Everything posted by பிழம்பு
-
யாழ். அனலைதீவில் இந்திய மின் உற்பத்தி நிறுவனம் வேலைகளை ஆரம்பித்தது
Published By: DIGITAL DESK 3 04 APR, 2024 | 04:35 PM யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் புதிதாக நிா்மாணிக்கப்படவுள்ள சூரிய கலங்கள் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (04) நடைபெற்றது. இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. அந்நிலையில் இந்திய நிறுவனத்தின் மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் இன்றைய தினம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. யாழ். அனலைதீவில் இந்திய மின் உற்பத்தி நிறுவனம் வேலைகளை ஆரம்பித்தது | Virakesari.lk
-
யாழ். பண்டத்தரிப்பில் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு தண்டம்
Published By: DIGITAL DESK 3 04 APR, 2024 | 04:38 PM யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சுகாதார குறைப்பாடுகளுடன் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்குகளில் 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு வர்த்தக நிலையத்தினை சீல் வைத்து மூடுமாறும் மன்று உத்தரவிட்டுள்ளது. பண்டத்தரிப்பு பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் இ.யொனிப்பிரகலாதன் தலைமையில், அப்பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, ஒரு வர்த்தக நிலையத்தில் 19 வகையான காலாவதியான பொருட்கள் 245 இணை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உரிமையாளருக்கு 95 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டதுடன், கடையை சீல் வைத்து மூடுமாறும் மன்று உத்தரவிட்டது. பிறிதொரு வர்த்தக நிலையம் ஒன்றில் புழு மொய்த்த, வண்டரித்த அரிசி, கடலைப்பருப்பு என்பவற்றை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்த உரிமையாளருக்கு 65 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. அத்துடன், காலாவதியான உணவுப்பொருட்கள் வைத்திருந்த மற்றுமொரு உரிமையாளருக்கு 2 ஆயிரத்து 500 ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது. சுகநலத்திற்கு ஒவ்வாத நிலையிலும் காலாவதியான வண்டடித்த மா உப்பு போன்றவற்றை கொண்டு மிக்சர் உற்பத்தியினை மேற்கொண்டவருக்கு 45ஆயிரம் ரூபா விதிக்கப்பட்டது. அதேவேளை ஆனைக்கோட்டைப் பகுதியில் கு.பாலேந்திரகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, மோசமான நிலையில் உணவகத்தை நடாத்திய இருவரிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த நிலையில் இருவரும் நீதிமன்றில் சமூகமளிக்காமையால் இருவரிற்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ். பண்டத்தரிப்பில் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு தண்டம் | Virakesari.lk
-
இந்திய மீனவர்கள் 24 பேர் விடுதலை ; ஒருவருக்கு சிறை
Published By: DIGITAL DESK 3 04 APR, 2024 | 05:01 PM கடந்ந மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட 25 மீனவர்களில் 24 மீனவர்கள் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாதங்கள் சிறை என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (04) நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 3 படகுகளில் 1படகினை செலுத்திவந்த படகோட்டியான ஒருவருக்கு 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஒரு படகு தொடர்பான வழக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏனைய இரு படகுகளில் ஒரு படகின் உரிமையாளர் படகில் இருந்தமையாலும், மற்றைய படகின் உரிமையாளரின் மகன் குறித்த படகில் இருந்தமையாலும் அவர் தந்தையின் மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்து குற்றத்தினை ஒப்புக்கொண்டமையால் இரு படகுகளும் அரசுடமையாக்கப்பட்டன.. இந்திய மீனவர்கள் 24 பேர் விடுதலை ; ஒருவருக்கு சிறை | Virakesari.lk
-
தாக்குதலுக்கு சென்ற 10 பேர் கொண்ட வன்முறைக் கும்பலை மடக்கிப் பிடித்த ஊர்காவற்துறை மக்கள் !
Published By: DIGITAL DESK 7 04 APR, 2024 | 05:57 PM யாழ். ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியில் இன்றையதினம் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்கு சென்ற வன்முறைக் கும்பல் ஒன்றை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 2012ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்கள் வாட்ஸப் சமூக ஊடகம் ஒன்றில் குழுவாக செயற்பட்டு வந்தனர். இந்நிலையில் அந்த குழுவில் இருந்த, இருவருக்கிடையே முரண்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் முரண்பாட்டில் ஈடுபட்ட ஒருவரை தாக்குவதற்காக இன்னொருவர் ஊருக்கு வெளியில் இருந்து வன்முறைக் கும்பல் ஒன்றினை வரவழைத்துள்ளார். அந்தவகையில் ஆயுதங்களுடன் வந்த வன்முறைக் கும்பல் தாக்குதலை நடாத்த முயன்றவேளை ஊரில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குறித்த கும்பலை மடக்கிப் பிடித்து ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். -- தாக்குதலுக்கு சென்ற 10 பேர் கொண்ட வன்முறைக் கும்பலை மடக்கிப் பிடித்த ஊர்காவற்துறை மக்கள் ! | Virakesari.lk
-
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்! 11ஆவது நாளாகவும் தொடரும் நீதிகோரி போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்பு
Published By: VISHNU 04 APR, 2024 | 06:33 PM கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தால் அத்துமீறி பறிக்கப்பட்டு அநீதிகள் இழைக்கப்படுவதை எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதிகோரி போராட்டம் 11 ஆவது நாளாக வியாழக்கிழமை (04) இன்றும் தொடர்கிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து நற்பிட்டிமுனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து பொதுமக்களுடன் இணைந்து நடைபவணியாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்னால் உள்ள போராட்ட இடத்தினை வந்தடைந்தனர். இதன் போது அமைச்சரவை தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துங்கள், கல்முனை உப பிரதேச அலுவலகமாக கருதி மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத தீர்மானங்கள் அனைத்தையும் இரத்து செய்யுங்கள், காணி நிதி அதிகாரங்களை வழங்குங்கள், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சுயாதீன தொழிற்பாட்டை உறுதிப்படுத்துங்கள் என பல்வேறு கோஷங்களை முன்வைத்து போராடுகின்றனர். இந்த போராட்டத்தில் பொதுமக்கள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்! 11ஆவது நாளாகவும் தொடரும் நீதிகோரி போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்பு | Virakesari.lk
-
வடமாகாண இப்தார் நிகழ்வு ஒஸ்மானியாக் கல்லூரியில்!!
வடமாகாண இப்தார் நிகழ்வு ஒஸ்மானியாக் கல்லூரியில்!! (மாதவன்) வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின், பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், மதிப்புக்குரிய விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவனும் கலந்து கொண்டனர். பின்னர் கல்லூரி மண்டபத்தில் இப்தார் நிகழ்வுகள் இடம்பெற்றன. சர்வமதத் தலைவர்களின் ஆசியுரையினை மெளலவி ஏ.ம்.அப்துல் அஸீஸ் நிகழ்த்தினார். தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. இதன்போது, மரம் நடுகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதுடன் விருந்தினர்களுக்கு திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு பிரதியும் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் றஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ், பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் கலந்துகொண்டனர். (ஏ) வடமாகாண இப்தார் நிகழ்வு ஒஸ்மானியாக் கல்லூரியில்!! (newuthayan.com) --------------------------------------------------------- யாழில் சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு யாழில் சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு மாதவன் சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. மக்கள் பணிமனையின் நேசக்கரங்களின் எற்பாட்டில் புனித ரம்ழானின் சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று முஸ்ஸிம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஸலாமி யா மதரஸா மண்டபத்தில் மெலளவி பி.எ.ஏஸ்.சுபியான் தலைமையில் நடைபெற்றது. இதில் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் சிறி சாய்முரளி கலந்து சிறப்பித்தார். இதில் யாழ்ப்பாண மாவட்ட சர்வமதக்குழுக்களின் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வுக்கான நல்லாசி உரைகள் நிகழ்த்தப்பட்டன. பின்னர் மாலை 06.23 மணியளவில் குரான் துவாங்கு ஓதப்பட்டதுடன் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்த்தப்பட்டது. யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும், மக்கள் பணிமனையின் நேசக்கரங்களின் தலைவர் மெலளவி பி.எ.ஏஸ். சுபியான் ஆகியோர்களுக்கிடையிலான நட்பு ரீதியான பரிமாற்றங்கள் பகிரப்பட்டன. இதில் இஸ்லாமியர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டு இப்தார் நோன்பினை கடைப்பிடித்தனர்.(க) யாழில் சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு (newuthayan.com)
-
யாழில் போதை மாத்திரைகளுடன் அறுவர் கைது!!
யாழில் போதை மாத்திரைகளுடன் அறுவர் கைது!! (இனிய பாரதி) யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தலைமையிலான யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினர் இனைந்து நடத்திய சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குருநகரை சேர்ந்த ஐவரும் யாழ்ப்பாணம் நாவாந்துறையை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 18,19,20,21, வயதுடைய குறித்த நபர்கள் நீண்ட நாட்களாக வலையமைப்புக்குள் இருந்து பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்து வந்தாக கூறப்படுகிறது. இவர்கள் இன்று புனித பத்திரிசியார் பாடசாலைக்கு அருகில் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இருவரை கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் போது ஏனையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் முச்சக்கரவண்டியில் வியாபாரம் செய்யும் போது மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் குற்றத்தடுப்பு பிரிவினரும் இணைந்து கைது செய்ய முயற்சித்த போது நாவாந்துறை சந்தியில் முச்சக்கரவண்டியை விட்டு விட்டு ஓடும் போது 300 மாத்திரகைளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். (ஏ) யாழில் போதை மாத்திரைகளுடன் அறுவர் கைது!! (newuthayan.com)
-
பெண்கள் தனியாக சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடங்களில் இலங்கை முதலிடம்
Published By: DIGITAL DESK 3 03 APR, 2024 | 02:22 PM 2024 ஆம் ஆண்டில் பெண்கள் தனியாக சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம் பிடித்துள்ளதாக டைம் அவுட் என்ற சுற்றுலா வழிகாட்டி இணையத்தளம் தெரிவித்துள்ளது. தற்போது பெண்கள் தனியான செல்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக 1997க்குப் பிறகு பிறந்த பெண்களில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் தனியாக வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். சாகசம் , கலாச்சாரத்தை அனுபவித்தல் மற்றும் மறக்கமுடியாத அனுபவங்களைத் தேடும் அதிகமான பெண்களுக்கு எங்கு செல்ல வேண்டும், எதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்? என்பது கேள்விகளாக உள்ளது. பல நாடுகள் பாதுகாப்பாகவும் தனியாகவும் பெண்கள் பயணிக்க இடமளிக்கின்றன. அதாவது, நன்கு நிறுவப்பட்ட பேக் பேக்கர் வழிகள், நட்புடைய உள்ளூர்வாசிகள், சமூக தொடர்பு மற்றும் அமைதியான தனிமை ஆகிய இரண்டிற்குமான வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்குகின்றன. இந்த இலக்குகளை அடைவதற்கு பெண்கள் தனியாக சுற்றுலா செய்வதற்கு சிறந்த இடமாக இலங்கை திகழ்கிறது. "இந்து சமுத்திரத்தின் முத்து" என அதன் இயற்கை அழகினால் அழைக்கப்படும் இலங்கை தெற்காசிய கலாச்சாரத்தின் சுவையை வழங்கும் அதேவேளையில் அதன் தனித்துவமான அழகை வெளிப்படுத்துகிறது. அத்தோடு, தனியாக சுற்றுலா செல்லும் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் மற்றும் நிர்வகிக்கக்கூடிய அளவு ஆகியவற்றுடன், தனி சாகசங்களை மேற்கொள்ளும் பெண்களுக்கு சிறந்த தொடக்க புள்ளியாக இலங்கை வழங்குகிறது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியமிக்க தளங்களில் புராதன இடங்கள் ஏராளமாக இருப்பது இலங்கைக்கு பெண்கள் தனியாக சுற்றுலா வருவதற்கு சிறப்பம்சங்களில் ஒன்றாகும். பிரமிக்க வைக்கும் சிகிரியா குன்று முதல் அற்புதமான தம்புள்ளையின் குகைக் கோயில்கள் வரையான நாட்டின் வளமான வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றை ஆய்வு செய்யவும் மற்றும் கண்டுபிடிப்புக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகின்றன. அத்தோடு, அறுகம் குடா, மிரிஸ்ஸ மற்றும் ஹிக்கடுவ போன்ற இடங்கள் கடற்கரையோர தங்கும் விடுதிகள், சர்ஃபிங் செய்வதற்கான வாய்ப்புகள் மற்றும் உள்ளூர் உணவு வகைகள், ஓய்வெடுப்பதற்கும் பழகுவதற்கும் சரியான பின்னணியை வழங்குகிறது. டைம் அவுட் குழு உலகளாவிய முன்னணி விருந்தோம்பல் வணிக ஊடகமாகும். இது நகரத்தின் சிறந்ததைக் கண்டறியவும் அனுபவிக்கவும் மக்களை ஊக்குவிக்கிறது மற்றும் செயல்படுத்துகிறது. டைம் அவுட் ஊடகம் பல டிஜிட்டல் மற்றும் இயற்பியல் சேனல்கள் இணையதளங்கள், மொபைல், சமூக ஊடகங்கள், வீடியோக்கள் மற்றும் நேரலை நிகழ்வுகனை தன்னகத்தே கொண்டுள்ளது. டைம் அவுட் உள்ளூர் நிபுணத்துவ பத்திரிகையாளர்களின் உலகளாவிய குழுவால் எழுதப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. 333 நகரங்கள் மற்றும் 59 நாடுகளில் காணப்படும் சிறந்த உணவு, பானங்கள், கலாச்சாரம், கலை, இசை, நாடகம், பயணம் மற்றும் பொழுதுபோக்கு போன்றவற்றை உள்ளூர் நிபுணத்துவ பத்திரிகையாளர்களின் உலகளாவிய குழுவால் எழுதப்பட்ட உயர்தர உள்ளடக்கத்தை தருகின்றது. டைம் அவுட் குழு ஒரு முன்னணி உலகளாவிய ஊடகம் மற்றும் விருந்தோம்பல் வணிகமாகும், இது நகரத்தின் சிறந்ததைக் கண்டறியவும் அனுபவிக்கவும் மக்களை ஊக்குவிக்கிறது மற்றும் செயல்படுத்துகிறது. பெண்கள் தனியாக சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடங்களில் இலங்கை முதலிடம் | Virakesari.lk
-
உலகளாவிய ரீதியில் மிகத்துரிதமாக வளர்ச்சியடைந்துவரும் பிராந்தியமாக தெற்காசியா : இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியே பிரதான காரணம் என்கிறது உலக வங்கி
Published By: DIGITAL DESK 7 03 APR, 2024 | 12:45 PM (நா.தனுஜா) உலகளாவிய ரீதியில் மிகத்துரிதமாக வளர்ச்சியடைந்துவரும் பிராந்தியமாக தெற்காசியா விளங்குவதாகவும், இந்தியாவின் வேகமான வளர்ச்சியே அதற்குப் பிரதான காரணமாக அமைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கும் உலக வங்கி, இப்பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளின் வளர்ச்சி மந்தகரமான நிலையிலேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளது. உலக வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான தெற்காசியப்பிராந்திய அபிவிருத்தி நிலைவரம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி நிலைவரம் தொடர்பான மதிப்பீடு நேற்று செவ்வாய்கிழமை 'வன் கோல்பேஸ் டவரில்' அமைந்துள்ள உலக வங்கியின் இலங்கைக்கிளை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. அதனை முன்னிட்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஒருங்கிணைப்பில் உலக வங்கியினால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெற்காசியப்பிராந்தியத்தின் அபிவிருத்தி நிலைவரம் குறித்து விளக்கமளிக்கையிலேயே உலக வங்கியின் தெற்காசியப்பிராந்தியத்துக்கான சிரேஷ்ட பொருளியலாளர் பிரான்ஸிஸ்கா ஒன்ஸோர்ஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2024 - 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் மிகத்துரிதமாக வளர்ச்சியடைந்துவரும் பிராந்தியமாக தெற்காசியப்பிராந்தியம் காணப்படுவதாகவும், இந்தியாவின் வேகமான வளர்ச்சியே அதற்குரிய பிரதான காரணம் எனவும் சுட்டிக்காட்டிய அவர், இருப்பினும் கொவிட் - 19 பெருந்தொற்றுக்குப் பின்னரான காலகட்டத்தில் இப்பிராந்தியத்தின் ஏனைய நாடுகளின் வளர்ச்சி மந்தகரமான நிலையிலேயே இருப்பதாகத் தெரிவித்தார். அதற்கமைய 2024 இல் தெற்காசியப்பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக அமைந்திருக்கின்றது. அதேவேளை உலகின் ஏனைய பிராந்தியங்களுடன் ஒப்பிடுகையில் தெற்காசியப்பிராந்தியத்தின் வளர்ச்சியானது பெருமளவுக்கு அரசதுறையிலேயே தங்கியிருப்பதாகவும், எனவே அத்துறைக்கான செலவினங்கள் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்த பிரான்ஸிஸ்கா, இருப்பினும் தனியார் முதலீடுகளின் வளர்ச்சி குன்றியிருப்பதுடன் இது புதிய வர்த்தக மற்றும் நிதியிடல் வாய்ப்புக்கள், தரமான கட்டமைப்புக்கள் ஆகியவற்றின் தேவையை உணர்த்துவதாகக் குறிப்பிட்டார். தெற்காசியப்பிராந்தியம் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய சவால்களால் பல்வேறு தாக்கங்களுக்கு முகங்கொடுத்துவருகின்றது. இச்சவால்களால் குறிப்பாக வறியவர்கள் வெகுவாகப் பாதிப்படைவதுடன், அதற்கு இசைவாக்கமடைவதில் குடும்பங்களும், விவசாயிகளும் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். எனவே இதனை உரியவாறு கையாள்வதற்கான உத்திகளில் பிரதானமானது வீதிகள், பாலம் போன்ற பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உதவக்கூடிய கட்டமைப்புக்களில் முதலீடு செய்வதாகும்' என்றும் உலக வங்கியின் தெற்காசியப்பிராந்தியத்துக்கான சிரேஷ்ட பொருளியலாளர் சுட்டிக்காட்டினார். மேலும் தெற்காசியப்பிராந்தியத்தில் தொழில்புரியும் வயதுடையோரின் சனத்தொகை தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்ற போதிலும், அதனை ஈடுசெய்யக்கூடியவகையில் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை என கரிசனை வெளியிட்ட அவர், வலுவான வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் நிதியியல் சந்தைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் என்பன நீண்டகால அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி, தனியார்துறை முதலீடுகள் மற்றும் அரச வருமானம் என்பன அதிகரிப்பதற்கும், குடும்பங்கள் காலநிலைமாற்ற சவால்களை சீராகக் கையாள்வதற்கும் உதவும் எனப் பரிந்துரைத்தார். உலகளாவிய ரீதியில் மிகத்துரிதமாக வளர்ச்சியடைந்துவரும் பிராந்தியமாக தெற்காசியா : இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியே பிரதான காரணம் என்கிறது உலக வங்கி | Virakesari.lk
-
தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்படின் தமிழர் வாக்குகள் பிளவுபடாது : சி.வி.விக்கினேஸ்வரன்
Published By: DIGITAL DESK 7 03 APR, 2024 | 12:52 PM (நா.தனுஜா) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால், வஜிர அபேவர்தன கூறுவதுபோல் தமிழர்களின் வாக்குகள் பிளவுபடாது எனவும், மாறாக இதுவரை காலமும் பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பர் எனவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்கி, தமிழர் வாக்குகளைப் பிரிக்கக்கூடாது என ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன கூறியிருப்பது பற்றி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கும் விக்கினேஸ்வரன், இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது: எனது நண்பரான வஜிர அபேவர்தன ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளராவார். எனவே பதவியில் உள்ள ஜனாதிபதியை வெற்றியடையச்செய்வதற்கு அவரால் வேறு எதைக் கூறமுடியும்? ஆனால் அவர் தமிழர்கள் என்ற கோணத்திலிருந்து நாம் முகங்கொடுக்கும் பிரச்சினையைப் பார்த்தால், இவ்வாறு கூறமாட்டார். தமிழர்களாகிய நாம் இதுவரையில் பெரும்பான்மையின சமூகத்தைச்சேர்ந்த வேட்பாளருக்கே வாக்களித்திருக்கின்றோம். அவர்கள் அனைவரும் எமது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதாக வாக்குறுதியளித்தனர். ஆனால் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் அவர்களுக்கு எம்மைத் தெரியவே இல்லை. அவர்கள் வெகு இலகுவாக எம்மைப் புறக்கணித்துவிட்டனர். நாங்கள் 1956 ஆம் ஆண்டு எங்கே இருந்தோமோ, இப்போதும் அங்கேயே இருக்கின்றோம். வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை. இலங்கையில் இன்றளவிலே இனத்துவப்போக்கு நிலவுகின்றது. சிங்களவர்களால் தெரிவுசெய்யப்படும் சிங்களவர்களுக்கான சிங்கள அரசாங்கமே இயங்குகின்றது. தமிழர்கள் இந்த மண்ணில், அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவருகின்றனர் என்ற உண்மை சிங்களவர்களால் ஏற்கப்படவில்லை. பிரித்தானியர்கள் நிர்வாகத்தேவைகளுக்காக நாட்டை ஒன்றிணைத்தனர். இருப்பினும் அவர்கள் வெளியேறும்போது எமக்கு சமஷ்டி அரசியலமைப்பை வழங்கியிருக்கவேண்டும். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வியை நிறைவுசெய்துகொண்டு 1926 ஆம் ஆண்டு நாடு திரும்பிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க சமஷ்டி அரசியலமைப்பையே வலியுறுத்தினார். கண்டிய சிங்களவர்கள் டொனமூர் ஆணைக்குழுவிடம் சமஷ்டி அரசியலமைப்பையே கோரினர். ஏனெனில் கண்டிய சிங்களவர்கள் தம்மைத்தாமே ஆளுகின்ற சுயநிர்ணய உரிமைக்கான சட்டபூர்வ அதிகாரம் தமக்கு வேண்டுமெனக் கருதினர். இவ்வாறானதொரு பின்னிணயில் வட, கிழக்குவாழ் தமிழ்பேசும் மக்களின் சார்பில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறங்கினால் அவர் ஜனாதிபதியாகத் தெரிவாகமாட்டார் என்பது உண்மையே. தமிழ் பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்குவது தமிழர்களின் வாக்குகளைப் பிளவுபடுத்தும் என்ற தர்க்கம் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் மிகப்பொருத்தமான தமிழ் வேட்பாளரொருவர் களமிறக்கப்பட்டால், தமிழ்மக்கள் அனைவரும் பெரும்பான்மையின வேட்பாளருக்கு வாக்களிப்பதற்குப் பதிலாக, அத்தமிழ் பொதுவேட்பாளருக்கே வாக்களிப்பார்கள். தமிழர்கள் மிகநீண்டகாலமாக ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். எனவே இதுவரை காலமும் சிங்கள அரசியல்வாதிகளால் தமிழ்மக்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டார்கள் என்பதை உலகுக்கு எடுத்துரைப்பதற்கு இது மிகச்சிறந்ததொரு சந்தர்ப்பமாகும். அதிகாரம் மிக்க இடத்திலிருந்து தமிழர்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்கு தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவது மிகமுக்கியமானதாகும். தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்படின் தமிழர் வாக்குகள் பிளவுபடாது : சி.வி.விக்கினேஸ்வரன் | Virakesari.lk
-
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்!
Published By: VISHNU 03 APR, 2024 | 05:40 PM பௌத்தம் மற்றும் ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை ஜூன் 26 ஆம் திகதி வரை நீக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே புதன்கிழமை (03) உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, எதிர்வரும் காலங்களில் அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் விரிவுரைகளை நடத்தவுள்ள ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு கோட்டை நீதிவானிடம் கோரிக்கை விடுத்தார். ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டாலும் கைது செய்யப்படுவார் எனத் தெரிந்தும் கடந்த முறை இலங்கை வந்ததாகவும், விரிவுரைகளை முடித்துக்கொண்டு அவ்வாறே இலங்கை திரும்பவுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தெரிவித்தார். போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்! | Virakesari.lk
-
முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் இன்று இலங்கை வருகின்றனர்
கொழும்பு விமானநிலையத்தில் விசாரணையின் பின்னர் விடுதலை - குடும்பத்தவர்களுடன் இணைந்தனர் முருகன் ரொபேர்ட்பயஸ் ஜெயக்குமார். 03 APR, 2024 | 05:34 PM கொழும்பை வந்தடைந்த முருகன் ரொபேர்ட்பயஸ் ஜெயக்குமார் மூவரையும் கொழும்பு விமானநிலையத்தில் பலமணிநேரம் விசாரணை செய்த அதிகாரிகள் சில நிமிடங்களிற்கு முன்னர் அவர்களை விடுதலை செய்தனர் ' இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 33 ஆண்டுகள் வரை சிறையிலிருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இன்று காலை இலங்கையை வந்தடைந்தனர் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னைக்கு காவல்துறை வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டனர். இதன்படி இன்று முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை நோக்கி பயணித்தனர்.மூவரும் காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்தார் கொழும்பு விமானநிலையத்தில் விசாரணையின் பின்னர் விடுதலை - குடும்பத்தவர்களுடன் இணைந்தனர் முருகன் ரொபேர்ட்பயஸ் ஜெயக்குமார் | Virakesari.lk
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
“மூவரையும் கைது செய்தால் உண்மை வெளிவரும்” கனகராசா சரவணன் ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, கருணா, பிள்ளையான் ஆகியவர்களுக்கிடையே ஏதே ஒன்று மறைந்திருக்கின்றது. ஆகவே இவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரித்தால் இந்த குண்டுதாக்குதல் தொடர்பாக சரியான சூத்திரதாரி யார் என்பதை அறிய முடியும். எனவே இவர்களை உடன் கைது செய்து விசாரணை நடத்துமாறு பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கருணா படையணி என்பது வழமையான செயற்பாடு. தேர்தல் நெருங்குகின்றது தேர்தலுக்கான நாடகம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை பூரண அதிகாரத்துடன் மீட்டுத்தருவதாக கூறி, தமிழ் தேசிய மக்களுக்கு வாக்களிக்க இருந்த மக்கள் எல்லாம் தன்பக்கம் திசைதிருப்பி வாக்குகளை சிதறடித்து அந்த மாவட்டத்தில் தமிழ் மக்கள் பிரதி நிதி ஒருவர் வராமல் செய்து முஸ்லீம் மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க செய்த பெருமை செய்தவர். 2019 ம் ஆண்டு இடம்பெற்ற குண்டுதாக்குதல் தொடர்பாக தற்போது பலரின் வாயில் வித்தியாசமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றது. பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனின் ஆலோசகராக இருந்து சுவிஸ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஆசாத்மௌலான சனல் 4 ஊடகத்தில் பிள்ளையானை குற்றவாளி என தெரிவித்துள்ளார். ஆனால் பிள்ளையான் இன்று குண்டு தாக்குதலை வைத்து ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றார். இதே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன காலத்தில் இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றது. அவர் அப்போது வாய்திறக்காமல் ஜனாதிபதி பதவி இழந்து நீண்ட காலத்தின் பின் தற்போது வாயை திறந்து தனக்கு சூத்திரதாரியை தெரியும் என்று தெரிவித்துள்ளார். ஆகவே சட்டத்தின் மத்தியில் சாட்சியங்கள் மறைக்கப்பட்டாலும் குற்றம். இந்த சாட்சியம் ஏற்கனவே சொல்லப்படாது இருந்தது பாரிய குற்றம். ஆகவே அவர் மீது தீவிரமான விசாரணை நடாத்தப்பட்டு சரியான தகவலை தரவில்லை எனில் சட்டத்தின் முன் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுதவிர ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக அசாத் மௌலான பிள்ளையான் தொடர்பாக தெரிவித்ததையும் பிள்ளையான் புத்தக வெளியிட்டுள்ளது தொடர்பாக கருணா கருத்து தெரிவித்துள்ளார் எனவே இவர்கள் எல்லோரும் கூட்டாக விசாரிக்கப்படவேண்டும் ஏதே ஒன்று இவர்களுக்குள் மறைந்திருக்கின்றது எனவே இந்த கருத்;துக்களை வெளியிட்டு குற்றம் சாட்டும் முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, கருணா என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன், ஆகிய 3 பேரை அரசாஙகம் கைது செய்து சரியாக விசாரித்தால் இந்த குண்டுதாக்குதல் தொடர்பாக சரியான சூத்திரதாரி கைது செய்யப்படுவார். இது யார் என்பதை அறிய முடியும் எனவே ஜனபதிபதி விசேட குழு ஒன்றை அமைத்து அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு அரசையும் ஜனாதிபதியையும் கோட்டுக் கொள்கின்றேன் என்றார். R Tamilmirror Online || “மூவரையும் கைது செய்தால் உண்மை வெளிவரும்”
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
”அந்த சரக்கு கப்பல் பற்றி CEA அறிந்திருக்கவில்லை” சிங்கப்பூர் சரக்குக் கப்பல் ஒன்று அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு அபாயகரமான பொருட்களை ஏற்றி வந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஆரம்பித்துள்ளதாக சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். அபாயகரமான பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்குக் கப்பல் இலங்கைக்கு செல்வது CEAக்கு தெரியாது என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த மார்ச் 26ஆம் திகதி 764 தொன்கள் அபாயகரமான பொருட்களுடன் அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான Maersk நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட சிங்கப்பூர் சரக்குக் கப்பலான டாலி குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிபலிப்பைக் கேட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டுக்குத் தெரியாமல் அபாயகரமான பொருட்களை ஏற்றிக்கொண்டு இவ்வாறான சரக்குக் கப்பல் எவ்வாறு இலங்கை நோக்கிச் சென்றது என்பது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். சரக்குக் கப்பலில் விபத்தை சந்திக்காத வரையில், அதில் உள்ள அபாயகரமான பொருட்கள் குறித்து அறிந்திருக்க மாட்டோம். அப்படிப்பட்ட கப்பல் எப்படி இலங்கைக்கு சென்றது என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும், என்றார். கப்பல் விபத்துக்குள்ளாகியிருக்காவிட்டால் சரக்குக் கப்பலில் உள்ள அபாயகரமான பொருட்கள் குறித்து இலங்கை அறிந்திருக்காது என்ற உண்மையை அமைச்சர் வக்கும்புர ஒப்புக்கொண்டார். சரக்குக் கப்பல் தொடர்பில் இலங்கை சுங்கம் மற்றும் கொழும்பு துறைமுகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான அறிக்கையை சபைக்கு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். Tamilmirror Online || ”அந்த சரக்கு கப்பல் பற்றி CEA அறிந்திருக்கவில்லை”
-
அருணாச்சலப் பிரதேசம்: 4-வது முறை; 30 இடங்களுக்கு பெயர் மாற்ற அறிவிப்பு; தொடரும் சீனாவின் அத்துமீறல்!
இந்தியா - சீனா எல்லையில் அமைந்திருக்கும் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை, சீனா உரிமைக் கொண்டாடி வருகிறது. சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட சேலா சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் வருகைக்கு சீன அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதை இந்திய அரசும் கண்டித்திருந்தது. மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அதைத் தொடர்ந்து, வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் மார்ச் 9-ம் தேதியன்று, ``அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியப் பிரதேசமாக அமெரிக்கா அங்கீகரிக்கிறது, சீன ராணுவமோ அல்லது அந்நாட்டு மக்களோ.... அத்துமீறல்கள் மூலம் பிராந்திய உரிமைகோரல்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை, நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார். கடந்த மார்ச் 23-ம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ``அருணாச்சலப் பிரதேசத்துக்கு உரிமைக் கொண்டாடும் சீனா... இது புதிய பிரச்னை அல்ல. அந்நாடு தனது கோரிக்கையை தற்போது விரிவுபடுத்தியுள்ளது. ஆனால், அது முற்றிலும் நகைப்புக்குரியதாக இருக்கிறது. எனவே, நாங்கள் இதில் மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறோம்" எனத் தெரிவித்தார். அருணாச்சலப் பிரதேசம் Twitter இந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை சீனாவின் மாண்டரின் மொழியிலும், திபெத்திய மொழியிலும் மாற்றியிருக்கும் சீன அரசு, அதைத் தனது அமைச்சகத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறது. இதற்கு முன்னர் மூன்று முறை இது போன்ற பெயர்மாற்ற நடவடிக்கையில் சீனா ஈடுபட்டிருக்கிறது. 2017-ம் ஆண்டில் ஜாங்னானில் உள்ள ஆறு இடங்களின் பெயர்களின் முதல் பட்டியலையும், 2021-ம் ஆண்டு 15 இடங்களின் இரண்டாவது பட்டியலையும், 2023-ல் 11 இடங்களுக்கான பெயர் மாற்றப் பட்டியலையும், சீனா வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் 4-வது பட்டியலை தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்தப் பெயர் பட்டியல் மே 1 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அருணாச்சலப் பிரதேசம்: 4-வது முறை; 30 இடங்களுக்கு பெயர் மாற்ற அறிவிப்பு; தொடரும் சீனாவின் அத்துமீறல்! | China releases fourth list of 30 more names for places in Arunachal Pradesh - Vikatan
-
கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகம் நாளை வெளியிடப்படும்- அண்ணாமலை
பா.ஜ.க அண்ணாமலைக்கு தேர்தல் காய்ச்சல்; மீனவர்கள் குற்றச்சாட்டு பா.ஜ.க அண்ணாமலைக்கு தேர்தல் காய்ச்சல்; மீனவர்கள் குற்றச்சாட்டு (மாதவன்) இந்தியா பா.ஜ.க கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் குப்புசாமி அண்ணாமலைக்கு தேர்தல் காய்ச்சல் வந்துவிட்ட நிலையில் கச்சதீவு தொடர்பில் பிதற்ற ஆரம்பித்து விட்டார் என யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைப்பு செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கச்சதீவு எமது சொத்து இந்தியா இலங்கைக்கு தாரை பார்த்துவிட்டதாக தமிழக பா.ஜ.க தலைவர் குப்புசாமி அண்ணாமலை தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம். அண்ணாமலைக்கு தற்போது தேர்தல் காய்ச்சல் ஆரம்பித்த நிலையில் தமிழக மீனவர்களின் வாக்குகளை அபகரித்துக் கொள்ளும் கபடத்துடன் தான் பேசுவது என்ன எனத் தெரியாமல் புலம்ப ஆரம்பித்தார். 1974க்கு முன்னர் இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கன்னியாகுமரி நாகப்பட்டினம் ஆகிய பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக அப்போதைய இந்திய அரசாங்கம் இலங்கை மீனவர்களை கட்டுப்படுத்தும் முகமாக ஒப்பந்தம் என்ற போர்வையில் எம்மை கட்டுப்படுத்துவதற்காக வலிந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டனர். ஆனால் அண்ணாமலை காங்கிரஸ் அரசாங்கம் கச்சதீவை இலங்கைக்கு தாரை பார்த்து விட்டதாக கூறி வருகிறார் என்றார். குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த யார் மாவட்ட கடற் தொழிலாளர் சமாசத்தின் உப தலைவர் பிரான்ஸ்சிஸ் ரட்ணகுமார் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு வர முன் பொலிஸ் அதிகாரியாக சொயற்பட்டவர் என ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். இலங்கை மீனவர்கள் பிரச்சினை திருடன் பொலிஸ் விளையாட்டு என அண்ணாமலை நினைக்கக் கூடாது இது எமது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை. ஆகவே கச்சதீவு எமது சொத்து யாரும் உரிமை கோர முடியாது நிலையில் அண்ணாமலை தேவையற்ற பொய்களை பரப்ப முனைந்தால் கச்சதீவு எல்லையில் அண்ணாமலையின் கொடும்பாவியை கொழுத்தத் தயங்கோம் என அவர் மேலும் தெரிவித்தார். (ஏ) பா.ஜ.க அண்ணாமலைக்கு தேர்தல் காய்ச்சல்; மீனவர்கள் குற்றச்சாட்டு (newuthayan.com)
-
அதிக சிறுத்தைப் புலிகள் செறிந்து வாழும் இடமாக வில்பத்து தேசிய பூங்கா தெரிவு!
01 APR, 2024 | 01:12 PM அதிக சிறுத்தைப் புலிகள் செறிந்து வாழும் இடமாக வில்பத்து தேசிய பூங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விலங்கியல் நிபுணர் உள்ளிட்ட குழுவினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது . 2011 ஆம் ஆண்டு முதல் விலங்கியல் நிபுணர் உள்ளிட்ட குழுவினர் நடத்திய ஆய்வில் குறித்த பூங்காவில் சுமார் 313 சிறுத்தைகள் இருப்பதாகவும், 8 சிறுத்தை புலிக்குட்டிகள் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 131,690 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள வில்பத்து நாட்டின் மிகப்பெரிய தேசிய பூங்காவாகக் கருதப்படுகிறது. வில்பத்து பூங்காவானது மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களை எல்லையாகக் கொண்ட வில்பத்து, புத்தளம் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு பூங்காவாகும். அதிக சிறுத்தைப் புலிகள் செறிந்து வாழும் இடமாக வில்பத்து தேசிய பூங்கா தெரிவு! | Virakesari.lk
-
பாலியல் உறவில் ஈடுபடும் வயது குறைப்பு
பாலியல் செயற்பாட்டில் ஈடுபடும் வயதை 14 ஆக குறைக்கும் சட்டமூலத்தை மீளப்பெற்றார் நீதியமைச்சர் (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாலியல் செயற்பாட்டில் ஈடுபடும் வயதை 14ஆக குறைக்கும் வகையில் தண்டனை சட்டகோவையின் 364 ஆம் பிரிவை திருத்துவதற்கான இரண்டாம் மதிப்பீட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச சட்டமூலத்தை நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ மீளப்பெற்றுக்கொண்டார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (01) இடம்பெற்ற அமர்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 1995 ஆம் ஆண்டு தண்டனைச் சட்டக் கோவைக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு அமைய, 16 வயதுக்குட்பட்ட பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டாலும், அது கற்பழிப்பாகக் கருதப்படும். எனினும், நீதி அமைச்சரால் தண்டனைச் சட்டக் கோவைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் மூலம் அந்த வயது எல்லையை 14 வயது வரை குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. நீதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்துக்கு அரசியல் மற்றும் சிவில் தரப்பு மத்தியில் கடும் விமர்சனமும் எதிர்ப்புகளும் எழுந்தன. இந்த சட்டமூலத்தை மீளப்பெறுமாறு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தினார்கள். பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே 'தண்டனைச் சட்டக் கோவையின் 364ஆம் பிரிவுக்கான உத்தேச திருத்தம் தொடர்பில் தனது கடுமையான கவலையை வெளியிடுவதாக குறிப்பிட்டு 364 ஆம் பிரிவுக்கான உத்தேச திருத்தம் தொடர்பில் கருத்திற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்த விபரங்களை கடிதம் மூலம் நீதியமைச்சுக்கு அறிவித்திருந்தார். தண்டனைச் சட்டக் கோவையின் 364 ஆம் பிரிவை திருத்துவதற்கான உத்தேச சட்டமூலத்தை மீளப்பெறுமாறு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதாக சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த சட்டமூலத்தின் பாரதூரத்தன்மையை சுட்டிக்காட்டி சட்டமூலத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தியிருந்தார். இவ்வாறான பின்னணியில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இரண்டாம் மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தை மீளப்பெற்றுக்கொண்டார். பாலியல் செயற்பாட்டில் ஈடுபடும் வயதை 14 ஆக குறைக்கும் சட்டமூலத்தை மீளப்பெற்றார் நீதியமைச்சர் | Virakesari.lk
-
3 மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை
Published By: DIGITAL DESK 3 01 APR, 2024 | 05:12 PM இவ் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் நாட்டிற்கு 600,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அதன்படி, மார்ச் மாதம் 31 ஆம் திகதி நிலவரப்படி நாட்டிற்கு 608,475 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இவ் ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 200,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு, இது இலங்கைக்கு ஒரு திருப்பு முனையாகவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிகையை அண்மித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA)தரவுகள் சுட்டிகாட்டியுள்ளது. இந்நிலையில், 2024 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் 208,253 பேரும், பெப்ரவரி மாதத்தில் 218,350 பேரும், மார்ச் மாதத்தில் 209,181 பேரும் வருகை தந்துள்ளானர். மார்ச் மாதத்தில் இந்தியாவிலிருந்து 28,218 பேரும், ரஷ்யாவிலிருந்து 25,112 பேரும், ஜேர்மனியில் இருந்து 16,745 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 16,649 பேரும், சீனாவிலிருந்து 11,220 பேரும் வருகை தந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் பிரான்ஸ், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, போலந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை பதிவாகியுள்ளது. 3 மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை | Virakesari.lk
-
யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் : வெட்டிய கையையும் எடுத்துச் சென்ற கும்பல்!
யாழ்ப்பாணம் - வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (31) வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஞாயிற்றுக்கிழமை (31) வாள்களுடன் சென்ற குழு ஒன்று பருத்தித்துறை தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் உள்ள நபர் ஒருவர் மீது வாளால் வெட்டியதுடன் வாளால் வெட்டியபோது கீழே வீழ்ந்த கை துண்டையும் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாள் வெட்டுக்கு இலக்கான நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கையை இழந்தவர் செல்வநாயகம் செந்தூரன் எனும் 30 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஆவார். யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் : வெட்டிய கையையும் எடுத்துச் சென்ற கும்பல்! | Virakesari.lk
-
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும்
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை பௌத்தர்களுக்கு மனவேதனையளிக்குமாக இருந்தால் அது இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கும் ஆகவே அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற ஆயுர்வேத சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக நான் பேசவில்லை. இருப்பினும் உண்மையை மற்றும் யதார்த்தம் பற்றி அவதானம் செலுத்த வேண்டும். கூரகல விகாரை விவகாரத்தை தொடர்புப்படுத்தி ஞானசார தேரர் குறிப்பிட்ட கருத்துக்கு எதிராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முன்னாள் ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்தார்கள். அந்த வழக்குக்கு அமையவே ஞானசார தேரருக்கு நான்காண்டு கால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கூரகல விகாரை 2000 ஆண்டுகால பழமை வாய்ந்தது. இந்த விகாரையை அண்மித்த பகுதியில் இருந்த பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளை முஸ்லிம் அடிப்படைவாதிகள் ஆசிட் திரவம் ஊற்றி அழித்து, அடையாளங்களை சிதைத்து கட்டிடங்களை அமைத்துள்ளார்கள். இதற்கு எதிராகவே ஞானசார தேரர் குரல் கொடுத்தார். பௌத்த மரபுரிமைகளை அழிக்கும் போது பௌத்தர்களின் மனம் வேதனையடையாதா? கூரகல விகாரையின் தொல்பொருள் மரபுரிமைகள் அழிக்கபபட்டுள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி ஞானசார தேரரே ஆரம்பத்தில் குறிப்பிட்டார். ஆனால் அதனை எவரும் கவனத்திற் கொள்ளவில்லை.விளைவு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தை தோற்றுவித்தது. சுதேச முஸ்லிம்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தோற்றம் பெற்ற இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி ஞானசார தேரர் குறிப்பிட்ட விடயங்கள் உண்மையாகியுள்ளன. பௌத்த அடிப்படைவாதம், இந்து அடிப்படைவாதம்,இஸ்லாமிய அடிப்படைவாதம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை பௌத்தர்களுக்கு மனவேதனையளிக்குமாக இருந்தால் அது இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஆகவே அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும். இலங்கையர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். கடந்த கால சம்பவங்களை மறந்து அனைவரும் விட்டுக் கொடுப்புடன் செயற்படும் தேவை தற்போது காணப்படுகிறது என்பதை அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன் என்றார். ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் - அனுப பஸ்குவல் வலியுறுத்தல் | Virakesari.lk
-
ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?
ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
-
McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
Simrith / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0 - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
-
ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை
28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு புதிய முறைமையொன்றை இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் பெறப்படும் முறைப்பாடுகள் நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது . ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
-
அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு
அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு. (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார். இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார். மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)