Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்

  1. சின்னனில் பேருந்து பயணத்தின் போது வாந்தி வராமல் இருக்க எத்தனை பேர் இஞ்சி மிட்டாய் சுவைத்ததுண்டு..👍
  2. மூன்று யன்னல்தான் உள்ளது தோழர்.. கதறல் சத்தம் கூட வெளிய கேட்காது ..ஐயோ பாவம்கள் .. 😢
  3. உங்களில் எத்தனை பேர் பொறி உருண்டை சுவைத்ததுண்டு..? 👌
  4. ரிஸ்க் என்டா ரஸ்க் சாப்பிடுவது போல.. ☺️ வெதுப்பக செய்முறை..👌
  5. பெரியவர் மரக்கறி வெட்டும் அழகே தனி..👍 தெரு ஓர பீசா கடை..👌
  6. ராந்தல் விளக்கு 80-களில் அனைவரும் அறிந்த ஒன்று.. 👍நடுவிலே இருக்கும் "பெற்றமாஸ் லைற்" பகிடி தலைவர் & துணை தலைவரின்ட புகழை கலி காலம் உள்ளவரை பரப்பி நிற்கும் தோழர் .. 😊
  7. தோழர் கலைஞனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂
  8. அகநானூற்றின் காட்சி ஆவுடையார் கோயில் சிற்பத்தில்..! செந்தமிழ் நாட்டுச் சிரோர் நம்மவர் சிறப்புடன் வாழ்ந்த செய்தியைச் சொல்லும் அகநானூறு எனும் நெடுந்தொகை உன்னதப் பண்பாட்டை உலகுப் பறைசாற்றிய நன்னகம் எனப் பெயர் பெற்றது நமது தமிழகம். கற்கண்டின்பாகும் கனிமூன்றின் சாறும் போல் சொற்கொண்டு எழுந்தது நம் புலவர்களின் கவிதைகள். தமிழர்தம் கலைகளைத் தமதென உரிமை கொண்டாடும் தறுதலை அயலவர்கள் நமது கலைகளை, கலைப்பெருஞ்செல்வங்களை… மருத்துவத்தை… அறிவியலை அதன் மகத்துவத்தைத் தமதெனக் கொண்டார்கள். நம் தமிழ் மக்கள் இதையெல்லாம் மறந்து அறியாமையில் மூழ்கிப் போனார்கள்!. உண்ணவும், உடுத்தவும், படிக்கவும், படுக்கவும் அந்நியர்களிடம் அடிபணிந்து நிற்கும் அவலநிலை ஏன்? இன்று, வலைதளத்தில் வார்செருப்புக்காகக் கையேந்தி நிற்கிறோம். கால் செருப்பைக் கூடக் கை நேர்த்தியாய்ச் செய்ய உலகுக்குக் கற்றுக் கொடுத்தவன் நம் தமிழன். தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம், கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து, தோடு வளர் பைந் தினை நீடு குரல் காக்கும் ஒண் தொடி மகளிர்க்கு ஊசலாக ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய குறும்பொறை அயலது நெடுந் தாள் வேங்கை, மட மயிற் குடுமியின், தோன்றும் நாடன் உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைக் குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில், கடி சுனைத் தௌந்த மணி மருள் தீம் நீர் பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி, பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து, சில் நாள் கழியாமையே வழிவழிப் பெருகி, அம் பணை விளைந்த தேக் கட் தேறல் வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர், எவன்கொல் வாழி, தோழி! கொங்கர் மணி அரை யாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவின் அன்ன, அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே? இச்சிற்பமானது ஆவுடையார் கோவில் (திருப்பெருந்துறை) அருள்மிகு ஆளுடைய பரமசாமி (ஆத்மநாதர்) கோவில் தூணில் உள்ளது. இஃது அகநானூறில் 368ம் பாடலில் வரும் காட்சி. இதனை மதுரை மருதனிள நாகனார் பாடியுள்ளார். தலைவனுக்குத் தோழி கூறுவதாக அமைந்த பாடல். மாலைப் பொழுதின் மயக்கத்தில் உறவாடி காளையும், கன்னியும் களிக்கின்ற காலம். கடிமணம் புரிய அவன் காதில் படக் கூறுகின்றாள் தோழி. காலிற் செருப்பணிகின்ற கானவன். அவன் சுட்டெரித்த தினைக்கொல்லைக் கரிக்கட்டைகளை சட்டென்று மழை பெய்து கழுவிச் செல்லும். அதன் ஈரத்திலே தினை பசுமையாய் விளைந்துவிடும். கதிர்களுக்கு மகளிர் காவலிருப்பர். தினைக் காவல் மகளிர் ஊசல் (ஊஞ்சல்) ஆடக் காத்திருக்கும் வேங்கை மரங்கள் பூத்திருக்கும், மயிலின் கொண்டைபோல் தோன்றும், அப்படியான மலைக்குச் சொந்தக்கார மலைநாடன் நம் தலைவன். காந்தள் மலர் விளைந்த சோலை. குரங்குகளும் ஏறமுடியா உயர் மரங்கள். ஆனைதன் பிடியுடன் ஆடிய போலே தேனருவியிலேயே திரிந்தோம் பல நாள் கூடி. வேற்றுப்புலம் பெயர்ந்த தலைவனால் வேதனை பெருகியது. மூங்கிலில் விளைந்த முதிர்தேன் கள்ளின் தேறலை, வண்டுகள் மொய்க்கும் கண்ணி களணிந்து (மலர்மாலைகள்) உண்டு மகிழ்கின்றனர் ஊர்மக்கள். அந்த ஊறு வாயற்களால் நம்மைப் பற்றி அலர் பேசப்படுகின்றது. கொங்குநாட்டுக் கூத்தர்கள் இடுப்பிலே மணிகள் இசைக்க ஆடும் “உள்ளித்திருவிழா”வில் கூட நம்மைப் பற்றி நாலுவிதமாகப் பேசப்படுகின்ற அலர் அவர் காதுகளில் விழவில்லையோ? என்னேடீ !...தோழி! இது! காலில் செருப்பணிந்த காளை, நம் மனம் நோவதை கால்நோகுமென்று மறந்தும் இருந்தானோ? என்று கூறுவதாக அமைந்த காட்சியைக் காண்கிறோம். தமிழ்ப் பண்பாட்டைப் பேணி வளர்ப்போம் ! தமிழர்களாக வாழ்வோம்! உள்நாட்டுப்பொருட்களையே வாங்குவோம்!. வாழ்க தமிழ்! வளர்க தமிழகம் ! - பனையவயல் முனைவர் கா.காளிதாஸ் http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/39406-2019-12-31-05-48-03
  9. லைக் போட்டாச்சு தோழர் .. அதென்ன பெயின்ற் கொண்டு எழுதுவது ? .. நாங்கள் வரலாற்றில் இடம் பெற கல்லில் செதுக்குவம்.. அதிலும் ஆகாதவன் பெயர் "S" ல் ஆரம்பித்தால் 8 ஆக மாற்றுவதும் "Y" இல் ஆரம்பித்தால் நாமம் போட்டு விடுவதும் .. அது ஒரு கனா காலம்.. 😄
  10. படம் : அனார்கலி (1955) பாடியோர்: ஜிக்கி & கண்டசாலா வரிகள்: தஞ்சை .ராமையா தாஸ் இசை : ஆதித்ய நாராயண ராவ் கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ காதல் யுவராஜன் அனார்கலி நீ.......(கனிந்த) காதல் மலரின் மது மேலே மயங்கும் வண்டு போலே மகிழும் நாள் ஒன்றே மதுவின் சுவையாலே இந்நாளே மலர்ந்தது உன்னாலே...... வலையில் விழும் மானே உன்னால்தானே நிலையுணர்ந்ததாலே உன்னால் நானே....(கனிந்த) வெண்ணிலவே உன் வானில் தவழும் பாராய் கண்ணொளியாக வானில் வளர் தாரா மனக்கண்ணில் வாழும் எழில் தீரா கனிவானதே அதன் சுவை காணுதே இரு மனம் ஒரு மலர் அன்பானதே........(கனிந்த)
  11. பாவம் ஆரு பெத்த புள்ளையோ .. இறங்கி வீட்டுக்கு போக ஏற்பாடு பண்னுங்கப்பூ..😢
  12. 24 மொழிகளில் கீழடி ஆய்வு நூல்; தொல்லியல் துறையின் புதிய முயற்சி .! கீழடி ஆய்வறிக்கையை தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 24 மொழிகளில் புத்தகமாகத் தமிழகத் தொல்லியல் துறை வெளியிட்டிருக்கிறது. கீழடி அகழாய்வு அறிக்கை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 43-வது சென்னை புத்தகக் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். வரும் 21-ம் தேதி வரை 13 நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் இரண்டு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வார நாள்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையும் விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறுகிறது. புத்தக் கண்காட்சியைத் தொடங்கிவைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுமார் 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.10 என்ற கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், மாணவ, மாணவியர் மற்றும் மெட்ரோ ரயில் பாஸ் வைத்திருப்பவர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறும்படம் திரையிடல், திறனாய்வுப் போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட இருக்கின்றன. கண்காட்சி அரங்குக்கு வெளியே `கீழடி – ஈரடி தமிழ் தொன்மங்கள்’ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள் கண்காட்சியையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். கீழடி அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட சுடுமண் சுடுமண் குழாய், நீர் மேலாண்மைத் திட்டம், கறுப்பு சிவப்பு குவளைகள் உள்ளிட்டவைகளின் மாதிரியும் வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், கீழடி அகழாய்வுப் பணிகள் குறித்து விளக்கும் ஒளிப்பட காட்சிக் கூடமும் அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. கீழடி அரங்கு கீழடி அகழாய்வு முடிவுகளை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 24 மொழிகளில் புத்தகமாகவும் தமிழகத் தொல்லியல்துறை வெளியிட்டிருக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கில பதிப்புகள் ரூ.50 என்ற விலையிலும் மற்ற மொழிப் பதிப்புகள் ரூ.200 என்ற விலையிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “புத்தகங்களே நம்மை ஏமாற்றாத சிறந்த நண்பன். புத்தகங்கள் இல்லையெனில், மனிதகுலம் இத்தகைய வளர்ச்சியைக் கண்டிருக்க முடியாது. இந்தப் புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற அரசின் நிதி தேவை என்று வலியுறுத்தப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடுத்த ஆண்டிலிருந்து புத்தகக் கண்காட்சிக்கு அரசு சார்பாக ரூ.75 லட்சம் வழங்கப்படும்” என்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், க.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி உள்ளிட்டோரும், தொல்லியல் துறையின் செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். -தினேஷ் ராமையாகே.ஜெரோம் நன்றி- விகடன் http://www.vanakkamlondon.com/keeladi-12-01-2020/
  13. தாத்தாவின்ர நெற்றியில் பட வசூல் நிலவரம் தெரியுது.. லைக்கா சுபாஸ்கரண் அள்ளி போடாம இருக்கணும்.. 😄
  14. தோழர் சாத்திரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂
  15. இன்றைய ரகளை ..👍 https://video-lga3-1.xx.fbcdn.net/v/t39.24130-2/10000000_203687393996374_174240901616165134_n.mp4?_nc_cat=111&efg=eyJ2ZW5jb2RlX3RhZyI6Im9lcF9oZCJ9&_nc_ohc=1DQafEGeLokAQnBwtxFA22QOMAPKFJAkvAamo0s5DhiqeNlkTqtgB_9Mg&_nc_ht=video-lga3-1.xx&oh=a82f835cf530a14d220a5510e8ebba16&oe=5EA316E3
  16. இன்று பிறந்த நாள் கொண்டாடும் தோழர் ராசவன்னியருக்கு இனிய வாழ்த்துக்கள்..🎂..💐

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.