படம் : மனிதன் மாறவில்லை(1962)
இசை: கண்டசாலா
பாடியோர் : P சுசீலா & A L ராகவன்
வரிகள் : தஞ்சை. ராமையா தாஸ்
காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும்
கற்பகச் சோலையும் ஏனோ
வேல் விழி மாது என் அருகில் இருந்தால்
வேறே சொர்க்கமும் ஏனோ ஆஹாஹாஹ்...(காதல்)
தீர்த்த யாத்திரைக்கு ராமேஸ்வரமும்
திருக்கழுக்குன்றமும் ஏனோ
ஆருயிர் பதியும் அருகிலிருந்தால்
வேறே தெய்வமும் ஏனோ ஆஹாஹாஹ் (தீர்த்த)
புன்னகை வதனம் பூரணச்சந்திரன் போல்
பகலில் நிலவாய் காயவே
உன் எழில் மேவும் பனிமலர் பார்வையில்
உலகம் நீலகிரி ஆகவே ஆஹாஹஹா
காதல் யாத்திரைக்கு கொடைக்கானலும்
காஷ்மீரெல்லாம் ஏனோ.......
தந்தை தாயுடன் தமையன் பாசமும்
தங்கள் அன்பினால் காணவே ஆஹாஹாஹ்
பதி ஆதரவே சதியின் மோட்சமென
பழைய சாஸ்திரம் பேசவே ஆஹாஹாஹ்
தீர்த்த யாத்திரைக்கு சிவகைலாசமும்
ஸ்ரீவைகுண்டமும் ஏனோ
உயிரும் உடலும்போல் சதிபதி இருந்தால்
உலகமே சொர்க்கம் ஆகாதோ......(காதல்)..
டிஸ்கி :
லைற்றா.. பிருந்தாவானமும் நந்தகுமாரனும் சாயல் அடிக்குதல்லொ..,👌