படம் : நந்தா என் நிலா (1977)
வரிகள் : பழனிசாமி
இசை: V தட்சணாமூர்த்தி
பாடியோர்: SPB
நந்தா நீ என் நிலா, நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே,
நாணம் ஏனோ வா ஆஆ ..
விழி,
மீனாடும் விழி மொழி,
தேனாடும் மொழி குழல்,
பூவாடும் குழல் எழில்,
நீயாடும் எழில்
மின்னிவரும் சிலையில், மோகன கலையே,
வண்ண வண்ண, மொழியில்
வானவர் அமுதே,
ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே,
ஆடி நிற்கும் தீபம் நீயே,
பேசுகின்ற வீணை நீயே,
கனி இதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா...
நந்தா நீ என் நிலா, நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே,
நாணம் ஏனோ வா ஆஆ....
ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி
ஆயிலையாக வந்தவள் நீயே,
ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி
ஆயிழையாக வந்தவள் நீயே,
அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே,
அருந்ததி போல பிறந்து வந்தாயே...
நந்தா நீ என் நிலா, நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே,
நாணம் ஏனோ வா ஆஆ....
ஆகமம் தந்த சீதையும் இன்று,
ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ,
ஆகமம் தந்த சீதையும் இன்று,
ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ,
மேகத்தில் ஆடும் ஊர்வசி எந்தன்
சோகத்தில் ஆட இறங்கி வந்தாளோ !!!
நந்தா நீ என் நிலா, நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே,
நாணம் ஏனோ வா ஆஆ......