உக்ரைன் போரில் பங்கேற்ற 16 இலங்கையர்கள் பலி - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தகவல்
(எம்.மனோசித்ரா) ரஷ்ய மற்றும் உக்ரைன் போரில் பங்கேற்ற 16 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக இதுவரையில் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு இராணுவ கூலிப்படைக்கு ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் இதுவரை 288 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ரஷ்ய மற்றும் உக்ரைன் இராணுவ கூலிப்படைக்கு ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல்களை தெரிவிப்பதற்கு 011 240 1146 என்ற தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இதுவரை 288 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு, குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் புலனாய்வு பிரிவு பரந்துபட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. அதற்கமைய ஓய்வு பெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி உள்ளிட்ட சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முகநூல் ஊடாகவே இந்த ஆட்கடத்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பகிரப்பட்ட பல்வேறு விளம்பங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இவ்வாறு உக்ரைனுக்கு அனுப்பப்பட்டு அங்கு இராணுவத்தில் சிக்கியுள்ள சிப்பாயொருவருக்கு வழங்கப்பட்டுள்ள சின்னம், ரஷ்ய மொழில் தயாரிக்கப்பட்ட ஒப்பந்தம் என்பனவும் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு எத்தனை பேர் சென்றுள்ளனர் என்பது குறித்த துள்ளியமான தகவல்கள் எவையும் எமக்குத் தெரியாது. அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்திலும் இது தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டது. அத்தோடு இது தொடர்பில் தகவல் தெரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போரில் பங்கேற்ற இலங்கையர்கள் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றார். ரஷ்ய, உக்ரைன் போரில் பங்கேற்ற 16 இலங்கையர்கள் பலி - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தகவல் | Virakesari.lk
-
த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு!
த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1991ஆம் ஆண்டு இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்தத் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு தடை நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய ஒன்றிய அரசின் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தடை குறித்த அறிவிப்பில், 'விடுதலைப் புலிகள் இன்னும் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய ஒன்றிய அரசு கருதுகிறது. இலங்கையில் நடைபெற்ற போரில் கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட போதிலும், தனி ஈழம் என்ற கருத்தை அவர்கள் கைவிடவில்லை. பரப்புரை மற்றும் நிதி சேர்க்கை நடவடிக்கைகள் என தனி ஈழத்துக்கான நடவடிக்கைகள் தொடர்ந்து ரகசியமாக நடைபெறுகின்றன. போரில் உயிர் தப்பிய விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகிகள் இலங்கையிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டமைக்க தேவையான முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் மக்கள் மத்தியில் பிரிவினைவாதப் போக்கைத் தொடர்ந்து வளர்த்து வருவதோடு, இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவுத் தளத்தை மேம்படுத்துகின்றன. இது இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்' என்று கூறி தடைக்கான காரணங்களாக இந்திய ஒன்றிய அரசின் மத்திய உள்துறை சுட்டிக்காட்டியுள்ளது. (அ) த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு! (newuthayan.com)
-
பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பொறுப்புக்கூற வேண்டும் - சஜித்
இஸ்ரேலின் கொலைகார அரச பயங்கரவாதம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பாலஸ்தீனத்திற்காக நாங்கள் முன் நிற்கிறோம் - எதிர்க்கட்சித் தலைவர் பாலஸ்தீன மக்களுக்கு பல தசாப்தங்களாக இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கெதிராக இன, மத வேறுபாடின்றி பாலஸ்தீன மக்களுடன் என்றும் முன்நிற்போம். இந்த கொடூரமான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுகின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். கொலைகார அரசாக இஸ்ரேல் அரசு பாலஸ்தீன மக்களின் வாழ்வை முற்றாக அழித்து, அவர்களின் தாயகத்தை அழித்து, அரச பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தி பாலஸ்தீன மக்கள் மீது நடத்தி வரும் மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு எதிராக இலங்கையர்களாகிய நாம் உலக மக்களோடு முன் நிற்போம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவித்து திங்கட்கிழமை (13) கொழும்பு லிபர்டி சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். உடனடியாக போர் நிறுத்த்திற்குச் சென்று பட்டினியால் வாடும் பாலஸ்தீன மக்களின் வாழும் உரிமை எல்லாவற்றுக்கும் முதல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று முழு உலகுமே கோரிக்கை விடுக்கிறது. இஸ்ரேல் அரசாங்கம் மருத்துவமனைகளுக்கு குண்டுத்தாக்குதல் நடத்துகிறது. பாடசாலைக்கு குண்டுத் தாக்குதல் நடத்துகிறது. சிவில் குடிமக்களை அப்பட்டமாக கொலை செய்து வருகிறது. இந்த கொலைகார செயலை கண்டிக்கின்றேன். இந்த அரச பயங்கரவாதத்தை கண்டிக்கின்றேன். இஸ்ரேலும் பலஸ்தீனும் சமாதானமாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என இதற்கு முன்னர் நாம் பேசும் போதெல்லாம் கூறினோம். இஸ்ரேல் அரசாங்கம் தொடர்ச்சியாக பலமுறை பேச்சுவார்த்தைகளை நிராகரித்து, பாலஸ்தீன தாயகத்தை அழிக்கும் அரச பயங்கரவாதத்தை கண்டிக்கின்றேன், இந்த கொலைகார பயங்கரவாதத்தை கைவிடுமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் கேட்டுக் கொள்கின்றேன். பெயர் குறிப்பிட்டு கூறுவது இதுவே முதற் தடவை. சமாதானத்துக்கும் பேச்சுவார்த்தைக்கும் இடமளித்தே இதற்கு முன்னர் பெயர் கூறாது பேசினேன்.இரு தரப்பினரையும் ஒன்றிணைக்கும் நோக்கிலயே பேசினேன். ஆனால் நெதன்யாகு அரசாங்கம் தொடர்ச்சியாக இடைவிடாது மேற்கொண்டு வரும் மிலேச்சத்தனமான, கீழ் தர செயலை, பயங்கரவாத நடவடிக்கையை நாம் வண்மையாக கண்டிக்கிறோம். பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையை மாத்திரமல்ல, அவர்களது நாட்டுக்குள் வாழும் உரிமை அவர்களுக்குள்ளது. அந்நாட்டுக்காக இலங்கையர்களாகிய நாமனைவரும் சாதி,இன,மத,குலம், கட்சி அல்லது வேறேதேனும் பேதங்கள் இருப்பின் சகல பேதங்களையும் கடந்து பலஸ்தீன மக்களின் சகல உரிமைகளுக்காகவும் முன்நிற்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார். இஸ்ரேலின் கொலைகார அரச பயங்கரவாதம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பாலஸ்தீனத்திற்காக நாங்கள் முன் நிற்கிறோம் - எதிர்க்கட்சித் தலைவர் | Virakesari.lk
-
யாழில் ஐஸ் போதைப்பொருள் ஆய்வுகூடம் சுற்றிவளைப்பு - இருவர் கைது
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்வதற்கு பயன்படும் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் கண்காணிப்பில் உள்ளனர். குறித்த வீடானது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் ஆய்வுகூடமாக செயற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் வீடானது சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பில் இருந்து இரசாயன பகுப்பாய்வாளர்களை வரவழைத்து பகுப்பாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பிரதான சந்தேக நபர் தப்பியோடியுள்ள நிலையில் அங்கு பணிபுரியும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழில் ஐஸ் போதைப்பொருள் ஆய்வுகூடம் சுற்றிவளைப்பு - இருவர் கைது | Virakesari.lk
-
யாழில் உரும்பிராய் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!
Published By: DIGITAL DESK 7 14 MAY, 2024 | 03:28 PM யாழ்ப்பாணம் உரும்பிராய் மேற்கு இளைஞர்களால், தியாகி பொன். சிவகுமாரனின் சிலை முன்பாக முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரத்தின் மூன்றாவது நாளான இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. இதில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் பேரியக்க ஒருங்கிணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான வேலன் சுவாமிகள் மற்றும் உரும்பிராய் மேற்கு இளைஞர்கள் கிராம மக்கள் பயணிகள் என பலரும் கலந்துகொண்டனர். யாழில் உரும்பிராய் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! | Virakesari.lk தலைவர் வீட்டின் முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி (இனிய பாரதி) இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் இன்று காலை 11 மணியளவில் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வீட்டின் முன்றலில் அமைந்துள்ள வல்வெட்டித்துறை ஆலடிச்சந்தியில் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இதன் பொழுது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து இரு மாவீரர்களின் தந்தையான தங்கேஸ்வரனால் பொதுச்சுடரேற்றி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஈகச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் விநியோகிக்கப்பட்டது. இதன் பொழுது முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றை உள்ளடக்கிய துண்டறிக்கையும் வழங்கி வைக்கப்பட்டது. தலைவர் வீட்டின் முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி (newuthayan.com)
-
மட்டக்களப்பில் பொலிஸாரின் தடைகளின் மத்தியில் மூன்றாவது நாளாகவும் தொடரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள்
Published By: DIGITAL DESK 3 14 MAY, 2024 | 04:02 PM இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் பொலிஸாரின் பல்வேறு தடைகளையும் அச்சுறுத்தலையும் மீறி நடைபெற்றது. இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து மூன்றாவது நாளாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு மட்டக்களப்பு நகரில் விமான நிலைய வீதியில் உள்ள ஸ்ரீபரிபூர்ண விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,ஜேசுசவை துறவி அருட்தந்தை ஜோசப்மேரி, சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.லவகுமார்,தமிழரசுக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் திருமதி ஆர்.ஜெயபிரகாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது ஆலயத்திற்கு முன்பாக கஞ்சி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் பெருமளவு புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருந்தனர். அங்கு வந்த மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸார் அங்கு கஞ்சி வழங்கும் செயற்பாடுகளை செய்யவேண்டாம் என்று அங்கிருந்து அனைத்தையும் எடுத்துக்கொண்டு செல்லுமாறும் பணித்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து தமது செயற்பாடுகளை முன்னெடுத்தனர். இந்த நிலையில் சுகாதார நடைமுறையினை பின்பற்றவும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைகள் இன்று கஞ்சி செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியாது என மீண்டும் தடைகளை ஏற்படுத்துவதற்கு பொலிஸார் முயற்சித்த நிலையில் அங்கு பொதுச்சுகாதார பரிசோதர் ஒருவரையும் அழைத்துவந்து நிகழ்வினை தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில் அங்குவந்த பொதுச்சுகாதார பரிசோதகர் சுகாதார நடைமுறைகளைப்பேணி செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு தெரிவித்ததை தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை பேணியவாறு கஞ்சி காய்ச்சும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது கஞ்சியை பரிமாறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது விமான நிலைய வீதியின் இரு மருங்கிலும் போக்குவரத்து பொலிஸார் நிறுத்தப்பட்டு வீதியில் செல்வோருக்கு கஞ்சியை பரிமாறும் செயற்பாடுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கஞ்சியை பருக வாகனங்களை நிறுத்தியவர்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையிலும் பெருமளவான மக்கள் கஞ்சியை வாங்கி பருகும் நிலைமையை காணமுடிந்தது. மட்டக்களப்பில் பொலிஸாரின் தடைகளின் மத்தியில் மூன்றாவது நாளாகவும் தொடரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் | Virakesari.lk
-
நினைவேந்தும் உரிமையை நிராகரிக்கவே முடியாது சம்பந்தன் எடுத்துரைப்பு; மூதூர் கைதுகளுக்கு கடும் கண்டனம்
ஆர்.ராம் தமிழ் மக்கள் தங்களது உயிர்நீத்த உறவுகளை நினைவேந்துவதற்கான முழுமையான உரிமை உடையவர்கள். அது அவர்களின் அடிப்படை உரிமையாகும். அதனை நிராகரிக்கவே முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை மூதூர் சேனையூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை விநியோகித்தவர்கள் இரவு நேரத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கல்முனையிலும் கஞ்சி விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கருத்து வெளியிடும்போது சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வைகாசி மாதம் உணர்வுப் பூர்வமானது. அவர்கள் தமது உறவுகளை நினைவு கூருவதற்கான புனிதமான மாதமாகும். அவர்கள் போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதற்கு முழுமையான உரித்துடையவர்கள். அவர்களின் அந்த அடிப்படை உரித்தினை யாரும் நிராகரிக்கவே முடியாது. அவ்வாறு நிராகரிப்பதற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு இடையூறுகளை ஏற்படுத்துவம், நிராகரிப்பதும் அடிப்படைச் சட்டங்களை மீறுவதாகும். அதேநேரம், திருகோணமலை மூதூரில் தமது உறவுகளை நினைவு கூர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கல்முனையில் நினைவு கூரல் தடுக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை மனித உரிமை மீறலாகும். இவ்விதமான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றேன். அத்துடன், கைது செய்யப்பட்டவர்கள் தாமதமின்றி விடுவிக்கப்படுவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பகிரங்கமான கோரிக்கை விடுகின்றேன். எமது மக்களின் உரிமைகளைக் கடந்த ஏழு தசாப்தமாக பறிந்து வருகின்ற நிலையில் தான் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரங்களைப் பகிருமாறு கோரிவருகின்றோம் என்றார். நினைவேந்தும் உரிமையை நிராகரிக்கவே முடியாது சம்பந்தன் எடுத்துரைப்பு; மூதூர் கைதுகளுக்கு கடும் கண்டனம் | Virakesari.lk
-
பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பொறுப்புக்கூற வேண்டும் - சஜித்
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இஸ்ரேலின் கொலைகார அரச பயங்கரவாதம் பலஸ்தீன அப்பாவி மக்கள் மீது மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பிரதமர் நெததன்யாஹு பொறுப்புக்கூறவேண்டும். அதேநேரம் பலஸ்தீன், இஸ்ரேல் இரண்டு நாட்டு தீர்வுக்கு வரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற பலஸ்தீனின் தற்பாேதைய நிலை தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொலைகார அரசாக இஸ்ரேல் அரசு பலஸ்தீன மக்களின் வாழ்வை முற்றாக அழித்து, அவர்களின் தாயகத்தை அழித்து, அரச பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தி பலஸ்தீன மக்கள் மீது நடத்தி வரும் மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு எதிராக இலங்கையர்களாகிய நாம் உலக மக்களோடு முன் நிற்போம் உடனடியாக போர் நிறுத்த்திற்குச் சென்று பட்டினியால் வாடும் பலஸ்தீன மக்களின் வாழும் உரிமை எல்லாவற்றுக்கும் முதல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று முழு உலகுமே கோரிக்கை விடுக்கிறது. இஸ்ரேல் அரசாங்கம் மருத்துவமனைகளுக்கு குண்டுத்தாக்குதல் நடத்துகிறது. பாடசாலைக்கு குண்டுத் தாக்குதல் நடத்துகிறது. சிவில் குடிமக்களை அப்பட்டமாக கொலை செய்து வருகிறது. இந்த கொலைகார இந்த அரச பயங்கரவாதத்தை கண்டிக்கின்றோம். இஸ்ரேலும் பலஸ்தீனும் சமாதானமாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என இதற்கு முன்னர் நாம் பேசும் போதெல்லாம் கூறினோம்.இஸ்ரேல் அரசாங்கம் தொடர்ச்சியாக பலமுறை பேச்சுவார்த்தைகளை நிராகரித்து, பலஸ்தீன தாயகத்தை அழிக்கும் அரச பயங்கரவாதத்தை கண்டிக்கின்றேன், இந்த கொலைகார பயங்கரவாதத்தை கைவிடுமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் கேட்டுக் கொள்கின்றேன். மேலும் ஹிட்லர் என்ற கொலைகாரன் அன்று யூதர்களை படுகொலை செய்ததுபோன்று இன்று இஸ்ரேலை ஆட்சி செய்யும் படுகொலை அரசாங்கம் பலஸ்தீன அப்பாவி மக்களை படுகொலை செய்துவருவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அரச பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறோம். அதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் நாங்கள் நிபந்தனையின்றி வழங்கவேண்டு்ம். நெதன்யாகு அரசாங்கம் தொடர்ச்சியாக இடைவிடாது மேற்கொண்டு வரும் மிலேச்சத்தனமான, கீழ் தர செயலை, பயங்கரவாத நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையை மாத்திரமல்ல, அவர்களது நாட்டுக்குள் வாழும் உரிமை அவர்களுக்குள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு, பலஸ்தீன், இஸ்ரேல் இரண்டு நாடு தீர்வாகும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார். பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பொறுப்புக்கூற வேண்டும் - சஜித் | Virakesari.lk
-
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு
சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானது. 7 அறைகள் சேதமடைந்தது. இந்த விபத்தில் 6 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி இருந்த மற்றுமொரு தொழிலாளியின் உடல் 10 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டது. சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சரவணன்(55). இவர் செங்கமலப்பட்டி அருகே நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை(பெசோ) உரிமம் பெற்று சுதர்சன் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் உள்ள 20க்கும் மேற்பட்ட அறைகளில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானது, மற்றொரு 7 அறைகள் சேதமடைந்தது. இந்த விபத்தில் 6 பெண்கள் உட்பட 9 உயிரிழந்தனர். இதில் ஒரு தொழிலாளியின் உடல் பட்டாசு ஆலையில் இருந்து 100 மீ தூரத்தில் இருந்து மீட்கப்பட்டது. காயமடைந்த 11 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில், 3 பேர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 7 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்ட உடல்: வெடி விபத்தில் ஒரு அறையில் தொடர்ந்து புகை வந்து கொண்டே இருந்ததால் மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டது. மதியம் 2 மணிக்கு வெடி விபத்து நடந்த நிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு மீட்பு பணிகள் நடந்தது. இரவு 9 மணி அளவில் இடிபாடுகளில் சிக்கி இருந்த தொழிலாளி அழகர்சாமியின் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. அந்த கட்டிடத்தில் மேலும் இருவர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இறந்தவர்கள் பெயர் விபரம்: மத்தியசேனை சந்திரசேகர் மகன் ரமேஷ்(31), சந்திவீரன் மனைவி வீரலட்சுமி(48), வி.சொக்கலிங்கபுரம் குருசாமி மகன் காளீஸ்வரன்(47), சிவகாசி ரிசர்வ்லைன் மச்சக்காளை மனைவி முத்து(52), மாயாண்டி மனைவி ஆவுடையம்மாள்(75), சக்திவேல் மனைவி வசந்தி(38), இந்திரா நகர் கணேசன் மனைவி பேச்சியம்மாள் (எ) ஜெயலட்சுமி(22), லட்சுமி(43), விஜயகுமார்(30), மத்திய சேனையை சேர்ந்த கீதாரி மகன் அழகர்சாமி ஆகிய 10 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிவகாசி அருகே ரிசர்வ்லைன் அய்யம்பட்டியை சேர்ந்த ஆவுடையம்மாள், அவரது மகள் முத்து, மருமகள் பேச்சியம்மாள் ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் விபரம்: சிவகாசி ரிசர்வ் லைன் மாரீஸ்வரன் மனைவி மல்லிகா(35), மூக்கன் மகன் திருப்பதி(47), மகாலிங்கம் மகன் கண்ணன்(30), ஆலமரத்துப்பட்டி லட்சுமணன் மகன் சுப்புலட்சுமி(62), அய்யம்பட்டி ராமமூர்த்தி மனைவி நாகஜோதி(35), சித்திவிநாயகர் மனைவி மாரியம்மாள்(50),மத்தியசேனை செல்வம் மனைவி இந்திரா(48), ரெங்கசாமி மகன் ஜெயராஜ்(42), முருகன் மனைவி ரெக்கம்மாள்(40), பெருமாள் மகன் அழகுராஜா(30), அழகுராஜா மகன் அம்சவல்லி(32), சுரேஷ் மனைவி செல்வி(39), நாச்சான் மனைவி வீரலட்சுமி(35), ராஜாமணி மகன் மோகன்ராஜ்(35) ஆகியோர் காயமடைந்தனர். விபத்து நடந்த பட்டாசு ஆலையில் ஆய்வு விருதுநகர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா அளித்த பேட்டி: சிவகாசி செங்கமலப்பட்டியில் வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் சரவணன், போர்மேன், மற்றும் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது. இந்த பட்டாசு ஆலை விதிகளை மீறி ஒப்பந்ததாரர் மூலம் செயல்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை உரிமம் 2026 வரை உள்ளது. தொடர்ந்து விதிமுறைகளை மீறும் பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என கூறினார். இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன், மேலாளர், போர்மேன் மற்றும் மாலையை லீசுக்கு எடுத்து நடத்தி வந்த முத்துகிருஷ்ணன் ஆகிய 4 பேர் என் மீது சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு | Sivakasi Fireworks Factory Blast: Death Toll Rises To 10 - hindutamil.in
-
கடலில் வெப்ப அலைகள் அதிகரிப்பு : இலங்கை கடற்பரப்பில் பவளப்பாறைகள் அழியும் அபாயம்
கடலில் வெப்ப அலைகள் அதிகரிப்பு : இலங்கை கடற்பரப்பில் பவளப்பாறைகள் அழியும் அபாயம் Published By: DIGITAL DESK 3 09 MAY, 2024 | 11:51 AM தற்போது அதிகரித்துள்ள கடல் வெப்பநிலை மேலும் ஒரு மாத காலம் நீடித்தால் இலங்கையைச் சுற்றியுள்ள கடலில் உள்ள பவளப்பாறைகள் அழியும் அபாயம் ஏற்படும் என சமுத்திவிரவியல் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். இலட்சத்தீவு கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பவளப் பாறைகள் அழியும் அபாயகரமான சூழல் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மேம்பாட்டு முகாமைத்துவத்திற்கு (நாரா) புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பணிப்பாளர் நாயகம் சமுத்திவிரவியல் விஞ்ஞானியான கலாநிதி.கே.அருளானந்தன் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், கடலில் வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாக அதிகரித்து இரண்டு வாரங்கள் நீடித்துள்ளது. நாட்டிலுள்ள பவளப்பாறைகளின் நிலை குறித்து நாரா எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை, ஆனால் பவளப்பாறைகள் நிறத்தை இழந்து அழிவடையும் என்பதை நிராகரிக்க முடியாது. பவளபாறைகள் உருவாக கடலின் வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் வரை ஏற்ற இறக்கமாக இருக்க வேண்டும். தற்போதைய அதிகரித்த வெப்பநிலை இன்னும் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் நீடித்தால் பவளபாறைகள் அழிவடைவதை எதிர்பார்க்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார். கடல்நீரின் வெப்பம் வழக்கத்தை விட அதிகரிக்கும்போது பவளப்பாறைகள் தமது நிறத்தை இழந்து வெளுக்கத் தொடங்குகின்றன. இதன் மூலம் பவளப்பாறைகளின் அழிவைத் தெரிந்து கொள்ள முடியும். பவளப்பாறைகள் அழிந்தால் அதைச் சார்ந்து வாழும் மீன்கள்உள்ளிட்ட ஏராளமான கடல் உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கடலில் வெப்ப அலைகள் அதிகரிப்பு : இலங்கை கடற்பரப்பில் பவளப்பாறைகள் அழியும் அபாயம் | Virakesari.lk
-
நுவரெலியாவில் வரட்சி ; மவுசாக்கலை நீர்த்தேக்கம் நீர்மட்டம் குறைந்தது
(நுவரெலியா நிருபர்) கடந்த சில நாட்களாக மத்திய மலைநாடான நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான வெப்பம் நிலவுகின்றது. இதனால் மத்திய மலைநாட்டில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. சிற்றாறுகள், ஓடைகள் மற்றும் அருவிகள் மற்றும் ஆறுகளில் நீர் மட்டம் குறைந்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் உள்ள நீர் வீழ்ச்சிகள் வரண்ட நிலையில் உள்ளது. இதனால் நீர் மின் உற்பத்தி பாதிக்கும் என நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட சுமார் 52 அடி குறைந்து உள்ளது. அதேபோல் காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 47 அடி குறைந்து உள்ளது. மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து உள்ளதால் பண்டைய காலத்தில் கட்டப்பட்ட பாலம், சண்முக நாதர் ஆலயம், இஸ்லாமிய பள்ளியில் இருந்த தூபி, பௌத்த மத விகாரை, அதன் முற்றத்தில் இருந்த போதி மரம், கங்கேவத்தை நகரில் இருந்த சித்தி விநாயகர் ஆலயம் என்பனவற்றை தற்போது மக்கள் அதிக அளவில் பார்க்க சென்று வருவதை காண கூடியதாக இருக்கின்றது. தற்போது இப்பகுதியில் கடுமையான வரட்சியான காலநிலை காரணமாக நீர் மட்டம் குறைந்துள்ளதால் காலை மாலை வேளைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக இப் பகுதிக்கு படை எடுத்து செல்கின்றனர். மலையக பகுதிகளில் தொடரும் வரட்சியான காலநிலை காரணமாக சுத்தமான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் இருக்கின்றது. அதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் வரட்சியின் காரணமாக பல இடங்களிலுள்ள காடுகளை இனம் தெரியாத நாசக்காரர்கள் தீ வைக்கின்றனர். இதனால் வரட்சி மேலும் அதிகரிக்கின்றது. இவ்வாறு காடுகளுக்கு தீ மூட்டுபவர்களை கைது செய்வதற்கு பொது மக்களின் ஒத்துழைபை வழங்கும்படி பொலிஸார் கேட்டுகொள்கின்றனர். நுவரெலியாவில் வரட்சி ; மவுசாக்கலை நீர்த்தேக்கம் நீர்மட்டம் குறைந்தது | Virakesari.lk
-
நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசலுடன் கட்டுநாயக்கவில் வர்த்தகர் கைது
09 MAY, 2024 | 04:24 PM நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசலுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் ஒருவர் இன்று (9) கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய வர்த்தகரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் துபாயிலிருந்து இன்று (9) காலை 08.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது, கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரிடமிருந்து 01 கிலோ 975 கிராம் நிறையுடைய தங்க ஜெல் கரைசல் அடங்கிய 3 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசலுடன் கட்டுநாயக்கவில் வர்த்தகர் கைது | Virakesari.lk
-
இலங்கை செல்வதற்காக விண்ணப்பித்த ஏனையவர்களின் விபரங்கள் எனது மின்னஞ்சலிற்கு நாளாந்தம் வருகின்றன - வெளிநாட்டு சமூக ஊடக பிரபலம் அதிர்ச்சி தகவல்
09 MAY, 2024 | 04:03 PM சர்வதேச அளவில் சுற்றுலாத்துறை போக்குவரத்து கலாச்சாரம் போன்ற விடயங்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்துவரும் டிரவல் இன்புளுன்சர் வில்டேவிஸ் இலங்கையின் விசா வழங்கும்; அமைப்புமுறையிலிருந்து தரவுகள் வெளியே கசிந்துள்ளமை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு சுற்றுலாமேற்கொள்ளவுள்ளவர்களிற்கான விசா விபரங்கள் பெயர் முகவரி கடவுச்சீட்டு இலக்கங்கள் போன்ற தனிப்பட்ட விபரங்கள் எனது மின்னஞ்சலிற்கு நாளாந்தம் வருகி;ன்றன என அவர் தெரிவித்துள்ளார். எனக்கு பல மாதங்களிற்கு முன்னரே விசா கிடைத்துள்ள போதிலும் விஎஸ்எவ்விடம் விசாவிற்காக விண்ணப்பித்தவர்களின் விபரங்கள் எனக்கு நாளாந்தம் வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். சில வாரங்களிற்கு இலங்கையில் விசா தொடர்பில் இடம்பெற்ற விடயங்களை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள் எனக்கு எப்போதோ விசாகிடைத்துள்ள போதிலும் ஏனைய சுற்றுலாபயணிகளின் பெயர்கள் கடவுச்சீட்டு இலக்கங்கள் உட்பட தனிப்பட்ட விபரங்களுடன் மின்னஞ்சல்கள் எனக்கு நாளாந்தம் வருகின்றன என வில்டேவிஸ் தெரிவித்துள்ளார். நான் இதனை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன் ஆனால் பெருமளவானவர்களின் தனிப்பட்ட விபரங்கள் வெளியில் கசிந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை செல்வதற்காக விண்ணப்பித்த ஏனையவர்களின் விபரங்கள் எனது மின்னஞ்சலிற்கு நாளாந்தம் வருகின்றன - வெளிநாட்டு சமூக ஊடக பிரபலம் அதிர்ச்சி தகவல் | Virakesari.lk
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
டயானாவின் இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான் J.A. George / 2024 மே 08 , பி.ப. 01:48 - 0 - 81 டயானா கமகே பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. அத்துடன், இந்த முன்மொழிவு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். Tamilmirror Online || டயானாவின் இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான்
-
பன்றி இறைச்சியால் இரு கைதிகள் சாவு!
(புதியவன்) கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் பன்றி இறைச்சி உட்கொண்டதால் உயிரிழந்துள்ளனர். பன்றி இறைச்சி கறி சாப்பிட்டு உயிரிழந்த குறித்த சிறைக் கைதிகளின் உடல்கூற்றுப் பரிசோதனை தொடர்பில் இறப்பு விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் வெளிப்படையான அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளார். இதன்படி, இருவரது உடல் உறுப்புகளையும் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொரளை மற்றும் தெஹிவளை பிரதேசத்தில் வசிக்கும் இருவர் ஐஸ் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் கைதி ஒருவரின் வீட்டில் தயாரிக்கப்பட்ட பன்றி இறைச்சியுடன் கூடிய சோறு பொதி ஒன்றை உறவினர்கள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த சோற்றுப் பொதியை சுமார் 15 கைதிகள் சாப்பிட்டுள்ளதுடன் 3 கைதிகள் ஒவ்வாமை காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும், ஆபத்தான நிலையில் உள்ள மற்றொரு கைதி தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இருவரினதும் இறப்பு விசாரணைகள் நேற்று (07) மேற்கொள்ளப்பட்டு அங்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைப் பணிமனை மட்டத்தில் விசாரணை நடத்தப்படும் என சிறைச்சாலைப் பணிமனை தெரிவித்துள்ளது.(ஏ) பன்றி இறைச்சியால் இரு கைதிகள் சாவு! (newuthayan.com)
-
இந்திய வெங்காய இறக்குமதி; தேவை இழந்த சீன வெங்காயம்
இந்தியாவில் இருந்து அதிக அளவில் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதால், சீன வெங்காயத்தின் தேவை குறைந்துள்ளதால், அவற்றை கையிருப்பில் இருந்து நீக்க வேண்டியுள்ளதாக புறக்கோட்டையில் உள்ள வர்த்தகர்கள் கூறுகின்றனர். கடந்த நாட்களில் ஒரு கிலோ சீன வெங்காயம் 300 ரூபாவுக்கு விற்கப்பட்டதாகவும், தற்போது ஒரு கிலோ சீன வெங்காயம் 100 ரூபாவுக்கு கூட விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் இரண்டு கிலோ 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ இந்திய வெங்காயத்தின் விலை 150 முதல் 250 ரூபா வரை குறைந்துள்ளது. இந்திய வெங்காய இறக்குமதி; தேவை இழந்த சீன வெங்காயம் (newuthayan.com)
-
பருத்தித்துறையில் பேருந்தில் கைவிடப்பட்ட பணம் அடங்கிய பை; பேருந்து காப்பாளருக்கு குவியும் பாராட்டு!
பேருந்தில் கைவிடப்பட்ட பணம் அடங்கிய பை; பேருந்து காப்பாளருக்கு குவியும் பாராட்டு! வெளிநாட்டவரின் பெரும் தொகை பணம் அடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்து காப்பாளர் - குவியும் பாராட்டுக்கள் வெளிநாட்டவரின் பெரும் தொகை பணம் அடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்து காப்பாளரரின் செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை சாலையில் காப்பாளராக கடமையாற்றும் பாலமயூரன் என்பவர் கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி சேவைக் கடமையில் இன்று ஈடுபட்டிருந்தார். குறித்த பேருந்தில் வெளிநாட்டவர் ஒருவரினால் தவறவிடப்பட்ட பாஸ்போர்ட், ஒரு லட்சத்து இருபதாயிரத்து எண்ணூற்றுநாற்பது இலங்கை ரூபா பணம் மற்றும் 300 யூரோ பணத்தினை இன்று (07) சாலையில் ஒப்படைத்துள்ளார். அண்மை நாட்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலையில் உணவுகள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் செய்திகள் வெளியாகி நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பேருந்து காப்பாளரின் குறித்த செயல் பலராலும் பாராட்டப்படுகின்றது. அத்துடன் இவர் 2021ஆம் ஆண்டு மற்றுமொரு பயணி ஒருவரால் தவற விடப்பட்ட இரண்டு லட்சத்து ஐம்பது ஓராயிரம் ரூபா பணம் மற்றும் எழுபதாயிரம் ரூபாய் பெறுமதியான போன் ஒன்றினையும் சாலை நிர்வாகத்திடம் ஒப்படைத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. (ச) பேருந்தில் கைவிடப்பட்ட பணம் அடங்கிய பை; பேருந்து காப்பாளருக்கு குவியும் பாராட்டு! (newuthayan.com)
-
சுற்றுலாப் பயணிகளிடம் அறவிடப்படும் விசா சேவை கட்டண அறவீடு மத்திய வங்கி மோசடியை விட பல மடங்கு அதிகம் - ரவூப் ஹக்கீம்
Published By: VISHNU 08 MAY, 2024 | 01:24 AM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) சுற்றுலாப் பயணிகளுக்கு விசா சேவை வழங்கும் தனியார் நிறுவனத்துக் கிடைக்கும் நிதி, மத்திய வங்கி மோசடியைவிடப் பல மடங்கு அதிகமாகும். அதனால் இது தொடர்பில் விசேட விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் ஊழல் மோசடிகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எமது நாட்டுக்கு புதிய முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், நாட்டுக்குள் வரும் வெளிநாட்டவர்களுக்கான விசா வழங்குவதில் பாரிய மோசடி இடம்பெற்று வருவது தொடர்பில் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் அரசாங்கம் இது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது.? சுற்றுலாப் பயணிகளிடமிருந்து மேலதிகமாக 25 டொலர்களை அறவிட நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த வருடத்தில் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தர இருப்பதாக எதிர்வு கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்தால் அவர்களுக்கு விசா வழங்கும் குறித்த தனியார் நிறுவனத்துக்கு அதன் மூலம் மாத்திரம் 62.5மில்லியன் அமெரிக்க டாெலர் கிடைக்கப்பெறுகிறது. இதனை இலங்கை ரூபாவில் தெரிவிப்பதாக இருந்தால், 18 பில்லியனே 750 மில்லியன் ரூபா (1875 கோடி). ஆனால் இந்த வருட வரவு செலவு திட்டத்தில் குடிவரவு குடி அகல்வு திணைக்களத்துக்குச் சம்பளம் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளுக்கு 992 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில், குறித்த தனியார் நிறுவனத்துக்கு இந்த விசா வழங்கும் சேவை மூலம் 18.6 மடங்கு அதிகமாகும். மத்திய வங்கி மோசடி தொடர்பில் நாங்கள் கதைக்கிறோம். ஆனால் தற்போது இடம்பெற்றுவரும் இந்த மோசடி மத்திய வங்கி மோசடியைவிடப் பல மடங்கு அதிகமாகும். அத்துடன் இந்த விசா சேவையை எஸ்.எல்.டி. மொபிடல் நிறுவனம் குறித்த நிதியில் நூற்றுக்கு 4 வீதத்தைப் பெற்றுக்கொண்டு வழங்குவதற்குத் தயாராக இருந்த நிலையில். இவ்வாறான பாரிய நிதியை செலுத்துவதால், இந்த பணம் யாருடைய பொக்கெட்டுக்கு செல்கிறது என கேட்கிறோம். இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றார். சுற்றுலாப் பயணிகளிடம் அறவிடப்படும் விசா சேவை கட்டண அறவீடு மத்திய வங்கி மோசடியை விட பல மடங்கு அதிகம் - ரவூப் ஹக்கீம் | Virakesari.lk
-
இலங்கையின் கடன் சுமையை 17 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைக்க முடியும் - வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி
08 MAY, 2024 | 02:34 PM வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையை ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், முழுமையான கடன் மறுசீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுப்பதன் மூலம் இலங்கையின் கடன் சுமையை 17 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைக்க முடியும் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கடன் தவணையைப் பெற்ற பின்னர் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தொடர முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார். இலங்கை அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்றி அனைத்து நாடுகளுடனும் உறவுகளைப் பேணி இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாத்து வருவதனால் இலங்கைக்கு பல சலுகைகள் கிடைத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். சீனா மற்றும் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி மேலும் சுட்டிக்காட்டினார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், “அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையைப் பேணுவதுடன் அனைத்து நாடுகளுடனும் நல்ல உறவு முறையை இலங்கை பேணி வருகிறது. இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாத்து ஒவ்வொரு நாட்டுடனும் சிறப்பான தொடர்புகளைப் பேணுவது, வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பதை எளிதாக்கியது. சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் பெரிஸ் கிளப் ஆகியவை கடன் மறுசீரமைப்பிற்கு பெரும் ஆதரவை வழங்கின. சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையைப் பெற்ற பின்னர் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தொடர முடியும். சீனாவுடனும் இந்தியாவுடனும் எமக்கு நெருங்கிய உறவை ஏற்படுத்த முடிந்துள்ளது. சீனாவுடன் ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்தியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இலங்கையில் அதிகளவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியில் முதலீடு செய்ய அதானி நிறுவனம் முன்வந்துள்ளது. மேலும் இலங்கையில் முதலீடுகள் செய்வது குறித்து சவுதி அரேபியாவும் கவனம் செலுத்தியுள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள் தங்களது எரிபொருள் சார்ந்த பொருளாதாரத்தை தாண்டி ஏனைய நாடுகளில் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி தங்கள் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றன. அதனை இலங்கைக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நாம் நடவடிக்கை எடுக்கின்றோம். வெளிநாட்டலுவல்கள் அமைச்சு சர்வதேச விதிகளுக்கு அமைய வெளிநாடுகளுடன் உறவுகளைப் பேணி வருவதால், ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை. ஈரான் வழங்கிய உமா ஓயா திட்டமானது அடுத்த மாதம் முதல் தேசிய மின்சார கட்டமைப்பில் 120 மெகாவொட் மின்சாரத்தை வழங்கும். இதன் மூலம் அடுத்த மாதம் மின்கட்டண திருத்தத்தின் போது இதன் பலன் மக்களுக்கு கிடைக்கும். இலங்கையை சுற்றுலா மையமாக மாற்ற வேண்டுமாயின், விசா கட்டணத்தில் கவனம் செலுத்தாமல், சுமார் ஐம்பது நாடுகளுக்கு இலவச விசா வழங்க வேண்டும். இதன் ஊடாக சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கலாம். கடந்த வாரம் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இலங்கையின் பொருளாதார சீர்திருத்த முன்னேற்றத்திற்கு ஜப்பான் ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ள ஜப்பான் அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் தொடங்க ஜப்பான் ஒப்புக் கொண்டுள்ளது. தற்போது மியான்மாரில் உள்ள இளைஞர்களைக் காப்பாற்ற இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சட்டபூர்வமற்ற முறையில் ரஷ்யா – உக்ரைன் யுத்தம் சார்ந்த கூலிப்படைக்கு அனுப்பப்பட்டுள்ள நமது இளைஞர்களை காப்பாற்ற இராஜதந்திர ரீதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் பாதுகாப்புப் படையினருடனும் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது” என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார். இலங்கையின் கடன் சுமையை 17 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைக்க முடியும் - வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி | Virakesari.lk
-
யாழ். தெல்லிப்பழை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பிரவேசிப்பதற்கான வீதிகளை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான வீதிகளை பயன்படுத்த அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகளை திறக்குமாறும், இணைந்த வீதிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பாதுகாப்பு பிரிவினரிடம் நேற்று (07) தெரிவித்தார். ஒட்டகப்புலம் பகுதிக்கு நேற்று விஜயம் செய்த ஆளுநர் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட்டத்துடன், காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார். யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். வசாவிளான் கிழக்கு (J/244), வசாவிளான் மேற்கு (J/245), பலாலி வடக்கு (J/254), பலாலி கிழக்கு (J/253), பலாலி தெற்கு (J/252) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குட்பட்ட 234.8 ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டது. இங்கு வசித்த 327 குடும்பங்கள் காணி உரிமை கோரி பதிவு செய்துள்ளதுடன், அவர்களில் 171 குடும்பங்களைச் சேர்த்தவர்கள் தங்களின் காணிகளை அடையாளப்படுத்தி துப்பரவு செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், விடுவிக்கப்பட்டுள்ள காணிகளுக்குள் இலகுவாக பிரவேசிக்கக்கூடிய வகையில் பாதைகளை திறக்கவும், வீதிகளை பயன்படுத்தவும் அனுமதிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டதற்கமைய, அதற்கான அனுமதியினை பாதுகாப்பு பிரிவினருடன் கலந்துரையாடி ஆளுநர் பெற்றுக்கொடுத்தார். அதற்கமைய, பொன்னாலை - பருத்தித்துறை கடற்கரை வீதியில் கண்ணகி அம்மன் கோவில் சந்தியிலிருந்து நாகதம்பிரான் கோவில் வீதி ஊடாக விடுவிக்கப்பட்ட காணிக்குள் பிரவேசிக்க முடியும். அத்துடன் வீரப்பளை வீதியில் பலாலி வீதி நோக்கி 100 மீற்றர் தூரத்துக்குள்ளும், வீரப்பளை சந்தியில் தெற்கு நோக்கி தம்பாளை வீதி (விமான நிலைய வீதி) ஊடாகவும் விடுவிக்கப்பட்ட காணிக்குள் பிரவேசிக்க முடியும். யாழ். தெல்லிப்பழை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பிரவேசிப்பதற்கான வீதிகளை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி | Virakesari.lk
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
டயனா கமகேவினால் உருவாக்கப்பட்ட ஐ.ம.சக்தி சட்டப்பூர்வமானதா? எதிரணி சிறந்த சட்டத்தரணிகளை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் - காஞ்சன விஜேசேகர (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை பிரஜையல்லாத டயனா கமகேமவினால் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சட்டப்பூர்வமானதா? பொதுத் தேர்தலின் போது கட்சியின் வேட்பு மனுவில் அவர் கையெழுத்திட்டிருந்தாலோ, தற்போதைய கட்சி செயலாளருடன் அவர் உடன்படிக்கையைச் செய்திருந்தாலோ அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடலாம். ஆகவே சிறந்த சட்டத்தரணிகளை எதிரணியினர் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற இராஜதந்திர சிறப்புரிமை சட்டத்தின் கீழ் 2348/48ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்,பெற்றோலிய உற்பத்தி பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2340/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது இராஜாங்க அமைச்சர் டயனா கமகேமவின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பைச் சவாலுக்கு உட்படுத்தப் போவதில்லை. ஆனால் தற்போது புதிய பிரச்சினையொன்று எழுந்துள்ளது. டயனா கமகே இலங்கை குடியுரிமையற்றவர் என்பதால் அவரின் பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது. இங்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமைக்கு அவரே கைச்சாத்திட்டுள்ளார். ஆகவே ஐக்கிய மக்கள் சக்தி சட்டப்பூர்வமானதா? என்ற பிரச்சினைகள் எழும். அவரே கட்சியை இவர்களிடம் கொடுத்துள்ளார். அவர் அந்தக் கட்சியை பதிவு செய்யும் போது அவர் இலங்கை பிரஜையாக இல்லாமலே இருந்துள்ளார். இந்த நாட்டை சேர்ந்தவர் அல்லாத ஒருவருக்குக் கட்சியை பதிவு செய்ய முடியாது. அத்துடன் 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவிலும் அவரா? கையெழுத்திட்டார் என்பதும் தெரியாது. அப்படி அவர் கையெழுத்திட்டிருந்தால் அது தொடர்பாகக் கவனம் செலுத்தலாம். எதிரணியின் உறுப்பினர்கள் பலர் பாராளுமன்ற உணவகத்தில் கதைக்கும் போது மிகவும் குழப்பத்தில் இருப்பது போன்றே இருந்தது என்றார். இதன்போது எழுந்த ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க கட்சி பதவிகள் ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது இதில் பிரச்சினைகள் கிடையாது என்றார். டயனா கமகேவினால் உருவாக்கப்பட்ட ஐ.ம.சக்தி சட்டப்பூர்வமானதா? எதிரணி சிறந்த சட்டத்தரணிகளை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் - காஞ்சன விஜேசேகர | Virakesari.lk
-
Orangutans: தனக்கு சுய மருத்துவம் செய்த குரங்கு... முதல்முறையாக ஆவணப்படுத்திய விஞ்ஞானிகள்!
Published:Today at 7 AMUpdated:Today at 7 AM wounded Rakus மனிதர்களே… தங்களது நோய்களுக்கும், காயங்களுக்கும் சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதுண்டு. அதுவே விலங்குகள் சிகிச்சைகளை எடுத்துக் கொள்கிறதா என்பது தெரியாது. ஆனால், சமீபத்தில் ஓராங்குட்டான் ஒன்று தனது காயத்திற்கு தானே சிகிச்சை எடுத்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். அதாவது சில விலங்குகள் காடுகளில் உள்ள மருத்துவ தாவரத்தின் மூலம் வைத்தியம் பார்த்து தங்களது நோய்களையும், காயங்களையும் குணப்படுத்திக் கொள்வதாக அவர்கள் கூறியுள்ளனர். ரகுஸ் (Rakus) எனப் பெயரிடப்பட்ட ஓராங்குட்டானின் கண்ணிற்குக் கீழே ஒரு பெரிய காயம் இருந்துள்ளது. இந்த ஓராங்குட்டான் தென்கிழக்கு ஆசியாவில் மக்கள் வலி மற்றும் வீக்கத்திற்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தும் மருத்துவ தாவரத்தின் இலைகளை மென்று அதன் சாற்றைக் காயத்தின் மீது தடவியுள்ளது. அதன்பின் மென்ற தாவரத்தை பேண்டேஜ் கட்டுவது போலக் காயத்தின் மீது வைத்து அழுத்தியுள்ளது. உடலில் எந்த ஒரு பாகத்திற்கும் அந்த சாற்றைத் தடவாமல், காயத்தின் மீது மட்டும் தடவியுள்ளதால், இது ஒரு சுய சிகிச்சை முறை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஒரு மாதத்திற்குள் அதன் பெரிய காயம் மூடி குணமடைந்தது. இதற்கு முந்தைய ஆராய்ச்சியில் பல வகையான குரங்குகள் காடுகளில் மருந்துகளைத் தேடுகின்றன என ஆவணப்படுத்தப் பட்டிருந்தன. ஆனால், அவை எப்படி தன்னை குணப்படுத்திக் கொள்கின்றன என்பது ஆவணப்படுத்தப்படவில்லை. முதல்முறையாக விஞ்ஞானிகள் விலங்குகள் தங்கள் காயங்களுக்கு எவ்வாறு சிகிச்சை எடுத்துக் கொள்கின்றன என்பதை ஆவணப்படுத்தியுள்ளனர். 2022-ல் ஓராங்குட்டானின் நடத்தைகள் வீடியோவாக ரெக்கார்டு செய்யப்பட்டது. இந்தோனேசியாவின் மேடானில் உள்ள சுவாக் திட்டத்தின் இணை ஆசிரியரும் கள ஆய்வாளருமான உலில் அஸாரி இதனை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Orangutans: தனக்கு சுய மருத்துவம் செய்த குரங்கு... முதல்முறையாக ஆவணப்படுத்திய விஞ்ஞானிகள்! | Scientists found, orangutan used a medicinal plant to treat a wound - Vikatan
-
நெல்லை: தொழிலதிபர்களை குறிவைத்து முகநூலில் வலை; கோடிக்கணக்கில் மிரட்டி பறித்த பெண் - சிக்கியதெப்படி?
நெல்லை பெருமாள்புரம் பகுதியில் வசிப்பவர், பானுமதி. 40 வயதான அவர், சில வருடங்களுக்கு முன்பு கணவரை விட்டுப் பிரிந்து வெள்ளத்துரை என்பவருடன் குடித்தனம் நடத்தி வருகிறார். சபலம் கொண்ட தொழிலதிபர்களை சமூக வலைதளங்களில் தேடிக் கண்டுபிடித்து, முகநூல் நண்பர்களாகி ஏமாற்றி மோசடி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார், பானுமதி. 20-க்கும் அதிகமான தொழிலதிபர்கள் மூலம் கோடிக்கணக்கில் பணத்தைப் பறித்த விவரம் வெளியாகியுள்ளது. முகநூல் பழக்கத்தில் தொழிலதிபர்களை கடத்திய தம்பதி அவரிடம் அண்மையில் சிக்கிய சேலம் மாவட்டம், அய்யன்பெருமாள்பட்டியை சேர்ந்த நித்யானந்தன் மூலமாகவே இந்த வில்லங்க விவகாரம் வெளியில் தெரியவந்துள்ளது. அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து பானுமதி அவரது கூட்டாளிகள் வெள்ளத்துரை, பார்த்தசாரதி, சுடலை, ரஞ்சித் ஆகிய ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரிக்கும் பெருமாள்புரம் காவல்துறையினரிடம் பேசினோம். “இந்த கும்பலின் மூளையாக பானுமதியும் வெள்ளத்துரையும் செயல்பட்டுள்ளனர். சேலத்தில் காற்றாலைகளுக்கு உதிரிப் பாகங்கள் சப்ளை செய்யும் தொழில் செய்யும் நித்யானந்தனுக்கு முகநூலில் பானுமதியின் நட்பு கிடைத்துள்ளது. மூன்று மாதப் பழக்கத்தில் நித்யானந்தனின் நிதிநிலையை அறிந்துகொண்ட பானுமதி, அவரிடம் ஆசையாகப் பேசி தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். பெருமாள்புரம் காவல் நிலையம் அதை நம்பிய நித்யானந்தன் நெல்லை வந்திருக்கிறார். பானுமதியின் வீட்டில் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது வெள்ளத்துரை தனது நண்பர்களான பார்த்தசாரதி, சுடலை, ரஞ்சித் ஆகியோருடன் நுழைந்து சரமாரியாகத் தாக்கியுள்ளார். பின்னர் நித்யானந்தனை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றிருக்கிறார்கள். எப்படியோ தனது நண்பரைத் தொடர்பு கொண்டு நித்யானந்தன் இந்த விவரங்களைச் சொல்லியிருக்கிறார். அவர் மூலமாகவே எங்களுக்கு தகவல் தெரியவந்தது. பிடிபட்டவர்களிடம் விசாரித்த பிறகே இந்த கும்பல் பானுமதி மூலம் தொழிலதிபர்களை வீட்டுக்கு வரவழைத்து பணம் பறிக்கும் விவரம் தெரியவந்தது. இவர்களிடம் பலர் 50 லட்சம், 60 லட்சம் என இழந்திருக்கிறார்கள். வெளியே சொன்னால் அசிங்கம் என பாதிக்கப்பட்டவர்கள் ஒதுங்கிச் சென்றதை சாதகமாகப் பயன்படுத்தி நீண்ட காலமாக இந்த மோசடியைச் செய்திருக்கிறார்கள்” என்றார்கள். கடத்தல் கும்பலிடம் பிடிபட்ட சொகுசு கார் பானுமதிக்கு உடந்தையாக இருந்த நான்கு பேரும் ஊருக்குள் பெரிய மனிதர்கள் போல வலம் வந்திருக்கிறார்கள். அரசியல்வாதிகளுடனும் நல்ல தொடர்பில் இருந்துள்ளனர். அனைத்துக் கட்சியினருடனும் நெருக்கமாக இருந்ததோடு, தேர்தல் நேரத்தில் பல கட்சியினருக்கும் நன்கொடையை வாரி வழங்கியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ”மோசடி மூலமாகக் கிடைக்கும் பணத்தை சமமாக பிரித்துக் கொள்வோம். பணம் கைக்கு வந்ததும் பானுமதியை அடுத்த அசைன்மெண்டை பார்க்கச் சொல்லிவிட்டு நாங்கள் நான்கு பேரும் கோவா, மும்பை என வெளி மாநிலங்களுக்கு செல்வோம். அங்குள்ள பெரிய ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கி பெண்களோடு இருப்போம். சில சமயம் சென்னையில் இருந்து விமானம் மூலம் துணை நடிகைகளை வரவழைத்து தங்கியிருப்போம். பணம் தீர்ந்த பிறகே ஊருக்குத் திரும்புவோம்” என விசாரணையின்போது அவர்கள் தெரிவித்ததைக் கேட்டு போலீஸாரே அதிர்ந்து விட்டார்களாம். நெல்லை காவல்துறை ஆணையர் மூர்த்தி நீண்ட காலமாக போலீஸ் பிடியில் சிக்காத இந்த மோசடி கும்பலிடம் 20-க்கும் அதிகமான தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் பணத்தை இழந்திருக்கிறார்கள். இந்த கும்பல் பிடிபட்டது எப்படி என நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் மூர்த்தியிடம் கேட்டோம். ”சேலத்தை சேர்ந்த நித்யானந்தன் கடத்தப்பட்ட விவரத்தை அவரது நண்பர் எங்களுக்கு தெரியப்படுத்தினார். அதன் மூலமாகவே இந்த கும்பலைப் பிடிக்க முடிந்திருக்கிறது. பானுமதியின் மூன்று மாத முகநூல் பழக்கத்தை நம்பி நெல்லைக்கு வந்த நித்யானந்தனை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வீட்டுக்குள் அடைத்து வைத்த பானுமதி அவரிடம் இருந்த நகை பணத்தைப் பறித்துள்ளார். அவரின் ஏ.டி.எம் கார்டு மற்றும் ஜி-பே மூலமாக ஒன்றே கால் லட்சம் பணத்தை எடுத்த பின்னர் காரில் கடத்திச் சென்று அடித்து மிரட்டியுள்ளனர். மோசடி கும்பலை பிடித்த சிறப்புப்படை உயிரோடு ஊர் திரும்ப வேண்டுமானால் 10 லட்சம் ரூபாய் பணத்தை செக் மூலம் எடுத்துக் கொடுக்க வேண்டும் என மிரட்டி வங்கிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வங்கியில் கிடைத்த சிறிய வாய்ப்பை பயன்படுத்தி தனது நண்பருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். அவர் மூலமாக எங்களுக்கு தகவல் கிடைத்ததும் நித்யானந்தன் செல்போன் நம்பரை வாங்கி, அதன் டவரை வைத்து மீட்க முடிவு செய்தோம். நெல்லை மாநகர துணை ஆணையர் ஆதர்ஷ் பசோரா தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் நாங்குநேரி பகுதியில் சென்று கொண்டிருந்த காரை மடக்கிப் பிடித்தனர். அவர்களை அழைத்து வந்து பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த போதுதான் பானுமதி மூலம் இந்தக் கும்பல் பலரிடம் மோசடி செய்த விவரம் தெரியவந்தது. திறமையாகச் செயல்பட்ட காவல்துறையினருக்கு வெகுமதி பலரை மிரட்டி பணம் பறித்த இந்த கும்பலிடம் இருந்து கையெழுத்திட்ட காசோலைகள், அடமான பத்திரங்கள், கடன் பத்திரங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளோம். சிறையில் இருக்கும் பானுமதி உள்ளிட்ட ஐந்து பேரையும் கஸ்டடி எடுத்து விசாரித்தால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்பதால் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர், இவர்களிடம் 60 லட்சம் ஏமாந்திருக்கிறார். அவரும் புகார் அளித்துள்ளதால் இதுவரை இரண்டு வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. பாதிக்கப்பட்ட மேலும் சிலர் எங்களிடம் பேசியுள்ளனர். முகநூல் மூலம் நட்பாகப் பழகி மோசடி செய்யும் கும்பல் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும். தங்களைப் பற்றிய விவரத்தை மறைக்க நினைத்தால் எங்களிடம் நேரில் வந்து தகவல் மட்டும் கொடுக்கலாம். இந்த கும்பல் மோசடியாகச் சேர்ந்த பணத்தை தொழில்களில் முதலீடு செய்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதனால் அவர்களை கஸ்டடி எடுத்து விசாரித்த பின்னர் பணத்தை இழந்தவர்களுக்கு திருப்பிக் கொடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். நெல்லை: தொழிலதிபர்களை குறிவைத்து முகநூலில் வலை; கோடிக்கணக்கில் மிரட்டி பறித்த பெண் - சிக்கியதெப்படி? | an industrialist kidnapped by a lady and her associates are arrested by police - Vikatan