Everything posted by பிழம்பு
-
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் யாழ் விஜயம்!
யாழ். சென். சார்ள்ஸ் மகா வித்தியாலயத்துக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை கையளித்த சஜித் பிரேமதாச 10 JUN, 2024 | 06:40 PM யாழ்ப்பாணம் சென். சார்ள்ஸ் மகா வித்தியாலய்த்துக்கு ஸ்மார்ட் வகுப்பறை நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சி தலைவர் பாடசாலைக்கு நேரில் சென்று, ஸ்மார்ட் வகுப்பறையை உத்தியோகபூர்வமாக கையளித்ததுடன், 05 கணினிகள், ப்ரின்டர் மற்றும் ஸ்மார்ட் போர்ட் (smart board) ஆகியவற்றையும் வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் ஆங்கில மொழி புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சி தலைவர், ஆங்கிலம் கற்பதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைத்தார். அத்துடன் பாடசாலைக்கு அரங்குடன் கூடிய இரட்டை மாடி கட்டடம் ஒன்றினை அமைத்து தருவதாக உறுதியளித்த எதிர்க்கட்சி தலைவர், நடனம் கற்கும் மாணவிகளுக்கான நடன உடைகள் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்டவற்றுக்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதியினையும் வழங்கினார். யாழ். சென். சார்ள்ஸ் மகா வித்தியாலயத்துக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை கையளித்த சஜித் பிரேமதாச | Virakesari.lk
-
ஓமந்தை - பனிக்கர்புளியங்குளத்தில் 235 ஏக்கர் விடுவிப்பு
ஓமந்தை, பனிக்கர் புளியங்குளத்தில் 235 ஏக்கர் காணி வனவளத் திணைக்களத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் தெரிவித்துள்ளார். ஓமந்தை, பனிக்கர் புளியங்குளம் பகுதிக்கு விஜயம் செய்து காணிகளை பார்வையிட்ட பின் திங்கட்கிழமை (10) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பனிக்கர் புளியங்குளம் பகுதியில் வாழ்ந்த மக்கள் பலர் வாழ்வாதார பயிற் செய்கைக்கு நீண்ட காலமாக காணியின்றி அவதிப்பட்டனர். இந்நிலையில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் என்ற வகையில் வனவளத் திணைக்களத்துடன் பல தடவை பேசி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய தற்போது அம் மக்களுக்கான காணி விடுவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, ஓமந்தை, பனிக்கர் புளியங்குளம் குளத்திற்கான காணி உட்பட மக்களின் வாழ்வாதாரப் பயிற் செய்கைக்காக 235 ஏக்கர் நிலம் வனவளத் திணைக்கள அதிகாரிகள் நேரடியாக வருகை தந்து பார்வையிட்டு அதனை விடுவித்துள்ளனர். இதன் மூலம் இப் பகுதியில் வாழும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஒரு ஏக்கர் காணி வாழ்வாதார நடவடிக்கைக்காக வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். ஓமந்தை - பனிக்கர்புளியங்குளத்தில் 235 ஏக்கர் விடுவிப்பு | Virakesari.lk
-
கொள்ளுப்பிட்டியில் பேருந்து ஒன்று பல வாகனங்களுடன் மோதி விபத்து
Published By: VISHNU 10 JUN, 2024 | 07:33 PM கொள்ளுப்பிட்டியில் பேருந்து ஒன்று பல வாகனங்களுடன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பேருந்து அலுவலக ஊழியர்களை ஏற்றிச் சென்றுள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்தின் பிரேக் பழுதானதால் குறித்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொள்ளுப்பிட்டியில் பேருந்து ஒன்று பல வாகனங்களுடன் மோதி விபத்து | Virakesari.lk
-
யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ஒரு மகிழ்வூட்டும் நிகழ்ச்சி
யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்வு. மேடை அலங்காரத்திலும், நிகழ்ச்சி அமைப்பிலும் சற்று முன்னேற்றம் காணக் கூடியதாக உள்ளது.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
பாஜக-வுக்கு நிபந்தனையா? - சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் வைக்கும் கோரிக்கைகள் என்னென்ன?! மத்தியில் ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 272 எம்.பி-க்கள் தேவை. ஆனால், கடந்த தேர்தலில் 303 இடங்களைப் பிடித்த பா.ஜ.க., இந்த முறை 240 இடங்களில்தான் ஜெயித்திருக்கிறது. ஆகவே, ஆந்திராவில் 16 இடங்களில் வென்றிருக்கும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, பீகாரில் 12 இடங்களில் வென்றிருக்கும் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தயவுடன் மத்தியில் கூட்டணி ஆட்சி அமையவிருக்கிறது. கடந்த முறை பா.ஜ.க மட்டுமே 303 எம்.பி-க்களை வைத்திருந்தார்கள். இப்போது, இந்த இரு கட்சிகளையும் சேர்த்து மொத்தம் 293 எம்.பி-க்களுடன் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அமையவிருக்கிறது. எப்படியோ மத்தியில் மீண்டும் அதிகாரத்துக்கு வருகிறோம், மீண்டும் பிரதமர் ஆகிறோம் என்று மோடி ஆசுவாசப்பட்டாலும், சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் வைத்துவரும் நிபந்தனைகளால் பா.ஜ.க தலைவர்கள் விழிபிதுங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கு மத்திய அரசின் அச்சாணிகளாக இருக்கப்போகும் இந்த இரு கட்சிகளின் நிபந்தனை நிறைவேற்றுவதைத் தவிர, பா.ஜ.க-வுக்கு வேறு வழியே இல்லை. நிதிஷ்குமார் twitter சிறப்பு அந்தஸ்து கோரிக்கை மிக முக்கியமாக தங்கள் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை அவர்கள் இருவரும் முன்வைக்கிறார்கள். இதற்கு முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திராவுக்கு மத்திய பா.ஜ.க அரசு சிறப்பு அந்தஸ்து தர மறுக்கிறது என்ற சர்ச்சையில்தான் கூட்டணியிலிருந்து வெளியேறினார். ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டபோது, ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை 2014-ம் ஆண்டு மத்திய அரசு வழங்கியது. அந்தக் கோரிக்கையை 2019-ம் ஆண்டு பா.ஜ.க அரசு நிராகரித்தது. அப்போது விட்டதை இப்போது பிடிக்கிறார் சந்திரபாபு நாயுடு. தற்போது, அஸ்ஸாம், நாகாலாந்து, இமாச்சலப்பிரதேசம், மணிப்பூர், சிக்கிம், மேகாலயா, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. மக்களவை சபாநாயகர் பதவி தெலுங்கு தேசத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் சந்திரபாபு நாயுடு முன்வைத்திருக்கிறார். மேலும், அமைச்சரவையில் கல்வி, சுகாதாரம், சாலைகள், பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட சில முக்கிய துறைகள் வேண்டுமென்று அவர் வலியுறுத்திவருகிறார். நிதிஷ்குமார் சந்திரபாபு நாயுடுவைப் போலவே, நிதிஷ்குமாரும் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைக்கிறார். நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தின் ஆட்சி பீகாரில் நடைபெற்றுவரும் நிலையில், இந்தக் கோரிக்கையை பா.ஜ.க-விடம் அவர் நிபந்தனையான வலியுறுத்துகிறார். நிதிஷ்குமார் நிதிஷ்குமார் இரண்டு கேபினட் அமைச்சர்கள், ஒரு இணை அமைச்சர் பதவிகள் வேண்டும் என்று கேட்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, நிதிஷ்குமார் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தவர். இந்த முறை ரயில்வே அமைச்சர் பதவியை அவர் கேட்கிறார். ஆனால், நிதித்துறை, உள்துறை, ரயில்வே போன்ற சில முக்கியமான துறைகளை தானே வைத்துக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க விரும்புகிறது. குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்பது இந்த இரு கட்சிகளின் இன்னொரு முக்கியமான நிபந்தனை. கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் பா.ஜ.க நினைத்தவற்றை எல்லாம் செய்தது. பிரிவு 370 நீக்கம் போன்ற தனது முக்கிய அரசியல் அஜெண்டாக்களை எல்லாம் பா.ஜ.க நிறைவேற்றியது. குறைந்தபட்ச பொது செயல் திட்டம் கொண்டுவரப்பட்டால் பா.ஜ.க தன் விருப்பப்படி திட்டங்களை நிறைவேற்ற வாய்ப்பு இல்லாமல் போய்விடும். குமாரசாமி - தேவகவுடா காரணம், குறைந்தபட்ச பொது செயல் திட்டம் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய ஒருங்கிணைப்பு குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதும் இந்த இரு கட்சிகளின் நிபந்தனையாக இருக்கிறது. அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க கூட்டணி ஆட்சியின்போது அந்த ஒருங்கிணைப்புக்குழுவின் அமைப்பாளராக ஜார்ஜ் ஃபெண்டான்டஸ் இருந்தார். தற்போது, அந்தப் பதவிக்கு நிதிஷ்குமார் பொருத்தமானவர் என்று ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகள் கூறுகிறார்கள். இந்த இரு கட்சிகள் தவிர தலா இரண்டு எம்.பி-க்களைப் பெற்றிருக்கும் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளமும், பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனாவும் மத்திய அமைச்சரவைப் பதவிகளைக் கேட்பதாக சொல்கிறார்கள். பவன் கல்யாண் குமாரசாமி தனக்கு கேபினட் அமைச்சர் பதவி வேண்டுமென்றும், வேளாண் துறை வேண்டும் என்றும் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்தாண்டு காலம் சுதந்திரமாக இயங்கிய பா.ஜ.க-வின் கைககள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கட்டப்பட்டிருக்குமா? பல ரிமோட் கன்ட்ரோல்கள் மூலம் இயங்கும் நிலையில்தான் பா.ஜ.க அரசு இருக்குமா? என்ற கேள்விகள் இப்போது எழுந்திருக்கின்றன. பாஜக-வுக்கு நிபந்தனையா? - சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் வைக்கும் கோரிக்கைகள் என்னென்ன?!| Nitish kumar and chandrababu naidu wants special status for Andhra pradesh and Bihar - Vikatan
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
- 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
தமிழக அரசியலை மிரட்டும் சீமானின் நாம் தமிழர்! 2019-ல் 3.90%; 2024-ல் அடேங்கப்பா 8.10% வாக்குகள்! சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகளில் தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் பாஜக பெரிய கட்சியா? நாம் தமிழர் பெரிய கட்சியா? என்பதுதான் முதன்மையான விவாதம். லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதில் மத்தியில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப் பெரும்பான்மை பெற 272 இடங்கள் தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உள்ளது. தமிழ்நாடு, புதுவையைப் பொறுத்தவரை திமுக கூட்டணியே 40 இடங்களையும் கைப்பற்றிவிட்டது. அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை எந்த ஒரு இடத்தையும் கைப்பற்றவில்லை. அதேநேரத்தில் இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் கட்சிகள் பெற்றிருக்கும் வாக்கு சதவீதம் தமிழகத்தில் புதிய அரசியல் பாதை உருவாகிறதா? என்ற கேள்வியை எழுப்பாமல் இல்லை. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் போட்டியிட்ட இடங்களும் வென்ற வாக்குகளும் திமுக (21) 26.93% அதிமுக (32) 20.46% பாஜக (23) 11.24% காங்கிரஸ் (9) 10.67% நாம் தமிழர் (39) 8.10% பாமக (10) 4.2% இதர கட்சிகள் அனைத்தும் குறைவான வாக்கு சதவீதம்தான் பெற்றுள்ளன. 2019-ம் ஆண்டு தேர்தலில் என்ன நடந்தது? திமுக (24) 32.76% அதிமுக (20) 25.53% பாஜக (5) 3.62% காங்கிரஸ் (9) 12.72% நாம் தமிழர் (37) 3.90% பாமக (7) 5.36% தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தேர்தலில் வென்றாலும் இடங்களையே கைப்பற்றாமல் இருந்தாலும் அதன் வாக்கு சதவீதம் நிலையானதாகவே இருந்து வருகிறது என்பதை 2 தேர்தல்களின் புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துகின்றன. காங்கிரஸ் கட்சி இம்முறை அனைத்து இடங்களிலும் வென்ற போது 2% வாக்குகளை இழந்திருப்பது அக்கட்சிக்கான எச்சரிக்கை அலாரம்தான். பாமகவைப் பொறுத்தவரையில் போன முறை 7 தொகுதிகளில் போட்டியிட்டு 5.36% ஓட்டுகளைப் பெற்றது; இம்முறை 10 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 4.2% ஓட்டுகளைத்தான் பெற்றிருப்பது அந்த கட்சிக்கும் 'எச்சரிக்கை' மணி அடிக்கப்படுகிறது என்பதுதான். 5 தொகுதிகளில் நாம் தமிழர் 3-ம் இடம்! 12 இடங்களில் 1 லட்சத்துக்கும் மேல் ஓட்டுகள்- தொகுதி வாரியாக! இதற்கு அப்பால் பாஜக, நாம் தமிழர் கட்சிகளைப் பார்ப்போம். பாஜகவைப் பொறுத்தவரையில் 2019-ல் 5 தொகுதிகளில் போட்டியிட்டு 3.62% வாக்குகளைப் பெற்றது. இம்முறை 4 மடங்கு அதிகமாக 23 தொகுதிகளில் போட்டியிட்டது. அப்படியானால் வாக்கு சதவீதம் 4 மடங்கு அதிகமாகத்தானே இருக்கும். ஆம் அப்படித்தான் 11.24% வாக்குகளைப் பாஜக பெற்றுள்ளது. நாம் தமிழர் வளர்ச்சி: அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள்.. ஒவ்வொரு தேர்தலிலும் அந்த கட்சி தனித்துதான் போட்டியிடுகிறது. 2019-ம் ஆண்டு தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 3.90% வாக்குகளைத்தான் பெற்றது. இந்த முறை அதைப் போல இரு மடங்கு வாக்குகளை அதிகமாக பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி. அதாவது 8.10% வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றிருப்பது வளர்ச்சியைத்தான் குறிக்கிறது. அடுத்து வரும் தேர்தல்களில் இந்த வாக்கு சதவீதம் நிலைக்குமா? குறையுமா? என்பதற்கு அப்பால் இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் நாம் தமிழர் கட்சிதான் தமக்கான பெரும் ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறது என்பதையே புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துகின்றன. Read more at: https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilars-8-10-vote-share-threats-to-main-political-parties-611647.html- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
அயோத்தில் பாஜக தோல்வி: 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வெற்றி புதுடெல்லி: உத்தர பிரதேசம் அயோத்தி உள்ளடக்கிய பைஸாபாத்தில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. இங்கு சமாஜ்வாதியின் வேட்பாளர் அவ்தேஷ் பிரசாத் சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். உ.பி. முதல் மத்தியில் ஆட்சி அமைப்பது வரை காரணமாக இருப்பது எனக் கருதப்பட்டது அயோத்தி தொகுதி. இங்கு பல ஆண்டுகளாக பாபர் மசூதி, ராமர் கோயில் விவகாரம் நிலவி வந்தது. தனது ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டும் உறுதியை பாஜக அளித்தது. இதனால், ராமர் கோயில் பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேட பாஜக முயல்வதாகப் புகாரும் எழுந்திருந்தது. இந்நிலையில், இதன் மேல்முறையீட்டு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 9, 2019 இல் ராமர் கோயிலுக்கான வழி பிறந்தது. இதையடுத்து நீதிமன்ற அமர்வின் உத்தரவின்படி, அறக்கட்டளை அமைக்கப்பட்டு ராமர் கோயில் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜையை பிரதமர் மோடி முன்னிருந்து நடத்தினார். கடந்த ஜனவரியில் ராமர் கோயிலின் தரைத்தளம் கட்டப்பட்டு பிரதமர் நரேந்திரமோடியால் திறந்து வைக்கப்பட்டது. னவே, ராமர் கோயிலால், உ.பி.யில் பாஜகவிற்கு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி உறுதி எனக் கருதப்பட்டது. இதன் பலன் நாட்டின் இதர மாநிலங்களிலும் கிடைக்கும் எதிர்பார்ப்பும் பாஜகவிற்கு இருந்தது. ஆனால், இந்த பலன் தற்போது உ.பி.யிலேயே கிடைக்காமல் போய் விட்டது. அயோத்யாவின் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லுசிங் சுமார் 55,000 வாக்குகளில் தோல்வி அடைந்துள்ளார். இங்கு சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்ட அவ்தேஷ் பிரசாத்திற்கு கிடைத்த வெற்றி வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமர் கோயில் விவகாரம் எழுந்தது முதல் பைஸாபாத்தும் ஒரு முக்கியத் தொகுதியாகி விட்டது. நீண்ட காலமாக பாஜக வசமுள்ள பைஸாபாத்தில் 2009 இல் மட்டுமே காங்கிரஸ் வென்றிருந்தது. பிறகு 2014 முதல் பாஜகவின் எம்பியாக உள்ள லல்லுசிங் மீண்டும் அங்கு போட்டியிட்டிருந்தார். இவர் அயோத்தி சட்டப்பேரவை தொகுதியில் 5 முறை பாஜக எம்எல்ஏவாகவும் இருந்தவர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லல்லுசிங்கின் வெற்றி, 2014 தேர்தலில் தோல்வியில் முடிந்துள்ளது. பைஸாபாத்தில் இண்டியா கூட்டணியின் அங்கமாக இருந்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் தனித்து போட்டியிட்டது. கடந்த 1989 மக்களவை தேர்தலில் சிபிஐ சார்பில் பைஸாபாத்தின் எம்பியானார் மித்ரஸென் யாதவ். இவரது மகன் அர்விந்த்ஸென் யாதவ் இந்தமுறை சிபிஐக்காகப் போட்டியிட்டார். ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான அர்விந்த்ஸென், பைஸாபாத்தில் சமாஜ்வாதி வேட்பாளரின் வாக்குகளை அதிகமாகப் பிரிப்பார் என அஞ்சப்பட்டது. ராமர் கோயில் கட்டப்பட்டதில் தன் மீதானப் புகாருக்கு பாஜகவும் அஞ்சியிருந்தது. இதனால், பாஜகவும் கடைசிகட்ட தேர்தல்களில் மட்டும் ராமர் கோயிலை பற்றி பேசத் துவங்கியது. குறிப்பாக, இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் இடிக்கப்பட்டு விடும் என்ற பீதியை பிரதமர் மோடியே கிளப்பியிருந்தார். இதுபோன்ற கருத்துக்களும் பைஸாபாத்தில் பாஜகவின் தோல்விக்கு காராணமாகி விட்டதாகக் கருதப்படுகிறது. பாஜகவின் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பைஸாபாத்திற்கு ரூ.50,000 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அமலாகி வருகின்றன. எனினும், சமாஜ்வாதியை வெற்றிபெறச் செய்து பைஸாபாத்வாசிகள், ராமர் கோயிலை அரசியலில் இருந்து பிரித்து வைத்து விட்டனர். https://www.hindutamil.in/news/india/1259660-bjp-defeated-in-ayodhya-1.html Adverti- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
நாற்பதும் திமுக கூட்டணிக்கே! - தமிழகத்தில் அதிமுக+, பாஜக+ ‘வாஷ் அவுட்’ சென்னை: தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி தொடங்கி எண்ணப்பட்ட நிலையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணியை வாஷ் அவுட் செய்து 40 இடங்களையும் திமுக கூட்டணியே வென்றுள்ளது. இது மட்டுமல்லாமல் தமிழகத்தின் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியிலும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தாரகை வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகள் கொண்ட இந்த மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையில் ஓர் அணி, அதிமுக தலைமையில் ஓர் அணி, பாஜக தலைமையில் ஓர் அணி, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என 4 முனைப் போட்டியுடன் தேர்தல் களம் சூடுபிடித்த நிலையில் மற்ற தென் மாநிலங்களில் பாஜகவின் வீச்சு பெரிய அளவில் இருக்க தமிழகத்தில் மட்டும் பாஜகவை கணக்கைத் தொடங்கவிடாமல் கட்டுப்படுத்தியுள்ளது திமுக கூட்டணி. கவனம் பெறும் பாஜகவின் வாக்கு சதவீதம்: இருப்பினும், இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பல்வேறு இடங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் இரண்டாம் இடம் பிடித்து அதிமுகவை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி அந்தக் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மதுரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் மதுரை கிழக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்திய தொகுதிகளில் அதிமுகவை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றது. மேலூர், மதுரை வடக்கு, மதுரை மேற்கு தொகுதிகளில் பாஜகவை விட அதிமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளது. சறுக்கிய பாமக: தமிழகத்தில் காலை முதலே தருமபுரியில் பாமக நம்பிக்கை நட்சத்திரத்தை ஒளிரச் செய்து கொண்டிருக்க பிற்பகலுக்கு மேல் பின் தங்கியது. ஒரு கட்டத்தில் திமுக வேட்பாளர் அ.மணி வெற்றியைப் பதிவு செய்தார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. தேர்தல் முடிவுகள் வருத்தமளித்தாலும், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதால் அதை பா.ம.க. ஏற்றுக் கொள்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். நீலகிரியில் ஆ.ராசா 3வது முறையாக வெற்றி: நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ ராசா வெற்றி பெற்று மூன்றாவது முறையாக நீலகிரி எம்பி ஆக பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்ற பின் செய்தியாளர்களிடம் அவர் , திமுகவின் சமூக நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை அங்கீகரித்து தமிழக மக்கள் இந்த வெற்றியை வழங்கி இருக்கின்றனர் எனத் தெரிவித்தார். அண்ணாமலை தோல்வி: கோவையில் வெற்றி நிச்சயம் என அண்ணாமலை முழங்கிய நிலையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், “கோவை தொகுதியில் வெற்றி என்பது நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். தமிழக முதல்வர் விடிவை ஏற்படுத்தி கொடுப்பார் என மக்கள் நம்புகின்றனர். சென்னைக்கு அடுத்து கோவை போன்ற தொழில் நகரம் தனித்தன்மை இழந்து வரும் நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப தேர்தல் முடிவுகள் வழிவகுக்கும்.” என்றார். ’மோடி அலை எனும் மாயை’ - சிதம்பரம் தொகுதியின் வெற்றி வேட்பாளரான திருமாவளவன், “சென்ற முறை பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது ஒரு மாயை. அது உண்மை அல்ல. மோடி அலை என்பது ஒரு மாயை. அது உண்மை இல்லை என மக்கள் இப்போது நிரூபித்துள்ளார்கள்.” என்று கூறினார். காங்கிரஸ் பளிச்: தமிழகம், புதுச்சேரி எனப் போட்டியிட்ட 10 இடங்களிலும் வெற்றி பெற்ற காங்கிரஸ் வெற்றியை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடி வருகிறது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் வைத்திலிங்கம் பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து அவரது ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மைத்திற்க்கு வெளியே பட்டாசு வெடித்து கொண்டாடினர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பகல் கனவு கண்ட தமிழிசை போன்ற ஊர்க்குருவிகளுக்கு தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டி இருக்கிறார்கள்-மக்கள் விரோத பாசிச பாஜக தமிழ் மண்ணில் வேரறுக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான இரா.சிவா கருத்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்: அத்தனைக்கும் முத்தாய்ப்பாக, ”பா.ஜ.க.வின் பணபலம் – அதிகார துஷ்பிரயோகம் – ஊடகப் பரப்புரை ஆகிய அனைத்தையும் உடைத்தெறிந்து பெற்றுள்ள இந்த வெற்றி மகத்தான வெற்றியாக; வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக அமைந்திருக்கிறது! தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு - இந்திய ஜனநாயகத்தையும் அரசியல்சாசனத்தையும் காக்கத் தேவையான அரசியல் செயல்பாடுகளைத் தி.மு.க. தொடர்ந்து முன்னெடுக்கும்." என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கமல் வாழ்த்து: ‘இந்தியாவைக் காக்கும் போரில், திமுகவுடன் இணைந்து களம் கண்ட கூட்டணிக் கட்சியினருக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். சிந்தாமல் சிதறாமல் சந்தேகம் இல்லாமல் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி, இந்தியாவுக்கு வழியும், ஒளியும் காட்டக்கூடியவை’என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார் தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றதாகவும், புகார் எதுவும் வரவில்லை என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். நாற்பதும் திமுக கூட்டணிக்கே! - தமிழகத்தில் அதிமுக+, பாஜக+ ‘வாஷ் அவுட்’ | Tamil Nadu Election Results 2024 LIVE updates: DMK alliance leads in all 40 Lok Sabha seats - hindutamil.in- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
பஞ்சாப்: இந்திரா காந்தியைக் கொன்றவரின் மகன் முன்னிலை! பஞ்சாப் மாநில நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோண்மணி, பாஜக எனப் பெரும் கட்சிகளின் வேட்பாளர்களையே பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகிக்கிறார்கள் இரண்டு சுயேச்சைகள்! ஒருவர் சிறையிலிருக்கும் காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங் என்றால்... மற்றொருவர் இந்திரா காந்தியைப் படுகொலைசெய்த மெய்க்காப்பாளரின் மகனான சரப்ஜித் சிங் கால்சா! அம்ரித்பால் சிங் பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பலமுனைப் போட்டியில் களமிறங்கியிருந்தன. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம், காதூர் சாகிப் (Khadoor Sahib) தொகுதியில் காலிஸ்தான் ஆதரவு போராளி தலைவரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருந்துவருபவருமான அம்ரித் பால் சிங் சுயேச்சையாகப் போட்டியிட்டார். பஞ்சாப் (காலிஸ்தான்) தனிநாடு கோரிக்கை விடுத்துவரும் அம்ரித்பால் சிங், இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் `ஆபரேஷன் புளூ ஸ்டார்' மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட காலிஸ்தான் கிளர்ச்சியாளர் பிந்தரன் வாலேவை அடியொற்றி வளர்ந்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, 1984-ல் ஆபரேஷன் புளூ ஸ்டார் மூலம் சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலை சேதப்படுத்தி, பிந்தரன் வாலே உள்ளிட்ட காலிஸ்தான் போராளிகளை சுட்டுக்கொன்றதற்கு பழிதீர்க்கும் வகையில் இந்திரா காந்தி தனது மெய்க்காப்பாளர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மெய்க்காப்பாளர்களில் ஒருவரான பீன்ட் சிங்கின் மகன்தான் தற்போது பஞ்சாப் மாநிலம், ஃபரித்கோட்(Faridkot) தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டிருக்கும் சரப்ஜித் சிங் கால்சா. சரப்ஜித் சிங் கால்சா இந்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும் முன்னிலை வகித்து வருகின்றனர். குறிப்பாக, காதூர் சாகிப் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டிருக்கும் காலிஸ்தான் ஆதரவு போராளி தலைவர் அம்ரித்பால் சிங், அவருக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோண்மணி அகாலிதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களைக் காட்டிலும் சுமார் 1,84,088 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதாவது தற்போதுவரை சுமார் 3,84,507 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அதேபோல, இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற மெய்க்காப்பாளர் பீன்ட் சிங்கின் மகனான சரப்ஜித் சிங் மற்ற வேட்பாளர்களைவிட அதிகமாக சுமார் 2,96,922 வாக்குகள் பெற்று, சுமார் 70,246 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். பஞ்சாப்: இந்திரா காந்தியைக் கொன்றவரின் மகன் முன்னிலை! | Son Of Indira Gandhi's Assassin Set To Win Punjab Lok Sabha Seat - Vikatan- மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டின் தொகுதி வாரியாக தேர்தல் முடிவுகள்
தூத்துக்குடியில் எதிர் வேட்பாளர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்த கனிமொழி தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கனிமொழி 5,37,879 வாக்குகள் பெற்று 3,90,472 வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். அதோடு, கனிமொழியைத் தவிர போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். 2. சிவசாமி வேலுமணி (அதிமுக)-1,47,407 3. எஸ்.டி.ஆர்.விஜயசீலன் (தமாகா) - 1,21,680 4. ரொவினா ரூத் ஜேன் (நாம் தமிழர்)- 1,19,374 Election 2024: தமிழ்நாடு வேட்பாளர்களின் முன்னணி வெற்றி நிலவரம்... உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்! | Lok sabha election 2024 live updates of tamilnadu - Vikatan- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
கேரளாவில் காலூன்றிய பாஜக: திருச்சூரில் சுரேஷ் கோபி வெற்றிக்கு கைகொடுத்த `போராட்டம்’ கேரள மாநிலத்தில் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் நேமம் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட ஓ.ராஜகோபால் வெற்றிபெற்றார். கேரள சட்டசபையில் நுழைந்த முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ என்ற புகழைப்பெற்றார் ஓ.ராஜகோபால். எனினும், கடந்த சட்டசபை தேர்தலில் ஓ.ராஜகோபால் தோல்வியடைந்தார். இப்போது கேரளாவில் பா.ஜ.க-வுக்கு ஒரு எம்.எல்.ஏ-கூட இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கடந்த தேர்தல்வரை வென்றதில்லை. இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மற்றும் திருச்சூர் தொகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் களமாடியது பா.ஜ.க. மாலை 3 மணி நிலவரப்படி திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி 74,004 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் வெற்றி உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து பா.ஜ.க வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சுரேஷ் கோபி கட்சித் தொண்டர்களுடன் நடனமாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். சுரேஷ் கோபியின் மனைவி ராதிகா வீட்டின் முன்பு குவிந்தவர்களுக்கு பாயசம் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பாயாசம் வழங்கி கொண்டாடிய சுரேஷ்கோபியின் மனைவி ராதிகா கேரளாவில் பா.ஜ.க சார்பில் ராஜ்யசபா எம்.பி-யாக இருந்த சுரேஷ்கோபி கடந்த 5 ஆண்டுகளாக திருச்சூர் தொகுதியை மையமாகக்கொண்டு அரசியல் செய்துவந்தார். திருச்சூரில் கருவன்னூர் கூட்டுறவு வங்கியில் சி.பி.எம் கட்சியினர் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த விவகாரத்தை கையில் எடுத்து போராடினார் சுரேஷ் கோபி. மேலும், பணத்தை இழந்த அனைவருக்கும் வட்டியுடன் திருப்பி வழங்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி கொடுத்தார் சுரேஷ் கோபி. காங்கிரஸ் சார்பில் வடகரா தொகுதி சிட்டிங் எம்.பி-யான கே.முரளீதரன் தொகுதி மாறி திருச்சூரில் களம் இறங்கியது சுரேஷ் கோபிக்கு பிளஸ் பாயின்டாக அமைந்தது. கே.முரளீதரனின் தங்கையும், கே.கருணாகரணின் மகளுமான பத்மஜா வேணுகோபால் காங்கிரஸில் இருந்து பா.ஜ.க-வுக்கு தாவியதும் சுரேஷ் கோபிக்கு பலமாக அமைந்தது. சுரேஷ் கோபியின் மகளின் திருமணம் மற்றும் பிரச்சாரத்துக்கு என தொடர்ச்சியாக திருச்சூரைச் சுற்றியே பிரதமர் மோடியின் பிரசாரம் அமைந்ததும் தொண்டர்களை உற்சாகமாக்கியது. கேரள மாநிலத்தின் முதல் பா.ஜ.க எம்.பி என்ற வகையில் சுரேஷ் கோபி தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார். நடிகர் சுரேஷ்கோபி இதுகுறித்து சுரேஷ்கோபி கூறுகையில், "திருச்சூரில் எனக்கு இந்த வெற்றியை நல்கிய அனைத்து கடவுள்களுக்கும், லூர்து மாதாவுக்கும் வணக்கம். ஒரு பெரிய போராட்டத்திற்கு கூலியாக கடவுள் வழங்கிய பரிசு தான் இந்த வெற்றி. திருச்சூர் வாக்காளர்கள் தெய்வங்கள். மக்களை நான் வணங்குகிறேன். வாக்காளர்களை திசைமாற்றுவதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால் கடவுள்கள் அவர்களுக்கு வழிகாட்டினர். கேரளாவின் எம்.பி-யாக நான் செயல்படுவேன். ஒட்டுமொத்த கேரளாவின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்" என்றார். கேரளாவில் காலூன்றிய பாஜக: திருச்சூரில் சுரேஷ் கோபி வெற்றிக்கு கைகொடுத்த `போராட்டம்’ | Bjp candidate suresh gopi wins in kerala - Vikatan- மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டின் தொகுதி வாரியாக தேர்தல் முடிவுகள்
மன்சூர் அலிகானை முந்திய நோட்டா! தற்போதைய நிலவரம்; தி.மு.க - 4,46,326 பா.ஜ.க - 2,72,289 அ.தி.மு.க - 88,584 நாம் தமிழர் கட்சி - 38,978 மன்சூர் அலிகான் - 2,181 நோட்டா - 6,695 வேலூர்: விட்டு தராத கதிர் ஆனந்த்... ஹாட்ரிக் தோல்வி ஏ.சி.எஸ்! - மன்சூர் அலிகானை முந்திய நோட்டா! | vellore parliamentary constituency - dmk candidate kathir anand wins - Vikatan- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
3 சுற்றுகளில் பின்னடைவு... 4-ம் சுற்றில் லீட் அடிக்கும் மோடி! உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் மோடி கடந்த 3 சுற்றுகளாக பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில், 4-வது சுற்றில் தற்போது மோடி முன்னிலை வகித்து வருகிறார். https://www.vikatan.com/government-and-politics/election/parliament-election-2024-vote-count-live-updates?pfrom=home-main-row- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
வாரணாசியில் மோடிக்குப் பின்னடைவு... காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை! உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் முன்னிலை வகிக்கிறார்... அவரை எதிர்த்து போட்டியிட்ட மோடி பின்னடைவைச் சந்தித்திருக்கிறார். https://www.vikatan.com/government-and-politics/election/parliament-election-2024-vote-count-live-updates?pfrom=home-main-row- நாடு திரும்பிய 5 ஆண்கள் கைது
எஸ்.ஆர்.லெம்பேட் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் திங்கட்கிழமை(3)காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகில் இவர்கள் ஊர்மனைக்கு வந்துள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த 5 நபர்கள், கடற்படையினரால் விசாரணைக்கு உற்படுத்திய பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு, தலைமன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37,39,24,26 மற்றும் 38 வயதுடைய ஆண்கள் என தெரிய வந்துள்ளது. குறித்த 5 பேரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சென்றுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையிலே குறித்த 5 பேரும் படகு மூலம் இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த நிலையில் திங்கட்கிழமை(3) காலை தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குறித்த 5 சந்தேக நபர்கள் தற்போது தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதோடு,விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. Tamilmirror Online || நாடு திரும்பிய 5 ஆண்கள் கைது- பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத் தேர்வு
பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத் தேர்வு-2024 மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மே 4 இல் புலன்மொழி வளத்தேர்வுடன் தொடங்கிய இத்தேர்வானது கடந் சனிக்கிழமை எழுத்துத் தேர்வுடன் நிறைவுற்றுள்ளது. தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் 22 ஆவது ஆண்டாக நடைபெற்ற இப்பொதுத் தேர்வுக்கான தேர்வு வினாத்தாள்களைத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை வழங்கி வருகிறது. இல்-து-பிரான்சில் 53 தமிழ்ச்சோலைகள் மற்றும் வெளிமாகாண முதன்மை நகர்களிலுள்ள 12 தமிழ்ச்சோலைகள் மற்றும் 5 தனியார் பள்ளிகள் என 5563 மாணவர்கள் இத்தேர்வுகளில் தோற்றியிருந்தனர். இல்-து-பிரான்சு தேர்வர்களுக்கான எழுத்துத் தேர்வு அரச பொதுத் தேர்வு நடுவகமான MAISON DES EXAMANS இல் ARCUEIL நகரசபை மற்றும் பிரான்சு அரசின் அரச அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெற்றது. இந்தத் தேர்வு நடுவகத்தில் தமிழ் மொழிப் பொதுத் தேர்வு 17 ஆவது தடவையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 5279 தேர்வர்கள் தோற்றிய இம்மண்டபத்திற்கான பாதுகாப்பு, ஒருங்கமைப்பு, உணவுப் பரிமாற்றம், ஒழுங்கமைப்பு என்பவற்றை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் அதன் உப-கட்டமைப்புகளும் சிறப்பாகத் திட்டமிட்டு நடாத்தியிருந்தன. பிரான்சில் உயர்கல்வித் தேர்வில் தமிழை விருப்பப்பாடமாக மீண்டும் கொண்டுவரக்கோரி, தமிழியல் பட்டப்படிப்பு மாணவர்கள் தேர்வு மண்டப சுற்றுச் சூழலில் நின்றிருந்த பெற்றோர்களிடம் கையழுத்து வாங்கிக்கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2024 சிறப்புற நிறைவுறப் பங்காற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்து தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.(க) பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத் தேர்வு (newuthayan.com)- A/L பெறுபேறுகள் இடைநிறுத்தியமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு
இடை நிறுத்தப்பட்டுள்ள திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை பெறுபேற்றை வெளியிட ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- கலீலுர் ரஹ்மான் Published By: DIGITAL DESK 7 03 JUN, 2024 | 05:22 PM திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியிடப்படாமல் இடைநிறுத்தம் செய்யப்பட்ட விடயம் இலங்கையில் இன்னும் மனிதாபிமானம் உயிர்வாழ கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதையே உணர்த்துகிறது. அந்த மாணவிகளின் வாழ்வோடு விளையாட முனையும் யாரையும் நாம் அனுமதிக்க முடியாது. மாணவிகளின் உயர்தர பரீட்சை பெறுபேற்றை உடனடியாக வெளியிட பரீட்சை ஆணையாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொருளாளரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியிடப்படாமல் இடைநிறுத்தம் செய்யப்பட்ட விடயம் இலங்கையில் இன்னும் மனிதாபிமானம் உயிர்வாழ கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதையே உணர்த்துகிறது. பரீட்சை மண்டபத்தில் இஸ்லாமிய மாணவிகள் தமது காதுகளை மூடி பரீட்சை எழுதினார்கள் என்ற குற்றச்சாட்டில் இந்த இடைநிறுத்தம் இடம்பெற்றுள்ளது என்பதை அறிந்து கவலைப்பட மட்டுமே முடிந்தது. காதுகளை மூடி பரீட்சை எழுதியமை தொடர்பில் பரீட்சை மண்டபத்தில் கவனித்திருக்க வேண்டிய விடயம். அவர்கள் தொடர்பில் சந்தேகங்கள் இருந்தால் மண்டபத்திலேயே அதனை முடித்திருக்க முடியும். முஸ்லிம் மாணவர்கள் யுத்தம் முடிந்த பின்னர் கடுமையாக கல்வியில் கவனம் செலுத்தி வருவதை தடுக்கும் விதமாக நடைபெற்ற சம்பவமாகவே இதனை நோக்கவேண்டியுள்ளது. முஸ்லிங்களின் கல்வியை நசுக்க எடுத்த இனப் பாகுபாட்டின் உச்சமாகவும் இந்த சம்பவத்தை நோக்கலாம். இந்த இனவாத செயலை உடனடியாக ஜனாதிபதி, பிரதமர், கல்வியமைச்சர் ஆகியோர் கவனத்தில் எடுத்து தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். பரீட்சை மண்டபத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய இந்த விடயத்தை பெறுபேற்றை இடைநிறுத்தும் அளவுக்கு கொண்டு சென்ற பரீட்சை மேற்பார்வையாளர் ஆளுமையற்ற கல்வி பரப்புக்கு பொருத்தமற்ற ஆசிரிய தொழிலை கேவலப்படுத்தும் மனநிலை கொண்ட ஒருவராகவே நாம் பார்க்கிறோம். ஒரேமொழியை பேசும் சகோதர இன மாணவிகளின் உரிமைகளில் கை வைப்பது சகோதரத்துவத்துக்கு ஆரோக்கியமானதல்ல. பிள்ளைகளினதும் பெற்றோரினதும் இன்றைய மோசமான மனநிலையை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன் பரீட்சை ஆணையாளர் உடனடியாக மாணவர்களின் பெறுபேற்றை வெளியிட முன்வரவேண்டும். இந்த விடயத்தில் சகல முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும், சிவில் அமைப்புக்களும் ஒன்று பட வேண்டும். இது ஒரு சமூகப் பிரச்சினை மட்டுமல்ல உரிமை சார்ந்த பிரச்சினையும் கூட. கிழக்கு மாகாண முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் தொடர்ச்சியாகவே இதனை நோக்கவேண்டியுள்ளது. இடை நிறுத்தப்பட்டுள்ள திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை பெறுபேற்றை வெளியிட ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- கலீலுர் ரஹ்மான் | Virakesari.lk- வட மாகாணத்தில் தனியார் துறை முதலீடுகளுக்கான சாத்தியங்களை ஆராய்ந்த முன்னணித் தனியார் துறைக் கம்பனிகள் அடங்கிய தூதுக்குழு
14 முன்னணித் தனியார் துறைக் கம்பனிகள் அடங்கிய தூதுக்குழுவினர், இலங்கை ஊழியர் சம்மேளனத்துடன் சேர்ந்து, வட மாகாணத்தில் பிரதான துறைகளில் உபாய மார்க்கமிக்க முதலீடுகள், வர்த்தகம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புக்கள் என்பவற்றை ஆராய்வதற்காக உயர் மட்ட விஜயத்தில் ஈடுபட்டனர். இலங்கை ஊழியர் சம்மேளனத்தின் பங்காண்மையுடன் சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விஜயம் வட மாகாணத்தில் முதலீட்டுக்கான வாய்ப்புக்களை எடுத்துக்காட்டி, பிரதான பங்கீடுபாட்டாளர்களுக்கு மத்தியில் கலந்துரையாடலையும் ஒத்துழைப்பினையும் போஷித்து, வியாபாரங்களுக்கும் சமுதாயங்களுக்கும் நன்மை பயக்கும் பங்காண்மையினை வசதிப்படுத்துவதை விஜயத்தின் பிரதான குறிக்கோள்களின் மத்தியில் கொண்டுள்ளது. வட மாகாண பிரதம செயலாளரான லட்சுமணன் இளங்கோவன் அவர்களுடனான சந்திப்புக்கு மேலதிகமாக, வட மாகாணத்தில் வியாபாரம் செய்வதற்கான வாய்ப்புக்கள், கொள்கை மற்றும் ஒழுங்குறுத்துகைத் தோற்றப்பாடு பற்றிய பகுப்பாய்வினை வழங்குவதற்கான பங்கீடுபாட்டாளர் கலந்தாலோசிப்பினை விஜயம் உள்ளடக்கியிருந்தது. இதற்குப் பிரதம செயலாளர் அலுவலகம் தலைமை வகித்தது. அச்சுவேலிக் கைத்தொழிற் பேட்டைக்கான விஜயத்தினையும் தொழில்முனைவோர் மற்றும் வியாபாரச் சங்கங்களுடன் வலையமைப்புருவாக்க நிகழ்வினையும் அரசாங்க அமைப்புக்கள் மற்றும் பிராந்தியச் சம்மேளனங்கள் உள்ளிட்ட பிரதான துறைசார் செயற்படுனர்களுடன் கலந்தாலோசிப்பினையும் விஜயம் உள்ளடக்கியிருந்தது. பிராந்தியத்தில் முதலீட்டினால் உந்தப்பட்ட வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைப் பாராட்டி, வட மாகாணப் பிரதம செயலாளர் லெட்சுமணன் இளங்கோவன் பின்வருமாறு குறிப்பிட்டார்: “முன்னோக்கிப் பார்க்கையில், அபிலாஷைகளைச் செயற்பாடுகளாக நிலைமாற்றுவதற்கு நாம் ஒன்றுபடுவோம். முதலீட்டு வாய்ப்புக்களை மேம்படுத்தும் தூதுக்குழுவினை நாம் வரவேற்று அதற்கு ஆதரவு தெரிவிப்பதுடன் அதனுடன் பணியாற்றக் காத்திருக்கின்றோம்” பல் துறைகளின் ஊடே வாய்ப்புக்களில் அதிகரிப்பினைப் பிராந்தியம் அனுபவித்து வரும் நிலையில், உட்கட்டமைப்பு முதலீடுகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ள அதேவேளை, உள்நாட்டுச் சந்தையினையும் ஏற்றுமதிச் சந்தையினையும் இலக்குவைக்கும் விவசாயம் மற்றும் கடற்றொழில், அதேபோன்று நீரியல் வளம் ஆகிய துறைகள் வளர்ச்சிக்கும் விருத்திக்குமான பெரும் சாத்தியத்தினைக் கொண்டுள்ளன. மேலும், PAVE கருத்திட்டத்தின் கீழான இடையீடுகள், வளர்ச்சியின் நன்மைகள் சமுதாயத்தின் சகல உறுப்பினர்களின் மத்தியிலும் ஒப்புரவுடன் பகிரப்பட்டு அதன் மூலம் மிகவும் நிலைபேறான மற்றும் நியாயமான பொருளாதார அபிவிருத்தி போஷிக்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்தி, உள்ளடக்கும் தன்மையினையும் பால்நிலைச் சமத்துவத்தினையும் மேலும் வலியுறுத்துகின்றது. இலங்கையின் பொருளாதார மீளல் எனும் தற்போதைய சூழமைவில், தனியார் துறை அமைப்புக்கள் உள்ளிட்ட அரசாங்க மற்றும் ஏனைய சூழியல் முறைமைச் செயற்படுனர்கள், மாகாண மற்றும் பிராந்திய வளர்ச்சியினை ஊக்குவிப்பதில் இன்றியமையாத வகிபாத்திரத்தினைக் கொண்டுள்ளனர். விஜயத்தின் வெற்றி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த EFCஇன் பணிப்பாளர் நாயகம் / பிரதம நிறைவேற்று அதிகாரி வஜிர எல்லபொல பின்வருமாறு குறிப்பிட்டார் : “தேசிய தொழில்வழங்குனர் அமைப்பு என்ற ரீதியில் EFC, தனியார் துறையினுள் ஆர்வத்தினை உருவாக்குவதில் மூலகர்த்தாவாக இருந்து வருவதுடன் இது வடக்கில் முதலீட்டு வாய்ப்புக்களை ஆராய்வதற்காக வியாபாரத் தூதுக்குழுவின் விஜயத்துக்கு இட்டுச்சென்றுள்ளது. தொழில்முனைவு விருத்தி, தொழில் உருவாக்கம், பல்வகைமை மற்றும் உள்ளடக்கம் ஆகியவை EFC மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்பு கொண்டுள்ள சில பிரதான விழுமியங்களாகும். இந்த விழுமியங்களுடன் நெருக்கமாக இயைபுறும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இடையீடுகளின் குறிக்கோள்களும், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியில் கவனம் குவிக்கும் தேசியக் கொள்கை ஆகியவற்றுடனான இதன் ஒட்டுமொத்தப் பொருத்தப்பாடும் இந்தக் கருத்திட்டத்தில் எமது ஒத்துழைப்பிற்கான உந்துசக்தியாக இருந்தன” இந்த விஜயமானது நோர்வே அரசாங்கத்தின் நிதியுதவியுடன் பாதிப்புறு நிலையிலுள்ள நபர்கள் மற்றும் தொழில் முயற்சியாண்மைகளின் முன்னேற்றத்தினை மேம்படுத்தும் (PAVE) சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கருத்திட்டத்தின் பகுதியாக அமுல்படுத்தப்பட்டது. உள்ளடக்கும் தன்மை மிக்க வளர்ச்சி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு உதவுவதற்காக கௌரவமான வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதை நோக்கிய ஐஎல்ஓவின் பதிற்செயற்பாடுகளின் மத்தியில் PAVE கருத்திட்டம் காணப்படுகின்றது. வட மாகாணத்தில் வாழும் மிகவும் பாதிப்புறு நிலையில் உள்ள மிகவும் ஓரங்கட்டப்பட்ட ஆண்களுக்காகவும் பெண்களுக்காகவும், உள்ளடக்கும் தன்மை மிக்க வளர்ச்சியினையும் தனியார் துறை முதலீட்டினையும் தொழில் முயற்சியாண்மையினையும் பால்நிலைச் சமத்துவம் மற்றும் உள்ளடக்கும் தன்மையினையும டிஜிட்டல்மயமாக்கத்தினையும் மேம்படுத்துவதன் மூலம் கௌரவமான வேலையினை உருவாக்குவதை கருத்திட்டம் முன்னுரிமைப்படுத்துகின்றது. ஐ.எல்.ஓ.,வின் பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் தோமஸ் கிரிங் பின்வருமாறு குறிப்பிட்டார்: “வட மாகாணத்தில் தனியார் துறை முதலீடுகளை அதிகரிப்பது வியாபாரங்களை அர்த்தமிக்கதாக மாத்திரம் ஆக்காது, மனித மூலதனத்தினை வலுப்படுத்தி, அனுகூலம் கிட்டாத சமுதாயங்களுக்கு உறுதியான வருமான மூலங்கள் மூலம் நன்மை பயக்கின்றது – அங்கவீனமான பாதிப்புறு நிலையில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களுக்காக தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் சகலருக்கும் நன்மை பயத்தல் எனும் இதன் முன்மொழிவுகள், நெருக்கடி மீளளுக்கும் நல்லிணக்கத்துக்கும் உதவுகின்றன.” வட மாகாணத்தில் முதலீட்டுச் சூழல் மற்றும் தோற்றப்பாடு பற்றிய மேம்பட்ட புரிதலை அதிதிகளுக்கு வழங்கி, தனியார் துறைக்கும் உள்ளூரதிகார சபைகளுக்கும் இடையில் எதிர்கால ஒத்துழைப்பிற்கான அத்திவாரத்தினை இந்த விஜயம் இட்டுள்ளது. ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கான முதலீட்டுத் திட்டத்தினை உருவாக்குவதை அடுத்த படிகள் சம்பந்தப்படுத்தும். ஒரே ஒரு முத்தரப்பு ஐ.நா. முகவரான சர்வதேச தொழிலாளர் அமைப்பு, தொழில் நியமங்களை நிர்ணயித்து, உலகம் முழுவதும் வேலை செய்யும் சகல ஆண்கள் மற்றும் பெண்களுக்காக கௌரவமான வேலையினை மேம்படுத்தும் கொள்கைகளை உருவாக்கி, நிகழ்ச்சித்திட்டங்களை உருவாக்குவதற்காக அரசாங்கங்களையும் தொழில் வழங்குனர்களையும் தொழிலாளர் பிரதிநிதிகளையும் ஒன்றுசேர்க்கிறது. வட மாகாணத்தில் தனியார் துறை முதலீடுகளுக்கான சாத்தியங்களை ஆராய்ந்த முன்னணித் தனியார் துறைக் கம்பனிகள் அடங்கிய தூதுக்குழு | Virakesari.lk- சவக்காலைக்கு பெண்ணை அழைத்துச்சென்று தலையில் பெற்றோல் ஊற்றி தீவைப்பு : ஒருவர் கைது - யாழில் கொடூரம்!
தாயின் கல்லறை மீது சத்தியம் செய்வதாகக் கூறி அழைத்து சென்று பெண்ணை தீயிட்டு படுகொலை செய்தேன் - இளைஞன் வாக்குமூலம் 03 JUN, 2024 | 04:45 PM "தாயின் கல்லறை மீது சத்தியம் செய்கிறேன்" என பெண்ணை சேமக்காலைக்கு அழைத்து சென்றே இளைஞன் தீ மூட்டி படுகொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்குள் வைத்து, கடந்த சனிக்கிழமை பெண்ணொருவரை, இளைஞன் ஒருவர் உயிருடன் தீ மூட்டி படுகொலை செய்துள்ளார். உயிரிழந்த பெண்ணுக்கு திருமணத்தை மீறிய காதல் தொடர்பு சுமார் ஐந்து வருட காலமாக இளைஞனுடன் இருந்துள்ளது. இந்நிலையில் இளைஞன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு முயன்றுள்ளார். அதனை அறிந்து, இளைஞன் தன்னையே திருமணம் செய்ய வேண்டும் என தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அந்நிலையில் கடந்த சனிக்கிழமை குறித்த பெண்ணை மட்டுவில் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து, சேமக்காலையில் உள்ள தனது தாயின் கல்லறை மீது "உன்னையே திருமணம் செய்வேன்" என சத்தியம் செய்கிறேன் என சேமக்காலைக்குள் அழைத்து சென்று , தாயின் கல்லறைக்கு அருகில் மறைத்து வைத்திருந்த பெற்றோலை எடுத்து பெண் மீது ஊற்றி எரித்து படுகொலை செய்துள்ளார். பெண்ணை படுகொலை செய்த இளைஞனை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் சனிக்கிழமை முற்படுத்திய வேளை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. தாயின் கல்லறை மீது சத்தியம் செய்வதாகக் கூறி அழைத்து சென்று பெண்ணை தீயிட்டு படுகொலை செய்தேன் - இளைஞன் வாக்குமூலம் | Virakesari.lk- Exit Poll 2024 results: பாஜக கூட்டணி 350+, இண்டியா கூட்டணி 130+ வெல்ல வாய்ப்பு!
Exit Poll 2024 results: பாஜக கூட்டணி 350+, இண்டியா கூட்டணி 130+ வெல்ல வாய்ப்பு! புதுடெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பாஜக கூட்டணி 350+ இடங்களிலும், இண்டியா கூட்டணி 130+ இடங்களிலும், இதரக் கட்சிகள் 40+ இடங்களிலும் வெற்றி பெற சாத்தியக் கூறு இருப்பதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. ஏபிபி - சிவோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு: பாஜக கூட்டணி: 353-383 இண்டியா கூட்டணி: 152-182 மற்றவை: 4-12 ரிபப்ளிக் டிவி - Matrize கருத்துக் கணிப்பு: பாஜக கூட்டணி: 353 - 368 இண்டியா கூட்டணி: 118 - 133 மற்றவை: 43 - 48 ஜன் கி பாத் கருத்துக் கணிப்பு: பாஜக கூட்டணி: 362 - 392 இண்டியா கூட்டணி: 141 - 161 மற்றவை: 10 - 20 இந்தியா நியூஸ் - டி டைனமிக்ஸ் கருத்துக் கணிப்பு: பாஜக கூட்டணி - 371 இண்டியா கூட்டணி - 125 மற்றவை - 47 நியூஸ் நேஷன் கருத்துக் கணிப்பு: பாஜக கூட்டணி - 342-378 இண்டியா கூட்டணி - 153-169 மற்றவை - 21-23 டைனிக் பாஸ்கர் கருத்துக் கணிப்பு: பாஜக கூட்டணி: 281 - 350 இண்டியா கூட்டணி: 145 - 201 மற்றவை: 33 - 49 இண்டியா டிவி - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு: பாஜக கூட்டணி: 371-401 இண்டியா கூட்டணி: 109-139 மற்றவை: 28-38 என்டிடிவி-ஜான் கி பாத் கருத்துக் கணிப்பு: பாஜக கூட்டணி: 365 இண்டியா கூட்டணி: 142 மற்றவை: 36 தமிழகத்தில் திமுக கூட்டணி 35+ இடங்களிலும், பாஜக கூட்டணி குறைந்தது 1 இடத்திலும், அதிமுக வாஷ் அவுட் கூட ஆகலாம் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதன் விவரம்: சிஎன்என் - நியூஸ் 18: திமுக கூட்டணி: 36 - 39 அதிமுக கூட்டணி: 0-2 பாஜக கூட்டணி 1-3 இண்டியா டுடே: திமுக கூட்டணி 26 -30 அதிமுக கூட்டணி 0 -2 பாஜக கூட்டணி 1 - 3 ஜன் கி பாத்: திமுக கூட்டணி 34 - 38 அதிமுக கூட்டணி - 1 பாஜக 5+ ஏபிபி சி வோட்டர்: திமுக கூட்டணி 37 - 39 அதிமுக கூட்டணி - 0 பாஜக கூட்டணி - 2 இந்தியா டுடே - ஆக்சிஸ்: திமுக கூட்டணி - 33+ பாஜக கூட்டணி 2 முதல் 4 7 கட்டங்களாக நடந்த தேர்தல்: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்தஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 7 கட்டமாக 543 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இவற்றில் குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும்பாஜக வேட்பாளர் முகேஷ் தலால்போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 7 கட்ட தேர்தல்களில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகின்றன. எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது அன்றைய மாலைக்குள் தெரிந்துவிடும். இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளன. https://www.hindutamil.in/news/india/1258069-exit-poll-2024-results-predictions-in-favour-on-nda-alliance.html- தேர்தல்ஆணைக்குழுவிற்கு அமெரிக்க தூதுவர் விஜயம் - கரிசனைக்குரிய விடயமல்ல - தேர்தல் ஆணையாளர்
31 MAY, 2024 | 03:52 PM இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஆணையாளர்களை சந்தித்துள்ளமை குறித்து பொதுமக்கள் கவலையடைய தேவையில்லை என தேர்தல் ஆணையகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுயாதீன ஆணைக்குழுவின் உயர் அதிகாரியை அமெரிக்க தூதுவர் சந்திப்பது குறித்து பொதுமக்கள் கவலையடையதேவையில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார். அது இரகசிய விஜயமாகயிருந்தால் அமெரிக்க தூதுவர் தான் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுடன் எடுத்துக்கொண்ட படங்களை பகிர்ந்துகொண்டிருக்கமாட்டார் என சமன்ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த வருடம் செப்டம்பர் ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிற்கான ஏற்பாடுகள் குறித்து அமெரிக்க தூதுவர் கேட்டறிந்தார்என தெரிவித்துள்ள சமன்ஸ்ரீரத்நாயக்க தேர்தல்கள் ஆணையகத்திற்கு மேலும் பல வெளிநாட்டு பிரதிநிதிகள் விஜயம் மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தால் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான எங்களின் ஏற்பாடுகள் குறித்தும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கேட்டறிந்துள்ளனர் எனவும் சமன்ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவரின் விஜயத்தின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் எங்களை சந்திக்க வந்தனர் என குறிப்பிட்டுள்ள அவர் உள்நோக்கம் கொண்ட பல தரப்பினர் வெளியிடும் பொய்களிற்கு பொதுமக்கள் பலியாககூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல்ஆணைக்குழுவிற்கு அமெரிக்க தூதுவர் விஜயம் - கரிசனைக்குரிய விடயமல்ல - தேர்தல் ஆணையாளர் | Virakesari.lk- புலம்பெயர் தமிழர்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலை பின்பற்றுவதை தவிர்க்கவேண்டும் - அலி சப்ரி
31 MAY, 2024 | 05:55 PM புலம்பெயர் தமிழர்கள் அரசியல்நிகழ்ச்சிநிரலை பின்பற்றுவதை தவிர்க்கவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். காசா நெருக்கடி குறித்து மேற்குலக நாடுகள் அலட்சியமாக உள்ளன என தெரிவித்துள்ள அவர் சர்வதேச ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஐக்கியநாடுகள் சபை எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பில் சர்வதேச சட்டங்களில் தீவிர மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் மோதல் உடனடியாக முடிவிற்கு கொண்டுவரப்படவேண்டு;ம் என்பதே இலங்கையின் நிலைப்பாடு என தெரிவித்துள்ள அலிசப்ரி 1965 ம்ஆண்டின் அறிவிப்பில் எல்லைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதமைக்கு ஏற்ப இருநாடுகளும் காணப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்கும் விதத்தில் 143 நாடுகள் வாக்களித்துள்ளன என தெரிவித்துள்ள அவர் பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலிற்கும்இடையில் சகாவாழ்வை வலியுறுத்தியுள்ளதுடன் அடுத்த ஐந்து வருடங்களிற்குள் பாலஸ்தீன அரசாங்கத்தை ஏற்படுத்தவேண்டிய தேவையையும் வலியுறுத்தியுள்ளார். இரட்டை நிலைப்பாடு மற்றும் பாசாங்குதனத்துடன் தொடரமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான மனித உரிமை குற்றச்சாட்டுகள் நல்லிணக்க முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பிரஜைகளின் மனித உரிமையை மேம்படுத்துவதற்கான நாட்டின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தங்கள் அன்புக்குரியவர்கள் காணாமல்போயுள்ளதாக தெரிவித்துள்ள 6700 பேரின் வேதனையை ஏற்றுக்கொண்டுள்ள அவர் இலங்கையில் நல்லிணக்கத்தி;ற்கு ஏற்ற பொருத்தமான சூழ்நிலையை ஏற்படுத்தவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். புலம்பெயர் தமிழர்கள் அரசியல் நிகழ்;ச்சி நிரலை தவிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அலிசப்ரி நாட்டின் வடகிழக்கிற்கான அதிகாரப்பகிர்வு மற்றும் அபிவிருத்தியின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். புலம்பெயர் தமிழர்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலை பின்பற்றுவதை தவிர்க்கவேண்டும் - அலி சப்ரி | Virakesari.lk- கடதாசி கரண்டியால் தடுமாறும் தமிழர்
ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடைச் செய்யப்பட்டுள்ளதை வரவேற்க வேண்டும். அதற்காக மாற்று ஏற்பாடுகள் பல செய்யப்பட்டுள்ளன. கடதாசியில் செய்யப்பட்ட ‘ஸ்டோ‘,‘ ‘கடதாசி மட்டை கரண்டி’, ‘கடதாசி கப்’, ‘கடதாசி பிளேட்’ இவ்வாறு பல வடிவங்களில் பொருட்கள் சந்தைகளில் புழக்கத்தில் உள்ளன. யோகட் வாங்கும் போது, பெரும்பாலான கடைகளில் மட்டை கடதாசி கரண்டியே வழங்கப்படுகின்றது. சுற்றாடலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை தூங்கிவீசிவிட்டு, விரைவாக உக்கும் மண்ணுக்கு உரம்கொடுக்கும் இந்த கடதாசி மட்டை கரண்டியின் பயன்பாடு வரவேற்கத்தக்கது. எனினும், அக்கடதாசி மட்டை கரண்டியில் குழி இருக்காது, வாங்குவோர்தான் இரண்டுபுறங்களும் மடித்து, குழியைப்போல செய்துக்கொள்ளவேண்டும். இந்த விடயம் தெரியாத பலரும், கடதாசி கரண்டியை மடிக்காமல், யோகட்டை அள்ளி, ஆடைகளிலும் கீழேயும் கொட்டிக்கொள்கின்றனர். கடைக்காரர்களும் அதனை விளங்கப்படுத்துவது இல்லை. எனினும், தமிழ் தெரியாதவர்களுக்கு அதுவும் ஒரு பிரச்சினையாகும். ஏனெனில், இவ்விடத்தில் மடிக்கவும் என, சிங்களம், ஆங்கிலம் ஆகிய இரண்டுமொழிகளில் மட்டுமே எழுதப்பட்டு உள்ளன. வழுவழுப்பாக இருக்கும் யோகட்டை, வழுவழுப்பான கடதாசி மட்டை கரண்டியில் அள்ளும்போது, வழுக்கி கீழே கொட்டி விடுகின்றது. இந்த செய்தியை வாசிக்கும் போது, என்னடா, பொதுவான அறிவுக்கூட வேண்டாமா? மடித்து தின்றால் என்ன? என பலரும் கேட்கலாம். அப்படியாயின், கடதாசி மட்டை கரண்டியில் எந்தவொரு மொழியிலும் எழுதாமல், குறியீட்டை மட்டும் அச்சடித்து இருக்கலாம். ஏன்? இரண்டு மொழிகளில் மட்டும் எழுதிவிட்டு, தமிழில் எழுதாமல் விட்டனர். சிறுசிறு விடயங்களிலும் உரிமை இருக்கிறது என்பதை நினைவுப்படுத்துவதுடன், இலங்கையின் அரசியலமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் அடிப்படை மனித உரிமை 'மொழி உரிமை' ஆகும். எந்தவொரு பிரசைக்கும், தனது இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியல் சிந்தனைகள், மற்றும் பிறப்பிடம் என்பவற்றின் அடிப்படையில் சலுகைகளை வழங்கவோ, வேறுபாடு காண்பிக்கவோ முடியாது' என்று உறுப்புரை 12(2) தெரிவிக்கின்றது. சிங்களம் மற்றும் தமிழ்மொழி இலங்கையின் அரசகரும மொழிகளாகும். ஆங்கில மொழி இணைப்பு மொழியாதல் வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. Tamilmirror Online || கடதாசி கரண்டியால் தடுமாறும் தமிழர்- பொது வேட்பாளர் தெரிவை கிழக்கிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் ; அவரை தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தவேண்டும் - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்
30 MAY, 2024 | 11:01 AM பொதுவேட்பாளர் குறிப்பிட்ட சில தரப்பினரின் அரசியல் நலன்களை பிரதிபலிப்பவராக விளங்க கூடாது- அவர் தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அடையாளப்படுத்தும் வகையில் கிழக்கிலிருந்து வேட்பாளர் தேர்வு நடைபெற வேண்டும். அவ்வேட்பாளர் பெண்ணொருவாராக இருப்பின் உத்தமம்.எனவும் தெரிவித்துள்ளது யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளதாவது சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் தொடர்பான பேச்சுக்கள் முனைப்புப் பெற்றுள்ள நிலையில், கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் விடுதலைப்பயணத்தில் இத்தேர்தல் களத்தினை தங்கள் நலன்சார்ந்து எவ்வாறானதாகக் கையாள வேண்டும் என்பதில் கடந்த கால அனுபவங்களைப் பரிசீலனை செய்து இனியாவது சுதாகரித்து முன்நகர வேண்டிய அவசியநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். 2009 இற்குப் பின்னரான 15 ஆண்டுகள் காலத்தில் சாணக்கியம், ராஜதந்திரம் என்னும் பெயரில் வெற்று வாக்குறுதிகளை மாத்திரமே நம்பி தமிழ்த் தரப்புக்களால் முன்னெடுக்கப்படும் பேரம் பேசும் இணக்க அரசியலினால் தமிழினவழிப்பிலிருந்து தாயகத்தின் ஒரு அங்குல நிலத்தையேனும் காப்பாற்ற முடியவில்லை என்பதோடு, தமிழ் மக்களும் தமிழ்த் தேசிய அரசியற்கட்சிகளும் உதிரிகளாக்கப்பட்டுள்ளமையும் அது உளவியல்ரீதியில் தோல்வி மற்றும் அடிமைத்துவ மனநிலையினை மக்களிடையே விதைப்பதிலுமே வெற்றியடைந்துள்ளது. 1. ஈழத்தமிழ் மக்களை அரசியற்படுத்தி அணிதிரட்டுதல். 2. போரிற்குப் பின் மக்களிடையே உள்ள தோல்வி மனோநிலையினை அகற்றுதல். 3. வடக்கு – கிழக்கிற்கான பொருளாதாரக் கட்டமைப்பை நிறுவுதல். 4. அரசற்ற தரப்பாக பன்னாடுகளைக் கையாள்வதற்கான வெளிவிவகாரக் கொள்கை மற்றும் கட்டமைப்பை உருவாக்குதல். 5. பன்னாட்டுச் சமூகத்தில் கூட்டாகத் தமிழரின் குரலை முன்வைத்தல். 6. வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை தடுத்துநிறுத்துதல். 7. அதிகாரப்பகிர்வோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற சிறிலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குட்பட்ட 13ஆம் திருத்தத்திற்கு அப்பால் தமிழ் அரசியலை நகர்த்துதல். ஓர் அரசற்ற தரப்பாக எமது தமிழ்ச் சமூகத்தினால் அடைந்து கொள்ளப்பட்டிருக்க வேண்டிய மேற்குறிப்பிட்ட விடயங்களெதனையும் சாதித்திராத தமிழ் அரசியற் தரப்புக்கள் தொடர்ந்தும் பேரம் பேசும் அரசியலால் இனியும் எதையாவது சாதிக்கும் என்பதில் நம்பிக்கையில்லை. தமிழ் அரசியற்கட்சிகளும், குடிமக்கள் சமூகத்தினரும் (Civil Societies) தமிழ் மக்களின் பின்நோக்கிய இந்நிலையிலாவது தம்மைச் சுதாகரித்துக் கொண்டு தமிழ் அரசியலின் பாதையினை மீளச் சரிவர தகவமைத்துக் கொள்ள வேண்டும். கடந்த 2010, 2015, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல்களில் இனப்படுகொலைப் பொறுப்பாளிகளான ஒரு தரப்பினரை எதிர்ப்பதாகக் கூறி, இனப்படுகொலைக் குற்றத்தைப் புரிந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி, பதில் பாதுகாப்பு அமைச்சர், போர்க்குற்றம் புரிந்த பெருமளவான இராணுவத்தினரின் ஆதரவினைப் பெற்ற நபர்களுக்கே வாக்களிப்பதற்குப் பரிகார நீதி கோரக்கூடிய தமிழ் மக்கள் தவறாக வழிநடாத்தப்பட்டோம். இனியாவது ஏமாற்று கபட அரசியலிற்குப் பலியாகாமல், தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள - பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுக்கோ, வெளித்தரப்புக்களுக்கோ சென்றுசேர்வதைத் தவிர்த்து, தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தீர்மானங்களை தமிழ் அரசியற் தரப்புக்கள் மேற்கொள்ளத் தவறுமேயானால் நாம் அரசியல் பிழைத்த மக்களாக்களாக்கப்படுவோம். சமகால அரசியற் களச்சூழலில் தமிழ் மக்களின் முன்னால் உள்ள தெரிவுகள், 1. சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணித்தல். 2. சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் தற்போது எதிர்பார்க்கப்படும் தேர்தலை நிராகரித்து, அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான அறைகூவல் விடுக்கும் பொதுவாக்கெடுப்பாகக் கைளாளும் வகையில் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துதல். சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணித்தல் மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துதல் இரண்டும் ஒரே கருத்தியலின் இருவேறுபட்ட பிரயோக வடிவங்களே! தமிழர்களால் அளிக்கப்படாத வாக்குகள் மற்றும் பொதுவேட்பாளருக்கு வழங்கப்படும் வாக்குகள் என இரண்டுமே சிங்கள – பௌத்த பெருந்தேசியவாதத்தின் முகவர்களை நிராகரிக்கும் வாக்குகளேயாகும். பொதுவேட்பாளர் தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், பின்வரும் விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்த தமிழ் மக்கள் உள்ளிட்ட தொடர்புபட்ட தரப்புக்கள் அனைவரையும் வலியுறுத்துகின்றோம். 1. சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பதனாலோ, தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவதனாலோ சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர் எவர் வென்றுவிடக் கூடும் எனும் கேள்வி பொதுவில் அனைவரிடமும் எழக்கூடியதொன்று. ஆனால், அரசியல் விடுதலை வேண்டும் சமூகமாக எமக்கு எது தேவை? எமது நிலைப்பாடு என்ன? என்பதுவே நாம் அக்கறை கொள்ளவேண்டியது. அதன் பக்க விளைவுகளைப் பற்றியல்ல. 2. பொதுவேட்பாளரை நிறுத்துதல் என்பது எதிர்வரும் சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைத் தமிழ் மக்களின் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தேர்தல் ஒன்றாக மாற்றுவதேயாகும். ஆகவே, பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கரு நடைமுறையில் வெற்றி – தோல்விகளுக்கு அப்பாற்பட்டதாகும். 3. பொதுவேட்பாளர் தமிழ் மக்களின் இதுவரைகால வேணவாக்களை பிரதிபலிக்க வேண்டுமேயன்றி, குறிப்பிட்ட சில தரப்புக்களின் அரசியல் நலன்களையல்ல. 4. பொதுவேட்பாளர் தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தப்பட வேண்டும். முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அடையாளப்படுத்தும் வகையில் கிழக்கிலிருந்து வேட்பாளர் தேர்வு நடைபெற வேண்டும். அவ்வேட்பாளர் பெண்ணொருவாராக இருப்பின் உத்தமம். 5. தமிழ்மக்களின் வாக்குகள் என்பது அவர்தம் வேணவாக்களைச் உறுதிபடச் சொல்வதற்கேயன்றி பேரங்கள் பேசுவதற்கல்ல. ஆகவே இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகள் என்ற பேச்சுக்களுக்கே இடமளித்தல் கூடாது. 6. பொதுவேட்பாளராக நிறுத்தப்படும் நபர் அரசியல்வாதியல்லாதவராக இருப்பதோடு, தேர்தலின் பின்னர் அந்நபர் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்படுவதோ, தேர்தல் அரசியலில் ஈடுபடுவதோ தவிர்க்கப்பட வேண்டும் என்பது முன்நிபந்தனையாக்கப்பட வேண்டும். மேற்படி விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்மக்களின் வாக்குகள் இத்தேர்தலிலாவது அவர்களின் உரிமைக்குரலாகப் பிரயோகிக்கப்பட வேண்டும். மேற்கண்ட தெரிவுகளில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் குடிமக்கள் சமூகத்தினர் உள்ளிட்ட அனைவரும் இணைந்து கூட்டாகத் தீர்மானமொன்றினை மேற்கொள்ளும் பட்சத்தில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பதற்கும் இணைந்து பயணிப்பதற்குமான எமது உடன்பாட்டினை மாணவர் சமூகமாக நாம் வெளிப்படுத்துகின்றோம். தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள - பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுடனான பேரம் பேசலுக்காகப்; பலியாக்கப்படாது. தமிழ்மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு, தமிழ் அரசியற்கட்சிகள் மற்றும் குடிமக்கள் சமூகத்தினர் ஒன்றுபட்டுத் தீர்க்கமான முடிவொன்றினைத் திடசித்தத்துடன் மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகமாக வலியுறுத்தி நிற்கின்றோம். பொது வேட்பாளர் தெரிவை கிழக்கிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் ; அவரை தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தவேண்டும் - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் | Virakesari.lk - 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
Important Information
By using this site, you agree to our Terms of Use.