படம்: ஒரு வீடு ஒரு உலகம்(1978)
இசை: MS .விஸ்வநாதன்
பாடியவர்கள்: TL .மகராஜன் & BS.சசிரேகா
வரிகள்: ஆலங்குடி சோமு.
ரதிதேவி சன்னிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
ரதிமாறன் மந்திரமோ விழிகளின் பாஷை
நாள்தோறும் ஓதுவதில் எத்தனை ஆசை
நாள்தோறும் ஓதுவதில் எத்தனை ஆசை
ரதிதேவி சன்னிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
இதழ்மணி ஓசை
ஆரூரின் தேரொன்று அசைந்து ஆடிவரும்
கோலம் கொண்டதென்ன
தேவாரப்பாட்டு நீ பாடக்கேட்டு
மயங்கி நின்றதென்ன சொல்லு
திருமண மேடையில் நாதஸ்வரம்
இருமன மேடையில் நாளும் சுகம்
ரதிதேவி சன்னிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
இதழ்மணி ஓசை
நீ தந்த செந்தூரம் நிலைக்க வேண்டுமென
பாடிடும் தென்றல் காற்று
என் காதல் தேவி பல்லாண்டு வாழி
இதுவும் தென்றல் சொன்ன பாட்டு
இதுவும் தென்றல் சொன்ன பாட்டு
இனித்திடும் மங்கல வாழ்துக்களே
இசைத்தன செந்தமிழ் பாட்டுக்களே
ரதிதேவி சன்னிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
இதழ்மணி ஓசை