Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. 30 MAY, 2024 | 12:39 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கு எதிரான ஜெனீவா வெளிக்கள விசாரணை பொறிமுறை தொடர்பில் அரசாங்கத்தின் பதிலளிப்புக்கள் திருப்திகரமாக இல்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக நாட்டுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படும் எனத் தெரிவித்த தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர, இது தொடர்பில் கலந்தாலோசிப்பதற்காக வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயரதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு என்பவற்றின் உயர் அதிகாரிகள், சட்டமா அதிபர் உள்ளிட்டோருக்கு எதிர்வரும் ஜூன் 5ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஜெனீவாவில் 46/1 பிரேரணைக்கமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ள வெளிக்கள பொறிமுறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பவுள்ளது. யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சாட்சிகளை சேகரிப்பதற்கான நடவடிக்கைகளே குறித்த வெளிக்கள பொறிமுறையூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 46/1 பிரேரணையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள போதிலும், அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் எமது இராணுவ வீரர்களுக்கு எதிராக எந்த நாடும் வழக்கு தொடரக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இதற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் உலக நாடுகளிடம் கலந்தாலோசித்துள்ளார். அவ்வாறு இடம்பெற்றால் அவர்களை வெளிநாடுகளில் கைது செய்யக் கூடிய அச்சுறுத்தலும் காணப்படுகிறது. அது இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும். அமெரிக்க தூதுவர் வடக்கிற்கு சென்று முன்னாள் போராளிகளை சந்தித்துள்ளார். தூதுவருக்குரிய நடவடிக்கைகக்கு அப்பால் சென்று இலங்கையின் உள்ளக விவகாரங்களில் அவர் தலையிடுகின்றமை தொடர்பில் நான் பகிரங்கமாக விமர்கின்றமையால் பொய்யான காரணிகளை முன்வைத்து எனக்கு அமெரிக்கா செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. தீவிரவாதத்தில் ஈடுபட்டவர்களுக்கு பதிலாக, அதனை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தவர்கள் மீது அமெரிக்கா போன்ற நாடுகள் எதிர்ப்பினை வெளியிடுகின்றன. அமெரிக்காவின் காங்ரஸ் கட்சி இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்றை முன்வைக்க திட்டமிட்டுள்ளது. தீவிரவாதிகளுடன் இணைந்து அமெரிக்கா இலங்கைக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ் அமெரிக்கர்களின் ஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழு, இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் குழு மற்றும் உலகளாவிய தமிழ் அமைப்புக்கான கூட்டமைப்பு ஆகியவையே இதற்கான அழுத்தத்தினை பிரயோகித்துள்ளன. இவை எல்.டி.டி.யின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவையாகும். ஈழ தமிழ் மக்களுடன் இராஜதந்திர தொடர்புகளை பலப்படுத்த வேண்டும், அமெரிக்காவும் ஏனைய சர்வதேச சமூகங்களும் இணைந்து தமிழ் மக்களின் சுய உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் மற்றும் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை இலங்கை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற 3 காரணிகளை முன்வைத்து அமெரிக்க காங்ரஸ் இலங்கைக்கு எதிரான பிரேரரணையை தயாரித்து வருகிறது. இது மிகவும் பாரதூரமானதாகும். இந்த 3 அமைப்புக்களுக்கும் இலங்கைக்குள் தடை விதிக்கப்பட வேண்டும் என்றார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக நாட்டுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படும் - சரத் வீரசேகர | Virakesari.lk
  2. 30 MAY, 2024 | 02:51 PM உக்ரைனுடன் மீதான ரஸ்யாவின் போரில் இலங்கையின் முன்னாள் இராணுவவீரர்கள் ரஸ்யாவுடன் இணைந்து போரிடுவது குறித்து மேற்குலகின் முன்னணி நாடொன்று கவலை தெரிவித்துள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. மேற்குலகம் வெளியிட்ட கரிசனையை தொடர்ந்தே இலங்கை அரசாங்கம் கூலிப்படையினராக போர்புரியும் இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளது எனவிடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்தே பாதுகாப்பு செயலாளர் தலைமையில் குழுவொன்று ரஸ்யாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. ரஸ்ய உக்ரைன் போர்முனையில் போரிடும் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தவர்களின்குடும்பங்கள் தங்களிடம் விபரங்களை கோரியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரஸ்யாவுக்காக போரிடும் இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் - மேற்குலக நாடு கவலை | Virakesari.lk
  3. யாழ் போதனா வைத்தியசாலை அசம்பாவிதம் குறித்து அமைச்சர் டக்ளஸின் அறிவுறுத்தல் ! 30 MAY, 2024 | 05:28 PM யாழ் போதனா வைத்தியசாலையின் மகிமையையும் ஊழியர்களின் பாதுகாப்பையும் கருதி அடாவடியில் ஈடுபடுபட்ட நபர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இனிவரும் காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்படாத வகையிலான முன்னுதாரணமாக குறித்த நடவடிக்கை இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அண்மைக்காலமாக யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இன்று வியாழக்கிழமை ஆராயப்பட்டது. இதன்போது வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் பொலிசார் ஆகியோரிடம் அது குறித்து விளக்கம் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தபின் கருத்து கூறுகையிலேயே இவ்வாறு வலியுறுத்தியிருந்தார். இதன்போது யாழ் வைத்தியசாலை அசம்பாவிதங்கள் குறித்து கருத்துக்கூறிய பணிப்பாளர் சத்தியமூர்த்தி - வைத்தியசாலைக்கு நாளாந்தம் குறைந்தது 5000 அதிகமானவர்கள் அவசர நோயாளர் பிரிவுக்கு பல்வேறு அவசர உயிர் காப்பு தேவை கருதி வருவதுண்டு. அதுமட்டுமல்லாது இவ்வாறு வருபவர்கள் பலவகையான வாகனங்களில் வருகைதருவதால் உயிர் பாதுகாப்பை கருதி தடையின்றி உள்ளே அனுமதிப்பது வழமை. அந்த இளக்கமான நடைமுறையை தமக்கு சாதகமாம ஒருசிலர் பயன்படுத்துவதால்தான் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றது. அதே நேரம் இவ்வாறான சம்பவங்களை வைத்து அவசர நோயாளர் பிரிவு நுழைவாயிலில் இறுக்கமான நடைறையை கொண்டுவரவும் முடியாது. அந்தவகையில் வைத்தியசாலையின் பாதுகாப்பு அதன் மகிமைகள் குறித்து இளைஞர்கள் அதிக கரிசனை எடுப்பதனூடாகவே இவ்வாறான துர்ப்பாக்கிய நிலையை கட்டுப்படுத்தலாம். இதற்கு அனைவரது குறிப்பாக இளைஞர்களது ஒத்துழைப்பும் அவசியம் என்றும் கூறியிருந்தார். அத்துடன் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கடுமையான பிரிவுகளில் சட்டத்தின்முன் நிறுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இன்நிலையில் வைத்தியசாலையின் பாதுகாப்பில் பொலிசாரின் பங்கு அதிகளவில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள அமைச்சர் பொதுமக்களும் வைத்தியசாலையின் பாதுகாப்பு மற்றும் நலன்களில் அக்கறை கொள்வது அவசியம். இதேநேரம் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதன்மூலம் இனிவருங் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாதவகையில் நடவடிக்கை அமைவதும் அவசியம் என்றும் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ் போதனா வைத்தியசாலை அசம்பாவிதம் குறித்து அமைச்சர் டக்ளஸின் அறிவுறுத்தல் ! | Virakesari.lk
  4. 30 MAY, 2024 | 06:17 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கையர்கள் ரஷ்யாவுக்கு சுற்றுலா விசா ஊடாக செல்வதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையர்கள் குறிப்பாக ஆண்கள் ரஷ்யாவுக்கு செல்வதாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும். ரஷ்ய யுத்தக்களத்தில் பாதிக்கப்பட்டு காயமடைந்துள்ள 37 இலங்கையர்களை முதற்கட்டமாக நாட்டுக்கு அழைத்து வர இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.455 இலங்கையர்களில் 16 பேர் காணாமல் போயுள்ளனர் என வெளிவிவகாரத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். வெளிவிவகாரத்துறை அமைச்சின் காரியாலயத்தில் 30 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, விசிட் விசா முறைமையின் ஊடாக ரஷ்யாவுக்கு சென்ற 455 இலங்கையர்கள் துரதிஷ்டவசமாக தற்போது நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.போலியான வாக்குறுதிகளுக்கு ஏமாற்றமடைந்து இவர்கள் ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்கள்.இவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளார்.கொழும்பில் உள்ள ரஷ்ய தூதகரத்துடனும்,மோஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகத்துடனும் விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரஷ்யாவுக்கு சென்றுள்ள இலங்கையர்கள் தொடர்பில் பல பொய்யான செய்திகள் வெளியாகியுள்ளதை அவதானிக்க முடிகிறது.ரஷ்யாவில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். அத்துடன் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியும் பொய்யானவை.உதயங்க வீரதுங்க தொடர்பில் எவ்விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. விசிட் விசாவில் ரஷ்யாவுக்கு சென்றவர்கள் தாம் யுத்தக்களத்தில் பணிக்கமர்த்தப்படுவதை அறியவில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.இரண்டாம் தர சேவைகளுக்காக சென்றதாகவும் குறிப்பிடுகிறார்கள்.போலியான வாக்குறுதிகளினால் இவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.மனித கடத்தல் வியாபாரத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.குற்றப்புலனாய்வு திணைக்களத்தி;ன் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ரஷ்ய யுத்த களத்துக்கு சென்றவர்களில் 16 இலங்கையர்கள் காணாமல் போயுள்ளனர்.37 பேர் காயங்களுக்குள்ளாக்கப்பட்டு சிகிச்சைப் பெறுகிறார்கள்.உயிரிழந்தவர்கள் தொடர்பான முழுமையாக தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. இலங்கையர்கள் ரஷ்யாவில் நெருக்கடிக்குள்ளாகியுள்ள விவகாரத்துக்கு உடன் தீர்வு காண்பதற்கு கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் இணக்கம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சுடன் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிகழ்நிலைமை ஊடாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். அத்துடன் இலங்கையர்கள் ரஷ்யாவுக்கு முறையான காரணிகள் இல்லாமல் செல்வதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இலங்கையர்கள் குறிப்பாக ஆண்கள் ரஷ்யாவுக்கு செல்வதாக இருந்தால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. யுத்தத்தில் ஈடுபடுவதற்காக தாம் ரஷ்யாவுக்கு செல்லவில்லை என்று அங்கு நெருக்கடிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் குறிப்பிடுகிறார்கள்.ஆகவே இவர்களை யுத்தக்களத்துக்கு அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சிடம் வலியுறுத்தவுள்ளோம். இலங்கையின் விசேட குழுவினர் எதிர்வரும் ஐந்தாம் திகதி ரஷ்யாவுக்கு செல்லவுள்ளனர். காயமடைந்துள்ள 37 இலங்கையளர்களை முதற்கட்டமாக நாட்டுக்கு அழைத்து வர பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பலவந்தமான முறையில் யுத்தத்தில் ஈடுபடும் தரப்பினர் மற்றும் இலங்கைக்கு மீண்டும் வருகை தர விரும்பும் தரப்பினரை நாட்டுக்கு அழைத்து வர ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம் என்றார். ரஷ்யாவுக்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும் - தாரக பாலசூரிய | Virakesari.lk
  5. 30 MAY, 2024 | 06:34 PM (நா.தனுஜா) இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மிகமோசமான வன்முறைகள் மற்றும் மீறல்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படுவதும், பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதும் இன்றியமையாததாகும் என 'நோ ஃபையர் ஸோன்' ஆவணப்படத்தின் இயங்குநர் கெலம் மக்ரே வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின்போது தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றக்காணொளிகளுடன் கூடியதாக கெலம் மக்ரேவினால் தயாரிக்கப்பட்ட 'நோ ஃபையர் ஸோன்' என்ற ஆவணப்படம் 11 வருடங்களுக்கு முன்னர் 'சனல் 4' என்ற தொலைக்காட்சி சேவையில் வெளியாகி பாரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்தது. இந்நிலையில் யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு இவ்வருடத்துடன் 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருப்பதை முன்னிட்டு கெலம் மக்ரே வெளியிட்டுள்ள நினைவுச்செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது: யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்களின் பின்னர், அதனை நாம் மேமாதம் 18 ஆம் திகதி நினைவுகூருகின்றோம். இருப்பினும் தமிழ் மக்களுக்கு எதிரான மீறல்கள் தொடர்கின்றன. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் அதனால் ஏற்பட்ட தாக்கத்துடனேயே தொடர்ந்து வாழ்கின்றனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் அவர்களது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான உரிமை இலங்கை அரசினால் மறுக்கப்படுகின்றது. அதேபோன்று இன்றளவிலேயே தமிழர் தாயகப்பகுதிகள் பாதுகாப்புத்தரப்பினரின் வலுவான கட்டுப்பாட்டின்கீழ் இருக்கின்றது. எனவே முன்னெப்போதையும்விட இப்போது உண்மை மற்றும் நீதி என்பன உடனடியாக உறுதிப்படுத்தப்படவேண்டியது மிகவும் அவசியமாகின்றது. 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மிகமோசமான சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படுவதும், பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதும் இன்றியமையாததாகும். இதேபோன்ற சம்பவங்களே இன்று காஸாவில் இடம்பெறுகின்றன. காஸாவில் வாழும் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என சகல மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய அரசாங்கம் மிகமோசமான மீறல்களைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றது. இலங்கையில் இடம்பெற்ற மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் இலங்கை அரசும், சர்வதேச சமூகமும் அடைந்திருக்கும் தோல்வி, தற்போது காஸாவில் இடம்பெற்றுவரும் அதனையொத்த மீறல்களை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. மனித உரிமைககள் மற்றும் நீதிக்கு மதிப்பளிக்கும் சகலரும் 'இனி இவ்வாறான சம்பவங்கள் நடைபெறக்கூடாது' என்பதையே வலியுறுத்தவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு அழிவுகள் மீள்நிகழாதிருப்பதை உறுதிப்படுத்த உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை நிலைநாட்டல் இன்றியமையாதது - கெலம் மக்ரே | Virakesari.lk
  6. 29 MAY, 2024 | 12:40 PM ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் இடம்பெற்றுவரும் முன்னெடுப்புக்களை சுமந்திரன் குழப்பியடிக்கின்றார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவ்வாறு தெரிவித்தார். தமிழ் பொது வேட்பாளர் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கருத்து பரிமாற்ற நிகழ்வு நடைபெறவுள்ளமை தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான இந்தக் கூட்டத்துக்கு எனக்கொரு அழைப்பும் வரவில்லை. ஆனால், இவ்வாறான கருத்துப் பரிமாற்ற கூட்டங்கள் என்பது எங்களைத் திசை திருப்புவதாகவே அமையும். சிவில் சமூகத்தினர், தமிழ் மக்கள் சார்பிலே ஒருவரைப் பொது வேட்பாளராக நிறுத்துவது என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். இதனை முன்வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுடனும், பல அரசியல் தரப்பினர்களுடனும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறாக பொதுவான நிலைப்பாடு எடுக்கப்பட்டு அதனை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கும்போது இந்த விவகாரத்தைப் பொது வெளியில் கொண்டு சென்று கருத்துப் பரிமாற்றம் என்று சொல்லி முரண்பாட்டுக்குரியதாகக் கொண்டு வந்து நிறுத்துவது திசை திருப்புவதாகவே அமையும். எங்களுடைய இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக யாராவது ஏதாவது சொல்ல வேண்டுமாக இருந்தால் எப்பவும் எதனையும் சொல்லட்டும். அதற்குரிய பதில்களை நாங்கள் கூறுவோம். அதாவது பொது வேட்பாளரைக் கொண்டு வந்து நிறுத்தினால் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவார்கள் அல்லது அப்படி, இப்படி என்று ஏதாவது காரணங்களைச் சொன்னால் அதற்குரிய பதில்களை வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். எமது தீர்மானம் குறித்து எந்தவிதமான கருத்துப் பரிமாற்றமும் தேவையில்லை. ஏனெனில் நாங்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டோம். அது சம்பந்தமாக ஆதரவு அல்லது எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் தங்களுடைய கருத்துக்களை எங்களுக்குத் தருகின்றபோது அதற்குப் பதிலைக் கொடுப்பது எங்களுடைய கடமை. அதனை விடுத்து இந்த விடயத்தைப் பொது வெளியில் அல்லது பொது மன்றத்தில் பேசவும் அதைப் பெரிதாக்கவும் வேறுவிதமாக இதைத் திசை மாற்றிக் கொண்டு செல்ல நினைப்பதும் பிழையான ஒரு வழிமுறை என்பது என்னுடைய கருத்தாகும். சுமந்திரன் தமிழ்த் தேசியத்தோடு நின்றவர் அல்ல. இதுவரையில் நமக்குத் தெரிந்த வரையில் தமிழ்த் தேசியத்தோடு ஒன்றியவரும் அல்ல. எனக்குப் பயமில்லை, நான் அதைச் சொல்லுவேன், இதைச் சொல்லுவேன் என்று அவர் சொல்லுவதிலிருந்தே அது தெரியும். பொது வேட்பாளர் என்ற விடயத்தில் அவருக்கு ஈடுபாடு இல்லை. அவரைப் பொறுத்தவரையில் ஏதோ தெற்கில் இருக்கும் ஒரு வேட்பாளருக்கு அது யாரோ ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் அல்லது ஆதரவு வழங்க வேண்டும் என்றும், அதிலிருந்து தமக்கு சில நன்மைகள் கிடைக்க வேண்டும் என்றும் எண்ணம் இருக்கக்கூடும். பொது வேட்பாளர் விடயத்தை சுமந்திரன் குழப்புகிறார் - சி.வி.விக்னேஸ்வரன் | Virakesari.lk
  7. யாழில் சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய செலுத்த வேண்டிய மின்சார கட்டணத்தை செலுத்தாது இராணுவத்தினர் முகாமை விட்டு வெளியேறியுள்ளனர் . மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையின் ஒரு பகுதியில் இராணுவத்தினர் முகாம் அமைத்து தங்கியிருந்தனர் . சுமார் நான்கு ஆண்டுகாலமாக முகாமிற்கு வழங்கப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை செலுத்தாத நிலையில் , நிலவையாக 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்த வேளை முகாமை விட்டு வெளியேறியுள்ளனர் . வைத்தியசாலை தென்னிந்திய திருச்சபையின் ஆளுகைக்கு உட்பட்டது என்பதனால் , அது தொடர்பில், தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் பத்மதயாளன் ஆண்டகையைத் கேட்டபோது; “ இராணுவத்தினர் குறித்த கட்டடத் தொகுதியில் தங்கியிருந்தனர் . அந்தக் காலப்பகுதியில் முகாமின் மின் கட்டணமாக 4 இலட்சத்துக்கு 50 ஆயிரம் ரூபா நிலுவை செலுத்தப்படாமல் உள்ளது. இந்தத் தொகையை இராணுவமே செலுத்தவேண்டும்" என்றார். யாழில். நாலரை இலட்சம் ரூபா மின் கட்டணத்தைச் செலுத்தாது முகாமை விட்டு சென்ற இராணுவத்தினர்! | Virakesari.lk
  8. 29 MAY, 2024 | 03:43 PM பஸ்ஸில் பயணித்த இங்கிலாந்து பெண் ஒருவரின் பயணப் பொதி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடொன்று கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். பிரபல யூடியூப் சேனல் ஒன்றினை நடத்திச் செல்லும் இவர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளின் சுற்றுலாத் தலங்களைக் காணொளிகளாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிடுவது வழக்கம். சுமார் 37 நாடுகளுக்குச் சென்றுள்ள இவர் இலங்கையின் சுற்றுலாத் தலங்களைக் காணொளிகளாக எடுப்பதற்காக கடந்த 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில், இவர் எல்ல பிரதேசத்திற்குச் செல்வதற்காகக் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ள நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக ரயில் சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. பின்னர் இவர் பஸ்ஸின் மூலம் எல்ல பிரதேசத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் போது அதே பஸ்ஸில் பயணித்த இருவர் இவரது பயணப் பொதியைத் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனது பயணப் பொதி திருடப்பட்டதை அறிந்துகொண்ட இவர், இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இவரது பயணப் பொதியினுள் விமான பயணச்சீட்டு,கமரா , மடிக்கணினி மற்றும் 2,000 டொலர் பெறுமதியான பணம் உள்ளிட்ட பொருட்கள் காணப்பட்டதாகக் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில்,தனது பயணப் பொதியை கண்டுப்பிடித்துக்கொடுக்கும் நபர்களுக்கு 5,000 டொலர் பெறுமதியான பணப்பரிசு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பஸ்ஸில் பயணித்த இங்கிலாந்து பெண்ணின் பயணப் பொதி திருட்டு! | Virakesari.lk
  9. 29 MAY, 2024 | 04:21 PM முல்லைத்தீவில் சாப்பாட்டுக்கடை உரிமையாளரால் பாடசாலை சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு கேப்பாபிலவில் உணவுக்கடை நடாத்திவரும் நபர் ஒருவரால் 14 வயதுடைய பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த சிறுமியின் உடலில் திடீரென ஏற்பட்ட மாற்றத்தினை அவதானித்த பெற்றோர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்து சென்று பரிசோதனைக்குட்படுத்தியதில் குறித்த சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த விடயம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட முள்ளியவளை பொலிஸார் குறித்த சிறுமியின் நிலைக்கு காரணமான நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த நபரை நேற்று செவ்வாய்க்கிழமை (28) நீதிமன்றில் முற்படுத்தியபோது எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் முல்லைத்தீவு கேப்பாபிலவில் உணவுக்கடை நடாத்தி வரும் 55 வயது மதிக்கத்தக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு - கேப்பாபிலவில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; சந்தேகநபர் கைது | Virakesari.lk
  10. 29 MAY, 2024 | 05:18 PM மே மாதம் 1 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 96,890 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 881,541 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில், மே மாதத்தின் முதல் 26 நாட்களில் 28.1 சதவீதமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவிலிருந்து 27,274 சுற்றுலாப் பயணிகளும் மாலைத்தீவிலிருந்து 7,620 சுற்றுலாப் பயணிகளும் ஜெர்மனியிலிருந்து 6,938 சுற்றுலாப் பயணிகளும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 6,935 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 26 நாட்களில் 96,890 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை | Virakesari.lk
  11. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு பா.ஜ.க-வுக்கு அதிரடி சவால்களை விடுத்திருந்த நிலையில், அது குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்திருப்பது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சீமான் கடந்த மே 24-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சீமான் ``தனித்து நிற்க பா.ஜ.க-வுக்கு துணிவு இருக்கா? ஜூன் 4-ம் தேதி பா.ஜ.க பெறப்போகும் வாக்குகள் எவ்வளவு எனத் தெரிந்துவிடும். கூட்டணியாக இல்லாமல் தனித்த பா.ஜ.க-வின் வாக்கு விழுக்காடு நாம் தமிழர் கட்சியைவிட அதிகமாக இருந்தால் கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன்” என சவால்விட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் `சீமான் எப்போது பார்த்தால் `தனித்து போட்டி, தனித்து போட்டி’ என பொங்குகிறார். ஆனால் தமிழ்நாட்டின் அரசியல் பல்ஸ், கூட்டணி அமைத்து போட்டியிடுவதுதான். நான்கு பொதுத் தேர்தலை சந்தித்தபோதும் இது அவருக்கு புரியவில்லை” என சாடினர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்த பா.ஜ.க-வின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ``திராவிடக் கட்சிகள் இல்லாத கூட்டணியை அமைத்திருக்கிறோம், கூட்டணிக்கு 21 இடங்களை விட்டுக் கொடுத்துவிட்டு 19 இடங்களில் பா.ஜ.க நின்றது. கூடுதலாக 4 இடங்களில் பா.ஜ.க சின்னத்தில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. அண்ணாமலை தாமரை சின்னத்தில் பா.ஜ.க கூட்டணி போட்டியிடும் 23 தொகுதிகளில் நாங்கள் பெறும் வாக்குகளுக்கு பக்கத்தில் நாம் தமிழர் கட்சி வரட்டும், குறைந்தபட்சம் அந்தந்த தொகுதிகளில் எங்களின் வாக்குகளில் மைனஸ் 50 விழுக்காடு வாக்கையாவது சீமான் பெறட்டுமே, பார்ப்போம்” என்றவர். தொடர்ந்து ``சீமான் கட்சி நடத்துகிறார் நன்றாக இருக்கட்டும். அவர் கட்சியை கலையுங்கள் என நான் சொல்லவில்லை. அவர்மீது மரியாதை இருக்கிறது. தமிழகத்தில் சீமானின் குரல் முக்கியமானது. எனவே இந்த விதண்டா வாதத்துக்கு நான் வரவில்லை. தேவையில்லாமல் அவர் ஏன் இந்த போட்டிக்கு வருகிறார் எனத் தெரியவில்லை” என முடித்துவைத்தார். எனினும் இந்த மோதல் சமூக வலைதளங்களில் தொண்டர்கள் இடையே தொடர்கிறது.! https://www.vikatan.com/government-and-politics/governance/annamalai-says-i-respect-seeman-his-voice-is-important
  12. ரெ.ஜாய்சன் 28 May, 2024 10:04 PM தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரே ஒரு மனிதரான முதியவர் கந்தசாமி உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி ஊராட்சியில் உள்ளது மீனாட்சிபுரம் கிராமம். இந்த கிராமம் நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் மேல செக்காரக்குடிக்கு அடுத்து அமைந்துள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 1,269. படிப்படியாக இந்த ஊரின் மக்கள் தொகை குறைந்தது. இந்த ஊரில் இருந்த மக்கள் அனைவரும் பிழைப்புக்காக ஊரை காலி செய்து விட்டு வெளியூருக்கு சென்று விட்டனர். இவ்வூரில் நிலவிய தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விவசாயம் பொய்த்து போனது. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் மக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வந்துள்ளனர். இதனால் ஊரில் இருந்து மக்கள் ஒவ்வொருவராக, வீடு, விவசாய நிலம் அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு, ஊரை காலி செய்து வெளியூர்களுக்கு சென்று குடியேறிவிட்டனர். கடைசியாக ஒரே ஒரு மனிதருக்காக மீனாட்சிபுரம் சுவாசித்துக் கொண்டிருந்தது. அவர் 75 வயதான கந்தசாமி. முதியவர் கந்தசாமி மட்டுமே அந்த கிராமத்தில் வசித்து வந்தார். ஊரை காலி செய்துவிட்டு சென்ற மக்கள் மீண்டும் ஊருக்கு வர வேண்டும், ஊர் செழிக்க வேண்டும் என்ற ஆசையோடு ஆவர் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது ஆசை நிறைவேறாமலேயே அவர் இயற்கை எய்தியுள்ளார். இதனால் அந்த ஊரின் கடைசி சுவாசமும் காற்றில் கரைந்து விட்டது. இதைத் தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக முதியவர் கந்தசாமியின் உறவினர்கள் மட்டுமின்றி, அந்த ஊரில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலானவர்கள் கிராமத்துக்கு வந்து முதியவருக்கு அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவரது இறுதி சடங்கு அருகில் உள்ள சிங்கத்தாகுறிச்சியில் நடத்தப்பட்டு, மீனாட்சிபுரம் கிராமத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவரது இறப்பு, இந்த ஊரை பூர்விகமாக கொண்ட இளைஞர்களுக்கு, அவர்களது அப்பா, தாத்தா வாழ்ந்த ஊரை பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்று இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர். Advertisement https://www.hindutamil.in/news/life-style/1255899-the-last-life-of-meenakshipuram-also-disappeared.html
  13. பாஜக நிர்வாகிமீது பாலியல் புகார்; குடும்பத்தில் இருவர் கொலை- பாதிக்கப்பட்ட பட்டியலின பெண்ணும் மரணம்! மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிமீது பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை புகாரளித்த வழக்கில், அவரின் சகோதரன் மற்றும் உறவினர் கொல்லப்பட்டதையடுத்து, தற்போது அவரும் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார். Published:Today at 9 AMUpdated:Today at 9 AM பாதிக்கப்பட்ட பட்டியலினப் பெண் 5Comments Share பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் மத்தியப் பிரதேசத்தில் ஆளுங்கட்சியின் பிரமுகர் உட்பட நான்கு பேர் மீது பாலியல் வன்கொடுமைப் புகாரளித்திருந்த 20 வயது பட்டியலின பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. முன்னதாக, கடந்த 2019-ல் பாஜக பிரமுகர் உட்பட நான்கு பேர் மீது சாகர் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சிறுமி (அப்போது 15 வயது) பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இதனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் புகாரை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தத் தொடங்கினர். ஆனால், அவர்கள் தொடர்ந்து மறுத்துவந்தனர். இத்தகைய சூழலில், கடந்த ஆண்டு ஆகஸ்டில் பட்டியலின பெண்ணின் 18 வயது சகோதரனை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. பின்னர் அவரின் தாயாரும் நிர்வாணமாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே, ஒன்பது பேர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இப்படியிருக்க, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த சாட்சியான அவரின் உறவினர் ராஜேந்திர அஹிர்வாருக்கு, கடந்த சனிக்கிழமை (மே 25) ஒருவர் போன் செய்து பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார். அதன்படி சென்றவ ராஜேந்திர அஹிர்வாரிடம், சாட்சி சொல்லக் கூடாது என்றும், சமரசமாக செல்ல வேண்டும் என்றும் ஒரு கும்பல் மிரட்டல் விடுத்திருக்கிறது. ஆனால், அவர் மறுக்கவே அங்கேயே கடுமையாகத் தாக்கப்பட்டார். பிறகு, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். க்ரைம் - கொலை அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்த போலீஸார் ஆஷிக் குரேஷி, பப்லு பெனா, இஸ்ரேல் பெனா, ஃபஹீம் கான், தந்து குரேஷி ஆகிய ஐவர் மீது கொலைவழக்கு பதிவுசெய்து, அவர்களில் ஒருவரை கைதுசெய்தனர். இந்த நிலையில், இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸில் வீட்டுக் கொண்டுவந்துக்கொண்டிருந்த பட்டியலின பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர், லோகேஷ் சின்ஹா, `பெண்ணின் உறவினர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறோம். இப்போது, இறந்தவரை ஏற்றிவந்த ஆம்புலன்ஸிலிருந்து பெண் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டார். விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிவரும்' என்று கூறியிருக்கிறார். பாதிக்கப்பட்ட பட்டியலின பெண் இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க மீது கேள்வியெழுப்பியிருக்கும் காங்கிரஸ், `ஒரே வருடத்தில் இரண்டு கொலைகளும், பா.ஜ.க பிரமுகர் மீது பாலியல் வன்கொடுமை புகாரளித்த பெண்ணின் மர்மமான மரணமும் நிகழ்ந்திருக்கிறது. பிரதமர் மோடி அவர்களே இந்த செய்தி உங்களிடம் வந்ததா... உங்களின் ஜங்கிள் ராஜ்ஜியத்தில் சட்டம் வெளிப்படையாக மீறப்படுகிறது. இந்தியாவின் மகள்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் சமரசமாக செல்லவில்லையென்றால் உங்கள் கட்சியினர் அவர்களைக் கொல்கிறார்கள். இந்தியாவின் மகள்களுக்கு நாட்டை பாதுகாப்பற்றதாக மாற்றிவிட்டீர்கள். எப்போதும் போல இந்த முறையும் நீங்கள் மிருகங்களுடன்தான் நிற்பீர்கள். இதை நாடு நன்கு அறிந்ததுதான்' என விமர்சித்து, கடந்த ஆண்டு தன் சகோதரன் கொல்லப்பட்டபோது பட்டியலின பெண் கதறி அழும் வீடியோவை X சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது. அதோடு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், ``மத்தியப் பிரதேசத்தில் தலித் சகோதரிக்கு நடந்த இந்த சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. மல்யுத்த வீராங்கனைகளாக இருந்தாலும் சரி, ஹத்ராஸ்-உன்னாவ் சம்பவம் மற்றும் இந்த கொடூர சம்பவம் என பாதிக்கப்பட்ட பெண்களாக இருந்தாலும் சரி குற்றம்சாட்டப்பட்டவர்களை மோடியும், அவரது அரசும் பாதுகாத்திருக்கிறது. சித்ரவதை செய்யப்பட்ட சகோதரிகள் நீதி கேட்டால், அவர்களின் குடும்பங்கள் அழிக்கப்படுகின்றன. நாட்டுப் பெண்கள் இனியும் அமைதியாக இருக்கப் போவதில்லை" என்று ட்வீட் செய்திருக்கிறார். இன்னொருபக்கம், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், உயிரிழந்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். பாஜக நிர்வாகிமீது பாலியல் புகார்; குடும்பத்தில் இருவர் கொலை- பாதிக்கப்பட்ட பட்டியலின பெண்ணும் மரணம்! | A scheduled caste woman Mysteriously died after she filed a rape case against bjp member - Vikatan
  14. இஞ்சி விலை உச்சம்! (ஆதவன்) யாழ். மாவட்டத்தில் தொடர்ந்தும் இஞ்சியின் விலை உச்ச நிலையில் காணப்படுகின்றது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்டத்தின் முக்கியமான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் தற்போது ஒரு கிலோ இஞ்சி 4 ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. இவ்வாறு தொடர் விலை அதிகரிப்புக்கு, இஞ்சி வரத்துக் குறைந்தமையே காரணமென வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, கடும் விலை அதிகரிப்புக் காரணமாக வழமையாக இஞ்சி விற்பனையில் ஈடுபடும் பல வர்த்தக நிலையங்களில் தற்போது இஞ்சி விற்பனையைக் காண முடியவில்லை. சில வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோ இஞ்சி 5 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. (ச) இஞ்சி விலை உச்சம்! (newuthayan.com)
  15. பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம் விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு! (ஆதவன்) கடந்த காலங்களில் வாக்களிக்க தவறியமையால் பல பிழையான தலைவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். கோத்தாபய போன்ற கடந்த கால அரச தலைவர்களால் நாடு சோமாலியாவாக மாறியது. -இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வந்திருந்த அரசதலைவர் ரணில் விக்கிரமங்க பொதுமக்களுக்கு காணி உறுதிகளை வழங்கியிருந்தார். அந்த நிகழ்வில் உரையாற்றும்போதே விஜயகலா மகேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- தேர்தலில் தோற்றபோதும், அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க மக்களுக்குச் சேவையாற்றி வருகின்றார். இன்று அநுரகுமார திஸாநாயக்க, சஜித் எனப் பலர் தேர்தலில் போட்டியிட வருகின்றார்கள். அன்று நாட் டைப் பொறுப்பெடுக்கும் வாய்ப்பு இருந்த போது அனைவரும் பின்வாங்கினர். ஆனால் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பெடுத்தார். அடுத்த தேர்தலே எனது அரசியல் பயணத்தின் இறுதி தேர்தலாகும். அதன் பின்னர் நான் அரசியலில் இருந்து விலகி விடுவேன் - என்றார். (ச) பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம் (newuthayan.com)
  16. யாழ்ப்பாணம், தீவக கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் அருட்சகோதரியொருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல், 11 பாடசாலை மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். பெண்கள் பாடசாலையொன்றின் விடுதியில் தங்கியிருந்த 10 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவிகளே, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். கடந்த 3 வருடங்களாக தாம் கடுமையாக தாக்கப்பட்டு வருவதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். அகப்பை காம்பு, தடியால் தாக்குவது, தலைமுடியை பிடித்து சுவருடன் தாக்குவதென, விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கடந்த 3 வருடங்களாக தம்மை சித்திரவதை செய்வதாக மாணவிகள் கண்ணீருடன் முறையிட்டுள்ளனர். ஆங்கில உச்சரிப்பு தவறு, ஆங்கிலம் முறையாக பேசாதது, பிரார்த்தனையை முறையாக மனனம் செய்யாதது உள்ளிட்ட காரணங்களுக்காகவே அருட் சகோதரி தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடப்படுகிறது. அத்துடன், பாடசாலை மாணவிகளுடன் உரையாடக்கூடாத கெட்ட வார்த்தைகளையும் உபயோகித்து திட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர். 11 மாணவிகளும் இன்று ஊர்காவற்றுறை பொலிஸாரால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்டமருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டனர். மாணவிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்களின் உடலில் தாக்கப்பட்ட தழும்புகள் அவதானிக்கப்பட்டுள்ளது. (அ) யாழில் மாணவிகள் உடம்பில் தழும்புகள்: (newuthayan.com)
  17. 28 MAY, 2024 | 02:55 PM மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு திங்கட்கிழமை (27) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மௌலவி உட்பட சிசிடிவி காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகிய 4 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். குறித்த சம்பவத்தில் கடந்த தவணையின் போது 30,26, 22, 23, வயதினையுடைய 4 சந்தேக நபர்களை பிணையில் விடுவிப்பது தொடர்பாகவும் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் நீண்ட சமர்ப்பணத்தின் பின்னர் மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான 4 சந்தேக நபர்களை தலா 10 இலட்சம் ரூபா சரீர பிணை, மாதம் இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடுதல், வெளிநாட்டு பயணத்தடை, கடவுச்சீட்டு நீதிமன்றில் பாரப்படுத்தல், குறித்த வழக்கு தவணைகளில் தவறாது ஆஜராகுதல், உள்ளிட்ட பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்தனர். மேலும், மற்றுமொரு சந்தேக நபரான மௌலவிக்கு விளக்கமறியல் நீடிக்கபட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆந் திகதி வரை வழக்கினை ஒத்திவைக்குமாறு கல்முனை நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியை சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த மாணவனே தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது தாக்குதல் மேற்கொள்ள தயாராகியதோடு, சாய்ந்தமருது பொலிஸாரால் மத்ரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டுள்ளார். மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் : மௌலவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் | Virakesari.lk
  18. 28 MAY, 2024 | 04:41 PM தமிழ் பொதுவேட்பாளரின் அவசியத்தை முன்னிறுத்தி அது விரைவாகவும் வீரியமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டை யாழ். வர்த்தக சங்கத்தினர் முன்வைத்துள்ளனர். தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான மக்கள், சமூக அமைப்புகளுடனான உரையாடலின் ஒரு கட்டமாக திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வணிகர் கழகத்துடனான சந்திப்பு நடைபெற்றது. பொதுவேட்பாளர் விடயத்தில் தொடர்ச்சியான செயற்பாட்டில் இருக்கும் சமூக (சிவில்) அமைப்புகளின் கூட்டிணைவு சார்பாக கலந்துகொண்ட பேராசிரியர் கே.ரி கணேசலிங்கம், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் யாழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் செயலாளர் உட்பட்ட முக்கிய உறுப்பினர்களுக்குமான கலந்துரையாடல் யாழ் வர்த்தக சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான நோக்கம் அதன் முக்கியத்துவம் தொடர்பாக விரிவாக பேசப்பட்டிருக்கிறது. சந்திப்பின் ஆரம்பத்திலேயே பொதுவேட்பாளரின் அவசியத்தை முன்னிறுத்தி அது விரைவாகவும் வீரியமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டை வர்த்தக சங்கத்தினர் முன் வைத்திருக்கின்றனர். இது பொதுவேட்பாளர் தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியிலும் சமூக நிறுவனங்கள் மத்தியிலும் தன்னியல்பாக தோன்றியுள்ளமையின் வெளிப்பாடு என சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இச்சந்திப்பில் பொதுவேட்பாளர் முன்னெடுப்பில் தொடர்ச்சியாக இயங்கிவரும் சிவில் சமூக அமைப்புகளின் கூட்டிணைவில் யாழ் வர்த்தக சங்கமும் இணைந்து செயற்படுவதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இது தொடர்பான தமது அறிக்கையை முன்வைப்பதாகவும் ஊடகங்கள் ஊடாக தமது உடன்பாட்டையும் இதன் அவசியத்தையும் வெளிப்படுத்தி தொடர்ந்து இக்கோரிக்கையை வலுப்படுத்துவதில் பங்காற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்கள். தமிழ் பொது வேட்பாளர் விடயத்தின் முக்கியத்துவம் கருதி வேறு பல சமூக நலன் சார்ந்தும் மக்கள் சார்ந்தும் செயற்படும் அமைப்புகளும் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழ் பொதுவேட்பாளர் முன்னெடுப்புக்கு யாழ். வணிகர் கழகமும் ஆதரவு ! | Virakesari.lk
  19. Published By: DIGITAL DESK 3 28 MAY, 2024 | 04:10 PM தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தவே கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்துள்ளதாகவும், அதனை தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதித்திட்டமாகவே தான் பார்ப்பதாகவே தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஒரு அவ்வாறு தெரிவித்தார். தென்னிலங்கையில் செருப்பு உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனம் தமிழர்களின் பாரம்பரியமானதும், தனித்துவம் வாய்ந்த கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்து அவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளனர். தமிழ் தேசிய பரப்பிலேயே கார்த்திகைப் பூ குறித்த ஒரு காலத்தில் மாத்திரம் பூக்கின்ற தனித்துவமான மலர் என்பதை கருத்தில் கொள்ளாது குறித்த நிறுவனம் கால்களுக்கு அணியும் பாதனைகளில் அதனைப் பதித்து தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தியுள்ளது. குறித்த விடயமானது தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதித்திட்டமாகவே பார்க்கிறேன். குறித்த நிறுவனம் விற்பனைக்கு விட்டுள்ள பாதணிகளை மீள பெற வேண்டும். அத்துடன் அது தொடர்பாக தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்தார். பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன் | Virakesari.lk
  20. 28 MAY, 2024 | 04:28 PM பொது வேட்பாளர் என்பது தமிழர் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்துகின்ற விடயம். ஜனாதிபதித் தேர்தலிலே தமிழர்கள் கடந்த காலத்தில் தமது விரல்களைச் சுட்டுக் கொன்றதை மறக்கமாட்டார்கள் என நினைக்கின்றேன். என ரணில் 2024 செயலணியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தேற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டமும் கலாசார நிலையாட்டு விழாவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இந்நிலையில் தேர்தலை மையமாக வைத்து அபிவிருத்திகள் நடைபெறுகின்றது எனும் கருத்துக்கள் எதிர்க் கட்சிகளினது தாங்க முடியாத அவர்களின் மனச் சஞ்சலமாகும். ஏனெனில் தற்போது திறக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைகள் அனைத்தும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வேலைகளாகும். எனவே தேர்தலை மையமாக வைத்துக் கொண்டு அபிவிருத்திகள் நடைபெறுகின்றதென்பது ஏற்க முடியாத கருத்தாகும். தமிழர்களை வாக்களிக்க விட்டிருந்தால் நிட்சயமாக தமிழர்களின் தலைவிதி மாறியிருக்கும். தற்போது எங்களுக்கு நாங்களே சூனியம் செய்து கொண்டு நாம் சகலதையும் இழந்து கொண்டிருக்கின்றோம். அதேபோன்றதொரு நிலையை தமிழர்கள் மீண்டும் ஏற்படுத்தி விடக் கூடாது என நான் கருதுகின்றேன். ஏனெனில் நடைபெற்ற ஜனாதிபதித் தெரிவிலே தமிழ் தரப்பு எதிர்ப்பினை வெளிக்காட்டியிருந்து. அந்த எதிர்ப்பின் வெளிப்பாடுகளை நாங்கள் தற்போது மறைமுகமாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். தற்போதைய ஜனாதிபதியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்திருந்தால் மாவட்ட அபிவிருத்திக்குழு, வடக்கு, கிழக்கு மாகாண சபை அனைத்தும் சரியான முறையிலே ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும். ஊழல்கள் திருட்டுக்கள் சர்வாதிகாரங்கள் நிறைந்திருக்காது என்பது எனது கருத்தாகும். எனவே தமிழ் தரப்பு இதுபோன்ற தவறுகளை இனிமேலும் செய்யக்கூடாது, சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி ஜனாதிபதித் தேர்தலிலே ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஆதரிக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கையாகும். எனக்கும் ஜனாதிபதிக்கும் இடையே உள்ள பரீட்சையமான உறவை வைத்துக் கொண்டு ரணில் 2024 செயலணியின் தலைமைப் பெறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எம்மால் முடிந்த அபிவிருத்திகளை அதிகளவு செய்து கொண்டிருக்கின்றோம் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார். பொது வேட்பாளர் என்பது தமிழர் மத்தியில் ஒரு மாயை - மோகன் | Virakesari.lk
  21. Published By: DIGITAL DESK 7 28 MAY, 2024 | 05:16 PM தமிழ்த்தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், இறுதிப்போரில் இலங்கை அரசாங்கம் எமது மக்களை ஆயுத முனையிலும் பட்டினியாலும் இனப்படுகொலை செய்த போது கஞ்சிக்காக வரிசையில் நின்றோம் அதனை எமது தற்கால சமூகத்திற்கு நினைவு படுத்தும் முகமாக சிரட்டையில் கஞ்சி காய்ச்சி தன்னெழுர்ச்சியாக மக்கள் வழங்கியபோது பொலிஸார் கதற கதற கைது செய்தனர். பல்கலைக்கழக மாணவர்கள் கஞ்சி காய்ச்சும் போதும் அதனை சப்பாத்து கால்களினால் தட்டி ஊத்தினர்.கேட்டால் கஞ்சிக்கு சுகாதாரம் இல்லை என்று அதனையும் கடந்து கடந்த 23மற்றும் 24ம் திகதிகளை பார்க்கும் போது தன்சல என்ற போர்வையில் இராணுவமும் அவர்களுடன் சேர்ந்த ஒட்டுக்குழுக்களும் எந்த சுகாதார முறையும் அற்று மிக மோசமாக செய்திருந்தனர். 2009ற்கு பின்பு இவ்வாறு வலிந்து திணிக்கப்படுகிறது. தமிழர்கள் ஒரு தனித்துவமான இனம் அவர்களுக்கே உரித்தான மொழி ,வணக்க பண்பாட்டு முறைகள் உள்ளன. சிங்கள அடையாளங்களையும் சிங்கள பண்பாட்டு முறைகளையும் இலங்கை அரசு இங்குள்ள படைகள் மூலம் திணிக்க முயல்கிறது. அதனை இந்த முறை வெளிப்படையாக செய்தது. இவ்வாறு செய்த நிலையில் எமது மக்கள் தங்களை மறந்து செயற்பட்டது. மன வேதனை தருகிறது. கிளிநொச்சி, யாழ்ப்பாணம், புதுக்குடியிருப்பு பகுதியில் மக்கள் வேடிக்கை பார்த்தாலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு எமது கஞ்சிப்பாணைக்கும் கஞ்சிக்கும் நடந்த அடாவடியை மறந்து வரிசையில் மக்கள் நிற்கின்ற போது அந்த நிகழ்வை பார்க்கும் போது எமது இனத்திற்கு இதுவும் ஒரு சாபக்கேடு நாம் போராடுகின்ற இனமாக இருந்தால் சில விடயங்களை எதிர்க்க வேண்டும். கறுப்பின மக்கள் தென்னாபிரிக்காவில் வெள்ளையர்களுக்காகவே போராடும் போது ஒரு பேருந்தில் ஒரு பெண்ணை வெள்ளையர்கள் தள்ளி வீழ்த்திய போது ஒட்டுமொத்த வெள்ளையர்களும் வெள்ளையர்கள் பயன்படுத்தும் போக்குவரத்தை தடுத்தனர்.நாங்களும் சில விடயங்களை போராட்டம் மற்றும் செயற்பாடுகள் மூலம் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சிறிதரன், கேள்வி -பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக்கட்சி மெளனம் காக்கிறது. தமிழரசுக்கட்சி மெளனம் காக்கவில்லை நான் உட்பட பலர் வெளிப்படையாக பேசியிருக்கிறோம் எமது கட்சிக்குள் இரு நிலைப்பாடுகள் உள்ளன. மத்திய குழுவிலும் கலந்துரையாடியிருக்கின்றோம் முடிவு எட்டப்படவில்லை. இன்னும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை அறிவித்தாலும் முடிவு எடுக்கப்படும். எந்தவொரு வேட்பாளராக இருந்தாலும் 2002ம் ஆண்டு ஒஸ்லோவில் எடுக்கப்பட்ட சமஷ்டி முடிவை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஆதரித்திருந்தார்.அதனை இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவரும் ஏனைய வேட்பாளரும் முன்வைக்கட்டும் அது வரை எமது இனத்திற்கு நடந்த அநீதிக்கு நீதியை வேண்டி தெளிவாக சொல்வதற்கு பொது வேட்பாளரை கொள்கைக்காக களம் இறக்க வேண்டும். கேள்வி -ஜனாதிபதியின் வடக்கு விடயத்தில் நீங்க மாத்திரம் கலந்து கொள்ளவில்லை கிளிநொச்சி வைத்தியசாலையில் குறித்த கட்டிடம் ஆரம்பிக்கப்படுகின்ற போது அத்திவாரம் வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டேன் அந்த படத்தை வைத்து பல அரசியல் கட்சிகள் தமது இயலாமையை வெளிப்படுத்தியிருந்தனர்.தேர்தல் வருகின்ற போது தேர்தல் பரப்புரையாக ரணில் விக்கிரமசிங்க வைத்திருப்பதான குற்றச்சாட்டும் உண்டு. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்கு தெளிவாக முன் வைக்கவில்லை விக்கினேஸ்வரனை சந்திக்கும் போதும் நையாண்டி பதிலையே முன் வைத்தார் வேலை வாய்ப்பு ஏன்றால் போதும் என்று இங்குள்ளவர்களுக்கு எனவும் தெரிவித்தார் தமிழ்த்தேசிய இனம் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் - சிறீதரன் | Virakesari.lk
  22. Published By: VISHNU 28 MAY, 2024 | 07:22 PM கடந்த வெள்ளிக்கிழமை திருநெல்வேலி பகுதியில் உள்ள உணவகத்தில் மதிய உணவு வாங்கிய ஒருவரின் சோற்று பொதியில் மட்டைத்தேள் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனிற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்தது. இதனையடுத்து சனிக்கிழமை குறித்த உணவகம், திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் எவையும் பின்பற்றாமல் சுகாதார சீர் கேட்டுடன் உணவகம் இயங்கிவருவது அவதானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்றையதினம் திங்கட்கிழமை (27) கடை உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான், உரிமையாளரிற்கு 45,000/= தண்டம் அறவிட்டதுடன் கடையினை திருத்த வேலைகள் முடிவடையும் வரை சீல்வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு கட்டளை வழங்கினார். இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் குறித்த உணவகம் இன்றைய தினம் சீல் வைத்து மூடப்பட்டது. திருநெல்வேலியில் உணவகம் ஒன்றின் சோற்று பொதியில் மட்டைத்தேள் - உணவகம் சீல் வைப்பு | Virakesari.lk
  23. விக்னேஸ்வரனின் வீட்டில் ரணில் இரகசிய கலந்துரையாடல்! (இனியபாரதி) நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் வீடு தேடிச் சென்று, அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க (25)இன்று மாலை சந்தித்தார். இதன்போது எதிர்வரும் அரச தலைவர் தேர்தல் தொடர்பில் அவருடன் ஆராய்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.(ப) விக்னேஸ்வரனின் வீட்டில் ரணில் இரகசிய கலந்துரையாடல்! (newuthayan.com)
  24. (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களையும், இந்துக்களையும் படுகொலை செய்வதற்காக நான்கு இலங்கையர்கள் கடந்த 18 ஆம் திகதி இந்தியாவுக்கு சென்றுள்ளார்கள். குறுகிய காலத்தில் இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கையால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும். இல்லையேல் இலங்கையிலும் எதிர்காலத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை போன்ற அடிப்படைத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டு மக்கள் அச்சமின்றி, சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட வேண்டும். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை கண்டுப்பிடிக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகிறார்கள். குண்டுத்தாக்குதல் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் நிறைவுப் பெற்றுள்ளன. நீதிமன்றத்துக்கும் அறிக்கை செய்யப்பட்டுள்ளன. குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரதான சூத்திரதாரியை கண்டுப்பிடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் ஒருபுறம் குறிப்பிட்டுக் கொண்டு மறுபுறம் புலனாய்வு பிரிவினரை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். குண்டுத்தாக்குதல் தொடர்பில் சகல தகவல்கள் கிடைத்திருந்தும் எவ்வித நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. சிறுபான்மையினரின் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை இழக்க கூடாது என்பதற்காக பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை. குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு முன்னர் பயங்கரவாதி சஹ்ரானின் தரப்பினர் கிழக்கு மாகாணத்தில் 10 அடிப்படைவாத செயற்பாடுகளிலும்,குண்டுத்தாக்குதல் ஒத்திகைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள். ஒத்திகையின் போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சஹ்ரானின் சகாக்களை பார்வையிடுவதற்கு ஒருசில அரசியல்வாதிகள் வைத்தியசாலைக்கும் சென்றிருந்தார்கள். இதன்போது எழுந்து கேள்வியெழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இந்தியாவில் தாக்குதல்களை நடத்த இவர்கள் அங்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.ஆகவே அடிப்படைவாத செயற்பாடுகள் குறித்து மீண்டும் அச்சம் எழுந்துள்ளது.இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ற என்று கேள்வியெழுப்பினார். இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.மொஹமட் நுஸ்ரத், மொஹமட் நஃப்ரான்,மொஹமட் ரஸ்தீன் ,மொஹமட் ஃபரிஷ் ஆகிய நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பின் உறுப்பினர்களாவர்.இவர்கள் இந்த மாதம் 18 ஆம் திகதி இந்தியாவுக்கு சென்றுள்ளார்கள். இவர்கள் 4 இலட்சம் ரூபாவுக்காக தாக்குதல்களை நடத்த சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களையும் , இந்துக்களையும் படுகொலை செய்வதற்காக இவர்கள் இந்தியாவுக்கு சென்றுள்ளதாகவும் 3 அல்லது நான்கு மாதங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பின் அடிப்படைவாத கொள்கைகளுக்கு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழுக்கள் அறிக்கைகளை சமர்ப்பித்து பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளன.ஒருசில இஸ்லாமிய அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மதரஸா பாடசாலைகள் பற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.ஆனால் அரசாங்கம் முழுமையாக பரிந்துரைகளை செயற்படுத்தவில்லை.ஆகவே பரிந்துரைகளை அலட்சியப்படுத்தாமல் செயற்படுத்த வேண்டும் இல்லையேல் இலங்கையில் மீண்டும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் போன்ற அடிப்படைவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என்றார். இந்துக்களை படுகொலை செய்வதற்காகவே 4 இலங்கையர்கள் இந்தியா சென்றுள்ளனர் - வீரசேகர | Virakesari.lk
  25. இலங்கையில் பின்னடைவான நிலையில் சிறுபான்மையினரின் மத சுதந்திரம் - சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டு Published By: VISHNU 23 MAY, 2024 | 01:00 AM (நா.தனுஜா) இலங்கையில் மத சுதந்திரம் என்பது கரிசனைக்குரிய மட்டத்திலேயே காணப்படுவதாகவும், மத சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் என்பன மத ரீதியிலான நெருக்கடிகளைத் தீவிரப்படுத்தியிருப்பதாகவும் சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச மதசுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவினால் இலங்கையில் மதசுதந்திரம் மீதான சவால்கள் தொடர்பில் அண்மையில் நிகழ்நிலை முறைமையிலான கருத்துக்கோரல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சர்வதேச மதசுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவின் பிரதி தவிசாளர் பிரெடெரிக் ஏ.டேவி, ஆணையாளர்களான டேவிட் ஹரி மற்றும் ஸ்டீபன் ஸ்னெக் ஆகிய மூவரடங்கிய குழாம் இதற்குத் தலைமைதாங்கியது. அதன்படி இலங்கையின் மதசுதந்திர நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்குழாமில் உள்ளடங்கும் பிரதிநிதிகள், 'போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் இலங்கை அதன் இன, மத வன்முறை வரலாற்றுடனான சமரசத்தைத் தொடர்கின்றது. இலங்கையில் மத சுதந்திரம் தொடர்பான நிலைவரம் கரிசனைக்குரிய மட்டத்திலேயே காணப்படுகின்றது. குறிப்பாக தமிழ் கத்தோலிக்கர்கள், தமிழ் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் என்பன மத ரீதியிலான அமைதியின்மையைத் தீவிரப்படுத்தியுள்ளன. பயங்கரவாத்தடைச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டம் மற்றும் நிகழ்நிலைக்காப்பு சட்டம் என்பன உள்ளடங்கலாக மத சிறுபான்மையினரை இலக்குவைக்கக்கூடியவாறான பல்வேறு கொள்கைகள் இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள கோயில்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட மதவழிபாட்டுத்தலங்களை அபகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தீவிர அமைதியின்மையைத் தோற்றுவித்துள்ளன' எனச் சுட்டிக்காட்டினர். அத்தோடு தமது ஆணைக்குழுவின் அதிகாரிகள் கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அரசாங்கத்தின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், மத சுதந்திர செயற்பாட்டாளர்கள், இன-மத சமூகக்குழுக்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரை சந்தித்துக் கலந்துரையாடியதாகவும், அவற்றை அடிப்படையாகக்கொண்டு மத சுதந்திரத்தைப் பொறுத்தமட்டில் இலங்கையை விசேட கண்காணிப்புக்கு உட்படுத்தவேண்டிய பட்டியலில் வைக்கவேண்டுமெனப் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்துக்குப் பரிந்துரைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து இக்கருத்துக்கோரலில் மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பின் (பேர்ள்) நிறைவேற்றுப்பணிப்பாளர் மதுரா ராசரத்னம், இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேச (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவின் மத சுதந்திர ஆணைக்குழுவின் தலைவர் மைக் கேப்ரியல், பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் இணை ஸ்தாபகர் ஷ்ரீன் ஸரூர் மற்றும் சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் சிரேஷ்ட ஆலோசகர் அலன் கீனன் ஆகியோர் பங்கேற்று சாட்சியம் அளித்தனர். இலங்கையின் மத சுதந்திர நிலைவரம் தொடர்பில் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு: ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இலங்கையின் மனித உரிமைகள் சட்டத்தரணியும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்தவருமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, முல்லைத்தீவு, குருந்தூர்மலை விவகாரம் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல எனவும், மாறாக தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையிலான பிரச்சினை எனவும் சுட்டிக்காட்டினார். அதேவேளை கடந்த 2016 ஆம் ஆண்டு இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக கடந்த மார்ச் 28 ஆம் திகதி கொழும்பு நீதிமன்றத்தினால் கலகொட அத்தே ஞானசாரருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை நினைவுகூர்ந்த அவர், சிறுபான்மை மதத்தை அவமதித்தமைக்காக பௌத்த தேரர் ஒருவருக்கு இத்தகைய தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறை எனத் தெரிவித்தார். இருப்பினும் ஞானசார தேரரினால் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவந்த நடவடிக்கைகளையும், அவற்றுக்கு ஊடகங்கள் வழங்கிய முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டிய ஹிஜாஸ், இருப்பினும் ஞானசாரர் நீண்டகாலமாக கைதுசெய்யப்படவில்லை எனவும் விசனம் வெளியிட்டார். முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதமாக பயங்கரவாதத்தடைச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டம் என்பன பயன்படுத்தப்பட்டமை குறித்தும், உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம்களின் மத சுதந்திரம் வெகுவாக ஒடுக்கப்பட்டமை குறித்தும் விரிவாக விளக்கமளித்த அவர், தற்போது நடைமுறைக்கு வந்திருக்கும் நிகழ்நிலைக்காப்பு சட்டமூலமும் மத சுதந்திரத்தை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தக்கூடும் என சந்தேகம் வெளியிட்டார். மதுரா ராசரத்னம் 'இலங்கை அரசியலமைப்பின் ஊடாக சகல மதங்களுக்குமான சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பினும், அதில் பௌத்த மதத்துக்கே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. எனவே முதலிடம் அளிக்கப்பட்டுள்ள பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்காக அரச கட்டமைப்புக்கள் தமிழ் இந்துக்கள், தமிழ் கிறிஸ்தவர்கள், சிங்கள கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் மத, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை மிகத்தீவிரமாக ஒடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தன. இந்நடவடிக்கைகளே மூன்று தசாப்தகால யுத்தத்துக்குத் தூண்டுதலாக அமைந்தன. யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழர்கள் வாழும் வட, கிழக்கு மாகாணங்களை அரச அனுசரணையுடன் சிங்கள, பௌத்தமயமாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன' என இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மதுரா ராசரத்னம் சுட்டிக்காட்டினார். மைக் கேப்ரியல் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேச (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவின் மத சுதந்திர ஆணைக்குழுவின் தலைவர் மைக் கேப்ரியல் இலங்கையில் கிறிஸ்தவ சமூகம் முகங்கொடுத்துவரும் மதரீதியான ஒடுக்குமுறைகள் தொடர்பில் விளக்கமளித்தார். '2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் கிறிஸ்தவ சமூகத்துக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் வன்முறை சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. இருப்பினும் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்படாததைப்போன்று மேற்படி ஒடுக்குமுறைகளுடன் தொடர்புடையோரும் எவ்வித நடவடிக்கையுமின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர். கத்தோலிக்க தேவாலயங்கள் பதிவுசெய்யப்படவேண்டும் எனவும், அன்றேல் வழிபாட்டு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படவேண்டும் எனவும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன' என அவர் தெரிவித்தார். அலன் கீனன் 'அரசியல் ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளான வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள் மீதான அழுத்தங்கள் அண்மையகாலங்களில் வெகுவாக அதிகரித்துவருகின்றன' எனக் குறிப்பிட்ட சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் சிரேஷ்ட ஆலோசகர் அலன் கீனன், வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயம் மற்றும் முல்லைத்தீவு குருந்தூர்மலை விவகாரம் ஆகிய இரண்டையும் அண்மையகால உதாரணங்களாக சுட்டிக்காட்டினார். இலங்கையில் பின்னடைவான நிலையில் சிறுபான்மையினரின் மத சுதந்திரம் - சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டு | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.