கீழடி அகழ்வாய்வில் இதுவரை 700 பொருட்கள் கண்டெடுப்பு!
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 5 ஆம் கட்ட அகழ்வாய்வில், இதுவரை, 700 பொருட்கள் வரை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் கடந்த ஜுன் 13ம் தேதி 47 லட்ச ரூபாய் செலவில் ஏழு ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. வட்டப்பானை, பானை ஓடுகள், பானை மூடிகள், உறைகிணறு, இரட்டைச்சுவர், எலும்புகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. குஜராத், மகராஷ்டிரா உள்ளிட்ட மாநில பெண்கள் பயன்படுத்தும் அகெய்ட் வகை அணிகலன்களும் எடுக்கப்பட்டன.
இதன் மூலம், பண்ட மாற்ற முறை மூலம் விற்பனை நடந்துள்ளதும், பெண்களின் அழகு சாதன பொருட்கள் வியாபாரத்தில் முக்கிய இடம் வகித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இன்னும் ஒன்றரை மாத காலம் அகழாய்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், கூடுதலாக பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
https://ns7.tv/ta/tamil-news/tamilnadu-important/10/8/2019/700-things-has-been-discovered-keeladi?fbclid=IwAR3-DKre_AT7qPvaV5IQKtMH5YqJBsEBziKZg-NP0hf7f4y9JGMJtnr_es4