படம் : எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்(1960)
வரிகள்: R பழனிசாமி
இசை : TG லிங்கப்பா
பாடியோர் : AM ராஜா & P சுசீலா
பெண் : ஓஓ …ஓஓ ….ஓஓ ….ஓஓ …
ஆண் : ஓஓ …ஓஓ ….ஓஓ ….ஓஓ …
ஆண் : மனம் என்னும் வானில்
மழை மேகமாகவே
ஆசைகள் மேவிடுதே ஓ
அமுதாகும் வாழ்வினிலே ஓ
அமுதாகும் வாழ்வினிலே..
பெண் : மனம் என்னும் வானில்
மழை மேகமாகவே
ஆசைகள் மேவிடுதே ஓ
அமுதாகும் வாழ்வினிலே ஓ
அமுதாகும் வாழ்வினிலே..
ஆண் : நிலம் தந்த பொன் போலே
கலை தந்த தேர் போலே
மலை தந்த மான் இனமே
தமிழ் சிந்து பாடிவா..
பெண் : புகழ் மாலை
வீணே பாடுவதேனோ
பாவையை ஏய்ப்பதற்கோ ஓ
பார்வையில் வேல் எதற்க்கோ..
ஆண் : மனம் என்னும் வானில்
மழை மேகமாகவே
ஆசைகள் மேவிடுதே ஓ
அமுதாகும் வாழ்வினிலே ஓ
அமுதாகும் வாழ்வினிலே..
பெண் : ஒளி வீசும் வான் நிலா
குளிர் ஓடை தேன் மலர்
வளர் இளம் தென்றல் காற்று எல்லாம் ஓ
இனி என்றும் நம் சொந்தமே..
ஆண் : இயற்கையின் செல்வம்
யாவர்க்கும் சொந்தம்
யாருக்கும் உரிமையில்லை ஓ
ஏன் இதை உணரவில்லை..
ஆண்/பெண் :
மனம் என்னும் வானில்
மழை மேகமாகவே..
ஆசைகள் மேவிடுதே ஓ
அமுதாகும் வாழ்வினிலே ஓ
அமுதாகும் வாழ்வினிலே..