Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. ஜே.வி.பி தலைவரின் திமிர் பேச்சு; சிறீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு தமிழர்களும் நாட்டின் சம பிரஜைகள் என்பதை ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை என யாழ் வந்த ஜே.வி.பி தலைவரின் திமிர் பேச்சு வெளிப்படுத்தி நிற்கின்றது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு! (இனியபாரதி) இணைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு என்பதையும் நாம் இந்த நாட்டின் சம பிரஜைகள் என்பதையும் மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த அதன் தலைவருடைய பேச்சு வெளிப்படுத்தி நிற்கின்றது என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் 13 ஆவது அரசியலமைப்பு அதிகாத்தையே தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வாக தர தயாரில்லை என்பதையும் அரசியல் உரிமைப் பிரச்சினை தமிழ் மக்களுக்கு உள்ளது என்பதையும் அவர்கள் நிராகரித்திருப்பதையே அவருடைய பேச்சு மிகத் துல்லியமாக காட்டுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (05) நடந்த ஊடக சந்திப்பில் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார். அவர் மேலும் கூறுகையில் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை என்பது வெறும் பொருளாதாரம், அபிவிருத்தி மட்டுமல்ல. அவர்களுக்கு அரசியல் உரிமைப் பிரச்சினையே மிகவும் பிரதானமானது என்பதையும் ஜே.வி.பி அறியாதது அல்ல. இலங்கை வரலாற்றில் பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், இலங்கை இந்திய ஒப்பந்தம் தமிழர்களுக்கான உரிமைப் பிரச்சினை உண்டென்பதை எடுத்தக்காட்டியிருக்கின்ற சூழ்நிலையிலும் யாழ்ப்பாணம் வந்த ஜே.வி.பி தலைவர் அனுர குமார திஸநாயக்க "13 ஐ தருகின்றோம், 13 பிளஸ் தருகின்றோம் சமஸ்டி தருகின்றோம் என்று கொடுக்கல் வாங்கல் செய்ய வரவில்லை என திமிராகப் பேசிச் சென்றிருக்கின்றார். அத்துடன் தமிழ் மக்களின் அபிலாசைகளை சற்றும் புரிந்தவராக வெளிப்படுத்தியிருக்கவில்லை. இதன் மூலம் இப்போது தமிழ் மக்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே ஒரு குறைந்தளவு அதிகாரமுள்ள 13 ஆவது அரசியலமைப்பை கூட ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மிகவும் தெளிவாக புலப்படுகின்றது. இந்நிலையில் அனைவரும் கூட்டு முயற்சியுடன் ஒன்றிணைய வேண்டும் புதிய பாதைக்கு செல்ல வேண்டும் என ஜே.வி.பியினர் கூறுவது ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் வாக்கு வைப்பகத்தை இலக்கு வைத்தே என்பது புலனாகின்றது. இதேநேரம் இந்தியாவுக்கு சென்றிருந்த ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திசநாயக்க, வடக்கு மீனவர் பிரச்சினை தொடர்பாகவோ எல்லை தாண்டும் இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல் தொடர்பாகவோ அங்கு பேசியிருக்கவில்லை. அதேபோன்று குடாநாட்டுக்கு வந்திருந்தபோதும் கூட வடக்கு மீனவர்களுடைய பாதிப்புகள் தொடர்பாக எந்தவிதமான அக்கறையையும் கொண்டிருக்கவில்லை. மாறாக எடுத்ததற்கெல்லாம் இந்திய எதிர்ப்பு பேசிவந்த ஜே.வி.பி தற்போது அதிலிருந்து விலகி மௌனம் சாதித்துவருவதும் ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது இந்திய பருப்பை உண்ண மாடம்டோம், இந்தியாவிலிருந்து இறக்கமதி செய்யப்பட்ட பேருந்துகளில் ஏறமாட்டோம், தீவுப் பிரதேசங்கள் இந்தரியாவுக்கு தாரைவார்க்கப்படுகின்றது என் விமர்சனங்களை கடுமையாக முன்வைத்தவர்கள் இந்த ஜே.வி.பியினர். ஆனால் அரச தலைவர் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அவ்விடயத்தில் அமைதி காத்து வருகின்றனர். அதேபோன்று கச்சதீவு விவகாரத்திலும் அது இலங்கைக்கே சொந்தம் என நாம் வெளிப்படுத்தியிருந்த போதும் ஜே.வி.பி அது தொடர்பாக எவ்வித கருத்தையும் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கவில்லை. இவ்வாறான நிலையில் எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் இவர்களுக்கு வாக்களிப்பார்களா எனவும் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஏ) ஜே.வி.பி தலைவரின் திமிர் பேச்சு; சிறீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு (newuthayan.com)
  2. '' மூவரின் நிலை இதுதான் '' இனியபாரதி இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள், இலங்கைக்கு கடும் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாட்டுடனேயே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 வருடங்களின் பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் நால்வரும், திருச்சி சிறப்பு முகாமில் சுமார் ஒன்றரை வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் சாந்தன், நாடு திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தார். ஏனைய மூவரும் இலங்கைக்கு வருவது தமக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி தாம் வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வந்திருந்தனர். அதற்கு இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கைத் துணைத் தூதரகமும் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டை வழங்க மறுத்தது. இந்நிலையில், கடந்த மாதம் சாந்தன் உயிரிழந்தமையால், சிறப்பு முகாமிலிருந்த ஏனைய மூவரின் மனநிலை பாதிக்கப்பட்டது. அதனால், அவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. சிறப்பு முகாமில் தொடர்ந்து இருந்தால் நாமும் உயிரிழந்து விடுவோம் என்ற பயம் அவர்களிடம் ஏற்பட்டமையால், இலங்கை திரும்ப சம்மதித்தனர். இலங்கை திரும்ப யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வருவதற்கான வானூர்தி பயணச்சீட்டு எடுக்க முயன்ற வேளை சிறிலங்கன் எயார்லைன்ஸ் வானூர் மூலமே பயணிக்க முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. குறித்த விமானம் சென்னையிலிருந்து, கொழும்புக்கே இருந்தமையால் அதில் பயணிக்க வேண்டி ஏற்பட்டது. அதேபோன்று, சென்னை வானூர்தி நிலையம் வரையில் மூவருக்கும் பாதுகாப்பு வழங்கும் முகமாக அதிகாரிகள் செயற்பட்டனர். அனைத்துப் பயணிகளும் விமானத்திலிருந்து இறங்கிய பின்னரே இறங்க வேண்டும் போன்ற சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ஒருவரை நாடு கடத்தும் போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இலங்கை வந்திறங்கியதும் அதிகாரிகள், இவர்கள் மூவரின் கடவுச்சீட்டையும் மூவரையும் ஆயப்பகுதி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சுமார் இரண்டு மணிநேரம் விசாரணைகளை முன்னெடுத்தனர். எவ்வாறு நாட்டை விட்டு வெளியேறினீர்கள்? எதற்காக சென்ற நீங்கள்? எப்ப சென்ற நீங்க? போன்ற பல்வேறு கேள்விகளைக் கேட்டு அவற்றைப் பதிவு செய்தனர். பின்னர் இவர்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறியமையால் இவர்களுக்கு எதிராக நீர்கொழும்பு நீதிமன்றில் தாம் வழக்குத் தாக்கல் செய்யப் போகின்றோம் எனத் தெரிவித்தனர். பிறகு உயர் அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடி, இவர்களுக்கு எதிராக இலங்கையில் எந்தக் குற்றச்சாட்டு இல்லை என்பதாலும் 33 வருடங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் வெளியேறியமை தொடர்பில் வழக்குத் தொடர்வதில் உள்ள சிக்கல்கள் காரணமாகவும் வழக்குத் தொடராது விட்டனர். ஆயப்பகுதி அதிகாரிகளின் விசாரணைகளின் போது, மூவருடன் நானும் அருகில் இருந்தேன். அவர்களின் விசாரணை முடிவடைந்த பின்னர், புலனாய்வுப் பிரிவினர் அவர்களைப் பொறுப்பெடுத்து தமது விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது, அவர்கள் மூவரையும் தாம் தனித்தனியாக விசாரணை செய்ய வேண்டும் எனக் கூறி மூவரையும் தனித்தனியே அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் விடுவித்தனர் என மேலும் தெரிவித்தார். (க) '' மூவரின் நிலை இதுதான் '' (newuthayan.com)
  3. Published By: DIGITAL DESK 3 05 APR, 2024 | 03:09 PM 2023 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதில் புலம்பெயர்ந்தவர்களிடம் இடம் பெற்ற மோசடிகள் 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக மோசடிகளால் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் மொத்தமாக 46,563 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதோடு, மக்கள் 651.8 மில்லியன் சிங்கபூர் டொலரை இழந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டிலிருந்து மோசடி குற்றச் செயல்கள் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், அதிக எண்ணிக்கையிலான மோசடி வழக்குகள் 2023 இல் பதிவாகியுள்ளதாக சிங்கபூர் பொலிஸ் தெரிவித்துள்ளது. மோசடிகளால் பாதிக்கப்பட்ட சுமார் 500 வெளிநாட்டு பணிப்பெண்கள் தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா, இலங்கை மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து சிறந்த வேலை வாய்ப்புகள், அதிக ஊதியம் மற்றும் நிலையான அரசியல், பொருளாதார சூழலைத் தேடி புலம்பெயர்ந்தவர்களாவர். 2020 ஆம் ஆண்டு மியான்மரைச் சேர்ந்த பணிப்பெண்ணை ஒருவர் வைபர் செயலி ஊடாக தொடர்பு கொண்டுள்ளார். அவர் தன்னை வங்கி ஊழியர் கூறி பணிப்பெண்ணிடம் வங்கி அட்டையை "புதுப்பிக்க" விவரங்களைக் கோரியுள்ளார். பின்னர் அவரது வங்கியிலிந்து 2,600 சிங்கபூர் டொலரை எடுக்கபட்டு 45 சிங்கபூர் டொலர் மட்டுமே மீகுதியாக இருந்துள்ளது. இந்நிலையில், வங்கியிலிருந்து 1,700 சிங்கபூர் டொலரை மீட்டெடுத்துள்ளதாக சிங்கப்பூர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இந்த மோசடி குற்றச் செயல்களில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்க உள்நாட்டலுவல்கள் அமைச்சு கண்காணிக்கிறதா? நிதிக் குற்றங்களைத் தடுக்க அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என கேள்விகைள் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கே.சண்முகம், மோசடிகளுக்கு எதிராக தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பயிற்சி அளித்து தங்களால் இயன்றதைச் செய்வது வருகிறோம். சிங்கப்பூருக்குப் புதிதாக வேலைக்கு வரும் பணிப்பெண்களைத் தவிர்த்து ஏற்கெனவே வேலை செய்யும் பணிப்பெண்களுக்கும் அவ்வப்போது பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நடப்பில் உள்ள மோசடி உத்திகள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்படுகிறது. இதன் வாயிலாக அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர மோசடி புள்ளிவிவரங்களின்படி, சிங்கப்பூரில் உள்ள மக்கள் 2019 ஆம் ஆண்டு முதல் $2.3 பில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடிக்காரர்களால் இழந்துள்ளனர். பலர் தங்கள் வருமானம் மற்றும் வாழ்நாள் சேமிப்புகளில் பெரும் பகுதியை இழந்துள்ளனர். நிதி மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மட்டுமல்லாமல், வீடுகளை உடைத்தல், அத்துமீறி நுழைதல் மற்றும் துஷ்பிரயோகம் போன்ற பொதுவான குற்றங்களைத் தடுப்பது மற்றும் பாதுகாத்துக் கொள்வது குறித்து புலம்பெயர்ந்த பணிப்பெண்களுக்கு பயிற்சியளிகளை பொலிஸ் வழங்குகின்றது. கடந்த ஆண்டு சிங்கப்பூரில் இந்தியா, இலங்கையைச் சேர்ந்த 500 பணிப்பெண்களிடம் மோசடி | Virakesari.lk
  4. (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணிகளை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிப்பதற்கான அளவீட்டுப்பணி இன்று வெள்ளிக்கிழமை (05) முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன், நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காணி உரிமையாளர்களின் எதிர்ப்பினை அடுத்து காணியினை அளவீடு செய்வதற்கு தமக்கு விருப்பம் இல்லை என காணி உரிமையாளர்கள் கடிதம் எழுதி கையொப்பமிட்டு வழங்கியதை அடுத்து நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் ஜே/226 மற்றும் காங்கேசன்துறை ஜே/233 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான், புதுக்காடு, சோலைசேனாதிராயன் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 29 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் இந்த அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது. வலி வடக்கில் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை ; மக்கள் எதிர்ப்பினால் அளவீட்டுப்பணி நிறுத்தம் | Virakesari.lk
  5. 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; கராப்பிட்டிய வைத்தியசாலையில் சம்பவம்! 05 APR, 2024 | 05:20 PM கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவர் இன்று (5) கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் பாதிக்கப்பட்ட சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்த அதே வார்டில் ( விடுதி) அனுமதிக்கப்பட்டுள்ள மற்றுமொரு சிறுமியின் தந்தையாவார். சிறுமியின் தாய் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், சந்தேக நபர் இந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி இது தொடர்பில் தனது தாயிடம் தெரிவித்ததையடுத்து வைத்தியசாலை அதிகாரிகளினால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 39 வயதுடைய சந்தேக நபர் காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; கராப்பிட்டிய வைத்தியசாலையில் சம்பவம்! | Virakesari.lk
  6. Published By: RAJEEBAN 05 APR, 2024 | 05:55 PM திபெத்தின் ஆன்மீக தலைவர்தலாய்லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதை சீனா தடுக்கின்றது என இலங்கையை சேர்ந்த பௌத்த மதகுரு ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார் இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தலாய் லாமாவிற்கு புத்தரின் புனிதநினைவுச்சின்னத்தை வழங்கிய இலங்கை பௌத்தபிக்குகள் குழுவில் இடம்பெற்றிருந்த கலாநிதி வஸ்கடுவே மகிந்தவன்ச தேரர் இதனை தெரிவித்துள்ளார். தலாய்லாமா குறித்து சீனா என்ன நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பது உங்களிற்கு தெரியும் நீங்கள் நினைவுச்சின்னத்தை வழங்கியமை குறித்து சீனா சீற்றமடைந்திருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் சில வருடங்களிற்கு முன்னர் இலங்கையை சேர்ந்த பௌத்தமத தலைவர்கள் தலாய்லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தனர் என தெரிவித்துள்ளார். ஆனால் பிரச்சினை சீனாவிடமிருந்து வருகின்றது ஏன் என தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பௌத்ததலைவர் என்ற அடிப்படையில் நாங்கள் தலாய்லாமாவை மதிக்கின்றோம் அவர் வர்த்தகர் இல்லை என தெரிவித்துள்ள கலாநிதி வஸ்கடுவே மகிந்தவன்ச தேரர் நாங்கள் அவரை மதித்து இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைத்தோம் சீனா அதனை விரும்பவில்லை சீனா எங்கள் அரசாங்கத்திற்கு இது குறித்து அழுத்தம் கொடுத்தது எனவும் தெரிவித்துள்ளார். இது எங்களிற்கு பிடிக்கவில்லை அவர் ஒரு பௌத்த தலைவர் அவருக்கு சுதந்திரம் உள்ளது அவரை இலங்கைக்கு அழைப்பதற்கான சுதந்திரம் எங்களிற்குள்ளது எனவும் பௌத்தமதகுரு தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தலாய்லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டால் நாங்கள் பெரும்கிழ்ச்சி அடைவோம் இலங்கையர்கள் இமயமலைக்கு சென்றனர் அதில் என்ன பிரச்சினை அவர் பௌத்ததலைவர் அவர் பௌத்தத்தை போதிக்கின்றார் எனவும் இலங்கையை சேர்ந்த பௌத்தமதகுரு தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கை உறவுகளை எப்படி பார்க்கின்றீர்கள் என்ற கேள்விக்கு இந்தியாவே எங்கள் தாய்நாடு எனது கலாச்சார மத தொடர்புகள் இந்தியாவிலிருந்தே இலங்கைக்கு வந்தன எங்கள் மொழியும் இந்தியாவிலிருந்தே ஆரம்பமாகின்றது சமஸ்கிருதம்-;பாலி நாங்கள் இந்தியாவுடன் எங்கள் நட்புறவை வளர்க்கவேண்டும் எங்கள் மூத்த சகோதரர் இந்தியா என குறிப்பிட்டுள்ளார். தலாய்லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதை சீனா தடுக்கிறது - இந்திய ஊடகத்திற்கு இலங்கை பௌத்த மதகுரு கருத்து | Virakesari.lk
  7. 05 APR, 2024 | 04:12 PM அரசாங்க மருத்துவமனையில் கண்புரை அறுவைசிசிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட மருந்து காரணமாக கண்பார்வையை இழந்த நோயாளியொருவர் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடமிருந்து 100 மில்லியன் நஷ்டஈட்டை கோரியுள்ளார். கந்தபொலவை சேர்ந்த மகரி ராஜரட்ணம் என்ற நபர் சட்டநிறுவனம் ஊடாக நஷ்டஈட்டை கோரியுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தேசிய மருந்துகட்டுப்பாட்டு அதிகார சபையின் அதிகாரிகள் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தனக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக நஸ்டஈட்டை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ராஜரட்ணம் இழப்பீடு வழங்கப்படாவிட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இன்விக்டஸ் என்ற சட்டநிறுவனத்தின் ஊடாகவே அவர் தனது நஷ்டஈட்டு கோரிக்கையை முன்வைத்துள்ளார். 2023ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் திகதி தனது கட்சிக்காரர் நுவரேலியா மருத்துவமனையில் கண்சத்திரசிகிச்சை செய்துகொண்டார் ஆறாம் திகதி அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார் மருத்துவமனையில் ப்ரெட்னிசோலோன் அசிடேட்என்ற மருந்தினை பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார்கள் என தெரிவித்துள்ளது. எனினும் குறிப்பிட்ட கண் மருந்தினை பயன்படுத்தியதை தொடர்ந்து தனது கட்சிக்காரர் தலைவலி உட்பட பல பாதிப்புகளை எதிர்கொண்டனர் என சட்டநிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவபரிசோதனைகள் இடம்பெற்றன எனது கட்சிக்காரர் பத்தாம் திகதி மீண்டும் தேசிய கண்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு இடம்பெற்ற மருத்துவபரிசோதனைகள் மூலம் குறிப்பிட்ட கண்மருந்து காரணமாக அவர் தனது கண்பார்வையை இழந்துகொண்டிருப்பது தெரியவந்தது எனவும் குறிப்பிட்டுள்ளது. அந்த கண்மருந்துகள் தரமற்றவை அந்த மருந்தினை பயன்படுத்தியவர்கள் எண்டோபனைட்டிஸ் நோய் பாதிப்பிற்குள்ளானார்கள் எனவும் அந்த சட்டநிறுவனம் தெரிவித்துள்ளது.கெஹெலிய ரம்புக்வெலவும் சுகாதார அதிகாரிகளும் 100 மில்லியன் நஷ்;டஈட்டினை வழங்கவேண்டும் - கண்மருந்தினால் பார்வைபாதிக்கப்பட்ட நோயாளி | Virakesari.lk
  8. Published By: DIGITAL DESK 3 05 APR, 2024 | 05:05 PM கிளிநொச்சி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (05) பகல் இடம்பெற்றுள்ளது. பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னாவெளி பகுதியில் சீமெந்து தொழிற்சாலைக்கான சுன்னக்கற்களை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்றைய தினம் அமைச்சர் குறித்த தொழிற்சாலையை ஆரம்பித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதன்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும், போராட்டக்காரருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பொலிசார் கட்டுப்படுத்தியிருந்தனர். தொடர்ந்தும் போராட்டம் இடம்பெற்றதுடன், திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றது. ஆயினும், மக்களின் தொடர் எதிர்ப்பினால் குறித்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டு அமைச்சர் திரும்பியுள்ளார். கிளிநொச்சி - பொன்னாவெளி பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார் | Virakesari.lk
  9. வடக்கில் பதிவாகிய அனல் பறக்கும் வெப்பம்! (புதியவன்) நேற்றைய தினம் (03) வடக்கு மாகாணத்தின் உள் நிலப்பகுதிகள் பலவற்றில் நாளின் அதிகூடிய வெப்பநிலை 40 பாகை செல்சியஸ்க்கு மேலாக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கீரிசுட்டானில் 40.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பிற்பகல் 1.38 மணிக்கு பதிவாகியுள்ளது. அதேவேளை சில இடங்களில் பிற்பகலுக்கு பின்னர் மிதமான மழை கிடைத்துள்ளது. எதிர்வரும் 9ம் திகதி செங்கலடி,ஏறாவூர் பிரதேசங்களுக்கு மேலாகவும், 10ம் திகதி தாண்டிக்குளம், புளியங்குளம், வாகரை பகுதிகளுக்கு மேலாகவும், 11ம் திகதி கிண்ணியா, ஈரற்பெரியகுளம் பகுதிகளுக்கு மேலாகவும், 12ம் திகதி திரியாய், வஞ்சையன்குளம், புதுக்கமம், ஓமந்தை, மருதன்குளம், இரணைமடு, அம்பகாமம் பகுதிகளுக்கு மேலாகவும், 13 ம் திகதி அக்கராயன், முறிகண்டி, கெருடாமடு,குமுழமுனை, தண்ணீருற்று, பகுதிகளுக்கு மேலாகவும் 14ம் திகதி மண்டைதீவு, நயினாதீவு, புங்குடுதீவு, மணற்காடு, மருதங்கேணி,உடுத்துறை பகுதிகளுக்கு மேலாகவும் 15ம் திகதி பருத்தித்துறை, நெடுந்தீவுக்கு மேலாகவும் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இக்காலப்பகுதிகளில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வெப்பநிலை மிக உயர்வாக காணப்படும். அதேவேளை இப்பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட காலங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வெப்பநிலை மிக உயர்வாக இருக்கும் என்பதனால் போதுமான ஏற்பாடுகளுடன் செயற்படுவது சிறந்தது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். (ஏ) வடக்கில் பதிவாகிய அனல் பறக்கும் வெப்பம்! (newuthayan.com)
  10. அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து ஒரு கொள்கலனை மாத்திரம் இலங்கையில் இறக்க திட்டமிட்டிருந்தனர் - அமைச்சர் நிமால் Published By: RAJEEBAN 04 APR, 2024 | 11:45 AM டாலி சரக்கு கப்பலில் 56 கொள்கலன்கள் ஆபத்தான பொருட்களுடன் காணப்பட்டன அவற்றில் ஒன்றை மாத்திரம் கொழும்பு துறைமுகத்தில் இறக்க திட்டமிட்டிருந்தனர் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பல்டிமோரில் பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளான கப்பல் இலங்கையை நோக்கி ஆபத்தான பொருட்களுடன் பயணித்துக்கொண்டிருந்தது என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். கப்பலின் இலங்கை முகவர் உத்தியோகபூர்வமாக இதனை தெரியப்படுத்தியிருந்தார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகமே குறிப்பிட்ட கப்பலின் இறுதி இலக்கு இல்லை இறுதி இலக்கு சீனா எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். சர்வதேச கடல்சார் விதிமுறைகளிற்கு இணங்க துறைமுகத்தை அடைவதற்கு இரண்டு நாட்களி;ற்கு முன்னர் கப்பலில் உள்ள பொருட்கள் குறித்த விபரங்களை தெரிவிக்கவேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர் வெளிப்படைதன்மை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்வதற்காக கடுமையான சுங்க பரிசோதனைகள் இடம்பெறும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். டாலி போன்ற கப்பல்களில் பொதுவான மற்றும் ஆபத்தான பொருட்கள் காணப்படும் அவ்வாறான கப்பல்களை திருப்பி அனுப்புவது சாத்தியமற்ற விடயம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து ஒரு கொள்கலனை மாத்திரம் இலங்கையில் இறக்க திட்டமிட்டிருந்தனர் - அமைச்சர் நிமால் | Virakesari.lk
  11. Published By: DIGITAL DESK 3 04 APR, 2024 | 03:13 PM கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட ‘கட்டாய சடலம் எரிப்பு’ (ஜனாசா எரிப்பு) கொள்கை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் அரசு முறையாக மன்னிப்புகோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். முஸ்லிம் மக்களின் உணர்வுகள், மத நம்பிக்கை என்பன கருத்திற்கொள்ளப்படாமல் கொரோனா காலப்பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் அந்த சமூகத்தினர் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். அதற்கான மன்னிப்பு கோருகின்றேன் எனவும் அமைச்சர் கூறினார். அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் நேற்று (02 நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “கடந்த வருடம் ஜனவரி மாதமே நான் அமைச்சராக பதவியேற்றேன். எனினும், இதுவிடயத்தில் நீர்வழங்கல் அமைச்சு தொடர்புபட்டிருந்ததால் மன்னிப்பு கோருகின்றேன். அதேபோல அக்காலப்பகுதியில் இவ்விடயதானம் தொடர்பில் அமைச்சராக இருந்தவர்கள் இதற்கு பொறுப்புகூறவேண்டும். கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை புதைப்பதால் நிலத்தடி நீருக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது, நீர்வளம் மாசுபடாது என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டி இருந்தபோதிலும், விஞ்ஞானப்பூர்வமான விடயங்களைக் கருத்திற்கொள்ளாமல் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டது. நான் அமைச்சராக பதவியேற்ற பின்னர் மேற்படி திட்டம் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டது. துறைசார் நிபுணர்களால் தவறான கொள்கையே கடைபிடிக்கப்பட்டுள்ளது என ஆய்வுகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, முஸ்லிம் மக்களிடம் அரசு முறையாக மன்னிப்பு கோர வேண்டும் என்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும்.” – என்றார். முஸ்லிம்களிடம் அரசு முறையாக மன்னிப்புக்கோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன் | Virakesari.lk
  12. Published By: DIGITAL DESK 3 04 APR, 2024 | 04:35 PM யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் புதிதாக நிா்மாணிக்கப்படவுள்ள சூரிய கலங்கள் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (04) நடைபெற்றது. இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. அந்நிலையில் இந்திய நிறுவனத்தின் மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் இன்றைய தினம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. யாழ். அனலைதீவில் இந்திய மின் உற்பத்தி நிறுவனம் வேலைகளை ஆரம்பித்தது | Virakesari.lk
  13. Published By: DIGITAL DESK 3 04 APR, 2024 | 04:38 PM யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சுகாதார குறைப்பாடுகளுடன் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்குகளில் 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு வர்த்தக நிலையத்தினை சீல் வைத்து மூடுமாறும் மன்று உத்தரவிட்டுள்ளது. பண்டத்தரிப்பு பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் இ.யொனிப்பிரகலாதன் தலைமையில், அப்பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, ஒரு வர்த்தக நிலையத்தில் 19 வகையான காலாவதியான பொருட்கள் 245 இணை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உரிமையாளருக்கு 95 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டதுடன், கடையை சீல் வைத்து மூடுமாறும் மன்று உத்தரவிட்டது. பிறிதொரு வர்த்தக நிலையம் ஒன்றில் புழு மொய்த்த, வண்டரித்த அரிசி, கடலைப்பருப்பு என்பவற்றை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்த உரிமையாளருக்கு 65 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. அத்துடன், காலாவதியான உணவுப்பொருட்கள் வைத்திருந்த மற்றுமொரு உரிமையாளருக்கு 2 ஆயிரத்து 500 ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது. சுகநலத்திற்கு ஒவ்வாத நிலையிலும் காலாவதியான வண்டடித்த மா உப்பு போன்றவற்றை கொண்டு மிக்சர் உற்பத்தியினை மேற்கொண்டவருக்கு 45ஆயிரம் ரூபா விதிக்கப்பட்டது. அதேவேளை ஆனைக்கோட்டைப் பகுதியில் கு.பாலேந்திரகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, மோசமான நிலையில் உணவகத்தை நடாத்திய இருவரிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த நிலையில் இருவரும் நீதிமன்றில் சமூகமளிக்காமையால் இருவரிற்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ். பண்டத்தரிப்பில் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு தண்டம் | Virakesari.lk
  14. Published By: DIGITAL DESK 3 04 APR, 2024 | 05:01 PM கடந்ந மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட 25 மீனவர்களில் 24 மீனவர்கள் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாதங்கள் சிறை என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (04) நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 3 படகுகளில் 1படகினை செலுத்திவந்த படகோட்டியான ஒருவருக்கு 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஒரு படகு தொடர்பான வழக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏனைய இரு படகுகளில் ஒரு படகின் உரிமையாளர் படகில் இருந்தமையாலும், மற்றைய படகின் உரிமையாளரின் மகன் குறித்த படகில் இருந்தமையாலும் அவர் தந்தையின் மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்து குற்றத்தினை ஒப்புக்கொண்டமையால் இரு படகுகளும் அரசுடமையாக்கப்பட்டன.. இந்திய மீனவர்கள் 24 பேர் விடுதலை ; ஒருவருக்கு சிறை | Virakesari.lk
  15. Published By: DIGITAL DESK 7 04 APR, 2024 | 05:57 PM யாழ். ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியில் இன்றையதினம் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்கு சென்ற வன்முறைக் கும்பல் ஒன்றை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 2012ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்கள் வாட்ஸப் சமூக ஊடகம் ஒன்றில் குழுவாக செயற்பட்டு வந்தனர். இந்நிலையில் அந்த குழுவில் இருந்த, இருவருக்கிடையே முரண்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் முரண்பாட்டில் ஈடுபட்ட ஒருவரை தாக்குவதற்காக இன்னொருவர் ஊருக்கு வெளியில் இருந்து வன்முறைக் கும்பல் ஒன்றினை வரவழைத்துள்ளார். அந்தவகையில் ஆயுதங்களுடன் வந்த வன்முறைக் கும்பல் தாக்குதலை நடாத்த முயன்றவேளை ஊரில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குறித்த கும்பலை மடக்கிப் பிடித்து ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். -- தாக்குதலுக்கு சென்ற 10 பேர் கொண்ட வன்முறைக் கும்பலை மடக்கிப் பிடித்த ஊர்காவற்துறை மக்கள் ! | Virakesari.lk
  16. Published By: VISHNU 04 APR, 2024 | 06:33 PM கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தால் அத்துமீறி பறிக்கப்பட்டு அநீதிகள் இழைக்கப்படுவதை எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதிகோரி போராட்டம் 11 ஆவது நாளாக வியாழக்கிழமை (04) இன்றும் தொடர்கிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து நற்பிட்டிமுனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து பொதுமக்களுடன் இணைந்து நடைபவணியாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்னால் உள்ள போராட்ட இடத்தினை வந்தடைந்தனர். இதன் போது அமைச்சரவை தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துங்கள், கல்முனை உப பிரதேச அலுவலகமாக கருதி மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத தீர்மானங்கள் அனைத்தையும் இரத்து செய்யுங்கள், காணி நிதி அதிகாரங்களை வழங்குங்கள், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சுயாதீன தொழிற்பாட்டை உறுதிப்படுத்துங்கள் என பல்வேறு கோஷங்களை முன்வைத்து போராடுகின்றனர். இந்த போராட்டத்தில் பொதுமக்கள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்! 11ஆவது நாளாகவும் தொடரும் நீதிகோரி போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்பு | Virakesari.lk
  17. வடமாகாண இப்தார் நிகழ்வு ஒஸ்மானியாக் கல்லூரியில்!! (மாதவன்) வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின், பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், மதிப்புக்குரிய விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவனும் கலந்து கொண்டனர். பின்னர் கல்லூரி மண்டபத்தில் இப்தார் நிகழ்வுகள் இடம்பெற்றன. சர்வமதத் தலைவர்களின் ஆசியுரையினை மெளலவி ஏ.ம்.அப்துல் அஸீஸ் நிகழ்த்தினார். தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. இதன்போது, மரம் நடுகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதுடன் விருந்தினர்களுக்கு திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு பிரதியும் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் றஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ், பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் கலந்துகொண்டனர். (ஏ) வடமாகாண இப்தார் நிகழ்வு ஒஸ்மானியாக் கல்லூரியில்!! (newuthayan.com) --------------------------------------------------------- யாழில் சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு யாழில் சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு மாதவன் சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. மக்கள் பணிமனையின் நேசக்கரங்களின் எற்பாட்டில் புனித ரம்ழானின் சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று முஸ்ஸிம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஸலாமி யா மதரஸா மண்டபத்தில் மெலளவி பி.எ.ஏஸ்.சுபியான் தலைமையில் நடைபெற்றது. இதில் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் சிறி சாய்முரளி கலந்து சிறப்பித்தார். இதில் யாழ்ப்பாண மாவட்ட சர்வமதக்குழுக்களின் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வுக்கான நல்லாசி உரைகள் நிகழ்த்தப்பட்டன. பின்னர் மாலை 06.23 மணியளவில் குரான் துவாங்கு ஓதப்பட்டதுடன் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்த்தப்பட்டது. யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும், மக்கள் பணிமனையின் நேசக்கரங்களின் தலைவர் மெலளவி பி.எ.ஏஸ். சுபியான் ஆகியோர்களுக்கிடையிலான நட்பு ரீதியான பரிமாற்றங்கள் பகிரப்பட்டன. இதில் இஸ்லாமியர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டு இப்தார் நோன்பினை கடைப்பிடித்தனர்.(க) யாழில் சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு (newuthayan.com)
  18. யாழில் போதை மாத்திரைகளுடன் அறுவர் கைது!! (இனிய பாரதி) யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தலைமையிலான யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினர் இனைந்து நடத்திய சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குருநகரை சேர்ந்த ஐவரும் யாழ்ப்பாணம் நாவாந்துறையை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 18,19,20,21, வயதுடைய குறித்த நபர்கள் நீண்ட நாட்களாக வலையமைப்புக்குள் இருந்து பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்து வந்தாக கூறப்படுகிறது. இவர்கள் இன்று புனித பத்திரிசியார் பாடசாலைக்கு அருகில் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இருவரை கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் போது ஏனையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் முச்சக்கரவண்டியில் வியாபாரம் செய்யும் போது மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் குற்றத்தடுப்பு பிரிவினரும் இணைந்து கைது செய்ய முயற்சித்த போது நாவாந்துறை சந்தியில் முச்சக்கரவண்டியை விட்டு விட்டு ஓடும் போது 300 மாத்திரகைளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். (ஏ) யாழில் போதை மாத்திரைகளுடன் அறுவர் கைது!! (newuthayan.com)
  19. Published By: DIGITAL DESK 3 03 APR, 2024 | 02:22 PM 2024 ஆம் ஆண்டில் பெண்கள் தனியாக சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம் பிடித்துள்ளதாக டைம் அவுட் என்ற சுற்றுலா வழிகாட்டி இணையத்தளம் தெரிவித்துள்ளது. தற்போது பெண்கள் தனியான செல்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக 1997க்குப் பிறகு பிறந்த பெண்களில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் தனியாக வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். சாகசம் , கலாச்சாரத்தை அனுபவித்தல் மற்றும் மறக்கமுடியாத அனுபவங்களைத் தேடும் அதிகமான பெண்களுக்கு எங்கு செல்ல வேண்டும், எதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்? என்பது கேள்விகளாக உள்ளது. பல நாடுகள் பாதுகாப்பாகவும் தனியாகவும் பெண்கள் பயணிக்க இடமளிக்கின்றன. அதாவது, நன்கு நிறுவப்பட்ட பேக் பேக்கர் வழிகள், நட்புடைய உள்ளூர்வாசிகள், சமூக தொடர்பு மற்றும் அமைதியான தனிமை ஆகிய இரண்டிற்குமான வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்குகின்றன. இந்த இலக்குகளை அடைவதற்கு பெண்கள் தனியாக சுற்றுலா செய்வதற்கு சிறந்த இடமாக இலங்கை திகழ்கிறது. "இந்து சமுத்திரத்தின் முத்து" என அதன் இயற்கை அழகினால் அழைக்கப்படும் இலங்கை தெற்காசிய கலாச்சாரத்தின் சுவையை வழங்கும் அதேவேளையில் அதன் தனித்துவமான அழகை வெளிப்படுத்துகிறது. அத்தோடு, தனியாக சுற்றுலா செல்லும் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் மற்றும் நிர்வகிக்கக்கூடிய அளவு ஆகியவற்றுடன், தனி சாகசங்களை மேற்கொள்ளும் பெண்களுக்கு சிறந்த தொடக்க புள்ளியாக இலங்கை வழங்குகிறது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியமிக்க தளங்களில் புராதன இடங்கள் ஏராளமாக இருப்பது இலங்கைக்கு பெண்கள் தனியாக சுற்றுலா வருவதற்கு சிறப்பம்சங்களில் ஒன்றாகும். பிரமிக்க வைக்கும் சிகிரியா குன்று முதல் அற்புதமான தம்புள்ளையின் குகைக் கோயில்கள் வரையான நாட்டின் வளமான வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றை ஆய்வு செய்யவும் மற்றும் கண்டுபிடிப்புக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகின்றன. அத்தோடு, அறுகம் குடா, மிரிஸ்ஸ மற்றும் ஹிக்கடுவ போன்ற இடங்கள் கடற்கரையோர தங்கும் விடுதிகள், சர்ஃபிங் செய்வதற்கான வாய்ப்புகள் மற்றும் உள்ளூர் உணவு வகைகள், ஓய்வெடுப்பதற்கும் பழகுவதற்கும் சரியான பின்னணியை வழங்குகிறது. டைம் அவுட் குழு உலகளாவிய முன்னணி விருந்தோம்பல் வணிக ஊடகமாகும். இது நகரத்தின் சிறந்ததைக் கண்டறியவும் அனுபவிக்கவும் மக்களை ஊக்குவிக்கிறது மற்றும் செயல்படுத்துகிறது. டைம் அவுட் ஊடகம் பல டிஜிட்டல் மற்றும் இயற்பியல் சேனல்கள் இணையதளங்கள், மொபைல், சமூக ஊடகங்கள், வீடியோக்கள் மற்றும் நேரலை நிகழ்வுகனை தன்னகத்தே கொண்டுள்ளது. டைம் அவுட் உள்ளூர் நிபுணத்துவ பத்திரிகையாளர்களின் உலகளாவிய குழுவால் எழுதப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. 333 நகரங்கள் மற்றும் 59 நாடுகளில் காணப்படும் சிறந்த உணவு, பானங்கள், கலாச்சாரம், கலை, இசை, நாடகம், பயணம் மற்றும் பொழுதுபோக்கு போன்றவற்றை உள்ளூர் நிபுணத்துவ பத்திரிகையாளர்களின் உலகளாவிய குழுவால் எழுதப்பட்ட உயர்தர உள்ளடக்கத்தை தருகின்றது. டைம் அவுட் குழு ஒரு முன்னணி உலகளாவிய ஊடகம் மற்றும் விருந்தோம்பல் வணிகமாகும், இது நகரத்தின் சிறந்ததைக் கண்டறியவும் அனுபவிக்கவும் மக்களை ஊக்குவிக்கிறது மற்றும் செயல்படுத்துகிறது. பெண்கள் தனியாக சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடங்களில் இலங்கை முதலிடம் | Virakesari.lk
  20. Published By: DIGITAL DESK 7 03 APR, 2024 | 12:45 PM (நா.தனுஜா) உலகளாவிய ரீதியில் மிகத்துரிதமாக வளர்ச்சியடைந்துவரும் பிராந்தியமாக தெற்காசியா விளங்குவதாகவும், இந்தியாவின் வேகமான வளர்ச்சியே அதற்குப் பிரதான காரணமாக அமைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கும் உலக வங்கி, இப்பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளின் வளர்ச்சி மந்தகரமான நிலையிலேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளது. உலக வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான தெற்காசியப்பிராந்திய அபிவிருத்தி நிலைவரம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி நிலைவரம் தொடர்பான மதிப்பீடு நேற்று செவ்வாய்கிழமை 'வன் கோல்பேஸ் டவரில்' அமைந்துள்ள உலக வங்கியின் இலங்கைக்கிளை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. அதனை முன்னிட்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஒருங்கிணைப்பில் உலக வங்கியினால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெற்காசியப்பிராந்தியத்தின் அபிவிருத்தி நிலைவரம் குறித்து விளக்கமளிக்கையிலேயே உலக வங்கியின் தெற்காசியப்பிராந்தியத்துக்கான சிரேஷ்ட பொருளியலாளர் பிரான்ஸிஸ்கா ஒன்ஸோர்ஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2024 - 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் மிகத்துரிதமாக வளர்ச்சியடைந்துவரும் பிராந்தியமாக தெற்காசியப்பிராந்தியம் காணப்படுவதாகவும், இந்தியாவின் வேகமான வளர்ச்சியே அதற்குரிய பிரதான காரணம் எனவும் சுட்டிக்காட்டிய அவர், இருப்பினும் கொவிட் - 19 பெருந்தொற்றுக்குப் பின்னரான காலகட்டத்தில் இப்பிராந்தியத்தின் ஏனைய நாடுகளின் வளர்ச்சி மந்தகரமான நிலையிலேயே இருப்பதாகத் தெரிவித்தார். அதற்கமைய 2024 இல் தெற்காசியப்பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக அமைந்திருக்கின்றது. அதேவேளை உலகின் ஏனைய பிராந்தியங்களுடன் ஒப்பிடுகையில் தெற்காசியப்பிராந்தியத்தின் வளர்ச்சியானது பெருமளவுக்கு அரசதுறையிலேயே தங்கியிருப்பதாகவும், எனவே அத்துறைக்கான செலவினங்கள் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்த பிரான்ஸிஸ்கா, இருப்பினும் தனியார் முதலீடுகளின் வளர்ச்சி குன்றியிருப்பதுடன் இது புதிய வர்த்தக மற்றும் நிதியிடல் வாய்ப்புக்கள், தரமான கட்டமைப்புக்கள் ஆகியவற்றின் தேவையை உணர்த்துவதாகக் குறிப்பிட்டார். தெற்காசியப்பிராந்தியம் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய சவால்களால் பல்வேறு தாக்கங்களுக்கு முகங்கொடுத்துவருகின்றது. இச்சவால்களால் குறிப்பாக வறியவர்கள் வெகுவாகப் பாதிப்படைவதுடன், அதற்கு இசைவாக்கமடைவதில் குடும்பங்களும், விவசாயிகளும் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். எனவே இதனை உரியவாறு கையாள்வதற்கான உத்திகளில் பிரதானமானது வீதிகள், பாலம் போன்ற பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உதவக்கூடிய கட்டமைப்புக்களில் முதலீடு செய்வதாகும்' என்றும் உலக வங்கியின் தெற்காசியப்பிராந்தியத்துக்கான சிரேஷ்ட பொருளியலாளர் சுட்டிக்காட்டினார். மேலும் தெற்காசியப்பிராந்தியத்தில் தொழில்புரியும் வயதுடையோரின் சனத்தொகை தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்ற போதிலும், அதனை ஈடுசெய்யக்கூடியவகையில் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை என கரிசனை வெளியிட்ட அவர், வலுவான வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் நிதியியல் சந்தைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் என்பன நீண்டகால அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி, தனியார்துறை முதலீடுகள் மற்றும் அரச வருமானம் என்பன அதிகரிப்பதற்கும், குடும்பங்கள் காலநிலைமாற்ற சவால்களை சீராகக் கையாள்வதற்கும் உதவும் எனப் பரிந்துரைத்தார். உலகளாவிய ரீதியில் மிகத்துரிதமாக வளர்ச்சியடைந்துவரும் பிராந்தியமாக தெற்காசியா : இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியே பிரதான காரணம் என்கிறது உலக வங்கி | Virakesari.lk
  21. Published By: DIGITAL DESK 7 03 APR, 2024 | 12:52 PM (நா.தனுஜா) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால், வஜிர அபேவர்தன கூறுவதுபோல் தமிழர்களின் வாக்குகள் பிளவுபடாது எனவும், மாறாக இதுவரை காலமும் பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பர் எனவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்கி, தமிழர் வாக்குகளைப் பிரிக்கக்கூடாது என ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன கூறியிருப்பது பற்றி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கும் விக்கினேஸ்வரன், இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது: எனது நண்பரான வஜிர அபேவர்தன ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளராவார். எனவே பதவியில் உள்ள ஜனாதிபதியை வெற்றியடையச்செய்வதற்கு அவரால் வேறு எதைக் கூறமுடியும்? ஆனால் அவர் தமிழர்கள் என்ற கோணத்திலிருந்து நாம் முகங்கொடுக்கும் பிரச்சினையைப் பார்த்தால், இவ்வாறு கூறமாட்டார். தமிழர்களாகிய நாம் இதுவரையில் பெரும்பான்மையின சமூகத்தைச்சேர்ந்த வேட்பாளருக்கே வாக்களித்திருக்கின்றோம். அவர்கள் அனைவரும் எமது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதாக வாக்குறுதியளித்தனர். ஆனால் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் அவர்களுக்கு எம்மைத் தெரியவே இல்லை. அவர்கள் வெகு இலகுவாக எம்மைப் புறக்கணித்துவிட்டனர். நாங்கள் 1956 ஆம் ஆண்டு எங்கே இருந்தோமோ, இப்போதும் அங்கேயே இருக்கின்றோம். வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை. இலங்கையில் இன்றளவிலே இனத்துவப்போக்கு நிலவுகின்றது. சிங்களவர்களால் தெரிவுசெய்யப்படும் சிங்களவர்களுக்கான சிங்கள அரசாங்கமே இயங்குகின்றது. தமிழர்கள் இந்த மண்ணில், அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவருகின்றனர் என்ற உண்மை சிங்களவர்களால் ஏற்கப்படவில்லை. பிரித்தானியர்கள் நிர்வாகத்தேவைகளுக்காக நாட்டை ஒன்றிணைத்தனர். இருப்பினும் அவர்கள் வெளியேறும்போது எமக்கு சமஷ்டி அரசியலமைப்பை வழங்கியிருக்கவேண்டும். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வியை நிறைவுசெய்துகொண்டு 1926 ஆம் ஆண்டு நாடு திரும்பிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க சமஷ்டி அரசியலமைப்பையே வலியுறுத்தினார். கண்டிய சிங்களவர்கள் டொனமூர் ஆணைக்குழுவிடம் சமஷ்டி அரசியலமைப்பையே கோரினர். ஏனெனில் கண்டிய சிங்களவர்கள் தம்மைத்தாமே ஆளுகின்ற சுயநிர்ணய உரிமைக்கான சட்டபூர்வ அதிகாரம் தமக்கு வேண்டுமெனக் கருதினர். இவ்வாறானதொரு பின்னிணயில் வட, கிழக்குவாழ் தமிழ்பேசும் மக்களின் சார்பில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறங்கினால் அவர் ஜனாதிபதியாகத் தெரிவாகமாட்டார் என்பது உண்மையே. தமிழ் பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்குவது தமிழர்களின் வாக்குகளைப் பிளவுபடுத்தும் என்ற தர்க்கம் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் மிகப்பொருத்தமான தமிழ் வேட்பாளரொருவர் களமிறக்கப்பட்டால், தமிழ்மக்கள் அனைவரும் பெரும்பான்மையின வேட்பாளருக்கு வாக்களிப்பதற்குப் பதிலாக, அத்தமிழ் பொதுவேட்பாளருக்கே வாக்களிப்பார்கள். தமிழர்கள் மிகநீண்டகாலமாக ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். எனவே இதுவரை காலமும் சிங்கள அரசியல்வாதிகளால் தமிழ்மக்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டார்கள் என்பதை உலகுக்கு எடுத்துரைப்பதற்கு இது மிகச்சிறந்ததொரு சந்தர்ப்பமாகும். அதிகாரம் மிக்க இடத்திலிருந்து தமிழர்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்கு தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவது மிகமுக்கியமானதாகும். தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்படின் தமிழர் வாக்குகள் பிளவுபடாது : சி.வி.விக்கினேஸ்வரன் | Virakesari.lk
  22. Published By: VISHNU 03 APR, 2024 | 05:40 PM பௌத்தம் மற்றும் ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை ஜூன் 26 ஆம் திகதி வரை நீக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே புதன்கிழமை (03) உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, எதிர்வரும் காலங்களில் அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் விரிவுரைகளை நடத்தவுள்ள ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு கோட்டை நீதிவானிடம் கோரிக்கை விடுத்தார். ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டாலும் கைது செய்யப்படுவார் எனத் தெரிந்தும் கடந்த முறை இலங்கை வந்ததாகவும், விரிவுரைகளை முடித்துக்கொண்டு அவ்வாறே இலங்கை திரும்பவுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தெரிவித்தார். போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்! | Virakesari.lk
  23. கொழும்பு விமானநிலையத்தில் விசாரணையின் பின்னர் விடுதலை - குடும்பத்தவர்களுடன் இணைந்தனர் முருகன் ரொபேர்ட்பயஸ் ஜெயக்குமார். 03 APR, 2024 | 05:34 PM கொழும்பை வந்தடைந்த முருகன் ரொபேர்ட்பயஸ் ஜெயக்குமார் மூவரையும் கொழும்பு விமானநிலையத்தில் பலமணிநேரம் விசாரணை செய்த அதிகாரிகள் சில நிமிடங்களிற்கு முன்னர் அவர்களை விடுதலை செய்தனர் ' இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 33 ஆண்டுகள் வரை சிறையிலிருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இன்று காலை இலங்கையை வந்தடைந்தனர் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னைக்கு காவல்துறை வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டனர். இதன்படி இன்று முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை நோக்கி பயணித்தனர்.மூவரும் காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்தார் கொழும்பு விமானநிலையத்தில் விசாரணையின் பின்னர் விடுதலை - குடும்பத்தவர்களுடன் இணைந்தனர் முருகன் ரொபேர்ட்பயஸ் ஜெயக்குமார் | Virakesari.lk
  24. “மூவரையும் கைது செய்தால் உண்மை வெளிவரும்” கனகராசா சரவணன் ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, கருணா, பிள்ளையான் ஆகியவர்களுக்கிடையே ஏதே ஒன்று மறைந்திருக்கின்றது. ஆகவே இவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரித்தால் இந்த குண்டுதாக்குதல் தொடர்பாக சரியான சூத்திரதாரி யார் என்பதை அறிய முடியும். எனவே இவர்களை உடன் கைது செய்து விசாரணை நடத்துமாறு பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கருணா படையணி என்பது வழமையான செயற்பாடு. தேர்தல் நெருங்குகின்றது தேர்தலுக்கான நாடகம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை பூரண அதிகாரத்துடன் மீட்டுத்தருவதாக கூறி, தமிழ் தேசிய மக்களுக்கு வாக்களிக்க இருந்த மக்கள் எல்லாம் தன்பக்கம் திசைதிருப்பி வாக்குகளை சிதறடித்து அந்த மாவட்டத்தில் தமிழ் மக்கள் பிரதி நிதி ஒருவர் வராமல் செய்து முஸ்லீம் மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க செய்த பெருமை செய்தவர். 2019 ம் ஆண்டு இடம்பெற்ற குண்டுதாக்குதல் தொடர்பாக தற்போது பலரின் வாயில் வித்தியாசமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றது. பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனின் ஆலோசகராக இருந்து சுவிஸ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஆசாத்மௌலான சனல் 4 ஊடகத்தில் பிள்ளையானை குற்றவாளி என தெரிவித்துள்ளார். ஆனால் பிள்ளையான் இன்று குண்டு தாக்குதலை வைத்து ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றார். இதே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன காலத்தில் இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றது. அவர் அப்போது வாய்திறக்காமல் ஜனாதிபதி பதவி இழந்து நீண்ட காலத்தின் பின் தற்போது வாயை திறந்து தனக்கு சூத்திரதாரியை தெரியும் என்று தெரிவித்துள்ளார். ஆகவே சட்டத்தின் மத்தியில் சாட்சியங்கள் மறைக்கப்பட்டாலும் குற்றம். இந்த சாட்சியம் ஏற்கனவே சொல்லப்படாது இருந்தது பாரிய குற்றம். ஆகவே அவர் மீது தீவிரமான விசாரணை நடாத்தப்பட்டு சரியான தகவலை தரவில்லை எனில் சட்டத்தின் முன் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுதவிர ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக அசாத் மௌலான பிள்ளையான் தொடர்பாக தெரிவித்ததையும் பிள்ளையான் புத்தக வெளியிட்டுள்ளது தொடர்பாக கருணா கருத்து தெரிவித்துள்ளார் எனவே இவர்கள் எல்லோரும் கூட்டாக விசாரிக்கப்படவேண்டும் ஏதே ஒன்று இவர்களுக்குள் மறைந்திருக்கின்றது எனவே இந்த கருத்;துக்களை வெளியிட்டு குற்றம் சாட்டும் முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, கருணா என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன், ஆகிய 3 பேரை அரசாஙகம் கைது செய்து சரியாக விசாரித்தால் இந்த குண்டுதாக்குதல் தொடர்பாக சரியான சூத்திரதாரி கைது செய்யப்படுவார். இது யார் என்பதை அறிய முடியும் எனவே ஜனபதிபதி விசேட குழு ஒன்றை அமைத்து அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு அரசையும் ஜனாதிபதியையும் கோட்டுக் கொள்கின்றேன் என்றார். R Tamilmirror Online || “மூவரையும் கைது செய்தால் உண்மை வெளிவரும்”
  25. ”அந்த சரக்கு கப்பல் பற்றி CEA அறிந்திருக்கவில்லை” சிங்கப்பூர் சரக்குக் கப்பல் ஒன்று அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு அபாயகரமான பொருட்களை ஏற்றி வந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஆரம்பித்துள்ளதாக சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். அபாயகரமான பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்குக் கப்பல் இலங்கைக்கு செல்வது CEAக்கு தெரியாது என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த மார்ச் 26ஆம் திகதி 764 தொன்கள் அபாயகரமான பொருட்களுடன் அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான Maersk நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட சிங்கப்பூர் சரக்குக் கப்பலான டாலி குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிபலிப்பைக் கேட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டுக்குத் தெரியாமல் அபாயகரமான பொருட்களை ஏற்றிக்கொண்டு இவ்வாறான சரக்குக் கப்பல் எவ்வாறு இலங்கை நோக்கிச் சென்றது என்பது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். சரக்குக் கப்பலில் விபத்தை சந்திக்காத வரையில், அதில் உள்ள அபாயகரமான பொருட்கள் குறித்து அறிந்திருக்க மாட்டோம். அப்படிப்பட்ட கப்பல் எப்படி இலங்கைக்கு சென்றது என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும், என்றார். கப்பல் விபத்துக்குள்ளாகியிருக்காவிட்டால் சரக்குக் கப்பலில் உள்ள அபாயகரமான பொருட்கள் குறித்து இலங்கை அறிந்திருக்காது என்ற உண்மையை அமைச்சர் வக்கும்புர ஒப்புக்கொண்டார். சரக்குக் கப்பல் தொடர்பில் இலங்கை சுங்கம் மற்றும் கொழும்பு துறைமுகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான அறிக்கையை சபைக்கு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். Tamilmirror Online || ”அந்த சரக்கு கப்பல் பற்றி CEA அறிந்திருக்கவில்லை”

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.